Author: ஜோசப் பால்ராஜ்
•10:00 PM
சமீபத்தில் இலவசம் என்றால் இளக்காரமா ? என்ற தலைப்பில் இலவச பேருந்து சலுகையை பயன்படுத்தி பயணம் செய்த சில சிறுமிகளை தஞ்சையில் ஒரு நடத்துநர் பேருந்தில் இருந்து தள்ளிவிட்ட செய்தியை அறிந்து நான் எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிட்ட பலரும், தங்களது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதிலும் என‌க்கு ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மிக‌ சரியான‌ ஆலோச‌னைகளை சொல்லும் என் ந‌ண்ப‌ர்
3rdeye த‌ன‌து பின்னூட்ட‌த்தில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை கேட்ப‌தோடு நிறுத்தாதே இதை அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு எடுத்துச்செல் என்று பின்னூட்ட‌மிட்டிருந்தார்.

நானும் இதை வெறும் பதிவிடுவதோடு நிறுத்தக்கூடாது, கட்டாயம் அந்த மனிதாபிமானமற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ன செய்யலாம் என்று எண்ணிய போது, தற்செயலாக இணையத்தின் மூலமாக பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க வசதி இருப்பது தெரியவந்தது. http://pgportal.gov.in.

இந்த இணையத்தின் வாயிலாக இந்தியாவில் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்து மாநில அரசுகளுக்கும் மற்றும் அரசின் அனைத்து துறைகளுக்கும் நாம் நமது புகாரை தெரிவிக்க முடியும்.

முதலில் நமது பயனாளர் பெயர் (User Name) மற்றும் கடவு சொல் (Password) ஆகியவற்றை தெரிவு செய்து விட்டு, நமது முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்துவிட்டு, எந்த துறைக்கு நமது புகாரை அனுப்ப வேண்டும் என்பதை தெரிவு செய்துவிட்டு, அதற்கு கீழேயுள்ள பெட்டியில் 4000 வார்த்தைகளுக்குள் நமது புகாரை பதிவு செய்ய வேண்டும்.

மேலும் நமது புகாரை வெற்றிகரமாக‌ பதிவு செய்த உடன் நமக்கு ஒரு பதிவெண் தரப்படுகின்றது. இந்த பதிவெண் (உதாரணமாக எனது புகாரின் பதிவெண்: DARPG/E/2008/08229)மூலமாக நாம் பின்னர் நமது புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.

இப்படி ஒரு அமைப்பும், வசதியும் இருப்பது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும் எனத்தெரியவில்லை. இதில் இன்றுதான் எனது புகாரை பதிவு செய்துள்ளேன். இதன் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை தொடர்ந்து பார்த்து உங்களுக்கு கட்டாயம் தெரிவிப்பேன்.

நீங்களும் உங்கள் கண்ணில்படும் குற்றங்களை சும்மா பார்பதோடு நின்றுவிடாமல், உடனே இந்த இணையத்தின் மூலமாக உங்கள் புகாரை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புங்கள். புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களும் தரப்பட வேண்டும் என்பதால் நடவடிக்கைகள் கட்டாயம் எடுக்கப்படும் என நம்பலாம்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு குறித்த ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் குவியும்போது, அந்த பிரச்சனையின் தாக்கம் கட்டாயம் இந்த புகார்களை கையாள்பவர்களுக்கு புரியலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, நடவடிக்கை எடுக்க முற்படலாம். வாய்ப்பு கிடைக்கும் போது ஏன் நாம் சும்மாயிருக்க வேண்டும்?

எத்தனையோ மின்னஞ்சல்களை நாம் அனைவருக்கும் அனுப்பி மகிழ்கிறோம். இந்த இணையதளத்தை குறித்த விழிப்புணர்வையும் நாம் எல்லோருக்கும் ஏற்படுத்த வேண்டும். உங்கள் நண்பர்களுக்கு இச்செய்தியை தயவுசெய்து அனுப்புங்கள். சிறு துளிகள் தான் பெருவெள்ளமாகும். ஜெய் ஹிந்த். Udanz
This entry was posted on 10:00 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

23 comments:

On Mon Aug 18, 12:17:00 AM GMT+8 , Anonymous said...

நல்ல முயற்சி பால்.

வாழ்த்துக்களும் ஆதரவும் உண்டு உங்களுக்கு.

 
On Mon Aug 18, 12:30:00 AM GMT+8 , விஜய் ஆனந்த் said...

தகவலுக்கு நன்றி....

 
On Mon Aug 18, 12:40:00 AM GMT+8 , சின்னப் பையன் said...

நல்ல முயற்சி.. வாழ்த்துக்கள்

 
On Mon Aug 18, 12:42:00 AM GMT+8 , Thamiz Priyan said...

நல்ல முயற்சி ஜோசப் சார், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது கட்டாயமாகின்றது.

இதே போன்ற இன்னொரு முயற்சி
http://fixmyindia.blogspot.com/

 
On Mon Aug 18, 01:50:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஜோசப் அண்ணே! அந்த நிகழ்சியைப் பற்றி அறிந்து உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.அந்த நடத்துனர் ஓருவாரம் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு அனைத்து நடத்துனர்களும் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறத்தப்பட்டு இருக்கிறார்கள் என்பதனை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

 
On Mon Aug 18, 02:51:00 AM GMT+8 , Sathis Kumar said...

பால், உங்கள் முயற்சிக்கு நல்லதொரு பதில் கிடைத்திட வேண்டும், எனது வாழ்த்துகள்..

 
On Mon Aug 18, 06:42:00 PM GMT+8 , வெண்பூ said...

FYI... It is only for Central Govt Departments and ministries only.. :(

http://dpg.gov.in/purview.htm

 
On Mon Aug 18, 06:52:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகை தந்து வாழ்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

@ புதுகை அப்துல்லா...
அண்ணா, இந்த தண்டணை அவர் செய்த கொடூரத்துக்கு போதுமானது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

@வெண்பூ...

தகவலுக்கு நன்றி. நான் குறிப்பிட்டிருக்கும் தளத்தில் மத்திய அரசின் அனைத்து துறைகள், அமைச்சகங்கள், மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் நாம் புகார் அளிக்கலாம்.

 
On Mon Aug 18, 07:20:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

@ புதுகை அப்துல்லா...
அண்ணா, இந்த தண்டணை அவர் செய்த கொடூரத்துக்கு போதுமானது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?//

நிச்சயம் போதாது.இருக்கின்ற சட்ட திட்டங்களின் படி இதுதான் முடியும் என்கிறார்கள். என்ன செய்வது. ;((

 
On Mon Aug 18, 07:34:00 PM GMT+8 , ராயன்-Rayan said...

http://www.tn.gov.in/transport/stu.htm

 
On Mon Aug 18, 09:25:00 PM GMT+8 , Anonymous said...

சொல்லாதே செய் என்பதற்கு என் அண்ணன் உதாரணமாக இருப்பதையிட்டு பெருமை கொள்கின்றேன்..

 
On Mon Aug 18, 10:56:00 PM GMT+8 , Mahesh said...

அண்ணாச்சி....நல்ல விசயஞ் சொல்லியிருக்கிய... இது மட்டுஞ் செரியா வேலை செஞ்சுதுன்னா சந்தோசந்தா....ஏன்னா டெல்லில ஒரு 6,7 வருசம் மும்புல இப்பிடி ஒண்ணு வச்சிருந்தாக.... ஹிட் அண்ட் ரன் BMW கேசு கேள்விப் பட்டிருக்கியளா? அது பத்தி நம்ம கூட்டாளி ஒருத்தரு கேக்க, 1 மாசத்துக்கு பொறவு அந்த வலைப் பக்கத்தையே தூக்கிட்டாக.

 
On Tue Aug 19, 08:42:00 AM GMT+8 , கயல்விழி said...

உங்கள் முயற்சியை உண்மையிலே பாராட்டுகிறேன், வெறும் பேசிக்கொண்டிருக்காமல் செயல்படுத்த முன்வருவது எப்படி என்பதற்கு நீங்கள் நல்ல முன் உதாரணம்.

 
On Tue Aug 19, 03:47:00 PM GMT+8 , குசும்பன் said...

இப்பொழுதுதான் நீங்கள் சொல்லி இருக்கும் சுட்டி பற்றி தெரியும் புக் மார்க் செஞ்சு வெச்சுக்கிறேன்.

நன்றி

 
On Tue Aug 19, 04:24:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

blogsking: ஜோசப்
அருமையான பதிவு
பின்னூட்டப் பெட்டி திறக்க முடியவில்லை
Sent at 3:52 PM on Tuesday
blogsking: "பொது பிரச்சனை என்று பாராமல் அதை புகாராக பதிவு செய்தது பாராட்டுக்குறியது. அப்படி ஒரு வழி இருக்கு என்பதை பலருக்கும் தெரியபடுத்தி இருபப்து அதை விட பாராட்டுக்குறியது"
வாழ்த்துக்கள்.
Sent at 3:53 PM on Tuesday
me: Thank you somuch
kindly mention your comments in the blog also
Sent at 3:56 PM on Tuesday
blogsking: ஆனா முடியலை ஜோசப்
இது தான் என் பின்னூட்டம்
நான் சொன்னதாக நீங்க போட்றுங்க
என் அனுமதியுடன் போட்டதாக சொல்லிடுங்க

நண்பரால் நேரடியாக எனது வலைப்பூவில் பின்னூட்டமிட முடியாததால் அவரது அனுமதியுடன் அதை இங்கு கொடுத்துள்ளேன்.

 
On Tue Aug 19, 07:43:00 PM GMT+8 , pudugaithendral said...

உங்கள் முயற்சியை உண்மையிலே பாராட்டுகிறேன், வெறும் பேசிக்கொண்டிருக்காமல் செயல்படுத்த முன்வருவது எப்படி என்பதற்கு நீங்கள் நல்ல முன் உதாரணம்.

வாழ்த்துக்களுடன் நானும் வழிமொழிகிறேன்.
உங்க போஸ்ட்டை கட் காபி செஞ்சு என் நண்பர்களுக்கு மெயிலாக அனுப்பலாமா?

 
On Fri Aug 22, 11:04:00 AM GMT+8 , Known Stranger said...

i appreciate your concern. You proved not just a talker but a serious about what you talk in blog. welcoming your attitude.

 
On Tue Aug 26, 12:42:00 PM GMT+8 , Selva Kumar said...

Thanks for the Information..

It is great that you are pursuing this furthur.

(Sorry no tamil fonts in Sify)

 
On Sat Aug 30, 09:16:00 PM GMT+8 , Rajes kannan said...

நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். தகவலுக்கு நன்றி.

 
On Sat Sep 27, 12:03:00 AM GMT+8 , Anonymous said...

தமிழிலும் நம் புகார்களை அனுப்ப முடியுமா? இன்னும் சற்று விரிவாக விளக்குங்கள்.please....

 
On Sun Sep 28, 10:11:00 PM GMT+8 , சந்தனமுல்லை said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்! புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!!

 
On Mon Sep 29, 12:51:00 AM GMT+8 , தருமி said...

கீழேயுள்ள மூன்று பதிவுகளையும் பாருங்களேன்.
உங்கள் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்

மீண்டும் ஒரு வேண்டுகோள்

fixmyindia blog of surveysan

 
On Mon Aug 20, 10:41:00 AM GMT+8 , siga.lenin said...

சொல்லாதே செய் என்பதற்கு என் அண்ணன் உதாரணமாக இருப்பதையிட்டு பெருமை கொள்கின்றேன்
http://kenakkirukkan.blogspot.com/

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க