•1:54 AM
தற்சமயம் பலரது பதிவுகளும் வைரஸ்களால் பாதிக்கப்பட்டு வலைப்பூக்களே முடக்கப்பட்டு வருவதாக தினமும் செய்திகள் வருகின்றன.
அதிலும் உண்மைத் தமிழன் அண்ணணது வலைப்பூவும், அன்புத் தங்கை தூயாவின் வலைப்பூவும் முடங்கியுள்ளதாக கேள்வியுற்று பெரிதும் அதிர்ந்தேன்.
என்னைய மாதிரி ஆளுங்கண்ணா பரவாயில்ல, பாவம் உ.த அண்ணண், அவரு எழுதுன பதிவுகளையெல்லாம் திரும்ப எழுதனும்னு நினைச்சா எவ்ளோ கஷ்டம்? அதான் என்னடா செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன் . அப்ப நம்ம வால்பையன் அண்ணாச்சி ஒரு மெயில் அனுப்சாரு. பதிவுகள்ல இருக்கத பாதுகாப்பா ஒரு பிரதி எடுத்து(back up) வைச்சுக்க உதவும் மென்பொருள் பத்தி சொல்லியிருந்தாரு. அந்த மென்பொருள் exe கோப்பா இருப்பதால் மின்னஞ்சல் வாயிலாக அனுப்புவதில் சிரமம் உள்ளதென சொன்னார்.
தற்போது உங்களனைவரின் நலனுக்காக நான் அதை பொது சேமிப்பு தளமான esnips.com எனும் தளத்தில் அந்த கோப்புகளை சேமித்து வைத்துள்ளேன். தேவைப்படுவோர் அதை இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். தரவிறக்கம் செய்ய சிரமமிருப்பின் எனது மின்னஞ்சல் முகவரிக்கு (joseph.paulraj@gmail.com) தெரியப்படுத்துங்கள்.

18 comments:
//என்னைய மாதிரி ஆளுங்கண்ணா பரவாயில்ல, பாவம் உ.த அண்ணண், அவரு எழுதுன பதிவுகளையெல்லாம் திரும்ப எழுதனும்னு நினைச்சா எவ்ளோ கஷ்டம்? அதான் என்னடா செய்யலாம்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்//
அவர எல்லோரும் சேந்து கிண்டல் பண்ணியே சின்னதா எழுத வச்சுட்டீங்க
உதாரணம் நான் அவனில்லை 2 விமர்சனம்
இதை அவர் ரசிகர்கள் ஆட்சேபிக்கிறோம்
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
Thanks boss!
"பதிவுகளை காப்பாற்ற
Author: ஜோசப் பால்ராஜ் """"•1:54 AM""""
enna ithu?
back up செய்துவிட்டேன். ரொம்ப நன்றி.
ஒரு வேளை பின்னாளில் நம் வலைப்பூ முகவரியே காணாமல் போகும் நிலையில், நமது சேவ் செய்து வைத்த பதிவுகளை வேறு ஒரு வலைப்பூ தொடங்கி அதில் காப்பி செய்ய முடியுமா?
விளக்குங்களேன். ப்ளீஸ்.
முகவரி: ulaks@hotmail.com
பதிவர் போர்படை தளபதி, யூசூப் பால்ராஜ் ஐயங்கார் வாழ்க !
பதிவர்களுக்கு பயன் தரும் தகவல்.மிக்க நன்றி பாஸ்.
மிக்க நன்றிங்க
நன்றி மீந்துள்ளி செந்தில்,
நான் உ.த அண்ணண கிண்டல் செய்யலங்க. அவரோட நிலைமை வேற யாருக்கும் வந்துட கூடாதுன்னுதான் இந்தப் பதிவு.
நன்றி நிஜமா நல்லவன் அண்ணா.
முரு, கடமைன்னு வந்துட்டா கால நேரம் பார்க்க மாட்டோம்ல. அதனாலத்தான் 1.54am க்கு பதிவிட்டேன்.
உலகநாதன், எனக்கு அதுகுறித்த விவரங்கள் தெரியலை. கேட்டு சொல்றேன்.
பெரியவா, உங்க வாயால வாழ்த்து பெறுவது என் பாக்கியம். நன்றி பெரியவா.
நன்றி பூங்குன்றன்
ஞான சேகரன் அண்னா, இன்று மாலை சந்திப்புக்கு வந்துருங்க. பார்த்து ரொம்ப நாளாச்சு.
நல்லதொரு செயல் அண்ணே!
நண்பர்கள் பயன்படுத்தி கொள்ள பரிந்துரைக்கிறேன்!
நண்பர்கள் மறக்காமல் ஓட்டளித்து செல்லவும்!
மச்சி, அதான் ப்ளாகரே பேக் அப் வசதி தருதே. எதுக்கு இந்த சாஃப்ட்வேர்?. அதுல xml ஃபைலா ஷோக்கா டவுன்லோட் பண்ணலாமே. exe இம்சை எல்லா அங்க இல்லையே.
dashboard -> setting -> export blog.
நன்றி மீந்துள்ளி செந்தில்,
நான் உ.த அண்ணண கிண்டல் செய்யலங்க. அவரோட நிலைமை வேற யாருக்கும் வந்துட கூடாதுன்னுதான் இந்தப் பதிவு.
chumma funkakathaan antha comment adichaen
உபயோகமான பதிவு நன்றி
அன்பின் ஜோசப்
நான் பிளாக்கரில் உள்ள வசதியைக் கொண்டே எக்ஸெமெல் கோப்பாக ஹார்ட் டிஸ்கில் தரவிறக்கம் செய்துள்ளேன் - அது போதாதா - இதற்கும் அதற்கும் என்ன வேறுபாடு
நல்ல தகவல் - நல்வாழ்த்துகள்
நன்றி பெரியவா....
அளிக்கும் இருக்கும் 2 ஓட்டுக்கள் உங்களுக்கு சாதகம். வாழ்த்துக்கள்
Good Information