Author: ஜோசப் பால்ராஜ்
•5:05 PM
தேசியம் இப்போது மிகவும் பேசப்படும் பொருளாகிவிட்டது. தேசியம் என்ற பெயரில் கும்மியடிப்பவர்களும் அதிகமாகிவிட்டார்கள். இந்தப் பதிவி தொடக்கத்திலேயே டிஸ்கிக்களை சொல்லிவிடுவது, படிப்பவர்களுக்கு என் கருத்தை புரிந்து கொள்ள உதவும் என நம்புகிறேன்.

டிஸ்கி: நான் தனித் தமிழ்நாட்டை ஆதரிப்பவன் இல்லை. ஆனால் தேசியம் தேசியம் என்று கும்மியடிக்கும் போலிகளை வெறுப்பவன்.

எப்போது எந்த சூழ்நிலையில் தனித்தமிழ்நாடு கோரிக்கைகள் எழுகின்றன என்றுப்பாருங்கள். உங்க வீட்ல புகுந்து உங்க அம்மாவ, அக்காவ, தங்கச்சிய பக்கத்து வீட்டுக்காரன் அடிக்கும் சூழலில் என்ன செய்வீர்கள்? நீங்கள் சட்டத்தின் படிதான் நடவடிக்கை எடுப்பேன் என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து, அவர்கள் வரும் வரை உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அடிவாங்கட்டும் என்று காத்திருப்பீர்களா? சொல்லுங்கள் தேசிய வாதிகளே, அப்படி நீங்கள் பொங்கியெழுந்து அவனை திருப்பி அடித்தால் உங்களை ரவுடி என்று யாரும் சொல்ல முடியுமா? ரவுடி என்பவன் யார்? தினமும் அடாவடி செய்துகொண்டு உருப்படியற்ற வேலையை செய்து பிறர் நிம்மதியை தொடர்ந்து குலைக்கும் வண்ணம் செய்பவன் தானே ரவுடி?

ஆக இந்த தேசியவாதிகள் ரவுடிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பலரை கொஞ்சம் கூட தட்டிக்கேட்டதில்லை. ஆனால் தன் இனம் அழியும் நிலையில் அதை தடுக்க குரல் கொடுப்பவர்களின் குரல்வளையை நெறிக்க கூட்டமாய் வந்து கும்மியடிப்பார்கள். தேசிய கும்மிகளே உங்களுக்கு தேசியத்தின் உண்மையாண அர்த்தம் தெரியுமா?

எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை?

ஒகேனக்கல் தமிழகத்தின் எல்லையில் தானே இருக்கு? ஓட்டுப் பொறுக்கும் அரசியலுக்காக முதலில் அந்தப் பிரச்சனையை கையில் எடுத்து ஒகேனக்கலுக்கும் சென்றி பிரச்சனையை ஆரம்பித்தது யார்? தேசியம் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பா தானே? அப்போது எங்க போனீர்கள் மாண்புமிகு தேசியவாதிகளே?

அதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும் இந்திய தேசியம் கசக்குய்து
இந்திய பாஸ்போர்ட் தூக்கி போட வேண்டியது தானே?


இது காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேசியம் பேசும் எனது அன்பு நண்பர் என்னிடம் கூறியது. நாங்க எல்லாம் இந்திய குடியுரிமையை தூக்கி எறியனும்னு சொல்றாரு. ஏன் சொல்ல மாட்டீங்க? நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல. தேசிய கும்மிய நல்லா சத்தமா அடிக்கலாம். போலி தேசியம் பேசாமா உண்மையிலயே தேசியம் பேசுனா கடவுச்சீட்ட கடாசுடான்னு சொல்வீங்களா தோழா? நீங்க பேசுறதும், நீங்க செய்யிறதும் தான் தேசியம்னு சொன்னா அந்த தேசியம் எங்களுக்கு வேண்டாம். அதற்காக எங்கள் கடவுச்சீட்டை தூக்கி எறியச் சொல்லும் உரிமை உங்களுக்கு மட்டும் அல்ல எவனுக்கும் கிடையாது. இந்தியனாய் பிறந்த நான் இந்தியனாகத்தான் சாவேன். அதை மாற்ற எவனுக்கும் உரிமையில்லை.

கர்நாடகாவில் இந்தியாவின் பழம்பெரும் தேசிய கட்சியான காங்கிரஸ் கூட அதேத் தவறைத்தானே செய்கிறது? எங்கள் பாஸ்போர்டை மாற்றிக்கொள்ளச் சொல்லும் அன்பு நண்பரே கர்நாடகா பிரச்சனையில நீங்க தேசியம் பேசலையே ஏன்? முல்லைப் பெரியாறு அணை விவகாரத்துல தமிழகத்துக் சாதகமா உச்ச நீதிமன்றம் தீர்பளிச்ச பின்னாடியும், அப்போ கேரளாவுல ஆட்சி நடத்துன காங்கிரஸ் அரசு முதல்வர் உம்மன் சாண்டி ஒரு சண்டி சட்டமியற்றி அதை தடுத்தப்ப உங்க தேசியம் எங்க போச்சு நண்பா? ஒரு வேளை காங்கிரஸ் எது செஞ்சாலும் சரி என்பது தான் உங்க தேசியமா?

ஏன் இப்பவும் நீங்க ஆட்சி செய்யிற மகாராஷ்டிராவுல ராஜ் தாக்கரேன்னு ஒருத்தர் வெறியாட்டம் ஆடுறாரே? அவர கைது செய்றீங்க, உடனே வெளில விடுறீங்க, ஏன் அவர தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல புடிச்சு உள்ள போடக்கூடாது? எங்கய போச்சு உங்க தேசியம்? சும்மா பேசுன கண்ணப்பண தூக்குல போடணும்னு கூவுறீங்களே, போடுங்க வேணாம்ணு சொல்லல. ஆனா அதுக்கு முன்னாடி கீழ்கண்டவர்களுக்கு எல்லாம் தண்டணை கொடுத்துட்டு கடைசியா கண்ணப்பண் கிட்ட வாங்க.

இந்திரா சுடப்பட்ட போது சுட்டவர்கள் சீக்கியர்கள் என்பதற்காக அப்பாவி சீக்கியர்கள் பலரை கொன்று குவித்து வெறியாட்டம் போட்ட உங்கள் காங்கிரஸ் தலைவர்களை முதலில் தூக்கிலிடுங்கள்

ஓட்டுக்காக, தன் கட்சி பிரபலமாக வேண்டும் என்பதற்காக பாபர் மசூதியை இடிக்க காரணமாயிருந்த அத்வானி கோஷ்டியையும், அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அப்போதைய காங்கிரஸ் அரசையும் தூக்கில் இடவேண்டாமா? அது வரை காஷ்மீரில் மட்டுமே இருந்த தீவிரவாதத்தை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டுவந்தது யாரு? அத்வானியின் செயலும் அதை தடுக்காத நரசிம்மராவின் ஆட்சியும் தானே? தானா செத்த நரசிம்ம ராவா விடுங்க, எல்லாத் தப்பயும் செஞ்சுட்டு இன்னமும் சுத்திக்கிட்டும் கத்திக்கிட்டும் இருக்கவங்கள என்ன செய்யப் போறீங்க மாண்புமிகு தேசிய கும்மிகளே?

நாட்டின் இறையாண்மையை மதிக்காமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்புகளைக்கூட ஏற்றுக் கொள்ள மறுக்கும் கர்நாடக, கேரள அரசுகளை என்ன சொய்யப் போகின்றீர்கள் தேசிய கும்மிகளே? தூக்கில் இட வேண்டாமா?

பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்களை தாக்கிய பால் தாக்கரேயையும், இப்போது வட இந்தியர்களை தாக்கிக் கொண்டிருக்கும் ராஜ் தாக்கரேயையும் தூக்கில் இட வேண்டாம், சிறையிலாவது அடைக்க இயலுமா உங்களால்?

மேலே சொன்ன எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு கடைசியாக தன் இனம் ஈழத்தில் அழிகின்றதே என்ற வேதனையில் இப்படி இயலா நிலையில் இருக்கின்றோமே என்ற உணர்சியில் அப்படி பேசிய கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.

யூதர்கள் சட்டப்படி விபச்சாரம் செய்பவர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டும். யேசு கிறிஸ்துவை வம்பிழுக்க ஒரு விபச்சாரியை பிடித்து அவரிடம் கொண்டுவந்து இவளை என்ன செய்யலாம் என்று கேட்ட யூதர்களுக்கு அவர் சொன்னது இது தான், “ உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”
அதைத் தான் தேசியம் பேசும் போலி கும்மிகளுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்களுள் எவனும் தேசியத்திற்கு எதிராக எந்த குற்றமும் செய்யாதவன், ஒருங்கிணைந்த இந்தியாவின் இறையாண்மையை கட்டிக்காத்தவன் வந்து கண்ணப்பணை தூக்கிலிடுங்கள்.
Udanz
This entry was posted on 5:05 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

25 comments:

On Sun Nov 09, 05:00:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

சூப்பர்,

தேசியவியாதிகள் எல்லாம் குர்தாவைக் காணும் சட்டையைக் காணூம் என்றூ ஓடிவிடுவார்கள் :)

 
On Sun Nov 09, 05:21:00 PM GMT+8 , Anonymous said...

நச்!

 
On Sun Nov 09, 07:02:00 PM GMT+8 , Anonymous said...

Pirichchu menchchutteenga !
Keep it up!

Kondaikal Vanthu Pathil Kodukkumaa?

-nam

 
On Sun Nov 09, 07:16:00 PM GMT+8 , ராஜ நடராஜன் said...

//நாங்களும் போயிட்டா அப்றம் உங்கள கேள்வி கேட்க ஆளே இருக்காதுல்ல//

இந்த வசனம் நல்லாயிருக்கே!இடத்துக்குத் தகுந்தமாதிரி இணைத்துக் கொள்ளலாம் போல் தெரிகிறது.கண்ணு முழிச்சி கேட்டுகிட்டு இருக்கும்போதே கருத்துக் களவாடும் சிலர் நினைவுக்கு வருகிறார்கள்.

 
On Sun Nov 09, 07:49:00 PM GMT+8 , VIKNESHWARAN said...

//உங்களில் பாவமில்லாதவன் அவள் மேல் முதல் கல்லை எறியட்டும்”//

ஆரம்பத்தில் நீங்கள் கூறியுள்ளது எனக்கு புரிந்தது... கருத்து கிடையாது... ஆனால் மேல் காணும் கடைசி வரி டச்...

 
On Sun Nov 09, 10:10:00 PM GMT+8 , நசரேயன் said...

நல்ல கேள்வி
போட்டு தாக்கிடீங்க

 
On Sun Nov 09, 11:19:00 PM GMT+8 , பொடியன்-|-SanJai said...

மாப்ள, பதிவை முழுசா படிக்க நான் விரும்பலை.. அரைச்ச மாவைத் தான் நீயும் அரைச்சிருப்ப.. கைவலிக்க தேசவிரோதிகளுக்கு போட்ட பின்னூட்டத்தை தான் உனக்கும் போடப் போறேன். புதுசா ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்க ஆசை..

தனித்தமிழ்நாடும் வேண்டாம்.. இந்திய தேசியமும் பிடிக்கலை.. இப்படி ரஜினியை விட அதிகமா குழப்பினா எப்படி?

தனித் தமிழ்நாடு வேண்டாம்.. சரி.. இந்திய தேசியம் தான் பிடிக்கலையே. அதை எதிர்க்கிறீர்கள் தானே.. அதுவும் சரி.. எதாவது ஒரு விஷயத்தை எதிர்த்தா அதற்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்குமல்லவா? அது என்ன?
இந்திய தேசியத்துக்கு மாற்றா என்ன சொல்ல வறீங்க?

( உங்களால இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லாத கண்டதுங்க எல்லாம் வந்து என் நாட்டை கேவலப் படுத்துதுங்க. அதுக்கு ஜால்ரா போடுதுங்க. இந்த மாதிரி கண்டதுங்க எல்லாம் நம்ம நாட்டை அசிங்கப் படுத்த இடம் குடுக்கும் உங்களை எல்லாம் தாக்கரேக்கள் எடியூரப்பாக்கள் சங்க பரிவாரங்கள் கிட்ட புடிச்சி குடுக்கனும்யா )

(இந்திய தேசியத்தை ஆதரிப்பவன் தேசியவியாதியா தெரியும் போது அதை எதிர்ப்பவன் தேசவிரோதியாய் தெரிவதில் வியப்பில்லை.. ஆகவே அந்த வார்த்தைக்கு மல்லுக்கு நிக்காம கேட்ட கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.. வழக்கம் போல அரைச்ச மாவையே அரைக்காத.)

( ஒருத்தன் தூக்கிலுடனும்னு ஒரு வார்த்தையை சொன்னாலும் சொன்னான்.. உங்க அழிச்சாட்டியம் தாங்கலைடா சாமி.. எதோ அரசியல் தலைவனோ அரசாங்க அமைப்போ சொன்ன மாதிரி இப்படி கத்தறிங்க.. நல்லா குடுக்கிறானுங்கடா முகம் தெரியாதவங்களுக்கு எல்லாம் வெளம்பரம்.. )

 
On Sun Nov 09, 11:22:00 PM GMT+8 , பொடியன்-|-SanJai said...

//Anonymous said...

Pirichchu menchchutteenga !
Keep it up!

Kondaikal Vanthu Pathil Kodukkumaa?

-nam//

வந்துடிச்சா இந்த முகமூடி கும்பல்கள். தைரியமா வந்து கமெண்ட் கூட போட யோக்கியதை இல்லாத இந்த மூதேவிகள் எல்லாம் கொண்டை மண்டைனு பேசுதுங்க.. இதுங்க எல்லாம் எத்தனை கால் ஜந்துக்கள்னே தெரியாம வருதுங்களே..

 
On Sun Nov 09, 11:38:00 PM GMT+8 , ஜோதிபாரதி said...

//எது இந்திய ஒருமைப்பாடு? காவிரியில் நமக்கிருக்கும் உரிமையை நமக்குத் தராமல் வெள்ளப் பெருக்கின் போது வடிகாலாக மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் கர்நாடகவிடம் பேசவேண்டியது தானே உங்கள் தேசியத்தை?//

சூப்பரப்பு!

 
On Sun Nov 09, 11:38:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க சஞ்சய் மாப்ள,
என்னா எழுதிருக்கேன்னே படிக்காம சொன்னதையேத்தான் சொல்லுவேன்னு கடிவாளம் கட்டுனக் குதிரையாட்டம் ஓடுற உங்கள என்னய்யா செய்யிறது?

தேசியம் வேணாம்ணு எங்க சொல்லியிருக்கோம்? நீங்க சொல்ற போலித் தேசியம் தானே வேணாம்ணு சொன்னேன். அதக்கூட புரிஞ்சுக்காம கிளம்பிட்டீங்களே உங்கள என்ன செய்யிறது? இப்டிதான்யா எதையுமே முழுசா புரிஞ்சுக்காம ஒன்னுகிடக்க ஒன்னு சொல்றதும், செய்யிறதும் சும்மா இருக்க சங்க ஊதிக் கெடுத்துட்டு அங்க குத்துது, இங்க குடையுதுன்னு அலையறது இந்த போலி தேசிய வியாதிகளுக்கு ஒன்னும் புதுசு இல்லையே.
தாக்கரேக்களுக்கும், சங் பரிவாரங்களுக்கும், எடியூரப்பாக்களுக்கும் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல உம்மன் சாண்டிகளும், எஸ்.எம்.கிருஷ்ணாக்களும், ஜெகதீஷ் டைலர்களும், கே.சி.பகத்களும்.
எல்லாரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான். எல்லோரும் போலி தேசியவாதிகள் தான்.

//தனித் தமிழ்நாடு வேண்டாம்.. சரி.. இந்திய தேசியம் தான் பிடிக்கலையே. அதை எதிர்க்கிறீர்கள் தானே.. அதுவும் சரி.. எதாவது ஒரு விஷயத்தை எதிர்த்தா அதற்கு ஒரு மாற்றுக் கருத்து இருக்குமல்லவா? அது என்ன? //

நல்ல கேள்வி, நாங்கள் கேட்பது உண்மையாண தேசியம், உண்மையாண ஒருமைப்பாடு, உண்மையாண இறையாண்மை. உண்மையென்றால் என்ன என்றே தெரியாதவர்களிடம் இத்தனை உண்மையாணவற்றை கேட்டால் பாவம் நீங்களும் எங்க போவீங்க. சரி நீங்க சொல்ற தேசியம், இறையாண்மை, ஒருமைப்பாடுக்கு எல்லாம் முதல்ல அர்த்தம் சொல்லு மாப்ள. நீ சொன்னதுக்கு அப்றம் நம்ம விவாதத்த தொடருவோம்.

 
On Sun Nov 09, 11:48:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//வந்துடிச்சா இந்த முகமூடி கும்பல்கள். தைரியமா வந்து கமெண்ட் கூட போட யோக்கியதை இல்லாத இந்த மூதேவிகள் எல்லாம் கொண்டை மண்டைனு பேசுதுங்க.. இதுங்க எல்லாம் எத்தனை கால் ஜந்துக்கள்னே தெரியாம வருதுங்களே..//

இதே முகமூடிக் கும்பல்கள் தானே உங்க போலி தேசியக் கும்மியிலயும் வந்து கும்மியடிச்சானுங்க? அப்ப எல்லாம் மாண்புமிகு கலச்சாரக் காவலர் சஞ்சய் எங்க போயிருந்தாரு? அது எப்டி மாப்ள வெட்கமே இல்லாம ஒரு இடத்துக்கு ஒரு மாதிரி பேசுறீங்க? அங்க எல்லாம் இந்த ஜந்துக்களப் பத்தி ஒருத்தனாச்சும் பேசியிருந்தீங்கன்னா நான் அந்த பெயரில்லாத பின்னூட்டத்தையே தூக்கியிருப்பேன். ஆனா நீ அதச் செய்யாம இங்க வந்து கூவுவ, இப்டி ஒரு பதில போடணும்ணுதான் மாப்ள நான் விட்டு வைச்சேன் அத. இப்டித்தான்யா உங்க தேசியமும் ஒரு மாநிலத்துக்கு ஒரு மாதிரி அர்த்தம் வைச்சுருக்கீங்க. அத முத நிறுத்துங்க

 
On Mon Nov 10, 12:26:00 AM GMT+8 , மோகன் கந்தசாமி said...

////அதென்னா வெளிநாட்ல இருக்கிறவனுங்களுக்கு மட்டும் இந்திய தேசியம் கசக்குய்து
இந்திய பாஸ்போர்ட் தூக்கி போட வேண்டியது தானே? ////

கடவு சீட்டு என்பது ஒரு கட்டுப்பாடு. அது சலுகை அல்ல. கடவு சீட்டை தூக்கிப் போட வேண்டுமானால் அதை இந்திய அரசு தான் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் இந்திய அரசுக்கு வேறெந்த கட்டுப்பாடும் விதிக்க உரிமை இல்லை. எந்த கட்டுப்பாடும் விதிக்க முடியாது என்றால் அதற்கு பெயர் சுதந்திரம் அளித்து தனிநாடாக அங்கீகரிப்பதாகும். ஆனால் அது தேசிய கும்மி கோஷ்டிகளுக்கு உவப்பானதல்ல. (நமக்கும் உவப்பானதல்ல என்பது வேறு விஷயம்). இந்நிலையில், இந்திய பிரஜையாயிருப்பதனால் கொண்டைகள் எனக்கு பாபோர்ட் என்னும் சலுகை தருவதாகவும் அதை அவர்களுடைய(?) இந்திய அரசு உடனே பறிக்க வேண்டும் எனவும் கூப்பாடு போடுவது அறிவுகெட்டத்தனமானது மட்டுமல்ல குண்டி கொழுப்பானதும் கூட. இந்திய யூனியனுடன் கருத்து வேறுபாடுகள் மறைந்து தமிழ் தேசிய இன மக்கள் இணைந்து வாழ்வது என முடிவு செய்ததன் காரணமே எந்நிலையிலும் எந்த தேசிய இனமும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட மாட்டாது என 1950 -இல் கண்ஷ்டிடூஷனும், தமிழினம் மொழி சுதந்தரத்தோடு வாழ தடையில்லை என அறுபதுகளில் தேசிய தலைவர்களும் உறுதி அளித்ததுதான். ஆனால் இன்று தண்ணீர் மற்றும் ஏனைய பல விஷயங்களில் அந்த உறுதி மொழிக்கு எதிராக (கண்ஷ்டிடூஷனுக்கு எதிராக) நடந்து கொள்வது கிரிமினல் குற்றம். பாஸ்போட் பற்றி பேசுவது காமெடி.

நான் தெரியாமல்தான் கேட்கிறேன்! இந்தியா யாருடையது? ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரம் பற்றி போதிய அறிவில்லாத முல்லா பேர்வழிகளுடையதா அல்லது கொண்டை தேசியம் பேசும் உண்டக்கட்டி தாலிபான்களுடையதா? இந்திய நாடும் அதன் வளங்களும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட எல்லாருடையதுமாகும். அது விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்பதும் அதன் சலுகைகளை அனுபவிப்பதும் லீகல் இந்தியனின் கடமையும் உரிமையுமாகும். கருத்துரிமை பற்றி சட்டம் என்ன சொல்கிறது என தெரியாமல் (அல்லது தெரிந்துகொண்டு) விதண்டாவாதம் செய்பவர்களின் பாஸ்போர்ட் என்னும் கட்டுப்பாட்டை நீக்கி சலுகைகளை பறித்து குடியுரிமையை ரத்து செய்யலாம். ஏனென்றால் அது ஒரு கிரிமினல் குற்றமாகும். அதே சமயத்தில் போலி இந்திய தேசியத்தை கேள்வி கேட்பது உரிமையாகும்.

திரு பால்ராஜ்,

பாஸ்போர்ட் பற்றி பேசும் உங்கள் நண்பர் பதிவு எழுதுகிறாரா?

 
On Mon Nov 10, 05:08:00 AM GMT+8 , Anonymous said...

அய்யா, தாங்கள் சிங்கப்பூர் குடிமகனா?
அல்லது இந்தியக் குடிமகனா?

 
On Mon Nov 10, 05:33:00 AM GMT+8 , Anonymous said...

well said
sangamithra

 
On Mon Nov 10, 12:57:00 PM GMT+8 , ஜோ / Joe said...

இதை சுருக்கமா சொல்லணும்னா..

நாங்கள் தமிழர்கள் .இந்திய நாட்டில் இந்திய இறையாண்மையில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு .ஆனால் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து விட்டு இந்திய இறையாண்மையை கட்டி அழவேண்டிய அவசியம் எமக்கில்லை .

மக்களுக்காகத் தான் நாடே தவிர நாட்டுக்காக மக்களில்லை.

 
On Mon Nov 10, 01:52:00 PM GMT+8 , Robin said...

கொஞ்சம் கொஞ்சமாக தரம் தாழ்ந்துவரும் காங்கிரஸ் தற்போது பாசிச ஜனதா கட்சியின் இடத்தை பிடிக்க போட்டி போடுகிறது. மும்பை கலவரத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்காமல் விட்டது, ராஜ் தாக்கரே போன்ற ரவுடிகளை வளர்த்து விடுவது, ஒரிசாவில் காவிகளால் நடத்தப்பட்ட படுகொலைகளை வெறுமனே கண்டித்துவிட்டு அஸ்ஸாமில் குண்டு வெடித்தவுடன் மன்மோகன் சோனியா போன்றவர்கள் மறுநாளே ஓடிச்சென்று பார்வையிட்டது போன்றவை காங்கிரஸ் விரைவில் பாசிச ஜனதா கட்சி போல மாறிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
On Mon Nov 10, 02:10:00 PM GMT+8 , ஆட்காட்டி said...

சுரணை கெட்டதுகள்.

 
On Mon Nov 10, 02:13:00 PM GMT+8 , சுரேஷ் ஜீவானந்தம் said...

// நாங்கள் தமிழர்கள் .இந்திய நாட்டில் இந்திய இறையாண்மையில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு .ஆனால் தமிழன் என்ற அடையாளத்தை இழந்து விட்டு இந்திய இறையாண்மையை கட்டி அழவேண்டிய அவசியம் எமக்கில்லை .

மக்களுக்காகத் தான் நாடே தவிர நாட்டுக்காக மக்களில்லை.//
கலக்கல்.

 
On Mon Nov 10, 03:44:00 PM GMT+8 , தாமிரா said...

நல்ல சிந்தனை. தரமான பதிவு. கருத்துக்களை நான் ஒப்புக்கொள்கிறேன்.

 
On Mon Nov 10, 03:51:00 PM GMT+8 , லக்கிலுக் said...

மாரனேரி!

உங்களையும் மாற்றிவிட்டதாக கோவி.கண்ணன் அய்யங்கார்வாளை ஃபுல் பாயிலுகள் போட்டு தாக்கப் போகிறார்கள் :-(

 
On Mon Nov 10, 04:26:00 PM GMT+8 , Indian said...

//தனித்தமிழ்நாடும் வேண்டாம்.. இந்திய தேசியமும் பிடிக்கலை.. இப்படி ரஜினியை விட அதிகமா குழப்பினா எப்படி?//

இதுதான் பொருள்:

நாங்கள் இந்திய யூனியனை விட்டுப் பிரிய நினைக்கவில்லை. ஆனால், மற்ற மாநிலங்களிடமிருந்து இயற்கை வளங்களை எமது மாநிலத்துக்கு பகிர்ந்து கொள்வதில் இப்பொழுது காட்டப்படும் பாரபட்சம் தொடருமானால், அதை மைய அரசு கண்டும் காணாமல் இருக்குமானால், நாங்கள் இந்தியாவிலிருந்து பிரிய வேண்டும் என்ற எண்ணம் வலுப்படலாம், எதிர்காலத்தில் பிரிந்தும் போகலாம்.

எங்களுக்கு பிரிய விருப்பம் இல்ல. சண்டைப் போட விருப்பமில்லை. ஆனா, அதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு.
உஸ்... அப்பாடா... பிராஸோ போட்டு விளக்கறத்துக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுது.

 
On Mon Nov 10, 05:37:00 PM GMT+8 , Anonymous said...

( ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்யுங்கள்.)


Kondaikal Vanthu Pathil Kodukkumaa?

:((

 
On Tue Nov 11, 09:21:00 PM GMT+8 , வால்பையன் said...

நல்ல கேள்விகள்!

 
On Tue Nov 25, 10:30:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ரொம்ப நாளாச்சு...ஏதாவது எழுதுண்ணே :)

 
On Sat Nov 29, 02:22:00 AM GMT+8 , நாடோடி இலக்கியன் said...

//தஞ்சை மாவட்டத்தில் நதிகளால் சூழப்பட்ட ஒரு கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் இருக்கும் ஒரு தமிழனின் குரல்...
//
எந்த ஊருங்க?

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க