•9:29 PM
நாடளுமன்றத் தேர்தல் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவது மட்டும் தான் வாக்காளர்களின் கையில் இருக்கும் ஒரே ஒரு ஆயுதம். ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் நாளன்று நமது ஓட்டை பதிவு செய்கிறோம்?
மறக்காமல் ஓட்டுப்போடுங்கள் என்று விளம்பரம் செய்தாலும் கூட தேர்தல் அன்று கிடைக்கும் விடுமுறையை வீட்டில் இருந்து அனுபவிக்கத்தான் மனமிருக்குமே தவிர ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப் போட மனம் வராது. இந்தியாவில் வெளிமாநிலத்தில் வேலை பார்ப்பவர்கள், வெளியூரில் வேலைப் பார்ப்பவர்கள் கூட தங்களுக்கு வாக்குரிமை இருக்கும் ஊரில் தேர்தல் நடைபெறும் நாளில் அங்கு சென்று ஓட்டளிக்க எத்தனைபேருக்கு மனம் வரும்?
துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் வெறும் இரண்டே நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்து செல்ல இருக்கிறார் என்றால் அதை நம்ப சிறிது சிரமமாகக் கூட இருக்கலாம். ஆனால் அபி அப்பா அதை செய்ய இருக்கிறார்.
அவர் எந்த கட்சிக்கு ஓட்டளித்தாலும், ஓட்டளிக்க வேண்டும், தனது ஜனநாயகக் கடமையை செய்ய வேண்டும் என்பதற்காக விமானக் கட்டணம் மட்டும் 13 ஆயிரம் இந்திய ரூபாய்கள் செலவு செய்து வர இருக்கிறார்.
ஓட்டுரிமையை நிலைநாட்ட என்றே தாய்நாட்டிற்கு வருகை தர இருக்கும் அபி அப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஊரில் இருக்கும் நண்பர்களே மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். உங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். துபாயில் இருந்து வந்து ஓட்டளிக்க இருக்கும் அபி அப்பாவின் செயலை பார்த்து குறைந்தது நான்கு பேராவது தங்கள் கடமையைச் செய்தால் அது அவருக்கு நாம் சொல்லும் சிறந்த வாழ்த்தாக இருக்கும்.
எல்லாம் சரி நீ எப்டின்னு என்னையப் பார்த்து கட்டாயம் என் மாப்பி சஞ்சய் கேட்பாரு. எனக்கு இன்னும் ஓட்டுப் போடுற வயசு வரல மாப்ளன்னு சொன்னா நீ நம்ப மாட்ட. சரி உண்மையச் சொல்லிடுறேன், 2004 தேர்தல்ல இருந்தே என் பெயர் வாக்காளர் பட்டியல்ல இல்ல. 2004 தேர்தலப்போ சென்னையில இருந்து ஓட்டுப் போடுறதுக்காக எங்க ஊருக்குப் போயிட்டு ஓட்டுப் போட முடியாம வந்தேன், அதுக்கு அப்றம் நான் இங்க வந்துட்டதுனால என் பெயர் சேர்க்கப்படாமலே போயிருச்சு. அதுனால நான் வந்தாலும் ஓட்டுப் போட முடியாது. ( சஞ்செய்ய வம்பிழுத்தாச்சு.)
ஒழுங்கா பதிவு எழுதப் போறியா இல்லையான்னு என்னைய மிரட்டிய அன்புத் தங்கை தூயாவிற்கு நன்றிகள். நம்ம வலைப்பூவ அருமையா வடிவமைச்சதும் தூயா தான்.
ராயல் சல்யூட் அப்டிங்கிற வார்த்தைய தமிழ்படுத்த தெரியல.அதனால் அப்படியே ஆங்கில வார்த்தைய உபயோகிச்சுடேன், தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும்.
35 comments:
//ராயல் சல்யூட் அப்டிங்கிற வார்த்தைய தமிழ்படுத்த தெரியல.அதனால் அப்படியே ஆங்கில வார்த்தைய உபயோகிச்சுடேன், தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும்.//
பெரிய கும்பிடு !
:)
அதேன் ராயல் சல்யூட்டு !
நல்ல விஷயமாச்சே !!! அபி அப்பாவுக்கு தலை வணங்குகிறேன்.
//ஆனால் நம்மில் எத்தனை பேர் ஒழுங்காக தேர்தல் நாளன்று நமது ஓட்டை பதிவு செய்கிறோம்?//
வாக்குச் சீட்டு வாக்குச் சீட்டுன்னு சொல்லுவாங்க ஐயங்கார்வாள் தினமலர் வாசகராக இருக்கலாம் அதுக்காக தமிழில் வாக்கு என்று எழுதப்படதா ? ஓட்டு, ஓட்டைன்னு தான் எழுதனுமா ?
//ஊரில் இருக்கும் நண்பர்களே மறக்காமல் ஓட்டுப் போடுங்கள். உங்கள் உரிமையை வேறு யாருக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள். துபாயில் இருந்து வந்து ஓட்டளிக்க இருக்கும் அபி அப்பாவின் செயலை பார்த்து குறைந்தது நான்கு பேராவது தங்கள் கடமையைச் செய்தால் அது அவருக்கு நாம் சொல்லும் சிறந்த வாழ்த்தாக இருக்கும். //
பட்ஜெட் ஏர்லைன்சில் பயணச்சீட்டு எடுத்துக் கொடுத்துடுங்கோ, பேஷாக போய் போட்டுண்டு வரலாம்
பாராட்டுக்கள்!
பாராட்டுக்கள்!
ராயல் சல்யூட் - இராச வணக்கம் ??
சூப்பர் அபி அப்பாவுக்கு ஒன்னு என்னா இரண்டு சல்யூட்
//என்பதற்காக விமானக் கட்டணம் மட்டும் 13 ஆயிரம் இந்திய ரூபாய்கள் செலவு செய்து வர இருக்கிறார்.//
பல்லுல்லவர் பக்கோடா சாப்பிடலாம் மச்சி!
எனக்கும் ஒரு டிக்கெட் எடுத்து கொடு எப்படி என் கடமைய நிறைவேற்றுகிறேன் என்று!
ம்ம்ம் என் பெயர் மதுரையில் இருந்திருந்தா இன்னேறம் டிக்கெட்டே வந்து இருக்கும்:)))
கோவியார், எங்க சித்தப்பா தான் சொந்த செலவுல பயணச்சீட்டு வாங்கித்தான் போறாரு, யாரும் அவருக்கு பட்ஜெட் ஏர்லைன்சுல டிக்கெட் வாங்கித்தரல.
இல்ல குசும்பா,
உனக்கு வாக்குரிமை இராமநாதபுரத்துல இருந்துருந்தா தனி விமானமே வந்துருக்கும்.
வாங்க மகேஷ் அண்ணா,
இராச வணக்கம் சரியா இருக்கும்.
நன்றி தமிழ் ப்ரியன் அண்ணா.
குழுமத்துக்குள்ள அடிச்சுகிட்டா 'மொக்கை'யா இருக்கும். சபையிலேயே அடிக்க வேண்டியதுதான். 'ராயல் சல்யூட்' அபி அப்பா.
அனுஜன்யா
//உனக்கு வாக்குரிமை இராமநாதபுரத்துல இருந்துருந்தா தனி விமானமே வந்துருக்கும்.
//
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தலைவன் புகழை நிலை நிறுத்தும் ஜோசப் அண்ணன் வாழ்க
உண்மையில் சென்னையிலிருக்கும் நான் நெல்லை செல்லவே பலமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இதைப்படித்து வெட்குகிறேன். அபி அப்பாவுக்கு வணக்கங்கள்.! (படத்தில் இருப்பது அவர்தானா.. அய்யய்யோ.. நா அவரை யூத்துன்னுல்லா கற்பனை செஞ்சு வெச்சிருந்தேன். முட்டை உடைஞ்சிருச்சே.!)
/ம்ம்ம் என் பெயர் மதுரையில் இருந்திருந்தா இன்னேறம் டிக்கெட்டே வந்து இருக்கும்:)))//
LOL
பாராட்டுக்கள்
பாராட்டுக்கள்
:)
நான்லாம் ஓட்டு கரெக்டாப் போடறேன் தெரியூமா
நான் எப்பொழுதும் வாக்களிக்கிறேன் - தெரியுமா
அபி அப்பா, உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
அபி அப்பா, உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
ஜோசப் அண்ணா நானும் ஒட்டுப் போட இந்தியா போகிறேன். என்ன மதுரையிலோ அல்லது இராமநாதபுரத்திலோ என் தொகுதி இருந்திருந்தால் போய் வரும் செலவை சரி கட்டி இருக்கலாம்.
ஜோசப் அண்ணா நானும் ஒட்டுப் போட இந்தியா போகிறேன். என்ன மதுரையிலோ அல்லது இராமநாதபுரத்திலோ என் தொகுதி இருந்திருந்தால் போய் வரும் செலவை சரி கட்டி இருக்கலாம்.
அபி அப்பா இவ்வளவு இளமையானவரா?
எங்கயோ பார்த்தமாதிரி தெரிகிறார்!
அவருடைய வைராக்கியம் பாராட்டத்தக்கது.
ஓர் ஒட்டு திமுகவுக்கு கூட கிடைக்கும். ஜோசப் சென்னையில் இருந்து மெனக்கட்டு போய் போடமுடியாம வந்தது வருந்தத்தக்கது.(ஜோசப்! உங்க வோட்டை யாரும் போட்டுரலையே?!)
ஆஹா அண்ணன் மொவனே! தூயா கொலை மிரட்டல் விட்டு பதிவு போட சொன்னா என்னை இழுத்துட்டியா! நல்லா இரு!
இன்னும் லீவ் அப்ரூவல் கூட ஆகலை. போன சட்டமன்ற தேர்தலின் போது 4 நாட்கள் கிடைத்தது. போய் வந்தேன். இப்போ கம்பனி இருக்கும் நிலையீல் 2 நாள் கிடைத்தா கூடசந்தோஷம் தான்!
வாழ்த்திய எல்லாருக்கும் நன்னி. அப்படியே லீவ் கிடைக்கவும் வேண்டிகுங்க.
ஜோதிபாரதி! அபிஅப்பான்னு சொன்னவுடனே வயதான பிரகாஷ்ராஜ் மாதிரி இருப்பேன்னு நினைச்சீங்களா:-))
//ஜோதிபாரதி! அபிஅப்பான்னு சொன்னவுடனே வயதான பிரகாஷ்ராஜ் மாதிரி இருப்பேன்னு நினைச்சீங்களா:-))//
ஆமாம் அப்படிதான் நினைச்சு இருக்கார் ஆனா இப்படி ஒரு சாருஹாசன் மாதிரி இருப்பீங்க என்று நினைக்கவில்லையாம்!
//வாழ்த்திய எல்லாருக்கும் நன்னி. அப்படியே லீவ் கிடைக்கவும் வேண்டிகுங்க. //
ஆங் அல்லோரும் இவருக்கு லீவ் கிடைக்கனும் என்று அப்படி கிடைச்சா அபி அப்பாவுக்கு அலகு குத்தலாம் என்றும் வேண்டிக்குங்க!
பாராட்டுக்கள் அபி அப்பா.
பதிவிட்ட உங்களுக்கும் தாங்க.
ஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!!! அபி நைனா ..... நீங்கோ நேம்போஓஒ... நல்லவருங்கோ தம்பி......!!! நாட்டுமேல உங்குளுக்கு இவ்ளோ பாசமா.......? பாசகாரபுள்ள....... பாசகாரபுள்ள.......!!! ஆவ்வ்......!!!
அப்புடியே ..... ஈரோட்டுக்கு வந்து இந்த மேடி அண்ணனுக்கு ஒரு பார்டி வெச்சுபோட்டு போயிருங்கோ......!!!!! அஆவ்வ்வ்...!! நீங்கோ நேம்போ நல்லவருங்கோ தம்பி...!!!!! ஆவ்வ்வ்......!!!
இராம்,
ச்சின்னப்பையன்,
தூயா,
சீனா அய்யா அனைவருக்கும் நன்றிகள்.
வாங்க சேவியர்,
வாக்களிக்க ஊருக்கு போறீங்களா, வாழ்த்துக்கள்.
மாரநேரிக்கும் போயிட்டு வாங்க.
ஜோதி பாரதி அண்ணா, அபி அப்பாவோட ஓட்டு இருப்பது மயிலாடுதுறையில், அந்த தொகுதி கூட்டணியில் காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வாக்களிக்க செல்கிறார் என்றால் அது அவர் திமுக மீது கொண்ட பாசத்தால் தான் என சொல்ல இயலாது அல்லவா?
பதிவின் நாயகரே பின்னூட்டமளித்திருப்பது மகிழ்சியளிக்கிறது. கட்டாயம் உங்களுக்கு விடுப்பு கிடைக்கும், நீங்கள் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவீர்கள்.
குசும்பா, உன் கும்மிக்கும் நன்றி.
புதுகை தென்றல் அக்கா, வாழ்த்துக்களுக்கு நன்றி.
வருகைக்கு நன்றி லவ்டேல் மேடி.