•7:01 PM
உலகப் பிரபல கூகுள் நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி மிக உன்னதமான சேவை ஒன்றை செய்ய முனைந்துள்ளது. அதுவும் நமது பங்களிப்போடு.
சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பிரிவுகளில் நமது யோசனைகளை தெரிவிக்க ஒரு இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. www.project10tothe100.com
சமுதாய கட்டமைப்பு, புதிய வாய்புகளை உருவாக்கும் யோசனைகள், ஆற்றல் மேம்பாடு, சுற்றுபுற மேம்பாடு, சுகாதாரம், கல்வி, எல்லோருக்கும் பாதுகாப்பான உறைவிடம் அமைய யோசனைகள், இந்த பிரிவுகள் எதையும் சாராத வேறு எந்த யோசனைகள் என பல பிரிவுகளில் நமது யோசனைகளை விரிவாக இந்த இணைய தளத்தில் உள்ளீடு செய்யும் வகையில் அமைத்துள்ளார்கள்.
வரும் அக்டோபர் மாதம் 20 தேதி வரை நமது யோசனைகளை இந்த இணையத்தில் பதிவு செய்யலாம். ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை பதியலாம். பதிவு செய்யப்பட்டுள்ள திட்டங்களில் சிறந்த 100 திட்டங்கள் 2009 ஜனவரி மாதம் 27 தேதி அறிவிக்கப்படும். அந்த 100 திட்டங்களில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி சிறந்த 20 திட்டங்களை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்தெடுக்க உள்ளார்கள்.
அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் 20 சிறந்த திட்ட யோசனைகளில் இருந்து 5 திட்டங்களை நடுவர் குழு தேர்தெடுத்து 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அந்த திட்டங்களை செயல்படுத்த உள்ளார்கள்.
சிறந்த திட்டங்களுக்கான யோசனைகளை கீழ்கண்ட அடிப்படையில் தேர்ந்தெடுக்க உள்ளார்கள்.
1) இது எவ்வளவு மக்களுக்கு பலனளிக்கும் ?
2) இத்திட்டம் அத்தியாவசியமான ஒன்றா? இது எந்த அளவு மக்கள் பிரச்சனைகளை களைய உதவும்?
3) இத் திட்டம் ஒரு வருடத்திற்குள்ளோ அல்லது இரண்டு வருடத்திற்குள்ளோ செயல்படுத்த முடியக்கூடிய ஒன்றா?
4) எளிதாகவும், அதிக செலவில்லாமலும் இதை செயல்படுத்த இயலுமா?
5) எத்தனை காலத்திற்கு இத்திட்டம் பலனளிக்கும் ?
இதையாச்சும் செய்வோம் பாஸ் - பெண்ணியவாதிகள் கவனிக்க... என்ற தலைப்பில் நான் ஏற்கனவே எழுதியிருந்த பதிவில் சொல்லியிருந்த ஆலோசனைகளை இந்த தளத்தில் என் பங்குக்கு யோசனையாக வெளிப்படுத்தியுள்ளேன். மாத விலக்கு காலத்தில் பயன்படுத்தும் சானிடரி நாப்கின்களை மிகக் குறைந்த விலையில் கிராமப்புற மகளிர் குழுக்களை கொண்டே உற்பத்தி செய்ய வைத்து, அவர்கள் மூலமாகவே இதை வீடு வீடாக விற்கும் யோசனை நம் நாட்டு கிராமங்களுக்கு மட்டுமல்ல, முன்னேறாத மூன்றாம் உலக நாடுகளின் கிராமப்புற பெண்களுக்கும் மிகவும் பயன்படும் ஒரு யோசனை எனக் கருதியதால் அதை கூகுள் தளத்தில் உள்ளீடு செய்துள்ளேன்.
ஒரு வேளை எனது யோசனை சிறந்த யோசனையாக தேர்தெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படலாம். அதன் மூலம் அங்குள்ள மகளிர் குழுக்களுக்கு ஒரு வருமானமளிக்கும் சுய தொழிலும், ஏழைப் பெண்களுக்கு குறைந்த விலையில் சுகாதார வசதிகளும் கிடைப்பதோடு, மிகக் குறைந்த விலையில் நாப்கின்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களை கண்டுபிடித்த கோவையைச் சேர்ந்த திரு.முருகானந்தம் அவர்களுக்கும் நல்ல தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
சிறு சிறு குழுக்களாக மக்களுக்கு வேலை வாய்ப்பையும், சுகாதார வாய்ப்பையும் நீண்ட நாட்களுக்கு ஏழை நாடுகளில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு அளிக்கும் என்பதால் இதை நான் தேர்தெடுத்துள்ளேன்.
நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு யோசனை தோன்றலாம். நீங்களும் உங்களுக்கு தோன்றும் யோசனைகளை இதில் தெரியப்படுத்துங்கள்.
இதையாச்சும் செய்யலாமே பாஸ்...
புதிதாக ஒரு வேலைக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் தேர்வானதாலும், வேலை மாற்றம் தொடர்பான பணிகளாலும், மேலும் சில சொந்த பிரச்சனைகளாலும் இரண்டு வாரமாக பதிவுகள் எதுவும் எழுதவில்லை. என் மேல் உண்மையிலேயே அக்கறையோடு ஏன் பதிவெதுவும் எழுதவில்லை என தொலைபேசி, வலையுரையாடல், மற்றும் மின் மடல்கள் வாயிலாக விசாரித்த அத்தனை சொந்தங்களுக்கும் எனது நன்றிகள்.

சமூகம்,
யோசனை,
வேண்டுகோள்
|
20 comments:
ஐடியா கூறுபவர்களுக்கு நல்ல பதிவு..
//புதிதாக ஒரு வேலைக்காக விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் தேர்வானதாலும்//
சொல்லவே இல்லை...வாழ்த்துக்கள் ஜோசப் பால்ராஜ்.
பட்டைய கிளப்பிடலாம்..
கையோட ஒரு பேனா பேப்பர் எடுத்துக்க வேண்டியது தான்.. அப்பொதான யோசனை உதிச்சவுடனே குறிப்பெடுக்க முடியும்.. (நாமெல்லாம் உக்காந்து யோசிக்கிற வர்கமா?? அப்படியே பராக்கு பாக்கும் போது தோணறது தான்.. ஹம்ம்ம் என்னத்த சொல்லறது}
நல்ல திட்டத்தை கூகுள் முன் வைத்துள்ளது.. சம்பாதிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளாமல் இது போன்ற சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்...
யோசிக்கிறேன் பாஸூ...
நமக்கு யோச்சிக்கிற அளவுக்கெல்லாம் அறிவு இல்லைங்கோவ்
தகவலுக்கு நன்றி.
நானும் என் யோசனையோடு கலந்துக்க முயற்சி பண்றேன்.
:)
ஜோசப்,
கூகிள் செய்வது உருப்படியான காரியம். நீங்கள் உடனே செயலில் இறங்கியதற்கு வாழ்த்துக்கள். உங்கள் திட்டம் ஏற்கனவே உங்கள் பதிவில் படித்திருக்கிறேன். இத்திட்டம் வெற்றி பெரும் என்று தோன்றுகிறது. All the best. உங்கள் புது வேலைக்கும் சேர்த்து.
அனுஜன்யா
தகவலுக்கு நன்றி ஐயா.. ஏதாவது யோசிக்கிறேன்
தங்கள் சமூக அக்கறை நெகிழவைக்கிறது.
தங்கள் தளத்தில் பழைய இடுகைகள் தற்போது தெரிகிறது.
நல்வாழ்த்துகள் ஜோசப் - புதிய பணியிலும் சிறக்க வாழ்த்துகள்
அருமையான சிந்தனை - செயல்படும் - நம்புக
சபாஷ்!!!
நல்ல திட்டம் தான், உங்கள் ஆலோசனைகளை கூகுளில் பதியவையுங்கள். கவனம் பெற வாழ்த்துகள்.
தகவலை பகிர்ந்துகொண்டதற்கு நன்ற!
கூகிள் நிறுவனத்திற்காக என் தொப்பியை கழட்டுகிறேன்.. அதாங்க hats off.. அப்புறம் உங்களுக்கும் வாழ்த்துகள்.
தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி!!
சூப்பர் மேட்டர்.. பகிர்வுக்கு நன்றிகளும் உங்கள் யோசனைகளுக்கு வாழ்த்துக்களும் ஜோசப் :)
ithu thaan mudhal murai ungal blogukku varugiren. neengal maranery endru therinthathum sandhoshama irunththu. my father-in-law too belongs 2 maranery.
//Anonymous said...
ithu thaan mudhal murai ungal blogukku varugiren. neengal maranery endru therinthathum sandhoshama irunththu. my father-in-law too belongs 2 maranery. //
எங்க ஊர் மாப்பிள்ளையா நீங்க? உங்க பெயர் என்ன ? உங்க மாமனார் பெயர் போன்ற விவரங்களை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். joseph.paulraj@gmail.com
hi anna..thanks for sharing info abt google project...how u r (all tamil bloggers)..i hope that all of u came here...i can convey my regards to all...meenachisundram