Author: ஜோசப் பால்ராஜ்
•11:46 PM
இது காதலர் தின சிறப்பு பதிவு.

கலாச்சாரத்த காப்பாத்துறோம்னு காதலர் தினத்தன்னைக்கு ஒன்னா இருக்க காதலர்களுக்கு எல்லாம் கட்டாயமா திருமணம் செஞ்சுவைப்போம், இல்லைன்னா அந்த பொண்ண விட்டு பையனுக்கு ராக்கி கட்ட வைப்போம்னு ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு. ( என்னா ஒரு வில்லத்தனம்??)

இவங்க திட்டத்த கேட்டு அப்டியாவது நமக்கெல்லாம் கல்யாணம் ஆகாதான்னு இங்க ஒரு தொழிலதிபர் பட்டு வேட்டி கட்டிக்கிட்டு சனிக்கிழமை கோயம்புத்தூர்ல இருந்து பெங்களூருக்கு வர திட்டம் போட்டுக்கிட்டு இருக்கத வேற தகவல் வருது. ( இந்த தொழிலதிபருக்கு எந்த பொண்ணையாச்சும் கட்டாயத் திருமணம் செஞ்சு வைக்க முயற்சி செஞ்சா,அந்த பொண்ணு ஒரு ராக்கி என்ன 100 ராக்கி கட்டுறேன்னு கைல மட்டும் இல்ல கழுத்துல கூட ராக்கி கட்டிட்டு தப்பிச்சுடும், இருந்தாலும் அந்த அளவுக்கு சோதனை தேவையா? )


இவங்க ஆர்பாட்டத்த எதிர்த்து இன்னொரு கூட்டம் இவங்களுக்கு பிங்க் கலர் பெண்கள் உள்ளாடை அனுப்ப கிளம்பியிருக்கு.( என்ன ஒரு அருமையான ஆயுதம்???, அப்ப பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கனும்னா என்ன செய்வானுங்க??)

இம்புட்டு பேராடா வேலையில்லாம அலையிறீங்க? அடப் கெரகமே. என்ன செய்யிறதுன்னு தெரியாம அலையிறீங்களா? இந்த காதலர் தினம் எல்லாம் வருசத்துக்கு ஒரு தடவ தான் வரும், அப்ப மட்டும் நீங்க இந்த அலப்பற அடிக்கிறத விட்டுட்டு கீழ சொல்லியிருக்க வேலைய எல்லாம் செஞ்சீங்கன்னா, வருசம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கும்.
இப்ப உங்கள எதிர்த்து ஜட்டி அனுப்புறவன் எல்லாம் உனக்கு பூங்கொத்து அனுப்புவான், உங்கூட சேர்ந்துக்க கூட செய்வான்.

உங்களால உருப்படிய யோசிக்க முடியாதுன்னு தெரியும், அதான் உங்களுக்காக நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லியிருக்கேன். இதுவும் செய்ய சுவரசியமாத்தான் இருக்கும். நீங்க அப்பாவி காதலர்கள மிரட்டி உங்க வீரத்த காட்டுறதுக்கு பதிலா இப்டி உருப்படிய வீரத்த காட்டுனா நல்லா இருக்கும். எங்க முடிஞ்சா இதையெல்லாம் செய்யப்பாருங்க .

1) ஊர்ல எங்க பார்த்தாலும் குப்பையும், கூளமுமா இருக்கே அத சுத்தம் பண்ணுங்க, பொது இடத்துல குப்பை போடுறவன பொளேர்னு அடி, கம்பத்த பார்த்தா காலத்தூக்குற நாய் மாதிரி கண்ட இடத்துலயும் அசிங்கம் பண்றவன விரட்டி விரட்டி அடி.

2) எல்லா அரசாங்க அலுவலகத்துக்கும் போங்க, அங்க எந்த வேலையா போனாலும் அநியாயமா லஞ்சம் வாங்குறானுங்களே மொள்ள மாறிங்க, அவிங்களுக்கு ஆப்பு வையிங்க. லஞ்சம்னு எவனும் கேட்கவே பயப்புடனும் அப்டி அடி.

3) எல்லாத் திறமையும் இருந்து படிக்க வழியில்லாம கஷ்டப்படுற ஏழைப்பசங்களுக்கு உதவி பண்ணு. கல்விய கூறு போட்டு விக்கிற வியாபரிய ஓட ஓட விரட்டியடி. கஷ்டப்பட்டு காசு குடுத்து படிக்கிற மாணவக் கூட்டம் உன் பின்னாடி வரும்.

4) சாலையில பல இடங்கள்ல போற வர்ற வண்டிய எல்லாம் மடக்கி, கைய நீட்டுற காவலர்கள கண்டா இந்தியன் தாத்தா மாதிரி மரியாதை செஞ்சு அனுப்பு.

5) ஒரு நாளைக்கு ஒரு சாலையின்னு திடீர்னு போயி நில்லுங்க,எவன் தேவையில்லாம ஹாரன் அடிக்கிறானோ அவன பொடேர்னு அடி, விதிமுறைய மீறுனா வண்டிய புடுங்கிடு.

6) எல்லா ஊர்லயும் எந்த வசதியிருக்கோ இல்லையோ, குடிசைப் பகுதிகள் கட்டாயம் இருக்கும், அது தேர்தல் நேரத்துல மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு நினைப்பு வரும், அங்க போயி அவங்களுக்கு தேவையான வசதிகள செஞ்சு கொடு. இதுக்கெல்லாம் நீ உன் கை காச செலவு செய்ய வேண்டாம், அரசாங்க அதிகாரிகள புடிச்சு கொண்டுவந்து செய்ய வைய்யி. குடிசையில இருக்கவங்க எல்லாம் உனக்கு கோயில் கட்டுவாங்கள்ல? நீ செஞ்சு வைச்சுருக்க வசதிய எல்லாம் உபயோகிக்காம குடிசைய சுத்தி குப்பைய எவனாச்சும் போட்ட அடி.

(படிக்கிறவங்களுக்கு இதே மாதிரி நல்ல யோசனைகள் தோன்றினால் உடனே பின்னூட்டமிடுங்கள்)

இப்டி உருப்புடியா செய்ய ஆயிரம் வேலை இருக்கப்ப, காதலர்கள அடிக்கிறேன், கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு கிளம்புறது எந்த விதத்துல நியாயம்?

மேல சொன்னதையெல்லாம் செய்ய முடியாதுல்ல? அங்கயெல்லாம் போயி உன்னால வீரத்த காட்ட முடியாதுல்ல? அப்டியே ஒரு வேளை போயி அடிச்சா, உனக்கு டின்னு கட்டிருவான்னு தெரியும்ல, ஊருக்கு பயந்து, வீட்டுக்கு தெரியாம காதலிக்கிறவனுங்ககிட்டத்தானே உன் வீரத்த காட்ட முடியும்?

என்னைய கூடத்தான் எந்த பொண்ணும் காதலிக்கல, அதுக்காக நான் என்ன எல்லா காதலர்களையும் பார்த்து பொறமைப் பட்டுக்கிட்டா இருக்கேன்? இல்ல உங்கள மாதிரி வில்லத்தனமா யோசிக்கிறேனா? இவ்ளோ நல்லா யோசிக்கிறேன்ல. அப்டி நீங்களும் நல்லபடியா யோசிங்கய்யா.

கடைசியா ஒரு சின்ன வேண்டுகோள், நீ என்ன சொல்றது நாங்க என்ன செய்யிறதுன்னு உங்க செயற்குழு தீர்மானம் போட்டுருச்சுன்னா, குறைந்தபட்சம் உங்க அமைப்போட பெயரையாச்சும் மாத்திருங்கய்யா. பாவம் இராமரு. அயோத்தியில ஆரம்பிச்சு ஆதம் பாலம் வரைக்கும் அவரு அடி பின்னி எடுத்துட்டீங்க. போதும் விட்ருங்க அவர, இதுக்கு மேல அவரால தாங்க முடியாது. அதான் ஏற்கனவே ஒரு கட்சி ஒட்டு மொத்தமா அவரக் குத்தகைக்கு எடுத்து கும்மிக்கிட்டு இருக்குல்ல, அப்றம் என்ன போட்டிக்கு நீங்க வேற?

பிற்சேர்க்கை:
இந்த இராம் சேனா, பிங்க் ஜட்டி கூட்டம் எல்லாம் போதாதுன்னு வா(மு)ட்டாள் நாகரசு வேற கலத்துல எறங்கிட்டாரு இப்ப. அவரு காதலர்களுக்கு ஆதரவா அவங்க ஊரச் சுத்தி வர்றது வாகன வசதி செஞ்சுத் தரப்போறாராம்.

எத்தனையோ கிராமங்கள்ல காலையில பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு கூட பேருந்து வசதியில்லாம எம்புட்டு குழந்தைங்க நடந்து போயி படிச்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு வாகன வசதி செஞ்சுத் தரலாம்ல இவரு? இவரு தமிழ்நாட்டை எதிர்கிறதுல மட்டும் தான் கோக்குமாக்கா யோசிப்பாருன்னு நினைச்சேன், அப்டியெல்லாம் இல்லீங்க, நாங்க எப்பவுமே இப்டித்தான் கோக்கு மாக்காத்தான் யோசிப்போம்னு நிருபிச்சுக்கிட்டு இருக்காரு. Udanz
This entry was posted on 11:46 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

27 comments:

On Fri Feb 13, 01:01:00 AM GMT+8 , மங்களூர் சிவா said...

//

என்னைய கூடத்தான் எந்த பொண்ணும் காதலிக்கல,
//

மனசுல இருக்கிறத இப்பதான்பா ஓப்பன் பண்ணிருக்க

பிலிஸ் கண்டின்யு

:))

 
On Fri Feb 13, 01:19:00 AM GMT+8 , கார்க்கி said...

//என்னைய கூடத்தான் எந்த பொண்ணும் காதலிக்கல, அதுக்காக நான் என்ன எல்லா காதலர்களையும் பார்த்து பொறமைப் பட்டுக்கிட்டா இருக்கேன்? இல்ல உங்கள மாதிரி வில்லத்தனமா யோசிக்கிறேனா? இவ்ளோ நல்லா யோசிக்கிறேன்ல. அப்டி நீங்களும் நல்லபடியா யோசிங்கய்யா.
//

ஓ அதானா சங்கதி????

 
On Fri Feb 13, 01:58:00 AM GMT+8 , Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

 
On Fri Feb 13, 06:15:00 AM GMT+8 , நிஜமா நல்லவன் said...

வருங்கால முதல்வர் மாரனேரியார் வாழ்க!வாழ்க!

 
On Fri Feb 13, 06:17:00 AM GMT+8 , நிஜமா நல்லவன் said...

/"கலச்சாரக் காவலர்களுக்கு......."/

கலாச்சாரம் மேல அப்படி என்ன கொலை வெறி????? துணைக்காலை சூப்பு வச்சிட்டீங்களா???

 
On Fri Feb 13, 06:18:00 AM GMT+8 , நிஜமா நல்லவன் said...

/ மங்களூர் சிவா said...

//

என்னைய கூடத்தான் எந்த பொண்ணும் காதலிக்கல,
//

மனசுல இருக்கிறத இப்பதான்பா ஓப்பன் பண்ணிருக்க

பிலிஸ் கண்டின்யு

:))/

நீயும் இப்படித்தான் கண்டினியு அப்புறம் கமிட் ஆகிட்ட...:)

 
On Fri Feb 13, 08:08:00 AM GMT+8 , cheena (சீனா) said...

பொழப்பத்தவனுங்க - உருப்படியா ஏதாச்சும் செய்யலாமே - பதிவு நல்லா இருக்கு - படிப்பானுங்களா

ஜோசப் உன்னே யாருமே காதலிக்கலியா - அதனாலே என்ன - வூட்ல பாவமேன்னு தங்க்ஸ் இருக்காங்களே - அவங்களைக் காதலிக்கச் சொல்லலாமே - காதலிக்கலாமே !

 
On Fri Feb 13, 09:37:00 AM GMT+8 , Mahesh said...

உருப்படியான யோசனைகதான்... ஆனா அந்த 'மட'ச்சாம்பிராணிகளுக்கு புரியாது... அதுகளுக்கு 5 அறிவுதான்.

 
On Fri Feb 13, 12:05:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

:)

 
On Fri Feb 13, 02:33:00 PM GMT+8 , தாமிரா said...

ஒண்ணொண்ணும் நல்ல ஐடியாக்கள் ஜோஸப். ஒரு அரசியல் கட்சி, அமைப்புகள் பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க இதையெல்லாம் செய்யலாம். அவங்களுக்கும் நல்லது ஊருக்கும் நல்லது. சும்மா வெட்டியாத்தானே இருக்கானுங்க.. இன்னும் கொஞ்சம் வெட்டியா காதலர்களை அடித்து விரட்டுவதற்கு பதிலாக இதெல்லாம் செய்யலாமே.. மாட்றானுங்களே..

 
On Fri Feb 13, 02:45:00 PM GMT+8 , rapp said...

//இந்த தொழிலதிபருக்கு எந்த பொண்ணையாச்சும் கட்டாயத் திருமணம் செஞ்சு வைக்க முயற்சி செஞ்சா,அந்த பொண்ணு ஒரு ராக்கி என்ன 100 ராக்கி கட்டுறேன்னு கைல மட்டும் இல்ல கழுத்துல கூட ராக்கி கட்டிட்டு தப்பிச்சுடும், இருந்தாலும் அந்த அளவுக்கு சோதனை தேவையா? )
//

:):):)

 
On Fri Feb 13, 02:56:00 PM GMT+8 , கிரி said...

//கடைசியா ஒரு சின்ன வேண்டுகோள், நீ என்ன சொல்றது நாங்க என்ன செய்யிறதுன்னு உங்க செயற்குழு தீர்மானம் போட்டுருச்சுன்னா, குறைந்தபட்சம் உங்க அமைப்போட பெயரையாச்சும் மாத்திருங்கய்யா. பாவம் இராமரு. அயோத்தியில ஆரம்பிச்சு ஆதம் பாலம் வரைக்கும் அவரு அடி பின்னி எடுத்துட்டீங்க. போதும் விட்ருங்க அவர, இதுக்கு மேல அவரால தாங்க முடியாது. அதான் ஏற்கனவே ஒரு கட்சி ஒட்டு மொத்தமா அவரக் குத்தகைக்கு எடுத்து கும்மிக்கிட்டு இருக்குல்ல, அப்றம் என்ன போட்டிக்கு நீங்க வேற?//

ஹா ஹா ஹா டாப்பு

கலக்கல் போஸ்ட் :-)))

 
On Fri Feb 13, 03:03:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//1) ஊர்ல எங்க பார்த்தாலும் குப்பையும், கூளமுமா இருக்கே அத சுத்தம் பண்ணுங்க, பொது இடத்துல குப்பை போடுறவன பொளேர்னு அடி, கம்பத்த பார்த்தா காலத்தூக்குற நாய் மாதிரி கண்ட இடத்துலயும் அசிங்கம் பண்றவன விரட்டி விரட்டி அடி. //

விரட்டி விரட்டி 'வெட்டு' ன்னு இருக்கனும்.

என்ன ஐயங்கார்வாள், 10 கட்டளை போடுவிங்கன்னு பார்த்தால் ஆறோடு முடிச்சேட்டேள். நம்பர் ராசியில்லே சொல்லிட்டன்

 
On Fri Feb 13, 07:06:00 PM GMT+8 , ’டொன்’ லீ said...

நன்னாச் சொன்னேள் போங்கோ அய்யங்கார்வாள்..

அப்படியே சைட் gap ல் உங்கட மாட்டரையும் இழுத்து விட்ட நுண்ணரசியலை ரசித்தேன் :-))

 
On Sat Feb 14, 01:03:00 AM GMT+8 , வெண்பூ said...

நல்ல ஐடியாத்தான்.. ஆனா செவுடன் காதுல போயி என்னத்த சங்கு ஊதி என்னத்த ஆகுறது..

 
On Sat Feb 14, 01:12:00 AM GMT+8 , ஜோதிபாரதி said...

உங்களை வழக்கொழிந்த சொற்கள் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.
இந்தத் தொடுப்பில் சென்று பார்க்கவும்
http://jothibharathi.blogspot.com/2009/02/blog-post_14.html

 
On Sat Feb 14, 02:00:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

//வெண்பூ said...
நல்ல ஐடியாத்தான்.. ஆனா செவுடன் காதுல போயி என்னத்த சங்கு ஊதி என்னத்த ஆகுறது..
//

உடல் ஊனங்களை குறித்த பழமொழிகளை தவிர்க்கலாம்.

என்னதான் சங்கு ஊதினாலும் கேட்(காத)காது கேட்காது ! என்று சொல்லலாம்
:)

 
On Sat Feb 14, 02:37:00 AM GMT+8 , வெண்பூ said...

சரியா சொன்னீங்க கோவி.. இனிமே மாத்திக்கிறேன்.

 
On Sun Feb 15, 11:10:00 AM GMT+8 , Ŝ₤Ω..™ said...

ராமர் சேனை எதுப்பா?? அவிங்க பேர சரியாத்தானே வச்சிருக்காய்ங்க..
அதுங்க இதத்தவிர வேற என்னத்த கிளிக்க போதுங்க.. இதுக்கு போயி நீயி இம்புட்டு கோவப்படலாமா

 
On Sun Feb 15, 05:24:00 PM GMT+8 , Sridhar Sivaraman | ஸ்ரீதர் சிவராமன் said...

//பாவம் இராமரு. அயோத்தியில ஆரம்பிச்சு ஆதம் பாலம் வரைக்கும் அவரு அடி பின்னி எடுத்துட்டீங்க. போதும் விட்ருங்க அவர, இதுக்கு மேல அவரால தாங்க முடியாது. அதான் ஏற்கனவே ஒரு கட்சி ஒட்டு மொத்தமா அவரக் குத்தகைக்கு எடுத்து கும்மிக்கிட்டு இருக்குல்ல, அப்றம் என்ன போட்டிக்கு நீங்க வேற?//

//இவரு தமிழ்நாட்டை எதிர்கிறதுல மட்டும் தான் கோக்குமாக்கா யோசிப்பாருன்னு நினைச்சேன், அப்டியெல்லாம் இல்லீங்க, நாங்க எப்பவுமே இப்டித்தான் கோக்கு மாக்காத்தான் யோசிப்போம்னு நிருபிச்சுக்கிட்டு இருக்காரு.//


:)

 
On Mon Feb 23, 11:56:00 AM GMT+8 , அ.மு.செய்யது said...

உங்க வலைதளத்தின் 25 ஆவது ஃபாலோவர் நானே..

 
On Mon Feb 23, 05:20:00 PM GMT+8 , மோனிபுவன் அம்மா said...

அருமையோ அருமை பா உங்கள் பதிவுகள்

 
On Sat Feb 28, 09:55:00 PM GMT+8 , லவ்டேல் மேடி said...

// இது காதலர் தின சிறப்பு பதிவு. //


வாங்க ...... ராசா......... வாங்க ........!!!!!!
// கலாச்சாரத்த காப்பாத்துறோம்னு காதலர் தினத்தன்னைக்கு ஒன்னா இருக்க காதலர்களுக்கு எல்லாம் கட்டாயமா திருமணம் செஞ்சுவைப்போம், //


பெத்தவிங்களுக்கு செலவே இல்ல......!!!!!!


// இல்லைன்னா அந்த பொண்ண விட்டு பையனுக்கு ராக்கி கட்ட வைப்போம்னு ஒரு கூட்டம் கிளம்பியிருக்கு. ( என்னா ஒரு வில்லத்தனம்??) //


ஆமாஞ்சாமி ..............!!! இதெல்லாம் உங்குங்குளுக்கு வில்லத்தனமாதே தெருயும் .....!!! பெத்தவிங்க ஊட்டுல ..... மடியில நெருப்ப கட்டிக்கிட்டு ...... புள்ளைங்க இப்ப வருமோ ....... அப்பா வறோமோ ன்னு ... காத்து கெடப்பாங்க ..... ,
இந்த லைலா ... மஜ்னு ..... ரெண்டு பேரும் .... ஊரச்சுத்தீட்டு வருவாங்க....!!!!

வந்த ரெண்டு பேருக்கும் ஊட்டுல ஆலாத்தி எடுத்து சுத்தி நின்னு கும்மியுச்ச்சா ......!!! நெம்ப சிறப்பா இருக்கும் ...!!!!!!!

// இவங்க திட்டத்த கேட்டு அப்டியாவது நமக்கெல்லாம் கல்யாணம் ஆகாதான்னு இங்க ஒரு தொழிலதிபர் பட்டு வேட்டி கட்டிக்கிட்டு சனிக்கிழமை கோயம்புத்தூர்ல இருந்து பெங்களூருக்கு வர திட்டம் போட்டுக்கிட்டு இருக்கத வேற தகவல் வருது. ( இந்த தொழிலதிபருக்கு எந்த பொண்ணையாச்சும் கட்டாயத் திருமணம் செஞ்சு வைக்க முயற்சி செஞ்சா,அந்த பொண்ணு ஒரு ராக்கி என்ன 100 ராக்கி கட்டுறேன்னு கைல மட்டும் இல்ல கழுத்துல கூட ராக்கி கட்டிட்டு தப்பிச்சுடும், இருந்தாலும் அந்த அளவுக்கு சோதனை தேவையா? ) //


நெல்ல ஐடியா ......!!!! அப்போ ...... ராம்சேனாகாரங்க வரும்போது ...... , நச்சுனு இருக்குற மாதிரி நல்ல பிகரா இழுத்துட்டு வந்து லிப்ஸ் டூ லிப்ஸ் குடுத்துகிட்டு இருந்தமுன்னா .... ஆவிகளே கல்யாணத்த சிறப்பா முடுச்சு குடுத்துட்டு போயிருவாங்க ......!! அப்பறம் மேற்கொண்டு ஆவறத நம்ம ...( நான்) பாத்துக்கலாம் .......!!!!!!!
// இவங்க ஆர்பாட்டத்த எதிர்த்து இன்னொரு கூட்டம் இவங்களுக்கு பிங்க் கலர் பெண்கள் உள்ளாடை அனுப்ப கிளம்பியிருக்கு.( என்ன ஒரு அருமையான ஆயுதம்???, அப்ப பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கனும்னா என்ன செய்வானுங்க??) //


இந்தியர்கள் கிட்ட இருக்குற மொத்த கிளுஞ்ச ஜட்டிகள பார்சல் பண்ணி அனுப்பலாம் .........!!! நெம்ப சிறப்பா இருக்கும் .....!!!!!// இந்த காதலர் தினம் எல்லாம் வருசத்துக்கு ஒரு தடவ தான் வரும் //


அந்த கருமம் எப்ப வந்தா என்ன தம்பி.......!!! போன் கம்பணிகார பரதேசி நாயுவ .... அந்தந்நிகின்னு பாத்து ..... எஸ் .எம் . எஸ். க்கு காசு புடுங்கீராணுவ ........!!! ப்ரெண்ட்ஸ்க்கு எல்லா எஸ் .எம் . எஸ். தெனோந்த்... தெனோ ..... அனுப்பீட்டு .... அன்னிக்கு அனுப்புலீன்னா மண்ட காஞ்சு போயிருது .........!!!!!


// அப்ப மட்டும் நீங்க இந்த அலப்பற அடிக்கிறத விட்டுட்டு .... //

ஓஓ...........!!! அந்தன்னிக்கு இவிக மட்டும்தான் அளப்பற அடிக்கிறாங்க ....... !! லவ் பண்ற கம்முனாட்டிங்க யாரும் எதுவும் பண்ணுறது இல்லா......!!!???!!!!!!


// கீழ சொல்லியிருக்க வேலைய எல்லாம் செஞ்சீங்கன்னா, வருசம் முழுக்க வேலை இருந்துகிட்டே இருக்கும். //


ஏதாவது ஜாப் கன்சல்டன்சி வெச்சு நடத்துறீங்களா..............???


// அதான் உங்களுக்காக நான் கொஞ்சம் யோசிச்சு சொல்லியிருக்கேன். //

நெம்ப யோசிக்காதீங்க தம்பி ....!!! அப்பரம் ..... நெம்ப சிரமமா போயிரும் .....!!!!// நீங்க அப்பாவி காதலர்கள மிரட்டி உங்க வீரத்த காட்டுறதுக்கு பதிலா இப்டி உருப்படிய வீரத்த காட்டுனா நல்லா இருக்கும் //


என்னது .......?????? காதலர்கள் அப்பாவியா.....??? அடங்கொன்னியா.....!!!!!

ரெண்டு நாளைக்கு லவ்வ பண்ணிபோட்டு ..... மூணாவது நாள் வவுத்த தலீட்டு வந்து நிக்கறதுதான் இப்போ நடக்குற லேட்டஸ்ட் ட்ரெண்டு .........

இதுல வீரத்த வேற கட்டனுமாமாங்கோய் ..!!!!


/// எங்க முடிஞ்சா இதையெல்லாம் செய்யப்பாருங்க . //நானுமு அதையே திருப்பி கேக்குற......... கதலர்களுன்னு சொல்லுற நீங்க உருப்புடியா அந்தனைக்கு ஏதாவது செய்யுங்களேன் .......!!// 1) ஊர்ல எங்க பார்த்தாலும் குப்பையும், கூளமுமா இருக்கே அத சுத்தம் பண்ணுங்க, பொது இடத்துல குப்பை போடுறவன பொளேர்னு அடி, கம்பத்த பார்த்தா காலத்தூக்குற நாய் மாதிரி கண்ட இடத்துலயும் அசிங்கம் பண்றவன விரட்டி விரட்டி அடி. //


உங்க காதல் புனிதமானதுன்னு சொல்லுரீங்கள்ள ......!!!! அதுமாதிரி அந்தன்னைக்கு காதலர் தின நினைவா ... ஊர சுத்தமாக்குங்களேன் ....!!! அந்தன்னிக்கு ..... உங்க காதலிக்கு ..... பொக்கே ....... கிக்கே .. நு வாங்கி தரத்துக்கு பதிலா .... எத்தனையோ ஏழை குழந்தைகள் போட்டுக்க ஜட்டிகூட இல்லாம சுத்துதுங்க ..... அவிகளுக்கெல்லாம் நல்ல துணி வாங்கி குடுங்களேன் ......!!!// 2) எல்லா அரசாங்க அலுவலகத்துக்கும் போங்க, அங்க எந்த வேலையா போனாலும் அநியாயமா லஞ்சம் வாங்குறானுங்களே மொள்ள மாறிங்க, அவிங்களுக்கு ஆப்பு வையிங்க. லஞ்சம்னு எவனும் கேட்கவே பயப்புடனும் அப்டி அடி. //


அப்போ சொல்லி அனுப்புறோம் ......., நீங்குலுமும் கூட வரீங்களா கண்ணு ....!!!!!


//3) எல்லாத் திறமையும் இருந்து படிக்க வழியில்லாம கஷ்டப்படுற ஏழைப்பசங்களுக்கு உதவி பண்ணு. கல்விய கூறு போட்டு விக்கிற வியாபரிய ஓட ஓட விரட்டியடி. கஷ்டப்பட்டு காசு குடுத்து படிக்கிற மாணவக் கூட்டம் உன் பின்னாடி வரும். //


பின்னாடியே வந்தா....... ஊரு தாங்காது தம்பி ....... நாங்க வாங்கி குடுக்க ரெடி ........ அந்தன்னைக்கு நீங்க பண்ணுற தேவையில்லாத ஆடம்பர செலவுகள கொறச்சு ... நீங்க அத பன்நுளாமே...!!!!


// 4) சாலையில பல இடங்கள்ல போற வர்ற வண்டிய எல்லாம் மடக்கி, கைய நீட்டுற காவலர்கள கண்டா இந்தியன் தாத்தா மாதிரி மரியாதை செஞ்சு அனுப்பு.


5) ஒரு நாளைக்கு ஒரு சாலையின்னு திடீர்னு போயி நில்லுங்க,எவன் தேவையில்லாம ஹாரன் அடிக்கிறானோ அவன பொடேர்னு அடி, விதிமுறைய மீறுனா வண்டிய புடுங்கிடு. //


அந்தன்னைக்கு உங்கள மாதிரி காதலர்கள்தான் ரோட்டுல நேரிய சர்கஸ் காட்டிட்டு போவீங்க ..... உங்களைய புடுச்சு நாலு சாத்து.. சாத்துனா .. செரியா போயிரும் .... !!! பின்னாடி என்னமோ ..... ஐஸ்வர்யா ராய் உக்காந்துகிட்டு இருக்குறதா நெனச்சுகிட்டு வண்டியா மல்லாக்க ஓட்டுறது ..... குப்பரக்கா ஓட்டுறது ........ ஆரணா அடுச்சுகிட்டே போறது ....... எல்லா முடுச்ச்சவுக்கி தனமும் நீங்க பண்ணுறது ..... !!! மறந்தராதிங்க தம்பியோவ்....!!!!!// 6) எல்லா ஊர்லயும் எந்த வசதியிருக்கோ இல்லையோ, குடிசைப் பகுதிகள் கட்டாயம் இருக்கும், அது தேர்தல் நேரத்துல மட்டும் தான் அரசியல்வாதிகளுக்கு நினைப்பு வரும், அங்க போயி அவங்களுக்கு தேவையான வசதிகள செஞ்சு கொடு. இதுக்கெல்லாம் நீ உன் கை காச செலவு செய்ய வேண்டாம், அரசாங்க அதிகாரிகள புடிச்சு கொண்டுவந்து செய்ய வைய்யி. குடிசையில இருக்கவங்க எல்லாம் உனக்கு கோயில் கட்டுவாங்கள்ல? நீ செஞ்சு வைச்சுருக்க வசதிய எல்லாம் உபயோகிக்காம குடிசைய சுத்தி குப்பைய எவனாச்சும் போட்ட அடி. //

நீங்க ... பார்க்கு ...... பீச்சுன்னு ..... அடிக்கிற கூத்துக்கு பதிலா ..... , உருப்புடியா மேற்கண்ட வேலைகள நீங்களும் பகிர்ந்துக்கலாமே ........// (படிக்கிறவங்களுக்கு இதே மாதிரி நல்ல யோசனைகள் தோன்றினால் உடனே பின்னூட்டமிடுங்கள்) //


அதுதான் போட்டுக்கிட்டு இருக்குறேன்ள தம்பி ...... அவசரப்படாதீங்க ........!!!!!
// இப்டி உருப்புடியா செய்ய ஆயிரம் வேலை இருக்கப்ப, காதலர்கள அடிக்கிறேன், கல்யாணம் செஞ்சு வைக்கிறேன்னு கிளம்புறது எந்த விதத்துல நியாயம்? //இப்டி உருப்புடியா செய்ய ஆயிரம் வேலை இருக்கப்ப , பார்க்கு... பீச்சுல ... கூத்தடிக்கறது .....!!! பைக்குல வித்த காட்டுறது .....!! இப்புடி மொக்கதனமா பண்ணுறது எந்த விதத்துல நியாயம்?// ஊருக்கு பயந்து, வீட்டுக்கு தெரியாம காதலிக்கிறவனுங்ககிட்டத்தானே உன் வீரத்த காட்ட முடியும்? //

" வீட்டுக்கு தெரியாம " ன்னு சொல்லுறது கேவலமாக தோன்றவில்லை உங்களுக்கு ..... ???!!!!???

இதில் என்ன பெருமை வேண்டி கிடக்கு ..... ???? பெத்தவிங்கள அவமான படுத்துறதா உங்க வீரம் .......!!!! ???? !!!!!!


// என்னைய கூடத்தான் எந்த பொண்ணும் காதலிக்கல, அதுக்காக நான் என்ன எல்லா காதலர்களையும் பார்த்து பொறமைப் பட்டுக்கிட்டா இருக்கேன்? //

உங்களுக்கு தோன்றவில்லை .... அவர்களுக்கு தோன்றி இருக்கிறது ........// இல்ல உங்கள மாதிரி வில்லத்தனமா யோசிக்கிறேனா? //


நீங்க பரம காது தம்பி ... !! த்து.... ச்சி ...... !! பரம சாது தம்பி .....!!!!// இவ்ளோ நல்லா யோசிக்கிறேன்ல. அப்டி நீங்களும் நல்லபடியா யோசிங்கய்யா. //


ஆமா ...!! ஆமா..!! நல்லாவே யோசிக்கிறிங்க....!!!!!!!!


// நீ என்ன சொல்றது நாங்க என்ன செய்யிறதுன்னு உங்க செயற்குழு தீர்மானம் போட்டுருச்சுன்னா, குறைந்தபட்சம் உங்க அமைப்போட பெயரையாச்சும் மாத்திருங்கய்யா. பாவம் இராமரு. //


இல்ல தம்பி ..... மாத்திக்கவெல்லாம் முடியாது ....!!! ஏன்னா...!!!! ராமரு கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்ணுல .......!!!!


// இந்த இராம் சேனா, பிங்க் ஜட்டி கூட்டம் எல்லாம் போதாதுன்னு வா(மு)ட்டாள் நாகரசு வேற கலத்துல எறங்கிட்டாரு இப்ப. அவரு காதலர்களுக்கு ஆதரவா அவங்க ஊரச் சுத்தி வர்றது வாகன வசதி செஞ்சுத் தரப்போறாராம். //


முடுஞ்சா ஊர சுத்தி ........ நெரிய பொதரு வழக்கச்சொல்லுங்க......!!! நெம்ப சவுரியமா இருக்கும் .....!!!!// எத்தனையோ கிராமங்கள்ல காலையில பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு கூட பேருந்து வசதியில்லாம எம்புட்டு குழந்தைங்க நடந்து போயி படிச்சுட்டு வர்றாங்க. அவங்களுக்கு வாகன வசதி செஞ்சுத் தரலாம்ல இவரு? //


அவன் கெடக்குறான் ...... ஏரியல் மண்டையன் .......!!!!!!

 
On Sun Mar 01, 08:27:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@லவ்டேல் மோடி....

வணக்கம்ங்க,
ஒரு ஒரு வரிக்கும் ஒரு பின்னூட்ட மழை பொழிஞ்சுருக்கீங்க. நெம்ப நன்றி.

அண்ணா, நான் சொல்லியிருக்கத எல்லாம் இராம் சேனால இருக்கவங்க செய்ய ஆரம்பிச்சா நீங்க பழிக்கிற காதலர்கள் எல்லாம் தானா அவங்க பின்னாடி வருவாங்க.

ஏனுங்ணா நீங்க காமெடியெல்லாம் ஒன்னும் பண்ணலையே? நான் தான் தெளிவா எழுதியிருக்கேனே, எனக்கும் காதலுக்கும் சம்பந்தமேயில்லைன்னு, நானே யாரும் என்னைய காதலிக்கலன்னு கவலையில இருக்கேன், என்னையப் போயி காதலர்கள் பட்டியல்ல சேர்த்துவிட்டுட்டீங்க?

அப்றம் காதல் அப்டிங்கிறது ஒரு இயற்கையான உணர்வு, இப்ப இருக்க இளம் தலைமுறையில சிலபேரு காதலை வெளிப்படுத்துற விதம் சரியில்லைங்கிறதுக்காக காதலையே குத்தம் சொன்னா எப்டி? வீட்ல அம்மா, அப்பாகிட்ட எல்லாம் சொல்லிட்டா காதலிக்க முடியும்? காதலிக்க ஆரம்பிச்சு கொஞ்ச காலம் பழகி எல்லாம் நல்லா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா அப்றம் ஊட்ல சொல்லி கல்யாணம் செஞ்சுக்கலாம். அது தானேங்ணா முறை?
அப்றம் காதலிக்க ஆரம்பிச்சு புள்ள வாங்கிட்டு வர்றவங்கள எல்லாம் காதலர்கள் பட்டியல்ல சேர்க்காதீங்க. அதுக்குப் பேரு காதல் இல்லீங்ணா. வேற பேரு என்ன வேணும்ணாலும் வைச்சுக்கங்க.
மீண்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

 
On Fri Mar 06, 11:34:00 AM GMT+8 , viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

 
On Mon Apr 06, 11:39:00 AM GMT+8 , Anonymous said...

Test

 
On Sat May 09, 06:10:00 PM GMT+8 , ivingobi said...

kalaaikkalam nu vnatha inga oru nalla post poattu irukkar..... so ungalukku oru Royal salute.....
ada nijamavae salute pannuraen rethukku muraikkaringa ... ?

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க