இது தான் உன் முடிவா?
ம்ம்ம்ம்
ஏன் திடீர்னு இப்டி ஒரு முடிவு?
திடீர்னு எல்லாம் இல்ல , ரொம்ப நாளாவே நினைச்சுக்கிட்டு இருந்ததுதான்.
இல்ல, இவ்ளோ நாள் இல்லாம இந்த நேரத்துலயா இத செய்யனும்?
இது தான் சரியான நேரம் , இப்ப செஞ்சாதான் நல்லாருக்கும்
கள நிலம தெரியாம நீ இந்த முடிவுக்கு வந்துட்டியோன்னு தோணுது..
என்ன கள நிலைமை , எப்பவும் வழக்கமா இருக்க நம்ம ஆட்கள் தானே இப்பவும் இருக்காங்க , இப்ப மட்டும் கள நிலைமை என்ன புதுசா மாறிடுச்சு? வானத்துலேருந்து எல்லாம் யாரும் குதிச்சுரலைல்ல? சொல்லப் போனா என்னைய பார்த்து தான் எல்லாரும் பயப்படனும்.
ஏன் நான் மட்டுமா புதுசா இறங்குறேன், இதுவரைக்கும் வராத நிறையா பேரு இப்ப வரலையா?
அப்போ எல்லாரும் வர்றாங்க, அதுனால நானும் போறேன்னு போறியா நீ?
நெவர், என்னால முடியும்னு நினைக்கிறேன், அதான் இறங்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
புலியப் பார்த்து பூனை சூடு போட்ட மாதிரின்னு பேர் வந்துடாது?
ஹேய் லுக், என்னைய தேவையில்லாம பழமொழியெல்லாம் சொல்லி டிஸ்கரேஜ் பன்னாத, பூனையோட பரிணாம வளர்சிதான் புலி. நான் என்ன கடைசிவரைக்கும் பூனையாவே இருக்கணும்னு சொல்றியா?
இல்லப்பா, நீ கோபப்படாத, எதிராளிங்க எல்லாம் பழம் தின்னு கொட்டைப் போட்ட ஆளுங்க. அதுனாலத்தான்....
அதுனால? ஸோ வாட் யா? இப்ப தென்சென்னையில சரத் பாபு துணிச்சலா களமிறங்கல? எதிராளிங்க எல்லாம் அரசியல் கட்சியில இருக்கவங்க, தொண்டர், குண்டர் படை, அதிகாரம், பணம் எல்லாம் உள்ளவங்க அப்டின்னு அவரு யோசிச்சாரா? இல்லைல ? துணிஞ்சு இறங்குனாருல்ல? அப்டித்தான் நானும் துணிஞ்சு இறங்குறதுனு முடிவு செஞ்சுட்டேன்.
சரி, நீ சொன்ன சரத் பாபு வெற்றிபெறலையே? அப்ப நீ தோக்கப் போறோம்னு தெரிஞ்சே இறங்கப் போறியா?
ஹே, கமான் யா, லெட் மீ ட்ரை. முத தடவையே வெற்றியடையும்னு இல்லைல. இங்கயே உக்காந்திருந்தா எப்டி? முதல்ல இறங்கிப் பார்ப்போம். அப்பறம் வெற்றியப் பத்தி யோசிக்கலாம். குறைஞ்சது ஒரு போட்டி அனுபவமாச்சும் கிடைக்கும்ல?
இருந்தாலும் களத்துல இருக்கவங்களோட பிண்ணணியெல்லாம் என்னான்னாவது தெரிஞ்சுகிட்டு செய்யலாம்ல ?
எல்லாரும் ஏற்கனவே இதுல அனுபவம் உள்ளவங்க, பத்திரிக்கைகள்ல எல்லாம் அவங்க புகழ் பரவியிருக்கு, அதத் தானே சொல்ல வர்ற?
ஆமா.
அவங்களும் என்னைய மாதிரி ஒரு நாள் புதுசா ஆரம்பிச்சவங்க தானே? இறங்குன உடனே அவங்க எல்லாம் பத்திரிக்கையில வந்துட்டாங்களா என்ன? நான் இப்ப தொடங்குற மாதிரி தானே அவங்களும் ஒரு நாள் தொடங்கியிருப்பாங்க?
சரி, இதுக்கு மேல நான் சொல்றத நீ கேக்க மாட்ட, உரையாடல் சிறுகதை போட்டிக்கு கதை அனுப்புற உன் முடிவுல இருந்து மாறமாட்ட. வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டா.
நன்றி டா.
டிஸ்க்கி:
1. உரையாடல்னு சிறுகதை போட்டி வைச்சுருக்கதுனால எனக்கும் என் மனசாட்சிக்கும் இடையே நடந்த உரையாடலையே கதைங்கிற பேர்ல எழுதிட்டேன்.
2. கதை எழுத நானும் முயற்சி செஞ்சேன் அப்டின்னு வரலாற்றுல பதிச்சாச்சு.( வரலாறு முக்கியம்ல)
என்னடா தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தமேயில்லன்னு கேட்கிறவங்களுக்கு
அதான் எனக்கும் என் மனசாட்சிக்கும் நடந்த உரையாடல்னு சொல்லிட்டேன்ல, மனசாட்சியே இல்லாம எப்டி அதோட உரையாட முடியும்? ???
10 comments:
நல்லவேளை மனச்சாட்சி என்றவுடன் நான் “கிரி” என்று நினைத்து விட்டேன் :-))))
அப்படியா....நல்லது...கதை எழுதிறது எண்டு கிளம்பினா இதுதான் என் முதல் கதை என்றெல்லாம் பம்ம கூடாது. நான் மொண்டிசொறி படிக்கும் போதே கதை போட்டியில் முதல் பரிசு வாங்கினான் அப்படினு பில்டப்பு காட்டனும்..
1) வாழ்த்துக்கள்
2) போட்டியில் வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
3) நிச்சயம் வெற்றி பெற போகும் கதை.
4) கலக்கல் கதை! வெற்றி நிச்சயம்.
5) இப்படி எல்லாம் கதை எழுதினா நாங்க எல்லாம் போட்டியில் கலந்துக்க முடியாது போலவே!!!
6):))) அருமை
7) இதுதான் கதை! இதுமட்டுமே கதை!
8) எனக்கு இல்ல சொக்கா எனக்கு இல்ல!
:) all the best.
இது மட்டும் தான் எனக்கு தெரிஞ்சு உண்மையாண உரையாடல் கதை
ரைட்டு..
வெற்றி நிச்சயம் !! இது சத்தியம் !!!!
மகேஷ்.. ஆனாலும் உங்களுக்கு நக்கல் ஜாஸ்தி.!
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் நண்பா