Author: ஜோசப் பால்ராஜ்
•9:59 PM
இந்தத் தொடர் விளையாட்டில் என்னையும் அழைத்த அண்ணண் நர்சிம் அவர்களுக்கு என் அன்பான நன்றிகள்.

ஆறு, குளம், குட்டை, வாய்கால் என எல்லாப் பெயர்களையும் எனக்கு முன்னரே தம் வரலாறு கூறிய பெருமக்கள் எடுத்தாண்டுவிட்டமையாலும், அந்தப் பெயர்களை உபயோகிக்குமளவுக்கு நான் பெரியவன் இல்லையென்பதாலும் சிறுதுளி என்று தலைப்பிட்டுள்ளேன். ( தலைப்புக்கு விளக்கம் குடுக்கனும்ல?)

2006ல் சிங்கை வந்த போது தான் எனக்கு கூகுள் நிறுவனம் அளிக்கும் வலை சேவையே தெரியவந்தது. உடனே நிறைய எழுதனும்னு முடிவெடுத்து ஒரு வலைப்பூ துவங்கினேன். எனக்கு தெரிஞ்ச ஓட்டை ஆங்கிலத்தில எழுதுனேன். சிங்கையில் வேலையில் சேர்ந்ததும் மெயில் அனுப்ப கூட நேரமில்லாம போனதால தொடர்ந்து எழுத முடியல. நல்ல வேளை இப்ப அந்த வலைப்பூ முகவரி கூட எனக்கு தெரியாது. ( எல்லாரும் தப்பிச்சுட்டிங்க) .

2007ல தமிழ் தட்டச்சுக்கு ஈ-கலப்பை அப்டின்னு ஒரு மென்பொருள் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அத வைச்சு ஆரம்பிச்சதுதான் இப்ப இருக்க இந்த வலைப்பூ. 2007ல ஆரம்பிச்சு ரொம்ப பொறுப்பா 5 பதிவு எழுதுனாலும் அப்ப எனக்கு தமிழ்மணம் போன்ற திரட்டிகளப் பத்தி தெரியாது. அதுனால மறுபடியும் ஒரு இடைவெளி விட்டாச்சு.

2008ல ஆனந்த விகடன்ல வரவேற்பரையில் ஆசிப் அண்ணாச்சியோட வலை குறித்து எழுதியிருந்தது பார்த்து, அவரோட வலைப்பூவுக்கு போயி அவரோட பதிவுகளப் படிச்சேன். அவரு பதிவுல பல இடங்கள்ல தமிழ்மணம் அப்டிங்கிற பெயர் இருந்துச்சு. அது என்னத் தமிழ்மணம் அப்டின்னு பார்க்க போயி , அப்டியே புடிச்சு வந்துட்டேன் உள்ளற. ( ஒரு வழியா நாமளும் ரவுடி தான்னு ஜீப்ல ஏறியாச்சு)

அந்த காலகட்டத்தில சிங்கையில் நடந்த பதிவர் சந்திப்புக் குறித்து கோவியார் எழுதியிருந்தார். அதப் பார்த்துட்டு ரொம்ப மகிழ்சியாயிருச்சு. தனிமையில போரடிச்சுக் கிடக்கோமே, நமக்கு இங்க ஒரு கூட்டம் இருக்குடான்னு முடிவு பண்ணிட்டு ஒட்டகம் கூடாரதுக்குள்ள நுழைஞ்ச மாதிரி கூட்டத்துல இணைஞ்சுட்டேன். ( இப்ப கூடாரத்துல நடுவுல இருக்கோம்னு நான் சொல்லித் தான் தெரியனுமா என்ன? )

இங்க ஒரு முக்கியமான விசயத்த சொல்லனும். சிங்கையில எந்தப் புதிய பதிவர் எழுத ஆரம்பிச்சாலும், அவங்கள தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தி, சந்திச்சு, அவங்களையும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு கூட்டிவந்து எல்லோருடனும் இணைத்து மகிழச் செய்யும் சீரியப் பணியை கோவி.கண்ணண் மிகச் சிறப்பா செஞ்சுகிட்டு இருக்கார். சந்திப்புகளுக்கெல்லாம் செல்லும் முன்னரே ஒரு முறை நான் அவரோட தொலை பேசியில் உரையாடினேன். அடுத்த வார இறுதியிலேயே என் இல்லம் வந்து சந்தித்து சென்றார். சிங்கைப் பதிவர்களப் பத்தி சொல்லனும்னா அதையே ஒரு தொடரா எழுதணும். இங்க இருக்கது பதிவர் குழுமம் இல்ல, இது பதிவர் குடும்பம். (இதுக்கு மேல என்னத்த சொல்ல? )

பெருசா ஒன்னும் எழுதி கிழிக்கலைன்னாலும், பதிவுலகத்துக்கு வந்தமையால் பல அன்பு உள்ளங்களின் நட்பு கிடைத்தது நான் அடைந்த பெறும் பேறு. என் கூட முதுகலையில் ஒன்றாகப் படித்தவரும், தற்போதைய பிரபலப் பதிவருமாகிய குசும்பன் அவர்களைக் கூட மீண்டும் தொடர்பு கொள்ள உதவியது பதிவுகள் தான்.
சுருக்கமா சொல்லனும்னா, நமக்கு உலகம் பூர சொந்தக் காரங்க இருக்காங்கன்னு சொல்லிக்க வைச்சுருக்கு இந்தப் பதிவுலகம்.

தொடர்ந்து எழுதாமலேயே பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிறேன். பார்ப்போம், இந்த சிறு துளி பல துளிகளா பல்கிப் பெருகுதா, இல்ல அப்டியே ஒரு துளியாவே நிக்குதான்னு.

இந்த தொடர் விளையாட்டுக்கு நான் அழைக்கும் சொந்தங்கள்


Udanz
This entry was posted on 9:59 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On Fri Oct 09, 12:14:00 AM GMT+8 , நாமக்கல் சிபி said...

//வருங்கால பாராளுமன்ற எதிர்கட்சித்
தலைவர் மாப்பி சஞ்செய் காந்தி//

I Like this very much!

 
On Fri Oct 09, 12:25:00 AM GMT+8 , SanjaiGandhi said...

//4) அண்ணண் குழலி //

மச்சி.. இந்த பெரிசு எழுதின பின்னாடி தான் நான் எழுதுவேன். சரியா? :)

... எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.. ;)

//நாமக்கல் சிபி said...

//வருங்கால பாராளுமன்ற எதிர்கட்சித்
தலைவர் மாப்பி சஞ்செய் காந்தி//

I Like this very much!
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(

5 ஆண்டுகளுக்கு மட்டுமே ஜோசப்பிற்காக எகத. பின் நிரந்தர பிரதமர் :))

 
On Fri Oct 09, 02:46:00 AM GMT+8 , கும்க்கி said...
This comment has been removed by the author.
 
On Fri Oct 09, 02:47:00 AM GMT+8 , கும்க்கி said...
This comment has been removed by the author.
 
On Fri Oct 09, 07:57:00 AM GMT+8 , அப்பாவி முரு said...

//( இப்ப கூடாரத்துல நடுவுல இருக்கோம்னு நான் சொல்லித் தான் தெரியனுமா என்ன? ) //

ஓ, இதுக்குதான் கூட்டம் நடக்கும் போதெல்லாம் நடுவுல வந்து உக்காந்துக்கிறீங்களா?

 
On Fri Oct 09, 11:26:00 AM GMT+8 , பித்தனின் வாக்கு said...

வரலாறு கூறிய எங்களின் வரலாற்று நாயகனே.
தமிழில் பதிவு எழுதும் எங்களின் தன்னிகரற்ற சிங்கமே,
புலியை முறத்தால் விரட்டிய தமிழ் இனத்தில் பதிவால் விரட்டும் புற நானுறே.
எங்களின் வழிகாட்டியே, எங்களை சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் செய்யும் சிந்தனை செல்வமே,
நீர் வாழ்க! நின் பதிவு வாழ்க! வளர்க உம் சேவை.

பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

சுதாகர் என்னும் பித்தனின் வாக்கு.

பின் குறிப்பு: நான் ஒரு பீர் அளவுக்கு வாழ்த்திவிட்டேன், இன்னமும் புகழ வேண்டுமானால் இன்னேரு பீர் வாங்கித் தரவும். சைடு டிஸ் நான் வாங்கிக் கொள்கின்றேன்.

 
On Fri Oct 09, 09:04:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

/
சுருக்கமா சொல்லனும்னா, நமக்கு உலகம் பூர சொந்தக் காரங்க இருக்காங்கன்னு சொல்லிக்க வைச்சுருக்கு இந்தப் பதிவுலகம்.
/

சரிடா தம்பி.

 
On Fri Oct 09, 11:48:00 PM GMT+8 , கிரி said...

//சிங்கையில எந்தப் புதிய பதிவர் எழுத ஆரம்பிச்சாலும், அவங்கள தொடர்பு கொண்டு, ஊக்கப்படுத்தி, சந்திச்சு, அவங்களையும் அடுத்த பதிவர் சந்திப்புக்கு கூட்டிவந்து எல்லோருடனும் இணைத்து மகிழச் செய்யும் சீரியப் பணியை கோவி.கண்ணண் மிகச் சிறப்பா செஞ்சுகிட்டு இருக்கார்//

ரிப்பீட்டு

 
On Sun Oct 11, 12:25:00 PM GMT+8 , இய‌ற்கை said...

//பண்ணிட்டு ஒட்டகம் கூடாரதுக்குள்ள நுழைஞ்ச மாதிரி கூட்டத்துல இணைஞ்சுட்டேன்.//

கூடாரம் அப்புறம் புதுசா கட்டினாங்களா

 
On Sun Oct 11, 07:26:00 PM GMT+8 , Mahesh said...

ஆமாம்.. .ஆமாம்... வரலாறு மிக முக்கியம் அமைச்சரே....

உங்க பாணியில அருமையான் ஒரு இடுகை !! என்ன... அடிக்கடி எழுதறதில்லை... என்னை மாதிரி மாசம் ஒண்ணாவது எழுதலாமில்ல??

 
On Wed Oct 14, 10:26:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

//இந்த தொடர் விளையாட்டுக்கு நான் அழைக்கும் சொந்தங்கள்


1) வடகரைவேலன் அண்ணாசி
2) மாநக்கல் சிபி அண்ணா.
3) வருங்கால பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் மாப்பி சஞ்செய் காந்தி
4) அண்ணண் குழலி
5) ”அண்ணண்” அண்ணண் அப்துல்லா. //

இங்கிட்டு சொன்னால் மட்டும் போதாது, நீ ஆடிக்கொருதரம் பதிவு போட்டால் அவிங்களுக்கு தெரியாது தம்பி. மின் அஞ்சல் அனுப்பி தகவல் சொல்லிவிடனும்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க