Author: ஜோசப் பால்ராஜ்
•2:49 PM
நேற்று சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ சென்று அங்கிருந்து விமானம் மாறி சிக்காகோ சென்ற‌ என் அண்ணணை வழியனுப்ப சிங்கப்பூர் விமானநிலையத்திற்கு சென்றபோது வயதான தன் பெற்றோரை அமெரிக்கவிற்கு வழியனுப்ப வந்தவருக்கும் எனக்கும் நடந்த உரையாடல்..

அவர்: Is your friend travelling to US?
நான் : Yes,He is my brother.
அவர்: Which city in US he is going ?
நான் : Chicago.
அவர்: By Any Chance does he know Tamil ?
நான் : நாங்க தமிழ்நாடு தான்.
அவர்: ohh! ok. Can you ask your friend to help my parents in Tokoyo to change the flight to Washington ? They are going to Seattle.
நான் : அவர் என் அண்ணண் தான் நான் சொல்லுறேன், கட்டாயம் செய்வாரு. நீங்க கவலைப்படாதீங்க.
அவர்: Thank you sir, Actually I was bit tensed how they gonna manage in Tokyo, now I am happy.

மேலே குறிப்பிட்டிருக்க உரையாடலை நல்லா கவனிங்க. அவர் தமிழ் என்பது தெரிந்தவுடன் நான் தமிழில் பேச ஆரம்பித்துவிட்டேன். ஆனால் அவர் கடைசிவரை என்னிடமும், எனது அண்ணணிடமும் ஆங்கிலத்திலேயே தான் உரையாடினார்.

இது நான் எழுதிய கவிதை அல்ல. நேற்றைய சம்பவம் எனக்கு இந்த கவிதையை நினைவுபடுத்தியது.

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry ' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks ' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முந்திக் கொள்வேன்
'Hai' என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் - மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
'I Love You' என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் - காலில்
குத்தியது முள் …
'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்இந்த கவிதையை எனக்கு அனுப்பிய நண்பர் செல்வாவிற்கு எனது நன்றிகள். Udanz
This entry was posted on 2:49 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

21 comments:

On Mon Jun 30, 04:13:00 PM GMT+8 , Unsettled Woman said...

arumai

 
On Mon Jun 30, 04:18:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

இரண்டு பேருக்கும் தான் ஆங்கிலம் தெரியுமே, பின்னே ஏன் தேவை இன்றி தமிழ் பேசனும் என்று நினைத்திருப்பாரோ !

 
On Mon Jun 30, 04:30:00 PM GMT+8 , Joseph Paulraj said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
@கோவி.கண்ணண்: நம் மொழி தெரியாதவர்களிடம் வேற்று மொழியில் பேசலாம், நீங்களும் நானும் ஏன் வேற்று மொழியில் பேச வேண்டும்? நம்ம தாய்மொழியில் பேசுவதைவிடவா மற்ற மொழியில் பேசுவது மகிழ்சி தருகின்றது?

 
On Mon Jun 30, 07:38:00 PM GMT+8 , Anonymous said...

அது ஏதோ சாபம் போலும். தமிழர்களில் அனேகம்பேர் தமிழ் தெரிந்து இருந்தாலும் ஆங்கிலத்தில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மலையாள நண்பர்கள், பேசுபவர் மலையாளி எனத்தெரிந்தால் உடனே தங்கள் தாய் மொழிக்கு மாறிவிடுவார்கள். நாமும் அவ்வாறு மாற எது தடையாக இருக்கிறது என்பது தெரியவில்லை. தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் பேசத்தெரியாது என நினைப்பார்களோ என்ற தவறான எண்ணம் காரணமாயிருக்கலாம். இனியாவது நாம் தாய் மொழியில் பேச முயற்சிப்போம்.
வே.நடனசபாபதி

 
On Mon Jun 30, 08:46:00 PM GMT+8 , சரவணகுமரன் said...

சூப்பர்(!) கவிதை...:-)

 
On Mon Jun 30, 08:58:00 PM GMT+8 , rayan said...

வணக்கம் அண்ணா! இன்று தமிழில் பேசவே தமிழர்கள் தயாரில்லை அதிலும், ஆங்கிலம் கலப்படம் இல்லாத தமிழ் காணாமல் போய் விட்டது.

 
On Mon Jun 30, 09:21:00 PM GMT+8 , rayan said...

தமிழா! நீ பேசுவது தமிழா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?

தமிழா!
நீ
பேசுவது தமிழா?

- காசி ஆனந்தன்.

 
On Mon Jun 30, 09:41:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//கோவி.கண்ணன் said...
இரண்டு பேருக்கும் தான் ஆங்கிலம் தெரியுமே, பின்னே ஏன் தேவை இன்றி தமிழ் பேசனும் என்று நினைத்திருப்பாரோ !
//--
Joseph Paulraj said...
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.
@கோவி.கண்ணண்: நம் மொழி தெரியாதவர்களிடம் வேற்று மொழியில் பேசலாம், நீங்களும் நானும் ஏன் வேற்று மொழியில் பேச வேண்டும்? நம்ம தாய்மொழியில் பேசுவதைவிடவா மற்ற மொழியில் பேசுவது மகிழ்சி தருகின்றது?
//

நான் கிண்டலுக்கு சென்னேனுங்க... இங்கே (சிங்கையில்) சில சமயம் அலுவலகத்திற்கு வரும் சில விற்பனையாளர்கள்...அவர்கள் சென்னையில் வந்திருந்திருக்கிறார்கள் என்று தெரியாமலேயே ஆங்கிலத்தில் உரையாற்ற ஆரம்பித்து இருப்போம், பிறகு மெதுவாக முஞ்சைப் பார்த்துக் கொண்டே... Bangalore ? என்று கேட்டால், no..no..Chennai என்பார்கள். அவ்வளவு நேரம் ஆங்கிலத்தில் பேசிவிட்டு திடிரென்று தமிழுக்கு மாறுவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் ( கூச்சமாக இருக்கும் என்று சொல்லவில்லை ), அப்பறம் சிரித்துக் கொண்டே இயல்பாக பேசுவேன். அதன் பிறகு ஒரு வாக்கியம் கூட ஆங்கிலத்தில் வராது. ஆரம்ப கோளாறுதான் (ஸ்டார்டிங் ட்ரபுள்)

வீட்டில் தமிழ் தாய்மொழியாகக் கொண்ட பேசத் தெரிந்த கணவன் - மனைவி ஆங்கிலத்தில் அவர்களுக்குள் உரையாடினால் அது உண்மையிலேயே நாகரீக மோகம் தான்.

 
On Mon Jun 30, 10:58:00 PM GMT+8 , Sen said...

அட என்னங்க நீங்க எல்லாரும் பேசரீங்க??
தமிழ் மேல் ஆர்வமா இருந்தா, இன்றய தமிழ் நாட்ட பொருத்தவரை, ஒரு குறிப்பிட்ட கட்சியில் நீங்க உருப்பிணர் ஆன மாரி எல்லாரும் எண்ண துவங்கிடராங்க..
அந்த கட்சி என்ன தமிழுக்கு முழு பொருப்பு நாங்க தாணுங்கோ... அப்படினு அறிக்கை விட்டுருக்கா? பின்ன எங்க இப்படி??

அவ்வளவு ஏன்???
நண்பர் பாலுக்கு நல்லா தெரிந்த, எனக்கும் அவருகும் பள்ளியில் தமிழ் ஆசிரியர்..(Tamil MA.. (மண்ணிக்கவும் கற்றது தமிழ்.. )தமிழ் பாடதுக்கு, ஆங்கிலத்தில் விளக்கம் சொல்லுவார்... என்ன கொடுமங்க இது??

ஒரே ஆருதல்... ஆங்கில ஆசிரியர்.. தமிழில் விளக்கம் தருவார்...

நம்ம தமிழர்கள் இது மாதிரி அதிகமான நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள்...

என்னைக்கு நாம செவப்பு தோலையும் வெள்ளக்காரணையும் பார்த்து வாய் பிளக்காம, நம்ம வேலய பார்த்துகிட்டு போறோமோ அன்றைய தினம் தான் நம்ம பொலம்பல் ஓயும்...

(என் தமிழில் பிழை இருப்பின் மண்ணித்து பொறுத்துக்கோங்க... 'coz am also one among the rotten lot.. )

 
On Tue Jul 01, 02:12:00 AM GMT+8 , Known Stranger said...

mozhi ethuva iruntha enna... karuthu parimarikolla thany oru mozhi. iruvarkum angelam theriyum.. tamila pesina enna umai mozhiella pesina enna...

now everything is hybrid technology. let us welcome the hybrid language.. tamlinglish athukum oru grammar set panuvom. athuleyum kaviyam padaipom.. yaruku theriyum 10000 varusathuku appuram oru puthu ellakana mozhi tamilnglisha irukum

engayoo padichathu during my college time while trying to understand the original script of tamil. the tamil what we use is not the way it was just 1000 years back. nama thanjai periya kovil tamil scripts namoda thathavalla kuda padichu purinchuka mudiyathu...

oru small example ( telgu grammar and literature is amazing and is as rich as tamil ) it is a hybrid language of sanskrit with a modified form of tamil ( tamil is mother of dravidian languagenus solranga)

hindi a language with good literature and grammar ( konjam tamila vida khastam antha grammar ena porthuavaraikum ) is a hybrid of sankskirt with urudu and persian.

so oru hybrid varatum.. vara verpom.. kala suzharchiyil hybrid thevai padi athayum acceptpanipom.. tamil urumari thanay inraiya nellai vanthuruku... kuzhambi pona kutaiya agiduma agatum oru thamari mallarum kutaiyell.. sentrinil vallarntha senthamaraiyooo...

 
On Tue Jul 01, 03:03:00 AM GMT+8 , ஒரு வழிப்போக்கன் said...

//http://priyatamil.wordpress.com///

"குத்திக் காட்டியது - என் தமிழ்"

அந்த பதிவு இவுங்க போட்டதுங்க !!

 
On Tue Jul 01, 03:29:00 AM GMT+8 , Anonymous said...

உங்க அப்பா அம்மாவுக்காவது தமிழ் தெரியும்? எங்க அண்ணன் தமிழ் தெரிஞ்சவுங்க கிட்ட தமிழ்ல தான் பேசுறதுன்னு ஒரு கெட்ட பழக்கம் வச்சிருக்காருன்னு சொல்லி இருக்கலாமோ! :)

 
On Tue Jul 01, 12:41:00 PM GMT+8 , Joseph Paulraj said...

வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே.

பதிவில் உள்ள கவிதையை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியதோடு, பின்னூட்டத்திலும் ஈழம் தந்த மாபெரும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் கவிதையையும் இணைத்ததற்கு செல்வராயனுக்கு மீண்டும் நன்றிகள்.

@known stranger:
பலகாலங்களாக வழக்கில் இருந்த பல மொழிகள் இன்று அழிந்து போய்விட்டன. ஏன் தமிழ் போல் மிக தொன்மையான சமஸ்கிருதமும் இன்று வழிபாட்டிலும், இலக்கியங்களிலும் தான் உள்ளது. மற்றபடி அது எல்லா மொழிகளிலும் கலந்துள்ளதே தவிர இன்று சுத்தமான சமஸ்கிருதத்தை பேச்சு மொழியாக உபயோகிப்போர் எண்ணிக்கை மிக மிக குறைவு. யூதர்கள் தங்களுக்கு என ஒரு நாடு இல்லாமல் உலகின் எல்லா பாகங்களிலும் பரவிக்கிடந்த போதும், அவர்களது மொழியை அழியாமல் காப்பாற்றினார்கள். ஆனால் மற்ற இனங்கள் அவ்வாறு செய்யாமல் விட்டதால் பல மொழிகள் இன்று அழிந்துவிட்டன. அப்படி ஒரு நிலை நம் தமிழுக்கும் வரவேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புதியதை வரவேற்பேம், ஆனால் அதற்கு விலையாக நம் தமிழையா கொடுக்க வேண்டும்?

 
On Tue Jul 01, 12:46:00 PM GMT+8 , Joseph Paulraj said...

நன்றி வழிப்போக்கன் அவர்களே,
நன்றாக எனது பதிவை பாருங்கள், அந்த கவிதை நான் எழுதியது அல்ல என்றும், கவிதைக்கு கீழே அதை எனக்கு அனுப்பிய நண்பர் செல்வாவிற்கு நன்றி என்றும் குறிபிட்டிருக்கின்றேன்.

எனக்கு ஏற்பட்ட அனுபவத்தோடு ஒத்துப்போனதால் இந்த கவிதையை இங்கே கொடுத்துள்ளேன்.

நீங்கள் குறிப்பிட்டிருந்த பிரியா தனது வலைப்பூவில் இக் கவிதையை மட்டும்தான் வெளியிட்டிருந்தார். மேலும் அவரது பதிவின் பின்னூட்டத்தில் இருந்து
எழுதியவர்: பழனி (பழனிவேல்)

அவருடைய வலைப்பூ: http://en-kavithai.blogspot.com
என்பதை அறிந்தேன். இதை எழுதிய பழனி அவர்களுக்கும், வெளியிட்டிருந்த பிரியா அவர்களுக்கும், சுட்டிகாட்டிய உங்களுக்கும் எனது நன்றிகள்.

 
On Tue Jul 01, 01:17:00 PM GMT+8 , Known Stranger said...

onrin maraivilay palla puthiya sangathigal varum. mozhyum oru jeevan. onru marainthal matronru varum. senthamizh tamil used in Bc is lost my friend. if a person from that era comes alive he will spit on what you call as tamil. dont you think so. ? so athai athan vazhiyil pogaviduvom.. sanskrit died because it has its limitation never was ready to get adopted and ready to mould itself with kalla suzharchi.. matrangal yetru kollatha entha jeevanum vallarathu vazhavum mudiyathu.. ithu intha oru adiyenin murpokana oru karuthu..

 
On Tue Jul 01, 01:49:00 PM GMT+8 , ஒரு வழிப்போக்கன் said...

படிச்சங்க...நான் சொல்ல வந்தது என்னனா...இந்ந கவிதை இங்க இருந்துதான் வந்ததுனுதான்..

கொஞ்சம் தமிழ்லே விரிவா டைப் பண்ண சோம்பேறித்தனம்... மன்னிச்சுருங்க....

//மேலும் அவரது பதிவின் பின்னூட்டத்தில் இருந்து
எழுதியவர்: பழனி (பழனிவேல்)
//

தகவலுக்கு நன்றிங்க...

 
On Tue Jul 01, 01:51:00 PM GMT+8 , ஒரு வழிப்போக்கன் said...

நீங்க மெயில் அனுப்பி கேட்டதுக்கு மிக்க நன்றி...

 
On Tue Jul 01, 02:27:00 PM GMT+8 , Sen22 said...

"குத்திக் காட்டியது - என் தமிழ்"

அருமையான தலைப்பு...

//காசி ஆனந்தன்.//

உணர்ச்சிபூர்வமான கவிதை...

 
On Tue Jul 01, 09:29:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

நன்றாக எழுதியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
ஆமாம்,பதிவர் சந்திப்புக்கு வரவில்லையே!!

 
On Tue Jul 01, 09:44:00 PM GMT+8 , Joseph Paulraj said...

" வடுவூர் குமார் said...
நன்றாக எழுதியிருக்கீங்க.
வாழ்த்துக்கள்.
ஆமாம்,பதிவர் சந்திப்புக்கு வரவில்லையே!!"

தொடர்ந்து எனக்கு கருத்துக்கள் மூலம் ஊக்கமளிக்கும் உங்களுக்கு எனது நன்றிகள். கடந்த முறை பதிவர் சந்திப்பு நடந்து முடிந்தபின்பு தான் எனக்கு தெரியவந்தது. அடுத்த சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்கின்றேன். உங்களையெல்லாம் சந்திக்க மிக ஆவலாக இருக்கின்றேன்.

 
On Tue Jul 08, 02:38:00 PM GMT+8 , Anonymous said...

நல்ல பதிவு.

சமற்கிருதம் இன்று பேச்சு வழக்கில் இல்லை. கூடுதல் செய்தி: அதை எக்காலத்திலும் பேச்சு மொழியாக வரலாறு கண்டதில்லை.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க