•2:49 PM
நேற்று சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ சென்று அங்கிருந்து விமானம் மாறி சிக்காகோ சென்ற என் அண்ணணை வழியனுப்ப சிங்கப்பூர் விமானநிலையத்திற்கு சென்றபோது வயதான தன் பெற்றோரை அமெரிக்கவிற்கு வழியனுப்ப வந்தவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..
அவர்: Is your friend travelling to US?
நான் : Yes,He is my brother.
அவர்: Which city in US he is going ?
நான் : Chicago.
அவர்: By Any Chance does he know Tamil ?
நான் : நாங்க தமிழ்நாடு தான்.
அவர்: ohh! ok. Can you ask your friend to help my parents in Tokoyo to change the flight to Washington ? They are going to Seattle.
நான் : அவர் என் அண்ணண் தான் நான் சொல்லுறேன், கட்டாயம் செய்வாரு. நீங்க கவலைப்படாதீங்க.
அவர்: Thank you sir, Actually I was bit tensed how they gonna manage in Tokyo, now I am happy.
மேலே குறிப்பிட்டிருக்க உரையாடலை நல்லா கவனிங்க. அவர் தமிழ் என்பது தெரிந்தவுடன் நான் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவர் கடைசிவரை என்னிடமும், எனது அண்ணணிடமும் ஆங்கிலத்திலேயே தான் உரையாடினார்.
இது நான் எழுதிய கவிதை அல்ல. நேற்றைய சம்பவம் எனக்கு இந்த கவிதையை நினைவுபடுத்தியது.
தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!
தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!
நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!
காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!
கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முந்திக் கொள்வேன்
'Hai' என்று …!
மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!
இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலில்
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்
குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்
இந்த கவிதையை எனக்கு அனுப்பிய நண்பர் செல்வாவிற்கு எனது நன்றிகள்.