Author: ஜோசப் பால்ராஜ்
•11:40 PM
சமீப காலங்களில் சில சின்னஞ்சிறு குழந்தைகள் வெறிநாய்கடிக்கு பலியாகும் கொடூர செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்க முடிகின்றது.
மதுரை போஸ், சாத்தூர் வினோத்ராஜ், விருதுநகர் விஷ்ணுராம், சிவகங்கை கவிதா... நீண்டுகொண்டே போகின்றது இந்த கொடூர சாவுகள்.
மதுரை அரசு மருத்துவமனையில் சிறைச்சாலை போன்ற ஒரு தனி கூண்டுக்குள் வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றார்கள். அப்படியும் யாரையும் காப்பாற்றமுடியாமல் அநியாயமாக அந்த பிஞ்சு குழந்தைகள் உயிர்விடுகின்றன.
ரேபிஸ் நோய் வந்து இறப்பவர்கள் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் அரசுமருத்துவமனையில் இருந்து நேரடியாக சுடுகாட்டிற்கு எடுத்துசென்று எரித்துவிடுகின்றார்கள்.அது தான் நோய் பிறருக்கு பரவாமல் தடுக்க ஒரே வழி என்றாலும், செய்திதாள்களில் படித்தபோது பதறாத மனமும் இருக்கும் என்று எனக்கு தோன்றவில்லை.

இது யார் குற்றம் அய்யா? வெறிநாய்களை கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் வேலைதானே? யாரோ சில பிராணிகள் நலச்சங்கத்தினர் தொடுத்த வழக்கினால் தெருநாய்களையும், வெறிநாய்களையும் கொல்வது நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டுவிட்டது. அதற்கு மாற்றாக உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்று உத்தரவு போட்டிருக்கின்றார்கள்.

போடாதா சாலையையே போட்டதாக கணக்கு காட்டி சம்பாதிப்பவர்கள் இருக்கும் நம் நாட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டம் எல்லாம் அவர்கள் பணம் சம்பாதிக்க கிடைத்த அட்சயப் பாத்திரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நாய்களுக்கு ஆதரவாக மட்டும் வழக்கு போடும் மாண்புமிகு பிராணிகள் நல சங்கத்தினர்தான் இந்த கேடுகெட்ட மனிதர்களை நினைக்கவில்லை என்றால், மாநிலம் ஆளும் நம் முதல்வரும் நினைக்கவில்லையே என்பது தான் பெரும் சோகம்.
இந்த வாரம் சென்னையில் அண்ணா சாலை அருகில் கட்டி முடிக்கப்படாத ஓர் எட்டுமாடி கட்டிடத்தில் படப்பிடிப்பு நடத்த சென்ற திரைப்படக் குழுவில் இருவர் மின் தூக்கி அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாகி பலியானார்கள் என்ற செய்தியை படித்தோம். இறந்தவர்கள் பாவம்தான், இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் அவர்கள் வேலை பார்தது பல கோடி ரூபாய்களை கொட்டி படம் எடுக்கும் ஒரு நிறுவனத்துக்காக. அதே போல் அவர்களின் உயிர் இழப்பிற்கு காரணம் அந்த மின் தூக்கியை நிறுவியவர்களின் கவனக்குறைவு. ஆனால் யாரும் கோரிக்கை வைக்காமலேயே நம் முதல்வர்இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகையை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அளித்துள்ளார்.
நம் முதல்வருக்கு திரைப்படத்துறையினரின் மீது இருக்கும் பாசம் எல்லோரும் நன்கு அறிந்ததுதான். ஆனால் தற்போது இவர் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் முதல்வர் என்பதால் இது அநியாயமாய் படுகின்றது. நியாயமாகப் பார்த்தால் இந்த உயிர் இழப்புகளுக்கு காரணமாகிய தயாரிப்பாளர் மற்றும் மின் தூக்கியை நிறுவியவர்கள் தான் தண்டணைக்குறியவர்கள். அவர்கள் தான் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கியிருக்க வேண்டும்.
அவர்கள் மேல் நடவடிக்கை எடுத்து உடனடியாக இழப்பீடு வழங்கச் செய்திருக்க வேண்டும். அதுவும் ஒரு லட்சம் மட்டும் அல்ல. இன்னும் பெரிய தொகையை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு பெற்றுத்தந்திருக்க வேண்டும்.
திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் என்பதற்காக யாரும் கோரிக்கை வைக்காமலேயே உதவி அளித்த நம் முதல்வர், இப்படி ஆட்சியாளர்களின் கவனமின்மையால் உயிர்விட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு எந்த உதவியும் செய்ததாக இதுவரை செய்திதாள்களில் படிக்கவில்லை.
கள்ளச் சாரய சாவு எனில் அதற்கும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து உதவியளிக்கின்றார்கள். ஆனால் வழக்காமாக கையூட்டு பெற்றுக்கொண்டு, கள்ளச்சாரய வியாபரத்தை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறையினருக்கு வெறும் இடமாற்றம், பணியிடை நீக்கம் மட்டும்தான் தண்டணை.
சாராயம் குடித்து இறப்பவர்கள் கூட தீங்கு என்று தெரிந்தும் அதை குடிக்க செல்பவர்கள் தான். ஆனால் நாய்கடிக்கு ஆளாகி இறப்பவர்களின் சாவுக்கு காரணம் அவர்களா? நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யலாம் என மிக அருமையான அறிவுரை கூறிய நீதிமன்றம், வெறிபிடித்த நாய்களை என்ன செய்வது என்று கூறாமல் போனது நியாயமா?
பிராணிகளுக்காக மட்டும் வழக்கு போடும் அமைப்புகள், அவற்றால் பாதிக்கப்படும் ஏழை எளியவர்களுக்காக எதுவும் செய்யாமல் இருப்பது நியாயமா?
இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கத்தினர் கட்டுப்படுத்தாமல் விட்டதால் நேரும் உயிர் இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்காமல், திரைப்படத்துறையினருக்கு மட்டும், அதில் அரசாங்கத்தின் தவறோ, பங்கீடோ இல்லையென்ற போதும் யாரும் கேட்காமல் உதவியளிப்பது நியாயமா? Udanz
This entry was posted on 11:40 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On Fri Jun 27, 02:58:00 PM GMT+8 , Sriram said...

its one of the worst government running on tamil nadu...first of CM doesnt able to manage the team because of his age limitation.And he is more intrested in attending the cine function arranged by rajini,kamal rather than the government function.Because of inablities to manage his famility, still stuck to his CM post....thats wat people of tamil nadu started thinking..

 
On Sat Jun 28, 12:40:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

i agree with U Paul.. though the lift accident issue u've pointed out here is not the correct sequence.

so.. wat r we going to do to change the mindset of the Govt .. rather to say the mindset of the people???

@ Sriram... its not that only the present Govt is running properly.. we've enough and enough of history... in the past too we cribbed about the Govt.. but what we did fruitfully to eradicate these things??? its always easy to complaint.. than taking action...
how many of us are ready to vote.. ofcouse, we are ready to cast our vote only when we are in our native. are we ready to spare a day to excercise our right of voting???? wen we're not ready for that, we don've right to talk about the Govt.

 
On Sun Jun 29, 03:56:00 AM GMT+8 , Anonymous said...

மாரநேரியிலிருந்து சிங்கப்பூர்வந்தபிறகும்
தமிழ் வளர்க்க எண்ணும் உங்கள் எண்ணம் வாழ்க.
தமிழ்ச்சித்தன்

 
On Sun Jun 29, 04:52:00 PM GMT+8 , Unknown said...

பின்னூட்டம் எழுதிய அனைவருக்கும் நன்றி.
சிங்கப்பூரில் இருந்தாலும் நான் என்றும் தமிழன் தானே. அதை எப்படி என்னால் மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியும்?

 
On Tue Jul 01, 02:03:00 AM GMT+8 , Known Stranger said...

sounda than iruku doi. romba tamil patru perikitu varuthu paul.. tamil tamil tamil... hmmmm . tamil illakanathin methu inrum marava asai kondavan annal yenoo veri varavillai inum tamilan enru petrikolla ... manithan enkinra miruga jatheyai serthavan yenray paraisatrikolla vizhaikeren.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க