Author: ஜோசப் பால்ராஜ்
•7:40 PM
தமிழக அரசால் பள்ளிமாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பேருந்துப் பயணச் சலுகை எல்லா இடங்களிலும் எள்ளல்களுக்கு உள்ளாவது உண்டு. அவற்றின் உச்சமாக ஒரு சம்பவம் தஞ்சையில் நடந்துள்ளது.

தஞ்சை மேம்பாலம் அருகே உள்ள செல்வராஜ் உயர்நிலைபள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர் அரசு பேருந்தில் வந்த போது, அவர்களது பள்ளி இருக்கும் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார் ஓட்டுநர். மாணவிகள் பேருந்தை நிறுத்தக்கோரி சத்தமிட்டதால் எரிச்சலடைந்த நடத்துநர் அவர்களை ஓடும் பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.

இலவசம் என்றால் இவர்களுக்கு இளக்காரமா? இவர்களின் ஊதியத்தில் இருந்தா அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கின்றது? என்ன கொடுமை இது? ஓடும் பேருந்தில் இருந்து ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவிகளை கீழே தள்ளுகிறார் என்றால் அவருக்கெல்லாம் மனம் என்று ஒன்று இருக்கின்றதா? உண்மையிலேயே நல்ல மனநிலை உடையவர்தானா அந்த நடத்துநர் அல்லது மனநிலை சரியில்லாதவரா?

கீழே விழுந்த குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள், ஒரு வேளை பலத்த அடிபட்டிருந்தாலோ அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ இவர்களால் அதை ஈடு செய்ய முடியுமா? ஆனால் இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை.

போக்குவரத்துகழகம் அந்த ஓட்டுநரையும், நடத்துநரையும் இடைக்கால பணிநீக்கம் செய்திருக்கிறதாம். மற்றவர்களுக்கு இது போல் நடக்க கூடாது என்று எச்சரிக்கை செய்திருக்கின்றதாம். என்ன ஒரு கடுமையான தண்டணை கொடுத்துள்ளார்கள் பார்த்தீர்களா?

உடனடியாக அவர்களை கைது செய்து ,குறைந்தபட்சம் கொலை முயற்சி வழக்காவது பதிவு செய்திருக்க வேண்டும், உடனடியாக அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ததாகக்கூட செய்தியில் இல்லை.

நான் எப்போதும் என் நாட்டைப் பிற நாட்டோடு ஒப்பிட்டுவது கிடையாது. நான் இருக்கும் நாட்டில் இருக்கும் வசதிகள் என் நாட்டிலும் சீக்கிரம் வரவேண்டும் என்ற ஆதங்கம்தான் அடைவேன். சிங்கப்பூரில் நடந்த ஒரு சம்பவம் இந்த செய்தியோடு நினைவுக்கு வந்து அந்த ஆதங்கத்தை இன்னும் அதிகமாக்குகின்றது.

ஒரு முறை இங்குள்ள பேருந்தில் இருந்து தனது நிறுத்தத்தில் இறங்கிய ஒரு பெண்மணி, இறங்கும் போது நிலைதடுமாறி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஒரு தூணில் மோதி தலையில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் நிலை தடுமாறியதற்கோ, அல்லது காயம் அடைந்ததற்கோ அந்த பேருந்தின் ஓட்டுநர் எள்ளளவும் காரணமில்லை. நிறுத்தத்தில் நன்றாக பேருந்தை நிறுத்தி, Hand Brake lock செய்துவிட்டு, பின்னர் தானே இங்கு பேருந்தின் கதவையே திறப்பார்கள், அதனால் ஓடும் பேருந்தில் இருந்து இறங்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் அந்த ஓட்டுநரின் வேலை உடனடியாக பறிக்கப்பட்டு,வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

அந்த பெண் நிலை தடுமாறியதையோ, காயமடைந்ததையோ, உதவி கேட்டு அவர் கையை ஆட்டியதையோ அவர் கவனிக்காமல் அங்கிருந்து பேருந்தை எடுத்து சென்றுவிட்டார். இதுதான் அவர் செய்த தவறு. பேருந்து ஓட்டுநர் தன் பேருந்தில் இருந்து இறங்கியவர் கீழே விழுந்ததை எப்படி கவனிக்காமல் சென்றார்? அந்தப் பெண் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்தாரே என்று இப்படிக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது என நிர்வாகம் விளக்கமளித்தது.

ஆனால் நம்மவர்கள் சர்வ சாதாரணமாக பணியிடை நீக்கம் மட்டும் செய்துள்ளார்கள்.

இலவச சலுகையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் மாணவர்கள் எல்லா இடங்களிலும் இப்படி இழிவுபடுத்தப்படுவது தொடர்கதையாகத்தான் இருக்கின்றது. இந்த ஓட்டுநர், நடத்துநரின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டணை இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள். Udanz
This entry was posted on 7:40 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On Wed Aug 13, 08:28:00 PM GMT+8 , Dr.Sintok said...

தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை இலவச...... free யா ஏதாவது கிடைக்குமா............?

 
On Wed Aug 13, 08:31:00 PM GMT+8 , கூடுதுறை said...

கண்டிப்பாக பதவிநீக்கம் செய்யவேண்டும்...

இதுமட்டுமல்ல மாணவர்களை மிகவும் துச்சமாக மதிப்பதும் கண்டபடி ஏசுவதும் நமது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது...

 
On Wed Aug 13, 08:34:00 PM GMT+8 , கிரி said...

//உண்மையிலேயே நல்ல மனநிலை உடையவர்தானா அந்த நடத்துநர் அல்லது மனநிலை சரியில்லாதவரா?//

மறை கழண்டவரா தான் இருப்பாரு

//இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை//

அப்படியே இருந்தாலும் வெளியே வந்து இன்னும் இரண்டு பேரை தள்ளி விடுவாங்க

//நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்றும் கொஞ்சம் சொல்லுங்கள். //

எனக்கு வருகிற கோவத்துல அந்த ஆளை பேருந்தில் இருந்து தள்ளி விடணும்னு.....

இதே அவர் பிள்ளைகளாக இருந்தால் இவ்வாறு செய்வாரா! எவனோ பெற்ற பிள்ளை தானே எக்கேடு கேட்டால் என்ன?

 
On Wed Aug 13, 08:35:00 PM GMT+8 , Sivaram said...

நம்ம ஊரில் பேருந்துப் பயணங்கள், பல மாணவ மாணவியரின் உயிரோடு விளையாடுவதாகத்தான் உள்ளது..

 
On Wed Aug 13, 08:42:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//உடனடியாக அவர்களை கைது செய்து ,குறைந்தபட்சம் கொலை முயற்சி வழக்காவது பதிவு செய்திருக்க வேண்டும், உடனடியாக அவர்களை நிரந்தர பணிநீக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ததாகக்கூட செய்தியில் இல்லை. //

அதெல்லாம் அவ்வளவு எளிதல்ல,
பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சக ஊழியருக்கு அநியாயம் என்றெல்லாம் கிளப்பிவிட்டு போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்தைக் கூட்டி பேருந்து இயக்கங்களையே நிறுத்திவிடுவார்கள். எல்லாத்துக்கும் தான் சங்கம் இருக்கே, பின்னே எங்கே கடுமையான நடவடிக்கை ?
:(

 
On Wed Aug 13, 09:09:00 PM GMT+8 , pudugaithendral said...

இவர்களையெல்லாம் கடுமையாக தண்டிக்க நம்மிடம் சரியான சட்டங்கள் இல்லாததுதான் மிகப்பெரிய கொடுமை.//

ithuthanga unmai.

இந்த ஓட்டுநர், நடத்துநரின் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் வகையில் தண்டணை இருக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

nanum vazimozigiren

 
On Wed Aug 13, 09:11:00 PM GMT+8 , Anonymous said...

Dont stop just in asking what others thinks. what use in kknowing what others think. If you seriously want to raise dont stop with this. Take your concern to next level where just a awaraness is not made. Is your intention is only to make awareness of the subject then i appreciate you had raised your voice.

 
On Wed Aug 13, 09:13:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

அடுத்த நாட்டோடு ஒப்பீடு செய்யாமல் சொல்லனும் என்றால்...இதெல்லாம் நம் நாட்டில் சகஜம், என்று வருத்தப்பட்டு சொல்லவேண்டும்.
நம் நாட்டை ஓரளவு சரியான வழிக்கு கொண்டுவர என்னென்ன செய்யவேண்டும் என்று யோசித்துபாருங்களேன்...தூக்கமே வராது.எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது கூட கஷ்டம்.உதாரணதுக்கு என் துறையை எடுத்துக்கொள்வோம்,சாலை விதிமுறைகளை எப்படி திருத்துவது? சாலையை யார் யார்,எந்தெந்த வாகனங்கள் பயண்படுத்துகிறது என்று பார்த்தால் மயங்கிவிழவேண்டியது தான்.

 
On Wed Aug 13, 09:21:00 PM GMT+8 , கையேடு said...

உங்களது கோபமும் ஆதங்கமும் மிகவும் நியாயமானது பால்.

இதைவிடக் கொடுமையான நிகழ்வுகள், சில ஆசிரியர்களாலும் நடைபெறுகின்றன.

தனது எதிர்காலச் சமூகத்தை இவ்வளவு அவலத்துடன் நடத்தும் ஒரு சமூகம் முன்னேறவோ அல்லது எழுச்சிபெறவோ வாய்ப்பேயில்லை.

 
On Wed Aug 13, 09:28:00 PM GMT+8 , Sathis Kumar said...

சிறுவர்களை பேருந்திலிருந்து தள்ளிவிட்ட பேருந்து ஓட்டுநர் மனநிலை சரியில்லாதவராகத்தான் இருக்க வேண்டும். அவர் பிள்ளைகள் இதே நிலைமைக்கு ஆளானால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா? பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
On Wed Aug 13, 11:01:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

the driver and conductor's action is highly arrogant.. this punishment is not enough..

same time, we shud think, what made them to act like this??
when we get something FREE of cost, we feel we deserve to get it.. when someone else get something FREE, we feel they are inferior.. it will stop only when we abolish the FREE culture..

 
On Thu Aug 14, 05:16:00 PM GMT+8 , Sundar சுந்தர் said...

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது!

 
On Sun Aug 17, 06:54:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

இவனுங்களை எல்லாம் ஏன் ஒடவிட்டு 'பின்னால'யே சுடக்கூடாது???

 
On Tue Aug 19, 11:56:00 AM GMT+8 , சுரேகா.. said...

இது ரொம்ப அநியாயம்...!

அரசு ஊழியர்கள் அனைவருக்குமே ....மனிதாபிமானமாக இருப்பது எப்படின்னு வகுப்புகள் எடுக்கணும்!

இவனுங்களும் ஒரு சுழற்சிமுறைலதான் அடிபடுவானுங்க!
அந்த கண்டக்டரின் மகன் தாசில்தார் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்கமுடியாம அவமானப்படுவான்...

:(

 
On Tue Aug 19, 01:36:00 PM GMT+8 , Jackiesekar said...

ivanukkalai padhavi neekkam sencha udene sangatthu mulama porattam nadutthuvanunga

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க