•9:32 PM
அன்பு நண்பர்களே, உலகெங்கும் இருக்கும் நல்ல உள்ளங்களின் தொடர் முயற்சியாலும், உதவியாலும் நமது இலக்கில் 75 சதவீதத்தை தற்போது அடைந்துள்ளோம். இத்தனை பெரிய தொகையை எப்படி அடைவது என்று அஞ்சியவர்களை பதிவிட்ட 10 நாட்களில் உலகெங்குமிருந்தும் உதவிகளை குவித்து சாத்தியமாக்கிய அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
VAD எனும் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை தேதி 26ல் இருந்து 27க்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் 27.08.2009 வியாழன் அன்று காலை சிங்கப்பூர் நேரம் 8 மணிக்கு சிங்கை நாதனுக்கு அறுவை சிகிச்சைக்கான ஆயத்தங்கள் தொடங்கி, 10 மணியளவில் அறுவை சிகிச்சை ஆரம்பமாகும். இந்த அறுவைசிகிச்சை குறைந்தபட்சம் 7 மணி நேரமாவது நடைபெறும்.
எங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்தனை செய்யுங்கள் என்பது தான். இந்த பெரிய அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடந்து , செந்தில் அண்ணா நல்லமுறையில் தேறி வர உங்கள் பிரார்தனைகளை தாருங்கள்.
வியாழன் அன்று செந்தில் நாதன் அவர்களுக்காக சிறப்பாக வேண்டிக்கொள்ளுங்கள். முடிந்தவர்கள் உங்க மத முறைகளில் வழிபாடுகள் ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நல்ல உள்ளங்களும் ஒருங்கிணைந்து வேண்டும் போது அது நிச்சயம் நடக்கும்.
உதவிக் கொண்டுள்ள அத்தனை அன்புள்ளங்களுக்கும் மீண்டும் நன்றிகள். தொடர்ந்து சிறப்பாக உங்கள் ப்ரார்தனைகளையும், உதவிகளையும் வேண்டுகிறோம்.
13 comments:
இலக்கு நெருங்கிவிட்டது..மிக்க மகிழ்ச்சி.. செந்தில் நாதன் அண்ணா குணமடைய நிச்சயமாய் பிரார்த்த்னைகள் உண்டு
நலம் பெற பிரார்த்தனைகள்
உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. செந்தில்நாதன் நலமுடன் திரும்ப பிரார்த்தனையில் இணைவோம்!
அவருக்காக பிரார்த்தனை செய்வோம்....
நம்பிக்கை தரும் செய்திகள்.
தகவலுக்கு நன்றி! எமது பிரார்த்தனைகள் கண்டிப்பாக அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் உண்டு!
அன்பின் ஜோசப்
இறைவன் எப்பொழுதும் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பான் - அதுவும் கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு -அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம். அனைத்தும் நல்ல படியாக நல்வாழ்த்துகள்
இலக்கை நெருங்கிவிட்டோம்!
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி!
ஜோசப், உங்கள் பணி பாராட்டத்தக்கது!
//எங்களைப் பார்க்கும் போதெல்லாம் சிங்கை நாதன் அண்ணன் கேட்பது கூட்டுப் பிரார்தனை செய்யுங்கள் என்பது தான்.//
`செய்தோம்; செய்கிறோம்; செய்வோம்' என்று அன்பர் செந்தில்நாதனிடம் சொல்லுங்கள். அவருக்கு எவ்வித ஐயமும் வேண்டா.
nallatha nadakum nallvallthukal
பட்டுக்கோட்டை எழுத்தாளர்கள் அனைவரும் நண்பர் சிங்கை செந்தில்நாதன் நலம்பெற வேண்டுகிறோம்..
திரு.செந்தில்நாதனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
வாஞ்சையுடன்
வாஞ்ஜூர்
இந்திய, கணக்கில் என்னால் முடிந்ததை நாளை காலை நான் அளிக்கிறேன். மிக தாமதமாய் பார்த்து செயல்பட்டதிர்க்கு வருந்துகிறேன்.
நாதன் நலமோடு திரும்ப நான் பிரார்த்திக்கிறேன்.
-Tholar.