Author: ஜோசப் பால்ராஜ்
•9:55 PM
நம் தமிழ்நாட்டில் உள்ள சில நல்ல அதிகாரிகளில் உமாசங்கர் IAS அவர்களும் ஒருவர். தற்போது எல்காட் நிர்வாக அதிகாரியாக சென்னைக்கு வெளியே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அழைத்துச்செல்லும் முழுமுயற்சியில் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற பெருநகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைப்பதில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்காக சலுகை விலையில் மடிக்கணிணிகளை( Laptop ) வாங்கித்தருவதிலும் ஆர்வமாய் செயல்பட்டுக்கொண்டிருக்கும் இவரைப்பற்றிய ஒரு சுவரஸ்யமான செய்திதான் இந்த பதிவு.
மாணவர்களுக்கு சலுகை விலையில் தரப்படும் மடிகணிணிகளை பற்றி ஒரு மின்னஞ்சல் எனக்கு நேற்று ஒரு நண்பரிடமிருந்து வந்தது. இதை தொடர்ந்து எல்காட் இணையதளத்தில் இது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள சென்ற நான், அப்படியே அந்த இணைய தளத்தில் இருக்கும் விவரங்களை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது, ஒரு சிறு எழுத்து பிழையை காணநேர்ந்தது. உடனே அதை snagit வழியாக screen shot எடுத்து ,திரு.உமாசங்கர் அவர்களுக்கு மின்னஞ்சல் செய்தேன்.


உடனடியாக அதை சரிசெய்யும்படி பணித்துவிட்டு எனக்கும் அதை தெரிவித்திருந்தார். இன்று அந்த தவறு சரிசெய்யப்பட்டுவிட்டதெனவும் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.


இது பெரிய விஷயமா என தோணலாம். ஒரு மாநில அளவிலான துறையின் நிர்வாக இயக்குநராக பல திட்டங்களை செயல்படுத்தும் நிலையிலும், எனது மின்னஞ்சலுக்கு மதிப்பளித்து அதை உடனே சரி செய்தது மிக்க மகிழ்ச்சியை அளித்தது.
1996 - 2001 கலைஞர் ஆட்சியில் திருவாரூர் தனி மாவட்டமாக்கப்பட்டு, அங்கு மின் ஆளுமை ( e-governance) சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்ட போது அங்கு ஆட்சித்தலைவராக இருந்து அப்பணிகளை திறம்பட செய்தவர். இவரது சீரிய தலைமையில் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பம் மென்மேலும் வளரவேண்டும். Udanz
This entry was posted on 9:55 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On Wed Jun 25, 04:32:00 AM GMT+8 , புருனோ Bruno said...

இது போல் நானும் பல முறை அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டிருக்கிறேன்.

உடன் பதில் நிச்சயம்.

ஒரு அரசு நிறுவனத்தின் மாநில அளவிலான அதிகாரி அங்கு விற்கப்படும் மடிக்கணினி குறித்து பதிலளிப்பது என்பது இங்குள்ள தாசில்தார்களுக்கும், தலையாரிகளுக்கும் பாடம் :) :)

 
On Thu Jun 26, 08:10:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி மருத்துவர் அய்யா அவர்களே. உங்கள் பெயரில் தமிழ் இல்லை என்றாலும், உங்கள் உயிரில் தமிழ் இருப்பது உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது தெரிகின்றது.

 
On Sat Jun 28, 12:10:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

பரவாயில்லையே!!
அவருக்கு என் வாழ்த்துக்கள்.

 
On Sat Jun 28, 01:17:00 PM GMT+8 , சந்திப்பு said...

திரு. உமா சங்கர் ஐ.ஏ.எஸ் நல்லவருன்னுதான் எல்லாரும் சொல்றாங்க. ஆனால் கொ;"சம் ஆர்வக் கோளாறு பிடித்தவர். அதாவது அந்த அதிகார வர்க்க சிந்தனை அவரையும் விட்டது கிடையாது. ஒரு முறை சென்னை கத்தீட்ரல் சாலையில் டிராபிக் போலீஸ் செய்ய வேண்டிய வேலையை அவரே அதிரடியாக தலையிட்டார் பாருங்கா... அத தாங்க முடியல. யாருக்கு என்ன வேலையோ அதை ஒழுங்கா கவனிக்கறதுதான் நல்லது. அதை விட்டுட்டு... எப்படியோ உமா சங்கர் ஐ.ஏ.எஸ் நல்லவர் என்பது நல்ல செய்திதான்.

 
On Sat Jun 28, 02:04:00 PM GMT+8 , முத்துலெட்சுமி/muthuletchumi said...

நானும் அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.. சிறப்பாக பணியாற்றுபவர் என்று..
word verification நீக்கவும்.. பின்னூட்டமிடுவதற்கு இது ஒரு சிரமமான விசயம்.

 
On Sat Jun 28, 04:08:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

(mannikkavum..tamil typing veelai seiyavillai)
there are very few officers in tamilnadu like umashankar,iraianbu,radhakrishnan,nandakishore,pradeep yadav are honestly working for the upliftment of our state. a great Salute to them.

 
On Sun Jun 29, 05:19:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
சந்திப்பு அவர்கள் கூறியபடி, உமா சங்கர் அவர்கள் செய்திருந்தால் அது ஒன்றும் தவறாக எனக்கு தெரியவில்லை. அந்த இடத்தில் அதை செய்ய வேண்டிய போக்குவரத்து காவலர் ஒழுங்காக வேலை செய்திருந்தால், அவர் அதில் தலையிட்டிருக்க வேண்டியிருக்காது. எல்லோரும் இது நம் வேலையில்லை என்று சென்றால் யார்தான் அதை சரி செய்வது? இது நம் வேலையில்லை என்று நாம் எல்லோரும் செல்வதுதான் பல ஒழுங்கீனங்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.
நீங்கள் கூறியபடி word verification நீக்கிவிடுகின்றேன் கயல்விழி.

 
On Tue Jul 01, 01:57:00 AM GMT+8 , Known Stranger said...

மடிக்கணிணிகளை( Laptop ) =laptop

romba khashta patu tamil arvalargal ithu mathiri puthu tamilakka sorkallai kandu pudichu tamila semalla vallakurangooo...

anna katumarathuku inum english karan english use pani inum oru varthai kandupudikalla appadiea use panitan horlics mathiri. athuvum englishoda onrara kallathu nalla than iruku...

yenoo tamil mozhiya vallarka kashta patu equivalent varthaiya kandu pudichu use panrom for some english words which i feel not necessary...

there is a beautiful concept in islam. that kuran has to be recieted in arabic for the reason there can be no equivalent words used in kuran in other language..

tree a tree a than uruvagam panikaum

tree na maram - it is meaning from english - to tamil

மடிக்கணிணிகளை( Laptop ) - konjam uruthalla irukuu..

itha nan sonnathuku palla tamil arvallarkallai pakaichuka vendi irukum...

 
On Thu Jan 24, 02:44:00 PM GMT+8 , Unknown said...

திரு. உமா சங்கர் அவர்களை பற்றி நானும் அறிவேன். மிகவும் நேர்மையானவர். அவரை தொடர்பு கொள்ள எதாவது வழி இருந்தால் கூறுங்கள்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க