Author: ஜோசப் பால்ராஜ்
•10:13 PM
கேரளாவில் சமீபத்தில் நீதிமன்ற ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இருசக்கரவாகனக்களின் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள் சேலை அணிந்து செல்லக் கூடாதாம். சேலைத் தலைப்பு சக்கரத்தில் சிக்கி பல விபத்துகள் நிகழ்வதால் இந்த ஏற்பாடாம்!எனக்கொரு சந்தேகம். கேரளாவின் பெரும்பாலான கோயில்களில் சுடிதார் போன்ற உடைகளில் வர பெண்களுக்குத் தடையுண்டு. அப்ப, மனைவியை கூட்டிக்கொண்டு கோயிலுக்குப் போவதென்றால், சுடிதார் அணிந்து டூவிலரில் அழைத்துச் சென்று கோயிலுக்குள் செல்லும் முன் சேலை மாற்றி...

என்ன கொடுமை குருவாயூரப்பா இது?

மேற்கண்ட வரிகள் என் அன்புச் சகோதரர் பரிசல் அண்ணணின் பதிவில் இருந்தது.

ஆனால் இவர் என்னக் கொடுமை குருவாயூரப்பா எனக் கேட்பதைப் பார்த்தால் எங்கே கேரள அரசின் உத்தரவு தவறு என சொல்வாரோ எனச் சந்தேகமாக உள்ளது. முல்லைப் பெரியாறு, நெய்யாறு என தமிழகத்திற்கும் கேரளத்திற்குமிடையே உள்ள பல பிரச்சனைகளில் கேரளாவின் செயல்பாடுகளினால் எனக்கு அவர்கள் மீது கோபம் இருந்தாலும், இந்த உத்தரவை நான் மனமாற வரவேற்கிறேன். கோயில்களில் சுடிதாரை தடை செய்துள்ளார்கள் என்பதால் சேலை அணிந்துகொண்டு இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து செல்ல விதித்த தடையை மட்டும் நீக்க சொல்லாதீர்கள்.

நம்ம ஊர்ல ரொம்ப சவுகரியமா ஒரு பக்கமா உக்காந்துகிட்டு அதோட மடில ஒரு குழந்தை, இல்லன்னா நல்ல கனமான பை என இவங்க பயணம் செய்யிறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கும். அதுவும் நம்ம ஊர் சாலைகள் இருக்க அழகுல, நாம எல்லாம் சாலை விதிகள மதிக்குற அழகுல இப்படி எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாம பின்னாடி உக்காந்துகிட்டு போறது மிகவும் ஆபத்து.

சேலை அணிந்து இருசக்கரங்களின் வாகனங்களில் செல்லத் தடை விதித்தால் மட்டும் போதாது. சுடிதார் போன்ற உடைகளை அணிந்து கொண்டு, வாகனத்தின் இருப்புறமும் கால்களை இட்டு அமர்ந்துதான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். இப்படி இவங்க பாதுகாப்பு இல்லாம இருசக்கர வாகனங்கள்ல பயணம் செய்ய கேரளாவில் மட்டும் தடை விதித்தா போதாது. இது நாடு முழுவதும் தடை செய்யப் படவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்?

கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக‌ இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே சாமியே கும்புட போறாங்க? அப்ப கட்டாயம் இந்த சட்டத்த எல்லா மாநிலங்களுக்கும் நீட்டிச்சு, கட்டாயமா கடைபிடிக்க செய்யிங்க.

சிங்கப்பூர்ல பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் இருபுறமும் கால்களை இட்டு அமர்ந்து தான் இருசக்கர வாகனங்களில் பயணிக்க இயலும். குழந்தைகளை முன்புறம் மட்டும் அல்ல, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் மடியில் கூட வைத்துக் கொள்ள முடியாது. இருவரும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். ஆனா நம்ம ஊர்ல ஒரு மொத்த குடும்பமும் ஒரு வண்டியில போறது எல்லாம் சர்வ சாதாரணம். இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான். சில விசயங்களை மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.

ஏற்கனவே கட்டாய தலைகவச சட்டத்த வீணாக்குனது மாதிரியில்லாம கொஞ்சம் மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன். Udanz
This entry was posted on 10:13 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

29 comments:

On Wed Nov 05, 12:42:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

சிங்கையில் என்னிடம் வண்டி இல்லையே எதில் போவது ?

:)

 
On Wed Nov 05, 12:45:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//கோவி.கண்ணன் said...
சிங்கையில் என்னிடம் வண்டி இல்லையே எதில் போவது ?
//
அடுத்தவங்க வண்டியிலயே ஒழுங்கா உக்காந்து போகத் தெரியாது, கீழ விழுந்துட்டு காயத்த ஸ்கேல் வைச்சு அளந்து அத வைச்சு ஒரு பதிவு போடுவீங்க. உங்களுக்கு தனியா ஒரு வண்டி வேற வாங்கித் தரணுமாக்கும்?

 
On Wed Nov 05, 12:54:00 AM GMT+8 , வெண்பூ said...

சரியா சொன்னீங்க ஜோசப்.. கோவிலுக்குள் சுடிதார் அனுமதிக்கிறதுல என்ன பிரச்சினைன்னு தெரியல.. சொல்லப்போனா கோவிலுக்குள்ள விழுந்து கும்பிடுதல், அங்கபிரதட்சணம் இதெல்லாம் செய்ய சுடிதாரே பல மடங்கு வசதியானது. ஆனா, யாரு கேக்கப்போறாங்க??

 
On Wed Nov 05, 01:11:00 AM GMT+8 , Ŝ₤Ω..™ said...

நம்ம ஊர் நவநாகரீக அம்மணிகள், சுடிதார்ல துப்பட்டாவ பறக்கவிட்டுட்டு இல்ல செல்கின்றனர்.. அதுகூட ஆபத்து தான்..
பின்னாடி உட்கார்ந்து இருக்கும் ஆண் வேட்டி கட்டி இருந்தாகூட ஆபத்து தான்..

***
மக்கள் தவறு எனத் தெரியாமலே செய்யும் போது அதை தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்த சட்டமும் அதில் ஒன்றுதான்.
***

சட்டங்கள் கடுமையானாதான், தவறுகள் குறையும்..

 
On Wed Nov 05, 05:59:00 AM GMT+8 , அருண்மொழிவர்மன் said...

// ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயமாக‌ இருக்க முடியும்? உயிரோட பாதுகாப்பு முக்கியமா, சாமி முக்கியமா? எந்த சாமி சேலையிலத்தான் பொண்ணுங்க உள்ள வரணும்னு சொல்லியிருக்கு?
//

சரியாக சொன்னீர்கள். கலாசாரம் வேறு, நாகரிகம் வேறு என்பதை இவர்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல இன்றைய நாட்களில், வேகமாகிவிட்ட வாழ்க்கை முறையில் , அதுவும் பெண்கள் பெருமளவில் இரு சக்கரவண்டிகளை உபயோக்கிக்கின்றபோது சுடிதாரே பாவனைக்கு இலகுவானது என்பது எனது எண்ணம்

 
On Wed Nov 05, 10:41:00 AM GMT+8 , Anonymous said...

இருசக்கர வாகனங்களுக்கு சுடிதார் தான் சரியா இருக்கு. ஆனா துப்பட்ட பறக்க விட்டு போறவங்க இதில சேத்தி இல்லை. அதே போல ஒரு ஸ்கூட்டரில் அம்மா அப்பா, 3 குழந்தைகள் போறதும் பாக்க பயமாத்தான் இருக்கு. அதுக்கும் ஏதாவது சட்டம் வந்திருக்கும்னு நம்பறேன்

 
On Wed Nov 05, 12:12:00 PM GMT+8 , Anonymous said...

//அடுத்தவங்க வண்டியிலயே ஒழுங்கா உக்காந்து போகத் தெரியாது, கீழ விழுந்துட்டு காயத்த ஸ்கேல் வைச்சு அளந்து அத வைச்சு ஒரு பதிவு போடுவீங்க. உங்களுக்கு தனியா ஒரு வண்டி வேற வாங்கித் தரணுமாக்கும்?//

கிகிகிகி

 
On Wed Nov 05, 12:14:00 PM GMT+8 , Mahesh said...

ரொம்ப சரியான கருத்து. இது ஒரு பொதுவான சட்டமா இருந்தா நல்லாத்தான் இருக்கும்.

இது கூட நேரடியா தொடர்பில்லாதது, அன்னா இன்னமும் உறுத்தலா இருக்கற இன்னொரு விஷயம். இன்னுங் கூட பழனி கோயில்ல இருக்கற "இந்துக்கள் அல்லதோர் உள்ளே வர அனுமதி இல்லை"ங்கற போர்டு, குருவாயூர்ல யேசுதாசை அனுமதிக்க மறுத்தது எல்லாம் ஒத்துக்கவே முடியல. பழனி தேவஸ்தானத்துல இதப் பத்தி கேக்கப் போய் அசிங்கமா திட்டு வாங்கினதுதான் மிச்சம். :((

 
On Wed Nov 05, 12:50:00 PM GMT+8 , சி தயாளன் said...

பேசாமல் எல்லாரும் கோயிலை, மோட்டார் சைக்கிளைப் புறக்கணிப்போம்....

:))

 
On Wed Nov 05, 06:48:00 PM GMT+8 , pudugaithendral said...

இலங்கையில் புடவை கட்டியிருந்தால் கூட இரண்டு பக்கமும் கால் போட்டுத்தான் போவார்கள். புடவை கட்டி இரண்டு புறமும் கால் போடுவது சிரமம். முழங்கால் வரை புடவை மேலே ஏறி இருக்கும். அங்கே அது சகஜமாகிவிட்டது.

நம்ம ஊர் ஆண்கள் நன்றாக போனாலே பார்க்கும் பார்வை....
இப்படி பெண்கள் போனால் கேட்கவே வேண்டாம்.

சட்டத்தைப் போட்ட நீ்திமன்றம் கோவில்களுக்கு சுடிதாருடன் செல்லலாம் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

 
On Wed Nov 05, 06:50:00 PM GMT+8 , pudugaithendral said...

நம்ம ஊர் நவநாகரீக அம்மணிகள், சுடிதார்ல துப்பட்டாவ பறக்கவிட்டுட்டு இல்ல செல்கின்றனர்.. அதுகூட ஆபத்து தான்..//
ஆபத்தா! பேராபத்து. எங்கே சக்கரத்தில் துப்பட்டா சிக்குமோ என்றே
பயப்பட்டு பயப்பட்டு நமக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும்.

பின்னாடி உட்கார்ந்து இருக்கும் ஆண் வேட்டி கட்டி இருந்தாகூட ஆபத்து தான்..//

ஆண்களுக்கு ஆபத்தில்லை சாமி.
வேட்டியை டப்பா கட்டு கட்டிகிட்டு ஜம்முன்னு ஏறி உட்கார்ந்து போகலாம்.

பிரச்சனை எப்போதும் பெண்களுக்குத்தான்.:(

 
On Wed Nov 05, 07:29:00 PM GMT+8 , pudugaithendral said...

http://pudugaithendral.blogspot.com/2008/11/blog-post_1558.html

pathivu potiruken. parunga

 
On Wed Nov 05, 08:54:00 PM GMT+8 , Anonymous said...

இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான்.

Right said, Fred!

 
On Wed Nov 05, 09:04:00 PM GMT+8 , Anonymous said...

//சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது, பாதுகாப்பானது, அணிவதற்கும் எளிதானது எனப் பல சிறப்புகளை கொண்டது. ஏன் கோயில்களில் சுடிதாரை அனுமதிக்க கூடாது? கவர்சியான உடைகளை அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் சேலையை விட நாகரீகமான உடையான சுடிதாரை அணிந்துகொண்டு கூட உள்ளே வரக்கூடாது என சொல்வது எந்த விதத்தில் நியாயம் இருக்க முடியும்? //

வணக்கம் அய்யா!

நல்ல சிந்தனைதான்.
கவர்ச்சிக்கு எந்த அளவுகோலை நீங்கள் முன் வைக்கிறீர்கள்.
வெர்நியர் காளிப்பரா?அல்லது ஸ்குரூ கேஜா?
சிலருக்கு ஆபாசம் என்று படுவது, சிலருக்கு குடும்பப் பாங்காகத் தெரிகிறது என்று சொல்கிறார்கள்.
இந்திய பெண்கள் எல்லாம் கவர்ச்சியானவர்கள் தான். அப்படிப் பார்த்தால், யாரும் கோவிலுக்குப் போக இயலாது.
ஆபாசமாக உடை அணித்து கொண்டு கோவிலுக்கு வருபவர்களைத் தடுத்து நிறுத்துவது என்றால், ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு காவல் நிலையம் அமைக்க வேண்டும். சாதாரண கோவில் நிர்வாகி சொன்னால் அனைவருக்கும் கோபம் தான் வரும். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எந்தத் தடையும் இல்லாமல் எல்லோரும் கோவிலுக்கு வந்து போவதைப் பார்க்கிறோம்.
நம் தமிழகத்தில் யாரும் ஆபாசமாக உடை அணிந்து கொண்டு கோவிலுக்கு வந்து நான் இதுவரைப் பார்த்ததில்லை.



ஜோசப், உங்க பின்னூட்டப் பெட்டி மக்கர் பண்ணுது பிளாக்கர் கணக்கில் போட வந்தா, முடியலை...! முடியலை...!

 
On Wed Nov 05, 09:23:00 PM GMT+8 , கிஷோர் said...

//சேலையை விட சுடிதார் மிகவும் அருமையானது//

ஸ்லீவ்லெஸ்?

 
On Wed Nov 05, 09:26:00 PM GMT+8 , கிஷோர் said...

//இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான்//

எத்தனை வெடிகுண்டுகள் வெடித்தாலும்
மனம் செல்வது போன உயிர்களுக்கல்ல‌
எத்தனை உயிர் என்ற எண்ணிக்கையை தேடுவதற்குத்தான்

 
On Wed Nov 05, 09:37:00 PM GMT+8 , ராமலக்ஷ்மி said...

தென்றல் பதிவின் மூலம் வந்தேன். உங்கள் கருத்துக்கள் யாவற்றுடனும் உடன் படுகிறேன். என் கண் முன்னே ஒரு பெண், சேலை டூவீலர் சக்கரத்தில் சிக்கியதால் குழந்தையுடன் கீழே விழுந்ததைப் பார்த்திருக்கிறேன்.

//மக்கள் மேல அக்கறையோட இந்த சட்டத்த கட்டாயம் கடைபிடிக்கச் செய்யணும் என வேண்டுகிறேன்.//

ரொம்பச் சரி. அரசாங்கம் அக்கறையுடன் கொண்டு வரும் எந்தச் சட்டத்தையும் எதிர்ப்பதற்கு முன் அதில் உள்ள நன்மை எத்தனை பர்சென்ட் என்பதையே முதலில் பார்க்க வேண்டும். சவுகரியக் குறைச்சல்கள் பின்னுக்குத் தள்ளப் பட வேண்டும் என நானும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

 
On Wed Nov 05, 09:43:00 PM GMT+8 , ராமலக்ஷ்மி said...

கோவிலில் சுடிதார் பற்றிய என் கருத்தை தென்றல் பதிவில் பார்த்துக் கொள்ளுங்களேன்:)!

 
On Thu Nov 06, 01:26:00 AM GMT+8 , பரிசல்காரன் said...

நா.உ.க.க.பி.என்.வ.மொ!

 
On Thu Nov 06, 10:35:00 AM GMT+8 , துளசி கோபால் said...

தமிழ் நாட்டுக் கோயில்களுக்குச் சுரிதார் போட்டுக்கிட்டுப் போக அனுமதி உண்டா இல்லையா அதைச் சொல்லுங்கப்பா.

இங்கே எங்கூர் கோயிலில் 'சப் ச்சல்தா ஹை'

 
On Thu Nov 06, 07:18:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//Blogger துளசி கோபால் said...

தமிழ் நாட்டுக் கோயில்களுக்குச் சுரிதார் போட்டுக்கிட்டுப் போக அனுமதி உண்டா இல்லையா அதைச் சொல்லுங்கப்பா.//
வாங்க துளசி அம்மா,
தமிழ்நாட்டுல அந்த உடை கட்டுபாடுகள் எல்லாம் இல்ல. சில கோயில்களில் நான் ஜீன்ஸ் அணிந்து வரும் பெண்களைக் கூடப் பார்த்திருக்கேன்.

இந்த விசயத்துல தமிழர்கள் உடைகளையெல்லாம் பார்குறதில்ல.

 
On Thu Nov 06, 07:20:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

// கோவிலில் சுடிதார் பற்றிய என் கருத்தை தென்றல் பதிவில் பார்த்துக் கொள்ளுங்களேன்:)!

Wed Nov 05, 09:43:00 PM SGT
Delete
Blogger பரிசல்காரன் said...

நா.உ.க.க.பி.என்.வ.மொ!//

நன்றி பரிசல் அண்ணா.

நா.உ.க.க.பி.என்.வ.மொ = நான் உங்கள் கருத்தை கன்னா பின்னா என வழி மொழிகிறேன் ( இது புரியாதவங்களுக்காக)

 
On Thu Nov 06, 07:37:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@ராமலஷ்மி அக்கா,
என் கருத்துகளோடு ஒத்த கருத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

 
On Thu Nov 06, 07:40:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@கிஷோர்,
வாங்க கிஷோர்.
//ஸ்லீவ்லெஸ்? //
சுடிதார் ஒரு நல்ல உடை அதுல ஸ்லீவ்லெஸ் வைச்சுக்கிறத ஒரு குறையா பார்த்தா, சேலைய நல்ல உடைன்னே சொல்ல முடியாது. அதையும்தான் எத்தனையோ விதத்துல மோசமா கட்றாங்களே?

//எத்தனை வெடிகுண்டுகள் வெடித்தாலும்
மனம் செல்வது போன உயிர்களுக்கல்ல‌
எத்தனை உயிர் என்ற எண்ணிக்கையை தேடுவதற்குத்தான்//

சரியா சொன்னீங்க. வர வர மனிதர்களுக்கு மனம் மறத்துப் போயிக்கிட்டே இருக்கு.

 
On Thu Nov 06, 09:25:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க ஜோதிபாரதி அண்ணா,
கவர்சிக்கு அளவுகோல் வைக்க நாம திரைப்படத் தணிக்கைத் துறையா? சேலையைவிட சுடிதார் கவர்சிக்கு இடமில்லாத உடை என்பது உண்மை. அதை ஏன் கோயில்களில் அனுமதிக்க மறுக்க வேண்டும் என்பதுதான் என் கேள்வி.

கவர்சி என்பது காண்பவர்களின் கண்களில் தான் உள்ளது.
உடைகளில் கவர்சி என்பதை சொல்வதைவிட ஆபாசம் என்ற சொல்தான் சரியான வார்த்தையாக இருக்கும்.

பின்னூட்டப் பெட்டியில் இருக்கும் குறைபாடுகளை நீக்க முயற்சிக்கிறேன். என் கவனத்திற்கு அதை கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி.

 
On Thu Nov 06, 09:41:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//Anonymous said...

இந்தியாவுல் ரொம்ப மலிவானது மனித உயிர்கள் தான்.

Right said, Fred!//

வாங்க அணாணி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 
On Thu Nov 06, 09:48:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//Blogger 'டொன்' லீ said...

பேசாமல் எல்லாரும் கோயிலை, மோட்டார் சைக்கிளைப் புறக்கணிப்போம்....//

தம்பி, அப்டியெல்லாம் சொல்லக் கூடாது. மோட்டார் சைக்கிளும் முக்கியமானது, கோயிலும் முக்கியமானது.
ரெண்டையும் நாம மதிக்கணும்.

 
On Thu Nov 06, 09:56:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க மகேஷ்,
பிற மதத்தினரை அனுமதிக்க மறுப்பது என்பது மிகவும் வருத்தம் தரக்கூடிய விசயம் தான். ஆனால் என்ன செய்வது. கிறிஸ்தவ மதத்தில் எல்லா மதத்தவரும் ஆலயத்திற்கு வரலாம், வழிபாடுகளில் பங்குபெறலாம். ஆனால் திவ்ய நற்கருணை எனப்படும் அப்பம் மட்டும் வாங்கக் கூடாது. இது பிற மதத்தவர்களுக்கு மட்டும் இருக்கும் கட்டுபாடு அல்ல. கிறிஸ்தவர்களிலேயே புதுநன்மை என்ற ஒரு அருட்சாதனத்தை பெறாதவர்களும், பாவமன்னிப்பு பெற்று தங்களை தகுதிபடுத்திக்கொள்ளாதவர்களும் இதைப் பெறக் கூடாது என்பது விதி. இதைத் தவிர வேறு எந்தப் பாகுபாடுகளையும் கிறிஸ்தவ மதம் பார்பதில்லை.

எத்தனையோப் இந்து சாமி பாட்டுகளை பாடிய ஜேசுதாஸால் குருவாயூர் கோயிலுக்குள் இதுவரை செல்ல இயலாதது வருத்தத்திற்குறியது. மக்கள் ஒருங்கிணைந்து இதை வலியுறுத்த வேண்டும்.

 
On Sun Nov 09, 01:24:00 PM GMT+8 , Known Stranger said...

This rule should not come into tamil nadu. If govt brings this rule it means govt is prohibiting the dravidar - parambariya saree. how can tamil arvalargal like the latest puesudo tamil patrons accept this . I am tamil cultural supporter and cant accept gals to wear chudithar which is not tamil dress. kudavay kudathu.

tamil udupu than uduthanum. ellati intha manthargal ellorum tamil nesipavar alla.... sellai katum penuku chudithar etharku puratchi tamizhan padirukaru.

Yentha oru vetru kalachara udaiyayum tamil pengal podavay kudathu .. athayum meeri udithinangana nai mayniku sakadila urina pani mathiri nama ellorum arikai vitay / blog potu nama pathivaiyum karuthaiyum anitharama sollanum appo than nama tamil arvalargal ellati tamil manoda kalacharatha mathikatha traitors nam.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க