•10:30 PM
எனது ஐம்பதாவது பதிவாக நான் எழுதிய சுந்தரி டீச்சர் எனும் பதிவை படித்தவர்களுக்கு என் 17 வருடத் தேடல் தெரிந்திருக்கும்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தியப் பயணம் மேற்கொண்டிருந்த சிங்கையின் மூத்தப்பதிவர் கோவி.கண்ணண் அண்ணண் அவர்கள் தனது இப்பயணத்தின்போது நாகையில் அரும்பாடுபட்டு எனது மதிப்பிற்குறிய டீச்சரின் தற்போதைய இருப்பிடம், தொலைபேசி எண் ஆகியவற்றை கண்டறிந்து எனது 17 வருட தேடலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, என்னை அளவில்லாப் பேரின்பத்தில் ஆழ்த்திவிட்டார்.
டீச்சரின் தொலைபேசி எண் கிடைத்த உடனே தொடர்பு கொண்ட நான் என் ஊர் பெயரான மாரநேரியை சொல்லி முடிக்குமுன்னர் டீச்சர் யாரு பால்ராஜா, டைட்டஸா(என் அண்ணண்) என கேட்டது அதைவிட ஆனந்தம். டீச்சரும் எங்களை மறக்கவில்லை என அறிந்த போது மிக மிக மகிழ்சியடைந்தேன்.
அடுத்த முறை இந்தியப் பயணம் எப்போது செய்வேன், எப்போது என் டீச்சரை நேரில் சந்திப்பேன் என மிக ஆவலாய் உள்ளேன்.
தனது இந்தியப் பயணத்தில் இடைவிடாது பல இடங்களுக்கும் சென்று பல பதிவுலக நண்பர்களையும் சந்தித்து அளவில்லா மகிழ்சியில் ஆழ்த்திய கோவியார், இந்தப் பயணத்தின் வாயிலாக எனக்கு செய்துள்ள உதவி என் வாழ்நாளில் எந்நாளும் மறக்க இயலாது. நன்றி என்று சொல்லி அவரை அந்நியப்படுத்த விரும்பவில்லை.
அண்ணண் அப்துல்லா தனது பதிவில் வலையுலக உறவுகளைப் பற்றி சொல்லியிருந்த இந்த வாக்கியம் "எங்களுக்கெல்லாம் இது வெறும் வலை உறவு அல்ல! வாழ்க்கை உறவு!" எத்தனை சத்தியமான சொற்கள் இவை?

கோவி.கண்ணண்,
நன்றி
|
16 comments:
இரண்டு பேர் சிரிப்பான் போட்டுவிட்டார்கள், இரட்டை படை சரி இல்லை. அதனால
:)
இனிமேல் சிரிப்பான் போட்டால் அவை வெளியிடப்படா என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடா போடா என்கிற வார்த்தைப் பிரயோகங்கள் வேண்டா!
போடா என்றால் ஆமை இறை தேடுவது ஞாபகத்துக்கு வந்துவிடும்.
:P)
//கோவி.கண்ணன் said...
இரண்டு பேர் சிரிப்பான் போட்டுவிட்டார்கள், இரட்டை படை சரி இல்லை. அதனால
:)//
சாமியாரைச் சந்திச்சதில் இருந்து ஒரு மார்க்கமாத்தான் தெரியிறீறு. எனக்கு வரவேண்டிய தாயத்து வராததன் காரணம் என்ன?
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்....!
சூப்பர் !!
/
ஜோசப் பால்ராஜ் said...
இனிமேல் சிரிப்பான் போட்டால் அவை வெளியிடப்படா என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
/
கண்டனங்கள்
:)
கோவியாருக்கு நாங்க நன்றி சொல்றோம்
அவர் மீண்டுமொருமுறை தன் மனிதத்தை நிரூபித்துவிட்டார்.
வெல்டன் கோவி-ஜி!
நம் உறவுகள் பலப்படட்டும். இனிமையான உலகம் அமைப்போம்.
நிஜமாகவே ஆச்சர்யமான விசயம். கோவியாருக்கு பாராட்டுகள். உங்களுக்கு வாழ்த்துகள்..
கமெண்ட் பாக்ஸ் அதே பேஜ்ல வர்றது, கமெண்ட்ஸை படிக்க, போட கஷ்டமா இருக்கே. மாத்தலாமே...
ஆகா - கோவி இவ்வாறெல்லாம் உதவிகள் செய்கிறாரா ? நன்று நன்று - நல்ல மனிதர் - நல்லவர்களுக்கே உரிய குணங்கள் - நண்பனை மகிழ்ச்சிக்கடலீல் ஆழ்த்துவது ....
நல்வாழ்த்துகள் ஜோசப் - கோவி
:)
வாழ்த்துகள்...
டீச்சர் கிட்ட நிஜமாவே நல்ல பேர்தான் வாங்கி இருக்கீங்க போல?:)