Author: ஜோசப் பால்ராஜ்
•6:46 PM
அன்பு நண்பர் கிரி எழுதிய சைக்கிள் கேப்பில் லாரி ஒட்டிய சத்யராஜ் என்ற பதிவிற்கு பதிலை பதிவாக வெளியிடுகின்றேன் என்ற எனது வாக்கை இதன் மூலம் காப்பாற்றுகிறேன்.

முதன் முதலில் சில விசயங்களை சொல்லிவிட்டுத்தான் நான் இதை ஆரம்பிக்க வேண்டும்.
1) திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் சத்தியராஜ் கூறிய கருத்துகள் மிக சரி என்றாலும், அதை அவர் வெளிக்காட்டிய விதம் அநாகரீகமானது என்பதில் எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை.

2) நான் சத்தியராஜின் ரசிகரோ அல்லது ரஜினியை வெறுப்பவனோ அல்ல.

சந்தை மதிப்பில் ரஜினி அளவுக்கு சத்தியராஜ் இல்லைதான். தனது மதிப்பு என்னவென்று தெரியாதவர் இல்லை சத்தியராஜ்.

ரஜினி படம் குவிக்கும் அளவுக்கு வசூலை சத்தியராஜ் படம் குவிக்காதுதான். ஆனால் ரஜினியும், சத்தியராஜும் ஒரே அளவுதான் ஊதியம் வாங்குகின்றார்களா?

ரஜினியின் படம் 100 கோடி வசூலை குவிக்கின்றது, ரஜினி 10 கோடிக்கு மேல் ஊதியம் பெறுகின்றார். ஆனால் சத்தியராஜின் படங்கள் அந்த அளவுக்கு வசூல் ஆவதும் இல்லை, அவர் கோடிகளில் ஊதியம் வாங்குவதும் இல்லை. எனவே இதில் இருவர் படத்தின் வசூலையும் ஒப்பிட்டு பேசுவது சரியில்லை. அப்படி வசூலை ஒப்பிட்டால் அவரது ஊதியத்தையும் ஒப்பிடுங்கள்.

சத்தியராஜ் திரையுலகில் நுழைந்ததன் வெள்ளி விழாவை கொண்டாடிய போது அவரிடம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்ற எல்லா நடிகரையும் பார்த்தும் கேட்கப்படும் கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது அவர் சொன்ன பதில் நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் என்பது சினிமா துறை போல இயக்குநர் சொன்னதை செய்துவிட்டு செல்லும் வேலை அல்ல என்று தெளிவான பதிலை சொன்னார்.

தனது படங்களில் குத்து வசனங்கள் ( பஞ்ச் டயலாக்) எல்லாம் அவர் வைத்துக் கொள்ளவில்லை. வருவேன், இப்ப வருவேன், இதோ வந்துகிட்டே இருக்கேன்னு எல்லாம் சொல்லிகிட்டு இல்ல.

வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் பேவதெங்கே ( தெக்க போங்க)
அப்படின்னு எல்லாம் பாட்டு போட்டுகிட்டு அலப்பரய பண்ணல. அவருபாட்டுக்கு தகடு தகடு, என் கேரக்டரயே புரிஞ்சுக்க மாட்டேங்குகிறீங்களே இதுமாதிரி எதாவது பகடி பண்ணிக்கிட்டு தான் உண்டு தன் நடிப்பு உண்டுனு இருந்தாரு.

இதுவரை அவர் எந்த அரசுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ குரல் கொடுத்ததில்லையே. இப்போதும் பிரச்சனை தமிழனுக்கு எதிரானது என்பதால் தானே அவ்வளவு ஆவேசமாக பேசினார்?

உலகின் பெரும் பணக்காரான பில்கேட்ஸ் தனது மனைவியுடன் இணைந்து லிண்டா கேட்ஸ் பவுண்டேசன் மூலம் பல கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உதவி செய்து வருகின்றார்.

குஜராத் பூகம்பத்தின் போது, ஆதரவற்ற முதியவர் ஒருவர் தனது உணவுத் தேவைகளையே பிச்சையெடுத்து பூர்த்திசெய்துகொண்டிருந்தவர், பிச்சையெடுத்து தான் வைத்திருந்த மொத்த தொகையையும் பூகம்ப நிவாரண நிதியாக கொடுத்தார்.

பில்கேட்ஸ் மற்றும் அந்த முதியவர் இவர்களில் யார் செய்த தர்மம் பெரியது? சொல்லுங்கள். தன்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்த அந்த முதியவரா அல்லது தனது தேவைகள் போக மிச்சம் இருப்பதை கொடுக்கும் பில்கேட்ஸ்ஸா?


தான் வாங்கும் குறைந்த ஊதியத்திலேயே, தன்னால் தயாரிப்பாளருக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்வேன் என்று சொல்லும் சத்தியராஜ் சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுகின்றார் என்றால் பல கோடிகளை ஊதியமாக பெறும் ரஜினியால் அப்படி செய்ய முடியவில்லை ? சத்தியராஜ்க்காவது சைக்கிள் இடைவெளிதான் இருக்கிறது, அதிலேயே அவர் கஷ்டப்பட்டு லாரி ஓட்டும்போது, தமிழகம் தான் ரஜினிக்கு தனி ராஜபாட்டையே போட்டுக்கொடுத்திருக்கின்றதே , அதில் ஏன் அவர் சைக்கிள் கூட ஓட்ட முயற்சிக்காமல் ஒரேடியாக காலில் விழவேண்டும் ?


கிரி said...
//வெங்கட்ராமன் said...
அதான அப்பாவும் பையனும் நமீதா பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்றதெல்லாம் புரட்சி இல்லையா. . . ?//

காதல் புரட்சி :-))) அப்பாவும் பய்யனும் இப்படி இருக்க வேண்டும் என்று புரட்சி கர கருத்துக்கள் கூறுகிறாங்க..அப்ப கண்டிப்பா புரட்சி தமிழன் தான்..



அப்போ திருவிளையாடல் ஆரம்பத்துல தனுஷ் கூட நடிச்ச ஸ்ரேயவே சிவாஜியில ரஜினி கூட நடிச்சாங்களே, அது என்னா ?

அப்பாவும் பையனும் ஒரே நடிகையோட நடிக்க கூடாது, ஆனா மாமானாரும், மருமகனும் ஒரே நடிகையோட நடிக்கலாம்னு ஏதாவது விதி இருக்கா?

மத்தவங்க மேல ஒரு விரல நீட்டுறப்ப கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க கிரி, ஏன்னா உங்க 4 விரல்களும் உங்கள நோக்கி இருக்கும்.

மேலும் சத்தியராஜை, டி.ராஜேந்தருடன் வேறு ஒப்பிட்டுள்ளீர்கள். ராஜேந்தர் ஒரு அரசியல் கட்சியின் நடத்துபவர், எப்போது என்ன நிலை எடுப்பார், யாரை ஆதரிப்பார் என்று யாருக்கும் தெரியாது. இப்படியிருக்க தான் சொன்ன கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று சொல்லும் சத்தியராஜை அவர்டன் ஏன் ஒப்பிட்டுகின்றீர்கள்?

ஆனால் ரஜினி, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவணால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றவர், அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றார், தேர்தலில் அவர்களுத்தான் ஓட்டு போட்டேன் என்று அரசியல் சட்டத்தை மீறி சொல்லக்கூடாததை கூட வெளியில் சொன்னார். இப்படி ஒரு தேர்தலுக்கு ஒரு நிலை எடுத்ததால் வேண்டுமாணால் ரஜினியை நாம் டி.ராஜேந்தருடன் ஒப்பிடலாம். அதுதான் சரியாக இருக்கும். Udanz
This entry was posted on 6:46 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

43 comments:

On Thu Aug 07, 11:59:00 PM GMT+8 , Anonymous said...

சினிமாக்காரங்க பேச்சைக் கேட்டு புளகாங்கிதப்படறதை என்னிக்கு நம்ம மக்கள் நிறுத்தறாங்களோ, அப்போ இவங்க சைக்கிள், லாரியெல்லாம் ஓட்ட முடியாது. 'ஈ'தான் ஓட்டணும். ஆனா அதெல்லாம் நடக்கற காரியமா என்ன.

 
On Fri Aug 08, 09:48:00 AM GMT+8 , Anonymous said...

சரியா சொன்னீங்க !

கிரி் ரசினி ரசிகன் ! அப்படி எழுதறார்.
நடுநிலையா யோசிப்பவனுக்கு நீங்க சொல்லறதுதான் சரியாகப்படும்.

 
On Fri Aug 08, 09:58:00 AM GMT+8 , ஜெகதீசன் said...

நல்ல விளக்கம் ஜோசப்..
நான் எழுத நினைத்ததை அப்படியே எழுதியுள்ளீர்கள்..
(ஏற்கனவே கிரி காண்டுல இருக்கதால இன்னும் எதும் எழுதவேண்டாம்ன்னு நினைச்சேன்..)

சத்தியராஜ் படத்திற்கு சென்றால் மூன்று மணிநேரம் நன்றாக ரசித்து சிரித்துவிட்டு வரலாம்.
அவர் ஒன்னும் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்காக படம் எடுக்கவில்லை.

 
On Fri Aug 08, 10:00:00 AM GMT+8 , சரண் said...

உங்கள் கருத்துக்கள் சரியென்றே எனக்கும் படுகிறது.

 
On Fri Aug 08, 10:11:00 AM GMT+8 , Anonymous said...

ஸ்ரேயாவுடன் மட்டுமல்ல நயந்தாராவுடனும் மாமனும் மருமகனும் குத்தாட்டம் ஆடினார்கள். அதிலும் மருமகன் ஒருபடிமேலே போய் நயனுடன் உல்லாசமாகத் திரிந்ததாகவும் இதனால் கோபமடைந்த மாமனார் மருமகனுக்கு டோஸ் கொடுத்ததாகவும் சகல பத்திரிகைகளிலும் கிசுகிசு வந்தது.

 
On Fri Aug 08, 10:31:00 AM GMT+8 , ஜோ/Joe said...

அப்படி போடுங்க!

//தன்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்த அந்த முதியவரா அல்லது தனது தேவைகள் போக மிச்சம் இருப்பதை கொடுக்கும் பில்கேட்ஸ்ஸா?//

பைபிள் கதையை அருமையா இங்கே பயன்படுத்தியிருக்கீங்க.

சத்தியராஜ் பேசிய முறைக்காக அவரை திட்டி ,ரஜினியை பாராட்டியவர்களில் நானும் ஒருவன்.

 
On Fri Aug 08, 10:37:00 AM GMT+8 , Aravinthan said...

உங்கள் கருத்தை நானும் அமோதிக்கிறேன் பால்ராஜ்.

 
On Fri Aug 08, 11:07:00 AM GMT+8 , கிரி said...

ஜோசப் நீங்கள் ரஜினி பற்றி கூறிய கருத்துக்கள் ஏற்கனவே பலரால் விவாதிக்கப்பட்டு விட்டது.

//தான் வாங்கும் குறைந்த ஊதியத்திலேயே, தன்னால் தயாரிப்பாளருக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுசெய்வேன் என்று சொல்லும் சத்தியராஜ் //

ஜோசப் இதை என்னால சகிக்கவே முடியல....ஐயோ இதற்க்கு என்னால பதிலே சொல்ல முடியாது ..

//பல கோடிகளை ஊதியமாக பெறும் ரஜினியால் அப்படி செய்ய முடியவில்லை //

பாபா நஷ்டம் அடைந்த போது அவர் திருப்பி கொடுத்த பல கோடிகளை மறந்து விட்டீர்கள் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

//ஏன் அவர் சைக்கிள் கூட ஓட்ட முயற்சிக்காமல் ஒரேடியாக காலில் விழவேண்டும் ?//

இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் இன்னும் ரஜினி பேசி விஷயத்தை புரிந்து கொள்ளவில்லை என்று. இதற்க்கு விளக்கம் சதயமா சொல்ல முடியாது நீங்கள் இன்னும் இதே கேள்வி கேட்டீர்கள் என்றால்

//அப்போ திருவிளையாடல் ஆரம்பத்துல தனுஷ் கூட நடிச்ச ஸ்ரேயவே சிவாஜியில ரஜினி கூட நடிச்சாங்களே, அது என்னா ?//

இதை நான் கூற காரணமே சத்யராஜ் ரஜினி யை சின்ன வசயசு பொண்ணுக கூட நடிக்கிறார்னு கூறி விட்டு அவர் அவ்வாறு நடிப்பதால் தான்.

//இதுவரை அவர் எந்த அரசுக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ குரல் கொடுத்ததில்லையே. இப்போதும் பிரச்சனை தமிழனுக்கு எதிரானது என்பதால் தானே அவ்வளவு ஆவேசமாக பேசினார்//

தமிழனுக்கு ஆதரவாக பேசினார் என்றால் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் உண்மை தெரிந்தவர்கள் யாரும் அவர் பேசியது 80% ரஜினி மீது இருக்கும் வெறுப்பிலேயே பேசினார் என்று தெரியும்.

//தனது படங்களில் குத்து வசனங்கள் ( பஞ்ச் டயலாக்) எல்லாம் அவர் வைத்துக் கொள்ளவில்லை//

கேட்க ஆள் இல்லை.

//எதாவது பகடி பண்ணிக்கிட்டு தான் உண்டு தன் நடிப்பு உண்டுனு இருந்தாரு.//

மனசாட்சிய தொட்டு சொல்லுங்க...தான் உண்டு தன் நடிப்பு உண்டுன்னா இருக்காரு நிறைய படத்திலயும் ரஜினிய கிண்டல் பண்ணல

//மத்தவங்க மேல ஒரு விரல நீட்டுறப்ப கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க கிரி, ஏன்னா உங்க 4 விரல்களும் உங்கள நோக்கி இருக்கும்//

இது சத்யராஜுக்கு மிக பொருத்தம்.

//இப்படியிருக்க தான் சொன்ன கருத்தில் இருந்து மாறமாட்டேன் என்று சொல்லும் சத்தியராஜை அவர்டன் ஏன் ஒப்பிட்டுகின்றீர்கள்?//

ஒப்பிட்டு எங்கங்க சொன்னேன் ..அந்த கொடுமையை விட இந்த கொடுமை அதிகமா இருக்குன்னு தான் சொன்னேன் :-))

//ஆனால் ரஜினி, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த ஆண்டவணால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றவர், அதே ஜெயலலிதாவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றார்//

எனக்கும் அதில் உடன்பாடு இல்லை.

அதெல்லாம் சரிங்க..தமிழ் தமிழ்னு முழங்கிட்டே இருக்காரே தமிழுக்கு அவர் என்ன பண்ணினாருன்னு சொல்லவே இல்லையே

 
On Fri Aug 08, 11:10:00 AM GMT+8 , மோகன் கந்தசாமி said...

Dhool!

 
On Fri Aug 08, 11:45:00 AM GMT+8 , வெண்தாடிதாசன் said...

//தமிழனுக்கு ஆதரவாக பேசினார் என்றால் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் உண்மை தெரிந்தவர்கள் யாரும் அவர் பேசியது 80% ரஜினி மீது இருக்கும் வெறுப்பிலேயே பேசினார் என்று தெரியும்.//

தமிழனுக்கு ஆதரவாகவா?. அப்பா தாங்க முடியவில்லை. தமிழனுக்கு சொரணை இல்லை என்றுதானே பிய்த்து உதறினார். சினிமா நடிகனுக்கு கைதட்டும் கூட்டமே என்றுதானே சூடு கொடுத்தார்.

எனக்கு புரிந்தவரை ரஜினியை குறிப்பிட்டு பேசியது - ரஜினி பேரை சொல்லி கைத்தட்டல் வாங்க தேவை இல்லை மற்றும் வாட்டாள் நாகராஜ் பற்றி பேசியது. இதில் என்ன தவறு கண்டீர்கள். தெகிரியமாக ரஜினியை பக்கத்தில் வைத்து கொண்டுதானே பேசினார். Election வரட்டும் நாம் யார் என்று காட்டுவோம் என்று மைக் முன்னாடி வாய்ஸா வுட்டார்.

 
On Fri Aug 08, 11:50:00 AM GMT+8 , வெண்தாடிதாசன் said...

//இதை நான் கூற காரணமே சத்யராஜ் ரஜினி யை சின்ன வசயசு பொண்ணுக கூட நடிக்கிறார்னு கூறி விட்டு அவர் அவ்வாறு நடிப்பதால் தான்.//

அவர் எப்போது எங்கே இப்படி பேசினார்?

//அதெல்லாம் சரிங்க..தமிழ் தமிழ்னு முழங்கிட்டே இருக்காரே தமிழுக்கு அவர் என்ன பண்ணினாருன்னு சொல்லவே இல்லையே//

ஒரு பவுனு காசு கொடுப்பேன் என்று சொல்லிவிட்டு அல்வா கொடுக்காமல் இருக்கின்றாரே அதுவே பெரிய விஷயம்.

 
On Fri Aug 08, 12:00:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

கிரி said...
//வெங்கட்ராமன் said...
அதான அப்பாவும் பையனும் நமீதா பின்னாடி சுத்தி சுத்தி லவ் பண்றதெல்லாம் புரட்சி இல்லையா. . . ?//

இப்படியெல்லாம் கூடக் கேட்கிறார்களா ?

என்ன கொடுமை !!!

நயந்தாரா - ரஜினி !
நயந்தாரா - தனுஸ் !

அப்பனும் மகனும் டாவடிப்பது தப்பு, மாமனார் - மருமகன் ஓகே வா ?

:)

 
On Fri Aug 08, 12:02:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

எக்ச்க்யூச்சுமி,

கிரி வெளிப்படையாக தன்னை ரஜினி ரசிகராக சொல்லிக் கொண்டு சத்தியராஜை வறுத்து எடுக்கிறார். :)

நீங்களும் ஏன் சத்யராஜ் ரசிகர் போல பதிலுக்கு லாவனி பாடுறிங்கோ !

 
On Fri Aug 08, 12:05:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

எனக்கு ஒரு சந்தேகம்,

மிஸ்டர் பாரத் படத்தில் சத்தியராஜ் ரஜினிக்கு அப்பாவாக நடித்தார்.

யார் பெரியவர் ?
:))))))

 
On Fri Aug 08, 12:14:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

சைக்கிள் கேப்புல புல்லெட் ட்ரெய்ன் கூட ஓட்டுங்கோ, டிரெயினோ மக்களோ ஆக்சிடெண்ட் ஆகாமல் பார்த்து ஓட்டுங்கோ ! இரண்டு பேருக்கும் தான் !

 
On Fri Aug 08, 12:16:00 PM GMT+8 , Anonymous said...

சத்யராஜ் பெரியாராக நடித்தது ஒரு காரணம் ???

 
On Fri Aug 08, 12:21:00 PM GMT+8 , swetha said...

ரஜினி (மற்றும் சில நடிகர்களும்) கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் குடும்பத்திற்கு கொடுப்பதாக சொல்லிய தொகையை ஒரு வருடம் கழித்தும் கொடுக்காமல் இருந்ததாக ஏதோ பத்திரிக்கையில் படித்ததாக நினைவு..

வசந்த்

 
On Fri Aug 08, 12:25:00 PM GMT+8 , கிரி said...

ஜோசப் பால்ராஜ் என் மனதில் உள்ளதை கூறி விட்டேன், இங்கே ஓவ்வொருவருக்கும் விளக்கம் சொல்ல என்னால் முடியாது :-), என் வேலையும் அல்ல அங்கே நான் பதிவிட்டேன் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கூறுவது நியாயம்.

அதுவும் வெண்தாடி தாசன் செம காண்டுல இருக்காரு போல ஹி ஹி ஹி மன்னித்துக்குங்க வெண்தாடி தாசன் நான் எதுவும் தவறா பேசி இருந்தா.

உங்கள் அனைவரின் கூற்று படி சத்யராஜை தன்மான தமிழனாகவே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை :-)

என்னை திட்டியவர்களுக்கும், என் மேல் உள்ள அன்பால் பின்னூட்டம் போட்டு திட்டாமல் மனதிற்குள் திட்டிய அனைவருக்கும் என் நன்றி :-))))))))

 
On Fri Aug 08, 12:30:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

எனதருமை நண்பர்களே, உங்கள் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் பதிலளிக்கப்பட வேண்டியவை. ஆனால் அலுவலகத்தில் வேலை அதிகமாக இருப்பதால் பதில் அளிக்க முடியவில்லை. கட்டாயம் மாலை பதிலளிக்கிறேன். கிரி,கட்டாயம் உங்களுக்கு என் மேல் சினமிருக்காது என நம்புகிறேன். மாலை விரிவான பதில் அளிக்கிறேன்.

 
On Fri Aug 08, 12:49:00 PM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

:-))

 
On Fri Aug 08, 01:20:00 PM GMT+8 , சரவணகுமரன் said...

நல்ல வாதம்...

ஆனா யாரையும் இந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணாம இருக்கறது தான் பெட்டர். நாளைக்கே "ரஜினி போல் ஒரு உயர்ந்த மனிதனை நான் பார்த்ததில்லை" என்று சத்யராஜ் சொல்லும் நாள் கூட வரலாம்... :-)

 
On Fri Aug 08, 01:41:00 PM GMT+8 , DHANS said...

hi joseph, what you have written is right, but i feel rajini is not worth to receive your blogs. vimarisanam panna thevaiattravar avar. why you wasting time by writing about him.

 
On Fri Aug 08, 01:56:00 PM GMT+8 , Anonymous said...

Certainly what you said is correct.

 
On Fri Aug 08, 02:32:00 PM GMT+8 , Anonymous said...

///ஒரு தேர்தலுக்கு ஒரு நிலை எடுத்ததால் வேண்டுமாணால் ரஜினியை நாம் டி.ராஜேந்தருடன் ஒப்பிடலாம். அதுதான் சரியாக இருக்கும். ///

இப்படி சொல்றதுக்கு பதில் ரஜினி மூஞ்சில ஆசிட் அடிச்சிடலாம் நீங்க

 
On Fri Aug 08, 04:43:00 PM GMT+8 , Anonymous said...

//ஆனால் உண்மை தெரிந்தவர்கள் யாரும் அவர் பேசியது 80% ரஜினி மீது இருக்கும் வெறுப்பிலேயே பேசினார் என்று தெரியும்.//

ரஜினி என்ற கலர் கண்ணாடி அணிந்து உலகைக் காணும்போது எதிர்ப்படும் எல்லோருமே ஏதோ ஒரு கண்ணாடி அணிந்திருப்பதாகவே கிரி அவர்களுக்குப் படுகிறது. உலகத்தில் கண்ணாடி அணியாதவர்களே இருக்கமாட்டார்களா? தான் அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றி விட்டுப் பார்த்தால், இன்னொருவர் கண்ணாடி இல்லாமல் பொதுப்பார்வையில் கருத்துச் சொல்வது புரியலாம். ஆங்கிலத்தில் stepping into other people's shoes என்பார்கள். Stepping into other people's shoes enables great communication to take place, even under difficult circumstances. Many of the problems we experience on a daily basis are due to either a lack of, or poor communication. One of the best ways to improve communication and break down any barriers is to understand other people. பொதுவாகவே, தமிழர்களுக்கு இந்தக் குணம் குறைவு.

 
On Fri Aug 08, 06:23:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி கடுகு..
சினிமா மாயையில் இருந்து விடுபட்டால் தான் தமிழனுக்கு விமோசன்ம் என்பதே எனது கருத்தும்.

நடுநிலையாளர்களின் கருத்து இதுதான் என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி பெயரிலி..

 
On Fri Aug 08, 06:26:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

ஜெகதீசன், கிரிக்கு நம்ம மேல எல்லாம் சினமோ அல்லது வெறுப்போ வரவே வராது. இது சாதாரண கருத்துப் போர். எனவே தாராளமாக உங்கள் கருத்துக்களை சொல்லலாம்.

//சத்தியராஜ் படத்திற்கு சென்றால் மூன்று மணிநேரம் நன்றாக ரசித்து சிரித்துவிட்டு வரலாம்.
அவர் ஒன்னும் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்காக படம் எடுக்கவில்லை.//

உட‌ன்ப‌டுகின்றேன்.

 
On Fri Aug 08, 06:29:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//சூர்யா said...
உங்கள் கருத்துக்கள் சரியென்றே எனக்கும் படுகிறது. //

வருகைக்கும், எனது கருத்துக்களை சரியென்று சொன்னதற்கும் நன்றி சூர்யா..

//கழுகார் said...
ஸ்ரேயாவுடன் மட்டுமல்ல நயந்தாராவுடனும் மாமனும் மருமகனும் குத்தாட்டம் ஆடினார்கள். அதிலும் மருமகன் ஒருபடிமேலே போய் நயனுடன் உல்லாசமாகத் திரிந்ததாகவும் இதனால் கோபமடைந்த மாமனார் மருமகனுக்கு டோஸ் கொடுத்ததாகவும் சகல பத்திரிகைகளிலும் கிசுகிசு வந்தது.//

வருகைக்கும், புதிய தகவலுக்கும் நன்றி கழுகாரே.
நீங்கள் குறிப்பிட்டிருந்த செய்தி நான் முன்னரே அறியாத ஒன்று.

 
On Fri Aug 08, 06:32:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//ஜோ / Joe said...
அப்படி போடுங்க!

//தன்னிடம் உள்ளதனைத்தையும் கொடுத்த அந்த முதியவரா அல்லது தனது தேவைகள் போக மிச்சம் இருப்பதை கொடுக்கும் பில்கேட்ஸ்ஸா?//

பைபிள் கதையை அருமையா இங்கே பயன்படுத்தியிருக்கீங்க.

சத்தியராஜ் பேசிய முறைக்காக அவரை திட்டி ,ரஜினியை பாராட்டியவர்களில் நானும் ஒருவன். //



பைபிளில் சொல்லப்பட்ட உவமைதான், ஆனால் பதிவை எழுதும்போது எனக்கு பைபிளில் உள்ள வார்த்தைகள் உடனே நினைவுக்கு வரவில்லை, பைபிளை எடுத்து படிக்கவும் முடியவில்லை, எனவே சாதாரணாமகவே குறிப்பிட்டிருந்தேன்.

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. எங்கே என் பெயரில் முக்கால்வாசி கொண்டவர்? ஆளையே காணோம்?

 
On Fri Aug 08, 06:48:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

கிரி, எனது கருத்துக்களில் பலவற்றுக்கு நீங்கள் பதிலளிக்க விரும்பாமையால் நானும் அதை குறித்து பேச இயலவில்லை.

//சத்யராஜ் ரஜினி யை சின்ன வசயசு பொண்ணுக கூட நடிக்கிறார்னு கூறி விட்டு அவர் அவ்வாறு நடிப்பதால் தான்.//


இது முற்றிலும் புதிய‌ செய்தியாக‌ உள்ள‌து, அவ‌ர் எப்போது அப்ப‌டி கூறினார்? ச‌த்ய‌ராஜ் ப‌ட‌ங்களில் எல்லோரையும் கிண்ட‌ல் செய்து காட்சிக‌ள் இருக்கும். அவை வெறும் திரைப்ப‌ட‌ம் ம‌ட்டுமே, திரைப் ப‌ட‌த்தில்கூட‌ அவ‌ர் ர‌ஜினியை நோக்கி இப்ப‌டி சொன்ன‌தாக‌ என‌க்கு தெரிய‌வில்லை.

//தமிழனுக்கு ஆதரவாக பேசினார் என்றால் ஒத்துக்கொள்கிறேன், ஆனால் உண்மை தெரிந்தவர்கள் யாரும் அவர் பேசியது 80% ரஜினி மீது இருக்கும் வெறுப்பிலேயே பேசினார் என்று தெரியும்.//

மீண்டும் சொல்கிறேன்,உண்ணாவிரதப்போராட்டத்தில் அவர் பேசிய சொல்லியவை சரியென்றாலும், சொன்னவிதம் தவறு, அப்படி ஒரு பொது கூட்டத்தில் பேசுவதை நானும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நமது விவாதம் ரஜினி மன்னிப்பு கேட்டபின் சத்தியராஜ் கூறியது குறித்து நீங்கள் எழுதிய பதிவிற்குத் தான்.

குத்து வசனங்களை கேட்க ஆள் இல்லை என்றால் படம் பார்க்கவும் ஆள் இல்லை என்றுதானே அர்தமாகும்? பின் எப்படி அவர் இத்தனை படங்கள் நடிக்கிறார்?

சத்யராஜ் போன்ற நடிகர்களின் படங்கள், குறைந்த பொருட் செலவில் தயாரிக்கப்படுபவை, அவற்றின் லாபமும் குறைவாகவே இருக்கும். அவரை நம்பி படம் தயாரிக்கின்றார்கள் என்றால், இன்னும் அவர் படத்தை பார்க்க ஆள் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம்? அதில் ஏன் அவர் குத்து வசனங்களை சேர்க்க சொல்வதில்லை?

//அதெல்லாம் சரிங்க..தமிழ் தமிழ்னு முழங்கிட்டே இருக்காரே தமிழுக்கு அவர் என்ன பண்ணினாருன்னு சொல்லவே இல்லையே //

இப்ப வருவேன், அப்ப வருவேன்னு எல்லாம் சொல்லி மக்களை குழப்பாம, இவங்க ஆட்சி வந்தா ஆண்டவணால கூட காப்பத்த முடியாது , அவங்க ஆட்சிக்கு வந்தா அது ஆண்டவண் ஆட்சி அப்டினு எல்லாம் குரல் கொடுக்காம சத்தம் போடாம இருக்காரு பாருங்க, அதுவே பெரிய தொண்டுதான்.

தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்ற போது மட்டும் இவ்வளவு ஆவேசமாக குரல் கொடுக்கிறார் பாருங்க, அதுவும் பெரிய தொண்டுதான்.

 
On Fri Aug 08, 07:05:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வெண்தாடி தாசன்.

கோவி.க அண்ணா, நான் சத்யராஜின் ரசிகன் போல இதை சொல்லவில்லை. இதே நிலை எந்த நடிகருக்கு ஏற்பட்டிருந்தாலும் நான் இதைத்தான் செய்திருப்பேன்.

 
On Fri Aug 08, 07:10:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

//:00 PM SGT
swetha said...
ரஜினி (மற்றும் சில நடிகர்களும்) கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகள் குடும்பத்திற்கு கொடுப்பதாக சொல்லிய தொகையை ஒரு வருடம் கழித்தும் கொடுக்காமல் இருந்ததாக ஏதோ பத்திரிக்கையில் படித்ததாக நினைவு..

வசந்த்//

அங்கு ரஜினி மட்டுமல்ல, உதவி செய்வதாக அறிவித்தவர்கள் எவரும் உதவவில்லை. ஆனால் சொல்லாமல் உதவியவர்கள் நிறைய பேர்.

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் இருக்க வேண்டும், ஆனால் இங்கு 1000 ரூபாய் மதிப்புள்ள இஸ்திரி பெட்டி கொடுத்தால் கூட 10 ஆயிரம் செலவில் விழா நடத்துவதுதானே நடக்கிறது.

என்றும் அன்புடன் பால அண்ணா எத்தனையோ உதவிகளை செய்து வருகின்றார், லக்கி லுக் அண்ணா, புதுகை அப்துல்லா அண்ணா இன்னும் நிறைய பேர் அவருக்கு உதவுகின்றார்கள், இவர்கள் எல்லாம் என்ன விளம்பரம் செய்து, விழா எடுத்தா உதவுகின்றார்கள்?

 
On Fri Aug 08, 07:14:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

மேலும் கருத்துக்களை வழங்கிய விக்னேஸ்வரன், சரவணக்குமரன், தன்ஸ், செந்தழல் ரவி ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

செந்தழல் ரவி, சில நேரங்களில் உண்மை அமிலத்தை விட கொடுமையாக இருக்கும். நான் சொன்னது உண்மை தானே.

 
On Fri Aug 08, 07:17:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

மிக அருமையான கருத்தை பெயரிலியாக வந்து சொல்லியிருக்கும் நண்பருக்கு நன்றிகள்.

//ரஜினி என்ற கலர் கண்ணாடி அணிந்து உலகைக் காணும்போது எதிர்ப்படும் எல்லோருமே ஏதோ ஒரு கண்ணாடி அணிந்திருப்பதாகவே கிரி அவர்களுக்குப் படுகிறது. உலகத்தில் கண்ணாடி அணியாதவர்களே இருக்கமாட்டார்களா? தான் அணிந்திருக்கும் கண்ணாடியை கழற்றி விட்டுப் பார்த்தால், இன்னொருவர் கண்ணாடி இல்லாமல் பொதுப்பார்வையில் கருத்துச் சொல்வது புரியலாம். ஆங்கிலத்தில் stepping into other people's shoes என்பார்கள். Stepping into other people's shoes enables great communication to take place, even under difficult circumstances. Many of the problems we experience on a daily basis are due to either a lack of, or poor communication. One of the best ways to improve communication and break down any barriers is to understand other people. பொதுவாகவே, தமிழர்களுக்கு இந்தக் குணம் குறைவு. //


சத்தியமான வார்த்தைகள்.
இந்த வண்ணக் கண்ணாடி ரஜினி, கமல் என்பதோடு மட்டும் நிற்பதில்லை.எல்லாவற்றிலுமே நாம் ஒரு ஒரு கண்ணாடி வைத்துக்கொண்டுத்தான் இருக்கிறோம். அரசியலையும் அப்படித்தான் கட்சி என்ற கண்ணாடி கொண்டுதான் பார்கிறோம். இது முதலில் மாற வேண்டும்.

 
On Fri Aug 08, 08:04:00 PM GMT+8 , Anonymous said...

அருமையான விளக்கம்.

 
On Fri Aug 08, 08:31:00 PM GMT+8 , Anonymous said...

//தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்ற போது மட்டும் இவ்வளவு ஆவேசமாக குரல் கொடுக்கிறார் பாருங்க, அதுவும் பெரிய தொண்டுதான்.//

அவரு நமிதாவோட இந்த வயசில டூயட் பாடி இம்சை பண்ணம இருந்தா அது இதவிட பெரிய தொண்டுங்க! (ரஜினியும்தான்)

 
On Fri Aug 08, 08:56:00 PM GMT+8 , Jackiesekar said...

அன்புள்ள பால்ராஜ், சமிபமாக தங்கள் பதிவை வாசிக்கிறேன், ரொம்ப அற்புதமாக எழுதுகிறீர்கள், நண்பர் கிரி கூட நன்றாக எழுதுகிறவர்தான் ஆனால் ரஜினி பேய் பிடித்து இருக்கிறது அவ்வளவே. இருப்பினும் உங்கள் சமுதாய கோபத்துக்கு நான் ரசிகன் அதுமட்டும் இல்லாது சைக்கிள் கிரி பதிவுக்கு நல்ல பதில் ஆனாலும் சலைக்காமல் அவரும் எல்லோருக்கும் பதில் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்,கிரி தன் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வது நல்லது. ஜோ மிக அற்புதமாக உண்மை தமிழனாய்எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள்

 
On Fri Aug 08, 08:59:00 PM GMT+8 , Jackiesekar said...


இப்ப வருவேன், அப்ப வருவேன்னு எல்லாம் சொல்லி மக்களை குழப்பாம, இவங்க ஆட்சி வந்தா ஆண்டவணால கூட காப்பத்த முடியாது , அவங்க ஆட்சிக்கு வந்தா அது ஆண்டவண் ஆட்சி அப்டினு எல்லாம் குரல் கொடுக்காம சத்தம் போடாம இருக்காரு பாருங்க, அதுவே பெரிய தொண்டுதான்.

தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்ற போது மட்டும் இவ்வளவு ஆவேசமாக குரல் கொடுக்கிறார் பாருங்க, அதுவும் பெரிய தொண்டுதான்.“ ங்கொய்யால அப்படி போடு அறுவாளள

 
On Fri Aug 08, 10:45:00 PM GMT+8 , Anonymous said...

கிரியின் எழுத்துகளுக்கு தவறாத வாசகன் நான், அவர் டி.ராஜேந்தர், சத்யராஜ் பற்றியும் எழுதிய கட்டுரைகளை படித்த பின்பு , கிரி பக்குவப்படாத மனிதராக தோன்றுகிறார். வரட்டுத்தனமான வாதங்கள். நியாயமற்றவை.

அவர் வலைப்பூவுக்கு போவதை நிறுத்தி விட்டேன்.

 
On Sat Aug 09, 03:55:00 AM GMT+8 , Anonymous said...

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசுகையில், இங்கு யாருடைய பெயரைச் (ரஜினி) சொன்னால் எனக்குக் கைத்தட்டல் கிடைக்குமோ, அந்தப் பெயரைச் சொல்வதை விட, நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாவேன். கர்நாடகத்தில் தமிழனை கன்னடக்காரர்கள் தாக்கிக் கொண்டுள்ளனர். அதைப் பற்றி மட்டும்தான் இங்கு பேசுவேன்.

இதுவரை என்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் இன்று முதல் என்னை தமிழன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அப்படியானால் தமிழன் மனிதன் இல்லையா என்ற சந்தேகம் வரும். தமிழன் மனிதன் இல்லை, வெறும் மரம் என்றுதான் அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரமாக இருந்தால் என்ன நடக்கும்? நாய் வந்து ஒண்ணுக்கு அடிக்கும். பிறகு எவனாவது வந்து மரத்தை வெட்டி எடுத்துக் கொண்டு போய் கட்டில் செய்து கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டிருப்பான். டேபிள் செய்து அதில் உட்காருவான். மொத்தத்தில் அந்த மரத்திற்கு மரியாதையே இல்லாமல் போய் விடும். எனவே தமிழா, நீ மரமாக இருக்காதே, மனிதனாகவும் இருக்காதே, தமிழனாக இரு என்று சொல்கிறேன்.

காந்தி சொன்னார் கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் உலகில் உள்ள 600 கோடி பேரும் குருடனாகத்தான் இருப்பார்கள். கடைசியில் உலகில் அத்தனை பேரும் குருடனாகி விடுவார்கள் என்றார். ஆனால் தமிழனுடைய கண்ணை 40 ஆண்டுகளுக்கு முன்பே பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

முதலில் மகாராஷ்டிரத்தில் பால்தாக்கரே என்ற ஆள் பிடுங்கினார். பின்னர் மலேசியாவில் பிடுங்கினார்கள். ஈழத்தில் பிடுங்கினார்கள். இன்று கர்நாடகத்திலும் பிடுங்க ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே காந்தி சொல்வதை இன்று கடைப்பிடிப்பதாக இருந்தால் உலகில் உள்ள 10 கோடித் தமிழர்களும் குருடனாக இருப்பார்கள். மற்ற 690 கோடி பேரும் பார்வையுடன் திரிவார்கள். ஏற்கனவே தமிழன் சிந்தனைக் குருடனாக, கருத்துக் குருடனாக இருக்கிறான். கண்ணும் போய் விட்டால் மயிரு மாதிரிதான் இருக்கும் அவனது வாழ்க்கை.

40 வருடங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர், தமிழக முதல்வராக இருந்தபோது, கர்நாடகத்தில் குண்டுராவ் முதல்வராக இருந்தார். அவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். ஒருமுறை குண்டுராவ் வீட்டுக்கு எம்.ஜி.ஆர். போயிருந்தார். மட்டன், சிக்கன் என அனைத்தும் செய்து போட்டார்கள். எம்.ஜிஆரும் சாப்பிட்டார்.

ஆனால் அவர்கள் வைத்த தண்ணீரை மட்டும் குடிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். எனது மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். எனக்கு மட்டும் எதற்கு உங்கள் தண்ணீர் என்று கூறி விட்டார்.

சாய்குமார் என்று ஒரு நடிகர். உனக்குப் பிடித்த நடிகர் யார் என்று அவரிடம் கர்நாடகத்தில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று கூறி விட்டார். அவ்வளவுதான் அவரை உதை உதை என்று உதைத்து ராஜ்குமார் என்று சொல் என்று கூறியுள்ளனர். இதற்குப் பெயர்தான் கன்னட வெறி.

நான் வீரப்பன் செய்த செயல்களை எல்லாம் கேள்விப்பட்டு முன்பு அவன் மீது கோபப்பட்டிருக்கிறேன், ஆவேசப்பட்டிருக்கிறேன். ஆனால் பல வீரப்பன்களை உருவாக்கும் நிலையை இப்போது உருவாக்கி விடாதீர்கள் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் தமிழகத்திற்கு லாபம் கிடைக்கும். ஆனால் கர்நாடகத்திற்கு ஒரு நஷ்டமும் கிடையாது.

சூப்பர் காமெடியன் வாட்டாள்:

அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார். அவர் சொல்கிறார் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி எல்லாம் கர்நாடகத்தோடு சேர வேண்டியதாம். விட்டால், மெட்ராஸ், பீச் எல்லாமும் எங்களுக்குத்தான் எல்லாம். நாம் என்ன வாயில் விரல் வைத்து கொண்டு போகனுமா.

என் பொண்டாட்டி கூட நான் படுக்குறேன் உனக்கு ஏண்டா வலிக்குது. உன் பொண்டாட்டி கூடவா படுகிறேன்.

நமக்கு சம்பந்தப்பட்ட ஒருவரே வாட்டாள்தான் எனக்குப் பிடித்த பேச்சாளர் என்று கூறியுள்ளார். என்னத்தைச் சொல்ல.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று பேசிக் கொண்டிருக்காதீர்கள். அப்படியே பேசிக் கொண்டிருந்தால் நீ கேன.... ஆகி விடுவாய். வாலாட்டினால் ஒட்ட நறுக்கவும் தெரியணும். அவன்தான் தமிழன். குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறிக் கொண்டுதான் இருப்பார்கள். குனியாதே, நிமிர்ந்து நில்.

தமிழனுக்கு எங்கிருந்தும் தண்ணீர் வரக் கூடாது என்கிறார்கள். பாலாறில் தண்ணீர் இல்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் இல்லை, சேது சமுத்திரத் திட்டத்தையும் எதிர்க்கிறார்கள்.

கடவுளுக்காக இனிமேல் வெளியில் போகாதீர்கள். தமிழ்க் கடவுள் முருகன் இருக்கிறான். அவனைக் கும்பிடுங்கள். மதுரை வீரனைக் கும்பிடுங்கள், சுடலை மாடனை கும்பிடுங்கள்.
( அப்ப இவர்கள் இந்த கடவுள் எல்லாம் இருக்கிறதா ? )
நமக்கு வடநாட்டு ராமனும் வேண்டாம், ராகவேந்திராவும் வேண்டாம் (ரஜினியை திரும்பிப் பார்த்தபடி), அய்யப்பனும் வேண்டாம்.

உலகில் தமிழன் எங்கு அடிபட்டாலும் நாம் குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தில் அடிபட்டாலும் குரல் கொடுக்க வேண்டும். அங்கு இருப்பவன் உனது சகோதரன், உனது சகோதரி. தமிழனை உலகில் எங்குமே நசுக்க முடியாது. அதை விட மாட்டோம். நீ குரல் கொடுக்கலை என்றால் நீ ஒரு முட்டாக்கூ....அவ்வளவுதான் என்றார் சத்யராஜ்.

 
On Sat Aug 09, 07:33:00 AM GMT+8 , Anonymous said...

//அதெல்லாம் சரிங்க..தமிழ் தமிழ்னு முழங்கிட்டே இருக்காரே தமிழுக்கு அவர் என்ன பண்ணினாருன்னு சொல்லவே இல்லையே//

கிரி சார், சத்யராஜ கவிதையா எழுத சொல்றீங்க?
சத்யராஜ் தமிழனுக்காக குரல் கொடுக்கிறாரே அது உங்களுக்கு காதில விழவில்லையா? அது தமிழ் நாட்டுக்கு செய்ற சேவைதானே? உங்க ரஜினி என்ன பண்ணாரு?
ரஜினிங்கற மாயைலேர்ந்து வெளியே வாங்க, ஏதாவது புரியும்.

 
On Sun Aug 10, 08:40:00 PM GMT+8 , Anonymous said...

//வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால் நாங்கள் பேவதெங்கே ( தெக்க போங்க)//

கிகிகிகிகிகி

 
On Thu Aug 14, 09:51:00 PM GMT+8 , Tech Shankar said...




இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க