Author: ஜோசப் பால்ராஜ்
•2:06 PM
காவிரி படுகை மாவட்ட விவசாயிகளின் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் எங்கள் அன்புக்குறிய மேட்டூர் அணைக்கு இன்று பிறந்த நாள். இன்று 74 வயதை நிறைவு செய்து பவள விழா ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது எங்கள் மேட்டூர் அணை.

இஸ்லாமியர் எப்படி புனித மெக்கா இருக்கும் திசை நோக்கி தொழுகை செய்வார்களோ அதுபோல் எங்கள் விவசாயமும் மேட்டூர் இருக்கும் திசை பார்த்து தான் இருக்கும்.

1925 ஜீலை 20 ஆம் தேதி அணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1934 ஆகஸ்ட் 21 ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லியால் திறந்து வைக்கப்பட்ட இந்த அணைக்கு ஸ்டான்லி நீர்தேக்கம் என்றுதான் முதலில் பெயரிடப்பட்டது. இன்றும் அந்த பெயர் அணையில் எழுதப்பட்டிருந்தாலும் மேட்டூர் அணை என்றுதான் எல்லோராலும் அறியப்படுகின்றது.

இந்த அணைக்கு சொந்தமான நீர்பிடிப்பு பகுதிகள் இருந்தாலும், பெருமளவிலான நீர் ஆதரம் கர்நாடகாவை நம்பியே உள்ளது. சொந்தமாய் ஒளி இல்லா சந்திரனுக்கு வளர்பிறை, முழுநிலவு, தேய்பிறை , அம்மாவாசை என்றிருப்பதுபோல் கர்நாடகாவை நம்பியே இருப்பதால் இதன் நீர்மட்டமும் எப்போதும் சீராய இல்லாமல் வளர்வதும், தேய்வதுமாய் இருக்கின்றது.

எங்கள் வாழ்வுக்கு ஆதாரமாய் விளங்கும் இந்த அணை எந்நாளும் நீடித்து நிலைத்து,எப்போதும் நிரம்ப நீரோடு எமக்கு சேவை புரிய வேண்டும் என்று இந்த தஞ்சை மாவட்டத்து உழவன் மகனோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள். Udanz
This entry was posted on 2:06 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On Thu Aug 21, 02:42:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்!!!

 
On Thu Aug 21, 03:35:00 PM GMT+8 , விஜய் ஆனந்த் said...

என்னுடைய வாழ்த்துக்களும்!!!

நிலா, நீர்மட்ட ஒப்பீடு பளிச்...

 
On Thu Aug 21, 03:37:00 PM GMT+8 , ஜோ/Joe said...

வாழ்த்துகிறேன்!

 
On Thu Aug 21, 04:53:00 PM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

என் வாழ்த்துக்கள்.. தகவல் நிறைந்தப் பதிவு...

 
On Thu Aug 21, 05:34:00 PM GMT+8 , Anonymous said...

Hearty Wishes!!!

Wish Mettur Dam will have one more sibling too...

 
On Fri Aug 22, 02:37:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அண்ணே! எந்தக் காலத்திலும் நமக்கு கர்நாடகப் பகுதிகளில் இருந்து நீர் வந்தது இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் உரிய நேரத்தில் நமக்கு பருவ மழையைத் தந்து அதுதான் காவிரி வழியாக நீரை தஞ்சைத் தரணிக்கும் மற்ற காவிரி பாயும் மாநிலங்களுக்கும் தந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளையெல்லாம் வெள்ளையர் தேனீர் பயிரிட அழித்து எஸ்டேட் ஆக்கினர். ஆகையால் பருவமழை பொய்த்தும் குறைந்தும் காவேரியில் நீர்வரத்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியது. உண்மையில் இன்று மேற்குத் தொடர்ச்சிமலையின் ஊட்டி,வால்பாறைப் பகுதிகளில் தேனீர் விற்பனையாலும்,ஏற்றுமதியாலும் கிடைக்கும் லாபத்தை விட அதிகமான இழப்பை காவேரி பாயும் மற்ற மாவட்டங்களில் பிற விவசாயங்களில் இழந்து கொண்டு இருக்கிறோம் நீர் இல்லாததால் ... :((

ஊட்டி,வால்பாறைப் பகுதிகளில் உள்ள தேயிலை எஸ்டேட்களை மீண்டும் காடாக்கினால் தேயிலை மூலம் வரும் வருமானத்தைவிட பன்மடங்கு அதிக வருமானத்தை டெல்டா மாவட்டங்களில் இருந்து நம்மால் அரசுக்கு அளிக்க முடியும்.

 
On Fri Aug 22, 02:38:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அண்ணே! எந்தக் காலத்திலும் நமக்கு கர்நாடகப் பகுதிகளில் இருந்து நீர் வந்தது இல்லை. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் உரிய நேரத்தில் நமக்கு பருவ மழையைத் தந்து அதுதான் காவிரி வழியாக நீரை தஞ்சைத் தரணிக்கும் மற்ற காவிரி பாயும் மாநிலங்களுக்கும் தந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளையெல்லாம் வெள்ளையர் தேனீர் பயிரிட அழித்து எஸ்டேட் ஆக்கினர். ஆகையால் பருவமழை பொய்த்தும் குறைந்தும் காவேரியில் நீர்வரத்து கொஞ்சம் கொஞ்சமாக குறையத் துவங்கியது. உண்மையில் இன்று மேற்குத் தொடர்ச்சிமலையின் ஊட்டி,வால்பாறைப் பகுதிகளில் தேனீர் விற்பனையாலும்,ஏற்றுமதியாலும் கிடைக்கும் லாபத்தை விட அதிகமான இழப்பை காவேரி பாயும் மற்ற மாவட்டங்களில் பிற விவசாயங்களில் இழந்து கொண்டு இருக்கிறோம் நீர் இல்லாததால் ... :((

ஊட்டி,வால்பாறைப் பகுதிகளில் உள்ள தேயிலை எஸ்டேட்களை மீண்டும் காடாக்கினால் தேயிலை மூலம் வரும் வருமானத்தைவிட பன்மடங்கு அதிக வருமானத்தை டெல்டா மாவட்டங்களில் இருந்து நம்மால் அரசுக்கு அளிக்க முடியும்.
டீ முக்கியமா? சோறு முக்கியமா என தீர்மானிக்க வேண்டியது இனி அரசுதான்.

 
On Fri Aug 22, 10:58:00 AM GMT+8 , Thamiz Priyan said...

தமிழகத்தில் பல மாவட்டங்களின் உயிராக இருக்கும் காவிரியின் மேட்டூர் நீர்தேக்கத்தைப் பற்றிய பதிவுக்கு வாழ்த்துக்கள்! மேட்டூர் அணையும் எப்போதும் நிரம்பி இருக்க வாழ்த்துக்கள்!

 
On Fri Aug 22, 11:20:00 AM GMT+8 , துளசி கோபால் said...

74?

நல்லா இருக்கட்டும்.

இனிய வாழ்த்து(க்)கள்

 
On Fri Aug 22, 12:08:00 PM GMT+8 , Divya said...

வாழ்த்துக்கள்!

 
On Sun Aug 24, 08:15:00 AM GMT+8 , வடுவூர் குமார் said...

புதுமையான வாழ்த்து.
புதுவை எம் எம் அப்துல்லா சொல்கிற கருத்து புதுமையாக இருக்கே!! இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.

 
On Sun Aug 24, 03:03:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாழ்த்துக்களை சொன்ன அனைவருக்கும் நன்றி.

அப்துல்லா அண்ணண் சொன்ன தகவல்களை நான் இப்போதுதான் அறிகிறேன். இது குறித்து இணையத்தில் நான் தேடியும் எனக்கு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. மேட்டூர் அணை கட்ட திட்டமிடப்பட்ட போதே அதை மைசூர் சமஸ்தானம் பல முட்டுக்கட்டைக்களை போட்டது. அதனால் பலமுறை அணைகட்டும் திட்டம் தள்ளிப்போனது. ஆனால் வருடா வருடம் காவிரியில் வெள்ளம் வரும்போது மட்டும் கர்நாடாகவினர் மிக அதிகளவில் நீரை வெளியேற்றுவதனால் தமிழகத்தில் வெள்ளம் வந்து காவிரி பாயும் மாவட்டங்களில் மிகப் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருந்தது. இதனால் கடைசியாக தமிழக விவசாயிகளுக்கு வெள்ளத்தால் ஏற்படும் இழப்புகளுக்காக வருடம் 30 லட்சம் இழப்பீடு கொடுக்குமாறு மைசூர் சமஸ்தானத்தை கேட்டனர். அதன் பிறகுதான் மைசூர் சமஸ்தானம் அணை கட்ட ஒப்புதல் அளித்தது. இப்ப‌டி பிற‌ப்புக்கே ப‌ல‌ போராட்ட‌ங்க‌ளை க‌ண்டுதான் ந‌ம் மேட்டூர் உருவான‌து.

வைகை அணை க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ப்போது நீர்பிடிப்பு ப‌குதிக‌ளுக்காக‌ ப‌ல‌ கிராம‌ங்க‌ள் காலி செய்ய‌ப்ப‌ட்ட‌ விவ‌ர‌ங்க‌ள் ந‌ம‌க்கு ந‌ன்கு தெரியும், வைர‌முத்து அதை அடிப்ப‌டையாக‌ வைத்து க‌ள்ளிக்காட்டு இதிகாச‌ம் என்ற‌ அழ‌கிய‌ காவிய‌ம் இய‌ற்றியிருந்தார். அத‌ன் மூல‌மாக‌வாவ‌து ந‌ம்மால் இவ‌ற்றை அறிந்துகொண்டோம். ஆனால் மேட்டூர் அணை க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ போது எத்த‌னை கிராம‌ங்க‌ள் காலி செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌, எந்த‌ ப‌குதிக‌ள் அத‌ன் நீர் பிடிப்பு ப‌குதிக‌ள் என்ப‌து போன்ற‌ விவ‌ர‌ங்க‌ள் தேடியும் கிடைக்க‌வில்லை. ஆனால் மேட்டூர் அணைக்குள் சில‌ கிராம‌ங்க‌ள் இருந்த‌ன‌ என்ப‌து நீர் ம‌ட்ட‌ம் குறையும் போது சில‌ கோயிலும், ந‌ந்தியும் , ஒரு கிறிஸ்த‌வ‌ ஆல‌ய‌மும் தெரிகின்ற‌ன‌. இதை த‌விர‌ வேறு எந்த‌ விவ‌ர‌ங்க‌ளும் தெரிய‌வில்லை.


ஒரு வேளை அப்துல்லா அண்ண‌ண் சொல்வ‌து போல் வால்பாறை, ஊட்டி போன்ற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ காடுக‌ள் தான் மேட்டூரின் நீர்பிடிப்பு ப‌குதிக‌ள் என்ப‌து உண்மையானாலும் இப்போது ஒன்றும் செய்ய‌ முடியாத‌ நிலையில்தான் நாம் உள்ளோம். அங்கு இருக்கும் தேயிலைத் தோட்ட‌ங்க‌ளையெல்லாம் அழித்துவிட்டு மீண்டும் காடுக‌ளை வ‌ளர்ப்ப‌து ஒன்றும் சாதார‌ண‌ விச‌ய‌ம் இல்லை. இழ‌ந்த‌து இழ‌ந்த‌து தான். இனியாவ‌து இழ‌ப்பு ஏற்ப‌டாம‌ல் த‌டுக்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டுமோ அதைச் செய்ய‌ வேண்டும்.

 
On Sun Aug 24, 03:05:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

எங்கள் அணைக்கு வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்.

 
On Sun Aug 24, 08:34:00 PM GMT+8 , Anonymous said...

வாழ்த்துக்கள்..
உங்க ஊரில் நானும் ஓர் அணையை பார்த்தேன்..

 
On Sun Aug 24, 08:48:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...
This comment has been removed by the author.
 
On Tue Sep 02, 11:09:00 PM GMT+8 , குடுகுடுப்பை said...

வாழ்த்துக்கள்
சக உழவன்.

 
On Thu Oct 09, 03:23:00 AM GMT+8 , Anonymous said...

அன்பு ஜோ,
நானும் உங்கள் ஊரின் அருகில்
உள்ள மைக்கேல் பட்டி என்ற கிராமத்தைச்
சேர்ந்தவன்தான். வித்தியாசமான வாழ்த்திற்கு நன்றி!!!

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க