Author: ஜோசப் பால்ராஜ்
•2:10 PM
விகடன் பதிப்பாளர் அவர்களுக்கு மிக நீண்ட காலமாக தமிழ் பத்திரிக்கை உலகில் கோலோச்சிக்கொண்டிருக்கும் விகடன், நவீனயுகத்திற்கேற்ப மாற்றங்களை உள்வாங்கிக்கொள்வது கண்டும் மகிழும் அதே வேளையில், நாளுக்கு நாள் விகடனில் அதிகரித்து கொண்டே வரும் ஆங்கில கலப்பு எம்மை வருத்தமடைய செய்கிறது.

ஏன் தமிழில் நவீன கருத்துக்களை எழுதகூடாது? தமிழில் வார்தைகள் இல்லையா அல்லது தமிழில் எழுதினால் யாரும் படிக்கமாட்டார்களா? தற்போது பெருகிவரும் வலைப்பூக்களில் பல இளையோர்கள் தூய தமிழில் தங்களது கருத்துக்களை அழகாக எழுதுகின்றார்கள். 2 வாரங்களுக்கு முன்னர் விகடன் வரவேற்பரையில் குறிப்பிடப்பட்டிருந்த சாத்தன்குளம் ஆசிப் மீரான் அவர்களின் வலைப்பூ ஒரு உதாரணம்.

வலைப்பூக்களை எழுதும் இளையோர் அனைவரும், தற்கால நவீன சமுதாய வாழ்வில் ஈடுபடும், நன்கு படித்து நல்ல வேலையில இருப்போரே. இது போன்ற இன்றைய இளையோர்களே, தூய தமிழில் எழுதவேண்டும் என்ற சமூக பொறுப்போடு செயல்படும்போது, விகடன் போன்ற மிக பிரபலமான பத்திரிக்கைகள் தங்களது சமூக கடமையில் இருந்து தவறுவது மிகவும் வருத்தத்தை அளிக்கின்றது. தயவு செய்து விகடன் குழும பத்திரிக்கைகளில் பிறமொழிக் கலப்பை இல்லாதொழிக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

இந்த கருத்தை படிக்கும் பிற வாசகர்கள், இதை ஆதரித்தால் உங்கள் ஆதரவையும் , எதிர்த்தால் உங்கள் எதிர்பிற்கான காரணங்களையும் இப்பகுதியில் இணைக்குமாறு வேண்டுகிறேன்


விகடனுக்கு வேண்டுகோள்னா அதை விகடனுக்கு அனுப்பாம, இங்க எதுக்குடா எழுதுறனு கேட்காதிங்க, மேல இருக்க வேண்டுகோள் நான் விகடன் ஆசிரியருக்கு , இந்த வார ஆனந்த விகடன் இதழின் வாசகர் கருத்து பகுதி மூலமா அனுப்பியதுதான். இதை படிக்கிற தமிழ் மீது ஆர்வம் கொண்ட என்ன போல சிந்திக்கிற நாலு பேராவது விகடனுக்கு எழுதி ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்துனா நல்லதுதானே, அதுக்குத்தான் இங்கயும் எழுதியிருக்கேன். நல்லது நடக்கணும்ணா நாலு வழியிலயும் முயற்சி செய்யணும் பாருங்க.
. Udanz
This entry was posted on 2:10 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On Fri Dec 21, 04:22:00 PM GMT+8 , Known Stranger said...

சிந்திக்கிற ஒரு 4 பேராவது

i would have been happy if this 4 is written in tamil number system. or atleast in tamil Nangu rather roman numericals.

but still you use that roman number 4 because it reaches people. Language is for communication. Nothing wrong protecting a language from dying which had happened to hebrew, sanskrit and many more across the globe but language is something that keep accomodating words from other language to keep it alive - tamil would never die but if it is not accomodating new words and restrict itself to be in its primitive state , it will surely finds its state like what sanskrit face. just my view. but good effort from you. I appreciate it.

 
On Fri Dec 21, 04:28:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நண்பரின் கருத்தை ஏற்று 4 என்ற எண்ணை நீக்கிவிட்டு, நாலு என்று மாற்றுகிறேன்.
மாற்றம் விகடனில் வரவேண்டும் என்று நான் சுட்டிக்காட்டும் அதேவேளையில் என் கருத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஒருவர் பரிந்துரைக்கும்போது, அதை ஏற்றுக்கொள்வது தான் சரியாக இருக்கும்.

 
On Fri Dec 21, 06:36:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

Hida..

I totally agree with "known stranger"...

a language is just for communication.. இலக்கணம், இலக்கியம் எல்லாம் அந்த மொழிக்கு அணிகலன்கள். அணிகலன்கள் அழகு சேர்க்குமெ தவிர, மாற்றத்தினை, ஏற்றத்தினை தராது..

there are lot many ways to Protect, Establish and Develope a language..

there's no point in ur thinking that, a magazine like விகடன் has full responsibility to protect Tamil.. same time, as "known stranger" said, we can use other languages, if its going to give u a msg.. as U feel, using the Technical terms, scientific terms, words that are most approperiate in those languages, words that are more apt for the context can be and shud be used in those languages only..

Same time, as U feel, stories, cine news, jokes, things like this can be in Tamil alone.. we can't take sports too in this list.. 'coz, wen u start writing a cricket coverage in Tamil, even U won't understand after U finish it. this is jus an example..

இப்படி பேசரதுனால, எனக்கு ஆங்கில மோகம்.. தமிழ் பற்று இல்ல.. அப்படினு அர்த்தம் கிடையாது. அப்படி முடிவு செய்தா, அது என் தவறு இல்ல, நினைக்கற உங்க தவறு..

 
On Fri Dec 21, 07:11:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சில வார்தைகளை தமிழில் மொழிபெயர்த்தால் புரியாது என்ற உண்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எல்லா தலைப்புகளையும் கூட ஆங்கிலத்தில்தான் வைக்கவேண்டுமா? பல வார்த்தைகளை நாம் ஆங்கிலத்திலேயே பேசி, எழுதி அதன் தமிழ் வார்த்தையை மறந்துவிட்டோம் என்ற உண்மையையும் மறுக்க இயலாது.
டாப் 10 மனிதர்கள் என்பதை சிறந்த 10 மனிதர்கள் என எழுதலாம்.
டிசம்பரில் சென்னையில் நடக்கும் சங்கீத கச்சேரிகளை குறித்து எழுதும் பகுதிக்கு டிசம்பர் சீஸன் என்ற தலைப்புக்கு பதிலாக டிசம்பர் இசை நேரம் என தலைப்பிடலாம்.விகடன் புக் கிளப் என்பதற்கு விகடன் புத்தக மன்றம் என தலைப்பிடலாம்.
இது போன்ற மாற்றங்கள் ஒன்றும் செய்தியின் பொருளையோ அல்லது அதன் சுவையையோ குறைக்கவில்லையே,

 
On Fri Dec 21, 08:33:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

see.. as i said earlier, I do agree with U in this.. tats wat i too quoted in my previous comment too.. hope u have misunderstood the entire message i conveyed..

even U missed out to point a thing..
"டிசம்பர் சீஸன்" என்று சொல்வதே தவறு.. why not "மார்கழி"
moreover, its not a blunder to call it December Season, 'coz, they are not singing tamil songs in those festival.. when its not tamil songs, why we need the topic should be in Tamil..

How many of the so-called Tamil Blogging people or the Tamil lovers are hearing / ready to hear the நாட்டுப்புற பாடல்கள் or தமிழ் இசை???

ofcourse, U'll come back, saying Music has no language boundaries.. i do agree.. but y not treat all the music on par??? ஒரு கண்ணுல வெண்ணை, ஒரு கண்ணுல விழக்கெண்ணையா???
and ofcourse, i shud agree, now a days, Tamil songs too have taken place in this festival..

cheer up..
there are lot many things to bother in India.. rather than feeling for this and getting provoked, lets focuss on the other bugging issues..

 
On Fri Dec 21, 09:04:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

பாதி பதில்களை நீங்களே சொல்லிவிட்டீர்கள், நன்றி.
தமி்ழ் பத்திரிக்கையில் பிற மொழி பாடல்களைப் பற்றி எழுதுவது தவறில்லை. பாப், ராக் போன்ற இசைகளைக்குறித்து கூடத்தான் எழுதுகிறார்கள். அது தவறில்லை. ஆனால் எழுதுவது எந்த மொழி இசையாக இருப்பினும், அதை தமி்ழில் எழுதுங்கள் என்றுதான் இங்கு சொல்கிறேன். எழுதுவது தமி்ழ் பத்திரிக்கை தானே?

நான் சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது அலுவலகத்தில் நான் தமி்ழில் தான் பேசுவேன் என்று சொல்ல முடியாது. அங்கு எல்லோருக்கும் புரியும் மொழியில்தான் நான் பேசியாகவேண்டும். ஆனால் அதேசமயம் என் வீட்டில் என் குடும்பத்தாருடன் நான் பேசும் போது ஆங்கிலத்தில்தான் பேசுவேண் என்றால் அது வெட்டி அலட்டல்தானே?

விகடன் போன்ற தமி்ழ் பத்திரிக்கைகளை தமி்ழர்களும், தமி்ழ் மொழியை படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும்தானே படிக்கின்றார்கள்? அதில் எதற்கு பிற மொழிக்கலப்பு? யாருக்கு புரிவதற்காக பிற மொழிகளில் எழுத வேண்டும்?

நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும் போது இது ஒரு பிரச்சினையா என்று கேட்டுக்கொண்டே எல்லா பிரச்சினைகளையும் புறந்தள்ளிக் கொண்டே போகின்றோமே, இது வரை எந்த பிரச்சினைய நாம் முழுமையாய் விவாதித்திருக்கின்றோம் ? எதை சரி செய்ய நாம் முயன்றிருக்கின்றோம் ? இது சின்ன பிரச்சனையாக இருக்கலாம், ஆனால் இதுவும் ஒரு பிரச்சனை தானே? ஏன் சரி செய்தலை இதில் இருந்து ஆரம்பிக்க கூடாது ?

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க