•7:27 PM
அனைவருக்கும் வணக்கம்,
சனி மதியம் நர்சிம்மை, நான் , டாக்டர்.புருனோ, அப்துல்லா, கேபிள் சங்கர், லக்கி, அதிஷா ஆகியோர் சந்தித்தோம்.
நர்சிம் வந்து தனது வங்கிக்கணக்கை காட்டினார்..
நாங்கள் சரிபார்த்தது 01.08.2009 முதல் 31.10.2009 வரையிலான மூன்று மாத ட்ரான்சாக்ஸன்களை மட்டுமே.
அவர் ஏற்கனவே சொன்னது தவிர வேறு எந்த ட்ரான்சாக்ஸனும் அவரது கணக்கில் இந்த மூன்று மாத காலத்தில் இல்லை.
ஆனால் சில பண டெபசிட்கள் இருந்தன, அவை தன்னுடைய சொந்த வரவு செலவுகள் என்று சொன்னார். மீனாட்சி சுந்தரம் என்ற நண்பர் அனுப்பிய 25 ஆயிரம் பணமாக அவருடைய நண்பர் மூலம் கொடுக்கப்பட்டதாக சொன்னதை ஏற்கவில்லை. கொடுத்ததுக்கான எந்த ஆதாரமும் இல்லையாதலால் மேற்கொண்டு எதுவும் பேசவும் இயலவில்லை.
பாஸ்கர் சக்தி & ஜ்யோவ்ராம் சுந்தர் ஆகியோரது பணம் 8000 ரூபாய் விடுபட்டிருந்தது . அதை என்னிடம் பணமாக கொடுத்துள்ளார். ( அந்த தொகை சிங்கை நாதன் அவர்களின் மைத்துனர் வங்கிக்கணக்கிற்கு என்னால் மாற்றப்பட்டுவிட்டது).
இந்த சந்திப்பில் உறுதிபடுத்தப்பட்டது அவரது ஐசிஐசிஐ வங்கிக்கணக்கில் 01.08.2009 முதல் 31.10.2009 வரை உள்ள மூன்று மாத காலத்தில் வேறு எந்த அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர்களும் செந்தில்நாதன் பெயருடன் நிகழவில்லை என்பதை மட்டுமே.
இந்த சந்திப்பில் உறுதிபடுத்தப்பட்டது அவரது ஐசிஐசிஐ வங்கிக்கணக்கில் 01.08.2009 முதல் 31.10.2009 வரை உள்ள மூன்று மாத காலத்தில் வேறு எந்த அக்கவுண்ட் ட்ரான்ஸ்ஃபர்களும் செந்தில்நாதன் பெயருடன் நிகழவில்லை என்பதை மட்டுமே.
இதற்கு மேலும் இதை வளர்க்க வேண்டாம். இத்துடன் இதுக்கு ஒரு டாட் வைத்து முடித்துவிடலாம்.

5 comments:
//01.08.2009 முதல் 31.10.2009 வரையிலான//
01.08.2010 முதல் 31.10.2010 வரை உள்ள
வருஷத்தை சரி செய்யுங்கள் ஜோ.
.
ஜோசப் = நடந்தது நடந்து விட்டது. மேன்மேலும் தோண்டிக் கொண்டே போகாமல் முற்றுப்புள்ளி வைப்பதுதான் சிறந்த செயல். இது ஒரு பாடமாக அமையட்டும் - மற்றவர்களுக்கு.
இண்ட்லில உங்க போஸ்ட் சப்மிட் ஆகல.
இங்க 2 பேர் புள்ளி வச்சியிருக்காங்க.. அதிலிருந்து வேறு யாரும் கோலம் போட ஆரம்பிக்காம இருக்க பின்னூட்டத்தை மூடுவது நல்லது..