Author: ஜோசப் பால்ராஜ்
•2:20 PM
நேற்றைய அறுவை சிகிச்சைக்குப் பின் மயக்கத்தில் இருந்த செந்தில் நாதன் அண்ணண் தற்போது கண்விழித்து விட்டார். அவரது மனைவி சென்று பார்த்துள்ளார்.

உலகெங்கிருந்தும் தங்கள் அன்பையும், வாழ்த்துக்களையும், பிரார்தனைகளையும் தெரிவித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அன்புடனும், ஆதரவுடனும், மாற்று இதயம் கிடைத்ததும் இதய மாற்று அறுவை சிகிச்சையையும் இதேபோல் வெற்றிகரமாக செந்தில் நாதன் கடந்து முழுமையாக குணமடைவார். தொடர்ந்து உங்கள் உதவிகளையும், அன்பையும், வேண்டுதல்களையும் யாசிக்கிறோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•3:58 PM
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய VAD Fixing அறுவை சிகிச்சை 3.30 மணிக்கு முடிந்து தற்போது செந்தில் நாதன் அண்ணண் அவர்கள் Post Operative Care Unit க்கு மாற்றப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், எல்லாம் நல்லமுறையில் நடந்துள்ளதாகவும், செந்தில் அண்ணண் நன்றாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

உலகெங்கிருந்தும் அண்ணணுக்காக பிரார்தனைகளை மேற்கொள்ளும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அனைவரின் அன்பாலும், வாழ்த்துக்களாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே இது சாத்தியமாயிற்று. தொடர்ந்து உங்கள அன்பையும், வேண்டுதல்களையும் வேண்டுகிறோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•5:51 PM
அண்ணண் சிங்கை நாதனுக்காக நாளை 27.08.2009 அர்ச்சனை செய்ய வசதியாக பலர் அவரது பெயர் மற்றும் நட்சத்திர விவரங்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
அனைவரின் கவனதிற்க்காகவும் இதை பதிவாக வெளியிடுகிறேன்.

முழுப் பெயர் : செந்தில் நாதன்
நட்சத்திரம் : பூராடம்
இராசி : தனுசு.


27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

உங்களுக்கு விருப்பமான முறைகளில் தொடர்ந்து உங்கள் ப்ரார்தனைகளை செந்தில் நாதன் அண்ணணுக்காக செய்யுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம். Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•9:32 PM
அன்பு நண்பர்களே, உலகெங்கும் இருக்கும் நல்ல உள்ளங்களின் தொடர் முயற்சியாலும், உதவியாலும் நமது இலக்கில் 75 சதவீதத்தை தற்போது அடைந்துள்ளோம். இத்தனை பெரிய தொகையை எப்படி அடைவது என்று அஞ்சியவர்களை பதிவிட்ட 10 நாட்களில் உலகெங்குமிருந்தும் உதவிகளை குவித்து சாத்தியமாக்கிய அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

VAD எனும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை தேதி 26ல் இருந்து 27க்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.

எங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்தனை செய்யுங்கள் என்பது தான். இந்த பெரிய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து , செந்தில் அண்ணா நல்லமுறையில் தேறி வர உங்கள் பிரார்தனைகளை தாருங்கள்.

வியாழன் அன்று செந்தில் நாதன் அவர்களுக்காக சிறப்பாக வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவர்கள் உங்க மத முறைகளில் வழிபாடுகள் ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நல்ல உள்ளங்களும் ஒருங்கிணைந்து வேண்டும் போது அது நிச்சயம் நடக்கும்.

உதவிக் கொண்டுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் ப்ரார்தனைகளையும், உதவிகளையும் வேண்டுகிறோம்.
Udanz
Author: ஜோசப் பால்ராஜ்
•7:58 PM
சிங்கை நாதன் அவர்களுக்கு தற்காலிக ஏற்பாடாக Ventricular Assist Device (VAD) எனப்படும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை ஆகஸ்ட் 26 புதன் அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. VAD கருவி இதய மாற்று அறுவை சிகிச்சை வரை தற்காலிக தீர்வாக செய்யப்படுகிறது.


அன்று நம் அனைவரையும் கூட்டுப் பிரார்தனை செய்யுமாறு செந்தில் நாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை முடிந்து அடுத்து மாற்று இதயம் கிடைத்ததும் அடுத்த அறுவை சிகிச்சை என இரண்டு பெரிய சிகிச்சைகளை கடக்க வேண்டியுள்ளது. எனவே அனைவரும் அவரது உடல் நலனுக்காக சிறப்பாக பிரார்தனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.




வலையுலகம் வெறும் மாய உலகமல்ல என நிருபிக்கும் இந்த மாபெரும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள். தொடர்ந்து போராடுவோம். நம் உதவிகளாலும் , ப்ரார்தனைகளாலும் செந்தில் நாதன் அண்ணணை மீட்டெடுப்போம். Udanz
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க