Author: ஜோசப் பால்ராஜ்
•12:48 AM
என்ன பண்றது, இந்த வாரம் பதிவர் உலகத்துல ஒன்னு பகிரங்க கடிதம் எழுதனும் இல்லன்னா மெஸ்ஸ பத்தி எழுதணும் ...

நான் யாருக்காவது அந்தரங்க கடிதம் எழுதுனாலே அடிதடி வந்துடும், இதுல பகிரங்க கடிதம் எதையாவது எழுதுனா பிரச்சனை பெரிய அளவுல வந்துடாது? அதான் மெஸ் பக்கம் போயிடுவோம்னு முடிவுபண்ணிட்டேன்.

நான் பெருசா எந்த மெஸ்லயும் போயி தொடர்ந்து சாப்பிட்டதெல்லாம் இல்லை. ஆனால் இந்த மதுரை பக்கம் போனா மறக்காம செய்யிறது இதுதான்.
தலைப்புல இருக்க எல்லாத்தையும் முழுசா அனுபவிக்க மதுரையில ஒரு முழுநாள் தேவைப்படும்.

காலையில ஒரு 10 மணிக்கெல்லாம் மதுரைக்குள்ள நுழைஞ்சிடணும். அப்பத்தான் சரியா ஜிகர்தண்டால இருந்து ஆரம்பிக்கலாம். மதுரை ஜிகர்தண்டா இருக்கே, அந்த பெயரை கேட்டாலே ஜிவ்வுனு இருக்கும். இது ஒரு ஹிந்தி பெயராம்.ஜிகர்ன்னா இதயம், தண்டான்னா குளிர்ச்சி, இதயத்தை குளிர்விக்கும் பானம் இதுன்னு பெயர் குறிப்பு சொல்றாங்க.


மதுரையில பல கடைகளில் ஜிகர்தண்டா கிடைச்சாலும், மஞ்சணக்காரவீதியில இருக்க பழைய கடையிலத்தான் ரொம்ப நல்லா இருக்கும். அந்த வீதியில போய் யாரைக்கேட்டாலும் கடைய காட்டுவாங்க. (திருநெல்வேலில எல்லா இடத்துலயும் அல்வா கிடைச்சாலும், இருட்டுகடை அல்வா மாதிரி வராதுல, அப்டிதான் இதுவும்).

பாதம் பிசின், சுண்டக்காய்சுன பால், ஐஸ்க்ரீம் மற்றும் சில எசன்ஸ் ஊத்தி செய்யிற இத காலையில சாப்புட்டுட்டு ஒரு 2 மணிநேரம் வேற எதுவும் சாப்புடக்கூடாது. அப்பத்தானே அம்மா மெஸ்ல போயி ஒரு கட்டு கட்ட முடியும்?

மதியான சாப்பாட்டுக்கு மதுரையில ஒரு சிறந்த இடம் அழகர் கோயில் சாலையில, தல்லாக்குளம் பகுதியில இருக்க அம்மா மெஸ்.

அம்மா மெஸ் அயிர மீன் குழம்பு தமிழ்நாடு முழுக்க புகழ்வாய்ந்த ஒன்று. நாங்க எல்லாம் எங்க கிராமத்துல ஆறு, வாய்கால்கள்ல தண்ணி கொஞ்சமா ஓடுற காலத்துல அயிரமீன் பிடிச்சுருக்கோம். ஆனா இந்த அம்மா மெஸ் காரங்களுக்கு மட்டும் எப்டி வருசம் முழுசும் அயிரமீன் கிடைக்குதுன்னு தெரியலை. எப்ப போனாலும் அயிரமீன் குழம்பு கிடைக்குது.
அயிரமீன் கடல்ல இருக்க நெத்திலி மீன் மாதிரி ரொம்ப பொடிசா இருக்க நன்னீர் மீன். இதை புடிக்கிறது ரொம்ப சுலபம். தண்ணி கொஞ்சமா ஓடுற ஆறு, வாய்க்கால்கள்ல கூட்டமா ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு பழைய கொசுவலை இல்லன்ன லுங்கி இதுல ஒருபக்கம் முடிச்சு போட்டுகிட்டு, ரெண்டு பேரு சேர்ந்து தண்ணியில போட்டு இழுத்து தூக்குனா செமையா மாட்டிக்கும். இந்த மீன்ல குடல் எல்லாம் இருக்காதுங்கிறதால சுத்தம் பண்றது ரொம்ப சுலபம். ஒரு மண் சட்டியில கொஞ்சம் கல் உப்ப போட்டு நல்லா உரசி இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் தேய்ச்சா போதும் எடுத்து கழுவிட்டு சமைக்கலாம். எங்க கிராமத்துக்கு போகிறப்ப நான், எங்க அண்ணண்கள் எல்லாம் சேர்ந்து இந்த மீன் புடிப்போம். எப்ப அயிரமீன் சாப்பிட்டாலும் எனக்கு எங்க அண்ணண்களோட சேர்ந்து மீன் புடிச்சதுதான் நினைவுக்கு வரும்.

சுகமான அயிரமீன் சாப்பாட்டை சாப்பிட்டுட்டு நல்லா ஊர் சுத்தனும். மாலையில வெறும் காபி மட்டும் குடிச்சா போதும், ஏதாவது சிற்றுண்டி எல்லாம் சாப்பிட்டு வயிற நிரப்பியாச்சுனா அப்றம் கோனார் மெஸ்ல ஒழுங்கா சாப்பிட முடியாதுல‌.

கோனார் மெஸ் ஒரு சாலையோர கடை மாதிரித்தான் இருக்கும், மதுரை சிம்மக்கல் பக்கத்துல இருக்கு. இரவு நேரக் கையேந்தி பவன் கடைத்தான். ஆனா எல்லாம் மிக அருமையா இருக்கும். கோனார் மெஸ் போனா கறி தோசை சாப்பிடாம வரக்கூடாது. ஊத்தாப்பம் மாதிரி தோசைய ஊத்தி அது மேல ஆட்டுக்கறிய அழகா வைச்சி கொடுப்பாங்க. அங்க கோழி வருவல்,இடியாப்பம் எல்லாமும் கூட ரொம்ப சுவையா இருக்கும். கோனார் மெஸ் மாலை 7.30 மணிக்குத்தான் திறப்பாங்க. கார்ல போனா, கார்லயே உக்காந்து சாப்புடலாம். கொண்டுவந்து கொடுக்க நிறைய பணியாளர்கள் இருப்பாங்க. 8மணிக்கெல்லாம் நிறைய கூட்டம் வந்துரும். கார் நிறுத்த இடம் இருக்காது. 12 மணிவரைக்கும் கடை திறந்திருக்கும்.

ஆனா நாம ஒரு நாள் பயணமா போயிருந்தா 9மணிக்குள்ள கோனார் மெஸ்ல சாப்பிட்டு முடிச்சுரணும், அப்பதானே இரவு நேரக்காட்சிக்கு ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, அப்டியே முருகன் இட்லிகடையில சாப்பிட்டுட்டு ஊரப் பார்க்க போக முடியும்? ( அடப்பாவி, இன்னும் சாப்பாடு முடியலியான்னு எல்லாம் கேட்க்கப்படாது, நிறைய இருக்கப்பு. ..)

கோனார் மெஸ்ல கறிதோசைய சாப்பிட்டுட்டு ஏதாச்சும் ஒரு படத்துக்கு போயிரனும், அங்க போய் எங்க தலைவர் ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச படத்துக்குத்தான் போவேன்னு எல்லாம் பச்சபுள்ளயாட்டம் அழுவகூடாது. அவரு நடிச்ச படம் எல்லாம் எப்ப திரையரங்குக்கு வந்துருக்கு?

படம் பார்த்து முடிச்சதும் முருகன் இட்லி கடைக்கு போயிடனும். மேல மாசிவீதியில இருக்கு இந்த கடை. இந்த கடைக்கு நான் ஒன்னும் பெருசா விளம்பரம் தரவேண்டியது இல்ல. ஏற்கனவே சுப்ரமண்யம் சாமிதான் எல்லாத்தையும் செஞ்சு முடிச்சுட்டாரே. இவங்க வைக்கிற இட்லியை விட அதுக்கு வைக்கிற சட்னிதான் விசேஷமே. குறைஞ்சது 4 சட்னி இருக்கும், சாம்பார், இட்லி பொடி, நல்லெண்ணய் எல்லாம் கிடைக்கும். இவங்க கடை சென்னையிலயும், இப்ப சமீபத்துல சிங்கப்பூர்லயும் திறந்துருக்காங்க. சென்னையிலயும், சிங்கப்பூர்லயும் இட்லிபொடி,எண்ணெய்க்கு தனியா காசு வாங்குறாங்க. (சிங்கப்பூர் கடை முஸ்தபா வணிகவளாகத்துக்கு அருகே இருக்கு, வெள்ளி,சனி, ஞாயிறுகிழமைகளில் வரிசையில நின்னு இடம் பிடிக்க வேண்டியிருக்கு).

மதுரை ஒரு தூங்காத நகரம், ராத்திரி எல்லா நேரத்துலயும் சாலையோர கடை எல்லாம் திறந்துருக்கும். இந்த சாலையோர கடைகள் கூட மிக சுவையான உணவு தருவாங்க. அங்கயும் இட்லி, தோசைக்கு வரிசையா பல வண்ணங்கள்ல சட்னி தருவாங்க. பாசக்கார மக்க நிறைஞ்ச ஊரு, ஒரு குறும்போட எல்லாரும் பேசுனாலும் சாப்பாடு வஞ்சனையே இல்லாம போடுவாங்க.

இப்படி ஒரு நாள் உணவுமுறை பயணமாக மதுரைக்கு போகும் போது முக்கியமாக கவனிக்க வேண்டியவை.

1) உறவினர்கள், நண்பர்கள் யார் வீட்டுக்கும் போகாதீர்கள், அப்படி போனால் அவர்கள் வீட்டில் உணவருந்தவோ அல்லது சிற்றுண்டி, காபி போன்றவை உட்கொள்ளவோ நேரிடும். இது நமது பயணத்தின் நோக்கத்தை பாதித்துவிடும்.

2) ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுடன் மட்டும் இப்பயணத்தை அமைத்துக்கொள்வது நல்லது. ரொம்ப கூட்டமாயிட்டா ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்லி பயணத்தின் நோக்கத்தை கெடுக்க வாய்ப்புகள் இருக்கு.

3) காரில் சென்றால் ஓட்டுநர் ஒருவரை அமர்த்திக்கொள்வது நல்லது. நல்லா சாப்பிட்ட அப்றம் நமக்கு சுகமா தூக்கம்தான் வரும். வண்டி ஓட்டனுமேன்னு குறைச்சு சாப்பிடுறமாதிரி ஆயிடும்.

இப்டி நல்ல ஒரு நாள் முழுக்க மதுரைய சுத்தி சாப்பிட்டுட்டு மறக்காம ஊருக்கு போறப்ப தங்கமணிக்கு மதுரை புகழ் மல்லிகைபூ வாங்கிட்டு போயிடுங்க. கல்யாணமாகத கொடுத்துவைச்சவங்க‌, வீட்ல இருக்க பெண்களுக்கு வாங்கிட்டு போங்கப்பு, அதையும் மறந்துட கூடாது.

ஒருவழியா பதிவுலகக் கடமையை நிறைவேத்தியாச்சு, இனிமேத்தான் அலுவலகத்துல நிம்மதியா தூங்க முடியும்... Udanz
This entry was posted on 12:48 AM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

54 comments:

On Thu Aug 14, 02:32:00 PM GMT+8 , Muthukrishnan said...

உனக்குள்ளயும் ஒரு ரசனையான சாப்பாட்டு ராமனா? நீ ரொம்ப சீரியாஸான ஆளுன்னுல நினைச்சேன்?

 
On Thu Aug 14, 02:34:00 PM GMT+8 , Siva Shankar said...

Nice article. Very Soon I'll go to Madurai and enjoy all these.

 
On Thu Aug 14, 02:46:00 PM GMT+8 , சரவணகுமரன் said...

நல்ல ரவுண்ட்-அப்

 
On Thu Aug 14, 02:50:00 PM GMT+8 , VIKNESHWARAN said...

நால்லா எழுதி இருக்கிங்க....

 
On Thu Aug 14, 02:50:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

அண்ணே, இதையெல்லாம் ஒத்துக்க முடியாது...
இந்த வாரம் கடிதம் மற்றும் உணவக வாரம்..

கடிதம் அல்லது உணவக வாரம் கிடையாது.. அதனால பகீரங்கக் கடிதம் ஒன்னு கட்டாயம் எழுதியாகனும்... :P

 
On Thu Aug 14, 02:50:00 PM GMT+8 , VIKNESHWARAN said...

நீங்களுமா?

 
On Thu Aug 14, 02:50:00 PM GMT+8 , VIKNESHWARAN said...

சரி சரி நானும் ஆட்டத்தில் சேர்ந்துக்கிறேன்...

 
On Thu Aug 14, 02:51:00 PM GMT+8 , சந்தர் said...

//எங்க தலைவர் ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச படத்துக்குத்தான் போவேன்னு எல்லாம் பச்சபுள்ளயாட்டம் அழுவகூடாது. அவரு நடிச்ச படம் எல்லாம் எப்ப திரையரங்குக்கு வந்துருக்கு?//
அகில உலக JKR ரசிகர் மன்றம் சார்பாக வன்மையாக் கண்டிக்கிறேன். நாயகன் படம் ரலீஸ் (ஹூம்...எப்ப ஆவறது... எப்ப நாம பாக்கறது...) ஆனதும் வருங்கால முதலமைச்சர் அவர்தான் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்...

 
On Thu Aug 14, 02:58:00 PM GMT+8 , துளசி கோபால் said...

ஆசையாத்தான் கிடக்கு. ஆனால் மீதி இருக்கும் விடுமுறையிலே 'வேற எங்கியோ' இருக்கணுமேன்னு எதையும் தின்ன முடியாமப் பயந்து பயந்து சாகறதுதான் வாழ்க்கைன்னு ஆகிப் போச்சேப்பூ.

சென்னை முருகன் இட்லிக் கடை......போயிருந்தேன்.எனக்குப் பிடிக்கலை.

 
On Thu Aug 14, 02:59:00 PM GMT+8 , Known Stranger said...

neyuma... ethavathu blog podanumnu poda aramechita.hmmm nadakatum nadakatum

 
On Thu Aug 14, 03:00:00 PM GMT+8 , கிரி said...

//என்ன பண்றது, இந்த வாரம் பதிவர் உலகத்துல ஒன்னு பகிரங்க கடிதம் எழுதனும் இல்லன்னா மெஸ்ஸ பத்தி எழுதணும் ...//

இப்பவே கண்ண கட்டுதே

 
On Thu Aug 14, 03:13:00 PM GMT+8 , பொன்வண்டு said...

கலக்கல் !! சாப்பிட்டு முடிச்ச திருப்தி !! :)

 
On Thu Aug 14, 03:15:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

//
கிரி said...

//என்ன பண்றது, இந்த வாரம் பதிவர் உலகத்துல ஒன்னு பகிரங்க கடிதம் எழுதனும் இல்லன்னா மெஸ்ஸ பத்தி எழுதணும் ...//

இப்பவே கண்ண கட்டுதே

//
இன்னும் பதிவு போடாத 201 பேரில் நீங்களும் ஒருவர்... :P

 
On Thu Aug 14, 03:47:00 PM GMT+8 , இராம்/Raam said...

ஊரு ஞாபகத்தை கிளறிவிட்டுடிங்க... :)

 
On Thu Aug 14, 04:02:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

ஒரே பதிவுல சாப்பாட்டையும், மதுரையும் காட்டிவிட்டீர்கள். அசைவ ஐயிட்டமாக இருக்கு. முருகன் இட்லி கடையும் அசைவமா ? சிங்கையில் இருப்பது சைவம்,

 
On Thu Aug 14, 04:03:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//துளசி கோபால் said...
ஆசையாத்தான் கிடக்கு. ஆனால் மீதி இருக்கும் விடுமுறையிலே 'வேற எங்கியோ' இருக்கணுமேன்னு எதையும் தின்ன முடியாமப் பயந்து பயந்து சாகறதுதான் வாழ்க்கைன்னு ஆகிப் போச்சேப்பூ.

சென்னை முருகன் இட்லிக் கடை......போயிருந்தேன்.எனக்குப் பிடிக்கலை.
//

சிங்கையில் முருகன் இட்லி கடைக்குப் போனேன், எனக்கு(ம்) பிடிக்கல, மசால் வடை நன்றாக இருந்தது. விலையும் ஆனந்தபவனைவிட மிகுதி.

 
On Thu Aug 14, 04:44:00 PM GMT+8 , ஜீவன் said...

முருகன் இட்லி கடை, சிங்கையிலும் உண்டா ? தகவலுக்கு நன்றி..
சிங்கையில் உணவகங்களுக்கு மட்டும் எப்படி இட்லி அரிசி கிடைக்கிறது.. ?
நான் எங்கு சென்றாலும், இந்திய அரிசி (பொன்னி, ஐ ஆர்) கிடைப்பதில்லை..

 
On Thu Aug 14, 04:51:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@முத்து கிருஷ்ணண்...
வருகைக்கு நன்றி முத்து.
சீரியஸான ஆளுங்க சாப்பிட மாட்டாங்களா என்ன?

@சிவ சங்கர்,
வாங்க சிவ சங்கர், கருத்துக்களுக்கு நன்றி. ஒன்னுவிடாம எல்லாத்தையும் பார்த்துடுங்க.

@சரவணக்குமார்...
வாங்க சரவணண், ஒருதடவை நானும் என் நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து மதுரைக்கு ஒரு வேலையா போயிருந்தோம், ஒரு நாள்ல வேலை முடிஞ்சுருச்சு. இருந்தாலும் தங்கிட்டு அடுத்த ஒரு நாள் முழுசா இதையெல்லாம் அனுபவிச்சுட்டு வந்தோம்.

@விக்னேஸ்வரன்...
வாங்க விக்கி, சீக்கிரம் ஆட்டத்துல கலந்துக்கங்க. இல்லைன்னா கட்டம் கட்டிருவாங்க.

@சந்தர்...

வருகைக்கு நன்றி சந்தர்.

பார்த்தீங்களா மக்களே, சுவையான உணவுகளை பத்தி எழுதியிருக்கதையெல்லாம் விட்டுட்டு, ஒரு வரியில அவங்க தலைவர் ஜேகேஆரை வம்பிழுத்ததுக்கு பொங்கியெழும் ரசிகரை?
இவரமாதிரி அர்பணிப்புள்ள தொண்டர்கள் இருப்பதுதான் ஜேகேஆரின் பலமே. அடுத்த சூப்பர் ஸ்டார் ஜேகேஆர் தான். அவரும் கன்னாபின்னானு பேசுறாரு. அந்த ஒரு தகுதி போதாது?

 
On Thu Aug 14, 06:13:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@துளசி கோபால்

வாங்க டீச்சர் அக்கா.
மதுரைய பொருத்தவரைக்கும் பயப்படாம சாப்பிடலாம்.
சென்னை மட்டுமல்ல, சிங்கையிலும் முருகன் இட்லிகடை மதுரையில இருக்குறமாதிரி இல்ல டீச்சர். ஆனாலும் கூட்டம் நிறையா.
சிங்கையில வரிசையில நின்னு இடம்பிடிக்கிறாங்க. முருகன் இட்லிகடைக்கு பக்கத்துல இருக்க சரவணபவன்ல கூட அவ்வளவு கூட்டம் இல்லை.


@Known Stranger
இல்லை நண்பா, எப்பவுமே ரொம்ப சீரியஸா பதிவு எழுதிகிட்டே இருந்தா நல்லாருக்காதுல்ல. அதுலயும் இந்த பதிவு ஒரு சிறந்த அனுபவ பதிவு நண்பா. நீயும் ஒரு முறை போய் பாரேன்.

@கிரி...
என்னாது கண்ணை கட்டுதா?
ஒழுங்க உடுமலைபேட்டையில இருக்கு ஒரு சின்ன டீக்கடைய பத்தியாவது எழுதுங்க. இல்லைன்னா அடுத்த பகிரங்க கடிதம் உங்களுக்குத்தான்....

@பொண்வண்டு,

வாங்க பொண்வண்டு.
மதுரையில போயி ஒரு சுத்து எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு வாங்க. இன்னும் அருமையா இருக்கும்.

@ஜெகதீசன்...
கிரிய மிரட்டாதீங்க ஜெகு. ஒரு நாள் பார்ப்போம், இல்லன்ன பகிரங்க கடிதம் எழுதிடுவோம்.

@இராம்...
எனக்கே எழுதுனத பிறகு மதுரைக்கு போகனும் போல இருக்கு இராம்.

@கோவி.கண்ணண்...
அண்ணே, முருகன் இட்லிகடை எல்லா ஊர்லயும் சைவம் தான்.
மதியமும், இரவும் அசைவம் சாப்பிடுறதாலத்தான் , நடுராத்திரி முருகன்ல போயி சைவம் சாப்பிட சொல்லியிருக்கேன்.

 
On Thu Aug 14, 06:52:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

ஜீவன்...
வாங்க ஜீவன்,
சிங்கையில முஸ்தபாவுக்கு எதிர்புறம் 81,சையது ஆல்வி சாலையில் ஒன்றும், 85, ரோவெல் சாலையில் ஒன்றுமாக இரு கிளைகள் உள்ளன.

பொன்னி அரிசியத்தவிர வேற எதையும் சாப்பிட முடியாம இப்ப சப்பாத்திக்கு மாறிட்டோம் நாங்க. முஸ்தபாவுக்கு எதிர்புறம் ஒரு காய்கறிகடையில 5கிலோ அரிசி 17 டாலருக்கு கிடைத்தது. ஆனாலும் தரமாயில்லை.

 
On Thu Aug 14, 07:35:00 PM GMT+8 , Anonymous said...

யப்பா ஒருவழியா ஜோண்ணாவையும் சமையலுக்குள் இழுத்தாயிற்று ;)

 
On Thu Aug 14, 08:24:00 PM GMT+8 , புதுகைச் சாரல் said...

என்ன இன்னிக்கி டாக்கோ சாப்பிடும் எண்ணம் இல்லையா ? ... சரி.. இந்த மெக்ஸிகன் உணவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 
On Thu Aug 14, 09:02:00 PM GMT+8 , குரங்கு said...

இங்க வந்து, பதிவ படிச்சவுடனே பசி ஆரம்பம் ஆய்டுச்சு...

சரியா பசிக்கிது, போய் ஒரு கட்டு கட்டிட்டு வறேன்... :)

எப்படியெல்லம் பதிவ முடிக்கிறாங்க :P

 
On Thu Aug 14, 09:21:00 PM GMT+8 , புதுகைச் சாரல் said...

சுதந்திரத்தை கொண்டாடுவோம்!

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
http://mohideen44.blogspot.com

 
On Thu Aug 14, 09:48:00 PM GMT+8 , தமிழ்நெஞ்சம் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

 
On Thu Aug 14, 09:48:00 PM GMT+8 , தமிழ்நெஞ்சம் said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

 
On Fri Aug 15, 12:46:00 AM GMT+8 , ஜோதிபாரதி said...

//ஜீவன் said...
முருகன் இட்லி கடை, சிங்கையிலும் உண்டா ? தகவலுக்கு நன்றி..
சிங்கையில் உணவகங்களுக்கு மட்டும் எப்படி இட்லி அரிசி கிடைக்கிறது.. ?
நான் எங்கு சென்றாலும், இந்திய அரிசி (பொன்னி, ஐ ஆர்) கிடைப்பதில்லை..
//

நிறைய அலைந்து பின்னர் எருமை மாடு சாலை அருகில்(பழைய தேக்கா மார்க்கெட் எதிரில்) இருக்கும் கார்த்திகா என்னும் மலையாளக் கடையில் இட்லி அரிசி வாங்கினேன். பதினெட்டு சிங்கப்பூர் வெள்ளிகள். நன்றாக இருந்தது இட்லி. அரிசி, பார்க்க நம்ம சி.ஆர் 1009 மாதிரி இருக்கும். பாவம் நம் மக்கள்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

 
On Fri Aug 15, 01:11:00 AM GMT+8 , வெட்டிப்பயல் said...

படிக்கும் போதே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. மதுரைக்கு ஒரு தடவை தான் வந்திருக்கேன். அதுவும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துட்டு திரும்பிட்டோம்...

ராயல் ராம் அண்ணன் தான் மதுரைக்கு கூப்பிட்டு போய் எல்லா ஹோட்டலுக்கும் கூப்பிட்டு போறேனு சொல்லிருக்கார். பார்க்கலாம் எப்ப நடக்குதுனு...

 
On Fri Aug 15, 01:12:00 AM GMT+8 , செந்தழல் ரவி said...

அயிரமீன் செய்முறையை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளிச்சுட்டீங்க...

டென்ஷனா சுத்திக்கிட்டிருக்க உங்கக்கிட்ட இருந்து மொக்கை போஸ்ட் வரது மகிழ்ச்சி...

 
On Fri Aug 15, 01:25:00 AM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

//
தலைவர் ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச படத்துக்குத்தான் போவேன்னு எல்லாம் பச்சபுள்ளயாட்டம் அழுவகூடாது. அவரு நடிச்ச படம் எல்லாம் எப்ப திரையரங்குக்கு வந்துருக்கு?
//

கோனார் மெஸ்சுக்கு போனமா..தலக்கறியத் தின்னமான்னு வரனும். எங்க தலய எல்லாம் வம்பிழுக்கக் கூடது..ஓ.கே.

இது லார்ஸ்ட் வார்னிங். அப்புறம் அண்ணேன்னு கூட பார்க்க மாட்டேன், உறவு கெட்டு போய்ரும். :))

 
On Fri Aug 15, 01:55:00 AM GMT+8 , TBCD said...

பாலில் அயிரை மீனன ஊற வைச்சிடுவாங்க..மீனுங்க எல்லாம் பாலைக்குடிச்சிட்டு, அழுக்கை எல்லாம் வெளியேற்றிவிட்டு, நமக்கக உசுரை விட்டுடும்..(கருணைவாதிகள் மன்னிக்க)...அப்பறம்..சமைச்சி சாப்பிட்டால்...ரொம்ப ருசியாக இருக்கும்...

கோனார் மெஸ் பற்றி சொன்னதுக்கு எல்லாம்..ஒர் பெரிய மறுக்காச்சொல்லேய்ய்ய்ய்ய்ய்...

முன்னாடி இராஜேஸ்வரி விடுதி (உணவகமும்)..கோழி 65 என்றால்..ஊரே சப்புக்கொட்டி திங்கும்...

அம்சவல்லியில் பிரியாணி சாப்பிடாவர்கள்...பாவம் செய்தவர்கள்..

மதுரையில் முட்டைப்புரோட்டா சாப்பிட்டவர்கள் உருபடுவதற்கான வழி தெரிந்தவர்கள்...

சொல்லிட்டேப் போகலாம்.....

மதுரை நினைவுகளை கிளப்பிய பதிவு மட்டுமல்ல...பட்டையயைக் கிளப்பும் பதிவும் கூட....

நன்றிங்கண்ணோவ்....
// இந்த மீன்ல குடல் எல்லாம் இருக்காதுங்கிறதால சுத்தம் பண்றது ரொம்ப சுலபம். ஒரு மண் சட்டியில கொஞ்சம் கல் உப்ப போட்டு நல்லா உரசி இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் தேய்ச்சா போதும் எடுத்து கழுவிட்டு சமைக்கலாம//

 
On Fri Aug 15, 01:56:00 AM GMT+8 , TBCD said...

பாலில் அயிரை மீனன ஊற வைச்சிடுவாங்க..மீனுங்க எல்லாம் பாலைக்குடிச்சிட்டு, அழுக்கை எல்லாம் வெளியேற்றிவிட்டு, நமக்கக உசுரை விட்டுடும்..(கருணைவாதிகள் மன்னிக்க)...அப்பறம்..சமைச்சி சாப்பிட்டால்...ரொம்ப ருசியாக இருக்கும்...

கோனார் மெஸ் பற்றி சொன்னதுக்கு எல்லாம்..ஒர் பெரிய மறுக்காச்சொல்லேய்ய்ய்ய்ய்ய்...

முன்னாடி இராஜேஸ்வரி விடுதி (உணவகமும்)..கோழி 65 என்றால்..ஊரே சப்புக்கொட்டி திங்கும்...

அம்சவல்லியில் பிரியாணி சாப்பிடாவர்கள்...பாவம் செய்தவர்கள்..

மதுரையில் முட்டைப்புரோட்டா சாப்பிட்டவர்கள் உருபடுவதற்கான வழி தெரிந்தவர்கள்...

சொல்லிட்டேப் போகலாம்.....

மதுரை நினைவுகளை கிளப்பிய பதிவு மட்டுமல்ல...பட்டையயைக் கிளப்பும் பதிவும் கூட....

நன்றிங்கண்ணோவ்....

 
On Fri Aug 15, 02:18:00 AM GMT+8 , வழிப்போக்கன் said...

அண்ணே இந்த பதிவ படிச்சுட்டு

சுவையான பதிவு

மதுரைச்சுவையை சொல்லி நாவில் எச்சி ஊற வைத்த பதிவு

எழுத்துச்சுவையுடன் நாவின் சுவையையும் சேர்த்த பதிவு

மீனைப்போல் குரும்பான பதிவு

பகிரங்கமில்லாத பாசக்கார அண்ணன் தம்பி பதிவுனு

பாராட்டலாம்னு நினைச்சேன்..

ஆனா....

ஆனா....

ஆனா....

ஆனா....

ஆனா....

ஆனா....

ஆனா....

ஆனா....

ஆனா....


//அங்க போய் எங்க தலைவர் ஜே.கே.ரித்தீஷ் நடிச்ச படத்துக்குத்தான் போவேன்னு எல்லாம் பச்சபுள்ளயாட்டம் அழுவகூடாது. அவரு நடிச்ச படம் எல்லாம் எப்ப திரையரங்குக்கு வந்துருக்கு?
//


என்ற இந்த வரிகளுக்காக..

இந்த பதிவு ஒரு குப்பை என்று சொல்ல என் மனம் விழைகிறது.

என்ன செய்ய?

தசாவதாரத்திற்கு ஒரு மல்லிகா செராவத் போல உங்கள் பதிவிற்கு இந்த வரிகள் மேலும் அழகூட்டுவதால் மன்னித்து விடுகிறேன்.

--------------
இப்படிக்கு

கொ.ப.செ

ஜே.கே.ஆர் மன்றம்.

 
On Fri Aug 15, 06:37:00 AM GMT+8 , ஸ்ரீதர் நாராயணன் said...

இன்னமும் சில ஸ்பெஷல் ஓட்டல்கள் - ஆலமரத்தடி, குஜராத்தி சாப்பாட்டுக்கு போஜனாலயா, சாட் ஐட்டம்ஸ்க்கு நேதாஜி ரோட்ல சங்கம் ஹோட்டல் மற்றும் டெல்லிவாலா, நல்ல சைவ சாப்பாட்டுக்கு மாடர்ன் ரெஸ்டாரெண்ட்.

கோனார் பரோட்டாக்கடையும் நல்லா இருக்கும். அங்க சுக்கா / கோலா ஃபேமஸ்.

நைட்ல சாப்பிடறதுக்கு சபரி ஹோட்டலும் சேத்துக்கலாம். அதுக்கு பக்கதிலேயே இன்னொரு சின்ன ஹோட்டல் உண்டு. அங்க 'பால்கோவா'ன்னு ஒரு ஸ்வீட் தோசை போடுவாங்க. கோபு ஹோட்டல்ல வெள்ளையப்பம் எப்பவும் பாப்புலர்.

விசாலாட்சி ஸ்டால்ல டிகிரி காபி குடிச்சோம்னா ட்ரிப் ஓவர்ன்னு சொல்லிக்கிடலாம் :-)

 
On Fri Aug 15, 08:28:00 AM GMT+8 , துளசி கோபால் said...

ஆத்துலே அயிரைமீனை பறி வச்சுப் பிடிக்கிறதைப் பார்த்துருக்கீங்களா?

கரை ஓரமா ஒரு பானையைப் புதைச்சு வச்சுருவாங்க. அதையொட்டிப் பக்கத்துலே ஆத்துத்தண்ணீர் ஓடும். பானைக்கும் தண்ணிக்கும் நடுவிலே ஒரு சின்ன மூங்கில்பாய் (நம்ம ப்ளேஸ் மேட் சைஸில்) இருக்கும். தண்ணியில் அடிச்சுக்கிட்டு வரும் மீன் பாயிலே தங்கிரும். அப்புறம் துள்ளித்துள்ளி பானையிலே விழுந்துரும்.
பானையில் கொஞ்சூண்டு தண்ணி வச்சுருப்பாங்க. ஆள் வர்றவரை அதுலே நீந்திக்கிட்டு இருக்கும்.

பாவம். சொந்த செலவுலே சூனியம் வச்சுக்குது.

 
On Fri Aug 15, 08:29:00 AM GMT+8 , துளசி கோபால் said...

ஆத்துலே அயிரைமீனை பறி வச்சுப் பிடிக்கிறதைப் பார்த்துருக்கீங்களா?

கரை ஓரமா ஒரு பானையைப் புதைச்சு வச்சுருவாங்க. அதையொட்டிப் பக்கத்துலே ஆத்துத்தண்ணீர் ஓடும். பானைக்கும் தண்ணிக்கும் நடுவிலே ஒரு சின்ன மூங்கில்பாய் (நம்ம ப்ளேஸ் மேட் சைஸில்) இருக்கும். தண்ணியில் அடிச்சுக்கிட்டு வரும் மீன் பாயிலே தங்கிரும். அப்புறம் துள்ளித்துள்ளி பானையிலே விழுந்துரும்.
பானையில் கொஞ்சூண்டு தண்ணி வச்சுருப்பாங்க. ஆள் வர்றவரை அதுலே நீந்திக்கிட்டு இருக்கும்.

பாவம். சொந்த செலவுலே சூனியம் வச்சுக்குது.

 
On Fri Aug 15, 08:33:00 AM GMT+8 , கயல்விழி said...

ஏன் வயிறெரிச்சலை இப்படி கொட்டிக்கறீங்க?? லஞ்ச் டைமில் வேறு படித்தாகிவிட்டது. :(

ஆனால் நல்லா எழுதி இருக்கீங்க

 
On Fri Aug 15, 12:08:00 PM GMT+8 , Divya said...

மதுரைக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு உங்கள் பதிவு படித்ததும், ரொம்ப சுவாரஸியமா இருந்தது படிக்க:))

'சாப்பாட்டு கைடு ஆஃப் மதுரை'அப்படின்னு பட்டம் கொடுத்துடலாம் உங்களுக்கு!!

 
On Fri Aug 15, 01:39:00 PM GMT+8 , ஜோ / Joe said...

//சிங்கப்பூர் கடை முஸ்தபா வணிகவளாகத்துக்கு அருகே இருக்கு, வெள்ளி,சனி, ஞாயிறுகிழமைகளில் வரிசையில நின்னு இடம் பிடிக்க வேண்டியிருக்கு//

தகவலுக்கு நன்றி!
:)

 
On Fri Aug 15, 04:28:00 PM GMT+8 , புருனோ Bruno said...

மதுரை இராசாசி மருத்துவமனையில் வேலை பார்த்த கால கட்டங்களில் 48 மணி நேர பணியின் போது சாப்பிட்ட இடங்களை மீண்டும் நினைத்து பார்க்க தூண்டியது :) :)

இது போல் சில இடங்கள்

1. ஹோட்டல் சாரதா ராஜன்
2. முதலியார் இட்லி கடை (அழகர் கோயில் சாலை, கோரிபாளையம்)
3. குமார் மெஸ் (அம்மா மெஸ் அருகில், அதே சாலையில் எதிர்புறம்)

 
On Fri Aug 15, 05:35:00 PM GMT+8 , இராம்/Raam said...

ஹி ஹி... ஒரு வெளம்பரம், ரெண்டு வருசத்துக்கு முன்னாடி மதுரை ஓட்டல்களை பத்தி எழுதுனது...


அசைவம்
சைவம்

ஜில் ஜில் ஜிகர்தண்டா

 
On Fri Aug 15, 05:47:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

இப்படியெல்லாம் சாப்பிட்டும் உடம்பு போடாம வைச்சிருக்கீங்களே,அதன் ரகசியத்தை அடுத்த பதிவில் சொல்லுவீங்களா? :-))

 
On Fri Aug 15, 09:16:00 PM GMT+8 , தமிழ் பிரியன் said...

ஜாதி, மத, இன பழிப்புகள் இல்லாத, தனி நபர் தாக்குதல் இல்லாத, ஆபாசமில்லாத எனது கருத்து

 
On Fri Aug 15, 10:41:00 PM GMT+8 , நானானி said...

அட..அட..அட!மதுரையையே சுத்தி வந்தாற் போலிருக்கிறது.கோனார்மெஸ்ஸும் ஜிகிர்தண்டாவும் அம்மாமெஸ்ஸும்...!மதுரை போகும்போதெல்லாம் அங்கு நாத்தனார் வீட்டில் தங்கும்போதெல்லாம் வீட்டில் சமையலறை லாகவுட் ஆகிரும். ரங்கமணிக்கு மிகவும் பிடித்தது இவையெல்லாம் வீட்டுக்கு பார்சலாக வந்திரும்.
அயிரை மீன் கழுவும் விதம் சொல்லியது அருமை!
எனக்கே சமைக்கணும் போலிருக்கு!!

 
On Sat Aug 16, 02:22:00 AM GMT+8 , Known Stranger said...

ithellatheyum oru vati poi parthachu oru messa thavira. irunthalum paul oru principaloda blog ezhutha aramecharu ippo chumavachum oru post podanumaynu potrukapulla

ஒருவழியா பதிவுலகக் கடமையை நிறைவேத்தியாச்சு, இனிமேத்தான் அலுவலகத்துல நிம்மதியா தூங்க முடியும்...

neyuma blog addiction ? oru kadamaiyenu seiya aramechuta.. hmm nadakatum nadakatum

 
On Sat Aug 16, 10:16:00 AM GMT+8 , கணேஷ் said...

//

ஊரு ஞாபகத்தை கிளறிவிட்டுடிங்க... :)

//


ர்ர்ரீரீப்பிட்டு

 
On Sat Aug 16, 12:08:00 PM GMT+8 , Mahesh said...

ஐ...இந்த டிபன் கடை வரிசை பதிவுகள் கூட நல்லாருக்கு... நாஅளும் ஒண்ணு போடணும்...

புது பதிவு போட்டாச்சேய்......டும் டும் டும்..... எல்லாரும் வாங்க !!!

 
On Sun Aug 17, 01:12:00 AM GMT+8 , Anonymous said...

ஒருமுறை அம்மா மெஸ் க்கு 1அம் தேதி சம்பளகவருடன் சாப்பிட போயிருக்கிறேன். அப்போது இருந்த நிம்மதி இப்போது கண்டிப்பாக இல்லை, பொன்னான நினைவுகளை அசைபோட வைகிரிங்க நன்றி
-திண்டுக்கலிலிருந்து அகிலன்

 
On Sun Aug 17, 06:53:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

படிக்கும் போதே சாப்பிடனும்னு ஆசையா இருக்கு. மதுரை பத்தி ரொம்ப தெரியாது எங்க அண்ணாத்த பொண்ணு கட்டின ஊரு!!
:)))

 
On Mon Apr 06, 11:41:00 AM GMT+8 , Anonymous said...

TEST TEST

 
On Wed Sep 23, 09:37:00 AM GMT+8 , Several tips said...

எல்லாத்தையும் சாப்பிட்டது போலவே இருந்துச்சு

 
On Tue Dec 20, 04:50:00 PM GMT+8 , Anonymous said...

எங்கள கேட்டா அம்மா மெஸ் முன்ன மாதிரி இல்லண்ணே.ஆனா பரவால்ல,கோனார் மெஸ் கொஞ்சம் தள்ளி இடம் மாறிருச்சு.அவங்கட்ட எப்பவுமே நல்லாத்தான் இருக்கும்.முருகன் இட்லி கட இப்ப சரியில்ல ஆனா முன்ன பரவால்லாம இருக்கும்.ஜிகர்தண்டாக்கு கே.கே.நகர் மிலனியம் தான்ணே சூப்பரு.டவுன்ஹால் ரோடு சபரிஸ் பொங்கல் பிரமாதமா இருக்கும்.குமார் மெஸ் அசைவ சாப்பாடு மீன் குழம்புலாம் டேஸ்ட்ல பின்னிருவாங்க.கோரிப்பாளையம் விசாலம் காபி குடிச்சா சுவையை மறக்கமாட்டீங்க.முதலியார் இட்லி கடை காஸ்ட்லி ஆனா வொர்த் கிடையாது.செல்லூர் கண்ணன் புரோட்டா கட ரொம்ப பேமஸ்.செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு டேஸ்ட் இட்லி கார்னர் சுவை தூள் பறக்கும்.பிரியாணிக்கு தலப்பாகட்டி ராவுத்தர் கடை கோரிப்பாளையம் பரவால்ல.கறி சுக்காவுக்கு அன்பகம் மெஸ் தான் கிங். மதுரக்காரன்ணே நானு அதனாலதான் இம்புட்டு சொன்னே...மதுரக்கி வந்தா டிரையல் இதுகளையும் பாருங்கண்ணே.

 
On Fri Jul 27, 12:57:00 AM GMT+8 , sivasankaravadivelu said...

நல்ல ரசனை உள்ள மனிதர் அய்யா

நீங்கள் ...மனைவி கொடுத்து வைத்தவர்

 
On Thu Aug 01, 09:33:00 PM GMT+8 , Anonymous said...

மதுரைக்கு என பல சிரப்பான சரித்திர பிரசித்தி இருக்கும் போது சாப்பாட்ட மட்டும் சொல்லி தமிழனொட சின்ன புத்திய காட்டினதுக்கு தமிழ் உலகம் கடமைபட்டிருக்கு தோழரே

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க