ரொம்ப நாளவே இந்த விளையாட்டு நடந்துக்கிட்டேத்தான் இருக்கு. ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப்பிடலன்னு ஒரு சிலர கேட்டேன். ஒருத்தரு சொன்னாரு நீங்கள்லாம் பெரிய ஆளு, உங்களையெல்லாம் முன்னாடியே வேற யாராச்சும் கூப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சுத்தான் கூப்புடாம விட்டுட்டோம்னாங்க. ஆகா, இந்த உலகம் இன்னமும் நம்மல நம்புதேன்னு விட்டுட்டேன். ஒருவழியா நம்மளையும் ரெண்டு பேரு கூப்புட்டுட்டாங்க. களத்துல இறங்கிட்டேன்.
1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப் பெயர். ஜோசப் என்பது எங்கள் குடும்பத்துல எங்க தலைமுறையில இருந்து எல்லாருக்கு வைச்சுருக்க பொது பெயர், வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்கோம்.
கிறிஸ்தவர்களில் புனிதர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.அவர்களது பிறந்த தினங்களை அவர்களது Feast என கொண்டாடுவது வழக்கம், நான் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் Feast. இதனால் என் பெயருடன் பெனடிக்ட் சேர்ந்து கொண்டது.
நான் பிறந்த வருடம் தான் முந்தைய போப் 2 ஆம் ஜான் பால் அவர்கள் போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். எனவே பால் என்பதும் என் பெயரில் சேர்ந்துவிட்டது. ஜோசப் பெனடிக்ட் பால் அப்டின்னு இருந்தா நல்லாருக்காதுன்னு ராஜ் அப்டிங்கிற பெயர் எச்ச விகுதிய சேர்த்து முழுப் பெயரையும் உருவாக்கிட்டாங்க.
இவ்ளோ நீளமான பெயரா இருக்கதால விண்ணப்ப படிவங்கள்ல எல்லாம் எழுத சிரமப்பட்டாலும், எல்லாத்துக்கும் பொருத்தமான விளக்கமிருப்பதால் என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
30.4.2009 நள்ளிரவுல இருந்து இன்று வரை , தினமும் என் தந்தையின் மறைவை நினைத்து நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் .
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
ரொம்ப பிடிக்கும். காரணம் என்னான்னா வேற யாருக்கும் என் கையெழுத்து புடிக்காது. புரியிற மாதிரி எழுதுனாத்தானே புடிக்கிறதுக்கு.
4).பிடித்த மதிய உணவு என்ன?
நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்சமாச்சும் அசைவம் இருந்தா நல்லாருக்கும். ரொம்ப புடிச்சது ஆட்டிறைச்சி, ஆனா சிங்கப்பூர்ல கிடைக்கிறது ஆஸ்த்ரேலியால இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, அது அவ்ளோ நல்லா இருக்காது. அதுனால அதிகமா சாப்புடுறதில்ல. கோழி, மீன் இதெல்லாம் ரொம்ப புடிக்கும்.
தயிர் சாதம் ரொம்ப புடிக்கும்.
இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நாள் வடிச்ச சோறுல தண்ணி ஊத்தி அடுத்த நாள் காலையில அதுல தயிர் ஊத்தி, சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு , சுண்ட வைச்ச பழைய குழம்போட , மோர் மிளகா வத்தல் வறுவல் வைச்சுக்கிட்டு, வயகாட்டு வரப்புல தண்ணி ஓடிக்கிட்டு இருக்க வாய்கல்ல கால வைச்சுக்கிட்டு உக்காந்து சாப்புடுறதத் தான் சொல்லுவேன். இந்த உலகத்துல எங்க போய் என்ன சாப்புட்டாலும் இதுக்கு ஈடா ஒன்னு வராது. அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
எல்லாருகிட்டயும் உடனே நல்லா பேசிருவேன், ஆனா எதிராளி எப்டி பழகுறாங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் அவங்களோட நட்பா இல்லையான்னு முடிவு செய்வேன்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி, கடல் , பாத்ரூம் என எங்கயா இருந்தாலும் குளிக்க புடிக்கும். ரொம்ப புடிச்சது எங்க ஊர்ல ஆத்துல எதிர் நீச்சல் போட்டு குளிக்கிறது தான்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
இதத்தான் பார்கணும், இதத் தான் பார்ப்பேன்னு இதுவரைக்கும் எந்த வரைமுறையும் வைச்சுக்கிட்டதில்ல. பெரும்பாலும் கண்களப் பார்த்து பேசுவது உண்டு.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்தது : தெரியலை, எனக்கு என்னைய ரொம்ப புடிக்கும், எத சொல்றதுன்னு தெரியல.
பிடிக்காதது: சோம்பேறித்தனம், எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பி ஏமாறுறது, ஏமாத்துறான்னு தெரிஞ்சும் சிலருக்கு உதவி இ.வான்னு பேர் எடுக்கிறது.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
தெரியலைன்னு சொல்றது சரியா இருக்கும். இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடுறேன்.
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என்னைய வளர்த்த என் வாத்தியார் தாத்தா நான் நல்லபடியா வேலையில இருக்கத பார்க்க கூட இல்லையேன்னு வருத்தம் இருக்கு & அப்பா....
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
வீட்டில் இருப்பதால் வெண்நிற அரை கால்சட்டையும், சாம்பல் நிற பனியனும்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என் மடிக்கணிணியின் திரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ( திரையப் பார்க்காம என்னால தட்டச்சு செய்ய முடியாதுங்க)
அண்ணண் மகள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
நான் இப்டியே இருந்துட்டுப் போயிடுறேனுங்க, எதுக்கு என்னைய போயி பேனாவா மாத்துறீங்க, அப்டியெல்லாம் மாத்துனா எழுதுறவங்க கட்டுப்பாட்ட மீறி நானு எழுதிக்கிட்டேயிருப்பேனாக்கும். சரி மாத்துறதுனா சிவப்பு நிற பேனாவா மாத்துங்க.
14.பிடித்த மணம்?
மழை பெய்ய ஆரம்பிக்கும் போது வரும் மண் வாசனை, நெற்பயிர் கதிர்விடும் போது வயல்வெளியெங்கும் உள்ள வாசனை, சேற்று உழவு செய்யும் போது வரும் மணம், கடலைய சட்டியில போட்டு தீயாம வறுக்கும் போது வரும் வாசம் , இப்டி சொல்லிக்கிட்டே போகலாம், அது ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
திவ்யா - சிறந்த கதாசிரியர் , அருமையான நண்பர்
சென் - என் வகுப்புத் தோழன், ஆருயிர் நண்பண்
ஜெகதீசன் - சிங்கை பதிவர், அன்புத் தோழர்
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
லதானந்த் மாமா அவர்களின் அனைத்துப் பதிவுகளிலும் உள்ள நகைச்சுவையும்,கொங்கு தமிழும் , துறைசார்ந்த பதிவுகளில் பல நல்ல விசயங்களை எல்லோருக்கும் புரியும் படி எளிமையாக சொல்லுதலும்.
ரெங்காவின் கவிதைகளும், பட்டாம்பூச்சி சொல்லித்தந்ததும்
17. பிடித்த விளையாட்டு?
இறகு பந்து, கூடைப் பந்து, கால்பந்து, டென்னிஸ், கிரிக்கெட்( ஓரளவுக்கு)
நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)
18.கண்ணாடி அணிபவரா?
அது ஆச்சு 10 வருசம். பொட்டித் தட்டுற வேலையில இருக்கதுனால கண்ணாடி அணிய வேண்டியது மிக அவசியமாயிருச்சு.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைசுவையானப் படங்கள் குறிப்பாக கமல் நடித்த நகைச்சுவைப் படங்கள் ( வசூல் ராஜா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்மந்தம், நள தமயந்தி போன்றவை)
மனசுக்கு கஷ்டம் தராத சுபமான முடிவுகள் கொண்ட படங்கள் புடிக்கும்
20.கடைசியாகப் பார்த்த படம்?
அயன் படம் திரையரங்கில் பாதி பார்த்துக்கிட்டு இருக்கப்ப தான் அப்பா இறந்த செய்தி வந்தது
கடைசியா முழுசாப் பார்த்த தமிழ் படம் : ஜெயங்கொண்டான்
அப்பறம் இடையில வாண்டட் அப்டின்னு ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், வளைச்சு வ்ளைச்சு சுடுறது, ஒரு குண்ட வளைச்சு அடிச்சா வட்டமா நிக்கிற எல்லாரையும் ஒரே குண்டு கொன்னுட்டு , சுட்டவங்களையும் சாய்க்கிது. இந்தமாதிரி படம் எல்லாம் MLA விசயகாந்த இல்லன்னா MP தானை தலைவன், அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் தவிர வேறு யாராலும் தமிழில் எடுக்க இயலாது.
21.பிடித்த பருவ காலம் எது?
எல்லாக் காலமும் பிடிக்கும். இதுல எல்லாம் எந்த சிறப்பு விருப்பமும் இல்லீங்க.
22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
மதன் எழுதிய கி.மு கி.பி
23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
இரு அண்ணண்களின் பிள்ளைகளையும் நான் வைத்திருக்கும் படம் தான் என் கணிணியில் இருக்கும் , அதை மாற்றுவதில்லை. இரண்டு பேரும் மறுபடியும் ஒன்னா பார்குறப்ப புதுசா படமெடுத்த பின்னாடிதான் மாத்தனும்.
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது : குழந்தைங்க பேச்சுல ஆரம்பிச்சு நிறையா இருக்கு
பிடிக்காதது: தேவையில்லாத கோபத்தின் போது வந்து விழும் எந்த வார்த்தைகளின் ஓசையும்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
Air Distance - 2881.5 KM ( தஞ்சாவூர் - சிங்கப்பூர்).
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்
ஒருங்கிணைத்தல்
மனச் சோர்வுள்ளவர்களுக்கு கவுன்சிலிங் செய்வது
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியாது.
கடவுள் மேலயே எல்லாத்துக்கும் பாரத்த போட கூடாது. நாம செய்யவேண்டியத நாம தான் செய்யனும்.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
பொசுக்கென்று வரும் கோபம்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
மலைப் பிரதேசங்கள் எதுவாயிருப்பினும் பிடிக்கும்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
முடிஞ்சளவு உழைக்கணும், உழைப்புக்கேற்ற வளர்சி இருக்கனும், என் மறைவிற்கு பிறர் வருந்தும் அளவுக்கு சிறப்பா வாழணும்.
31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
தெரியல, இதையும் சாய்ஸ்ல விடுறேன்.
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
"Nothing is Impossible, Nothing Is Difficult, Everything is a challenge"

21 comments:
//ஆனா நம்மல யாரும் கூப்பிடல. ஏன் என்னைய யாரும் கூப்பிடலன்னு ஒரு சிலர கேட்டேன். ஒருத்தரு சொன்னாரு நீங்கள்லாம் பெரிய ஆளு, உங்களையெல்லாம் முன்னாடியே வேற யாராச்சும் கூப்பிட்டுருப்பாங்கன்னு நினைச்சுத்தான் கூப்புடாம விட்டுட்டோம்னாங்க.
//
நீங்கள் அடிக்கடி பதிவு போடிறது இல்லை என்பதால், எனக்கே நீங்கள் பதிவரா இல்லையா என்ற சந்தேகம் வந்து விடுகின்றது. பிறகு எப்படி மத்தவா கூப்புடுவா...?
//அ.ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் இதுதான் என்னோட முழுப் பெயர். ஜோசப் என்பது எங்கள் குடும்பத்துல எங்க தலைமுறையில இருந்து எல்லாருக்கு வைச்சுருக்க பொது பெயர், வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்கோம்.
கிறிஸ்தவர்களில் புனிதர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள்.அவர்களது பிறந்த தினங்களை அவர்களது Feast என கொண்டாடுவது வழக்கம், நான் பிறந்த ஜூலை 11 ஆம் நாள் புனித பெனடிக்ட் அவர்களின் Feast. இதனால் என் பெயருடன் பெனடிக்ட் சேர்ந்து கொண்டது.
நான் பிறந்த வருடம் தான் முந்தைய போப் 2 ஆம் ஜான் பால் அவர்கள் போப் ஆக தேர்வு செய்யப்பட்டார். எனவே பால் என்பதும் என் பெயரில் சேர்ந்துவிட்டது. ஜோசப் பெனடிக்ட் பால் அப்டின்னு இருந்தா நல்லாருக்காதுன்னு ராஜ் அப்டிங்கிற பெயர் எச்ச விகுதிய சேர்த்து முழுப் பெயரையும் உருவாக்கிட்டாங்க.
இவ்ளோ நீளமான பெயரா இருக்கதால விண்ணப்ப படிவங்கள்ல எல்லாம் எழுத சிரமப்பட்டாலும், எல்லாத்துக்கும் பொருத்தமான விளக்கமிருப்பதால் என் பெயர் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
//
சின்னவா,
இயற்பெயரெல்லாம் இப்ப செல்லாது , "யூசுப் பால்ராஜ் ஐயங்கார்" தான் இப்ப பேரு, அதை மறைத்ததற்கு எதேனும் உள்நோக்கம் உண்டா ? இல்லை என்றாலும் மீ த பர்ஸ்ட் கண்டனம்.
நாம் உங்களுக்கு சூட்டிய ஸ்ரீலஸ்ரீ யூசுப் பால்ராஜ் அய்யங்கார் என்ற திருநாமம் பற்றி சொல்லாமல் விட்டதற்கு கண்டங்களை தெரிவித்து கொள்ள விரும்புகிறோம்.
நேர்மையான பதில்கள். பாராட்டுக்கள்
ஒழுங்கா
(சோஜப்பு அண்ணன் சொன்னா மாதிரியே கமெண்டு போட்டுட்டேன்) :)
சின்னவா,
இயற்பெயரெல்லாம் இப்ப செல்லாது , "யூசுப் பால்ராஜ் ஐயங்கார்" தான் இப்ப பேரு, அதை மறைத்ததற்கு எதேனும் உள்நோக்கம் உண்டா ? இல்லை என்றாலும் மீ த பர்ஸ்ட் கண்டனம்.//////////
ஆமாமுல்ல.. ஏன்!!!!!!!!!!! நானும் கண்டிச்சுக்கறேன்
அப்பாடா! ஜோசப் ம் இந்த பதிவு போட்டுடாரு ;-)
வெளிப்படையான, நேர்மையான, சுவையான பதில்கள். பாராட்டுகள் ஜோசப்பு...
வணக்கம் நண்பரே!
உங்களைப் பற்றி குறைந்தபச்சம் தெரிந்துகொண்டேன்..
சகா, சில விஷயஙக்ளை தவிர்த்திருக்கலாம்.. சரி..
இப்படியாச்சும் பதிவு போட்டிஙக்ளே...
இது கமிஷனுக்காக பின்னூட்டம்..
//
கடவுள் பார்த்துக்குவாரு விடுன்னு சொல்றத என்னால ஏத்துக்கவே முடியாது.
//
சரி சரி.. விடுங்க.. கடவுள் பார்த்துக்குவாரு..
//நீச்சல் ( இதையும் விளையாட்டுல சேர்கலாம்ல??)//
சேர்க்கலாம் நீ தனியாக நீந்தும் வரை, பில்லா அஜித் மாதிரி ரெண்டு மூனு ஜிகிடிங்க கூட நீந்தினா அது வேற விளையாட்டில் தான் வரும்!
//10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?//
தப்பான கேள்வி தப்பான ஆளிடம், இவன் பக்கத்தில் இருந்தால் மற்றவர்கள்தான் வருந்துவார்கள்!
நிதி மேலாண்மை & ஆலோசனையளித்தல்//
ஆலோசனை சொல்ல தான் ஆயிரம் பேரு இருக்காங்க, நீ நிதியை மட்டும் இந்த துபாய் பக்கம் கொஞ்சம் திருப்பிவிடு!
:))
:)
//30 / 32, //
தமிழ்மணம் வாக்குன்னு நினைச்சேன்.
//நான் ஆச்சாரமான அசைவ குடும்பத்துல பொறந்தவன். கொஞ்சமாச்சும் அசைவம் இருந்தா நல்லாருக்கும். ரொம்ப புடிச்சது ஆட்டிறைச்சி, ஆனா சிங்கப்பூர்ல கிடைக்கிறது ஆஸ்த்ரேலியால இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டிறைச்சி, அது அவ்ளோ நல்லா இருக்காது. அதுனால அதிகமா சாப்புடுறதில்ல. கோழி, மீன் இதெல்லாம் ரொம்ப புடிக்கும்.
(((தயிர் சாதம் ரொம்ப புடிக்கும்.)))//
ஆம் பிடிக்கும் பிடிக்கும்!
//9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
தெரியலைன்னு சொல்றது சரியா இருக்கும். இந்த கேள்விய நான் சாய்ஸ்ல விடுறேன்.//
நாங்கல்லாம் மின்னடியான் மாதிரி பாத்துக்கிட்டு இருக்கும் போது அப்புறம் எப்படி?
சாய்சுலதான் விடனும்.
இதே காலை உணவுன்னு கேட்ருந்தா என்னோட பதில் மொதல் நாள் வடிச்ச சோறுல தண்ணி ஊத்தி அடுத்த நாள் காலையில அதுல தயிர் ஊத்தி, சின்ன வெங்காயம் வெட்டிப் போட்டு , சுண்ட வைச்ச பழைய குழம்போட , மோர் மிளகா வத்தல் வறுவல் வைச்சுக்கிட்டு, வயகாட்டு வரப்புல தண்ணி ஓடிக்கிட்டு இருக்க வாய்கல்ல கால வைச்சுக்கிட்டு உக்காந்து சாப்புடுறதத் தான் சொல்லுவேன். இந்த உலகத்துல எங்க போய் என்ன சாப்புட்டாலும் இதுக்கு ஈடா ஒன்னு வராது. அனுபவிச்சவங்களுக்குத்தான் அதோட அருமை தெரியும்.//
அப்படியே அதுல கொஞ்சம் நேத்து வச்ச மீன் குழம்பு ஊத்தி சாப்பிட்ட சோகமோ சொகம் அப்பு...