Author: ஜோசப் பால்ராஜ்
•6:26 PM
முழு அடைப்பு நடத்துவது, அதுவும் அரசாங்கமே அதை நடத்துவது, அதுவும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க அதன் கூட்டணிகட்சியே நடத்துவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் , 2007 அக்டோபர் 1 அன்று தமிழக அரசு சேதுசமுத்திர திட்டத்திற்கு ஆதரவாக நடத்த முனைந்த முழுஅடைப்பை நீதிமன்றத்தின் அச்சுறுத்தலால் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றி நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கையாண்ட விதம் மிக மோசம் என்பதை சொல்லவே இந்த‌ப்ப‌திவு.

சக பதிவர் எழுதியுள்ள வரட்டும் கலைஞருக்கு கைது ஆணை! என்ற பதிவை படித்தவுடன் ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை.

ஏன் இந்த வழக்கில் காட்டிய, காட்டும் தீவிரத்தை மற்ற வழக்குகளில் காட்டவில்லை? கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்குமிடையே நடக்கும் முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்தபின்னரும், இன்னும் அதை கேரள அரசு செயல்படுத்தவில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பை வழங்கியபோதும் சரி, இறுதி தீர்ப்பை வழங்கியபோதும் அதை காலில் போட்டு மிதித்து விட்டு, வெள்ளம் வரும்போது மட்டும் திறந்துவிடும் வடிகால் வாய்காலாக காவிரியை பாவித்து நீர் விடும் கர்நாடக அரசு செய்வது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா ?

காவிரியும், முல்லைப்பெரியாரும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனைகள். அதை தீர்க்க விடுமுறை நாளில் கூடிடுமா நமது மாண்புமிகு உச்சநீதிமன்றம்? கேரள அரசையும், கர்நாடக அரசையும் கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம் என்று சொல்லிடுமா ? அச்சுதான‌ந்த‌னுக்கும், எடியூர‌ப்பாவுக்கும் கைது செய்வோம் என‌ மிர‌ட்ட‌ல் விடுக்குமா?

தீர்க்க வேண்டிய முக்கியமான வழக்குகள் எத்தனையோ இருக்கும் போது அவற்றை தீர்க்க வழிகாண வக்கில்லாத உச்சநீதிமன்றம்,
கடலுக்குள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே மூழ்கிவிட்ட ஒரு மணல்திட்டுக்காக இத்தனை ஆர்ப்பாட்டம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அது இராமரால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாக உருவானதா , இராமர் என்பவர் உண்மையிலேயே இருந்தவரா அல்லது கற்பனையா என்ற ஆராய்சியில் எல்லாம் நான் இறங்க போவதில்லை. ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒன்றே ஒன்று சொல்லுவேன், அது அன்றே வள்ளுவன் இவர்களுக்காய் சொன்னது.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க‌
செய்யாமை யானும் கெடும்.

இதற்கு விளக்கம், ஒருவன் தனது நிலைமைக்குத் தகாத செயல்களை செய்வதாலும் செய்யத்தக்க செயல்களை செய்யாது விட்டாலும் கேடு அடைவான் என்பதே.

இந்த குறள் வேகம் காட்டவேண்டிய வழக்குகளில் வேகம் காட்டாது, சம்பந்தமில்லாத வழக்குகளில் காட்டும் உச்ச நீதிமன்றத்துக்கும், இடிக்க கூடாத மசூதியை இடித்து, இடிக்க வேண்டிய பாலத்தை இடிக்க விடாது இராமர் பெயரை சொல்லி அரசியல் பிழைப்பு நடத்துபவர்களுக்கும் பொருந்தும். Udanz
This entry was posted on 6:26 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On Mon Aug 04, 08:19:00 PM GMT+8 , PRINCENRSAMA said...

mikka sirappu thozarey! oru pothu nookkalarin karuthu eppadi irukkirathu enbatharku thangal karuthu thakka saandru!

 
On Tue Aug 05, 04:14:00 PM GMT+8 , 3rdeye said...

katayam matra vazhakukum mukiyathuvam tharavendum athay nerathil intha vazhakuku mukiyathuvam kuduthathum thapellai. varatum kaithu annai kalaingaruku. the greatest oldest stam therintha karaithu kuditha kalaingar sollatumay superm courta parthu why you are not taking actions agains other cases. athayum keka mataru - super court manu anupina athukum pathil anupa mataru.

 
On Tue Aug 05, 09:25:00 PM GMT+8 , Dharan said...

Excellent.

 
On Tue Aug 05, 09:43:00 PM GMT+8 , வெண்தாடிதாசன் said...

வழக்கு நடப்பது இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில். கர்நாடகா மற்றும் கேரளா இந்தியாவில் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பா.ஜ.க பந்த் நடத்தலாம். தி.மு.க நடத்தினால்தான் தப்பு.

 
On Tue Aug 05, 10:25:00 PM GMT+8 , jackiesekar said...

\\ஏன் இந்த வழக்கில் காட்டிய, காட்டும் தீவிரத்தை மற்ற வழக்குகளில் காட்டவில்லை? கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்குமிடையே நடக்கும் முல்லைப்பெரியார் அணை விவகாரத்தில் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்பளித்தபின்னரும், இன்னும் அதை கேரள அரசு செயல்படுத்தவில்லை. அது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?\\

ஜோ அசத்துறிங்க, அதுமட்டும் இல்லாமல் கருத்தை நச்சென்று சுருக்கமாகவும் சொல்கிறீர்கள், உங்கள் நச் கோபத்துக்கு என் பாராட்டுக்கள்

 
On Tue Aug 05, 10:56:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

கருத்து கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

நமக்கு தோன்றும் இந்த உணர்வை ஏன் கருணாநிதி சார்பாக பதில் தாக்கல் செய்யும் போது குறிப்பிடக்கூடாது? நீதிமன்றத்தில் சமத்துவம் இருக்கும்வரைதான் அது நீதிமன்றம், இல்லையேல் அது அநீதிமன்றமாகிவிடும்.

 
On Tue Aug 05, 11:12:00 PM GMT+8 , ச்சின்னப் பையன் said...

நியாயமான கோபம்.... அருமையான பதிவு...

 
On Sat Aug 16, 08:28:00 AM GMT+8 , Anonymous said...

That is a good question, why SC is not acting on Kerala and Karnataka, when they ignored the SC order. That is because, Kerala/ Karnataka assemblies (legislature) are capable of ordering the arrest of SC judges. The technicality that is not well known is that, legislative assemblies are sovereign bodies, and their powers are unlimited. You may ask, what about TN assembly. In TN we dont have that kind unity in assembly to threaten such an action.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க