Author: ஜோசப் பால்ராஜ்
•2:49 PM
நேற்று சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ சென்று அங்கிருந்து விமானம் மாறி சிக்காகோ சென்ற‌ என் அண்ணணை வழியனுப்ப சிங்கப்பூர் விமானநிலையத்திற்கு சென்றபோது வயதான தன் பெற்றோரை அமெரிக்கவிற்கு வழியனுப்ப வந்தவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..

அவர்: Is your friend travelling to US?
நான் : Yes,He is my brother.
அவர்: Which city in US he is going ?
நான் : Chicago.
அவர்: By Any Chance does he know Tamil ?
நான் : நாங்க தமிழ்நாடு தான்.
அவர்: ohh! ok. Can you ask your friend to help my parents in Tokoyo to change the flight to Washington ? They are going to Seattle.
நான் : அவர் என் அண்ணண் தான் நான் சொல்லுறேன், கட்டாயம் செய்வாரு. நீங்க கவலைப்படாதீங்க.
அவர்: Thank you sir, Actually I was bit tensed how they gonna manage in Tokyo, now I am happy.

மேலே குறிப்பிட்டிருக்க உரையாடலை நல்லா கவனிங்க. அவர் தமிழ் என்பது தெரிந்தவுடன் நான் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவர் கடைசிவரை என்னிடமும், எனது அண்ணணிடமும் ஆங்கிலத்திலேயே தான் உரையாடினார்.

இது நான் எழுதிய கவிதை அல்ல. நேற்றைய சம்பவம் எனக்கு இந்த கவிதையை நினைவுபடுத்தியது.

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முந்திக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலில்
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்



இந்த கவிதையை எனக்கு அனுப்பிய நண்பர் செல்வாவிற்கு எனது நன்றிகள். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•11:40 PM
சமீப காலங்களில் சில சின்னஞ்சிறு குழந்தைகள் வெறிநாய்கடிக்கு பலியாகும் கொடூர செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்க முடிகின்றது.
மதுரை போஸ், சாத்தூர் வினோத்ராஜ், விருதுநகர் விஷ்ணுராம், சிவகங்கை கவிதா... நீண்டுகொண்டே போகின்றது இந்த கொடூர சாவுகள்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிறைச்சாலை போன்ற ஒரு தனி கூண்டுக்குள் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார்கள். அப்படியும் யாரையும் காப்பாற்றமுடியாமல் அநியாயமாக அந்த பிஞ்சு குழந்தைகள் உயிர்விடுகின்றன.
ரேபிஸ் நோய் வந்து இறப்பவர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசுமருத்துவமனையில் இருந்து நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துசென்று எரித்துவிடுகின்றார்கள்.அது தான் நோய் பிறருக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி என்றாலும், செய்திதாள்களில் படித்தபோது பதறாத மனமும் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

இது யார் குற்றம் அய்யா? வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலைதானே? யாரோ சில பிராணிகள் நலச்சங்கத்தினர் தொடுத்த வழக்கினால் தெருநாய்களையும், வெறிநாய்களையும் கொல்வது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்று உத்தரவு போட்டிருக்கின்றார்கள்.

போடாதா சாலையையே போட்டதாக கணக்கு காட்டி சம்பாதிப்பவர்கள் இருக்கும் நம் நாட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் எல்லாம் அவர்கள் பணம் சம்பாதிக்க கிடைத்த அட்சயப் பாத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாய்களுக்கு ஆதரவாக மட்டும் வழக்கு போடும் மாண்புமிகு பிராணிகள் நல சங்கத்தினர்தான் இந்த கேடுகெட்ட மனிதர்களை நினைக்கவில்லை என்றால், மாநிலம் ஆளும் நம் முதல்வரும் நினைக்கவில்லையே என்பது தான் பெரும் சோகம்.
இந்த வாரம் சென்னையில் அண்ணா சாலை அருகில் கட்டி முடிக்கப்படாத ஓர் எட்டுமாடி கட்டிடத்தில் படப்பிடிப்பு நடத்த சென்ற திரைப்படக் குழுவில் இருவர் மின் தூக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகி பலியானார்கள் என்ற செய்தியை படித்தோம். இறந்தவர்கள் பாவம்தான், இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் அவர்கள் வேலை பார்தது பல கோடி ரூபாய்களை கொட்டி படம் எடுக்கும் ஒரு நிறுவனத்துக்காக. அதே போல் அவர்களின் உயிர் இழப்பிற்கு காரணம் அந்த மின் தூக்கியை நிறுவியவர்களின் கவனக்குறைவு. ஆனால் யாரும் கோரிக்கை வைக்காமலேயே நம் முதல்வர்இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளித்துள்ளார்.
நம் முதல்வருக்கு திரைப்படத்துறையினரின் மீது இருக்கும் பாசம் எல்லோரும் நன்கு அறிந்ததுதான். ஆனால் தற்போது இவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் முதல்வர் என்பதால் இது அநியாயமாய் படுகின்றது. நியாயமாகப் பார்த்தால் இந்த உயிர் இழப்புகளுக்கு காரணமாகிய தயாரிப்பாளர் மற்றும் மின் தூக்கியை நிறுவியவர்கள் தான் தண்டணைக்குறியவர்கள். அவர்கள் தான் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும்.
அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து உடனடியாக இழப்பீடு வழங்கச் செய்திருக்க வேண்டும். அதுவும் ஒரு லட்சம் மட்டும் அல்ல. இன்னும் பெரிய தொகையை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும்.
திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் என்பதற்காக யாரும் கோரிக்கை வைக்காமலேயே உதவி அளித்த நம் முதல்வர், இப்படி ஆட்சியாளர்களின் கவனமின்மையால் உயிர்விட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு எந்த உதவியும் செய்ததாக இதுவரை செய்திதாள்களில் படிக்கவில்லை.
கள்ளச் சாரய சாவு எனில் அதற்கும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உதவியளிக்கின்றார்கள். ஆனால் வழக்காமாக கையூட்டு பெற்றுக்கொண்டு, கள்ளச்சாரய வியாபரத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறையினருக்கு வெறும் இடமாற்றம், பணியிடை நீக்கம் மட்டும்தான் தண்டணை.
சாராயம் குடித்து இறப்பவர்கள் கூட தீங்கு என்று தெரிந்தும் அதை குடிக்க செல்பவர்கள் தான். ஆனால் நாய்கடிக்கு ஆளாகி இறப்பவர்களின் சாவுக்கு காரணம் அவர்களா? நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என மிக அருமையான அறிவுரை கூறிய நீதிமன்றம், வெறிபிடித்த நாய்களை என்ன செய்வது என்று கூறாமல் போனது நியாயமா?
பிராணிகளுக்காக மட்டும் வழக்கு போடும் அமைப்புகள், அவற்றால் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்காக எதுவும் செய்யாமல் இருப்பது நியாயமா?
இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கத்தினர் கட்டுப்படுத்தாமல் விட்டதால் நேரும் உயிர் இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்காமல், திரைப்படத்துறையினருக்கு மட்டும், அதில் அரசாங்கத்தின் தவறோ, பங்கீடோ இல்லையென்ற போதும் யாரும் கேட்காமல் உதவியளிப்பது நியாயமா? Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:55 PM
நம் தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல அதிகாரிகளில் உமாசங்கர் IAS அவர்களும் ஒருவர். தற்போது எல்காட் நிர்வாக அதிகாரியாக சென்னைக்கு வெளியே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்துச்செல்லும் முழுமுயற்சியில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற பெருநகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்காக சலுகை விலையில் மடிக்கணிணிகளை( Laptop ) வாங்கித்தருவதிலும் ஆர்வமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றிய ஒரு சுவரஸ்யமான செய்திதான் இந்த பதிவு.
மாணவர்களுக்கு சலுகை விலையில் தரப்படும் மடிகணிணிகளை பற்றி ஒரு மின்னஞ்சல் எனக்கு நேற்று ஒரு நண்பரிடமிருந்து வந்தது. இதை தொடர்ந்து எல்காட் இணையதளத்தில் இது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள சென்ற நான், அப்படியே அந்த இணைய தளத்தில் இருக்கும் விவரங்களை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, ஒரு சிறு எழுத்து பிழையை காணநேர்ந்தது. உடனே அதை snagit வழியாக screen shot எடுத்து ,திரு.உமாசங்கர் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன்.


உடனடியாக அதை சரிசெய்யும்படி பணித்துவிட்டு எனக்கும் அதை தெரிவித்திருந்தார். இன்று அந்த தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதெனவும் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.


இது பெரிய விஷயமா என தோணலாம். ஒரு மாநில அளவிலான துறையின் நிர்வாக இயக்குநராக பல திட்டங்களை செயல்படுத்தும் நிலையிலும், எனது மின்னஞ்சலுக்கு மதிப்பளித்து அதை உடனே சரி செய்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
1996 - 2001 கலைஞர் ஆட்சியில் திருவாரூர் தனி மாவட்டமாக்கப்பட்டு, அங்கு மின் ஆளுமை ( e-governance) சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்ட போது அங்கு ஆட்சித்தலைவராக இருந்து அப்பணிகளை திறம்பட செய்தவர். இவரது சீரிய தலைமையில் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மென்மேலும் வளரவேண்டும். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க