Author: ஜோசப் பால்ராஜ்
•6:05 PM
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாலத்தான் தீ விபத்து நடந்தது - முதலமைச்சர் அறிக்கை

தீயணைப்பு சான்றிதழே பெறாமல் ஐந்து மாடிக் கடை - தீயணைப்புத் துறை இயக்குநர்

அந்த இடத்துல திடீர்னா ஐந்து மாடிக்கட்டிடம் கட்டுனாங்க? பல வருசங்களா அந்த பல மாடிக்கட்டிடம் இருந்துகிட்டேத்தானே இருக்கு ?

இத்தனை நாளு முதல்வருக்கு இது தெரியவே தெரியாதா? தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த கட்டிடத்துக்கு சான்றிதழ் வாங்கிருக்காங்களா இல்லையான்னு கூடத் தெரியாதா?

தமிழ்நாட்டுலயே மொத்தம் 968 பெரியக் கட்டிடங்கள் தான் இருக்கு, அதுல 661 கட்டிடங்களுக்கு சென்னையில இருக்குன்னு சொல்லிருக்காரு அந்த அதிகாரி. மொத்த‌ த‌மிழ்நாட்டுல‌யும் 968 பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள் தான் இருக்குன்னா, அந்த‌ 968ல‌யும் எல்லா விதிமுறைக‌ளும் பின்ப‌ற்ற‌ப்ப‌ட்டிருக்கா, முறைப்ப‌டி தீய‌ணைப்பு வ‌ச‌திக‌ள் செய்ய‌ப்ப‌ட்டிருக்கா, அவ‌ச‌ர‌க்கால‌ங்க‌ளிலும், விப‌த்து நேர‌ங்க‌ளிலும் பொதும‌க்கள் பாதுகாப்பா வெளியேறும் வ‌ழிக‌ள் அமைக்க‌ப்ப‌ட்டிருக்கான்னு கூட‌ ந‌ம்ம‌ தீய‌ணைப்புத்துறையால‌ சோத‌னை செய்ய‌ முடியாதா?

தீயணைப்புத் துறையின் அனுமதியே இல்லாமல் இருந்ததாம், தீயணைப்புத்துறை அதிகாரி இப்பத்தான் சொல்றாரு. இவ்ளோ நாளு என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாரு? சரிங்க, என் கேள்வி, இந்த 900+ கட்டிடங்களும் முறைப்படி தீயணைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கா, அவசரக் காலத்துல வெளியேற வசதிகள் இருக்கான்னு எல்லாம் யாருமே சோதிக்க மாட்டாங்களா?

விதிமுறைக‌ளை மீறிக்க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌ட்டிட‌ங்க‌ளை இடிக்க‌ச் சொல்லி தொட‌ர‌ப்ப‌ட்ட‌ பொதுந‌ல‌ வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌ம் இடிக்க‌ச்சொல்லி உத்த‌ர‌விட்டு அதே தியாக‌ராய‌ந‌க‌ரில் உள்ள‌ சென்னை சில்க்ஸ் க‌ட்டிட‌த்தின் சில‌ த‌ள‌ங்க‌ள் இடிக்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்த‌ க‌ட்டிட‌ங்க‌ள் எப்ப‌டி த‌ப்பின‌? அப்போது கூட‌ தெரிய‌வில்லையா இவையும் விதிமுறையை மீறித்தான் க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ என்ப‌து?

இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எல்லோரும் புலம்புகின்றார்கள். இன்னும் மனித உயிர்களுக்கு மதிப்பு மட்டும் உயரவே இல்லை. ஏதாவது விபத்து ஏற்பட்டால் இரண்டு நாட்களுக்கு மட்டும் எல்லோரும் பேசிட்டு போயிகிட்டே இருக்காங்க. அரசாங்கம் முதல்வர் நிவாரண நிதியில கொஞ்சம் பணம் கொடுக்கும், விளம்பரத்துக்கு எல்லா அரசியல்கட்சிகளும் கொஞ்சம் உதவி செய்வாங்க, அவ்ளோதான் எல்லாரும் மறந்துடுவாங்க.

90 பச்சிளம் குழந்தைகள் உயிரோடு கருகியப்பின்னர் தான் பள்ளிகளில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என ஆரய அரசு உத்தரவிட்டது. தற்போது 2 உயிர்கள் பலியாகியுள்ளன. இனியாவது அரசு முழிக்குமா? அதிகாலையிலயே சரவாணா கடை எரிஞ்சதால 2 உயிர்களோட போச்சு, ஆனா அதே விபத்து காலை 11 மணிக்கு மேலயோ அல்லது மாலை நேரத்துலயோ நடந்துருந்தா ??? யோசிக்கவே பயமா இருக்குங்க.

இவ்வளவு மோசமாக விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் கட்டாயம் இந்த விபத்திற்கு இழப்பீடு எதுவும் கொடுக்க கூடாது. மேலும் இந்த விதிமீறல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்பட வேண்டும். மேலும் அதே ரெங்கநாதன் தெரு மட்டுமல்ல, இன்னும் இது போல நெருக்கடி நிறைந்த பல இடங்களில் உள்ள பொதுமக்கள் கூடும் வியாபார நிறுவனங்களில் எல்லாம் முறையாக சோதனை செய்து, அதில் ஏதாவது விதி மீறல்கள் இருந்தால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது ரம்ஜான் மற்றும் தீபாவளிப் பண்டிகை காலம், மக்கள் பெருமளவில் புத்தாடைகள் வாங்க இந்த கடைகளுக்குத்தான் செல்வார்கள். இப்போதே உடனே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு தாட்சண்யமே இல்லாமல் விதிமுறைகளை மீறிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வந்தாளாவது பண்டிகை கால லாபங்களை இழக்க விரும்பாத நிறுவனங்கள் உடனே விதிமுறைகளை நடைமுறைபடுத்த முன்வருவார்கள். இனியாவது முழிக்குமா அரசு ? Udanz
This entry was posted on 6:05 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On Thu Sep 04, 10:48:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

//இது ரம்ஜான் மற்றும் தீபாவளிப் பண்டிகை காலம், மக்கள் பெருமளவில் புத்தாடைகள் வாங்க இந்த கடைகளுக்குத்தான் செல்வார்கள். இப்போதே உடனே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு தாட்சண்யமே இல்லாமல் விதிமுறைகளை மீறிய நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். //


வழி மொழிகிறேன். நடிகைகளை வைத்து விளம்பரம் செய்ய கொட்டும் காசுகளில் 1 விழுக்காடு கூட பாதுகாப்புக்காக இந்த நிறுவனங்கள் செய்து கொள்வதில்லை. :(

 
On Thu Sep 04, 10:51:00 AM GMT+8 , ஜெகதீசன் said...

நேற்றய கலைஞரின் கேள்வி-பதிலைப் பார்த்தபோது வெறுப்பும் கோவமுமே வந்தது...
விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதுன்னு சொல்றது தான் இவர் வேலையா? அப்ப நடவடிக்கை எடுக்குறது யார் வேலை??
:(((
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக தலைமையகத்துக்கு கடப்பாறையுடன் போவதும், அதிமுக ஆட்சிக்குவந்தால் அறிவாலயத்துக்கும் ஆலிவர் ரோடுக்கும் கடப்பாறையுடன் போவது மட்டுமே நடக்கிறது...

 
On Thu Sep 04, 11:02:00 AM GMT+8 , இனியா said...

உங்கள் கோபம் புரிகின்றது.
அரசோடு, எல்லோருக்கும் இந்த அக்கறை வேண்டும்.
அரசை மட்டுமே குறை சொல்ல முடியாது

 
On Thu Sep 04, 11:19:00 AM GMT+8 , விஜய் ஆனந்த் said...

அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிங்களும் ஒரே மாதிரிதான்...கடமைய செய்ய காசு கேப்பாங்க...ஏதாவது தப்பாயிடுச்சுன்னா அடுத்தவன கை காட்டி வுடுறதிலயே குறியா இருப்பாங்க...இப்பவும், நீங்க மேற்கோள் காட்டியிருக்கற 2 பேரோட அறிக்கைகளுமே, எம்மேல தப்பில்ல, அவங்கதான் தப்புன்னு சொல்லுதே தவிர, இதுதான் பிரச்னை, அதுக்கு இதுதான் தீர்வு மற்றும் இன்னின்ன நடவடிக்கை எடுக்கப்போறோம்னு சொல்லக்காணோமே???பேசாம இந்தியனும், அந்நியனும் டிவில பாத்து சந்தோஷப்பட்டுக்கலாம்...

 
On Thu Sep 04, 02:19:00 PM GMT+8 , Rangs said...

என்றைக்கு முதல் அமைச்சர்தான் இந்த நாட்டின் மிகப் பெரிய வேலைக்காரர் என்ற விழிப்புணர்ச்சி நம் மக்களுக்கு உண்டாகிறதோ அன்றுதான் இந்த நாடு உருப்படும்...

அது வரை வாரிசுகளைப் பற்றி அவர் கவலைப் பட்டுக் கொண்டிருக்கலாம்..


நம் மக்கள் ஜாதி பார்த்து ஓட்டு போடும் வரை இதுதான் கதி!!!

பொறுப்பின்மையின் உச்சமே நம் அரசியல்வாதிகள்..


We get the leaders only we deserve!!!

 
On Thu Sep 04, 09:53:00 PM GMT+8 , Mahesh said...

முதலமைச்சர் அவரோட அடுத்த படத்துக்கு வசனம் எழுதறபோதே அறிக்கையும் விடறார் போல... ரொம்ப பொறுப்பான முதலமைச்சர்.... அண்ணாவும் பெரியாரும் கனவுல வரும்போதெல்லாம் நாட்டை பாதியெல்லாம் பேச மாட்டாங்க போல....

 
On Sat Sep 06, 05:18:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

இந்தியாவில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எல்லோரும் புலம்புகின்றார்கள். இன்னும் மனித உயிர்களுக்கு மதிப்பு மட்டும் உயரவே இல்லை.
//

ஓன்னும் சொல்றாப்புல இல்ல :(

 
On Sat Sep 06, 09:20:00 PM GMT+8 , Sen said...

தூங்கறவங்கள எழுப்பலாம், ஆனால் விழித்திருப்பதாக நாட்டை நம்பவைத்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு, நண்பா நீ மட்டும் அல்ல, ஈசனே வந்தாலும் திருத்த முடியாது.

 
On Sat Sep 06, 09:57:00 PM GMT+8 , Anonymous said...

என்ன சொல்ல?

வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்
வைத்தூறு போலக் கெடும்

குறளோவியம் எழுதியவருக்கு இதை யாராவது எடுத்துச் சொன்னால் பரவாயில்லை

 
On Mon Sep 08, 01:17:00 PM GMT+8 , குடுகுடுப்பை said...

நமது சிந்தனை பொருள் சேர்ப்பது பற்றி மட்டுமே இருப்பதால் அதில் உள்ள குறைகளை களைய நாம் நினைப்பதில்லை

 
On Mon Sep 08, 03:27:00 PM GMT+8 , சரவணகுமரன் said...

//ஆனா அதே விபத்து காலை 11 மணிக்கு மேலயோ அல்லது மாலை நேரத்துலயோ நடந்துருந்தா ??? யோசிக்கவே பயமா இருக்குங்க. //

உண்மைதாங்க...

நியாயமாக கேள்விகள்....

 
On Fri Sep 26, 11:45:00 PM GMT+8 , Anonymous said...

இது பற்றி ஜு.வியில் ஏற்கனவே செய்தி வந்திருக்கிறது.இதுக்கும் யராவது டிராபிக் ராமசாமி வந்து கேஸ் போடணும் போலும்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க