Author: ஜோசப் பால்ராஜ்
•5:29 PM
தமிழுக்காக பல பதிவுகளை நான் எழுதியிருந்தாலும், நேற்று நடந்த ஒரு வலையுரையாடல் என்னை இப்பதிவை எழுத தூண்டியது.

பலநாட்களாய் வலைப்பூ வைத்துக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதிவந்தாலும் தற்போது தமிழில் எழுத ஆரம்பித்திருக்கும் என் உயிர் நண்பண் ஒருவன் நேற்று ஒரு பதிவை எழுதிவிட்டு என்னை படிக்க சொன்னான். ஆங்கில வழியில் கல்வி பயின்ற அவன் தமிழில் பல எழுத்துப்பிழைகளுடன் எழுதியிருந்தான். ண, ன ,ர,ற ,ள,ல,ழ வித்தியாசங்கள் சுத்தமாக தெரியாமல் எழுதியிருந்தான். மிக கோபமாகவே கேட்டேன் என்னடா இப்படி தப்புத்தப்பா எழுதியிருக்க, தமிழ் கூடவா தெரியாதுன்னு கேட்டேன்.

ஆனால் என் நண்பணின் வாதம் என்னவென்றால், இது அவர்களது தவறில்லை, நமது கல்வி முறையின் தவறுதான் என்பதே. நம் கல்வி முறை எப்படி மாற்றியமைப்பது என்று யோசிக்க வேண்டும் என்று சொல்கிறான் அவன்.

இதில் நம் கல்வி முறையின் தவறு என்னவென்று எனக்கு தெரியவில்லை. கட்டாயம் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என சில பள்ளிகளில் விதிமுறை விதிப்பது குறித்தெல்லாம் பேச்சு வந்தது. தமிழ் நம் தாய்மொழி, ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி, இன்று வேலை வாய்ப்பை பெற ஆங்கில அறிவு மிக அதிகமாக தேவை என்பதால் ஆங்கில அறிவு அத்யாவசியமான ஒன்று. எனவே ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள, அதில் சரளமாக பேசவும், எழுதவும் பள்ளிகளில் பயிற்சி அளிக்கத்தான் வேண்டும். அதில் தவறே இல்லை. ஆனால் உங்கள் வீடுகளிலும், பள்ளிக்கு வெளியிலும் உங்களை அவ்வாறே பேசச் சொன்னது யார்?

இப்படித்தான் கடந்த மே மாதம் நான் ஊருக்கு சென்றிருந்த போது என் சகோதரியின் மகன், ஆங்கிலவழிக் கல்வியில் ஆறம் வகுப்பு முடித்திருந்தவனுக்கு தமிழை சரளமாக வாசிக்கவும், எழுதவும் தெரியவில்லை. மிக சாதாரணமாய் இல்லை மாமா,எனக்கு தமிழ் எல்லாம் படிக்கத்தெரியாதுனு சொன்னாரு என் அருமை மாப்பிள்ளை. எனக்கு கடுமையான சினம் வந்தது, அதே நேரம் இதை எப்படி சரிசெய்வது என்று சிந்தித்தேன், பள்ளிக்கல்வி வேண்டுமாணால் அவர்களுக்கு தமிழ் அறிவை அளிக்க தவறி இருக்கலாம். பிள்ளைகளும் அதையே பின்பற்றிக்கொண்டு செல்லலாம், ஆனால் நமக்கு எங்கே போனது புத்தி? என் புள்ளைக்கு தமிழ் படிக்ககூட தெரியாதுன்னு சொல்றதுல தானே நமக்கு பெருமை? பின்ன எங்க நமக்கு தாய்மொழி மேல அக்கறை வரப்போவுது?

கடைசியா என் மாப்பிள்ளைக்கு நான் சொன்ன தீர்வு, தமிழ் செய்திதாள்களை வாங்கி படிக்க சொன்னேன், தினமும் சத்தமாக படிக்க சொன்னேன், இப்போ மாப்பிள்ளை ஒழுங்கா தமிழ் படிக்கிறாரு. நான் இதை சுட்டிக்காட்டிய பின்னர்தான் என் சகோதரியும் இதை உணர்ந்தார். இனி கட்டாயம் என் சகோதரி தன் மகன் தமிழை மறக்க விடாமல் செய்வார். இதுதான் ஒவ்வொரு பெற்றோரும் செய்ய வேண்டியது.

பிள்ளைகள் ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளை கட்டாயம் கற்கவேண்டும். முடிந்தால் ஜெர்மன், பிரெஞ்சு, ஜப்பான் மொழிகளையும் கற்றுக்கொள்ள சொல்லுங்கள். பிற மொழிகளை எத்தனை முடியுமோ அத்தனை கற்க சொல்லுங்கள். ஆனால் அதே நேரம் தாய் மொழியை மறக்காமல் இருக்க செய்யுங்கள். பள்ளிகளில் அவர்கள் வேற்று மொழியை கற்கட்டும். வீட்டில் தாய் மொழியை பழக்குங்கள்.

நம் மூத்த பதிவர் டோண்டு ராகவன் அய்யா கூட பிரெஞ்ச், ஜெர்மன் போன்ற மொழிகளை கற்றறிந்து, மொழிபெயர்பாளராக பணியாற்றிக்கொண்டுதானே இருக்கின்றார். இத்தனை மொழிகளையும் கற்றதால் அவர் தமிழை பிழையாகவா எழுதுகின்றார்? இல்லை எனக்கு தமிழே தெரியாது என்று சொல்கிறாரா என்ன ? நேற்று என்னோடு உரையாடிய நண்பண் சொன்னது, தற்போது எல்லாவற்றையுமே என்னால் ஆங்கிலத்தில்தான் சிந்திக்கவே முடிகின்றது என்று சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சிந்திக்கக் கூட அந்நிய மொழிதான் என்ற அளவுக்கு தாய்மொழியை கண்டுகொள்ளாமல் விட்டது யார் தவறு?

சிங்கப்பூரில் தமிழ் மொழி ஒரு தேசிய மொழி, இங்கு எல்லா இடங்களிலும் தமிழ் மொழி உண்டு. ஆனால் இங்கு இருக்கும் எனது உறவினர் ஒருவரின் குழந்தைக்கு தமிழே தெரியாது. இந்தியாவில் இருக்கும் உறவினர்கள் கூட அவர்கள் இந்தியா வரும்போது அந்த குழந்தையுடன் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் தமிழ் என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில் இருப்பவர்கள் நிலை ?

இந்த‌ விச‌ய‌த்தில் ந‌ம‌து ஈழ‌த்து ச‌கோத‌ர‌ர்க‌ள் ந‌ம்மைவிட‌ ந‌ல்ல‌வ‌ர்க‌ள். கால‌ சூழ்நிலையில் அவ‌ர்க‌ள் ப‌ல்வேறு நாடுக‌ளுக்கு புல‌ம்பெய‌ர்ந்தாலும், இளைய‌ த‌லைமுறையின‌ர் இன்னும் த‌மிழை விட்டுவிட‌வில்லை. நேற்றுகூட‌ ஆஸ்திரேலியாவுல‌ உள்ள‌ ஈழ‌த‌மிழ் ச‌கோத‌ரி ஒருவ‌ட‌ன் வ‌லை மூல‌ம் பேசிய‌போது, அந்த‌ ச‌கோத‌ரி முத‌லில் ஆங்கில‌த்தில் பேசினாலும், சுதாரித்துக்கொண்டு உட‌னே த‌மிழில் பேச‌ ஆர‌ம்பித்தார். இனிய‌ த‌மிழில்தான் எங்க‌ள் உரையாட‌ல் சென்ற‌து.

ஆஸ்திரேலியாவில் தமிழை ஒரு பாடமாக படிக்காத போதும், தனது சொந்த முயற்சியால் தமிழைக் கற்று, வலையுலகில் எனக்கு முன்னரே தொடங்கி பல பதிவுகளை அழகுத் தமிழில் வெளியிட்ட என் அன்பு சகோதரி தூயாவிற்கு இந்த பதிவு சமர்பணம். இப்படி உள்ளவர்கள் இருக்கும் வரை என் இனிய தாய்மொழி காப்பாற்றப்படும்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்னர் பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடந்த யூத இனம், தங்களது மொழியை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியதால்தான் இன்று அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி மிக நன்றாக முன்னேறியுள்ளார்கள்.

வெறும் அந்நியமொழியால் மட்டும் நமக்கு முன்னேற்றம் கிட்டாது என்பதற்கு ஜப்பானையும், சீனாவையும் மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டாக கூறத்தேவையிருக்காது.

செம்மொழியாகிவிட்டால் போதாது, அது நம்மொழியாய் இருக்க வேண்டும். தயவுசெய்து தாய்மொழியே வீட்டில் நம் மொழியாய் இருக்கட்டும்.

வீட்டிலும் நாம் நம் மொழியை மறந்துவிட்டால், மெல்ல தமிழ் இனி சாகும்... Udanz
This entry was posted on 5:29 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

55 comments:

On Sun Aug 10, 09:06:00 PM GMT+8 , Anonymous said...

நான் முதலில் பின்னோட்டம் எழுதுகின்றேன் ;)

பதிவை பற்றி அப்புறம் சொல்கின்றேன்

 
On Sun Aug 10, 09:19:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

முதல் வருகைக்கு நன்றி பபா.
உங்கள் கருத்துக்களை கட்டாயம் சொல்லுங்கள். ஈழ சொந்தங்கள் தமிழை எப்படி காக்கின்றார்கள் என்பது குறித்த உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

 
On Sun Aug 10, 09:25:00 PM GMT+8 , டொன் லீ said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது. இதைத்தான் நான் பலருக்கு எடுத்துச்சொல்லி வருகிறேன். ஆனால் என் வயதை ஒத்த இளையவர்களிடம் கூட அக்கறை இல்லாதது ஆதங்கத்தை தருகின்றது..

 
On Sun Aug 10, 09:27:00 PM GMT+8 , டொன் லீ said...

உங்கள் ஆதங்கம் நியாயமானது. என் நண்பர்கள் பலரிடமும் நான் இதைத்தான் வலியுறுத்தி வருகிறேன். இன்றைய தலைமுறை தமிழ் மீது அக்கறையோ பற்றோ வைப்பது குறைவாகத்தான் இருக்கின்றது.

 
On Sun Aug 10, 09:41:00 PM GMT+8 , கிரி said...

//உங்கள் வீடுகளிலும், பள்ளிக்கு வெளியிலும் உங்களை அவ்வாறே பேசச் சொன்னது யார்?//

நியாயமான கேள்வி தான். ஆனால் தமிழ் தெரியாது என்று சொல்வதை தான் பெருமையாக கருதுகிறார்கள் :-(

//பிற மொழிகளை எத்தனை முடியுமோ அத்தனை கற்க சொல்லுங்கள். ஆனால் அதே நேரம் தாய் மொழியை மறக்காமல் இருக்க செய்யுங்கள். பள்ளிகளில் அவர்கள் வேற்று மொழியை கற்கட்டும். வீட்டில் தாய் மொழியை பழக்குங்கள்.//

சரியாக சொன்னீர்கள்

உண்மை தான், பிற மொழிகளை கற்று கொள்வது தவறு அல்ல..ஆனால் நம் மொழியை அந்நிய மொழி போல் கருதுவது தான் வேதனை அளிக்கிறது.

பெற்றோரும் தன் குழந்தைகள் தங்களை டாடி மம்மி என்ட்ரி கூறுவதையே விரும்புகிறார்கள், அப்படி இருக்கும் போது குழந்தைகளை குறை கூறி என்ன பயன்.

தமிழ் எழுத தெரியாது சரியா பேச வராது என்று சொல்வதை பெருமையாக நினைக்கும் வரை தமிழ் உயர வாய்ப்பு இல்லை.

நல்ல பதிவு ஜோசப் பால்ராஜ்.

 
On Sun Aug 10, 09:55:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

மிக நல்ல சிந்தனை !

 
On Sun Aug 10, 09:56:00 PM GMT+8 , Sen said...

SORRY no comments plzzz

 
On Sun Aug 10, 10:04:00 PM GMT+8 , தமிழன்... said...

எழுதுங்க...

 
On Sun Aug 10, 10:23:00 PM GMT+8 , ராஜ நடராஜன் said...

அருமையான பதிவு.நீங்கள் சொல்லியது போல் எத்தனை மொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளதோ அத்தனையும் கற்கவேண்டும்.வீட்டில் படித்த பெற்றோர்கள் ஆங்கிலத்தில் பேசாமல் தமிழில் பேசிப் பழகினால் குழந்தைகளும் தமிழில் பேசவே செய்யும்.ஈழத்து சகோதரர்கள் தங்கள் அடையாளம் காணாமல் போய்விடக்கூடாதென்பதற்காக தொலைகாட்சியூடே தமிழையும் தமிழ் வகுப்புக்கள் கூட எழுத்து முறையாக நடத்துவதைப் பார்த்திருக்கிறேன்.நாம் தமிழ்மண்ணில் இருந்துகொண்டு தமிழ் வரவில்லையென்பது அவமானம்.ஆங்கிலம் படிப்பதால்தான் தமிழ் பேச எழுத வரவில்லையா? அல்லது ஆங்கிலம் பேசினால்தான் மதிப்பு என்பதால் தமிழை மறந்து போகிறார்களா? அரசும் இது பற்றி யோசனை செய்யவேண்டும்.மக்களுக்கும் தமிழ் விழிப்புணர்வு வரவேண்டும்.வடமாநிலத்தில் ஆங்கிலமும்,இந்தியும் கால சூழலுக்குத்தகுந்தவாறு பேசுகிறார்கள்.அவர்களுக்கெல்லாம் வராத சாபம் ஏன் தமிழனுக்கு மட்டும்?

 
On Sun Aug 10, 10:49:00 PM GMT+8 , ஜோதிபாரதி said...

எனது நண்பர்கள், கேரளத்தில் பிறந்தவர்கள் (மலையாளிகள்) சென்னையில் தினத்தந்தி வாங்கி படித்து தமிழ் கற்றவர்களும் உண்டு. பிழை இல்லாமல் எழுதவும் செய்வார்கள். இதைப் பார்க்கும் போது தமிழனுக்குத் தமிழ் தெரியவில்லை என்றால் கொஞ்சம் வெட்கப்பட வேண்டிய விடயம் தான்.
அன்புடன்,
ஜோதிபாரதி.

 
On Sun Aug 10, 11:12:00 PM GMT+8 , சூர்யா said...

'நமது மனித இனத்தின் வரலாற்றை பார்த்தோமானால், கலாச்சாரம் வளர வளர, பல மொழிகள் அழிந்து கொண்டேதான் வருகிறது. ஏன் நம் தமிழ் மொழியே கூட பல விதமான மாற்றங்களை அடைந்துள்ளது. நாம் என்னதான் முயன்றாலும், இனிமேல் தமிழ் வாழ்க்கைக்கு உதவாது என்பதால் தமிழ் மொழியைக் காப்பாற்றுவது மிகக் கடினம். சென்னைப் போன்ற நகரங்களில், Upper middle class and above குடும்பங்களில் தமிழ் பேசும் குழந்தைகள் மிக அரிதாகி வருகிறது. குழந்தைகளும் தமிழ் பேசுவதை கேவலமாக நினைப்பது பொதுவாகி வருகிறது. இதை மாற்றுவது என்பது முடியாது, அப்படி முயன்றாலும் நம் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை இடுவது போலவேயாகும்.

ஒரு மொழியின் மீதோ, மதத்தின் மீதோ அதீத வெறியுடன் இருப்பது நம் மனித இனத்திற்கு நல்லதில்லை. இப்போது மூன்றாம் உலகப்போர் வருவதற்கான சூழ் நிலை நிலவுவதற்கான அடிப்படைக் காரணமே, இந்த யூதர்கள் முஸ்லிம் மக்களின் மீது நடத்திவரும் அட்டூழியம்தான்.'

- இவையனைத்தும் எனது கருத்தல்ல. எனக்கு மிக நெருக்கமான ஈழ நண்பருடையது.

 
On Sun Aug 10, 11:46:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//Sen said...
SORRY no comments plzzz//

பதிவோட கருப்பொருளே நீ தானே நண்பா?நீ உன் மனசுல படுறத சொல்லணும்னு நான் எதிர்பார்கிறேன்.

 
On Sun Aug 10, 11:58:00 PM GMT+8 , ஜோ / Joe said...

அருமையாக சொன்னீர்கள் !
எல்லா மொழிகளையும் கற்போம் ,தாய் தமிழை இழந்து அல்ல.
எல்லா தாய்மார்க‌லையும் நேசிப்போம் ,சொந்த‌ தாயை அனாதை இல்ல‌த்துக்கு அனுப்பாம‌ல்

 
On Mon Aug 11, 12:13:00 AM GMT+8 , சதீசு குமார் said...

தமிழுக்கென்று ஓர் அருமையான பதிவு..

 
On Mon Aug 11, 12:24:00 AM GMT+8 , Indian said...

http://baluindo.blogspot.com/2008/07/blog-post_28.html

இந்தப் பதிவின் பின்னூட்டங்களைப் படித்துப் பாருங்கள்.

 
On Mon Aug 11, 02:05:00 AM GMT+8 , வழிப்போக்கன் said...

நல்ல கருத்துக்கள் ஜோசப்.

நானும் ஆங்கில வழி படித்தவன்தான். எனினும் பள்ளியில் பிரம்பில் வாங்கிய அடிகள் என்னை சுமாராக எழுதும் அளவிற்கு வைத்துள்ளது.

பதிவு எழுத ஆரம்பித்த பின்புதான் எழுத்துமுறையில் நான் செய்யும் தவறுகள் புரிகிறது.

 
On Mon Aug 11, 11:10:00 AM GMT+8 , முகவை மைந்தன் said...

உள்ளேன் ஐயா.

உங்க மாப்பிள்ளைக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்.

 
On Mon Aug 11, 11:12:00 AM GMT+8 , ஜெகதீசன் said...

ஆக்சுவலி, ஸ்கூல்ல என் செகண்ட் லாங்வேஜ் பிரஞ்ச் அதனால தமிழ் எனக்கு திக்கித் திக்கித் தான் படிக்க முடியும் ன்னு சொன்ன என் நண்பனைப் பார்த்து கோவப்படுவதா இல்லை பரிதாபப் படுவதான்னு தெரியலை.... :(

"என் பையனுக்குத் தமிழ் தெரியாது" என்று சொல்வதைப் பெருமையாக நினைக்கும் பெற்றோர் இருக்கும்வரை, இந்த நிலை மாறாது...

 
On Mon Aug 11, 02:50:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்னர் பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடந்த யூத இனம், தங்களது மொழியை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியதால்தான் இன்று அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி மிக நன்றாக முன்னேறியுள்ளார்கள்.

//

ஜோசப் அண்ணே! நல்லா உரைக்கின்ற மாதிரி சொன்னீங்க. யூதர்கள் தமக்கென்று ஓரு பூமி வேண்டும் என்று முடிவெடுத்த போது ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கை உடைய யூதர்களே அவர்களது தாய் மொழியை அறிந்து இருந்தனர்.வந்தேறிகளாக பல இடங்களில் குடியேறிய யூதர்கள் காலப்போக்கில் தங்கள் மொழிமறந்து அந்தந்த நாட்டின் மொழியையே அறிந்து இருந்தனர். மொழியால் மட்டுமே ஓரு இனத்தைக் கட்டமைக்க முடியும் என்பதை நன்கு உனர்ந்த யூதத் தலைமை தாய்மொழியை அறிந்த அந்த வெகு சிலரை யூதர்கள் வாழும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி அவர்களுக்கு மீண்டும் தாய்மொழியை கற்பித்தனர். அதன் பின் நடந்தது அவர்கள் கனவிலும் நினைக்காத வரலாறு.

இந்த இடத்தில் என் தந்தையைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். அவர் என் சகோதரிக்கு செல்வி என்று அழகு தமிழில் பெயர் வைத்தார்.(எனக்கு அம்மா வேண்டுதல் காரணமாக இந்தப் பெயரை வைத்தார்). அப்பா என் இரண்டு பெண் பிள்ளைகளையும் கூட தங்கம், கண்மணி என்று தமிழ் பெயரில் தான் செல்லமாக அழைக்கிறார். தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர். யாரேனும் குரானில் வரும் அரபுப் பெயர் இன்றி தமிழில் பெயர்வைத்து இருக்கின்றீர்களே எனக் கேட்டால் இஸ்லாம் எந்தன் வழி, இன்பத் தமிழ் எந்தன் மொழி என்று கர்வத்தோடு சொல்லுவார்.

 
On Mon Aug 11, 02:55:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

இஸ்ரேல் என்ற நாடு உருவாவதற்கு முன்னர் பல்வேறு நாடுகளில் சிதறிக்கிடந்த யூத இனம், தங்களது மொழியை விட்டுக்கொடுக்காமல் காப்பாற்றியதால்தான் இன்று அவர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கி மிக நன்றாக முன்னேறியுள்ளார்கள்.

//

ஜோசப் அண்ணே! நல்லா உரைக்கின்ற மாதிரி சொன்னீங்க. யூதர்கள் தமக்கென்று ஓரு பூமி வேண்டும் என்று முடிவெடுத்த போது ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கை உடைய யூதர்களே அவர்களது தாய் மொழியை அறிந்து இருந்தனர்.வந்தேறிகளாக பல இடங்களில் குடியேறிய யூதர்கள் காலப்போக்கில் தங்கள் மொழிமறந்து அந்தந்த நாட்டின் மொழியையே அறிந்து இருந்தனர். மொழியால் மட்டுமே ஓரு இனத்தைக் கட்டமைக்க முடியும் என்பதை நன்கு உனர்ந்த யூதத் தலைமை தாய்மொழியை அறிந்த அந்த வெகு சிலரை யூதர்கள் வாழும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி அவர்களுக்கு மீண்டும் தாய்மொழியை கற்பித்தனர். அதன் பின் நடந்தது அவர்கள் கனவிலும் நினைக்காத வரலாறு.

இந்த இடத்தில் என் தந்தையைப் பற்றி குறிப்பிட விரும்புகின்றேன். அவர் என் சகோதரிக்கு செல்வி என்று அழகு தமிழில் பெயர் வைத்தார்.(எனக்கு அம்மா வேண்டுதல் காரணமாக இந்தப் பெயரை வைத்தார்). அப்பா என் இரண்டு பெண் பிள்ளைகளையும் கூட தங்கம், கண்மணி என்று தமிழ் பெயரில் தான் செல்லமாக அழைக்கிறார். தீவிர கடவுள் நம்பிக்கை உடையவர். யாரேனும் குரானில் வரும் அரபுப் பெயர் இன்றி தமிழில் பெயர்வைத்து இருக்கின்றீர்களே எனக் கேட்டால் இஸ்லாம் எந்தன் வழி, இன்பத் தமிழ் எந்தன் மொழி என்று கர்வத்தோடு சொல்லுவார்.

 
On Mon Aug 11, 03:35:00 PM GMT+8 , ஜோ / Joe said...

//இஸ்லாம் எந்தன் வழி, இன்பத் தமிழ் எந்தன் மொழி என்று கர்வத்தோடு சொல்லுவார்.//

ஆகா!மகிழ்ச்சி!

 
On Mon Aug 11, 03:45:00 PM GMT+8 , Thamizhmaangani said...

எனக்கு தமிழ் வராது என்று சொல்வது fashion என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். அந்த போக்கை மாற்ற வேண்டும்!

 
On Mon Aug 11, 04:39:00 PM GMT+8 , கயல்விழி said...

நல்ல பதீவூ ஜோசப்.

தமிழ் ஏன் தெரியவில்லை என்பதற்கு நாமெல்லாம் வசதியாக நம் கல்விமுறையை குற்றம் சொன்னாலும், உண்மையான காரணம் தமிழிராக இருப்பதிலும், தமிழ் பேசுவதிலுமே நம்மில் பலர் வெட்கப்படுவது தான் :(

ஈழத்தமிழர்கள் தங்களை தமிழராக அடையாளப்படுத்திக்கொள்வது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

 
On Mon Aug 11, 05:26:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@கயல்விழி,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கயல்விழி. பதிவு என்பதை பதீவு என தட்டச்சியுள்ளீர்கள். :‍)
தமிழன் என்று சொல்வதிலும், தாய்மொழியில் பேசுவதிலும் அச்சம் கொள்ளவும், நாணம் ஏற்படவும் என்ன இருக்கின்றது என தெரியவில்லை.

@ தமிழ்மாங்கனி,
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

@ அப்துல்லா அண்ணா..
தந்தையாரின் தமிழ் பற்று குறித்து அறியும்போது பெருமிதம் ஏற்படுகின்றது.

@முகவை மைந்தன்..
வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி இராம்.

 
On Mon Aug 11, 05:32:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@ஜெகதீசன்...

வாங்க ஜெகதீசன், மற்ற மொழிகளை படிப்பதால் ஏற்படும் நன்மைகள் அதிகம்தான். ஆனால் மற்ற மொழிகளைப் படித்தால் தாய்மொழியை மறக்க வேண்டும் என நினைப்பதுதான் வேதனையானது.

என் தோழன் ஒருவன், மிக அருமையாக ஆங்கிலத்தில் பேசுவான், எழுதுவான், ஆனால் தமிழ் எழுதவும், படிக்கவும் தடுமாறுவான். இன்றுவரை அவன் அதை ஒரு குறையாக நினைக்கவில்லை. அதே தோழன், ஒரு அந்நிய மொழியான ஆங்கிலத்தை நான் தப்பாக பேசியதற்கு என்னைப்பார்த்து கோபமாக திட்டினான். அவர்களைப் பார்த்து அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்லை. அந்நிய மொழியை ஒருவன் தவறாக பேசுவது அதுவும் என் போன்ற தமிழ்வழி கல்வி பயின்றவன் பேசுவது அப்படி என்ன கொலை குற்றமா? அதே தோழன் தாய்மொழியை சரளமாக எழுதவும், படிக்கவும் தடுமாறும்போது என்ன செய்வது? இப்படி எண்ணுபவர்களை என்னதான் செய்வது?

 
On Mon Aug 11, 05:40:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@வழிப்போக்கன்...

வாங்க வழிப்போக்கன். நீங்க உங்க பிழைகளை உணர ஆரம்பித்துவிட்டதே உங்கள் ஆர்வத்திற்கு சான்றுதானே. இனி நீங்கள் பிழைவிடாது எழுதுவீர்கள்,தவறின்றி எழுதவும் கற்பீர்கள் தானே? அதைத்தான் நான் இந்த பதிவில் வேண்டுகிறேன்.

@இந்தியன்..

என் கருத்தும் உங்கள் கல்வி எந்த மொழிவழியாக வேண்டுமாணாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் தாய்மொழியை மறக்காதீர்கள். தாய் மொழியறிவு தேவையில்லாத ஒன்று எனப் புறக்கணிக்காதீர்கள் என்பதுதான்.

@சதீசு குமார்..

நன்றி சதீசு குமார்.

@ஜோ..
வாங்க ஜோ.
//எல்லா மொழிகளையும் கற்போம் ,தாய் தமிழை இழந்து அல்ல.
எல்லா தாய்மார்க‌லையும் நேசிப்போம் ,சொந்த‌ தாயை அனாதை இல்ல‌த்துக்கு அனுப்பாம‌ல்//

உங்கள் கருத்து மிக அருமையான ஒன்று.

பணிவுடன் உங்கள் சிறு தவறை சுட்டுகிறேன்."தாய்மார்களையும்" என்பதே சரியான வார்த்தை.

 
On Mon Aug 11, 05:48:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சூர்யா..

உங்க‌ள் வ‌ருகைக்கும், க‌ருத்துக்கும் ந‌ன்றி சூர்யா.
//ஒரு மொழியின் மீதோ, மதத்தின் மீதோ அதீத வெறியுடன் இருப்பது நம் மனித இனத்திற்கு நல்லதில்லை. இப்போது மூன்றாம் உலகப்போர் வருவதற்கான சூழ் நிலை நிலவுவதற்கான அடிப்படைக் காரணமே, இந்த யூதர்கள் முஸ்லிம் மக்களின் மீது நடத்திவரும் அட்டூழியம்தான்.//

உங்க‌ள் க‌ருத்தில் என‌க்கு உட‌ன்பாடு இல்லை ந‌ண்ப‌ரே,
மூன்றாவது உலகப்போர் என்பது எண்ணெய்காகவும், மதத்துக்காகவும் வேண்டுமானால் நிகழலாம். இன்னும் சில வருடங்கள் சென்றபின் உணவுக்காகவும், நீருக்காகவும் கூட போர்கள் நிகழலாம். ஆனால் மொழிக்காக போர் என்பது ஏற்க இயலாத கருத்து. மொழி என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் கலச்சாரத்தை காட்டக்கூடிய ஒன்று. நீங்கள் சொல்வது போல் மொழிமீது அதீத பற்றில்லாமல், நம் கண் முன்னே நம் மொழியை அழிய விடுவோமானால் தமிழில் இருக்கும் திருக்குறள் போன்ற பல்லாயிரக்கணக்கான நூல்களின் அருமையையும், அதன் உபயோகத்தையும் நாம் இழக்க நேரிடும். என்னதான் அவை பல்வேறு மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், தமிழில் அதை படிக்கும் சுவை பிற மொழிகளில் படிக்கும் போது வருமா? பல்லாயிரக்கணக்கான வருடப் பெருமை கொண்ட ஒரு மொழியை அழிய விடுவது தகுமோ?

 
On Mon Aug 11, 05:57:00 PM GMT+8 , ஜோ / Joe said...

//பணிவுடன் உங்கள் சிறு தவறை சுட்டுகிறேன்."தாய்மார்களையும்" என்பதே சரியான வார்த்தை.//

ஆம் ! பால்ராஜ் ..அது தட்டச்சு பிழை .அனுப்பிய பிறகு தான் கவனித்தேன் .ஆனால் திருத்த முடியவில்லை.

 
On Mon Aug 11, 05:58:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

ஜோதிபாரதி..
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி.

மலையாளிகள் கூட நம் மொழியை கற்றுக்கொள்ளும் போது, நமக்கு ஏன் அந்த ஆர்வம் வருவதில்லை?
சரி தமிழ் தெரியாது எனச் சொல்பவர்களுக்கு அதிகபட்சம் எத்தனை மொழிகள் தெரிந்துள்ளன ? ஆங்கிலம், அதோடு ஹிந்தி அல்லது பிரெஞ்ச். அதிகபட்சம் 2 முதல் 3 மொழிகள் தான் இவர்களுக்கு தெரியும். அதற்கே தாய்மொழியை மறந்துவிட்டு, அதை கற்பதே ஒரு இழிவான செயல் என்பதுபோல் பேசுகின்றார்கள்.
வேறு யார் இப்படி தங்கள் மொழியை விட்டுக்கொடுக்கின்றார்கள்?

ராஜநடராஜன்..

வாங்க ராஜநடராஜன், கருத்துக்களுக்கு நன்றி.

//ஆங்கிலம் படிப்பதால்தான் தமிழ் பேச எழுத வரவில்லையா? அல்லது ஆங்கிலம் பேசினால்தான் மதிப்பு என்பதால் தமிழை மறந்து போகிறார்களா? //

விடைதெரியாத கேள்விகளுல் இதுவும் ஒன்று. ஆங்கிலேயனிடம் சிறப்பாக ஆங்கிலத்தில் பேசுவது பெருமை. ஆனால் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசுவதில் என்ன பெருமை இருக்கின்றது?

நன்றி தமிழன்,

நன்றி கொவி.க அண்ணா.

கிரி,
வாங்க கிரி, உங்க கருத்துகளுக்கு மிக்க நன்றி.

 
On Mon Aug 11, 06:00:00 PM GMT+8 , முகவை மைந்தன் said...

//இஸ்லாம் எந்தன் வழி, இன்பத் தமிழ் எந்தன் மொழி//

புதுகை.எம்.எம்.அப்துல்லா, உங்கள் தந்தைக்கு என்னுடைய வணக்கங்கள். அட்டகாசமாகச் சொன்னார். நீங்களும் பின்பற்றுகிறீர்கள் தானே? வாழ்த்துகள், அய்யா!

 
On Mon Aug 11, 06:04:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

டொன் லீ...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி டொன் லீ.
இளையோர்களில் சிலர் அப்படி தாய்மொழி பற்று இல்லாதிருந்தாலும், தற்போது பதிவுலகில் இருக்கும் பலரும் மிகுந்த தாய்மொழி பற்றுடன் இருப்பது மிகவும் மகிழவைக்கும் ஒன்று. சிங்கை பதிவர்கள் சந்திப்பில் கூட நாங்கள் இது குறித்து உரையாடினோம். இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பல தமிழ் இளையோர், தங்களது பணியில் பிறமொழிகளை பேசினாலும், இயல்பில் தமிழ்மேல் மிகுந்த ஆர்வமுள்ளவர்களாய் இருக்கின்றார்கள். சிங்கையில் உள்ள சக பதிவர் பாரி.அரசு சாதாரண உரையாடலில் கூட தனித்தமிழில் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்படி தாய்மொழிப் பற்றுள்ள இளையோரும் உள்ளார்கள் என்பது மகிழத்தக்க செய்தி.

 
On Mon Aug 11, 06:08:00 PM GMT+8 , ஜோ / Joe said...

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரமிக்கத்தக்க வகையில் தமிழ் பேசும் இளையோரை பார்க்கும் போது மெல்லத் தமிழினி வாழும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

தமிழ் தெரியாவிட்டால் பெருமை என்ற எண்ணம் குறைந்து வருவதாகவே நான் நம்புகிறேன்.

 
On Mon Aug 11, 06:10:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@ ஜோ..
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு ஒரு சிறந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்சியினால் உங்களுக்கு ஏற்பட்ட அதே எண்ணம் எனக்கு தமிழ் வலைபதிவர்களைப் பார்த்து வந்தது. பதிவர் உலகம் உள்ளவரை தமிழ் சாகாது.

 
On Mon Aug 11, 06:15:00 PM GMT+8 , ஜோ / Joe said...

//பதிவர் உலகம் உள்ளவரை தமிழ் சாகாது.//

இதற்கு நான் நினைக்கிற காரணம் ..பதிவர்கள் பலர் பல நாடுகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைப்பதால் ,அந்தந்த நாடுகளில் அவரவர் மொழியை எவ்வாறு பாதுகாத்து ,மதித்து , போற்றுகிறார்கள் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும் ஒரு காரணமென நினைக்கிறேன்.

தமிழகத்துக்குள்ளே இருக்கும் வரை தமிழின் அருமை தெரியாத பலருக்கும் ,தமிழகத்தை விட்டு வெளியே வாழும் போது தாய் மொழி மீது அதிக பற்று வருவதை நீங்கள் கவனித்திருக்கலாம் .

 
On Mon Aug 11, 07:00:00 PM GMT+8 , தாமிரா said...

//இதில் நம் கல்வி முறையின் தவறு என்னவென்று எனக்கு தெரியவில்லை//
வேறு பல விஷயங்களுக்கு கல்விமுறையை சாக்காக சொல்லலாம். ஆனால் இந்த பம்மாத்துக்கெல்லாம் முடியாது. தவறு பெற்றோர் மீதுதான்.

அப்துல் ://இஸ்லாம் எந்தன் வழி, இன்பத் தமிழ் எந்தன் மொழி என்று கர்வத்தோடு சொல்லுவார்.// சுகம்.!

சூர்யா ://ஒரு மொழியின் மீதோ, மதத்தின் மீதோ அதீத வெறியுடன் இருப்பது நம் மனித இனத்திற்கு நல்லதில்லை// உங்கள் நண்பர் கூறுவது சரிதான். ஆனால் நம் மொழி என்பதற்காக சொல்லவில்லை, தமிழுக்கு இன்னும் சோதனைகளையும் தாங்கும் தெம்பு இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.

 
On Mon Aug 11, 07:34:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நீங்கள் சொல்வது சரி ஜோ, ஆனாலும் தமிழகத்திலேயே இருக்கும் பல பதிவர்களும் தமிழ் ஆர்வமிக்கவர்களாய் இருக்கின்றார்கள் அல்லவா?
வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு மொழிபற்று மிகுதியாய் இருக்கின்றது என்றாலும் கூட அவர்களிலும் பலர் மொழியை மறக்கின்றார்கள். இந்த பதிவிலேயே தமிழ் பேசத்தெரியாமல் சிங்கப்பூரில் வளரும் என் உறவினரின் குழந்தையை குறித்து எழுதியிருந்தேனே?

நான் இந்தியாவில் இருந்த போதும் இப்படித்தான் இருந்தேன், இங்கு இப்படித்தான் இருக்கின்றேன். எங்கள் வீட்டிற்கு தினமும் வரும் ஒரு வங்கி ஊழியர் என்னிடம் தனித்தமிழில்தான் பேசுவார். அவர் நான் தனித்தமிழில் பேசுவதை மிகப்பெருமையாக எல்லோரிடமும் கூறுவார்.

தஞ்சையில் தனித்தமிழ் இயக்கம் என்று ஒரு இயக்கமே இருக்கின்றது. அதில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் மிக நன்கு படித்தவர்கள். பணி நிமித்தமாக பிறமொழி பேசினாலும், பிற தமிழர்களோடு பேசும்போது தமிழில்தான் பேசவேண்டும் என்ற கொள்கையுடையவர்கள்.

 
On Mon Aug 11, 07:52:00 PM GMT+8 , புதுகைத் தென்றல் said...

தயவுசெய்து தாய்மொழியே வீட்டில் நம் மொழியாய் இருக்கட்டும்.

மிகச் சரியான தீர்வு. பள்ளிக்கு செல்லும் முன் வரை வீட்டில் தாய்மொழியை மட்டும் பழக்கினால் போதும். பள்ளி சென்ற பின் எப்படியும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளத்தான் போகிறார்கள்.

பள்ளியில் பிள்ளைகளுக்கு பாடமாக தமிழைக் கொடுத்திருந்தேன். 6 ஆண்டுகாலம் தமிழ் கற்றார்கள். தாய்மொழித் தெலுங்கானாலும் என் பிள்ளைகளுக்கு தமிழும் சரளமாக எழுதப் படிக்கத் தெரியும். இதோ இப்போது ஹிந்தி கற்கத் துவங்கியிருக்கிறார்கள்.

தாய்மொழி அறிவு கட்டாயம் தேவை.அதற்கு பெற்றோர்களின் பங்கு பெரிதும் இருக்கிறது

 
On Mon Aug 11, 08:01:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க‌ தாமிரா..
நீங்க‌ள் சொல்வ‌து உண்மைதான். எந்த‌ சோத‌னைக‌ளையும் தாங்கும் ச‌க்தி க‌ட்டாய‌ம் த‌மிழுக்கு உண்டு.

 
On Mon Aug 11, 08:03:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க புதுகை தென்றல் அக்கா,
//தாய்மொழித் தெலுங்கானாலும் என் பிள்ளைகளுக்கு தமிழும் சரளமாக எழுதப் படிக்கத் தெரியும்.//

உங்கள் தாய்மொழி தெலுங்கா ? ஆச்சரியமாக இருக்கு அக்கா!!
பெருமையாக‌வும் இருக்கின்ற‌து.

 
On Mon Aug 11, 08:15:00 PM GMT+8 , 3rdeye said...

ada nan tamil padithavan than. athuleyum tamil I paperla 88 mark eduthavan than ..ana ozhunga tamila ezhutha theriyathu - la, rana, ellam thappa than ezhuthuven.. rendu vishayam machi - onu tamil ellakana mozhi matronru vazhaku mozhi. ena porutha varikum tamil ellaka mozhi khastam than. ena keta orey la, oru ran, oru na pothum ethuku rendu. periyar sella tamil seraimpu panna mathiri. thai mozhi kandipa padithuthan aganumnu oru avasiyamum ella.. pudicha padikatum etho oru mozhi padikatum urayadal panna oru common mozhi venum. athu entha mozhiya iruntha enna. tamil mella uru marum neengal virupa patalum padatiyum marum mariya agum athu kallathin katayam. the way the original tamil scripts went a big change to be as today - the present tamil language also will change. how ever you try it will change. if doesnt change with the flexibility it will die - tamil mella ini sagum .. yaraleyum thaduka mudiyathu.

 
On Mon Aug 11, 08:26:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//இஸ்லாம் எந்தன் வழி, இன்பத் தமிழ் எந்தன் மொழி//

புதுகை.எம்.எம்.அப்துல்லா, உங்கள் தந்தைக்கு என்னுடைய வணக்கங்கள். அட்டகாசமாகச் சொன்னார். நீங்களும் பின்பற்றுகிறீர்கள் தானே? வாழ்த்துகள், அய்யா!

சந்தேகமே வேண்டாம். இன்றுவரை பின்பற்றுகின்றேன். கையொப்பம் கூட தமிழில்தான் இடுகின்றேன். மொழிதான் ஓரு இனத்தின் அடையாளம். மதத்தால் ஓன்றிணைக்கப் பட்ட பாக்கிஸ்தான் பின்பு உருது, பெங்காளி மொழிப் பிரச்சனையால் பாக்கிஸ்தான், வங்கதேசம் என இரண்டாகப் பிரிந்து விட்டது. மொழிமட்டுமே மனிதர்களை இணைக்கும்.மதமோ பிறகாரணிகளோ மனிதர்களை அவ்வளவு சீக்கிரம் ஓன்றிணைத்து விடாது.

 
On Mon Aug 11, 08:37:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

உங்கள் தாய்மொழி தெலுங்கா ? ஆச்சரியமாக இருக்கு அக்கா!!
பெருமையாக‌வும் இருக்கின்ற‌து.


அண்ணே! அக்கா வீட்ல பேசுறது தெலுங்கு இல்லை...தலுங்கு. அதாவது தமிழ்+தெலுங்கு. ஆந்திராக்காரன் யாராவது அவங்க வீட்ல பேசுறதக் கேட்டான்னா அதுவும் தமிழ்ல ஏதோ ஓரு வட்டார வழக்குன்னு நெனச்சுக்குவான். :))

 
On Mon Aug 11, 11:50:00 PM GMT+8 , Sen said...

நண்பர் பால்ராசுவின் இந்த கோவமான பதிவிற்கு காரணகர்த்தா வந்துள்ளேன்..

நண்பரின் பதிவிற்கு பின்னூட்டமாக SORRY no comments plzzz என்று குறிப்பிட்டிருந்தேன்.. நண்பரின் தூண்டுதலால், மீண்டும் எழுத முற்பட்டு, அதுவே ஒரு பதிவாக உருவெடுத்துவிட்டது...

http://sensiblesen.blogspot.com/2008/08/blog-post_10.html

குறைகள், குட்டுகள் வரவேற்கப்படுகின்ற‌ன...

 
On Tue Aug 12, 12:34:00 AM GMT+8 , Anonymous said...

I accept it. Madhibala please go through this.
Sangamithra

 
On Tue Aug 12, 12:52:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

(என் நண்பண் செந்திலின் பதில் பதிவுக்கு எனது பின்னூட்டம், இங்கும்)
நண்பா,
எனது பதிவிலேயே தெளிவாக சொல்லியுள்ளேன், நீங்கள் எந்த வழி கல்வி வேண்டுமாணாலும் படியுங்கள். எத்தனை மொழி வேண்டுமாணாலும் கற்றுக்கொள்ளுங்கள் ஆனால் தாய் மொழியை மறக்காதீர்கள் என்று.

எனது சகோதரியின் மகன் தமிழ் படிக்கத்தெரியாது என்று சொன்ன போது, உடனே நான் என்ன செய்தேன் என்று என் பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.
செந்தில் மாமா என்று தானே உன்னை அறிமுகப்படுத்தினேன், செந்தில் அங்கிள் என்று கூப்பிடவா சொல்லிக்கொடுத்தேன். எங்கள் வீட்டில் எந்த குழந்தையும் மம்மி,டாடி என்று கூப்பிட சொல்லிக்கொடுக்கவில்லை. நான் ஒன்றும் செய்வது ஒன்று, சொல்வது ஒன்று என்று இல்லையே, அது உனக்கே நன்றாக தெரியுமே.

ஆங்கிலத்தை தவறாக பேசுபவர்களை, எழுதுபவர்களை அவ்வளவு இழிவாக ஒன்றுமே தெரியாதவர்களாக பார்க்கும் சமுதாயம், ஏன் தாய்மொழியை தவறாக எழுதுபவர்களை பார்ப்பதில்லை என்பது தான் என் ஆதங்கம்.

எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் தமிழ் பெயர்தான் சூட்டவேண்டும் என்ற வெறியெல்லாம் எனக்கு கிடையாது. தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் உண்டு. என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் பெயர் இருக்கும் ஆனால் அதே நேரம் எங்கள் குடும்ப பெயரான ஜோசப் என்பதும் அந்த பெயரில் இருக்கும். பெயரில் தமிழ் வேண்டும் என்பது கட்டாயமே இல்லை.

இந்தப் பதிவில் கூட நீ எத்தனையோ தவறுகளுடன் தான் எழுதியுள்ளாய்.
அதே உன் ஆங்கில பதிவுகளில் இப்படி எழுத்துப்பிழைகளை நீ செய்கின்றாயா? எனக்கு தெரிந்தவரை உனக்கு பேச, எழுத,படிக்க தெரிந்த மொழி ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டுதான். அறிவிப்பு பலகைகளில் உள்ள‌ ஹிந்தியை படித்துப்பார்த்திருந்தாலும், எழுதியோ அல்லது பேசியோ நான் அறிந்ததில்லை. ஆக ஆங்கிலம் ஒன்றைத்தவிர வேறு எதுவும் முழுமையாய் தெரியாது. ஆங்கில அறிவு மிக அவசியம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. பன் மொழிக் கொள்கையை நான் தீவிரமாய் ஆதரிக்கின்றேன். மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் எல்லாம் அவர்கள் தாய்மொழியோடு, ஹிந்தியையும் படித்துக்கொண்டிருக்கும் போது நம் பிள்ளைகள் வெறும் ஆங்கிலம் தவிர வேறு எதிலும் சிறந்து விளங்கவில்லையே என்ற ஆதங்கத்தை தான் என் பதிவில் நான் வெளிப்படுத்தியிருந்தேன். வழமை போல நீ என் கருத்தை தவறாகப் புரிந்துகொண்டு இப் பதிவில் எழுதியுள்ளாய் என்பது நன்கு தெரிகின்றது.

ஹிந்தியை எதிர்க்கும் நமது கழகங்களின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. நானே தற்போது ஹிந்தி கற்றுக்கொள்ள முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றேன். எனவே தமிழைத்தவிர வேறு எதையும் படிக்க கூடாது, தமிழ் வழிக் கல்வி தவிர வேறு எந்த மொழி வாயிலாகவும் கல்வி பயிலக்கூடாது என்பதும் எனது வாதமல்ல என்பது எனது பதிவை தெளிவாக படித்திருந்தால் நன்கு விளங்கும். பதிவிற்கு பின்னூட்டம் இட்டிருந்தவர்களுள் பலரும் அதையே ஆதரித்தும் எழுதியிருந்தார்கள். அதில் ஜோ எனும் நண்பர் எழுதியிருந்த பின்னூட்டத்தை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.


எல்லா மொழிகளையும் கற்போம் ,தாய் தமிழை இழந்து அல்ல.
எல்லா தாய்மார்களையும் நேசிப்போம் ,சொந்த‌ தாயை அனாதை இல்ல‌த்துக்கு அனுப்பாம‌ல்..


இது தான் என‌து ப‌திவின் ஒரு வ‌ரிப் பொருள் ந‌ண்பா. இதை புரிந்துகொள்வாய் என‌ ந‌ம்புகிறேன்.

க‌ல்வி முறை ந‌ம்மை இப்ப‌டி மாற்றிவிட்ட‌து என்ற‌ வாத‌த்தில் உண்மையில்லாம‌ல் இல்லை. ஆனால் க‌ல்வி கூட‌த்தில் க‌ற்றுத்த‌ருவ‌தை ம‌ட்டுமா நாம் க‌ற்கிறோம்? க‌ல்வி கூட‌த்திற்கு வெளியிலும் நாம் வாழ்கிறோம் அல்ல‌வா? ச‌ரி, ந‌ன்கு க‌ல்வி க‌ற்று ப‌ணியிலும் சேர்ந்துவிட்ட‌ உன்னையும், என்னையும் போன்றோரை எடுத்துக்கொள்வோம். ந‌ம்மை முன்னேற்றிக்கொள்ள‌ என்ன‌ செய்துள்ளோம்?

என் ஆங்கில‌ அறிவு மிக‌வும் மோச‌மான‌து என்ப‌து உன‌க்கு ந‌ன்கு தெரியும். ஆனால் நான் சிங்க‌ப்பூர் வ‌ந்த‌வுட‌ன் அனுப்பிய‌ மின்ன‌ஞ்ச‌ல்க‌ளைப் பார்த்துவிட்டு நீயும், ச‌ர‌வ‌ண‌ணும் என‌து ஆங்கில‌ அறிவு மிகவும் உய‌ர்ந்திருப்ப‌தாக‌ப் பாராட்ட‌வில்லையா? அது எப்ப‌டி ? என் முய‌ற்சியால் தானே? நான் த‌மிழ்வ‌ழிக்க‌ல்விதான் ப‌யின்றேன். க‌ல்லூரிக்கால‌த்திற்கு பின் என‌து ஆங்கில‌ அறிவை வ‌ள‌ர்த்துக்கொள்ள‌வில்லையா? இன்னும் கூட‌ ஆங்கில‌ம் க‌ற்றுக்கொண்டுதான் உள்ளேன். த‌ற்போது இந்தி க‌ற்றுக்கொள்ள‌வும் எண்ணியுள்ளேன். அது போல் நீங்க‌ள் ஏன் ப‌ள்ளியிலும், க‌ல்லூரியிலும் க‌ற்க‌த்த‌வ‌றிய‌ த‌மிழை க‌ற்க‌ முய‌ற்சிக்க‌வில்லை? இது க‌ல்வி முறையின் குற்ற‌மா? அல்ல‌து ந‌ம‌து குற்ற‌மா?

என‌து மாப்பிள்ளை த‌மிழை ச‌ர‌ள‌மாய் எழுத‌வும், ப‌டிக்க‌வும் நான் எடுத்த‌ முய‌ற்சிபோல் நீங்க‌ளும் ஏன் எடுக்க‌ கூடாது? த‌ற்போது அவ‌ன் ப‌ள்ளியில் ஆங்கில‌ம் ந‌ன்கு க‌ற்பான், வீட்டில் த‌மிழை வ‌ள‌ர்த்துக்கொள்வான் அல்ல‌வா? அதைத்தானே நான் வ‌லியுறுத்தியுள்ளேன்? மீண்டும் ஒரு முறை என் ப‌திவை தெளிவாக‌ ப‌டித்திருந்தால் இப்ப‌டி ஒரு ப‌திவு உன்னிட‌மிருந்து வ‌ந்திருக்காது என‌ நினைக்கிறேன்.

எல்லா மொழிக‌ளையும் கற்போம், தாய்மொழியை ம‌ற‌க்காம‌ல்.

 
On Tue Aug 12, 10:07:00 AM GMT+8 , புதுகைத் தென்றல் said...

அதாவது தமிழ்+தெலுங்கு. ஆந்திராக்காரன் யாராவது அவங்க வீட்ல பேசுறதக் கேட்டான்னா அதுவும் தமிழ்ல ஏதோ ஓரு வட்டார வழக்குன்னு நெனச்சுக்குவான். :))//அப்துல்லா நாங்கள் வீட்டில் பேசுவது தலுங்கு அல்ல. அது ஒரு கலவையாக இருக்கும், அதாவது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் எல்லாம். நான் தெலுங்கில் கேட்டால் பதில் தமிழில் வரும், ஆங்கிலத்தில் பேசினால் ஹிந்தியில் பதில் சொல்வேன். என்ன ஒரே நல்லது என்றால் தமிழில் பேசினால் முழுவதும் தமிழ் அதாவது சுத்தமாக இருக்கும். அப்படி ஒவ்வொரு பாஷையையும் சுத்தமாக பேசுவோம்.

அப்புறம் தமிழ் நாட்டை பிறந்து வளர்ந்தாலும்
எங்கள் தெலுங்கு மிக மிக நன்றாகவே இருக்கும். ஏனெனில் 15 வருடங்கள் ஆந்திராவிலும், ஆந்திரா நண்பர்களுடனுமே கழிந்ததில் மொழி சுத்தம் ஆகிவிட்டது.

 
On Tue Aug 12, 06:25:00 PM GMT+8 , Known Stranger said...

Paul nanba...

Declaration

I know to read and write tamil ( my mother tongue ) and have got laurels in Tamil grammar both for elocution, drama, stories and poems. This is to let you know I am not loving my mother tongue. I do love and enjoy its richness esp the puranatru padal and pathitru pathu. Etc.

No offense or no Personal offence meant or not indented to touch the sensitive issue which will certainly might give a jerk or irk many of the readers of your blog as well as yourself. . Just trying to give my point of view as unbiased “ with no pseudo portrayal of patriotism “and certainly against your point of view “ on the patriotism one should have on mother tongue and the criticism you had made on the people who don’t know to read and write their so called mother tongue and your emphasis and strong headed thoughts that one should read and write their mother tongue whether one learn other language or not which you do appreciate in learning for practical purposes. “

My argument to Paul / Tamil arvalargal

Whether it is so called native language, culture, religion, style, food or what not, it is all upto a person’s convenience and liking and his own wish. It is upto a person’s personal desire if he wants to learn the mother tongue or not. One should not make criticism on a person who don’t want to learn or who don’t know to read and write their mother tongue. One can’t make a subtle remark that he is not worth a race if he is not knowing his own language. If he does he is ignorant of a thing which he himself is not following the principals what he preaches. Since you feel it is must it is not necessary that others should feel the way you feel . You have no logical reasons to pin point and write a post in a way you make a criticism on those who don’t know their mother tongue. There is a subtle degrading look on others by you ( as a author ) on those who don’t want to learn their mother tongue. Yes your post do mean so even if you had not indented to or even if you deny.

You strongly did make a point that a person is not worth if he is not able to read his own mother tongue. Your point of argument or debate or emphasis is, one can learn any other languages but should not neglect the mother tongue. Or why should he neglect. One should love his mother tongue and learn it is your point of argument or post bottom line. I trust I am in line with this understanding of yours.
( another point to be made here. If a person who finds pride in not learning his own mother tongue need not be critisied. He has all the rights to be proud as one can find pride to say I speak and write my mother tongue language. I am not supporting that attitude but I am only questioning your attitude )


My point of argument ( just for the argument sake – but I question you directly which will certainly irk you and many of your readers as well – but please don’t mistake I am doing a personal attack I am just making a point for the sake of argument to ask yourself a question for which if you can answer )

As a mother language ( 24 languages I guess – mistake if done thou shall bear it) , Bharat is the native land of those who call themselves Indians . As a native land , the native way of spiritual guiding philosophy of natives of the land Bharat is Sanatana Dharma. Which latter took a shape and terminology called Hinduism. Why is this not considered the same as you speak of mother tongue language ??
If the mother tongue is given so much importance that should be learnt by every son of it, why do a foreign philosophy of way of life to be adopted by many ? Why not the subject of learning and understanding the native epics , myths, theology of Bhart be read and loved and patronized ? ( point to be noted – I am secular ) . I simply question why not you influence my non Hindu ( the native mother religion/ way of life of Bharat) friends of yours and mine , who don’t want to know the details of the epic , theology, deepest ,original culture of native land. There are many my friend in India who don’t know or don’t want to know with interest as you say that how can one be not interested in learning their native mother tongue.

To my own questioning , I answer – it is upto a person’s own wish, desire and liking if he wants to know about it. And I should not degrade him or influence him or disgrace his liking to learn and know. Religion, language, culture , food like this it is a person’s choice and you can’t discriminate a person by what he don’t want to know. It is also a kind of racialism. You know tamil. You don’t know to read and write the national language of India . It is disgrace to the nation if I had to speak in the way you made this post. You may have regrets of not learning it doesn’t make any good. You don’t know it simply. In other words tamil nadu itself a disgrace of Indian nation as it is the only state who adopt two language system where else all states of sovereign Indian adopt 3 language system. So why not you question the whole of tamil nadu for it. If tamilians had pride in not learning HINDI and abolished the 3 language system then there is nothing wrong in a person who takes pride in telling I don’t know to read and write tamil.

All my above point is only for the argument sake. If a person judge me from what I write , then he is a person who takes things personal and judgmental.

I know my question will not be liked by you . Wanted to just make a thinking in yourself and make a point , it is a persons choice what he wants to learn and what he wants to take pride in telling. If you are making a remark it is very much “ with respect to “.

 
On Sun Aug 17, 06:57:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

நல்ல பதிவு. சிந்திக்க வேண்டிய விசயம்.

 
On Sat Aug 23, 03:44:00 PM GMT+8 , Anonymous said...

எனது பதிவில் கவிக்கோ அப்துல் ரகுமானின் தமிழ் சோறு போடும் என்ற பகுதியை அவரது நூலிலிருந்து எடுத்து தொகுத்துள்ளேன்.www.raviselvam.blogspot.com

 
On Thu Aug 28, 09:55:00 PM GMT+8 , துரை said...

//***
To my own questioning , I answer – it is upto a person’s own wish, desire and liking if he wants to know about it. And I should not degrade him or influence him or disgrace his liking to learn and know. Religion, language, culture , food like this it is a person’s choice and you can’t discriminate a person by what he don’t want to know. It is also a kind of racialism. You know tamil. You don’t know to read and write the national language of India . It is disgrace to the nation if I had to speak in the way you made this post. You may have regrets of not learning it doesn’t make any good. You don’t know it simply. In other words tamil nadu itself a disgrace of Indian nation as it is the only state who adopt two language system where else all states of sovereign Indian adopt 3 language system. So why not you question the whole of tamil nadu for it. If tamilians had pride in not learning HINDI and abolished the 3 language system then there is nothing wrong in a person who takes pride in telling I don’t know to read and write tamil.
***//
திரு Known Stranger அவர்களே
ஹிந்தி நம்ம தேசிய மொழினு சொல்லிருந்திங்க
உங்கள் அறியாமயை நினைத்தால் மிக வருத்தமாக உள்ளது
ஹிந்தி என்பது நடுவன அரசோட மொழியே தவிர நம்ம நாட்டோட தேசிய மொழி கிடையாது,
இந்தியாவில் எந்த மொழிகாரனும் ஆங்கிலம் படிக்கிறான் அதனால் ஆங்கிலத்தை நமது இனைப்பு மொழியாக வைப்பதில் தவறு ஒன்றும் இல்லை,
//***
In other words tamil nadu itself a disgrace of Indian nation as it is the only state who adopt two language system where else all states of sovereign Indian adopt 3 language system
**//
நம் தாய்மொழி தமிழையும், உலக மொழி ஆங்கிலத்தையும் தெரிந்துகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை,
ஏன் ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவன் எத்தனை மொழி படிக்கிறான் 2தான் படிக்கிறான் ஒன்று அவன் தாய்மொழி மற்றொன்று உலக மொழி ஆங்கிலம், அவன் ஏன் முன்றாவது மொழியாக தமிழை படிக்க கூடாது(நிங்களோ அல்லது வடநாட்டானோ தமிழை படிப்பதற்கு அவசியம் இல்லை என்று நினைக்கலாம், அதுபோலதான் ஹிந்தியும் தமிழனுக்கு அவசியம் இல்லை) ஆங்கிலம் அறிவியன் மிகுந்த மொழியாக இருப்பதால் அனைவரும் படிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் அவ்வளவே
அதவிட்டுட்டு சும்மா ஹிந்தி படி,ஹிந்தி படி தொல்ல பண்ணகூடாது மனுசன் எத்தன மொழியதான் படிப்பான்
இன்னொரு மொழி தெரிந்சா நல்லதுதானே அப்படினு கேட்கலாம்(போய் படி உன்ன யாரு வேண்டம்னு சொன்னது) இப்பவெல்லாம் எல்லோர்கும் வேலை சென்னையில் கிடைகிறது, மேற்படி அமெரிக்காவோ, ஆஸ்திரேலியாவோ, இங்கிலாந்தோ,சிங்கபூரோ செல்கிறான் இதற்கு ஆங்கிலம் தெரிந்தால் போதும்
மேலும் உங்களுக்காக
தமிழகத்தை விட்டு வெளியே போகும் மாணவர்களின் எண்ணிக்கை 5% இருக்கலாம், மீதி 95% மாணவர்கள் தமிழகத்திலேயே தங்கள் பிழைப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
அந்த 5% மக்களுக்காக 95% மக்கள் ஏனய்யா இந்தி படிக்கவேண்டும்.
ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஹிந்தியை தேசிய மொழியாக அறிவிக்க நினைத்தது.... நீங்கள் நினைப்பது போல் தமிழர்களுக்கும் பிற ஹிந்தி அல்லாத மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பை பெருக்க அல்ல..... ஹிந்தி மாநில மக்களுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்த...

பிழைப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை வந்தால் மனிதனால் எதையும் செய்ய முடியும், ஏன் மிருகங்களின் பாஷை கூட அவனால் புரிந்து கொள்ள முடியும். எ.கா யானைப்பாகன்.
ஆக இந்தி தெரிந்தால் தான் நம் வாழ்க்கை தரம் உயரும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

பலர் 1960க்களில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை ஏதோ மிகத்தவறானதாக பார்கின்றனர்

என் சொந்தக்கருத்து என்னவென்றால் அந்த போராட்டத்தால் தமிழகம் இழந்ததைவிட பெற்றதுதான் அதிகம்

எதை இழந்தோம் என நினைக்கிறீர்கள்? மிஞ்சி மிஞ்சி போனால் பல தமிழருக்கு இந்தி தெரியவில்லை அவ்வளவுதானே,

ஆனால் பெற்றது என பார்த்தால்

1. நாம் நம் தமிழ் திரை உலகை இந்தி திரை உலகத்திடமிருந்து காத்துள்ளோம். இன்றும் தமிழ் சினிமாவில் நடிப்பதை இந்தி நடிகர்கள் பெருமையாக கருதுகின்றனர், ஒரு பெஙாலி மொழிப்படத்திலோ, ஓரிய மொழிப்படத்திலோ நடிக்க அந்த மாநிலத்தவர் கூட விரும்ப மாட்டார்கள். காரணம் அவர்கள் தம் தனித்துவத்தை இந்தியிடம் இழந்துவிட்டார்கள்.

2. நம் தமிழ் பத்திரிக்கை உலகை, இலக்கியத்தை , ஊடகத்தை காத்துள்ளோம். இல்லாவிட்டால் இன்று ஆஜ் தக்கும், ஜீ டி.வியும்தான் தமிழர்களின் வீட்டில் ஓடிக்கொண்டிருக்கும், தமிழ் தொலைக்காட்சிகள் ஒன்று கூட வளர்ந்திருக்காது. நம் பணம் டில்லிக்குதான் போகும் தமிழர்களின் ஊடகங்கள் நசிந்து போயிருக்கும். கலை இலக்கியம் புதினம் எல்லாவற்றிற்கும் இந்த நிலை வந்திருக்கும்

3. அதையெல்லாம் விடுங்கள், இந்தி நுழையயாததால்தான், பலர் ஆங்கிலம் கற்றே ஆக வேண்டிய சூழ்நிலை உருவானது. இன்று தமிழர்கள் கணிணி துறையில் மிளிர அவர்களின் ஆங்கில அறிவு ஒரு முக்கிய காரணம். இன்றும் அந்திராவில் தெலங்கானா பகுதியில் உள்ளவர்களுக்கு இந்தி நன்றாக தெரியும், ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் கணிணி துறையில் ராயலசீமா, கிழக்கு ஆந்திரா மக்களை விட பின் தங்கியுள்ளனர். கிழக்கு ஆந்திரா, ராயலசீமாவில் இந்தி தெலங்கான அளவிற்கு இல்லாததால் இந்த வேறுபாடு

4. முக்கியமாக இந்தியை நாம் தடுத்ததால் தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் குறைத்துள்ளோம். அதனால் என்ன என பலர் கேட்கலாம். தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தால், இப்போது செய்வதைப்போல மத்திய அரசை மிரட்டி காரியம் சாதிக்க முடியாது. டில்லிதான் மாநிலை அரசை மிரட்டும். நம் பக்கத்தில் இருக்கும் கேரளா ஒரு நல்ல உதாரணம். அவர்களால் பலமுறை மத்திய அரசில் ஒரு மந்திரியை கூட பெற முடியவில்லை, மிரட்டவும் முடியவில்லை, அதனால் நன்மையும் இல்லை. நாம் ஆயிரம்தான் திமுக, அதிமுக வை குறை கூறினாலும். அவர்கள் மத்திய அரசை மிரட்டி மிரட்டி பலவற்றை சாதித்துள்ளனர் என்பதை மறுக்கவே முடியாது. இதுவே தமிழத்தில் காங் ஆட்சி இருந்திருந்தால், சோனியாவின் தாவணியில் அது ஓட்டிக்கொண்டிருக்கும்.

ஏன் ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மனம் வைத்தால்தான் தில்லியில் ஒன்று நடக்கும் என்ற நிலை கூட இருந்துள்ளது.

இப்படி எல்லாவிதத்திலும் இந்தி எதிர்ப்பினால் தமிழகம் பெற்றது நன்மையைதான், தீமைகள் வெகு வெகு சிலவே

இன்று வேண்டுமானால் தமிழால் ஆங்கிலத்துடன் அறிவியலிலும் வேலை வாய்ப்பிலும் போட்டி போட முடியாமல் இருக்கலாம் ஆனால் ஒருநாள் நிச்சயம் வெல்லும்

 
On Sat Aug 30, 12:11:00 PM GMT+8 , ஜோ / Joe said...

துரை,
சும்மா பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கீங்க ..வாழ்த்துகள் .மகிழ்ச்சி.

 
On Sat Aug 30, 10:03:00 PM GMT+8 , பழமைபேசி said...

அருமை! அருமை!! இந்த மாதிரிப் பதிவுகள் அடிக்கடி வரணும்!!நாமளும் சிங்கப்பூர்ல இருந்தப்ப, நடந்த ஒரு கதையை சொல்லி ஒரு பதிவப் போட்டோம். வலையக வாசகர்களின் பார்வைக்கு:

http://maniyinpakkam.blogspot.com/2008/06/blog-post_6942.html

 
On Fri Sep 19, 03:51:00 PM GMT+8 , Anonymous said...

முதல்ல தமிழ் தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளுக்கும் திரையினருக்கும் மரியாதை செய்வதை நம் மக்கள் நிறுத்த வேண்டும். அவ்வாறான செயல்களுக்கு மதிப்பளிப்பதை நிறுத்தினால். இந்தி திணிப்பை எதிர்த்தவர்களின் காலத்தில்தான் ஆங்கிலம் வேரூன்றியுள்ளது. இந்தியை எதிர்ப்பவர்கள்/எதிர்த்தவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் பாருங்கள். எங்கெங்கும் ஆங்கிலமெ. கேட்டால் அது அரசியல் இது வியாபாரம் என்கிறார்கள். மக்கள்தான் திருந்த வேண்டும்.

 
On Fri Jul 27, 12:52:00 AM GMT+8 , sivasankaravadivelu said...

சரியாய் சொன்னீர்கள் அய்யா.

 
On Sat Feb 13, 03:05:00 PM GMT+8 , Unknown said...

எங்கங்க கேட்க்கிறார்கள் சொன்னால் நான் பயித்தியம் என்று சொல்கிறார்கள்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க