Author: ஜோசப் பால்ராஜ்
•6:59 PM
எல்லாரயும் பார்துட்டு நாமளும் ரொம்ப வீராப்பா வலைப்பூவ தொடங்கிட்டோமே, என்னடா எழுதறதுனு யோசிச்சுகிட்ட்டே வெள்ளிகிழமை சாயங்காலம் சீக்கிறமா வேலைய விட்டு வீட்டுக்கு வந்த நானு யோசிச்சுகிட்டே, இணையத்துல ஆனந்த விகடன படிச்சுகிட்டு இருந்தேன். நீ என்ன பண்ணா எங்களுக்கு என்னா? சொல்ல வந்தத சொல்லுடானு திட்டக்கூடாது, ஏன்னா, நம்மள எது எழுதத் தூண்டுதுனு சொல்லுறதுதானே ஒரு பெரிய எழுத்தாளனுக்கு அழகு? ( 2 வது பதிவுலயே பெரிய எழுத்தாளனானு கேள்வி* உங்களுக்கு வந்தா அதுக்கு விடை கடைசியில இருக்கு) .

இந்த வார விகடன்ல சினிமா பகுதியில நம்ம இளம் கதநாயகர் பரத்தோட பேட்டி இருந்துச்சு. அவரு இப்போ "சூப்பர் ஹிட்" இயக்குநர் பேரரசுவோட படத்துல நடிக்கிறாரு. படம் பேரு பழனி, இந்த பேட்டில பரத்து " விஜய்க்கு ஒரு சிவகாசினா, எனக்கு பழனி" அப்டினு சொல்லிப்புட்டாரு.

இப்போ எல்லாம் விகடன் பத்திரிக்கைய இணையத்துல படிச்சா , அதுல ஒரு ஒரு பகுதிக்கும் நாம கருத்து எழுதலாம் பாருங்க, அங்க தான் நிறைய பேரு அவங்க அவங்க கருத்து சுதந்திரத்த காட்டுவாங்க( நான் உட்பட). அட நீ வலைப்பூவுல எழுதிகிழிக்கிறப்ப, அவங்க எல்லாம் விகடன்ல எழுதகூடாதானு நீங்க எல்லாம் கேட்க கூடாது.

அதுல ஒருத்தர், கீழ்கண்ட கருத்த எழுதியிருந்தாரு

"அய்யா சாமி நீங்கள்லாம் சினிமாக்கு எதாவது நல்லது பண்ணனும்னு நெனச்சா காதல் மாதிரி படங்கள்ல நடிக்கிறதோட நின்னுக்குங்க. விஜயோட கம்பேர் பண்ணி பேசறதெல்லாம் கொஞ்சம் ஓவர்ங்கண்ணா... அவர் இன்னைக்கு இவ்வளவு பெரிய ஸ்டார் ஆக எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை சந்தித்து இருப்பார். திடீர்னு யாரும் பெரிய ஆள் ஆகிவிட முடியாது. "

இங்க தான் என் கேள்வி ஆரம்பிக்குது. (அப்பா ஒரு வழியா ஆரம்பிச்சுட்டேன்).
அப்டி என்னங்ணா விஜய் கஷ்டப்பட்டாரு? அவங்கப்பா டைரக்டரு சும்மா மவனுக்காக பக்கா மசாலா படமா எடுத்து மவன ஒரு கமர்ஷியல் ஹீரோவாக்குனாரு, நடிக்க வந்து ரொம்ப நாளைக்கு அப்றம் பூவே உனக்காக படத்துல நடிச்சதுக்கு அப்றம் தானே விஜய் வெளியிலயே தெரிஞ்சாரு. ஆக விஜய் ஒண்ணும் யாருமே படாத கஷ்டம் எல்லாம் பட்டு பெரிய ஆளா ஆகலை. வேற மொழிகள்ல நல்லா ஒடுன படத்த வாங்கி, ரீ மேக் பண்ணித்தான் அவரோட பாதி படம் வருது. அப்டி எந்த விதத்துல அவரோட ஒப்பிட கூட முடியாத அளவுக்கு அவரு பெரிய ஆளு?

நம்ம பரத் அப்டியா? 5 பேரோட ஒருத்தரா பாய்ஸ் படத்துல அறிமுகமாகி, அப்டியே 4 ஸ்டூடண்ட்ஸ் ல 4 பேருல ஒருத்தரா வந்து, அப்றம் வில்லத்தனமா எல்லாம் நடிச்சு, படிப்படியா முன்னேறி இன்னைக்கு ஒரு கதநாயகனா வந்துருக்காருல. இதுல முக்கியமான விஷயம் அவங்க அப்பா தயாரிப்பாளர் இல்ல, அவங்க அண்ணண் இயக்குநரும் இல்ல.
அது ஏன் நம்ம தமிழ் நாட்ல மட்டும் நான் அடுத்த சூப்பர் ஸ்டாரவேண் அப்டினு யாரும் சொன்னா, உடனே எல்லாரும் சீறி பாய்ஞ்சு வந்து, அது எப்டி நீ அடுத்த சூப்பர் ஸ்டாரவேன்னு சொல்லலாம்னு திட்றாங்க?
பாவம் ஒருத்தரு அப்டி சொல்லிட்டு, எல்லாரும் சொன்ன கருத்தையெல்லாம் கேட்டு " நான் பேஷ் மாட்டேன், இனிமே நான் பேஷ்வே மாட்டேன்னு" புலம்பிக்கிட்டி கிடந்தாரு. (இப்பதன் மறுபடியும் பேஷ ஆரம்பிச்சுருக்காரு)

ஒரு பள்ளிகூடத்துல படிக்கிற பையன் நான் முதல் ரேங்க் வாங்க ஆசைப்படுறேன்னு சொன்னா தப்புனு சொல்வீங்களா? ஆசைப்படுறது அவன் அவன் உரிமை. அதுக்கு தகுந்தபடி உழைச்சா அவன் அதை அடையப்போறான். இது நாம வேலை பார்குற இடம், சினிமா, அரசியல் எல்லாத்துக்கும் பொருந்தும்.

இப்போ சரத்குமார், விஜயகாந்த், ராமதாசு, இவ்ளோ ஏன் நம்ம தமிழ்நாடு காங்கிரஸ்ல சிலரே 2011 ல நாங்கதான் ஆட்சியமைப்போம்னு சொல்றாங்கள்ல ? நான் கூட சீக்கிரம் ப்ராஜெக்ட் மானேஜர் ஆகணும், அப்றம் சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு, பெருசா இல்லனாலும் ஏதோ ஒரு பில்கேட்ஸ் அளவுக்காவது வரணும்னு ஆசைப்படுறேன்.

தகுதியும் திறமையும் இருந்தா ஆசைப்படுறத அடையப்போறோம். அப்துல் கலாம் சொன்ன மாதிரி எல்லாரும் கனவு கண்டாதனே முன்னேற முடியும்?
அப்டித்தான் நம்ம பரத்தும் சொல்லியிருக்காரு. அத போய் தப்பு சொன்னா எப்டி ? ஆசைப்படுறது தப்பாங்க ?

* 2 வது பதிவுலயே பெரிய எழுத்தாளாராடா நீ ? என்ற கேள்விக்கு பதில்: நான் பெரிய எழுத்தாளராகணும்னு ஆசைப்படுறேன். ஏனுங்க, ஆசைப்படுறது தப்பா? Udanz
This entry was posted on 6:59 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On Sat Dec 15, 12:43:00 AM GMT+8 , Joseph said...

Dear Paul,
As ur dream u written well..... and u can become a yezhuthalan...
The style and the way u presented the question and answer is Appricatable...
Keep it up.
Joseph Titus

 
On Sat Dec 15, 04:19:00 PM GMT+8 , குசும்பன் said...

பால்ராஜ் நீங்க MS IT படித்தவரா? தஞ்சை பொன்னையா ராமஜெயம் காலேஜில் (கரஸில்)

 
On Sat Dec 15, 07:51:00 PM GMT+8 , rayan said...

வருக அண்ணா வாழ்த்துகள்!!! உங்கள் தமிழ் பனி தொடர வாழ்த்துகள்!
நானும் ஒரு வலை பூ ஆரம்பித்தேன் ஆனால் அதன் நிலை நீங்களே பாருங்கள்,ஆனால் இது வரை ஒன்றும் நான் அதில் செய்ய வில்லை.
www.selvarayan.blogspot.com

 
On Sun Dec 16, 02:10:00 AM GMT+8 , MaYa said...

அண்ணா கலக்கறீங்க போங்கோ!

 
On Sun Dec 16, 01:42:00 PM GMT+8 , Akilan said...

very good!!!

:-)

 
On Sun Dec 16, 10:44:00 PM GMT+8 , சுரேகா.. said...

உண்மையிலேயே நல்லா எழுதுறீங்க..!

பெரிய எழுத்தாளர்தான் அப்பு!

கவலையே படாதீங்க..!வாழ்த்துக்களுடன்..

http://surekaa.blogpsot.com

 
On Mon Dec 17, 01:19:00 PM GMT+8 , Benina said...

ஜோசெப் ,
நல்லா பேசுவீங்கன்னு தெரியும்.
ரொம்ப நல்லாவே எழுதுறீங்க..
தொடர வாழ்த்துக்கள்...

 
On Mon Dec 17, 07:01:00 PM GMT+8 , Dr.Senthil said...
This comment has been removed by a blog administrator.
 
On Mon Dec 17, 07:02:00 PM GMT+8 , Dr.Senthil said...

Super o super

www.pranaveyecare.com

 
On Mon Dec 17, 07:03:00 PM GMT+8 , Sen said...

பால்..

நல்லா இருக்கு..
Congrats!!

a few points I wud like to bring to ur notice..

--- avoid direct coments on anyone.. it may create unnecessary complications..

--- avoid sarcastic critics..
concentrate more on constructive things..

--- be creative.. don't criticize the things u found in other places / blogs / site et all

rather, u could make the same "ஆசைப்படுறது தப்பா? நீங்களே சொல்லுங்க..." blog differently, like.. quoting the thing affected U subtly and motivating the affected one..

--- ur style reminds me writer Sujatha's.. try to avoid that.. adopt a unique style..

finally...
--- if u wish to continue to write in tamil, make the language more stylish.. rather using the words as we speak.. 'coz, blog is a written form.. i could find, the spoken tamil in this.. ofcourse, it cud be ur style, but i wud like to see ur blogs in a professioanl way..

Keep Going!!!

 
On Fri Dec 21, 04:34:00 PM GMT+8 , Known Stranger said...

what ever - when you make your new company - please do let me know i will apply for the position of business development. what is wrong in wishing.

 
On Fri Apr 02, 07:00:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

/நான் கூட சீக்கிரம் ப்ராஜெக்ட் மானேஜர் ஆகணும், அப்றம் சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சு, பெருசா இல்லனாலும் ஏதோ ஒரு பில்கேட்ஸ் அளவுக்காவது வரணும்னு ஆசைப்படுறேன்/


இவ்ளோதானா?... லிஸ்ட் ரொம்பச் சின்னதா இருக்கு:-)

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க