Author: ஜோசப் பால்ராஜ்
•9:37 PM
சில காலங்களுக்கு முன்பு வரை கிராமப்புறங்களுக்கு ஏதாவது அவசர செய்திகளை அதிலும் குறிப்பாக மரண செய்திகளை சொல்ல மட்டுமே பயன்பட்டு வந்த தகவல் தொடர்பு முறைதான் தந்தி. சமீபகாலத்தில் செல்லுலார் தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்த பின்னர் தந்தி சேவையின் தேவை மிக மிக குறைந்து போயிருந்தது.

ஆனால் சமீபத்தில் ஈழப் போரை நிறுத்தக் கோரி பல முறை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்(???), வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என பலருக்கும் அடிக்கடி தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி தந்தி அனுப்பி வந்தது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. தான் மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வேறு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தி அழிந்து வரும் தந்தி சேவையை காப்பாற்றவும் செய்தார் என்பதும் நாம் அறிந்த ஒன்று.

மின்னஞ்சல் சேவை மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகிய பின்னர் கடிதம் எழுதுவதும் மிக அரிதாகி கொண்டே இருந்த நிலையில் உயிர் போகும் பிரச்சனையாக இருந்தாலும் மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுவேன் என்ற தனது உறுதியான கொள்கையால் பல கடிதங்களும் எழுதி கடித சேவையையும் காப்பாற்றியுள்ளார்.

தபால் மற்றும் தந்தி சேவை ஆகியவை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் வரும் அமைப்புகள் என்பதால் தொலை தொடர்பு அமைச்சகம், அழிந்து வரும் தபால் தந்தி சேவைகளை காப்பாற்ற கருணாநிதி அவர்கள் செய்துவரும் மாபெரும் சேவைகளைப் பாராட்டி ஒரு பெரிய பாராட்டு விழா நடத்த தீர்மானித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் தற்போது இவ்விழாவை நடத்த இயலாது என்பதால் தேதி விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை நீங்கள் காப்பாற்றுகிறேன் என எடுத்த முயற்சிகள் அவர்களை காப்பாற்றியதோ இல்லையோ, அழிந்து வரும் தபால் மற்றும் தந்தி முறைகளை காப்பாற்றியுள்ளது மிகவும் பாராட்டத் தக்கதே.

வாருங்கள் முதல்வரை பாராட்டுவோம். Udanz
This entry was posted on 9:37 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

18 comments:

On Wed Apr 22, 10:15:00 PM GMT+8 , Mahesh said...

ஆமா..ஆமா... கண்டிப்பாப் பாராட்டோணும் !!! என்ன மகத்தான சேவை எல்லாம் ஆத்திக்கிட்டுருக்காரு !!!

 
On Wed Apr 22, 10:22:00 PM GMT+8 , சோமி said...

தொலைத் தொடர்பு அமைச்சு தி மு க அமைச்சரின் பொறுப்பில் இருப்பாதால் தமிழினத் தலைவர் இந்த முடிவை எடுத்திருக்காலம். அழிந்து கொண்டிருந்த தபால் தந்தி சேவையை வளர்ச்சி பாதைக்கு இட்டுச் என்றது நமது திமுக அமைச்சர் ராசவின் சாதனை என்று சொல்லாம் அல்வா..மன்னிக்கவும் அல்லவா..

 
On Wed Apr 22, 10:23:00 PM GMT+8 , அறிவிலி said...

இப்ப இருக்கற இருப்புல அவர பாராட்டணும்னா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காரணம் தேட வேண்டியிருக்கு பாருங்க.

 
On Wed Apr 22, 10:25:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க மகேஷ் அண்ணா,
எப்டியாச்சும் முதல்வர பாராட்டனும்னு பார்த்தேன், இந்தக் காரணம் மட்டும்தானுங்ணா கிடைச்சுச்சு.

 
On Wed Apr 22, 10:28:00 PM GMT+8 , சின்னப் பையன் said...

கண்டிப்பா பாராட்டப்பட வேண்டிய விஷயம்தாங்கோ!

 
On Wed Apr 22, 10:29:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க சோமி,
கருத்துக்கு நன்றி.

வாங்க அறிவிலி அண்ணா,
கருத்துக்கு நன்றி.

 
On Wed Apr 22, 11:27:00 PM GMT+8 , Jackiesekar said...

ஆனால் சமீபத்தில் ஈழப் போரை நிறுத்தக் கோரி பல முறை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்(???), வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி என பலருக்கும் அடிக்கடி தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் அடிக்கடி தந்தி அனுப்பி வந்தது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்றே. தான் மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தமிழக மக்கள் அனைவரையும் வேறு தந்தி அனுப்பி போராட்டம் நடத்தி அழிந்து வரும் தந்தி சேவையை காப்பாற்றவும் செய்தார் என்பதும் நாம் அறிந்த ஒன்று.//


தந்தி வார்த்தையை சொல்லைன்னா தலைவருக்க தந்தி அடிச்சிடும் இல்லை

 
On Thu Apr 23, 01:47:00 AM GMT+8 , ராசா said...

மந்திய அரசு உதவி வரும் இன படுகொலைக்கு இவரால் முடிந்த அளவு கனிசமான வருவாயை ஈட்டி கொடுக்கிரார்...
கூட்டணி தர்மம் வேனுமுல...

 
On Thu Apr 23, 09:20:00 AM GMT+8 , Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்த மனிதரின் பெயரை பார்த்தாலே எரிச்சலா இருக்கு

 
On Thu Apr 23, 10:28:00 AM GMT+8 , Unknown said...

ஏதோ அவரால செய்ய முடிஞ்சதை செய்றாரு. சோனியாவை நக்குறதை மீறி இதைவிட இவரால என்ன செய்யமுடியும்.

 
On Thu Apr 23, 02:31:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

என்ன இப்படி பேசிபோட்டீங்க??? தந்தி எவ்வளவு முக்கியமான ஒரு விஷயம் தெரியுமா?? தினமும் காலையில் தந்தி பாக்கலனா பல பேருக்கு நாளே ஓடாது... அதிலும் சிந்துபாத், ஆண்டியார் இவங்கள எல்லாம் பாக்கலனா நாளே சரியா இருக்காது.. தமிழர் வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட தந்தி, தமிழினத் தலைவர்.. தமிழக முதல்வருக்கும் விருப்பமானதா இருப்பது அதிசயமே இல்லை...

ஆமா.. நண்பா நீ சொன்ன தந்தி.. தினத்தந்தி தானே??

 
On Sat Apr 25, 04:30:00 PM GMT+8 , Anonymous said...

Hi Joseph,

nice blog,interesting blog, i am kalai from thirukkattupalli.

anbudan
kalai
sathyankalai@gmail.com

 
On Sat Apr 25, 04:33:00 PM GMT+8 , Anonymous said...

Hi Jos,

its selva from thirukkattupalli,very glad to me that our area blog,and all your archives all good,

anbudan

 
On Sun Apr 26, 09:38:00 AM GMT+8 , கிரி said...

//♥ தூயா ♥ Thooya ♥ said...
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இந்த மனிதரின் பெயரை பார்த்தாலே எரிச்சலா இருக்கு//

வழிமொழிகிறேன்

 
On Mon Apr 27, 01:40:00 AM GMT+8 , Unknown said...

அட அதுக்கில்லீங்கன்னோவ் .......!!! இத்தன வயிசாகியுமும் கட்ட ஸ்ட்ராங்கா இருக்குதுன்னு குடுத்துருப்பாங்க ......!!!

எப்புடியோ .. கட்டைக்கு ... அட .. த்தூ .... கலைஞருக்கு எம்பட வாழ்த்துக்கள் ....!!!

 
On Sat May 09, 06:04:00 PM GMT+8 , ivingobi said...

எப்புடியோ .. கட்டைக்கு ... அட .. த்தூ .... கலைஞருக்கு எம்பட வாழ்த்துக்கள் ....!!!

அட .. த்தூ .... engayo idikkuthe

 
On Mon May 11, 06:08:00 PM GMT+8 , Javiz... said...

கலைஞர் ரொம்ப நல்லவரு ஏனா அவரோட டாக்டர் கூட முனு பெர் ஒரு christian ஒரு muslim ஒரு hindu

 
On Mon May 11, 11:32:00 PM GMT+8 , Javiz... said...

மாமா ஏந்கயொ போய்டீங்க supper

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க