•12:28 AM
இறை நம்பிக்கை என்ற ஒன்றை எந்த விஞ்ஞானப்பூர்வ ஆராய்சிகளுக்கும் உட்படுத்தாது வேதங்களில் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழும் ஆத்திகர்களின் எதிரி யார், இவர்கள் முதலில் களையெடுக்க வேண்டியது யாரை? மதத்தை காக்க நினைப்பவர்கள், மதத்தை வளர்க்க நினைப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன?
எல்லா வேதங்களையும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, கேள்விகளைக் கேட்டு , அலசி ஆராய்ந்து உங்கள் வேதங்கள் எல்லாம் பொய் என்று சொல்லும் நாத்திகர்கள் தான் மிகப்பெரிய எதிரிகள் என்றா நினைக்கின்றீர்கள் ?
இன்றும் ஆன்மீகத்தின் பெயரால் ஏமாற்றும் போலிச் சாமியார்கள் தான், நாத்திகத்தை வளர்க்க உதவுகிறார்கள். வாயிலிருந்து லிங்கம் எடுப்பது ஒரு மிகப் பெரிய மகானால் மட்டும் தான் முடியும் என்று கூறப்பட்டபோதுதான் நாத்திகவாதிகள் அதை பொய் என்று தாங்களே அதை செய்து காட்டினார்கள். முதலில் நம்மீது உள்ள குற்றங்களை களைந்து விட்டோம் என்றால் நாத்திகர்களுக்கு வேலையே இல்லாமல் செய்து விடலாம் தானே?
இன்றைக்கு கடவுளுக்கு எதிராக கருணாநிதி எதையாவது கூறினால் தலையை எடுக்க வேண்டும் என்று குதிக்கும் மதவாதிகள், கோயில் கட்டி , ஆசிரமம் அமைத்து கடவுளை வியாபாரப்பொருளாக்கி காசு பார்க்கும் போலி மதவாதிகளை ஏன் எதிர்க்க முன்வருவதில்லை?
நாத்திகர்கள் ஆத்திகர்களுக்கு எதிரிகள் என்றால் இந்த போலிகள் எல்லாம் அவர்களுக்கு துரோகிகள் அல்லவா?
எதிரியைக் கூட நம்பலாம் ஆனால் துரோகியை நம்பக்கூடாது என்று சொல்வார்கள். ஆகவே முதலில் ஒழிக்கப்பட வேண்டியது இந்த துரோகிகளைத்தானே?
வித விதமாக மக்களை ஏமாற்றும் இந்த போலிகளை ஏன் எந்த வேதாந்தியும் எதிர்பதில்லை? ஏன் எந்த இராம கோபலனும் கண்டுகொள்வதில்லை? கருணாநிதி ஏதாவது சொல்லிவிட்டால் மட்டும் உடனே எதிர்க்க ஓடோடி வருகின்றார்களே ஏன் ? கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகர்கள் இதுவரை எந்த மசூதியையும் இடிக்கவில்லை, எந்த கோயிலையும் உடைத்ததில்லை, யாரையும் தீயிலிட்டு கொளுத்தவில்லை. கர்பிணி என்று கூட பாராமல் வெட்டி கொன்றதில்லை, எந்த நகரிலும் கலவரத்தில் ஈடுபடவில்லை, எங்கும் வெடுகுண்டு வைத்ததும் இல்லை. சக உயிர்களை துன்புறுத்தியதில்லை. ஆனால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள் என்பதைத் தான் எல்லா மதங்களும் போதித்த போதிலும், கடவுளின் பெயரைச் சொல்லித்தான் பல கலவரங்களும், குண்டுவெடிப்புகளும், கொலைகளும், கற்பழிப்புகளும் நடக்கின்றன. கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு கலவரத்தில் ஈடுபடுவதைவிட கடவுளை மறுப்பவர்கள் ஒன்றும் கடவுளை இழிவுபடுத்திவிடவில்லை.
எந்த மதம் கொலையையும், கலவரத்தையும், கற்பழிப்பையும் செய்ய சொல்லியிருக்கின்றது? உண்மையான கடவுள் பக்தன் எவனும் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
போலி சாமியார்கள் எப்படி ஆத்திகத்தின் துரோகிகளோ, அதேப் போல் ஆத்திகத்தின் சில குறைபாடுகளும் நாத்திகத்தை வளர்க்க உதவுகின்றன.
சாதி வேறுபாடு, பெண்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் போன்றவை இதில் அடங்கும். பயிரோடு வளரும் களையை விட்டு விட்டு எங்கோ பக்கத்து வயலுடன் ஏன் சண்டையிட வேண்டும்?
இதற்காக கடவுள்களை இழிவாக பேசும் செயலை நான் ஆதரிக்கவில்லை. கடவும் நம்பிக்கை என்பது ஒருவரின் தனிபட்ட உரிமை. எல்லா மதங்களும் இறைவனை நோக்கி செல்லும் வெவ்வேறு வழிகளே, இறைவன் ஒருவனே, எல்லா மதங்களும் அந்த ஒரே இறைவனுக்கு வெவ்வேறு பெயரிட்டு அழைக்கின்றார்கள் என்பது தான் மதம் குறித்த எனது பார்வை. இப்படி ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் எந்த மத வழிபாட்டுதலங்களுக்கு சென்றாலும், உங்களால் ஆழ்ந்து வழிபட முடியும். கடவுளை மறுப்பதும் ஒரு நம்பிக்கையே, அது அவர்களின் உரிமை.
எனது உரிமையில் நீ தலையிடாமல் உன் உரிமையை அனுபவித்துக்கொண்டு இரு என்று எல்லோரும் நினைத்தால் மகிழ்ச்சி எல்லோருக்கும் என்றும் நிலைத்திருக்கும்.

யோசனை
|
12 comments:
ஒருபக்கம் நியாயத்தை மட்டும் சொல்லி இருக்கீங்க நண்பரே!
wat do you say is correct..but i cannot accept wat karunanidhi says.his intension is to insult some caste section..thats wat he is doing..he is not nathigavathi..he is acting as like that.if he wants to protest, first he can controls his party cadress...
some of the examples for your information
1.Arkadu veerasamy changed to veeraswamy
2.TR Balu change his name to "some other name".
3.one of the TN cabiner minister get gold ring from saibaba in presence of karunanidhi
4.his wife and all relatives get blessed from sai baba in presence of karunanidhi
5.muthula intha poli asamiya olinganum...
i am not justifying the poli samiar..but not by karunandhi....
vedhandhi oruvar piranthu vitar. If you need popularity offend what the other celebrity speaks. ellam kalam thotu vallarunthu varubvai. If not religion, there will be something else to fight because we humans cant live in peace we need something to fight. The whole universal fight is started from religion. I often feel on point .. if it was GOD who enlightened the prohphets to preach good why did he preach the prophets of various religion different philosphy. why didnt he set one philosphy of living ( called religion) and let things be singular easy to handle isnt it. some where teh basic foundation is wrong. fine i patronise athesim.
நன்றி குசும்பன் ,
தலைப்பு மதத்தை வளர்க்க என்பது, எனவே தான் நாத்திகர்களின் தவறுகளை இதில் குறிப்பிடவில்லை. அது பற்றி ஒரு தனி பதிப்பு விரைவில் வரும்.
நன்றி Sriram.
கருணாநிதியின் பிதற்றல்களை நியாயப்படுத்தும் கட்டுரையல்ல இது. ஆனால் கருணாநிதியை எதிர்க்க காட்டும் ஆர்வத்தையும் தீவிரத்தையும் ஏன் போலிச்சாமியார்களை ஒழிக்க இவர்கள் காட்டுவதில்லை? அது தான் என் கேள்வி.
கருணாநிதி மற்றும் அவரை சுற்றியிருப்போரின் கொள்கைகளை பற்றி எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தது தானே. ஆனால் விரைவில் நாத்திகம் என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களை பற்றி எழுதுவேன்.
ena achu thallaivaruku ?
எல்லாம் சரிதான்...ஆனால் ஒன்னு இடறுது.
நாத்திகத்தை ஏன் எதிர்கவேண்டும் என்று சொல்கிறீர்கள் ? வழுவான காரணம் உண்டா ?
நாத்திகம் எதிர்க்கப்பட வேண்டியது என பரவலாக ஆத்திகர்கள் கருத்துக் கொண்டு இருக்கிறார்கள். நாத்திகம் உலக அளவில் எவருடைய தலைமையின் கீழும், ஆதிக்கத்தின் கீழும் இயங்கவில்லை. மூட நம்பிக்கையில் உலகம் சீரழிவதைப் பார்க்க விரும்பாதவர்கள், அல்லது மாற்றவேண்டும் என்று நினைக்கும் நல்லுள்ளங்கள் அனைவரும் நாத்திகர்களே.
தமிழகத்தைப் பொருத்து தந்தைபெரியார் மற்றும் அவருடைய வழிதோன்றல்கள் இறைமறுப்பாளர்கள் என்று கூறிக் கொண்டாலும், உலகெங்கிலும் நாத்திகர்கள் பின்பற்றக் கூடிய ஒரே புனித நூல் (?) என்று அவர்கள் யாரும் பின்பற்றுவதில்லை.
பின்பு ஏன் ஆத்திகர்கள் நாத்திகர்களை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ?
Hi Jo,
Get one point correct and straight !!!
The entire TAMILNADU's fate is decided by the self claimed best leader Karunanidhi, he seals our fate, misuses power, making life miserable for the 6 crore tamil population, where as the fake saamiyars r few and here and there , people out of ignorance and greed tolerate and support suh fake saints and ruin their life, in this case entire tamilnadu isnt affected , not many like u and me get succumbed to such frauds. yet iam choicelessy ruled by karunadidhi , my gas bill, petrol , education , media ,roads, water, infrastructure,quoata,food,real esate, pollution,everything is predominantly decided by such ruthless people who spoil the peace and make life miserable for everyone .NOW CAN U TELL ME WHO I SHOULD OPPOSE FIRST AND WHOM I CAN WAIT TO OPPOSE .as a leader he should attend to such daily survival problems of a TAMILAN, not religion (Esp Hinduism) for karunanidhi dares comment only hinduism , while his own family are hindus themselves , i dont mind what they call themselve (dravidians) yet they r hindus ...........................
-JAI HIND
நாத்திகத்தையோ அல்லது ஆத்திகத்தையோ எதிர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை கோவி.கண்ணண்.
மதம் என்பது அவரவர் நம்பிக்கைக்குட்பட்டது. மூடப்பழக்கங்களை எதிர்கலாம். ஆனால் சாமியே இல்லை என்று சொல்வது தவறு. ஏன் மற்றவர்களின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்க வேண்டும்?
உங்களுக்கு இறைவன் மேல் நம்பிக்கையில்லை என்றால் அது உங்கள் நம்பிக்கை, அதை யாரும் தவறு என்று சொல்லமுடியாது.
அதேபோல் இறைவன் மேல் நம்பிக்கை உள்ளவர்களைப் பார்த்து நீங்களும் தவறு சொல்லக்கூடாது. ஏனென்றால் அது அவர்களின் நம்பிக்கை.
அர்சனா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கருணாநிதி பற்றி நாம் இங்கு விவாதிக்க வேண்டாம்.
நாத்திகம் ஆத்திகம் இதைப்பற்றி மட்டும் விவாதிப்போம்.
நீங்கள் சொல்லியுள்ளபடி, கருணாநிதியின் மதசார்பின்மை குறித்த கேள்விகள் எனக்கும் உண்டு. ஒரு வேளை அவர் இந்து மதம் ஒன்றுதான் மதம் என்று நினைக்கின்றார் போல.
உண்மையான மத சார்பின்மை என்பது எல்லா மதங்களையும் மதிப்பது தான். இங்கு இந்து மதத்தை எதிர்பது மட்டுமே மதச்சார்பின்மை என்றாகிவிட்டது.
நல்ல பதிவு.