Author: ஜோசப் பால்ராஜ்
•10:29 PM
ஆபரேஷன் கமலா ( பெயரெல்லாம் நல்லாத்தான் வைக்கிறாய்ங்க). இந்த பெயர படிச்சுட்டு ஏதோ தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கோ, அல்லது ஏதாவது ஒரு முக்கிய நடவடிக்கைக்கோ இப்டி ஒரு பெயர வைச்சு ஏதோ நம்ம ராணுவம் சாதிச்சுருக்கும்னு நினைச்சா நம்மள விட கேணயன் வேற எவனும் இருக்க மாட்டான்.

தேவகவுடா செஞ்ச கூட்டணித் துரோகத்துனால முதல்வர் நாற்காலியில ஏறுன வேகத்துல இறங்குன எடியூரப்பா, சம்பந்தமேயில்லாம தமிழக எல்லையில இருக்க ஹோகேனக்கல்ல வந்து பிரச்சனைய எல்லாம் கிளப்பி ஓட்டுக்காக அரசியல் செஞ்சு தேர்தல சந்திச்சும், தனி பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகத்தான் அவங்களால ஜெயிக்க முடிஞ்சது எல்லாருக்கும் தெரியும். அத சரி பண்ண அடிச்சாங்க பாருங்க ஜனநாயகத்து மேல ஓங்கி ஒரு அடி, அதுக்குப் பெயர் தான் ஆபரேஷன் கமலா.

அதன்படி இவங்க மொத்தம் 8 எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள விலைக்கு வாங்கிட்டாங்க. ஆனா கட்சித் தாவல் தடை சட்டம் பாய்ஞ்சுரும்ல? இதனால கட்சி தாவுன பாசக்காரங்கள எல்லாம் அவங்க சட்டமன்ற உறுப்பினர் பதவியில இருந்து விலகச் சொல்லி, அவங்கள தங்களோட கட்சியில உறுப்பினராக்கி, இடைத்தேர்தல்ல திரும்பவும் அவங்களையே நிக்க வைச்சு 8ல 5 சீட்டுல பாரதிய சனதா கட்சிகாரங்க வெற்றியடைஞ்சு சட்ட சபையில தனிப் பெரும்பான்மைய வாங்கிட்டாங்க. அதுக்கு தான் ஆபரேஷன் கமலா.

நாட்டுல நாங்க மட்டும்தான் யோக்கியம், மத்தவங்க எல்லாம் அயோக்கியர்கள்னு சொன்ன கட்சி, நாடாளுமன்றத்துலயே கோடிக்கணக்குல பணத்த கொட்டி எங்கள விலைக்கு வாங்கப் பார்த்தாங்கன்னு எல்லாம் அழுகாச்சி ஆட்டம் ஆடுன கட்சி தன் ஆட்சிய காப்பாத்திக்க என்னமா ஜனநாயகத்துக்கு மரியாதை கொடுத்துருக்காங்க பாருங்க மக்களே. ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்க நாட்டாமை வர்றாரு சொம்பத் தூக்கி உள்ள வையின்னு. இவங்களுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்க இவங்க கட்சியில இருந்து எங்க எங்கயோ கொள்ளையடிச்ச பணத்த எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்குறது எல்லாம் சரி, ஆனா இந்த இடைத்தேர்தல் என்ன இவங்க கட்சி செலவுலயா நடந்துச்சு? அது யாரு ஊட்டு பணம்? நம்ம வரியா குடுக்குற பணம் தானே?

இன்னைக்கு ஒரு சாதாரன குடிமகன் கையில கூட அலைபேசி இருக்கு. அதுக்கு அவன் செலுத்துற காசுல 12% வரி, ஒரு லிட்டர் பெட்ரோலோட அடக்க விலை 11 ரூபாய்தானாம். ஆனா விக்கிற விலை 48 முதல் 55 ரூபாய் வரை. மிச்ச காசு எல்லாம் என்ன? நாம மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கொடுக்குற வரி தானே? அதுல இருந்து தானே இந்த இடைத் தேர்தல் முதுகுத் தேர்தல் எல்லாம் நடக்குது? ஆக முனுசாமி டிவிஸ் 50க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டா அதுல தர்ற வரி, குப்புசாமி 300 ரூபாய்க்கு தன்னோட அலைபேசிக்கு கட்டணம் செலுத்துனா அதுல வர்ற 36 ரூபாய் வரி இதெல்லாம் எங்க போவுது பாருங்க. இவுங்களோட ஆபரேஷன் கமலாவுக்கு நாம தெண்டம் அழுவ வேண்டியிருக்கு.

ஏற்கனவே தரம்சிங் தலைமையில அமைந்திருந்த காங்கிரஸ் - மத சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசை கலைத்து குமாரசாமி தலைமையில ஆட்சி அமைக்க வைச்ச பாஜகவுக்கு கூட்டணி தர்மத்தை பத்தி பேச அருகதையே இல்லையில்லைன்னு தெரிஞ்சதுனாலத்தான் எடையூரப்பா ஹோகேனக்கல் பிரச்சனைய ஆரம்பிச்சு ஓட்டுப் பொறுக்கும் அரசியல ஆரம்பிச்சாரோ?

இம்புட்டு நல்ல பாரதிய சனதா கட்சியோட டெல்லி தலைமை அலுவலகத்துல அவங்க பாதுகாப்பு பெட்டகத்துல வைச்சுருந்த 2.6 கோடிய அவுங்க ஆளுங்கள்லயே யாரோ ஆட்டையப் போட்டுட்டாங்களாம். யோக்கியவானுங்க காவல்துறையில கூட புகார் குடுக்காம தனியார் துப்பறியும் நிறுவனங்க வைச்சும், ஜோசியம், வாஸ்து எல்லாம் பார்த்து அந்த சொம்ப தூக்குன நாட்டமைய கண்டுபிடிக்கப் போறாங்களாம். என்னக் கொடுமை சார் இது?

இலங்கை அரசாங்கம் செய்யிறது எல்லாம் அநியாயம்னாலும், அங்க எனக்கு புடிச்ச ஒரே ஒரு விசயம் அங்க இடைத்தேர்தல்னு ஒன்னு கிடையவே கிடையாது. எத்தன தடவ எதிர்கட்சி ஆளுங்கள கொன்னாலும், அந்த காலி ஆகிற இடத்துக்கு பொதுத் தேர்தல்ல எந்த கட்சி வெற்றி பெற்றுச்சோ அதே கட்சிதான் வேற ஒரு உறுப்பினர நியமிக்குமேத் தவிர இடைத் தேர்தல், முதுகுத் தேர்தல் எல்லாம் அங்க கிடையாது. இடைத் தேர்தல்னு ஒன்ன வைச்சுக்கிட்டு நாம படுற பாடு இருக்கே, அதப் பத்தி நான் வேற சொல்லணுமா? முடிஞ்சா திருமங்கலம் தொகுதிகாரங்கள கேட்டுத் தெரிஞ்சுகங்க.

இப்டியெல்லாம் ஜனநாயகப் படுகொலைகள் நடக்கிறத தடுக்க இடைத்தேர்தல முதல்ல ஒழிக்கணும். மதிமுக வெற்றி பெற்ற திருமங்கலம் தொகுதியில இடைத்தேர்தல்ல தன்மான சிங்கம் வைகோகிட்ட கேட்காமலேயே புரட்சித் தலைவி தன் கட்சி வேட்பாளரை நிறுத்துறது, தமிழகத்து ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் இவுங்க இங்க பணம் கொடுத்தாங்க, அவுங்க அங்க பணம் கொடுத்தாங்கன்னு புகார் கொடுக்குறது, இருக்க வேலையெல்லாம் பத்தாதுன்னு இந்த இடைத் தேர்தலுக்கு பாதுகாப்பு வேலையின்னு நம்ம துணை ராணுவம் வர்றது, இருக்க அமைச்சர் எல்லாம் தன்னோட வேலையெல்லாம் விட்டுட்டு பிரச்சாரம் செய்யிறது, முதல்வர் வரைக்கும் போயி பிரச்சாரம் செய்யிறது இப்டி ஆயிரத்தெட்டு தொல்லைகளையும், அநாவசியச் செலவுகளையும் தடுக்க முதலில் இந்த இடைத் தேர்தல்களை ஒழிக்க வேண்டும்.

ஆனா ஒன்னு நாங்க மட்டும் தான் யோக்கியமானவனுங்கன்னு சொல்லிக்க இங்க எந்த கட்சிக்கும் அருகதையில்ல. எல்லாரும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்கந்தான். அப்ப தேர்தல்ல நாமெல்லாம் ஓட்டுப் போடணுமா, போடாம விட்டா தப்புன்னு சொல்றாங்களேன்னு கேட்குறீங்களா? கட்டாயம் ஓட்டுரிமை இருக்கவங்க எல்லாம் ஓட்டு போடணும். உங்க உரிமைய விட்டுக் கொடுக்க கூடாது. 49 ஓ இருந்தா அதுல போடுங்க. இல்லன்னா இருக்கதுல நல்லவரு யாருன்னு பார்த்து ஓட்டுப் போடுங்க. ஏன்னா இன்னையத் தேர்தல் “ Choosing the best among the worst".

பின் குறிப்பு: எங்க அநியாயம் நடந்தாலும் தாண்டிக் குதிச்சு தட்டிக்கேட்கின்ற பத்திரிக்கையாளர் சோ இந்த ஆபரேஷன் கமலா பத்தி ஏதாச்சும் எழுதுனாரான்னு துக்ளக் படிக்கிறவங்க முடிஞ்சா பின்னூட்டமிடுங்க. அப்டி அவரு வேலைப்பளுவால எழுதாம விட்ருந்தா அவருக்குப் பதிலா டோண்டு சார் ஆச்சும் பதில் சொல்லுவார் என நம்புவோம். Udanz
This entry was posted on 10:29 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On Wed Jan 07, 01:36:00 AM GMT+8 , அதிஷா said...

'பீ'ஜே'பீ'யே
ஒரு பீத்தரை கட்சி.

ஆபரேசன் கமலா குறித்து நீங்கள் பதிவெழுதும் இக்கணத்தில் அந்த நல்லவர்கள் ஆபரேசன் விமலாவையோ ஆபரேசன் கல்பனாவையோ தொடங்கியிருக்க கூடும்..

தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வாங்கப்பா!!

 
On Wed Jan 07, 02:08:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா...
கூல் டவுன்!கூல் டவுன் :)))

 
On Wed Jan 07, 05:53:00 AM GMT+8 , cheena (சீனா) said...

சிந்திக்க வேண்டிய ஒன்று - தேர்தல் முறையில் நிச்சயம் மாற்றம் வேண்டும். இடைத்தேர்தலினால் பயன் ஒன்றும் இல்லை

 
On Wed Jan 07, 07:15:00 AM GMT+8 , நட்புடன் ஜமால் said...

தேர்தல் முறையில் மட்டுமல்ல புதிதாக ஒரு கட்சியையே உருவாக்கனும்.

இதுவரை மக்களிடையே எந்த வகையிலும் அறிமுகமாகாத புது முகங்களோடு ...

 
On Wed Jan 07, 09:11:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

ஐயங்கார்வாள்,
என்னது தேச தியாகிகளான காங்கிரஸ் காரனுங்களை வெலக்கி வாங்கிட்டாங்களா ? கலி முத்திடுத்து ஓய் !

 
On Wed Jan 07, 10:57:00 AM GMT+8 , Mahesh said...

நான் ரெகுலரா துக்ளக் படிக்கறவந்தான். ஆனா இது பத்தி ஒண்ணும் வரலயே....

 
On Wed Jan 07, 12:11:00 PM GMT+8 , SanJaiGan:-Dhi said...

//ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்.//

Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

பதிவு பண்ணிட்டேன் மாப்ள..

( எவ்ளோ சீரியசா இருந்தாலும் கும்மி அடிப்போம்ல )

 
On Wed Jan 07, 12:24:00 PM GMT+8 , SanJaiGan:-Dhi said...

http://thinkcongress.blogspot.com/2008/08/blog-post.html

மச்சி வொய் ரென்ஷன்?
நேரம் இருந்தா இத்த படிச்சிட்டு வா.. :))

உனக்கு தேவையான புள்ளி வெவரம் எல்லாம் கிடைக்கும்.. :)

 
On Wed Jan 07, 12:27:00 PM GMT+8 , SanJaiGan:-Dhi said...

//நாட்டாமை வர்றாரு சொம்பத் தூக்கி உள்ள வையின்னு//

யோக்கியன் வர்ரான்.. சொம்ப ஒளிச்சிவய்யி..

 
On Wed Jan 07, 12:30:00 PM GMT+8 , SanJaiGan:-Dhi said...

//திருமங்கலம் தொகுதிகாரங்கள கேட்டுத் தெரிஞ்சுகங்க.//

தேர்தல் மொள்ளமாறித தனத்தி(லாவது)ல் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வந்திருப்பதை புரிந்துக் கொள்ளாத நய வஞ்சகர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
On Wed Jan 07, 12:32:00 PM GMT+8 , SanJaiGan:-Dhi said...

//அமைச்சர் எல்லாம் தன்னோட வேலையெல்லாம் விட்டுட்டு பிரச்சாரம் செய்யிறது,//

இல்லைனா மட்டும் தினமும் கழட்டி காய போடறாங்களாமாம்.. ஆளப் பாரு..

 
On Wed Jan 07, 12:41:00 PM GMT+8 , SanJaiGan:-Dhi said...

//Choosing the best among the worst".//

choosing the best among the best worst or worst worst? :)

 
On Wed Jan 07, 12:43:00 PM GMT+8 , SanJaiGan:-Dhi said...

ராசா.. இந்த பின்னூட்டம் டெம்ப்ளெட் மாத்தி தொலை.. சாவடிக்கிது.. :(

 
On Wed Jan 07, 01:24:00 PM GMT+8 , வால்பையன் said...

தலைப்ப பார்த்தவுடன் பி.ஜே.பி. உதவியுடன் கமலாங்கரவங்களுக்கு ஆப்ரேஷன் நடக்குது போலன்னு நினைச்சிட்டேன்!

அரசியல் சாக்கடையில் பி.ஜே.பியும் ஒரு பன்னி தானே தவிற, அவர்களை குறை சொல்லவோ மற்றவர்களை புகழவோ வேண்டியதில்லை,

எல்லோருமே திருடர்கள் தான், ஆளுங்கட்சியை திரிடர்கள் என்று குற்றம் சாட்டும் எதிர்கட்சிகள், தானும் திருட சந்தர்ப்பம் தேடி அலையும் மற்றொரு திருடன்

 
On Wed Jan 07, 01:25:00 PM GMT+8 , ஜோதிபாரதி said...

//ஆபரேஷன் கமலா - வாழ்க பி ஜே பியின் ஜனநாயகம். //


ஸ்ரீ ஜல ஸ்ரீ யூசுப் பால்ராஜ் ஐயங்கார்,

இது திமுகவினருக்கும் பொருந்தும்.

அவர்கள் வடநாட்டுச் சாமியார் வேதாந்தியுடைய கருத்துக்காக ஆப்பெரேஷன் கமலா"லயம்" செய்தவர்களாயிற்றே! அமைச்சர்களும் அடி பொடிகளும் ஆப்பெரேஷன் செய்வதில் வல்லவர்களாயிற்றே!! தாங்கள் திமுகவிற்கு வாக்களித்ததால் சொல்கிறேன். பத்த ****** ***ட

 
On Wed Jan 07, 01:26:00 PM GMT+8 , வால்பையன் said...

//எங்க அநியாயம் நடந்தாலும் தாண்டிக் குதிச்சு தட்டிக்கேட்கின்ற பத்திரிக்கையாளர் சோ இந்த ஆபரேஷன் கமலா பத்தி ஏதாச்சும் எழுதுனாரான்னு துக்ளக் படிக்கிறவங்க முடிஞ்சா பின்னூட்டமிடுங்க//

நான் துக்ளக் படிக்கிறதில்லை ஆனாலும் சொல்கிறேன். சோவுக்கு பி.ஜே.பி. செய்வதெல்லாம் அரசியல் தந்திரம், மற்றவர்கள் செய்தால் அரசியல் சூழ்ச்சி

 
On Wed Jan 07, 02:51:00 PM GMT+8 , கார்க்கி said...

ஹலோ சிங்கப்பூரா?

அங்க என் பிரதர் ஜோசப் இருக்காரா?

ஹேய் நீதானா?

வாட் ஹேப்பன்ட்?

இஸ் இட்?

கூல் டவுன்..கூல் டவுன்

பீ ஹேப்பி..

 
On Wed Jan 07, 08:00:00 PM GMT+8 , ’டொன்’ லீ said...

ஒன்னுமெ விளங்கேலை...:((((

 
On Thu Jan 08, 12:42:00 AM GMT+8 , கயல்விழி said...

நல்ல கட்டுரை ஜோசப்.

மத வெறியை முன்னிறுத்தி தன்னை வளர்த்துக்கொண்ட கட்சியிடம் இருந்து வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?

அதில் என்ன காமெடி என்றால், அந்த மதவெறி பாலிசிகளைக்கூட அவர்கள் அரசியல் காரணங்களுக்காக மாற்றிக்கொள்வார்கள்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க