Author: ஜோசப் பால்ராஜ்
•10:52 AM
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ஆதரவாக தமிழ் திரைத்துறையினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சத்தியராஜ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளானது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

அவர் பேசியது நல்ல கருத்துக்களே ஆனாலும், அவர் பேசிய விதம் தவறு என்றுதான் நான் அன்று நினைத்தேன். ஆனால் இன்று நம் மானங்கெட்ட தமிழனுக்கு மனதில் படும்படி சொல்ல‌ அவ‌ர் அதைவிட‌ க‌டுமையாக‌ பேசியிருக்க‌ வேண்டும் என்று தோன்றுகிற‌து.

நான் இதுல ரஜினி என்ற ஒரு நடிகரை குறை சொல்லவே விரும்பவில்லை. அவர் ஒரு நடிகர், அதற்கு மேல் அவரைப்பற்றி சொல்லிக்கொள்ள எதுவுமேயில்லை. தமிழகத்திற்கே தலமை தாங்க பல வாய்ப்புகள் வந்த போதும் மாற்றி மாற்றி குரல் மட்டும் கொடுத்துவிட்டு, தலைமை பொறுப்பு எல்லாம் எனக்கு வேண்டாம் என சென்றவர் அவர். அப்படி அவர் முடிவெடுத்தது அவரது உரிமை. மக்கள் அழைக்கின்றார்கள் என்பதற்காக அவருக்கு விருப்பமில்லாத ஒரு துறையில் அவர் நுழைய வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் அவருக்கில்லை.


அவர் நடிப்பது சம்பாதிக்கத்தானே ஒழிய வேறு எதற்கும் இல்லை. தனது தொழிலை எந்த சிக்கலும் இல்லாமல் நடத்திக்கொள்ள அவர் செய்வதுதான் அவ்வப்போது அவர் கொடுக்கும் குரல்கள்.

தமிழகத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கன்னடர்களை உதைக்க வேண்டும் என்று பேசியது, தமிழகத்தில் இருந்துகொண்டு, தமிழ் நடிகராக எல்லோராலும் அறியப்பட்டாலும் தமிழர் - கன்னடர் பிரச்சனைகளில் இதுவரை ஒரு உறுதியான நிலைப்பாடு ஏதும் எடுக்காமல் சொதப்பி ஏற்கனவே அவர் வாங்கியிருந்த அவப்பெயர்களை துடைத்து, நான் தமிழ்நாட்டு பக்கம்தான் என்று சொல்லிக் கொள்ள அவர் செய்த ஒரு சிறிய வியாபார உத்தி.

இப்போது கன்னடர்களிடம் மன்னிப்பு கோரியிருப்பது, தனது புதிய திரைப்படம் கர்நாடகாவில் எந்த விதமான சிக்கல்களுக்கும் ஆளாகாமல் நன்கு ஓடி பணம் குவிக்க எடுத்த நடவடிக்கை. இதுவும் முழுக்க முழுக்க வியாபார நோக்கம் உடையதே. அவர் எப்பவுமே தெளிவாத்தான் இருக்காரு. ஆனா நம்ம தமிழர்கள் ?????

அவர வெறும் நடிகனா பாருங்க, அவர் படம் புடிச்சிருக்கா இல்லையானு விமர்சனம் செய்யுங்க. அதவிட்டுட்டு அவர கடவுள் அளவுக்கு உயர்த்திகிட்டு, அவரப்பத்தி விமர்சனம் செஞ்சாலே அடிக்க போற அளவுக்கு வெறிபிடிச்சு அலையுறது எல்லாம் எதுக்கு ? அவரை மட்டுமல்ல எந்த நடிகனையுமே தலைவருன்னு சொல்றவன் எல்லாம் மனுசனே இல்ல. தலைவா தலைவான்னு உருகுறது எல்லாம் காட்டுமிராண்டித்தனம் தான். திரையில் நாம் பார்க்கும் நடிப்பை மட்டும் நம்பி எப்படி ஒருவரை நாம் தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியும்?

நேற்று தமிழகத்திற்காக ஒரு பேச்சு, இன்று கர்நாடகாவுக்காக ஒரு மன்னிப்பு. இவரைப்போயா நீங்கள் உங்களுக்கு தலைவராக அழைக்கின்றீர்கள் ?

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

ரஜினிக்கு யாராவது இந்த குறளின் அர்தத்தை சொல்லட்டும். அவரை அத்தோடு விடுங்கள். அவர் விரும்பியபடி அவரை இமயமலைக்கே போகவிடுங்கள்.

ஒரு தலைவனாக வேண்டியவணுக்கு இருக்க வேண்டிய முக்கிய குணங்கள் இந்த குறளில் சொல்லப்பட்டுள்ளது.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.


இதில் அறிவூக்கமும் இல்லை, அஞ்சாமையும் இல்லாதவரை எதற்கு தலைவர் எனச் சொல்லவேண்டும்?

இனியும் தமிழன் ரஜினி மாயையில் இருந்து விடுபடாது போனால், சத்தியராஜ் பேசியதை விட இன்னும் கேவலமாகத்தான் நம்மை நாமே திட்டிக்கொள்ள வேண்டும். Udanz
This entry was posted on 10:52 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

38 comments:

On Fri Aug 01, 12:58:00 PM GMT+8 , உதயம் said...

சத்யராஜ் ஒரு தமிழன் , அவன் மனதில் இருந்த வந்த வார்த்தைகள் இன்று உண்மை என்று நிருபிக்கப்பட்டு விட்டது.

 
On Fri Aug 01, 01:02:00 PM GMT+8 , Anonymous said...

சிந்திக்க வேண்டிய நல்ல பதிவு.

 
On Fri Aug 01, 01:14:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

எனக்கும் சத்தியராஜின் பேச்சு அப்போது வருத்தமாகத்தான் இருந்தது... ஆனால் அவர் பேசியதெல்லாம் தப்பே இல்லை...
:(

 
On Fri Aug 01, 01:16:00 PM GMT+8 , ஆ.ஞானசேகரன் said...

ரஜினி ஒருநல்ல வியாபாரி, தனுசுக்காக எப்படியெல்லாம் பேசவெண்டியுள்ளது பாருங்கோ...

http://aammaappa.blogspot.com/2008/07/blog-post_31.html

 
On Fri Aug 01, 01:26:00 PM GMT+8 , Anonymous said...

//இனியும் தமிழன் ரஜினி மாயையில் இருந்து விடுபடாது போனால்//

இதுக்குத்தான் வாய்ப்பு அதிகம்.... ஹூம்.. ;(

 
On Fri Aug 01, 01:28:00 PM GMT+8 , Syam said...

ரொம்ப சரியா சொன்னீங்க...

 
On Fri Aug 01, 01:46:00 PM GMT+8 , DHANS said...

mannippu ketkaravanman usan.. mannikarqvan periya manusan..

naan manusan nee(karnadaka) periya manusana nukekaraar pola...

ithula thamilan enga vanthaan... avan paatukku kalaila office ku leave pottutu poi padam pakka vendiyathu thaana

 
On Fri Aug 01, 01:47:00 PM GMT+8 , VIKNESHWARAN ADAKKALAM said...

//இவரைப்போயா நீங்கள் உங்களுக்கு தலைவராக அழைக்கின்றீர்கள் ?//

நாக்கை பிடுங்கிக் கொள்ளும் கேள்வி...

 
On Fri Aug 01, 01:58:00 PM GMT+8 , Anonymous said...

இவரை தான் நாங்கள் தலைவர் என்று அழைக்கிறோம்.

 
On Fri Aug 01, 03:05:00 PM GMT+8 , Jackiesekar said...

jo nice post, already i wrote this matter. that time http://jackiesekar.blogspot.com/2008/04/blog-post_3117.html



"உண்ணாவிரத போராட்டத்தில் சத்யராஜ் மிக சரியாக பேசினார் ஆனால் சிலர் சொல்லலாம் பொது இடத்தில் பேசும் போது நா காக்க வேண்டும் என்று, ஒரு இனம் திரும்பிய இடமெல்லாம் உதை வாங்கும் போது அந்த இனத்தை நேசிப்பவர் கோபத்தில் இப்படித்தான் பேசுவார்கள் திரு சத்யராஜ் அவர்களுக்கு என் நன்றிகள் அப்படி உங்களை எவராவது குறை கூறினாள் அவர்கள் மன நோயாளிகள் என்பேன்""

regards

jackiesekar

 
On Fri Aug 01, 03:26:00 PM GMT+8 , Anonymous said...

சென்னை உண்ணாவிரதத்தில் சத்யராஜ் பேசி உசுப்பேற்றியதால் தன்னை தமிழின பாதுகாவலனாக காட்டிக் கொள்வதற்காக ரஜினி பேசிய ஆவேசப் பேச்சை தமிழ் சமூகம் மறந்திருக்காது.

அந்தச் சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் மட்டுமே ஆகி இருக்கும் நிலையில் தன்னுடைய கல்லாப் பெட்டியை நிரப்புவதற்காக கன்னடர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டிருக்கும் ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த தமிழகமே புனிதமடைந்து விடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் செய்திருக்கும் இந்த ஒரு சின்ன விஷயமே

அவர் எப்படிப்பட்ட கை தேர்ந்த அரசியல்வாதி

 
On Fri Aug 01, 03:29:00 PM GMT+8 , Unknown said...

தமிழர்களாகிய நாம் சிந்திக்க வேண்டிய பதிவு இது!
இனிமேலாவது நாம் திருந்துவோமாக!!

 
On Fri Aug 01, 05:15:00 PM GMT+8 , சரவணகுமரன் said...

சத்யராஜ் பாருங்க, இன்னைக்கு செம ஜாலியா இருப்பாரு....

 
On Fri Aug 01, 05:24:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

குசேலன் படத்துக்கு ஜெகதீசனைக் கூப்பிட்டேன் வரலை என்று சொல்லிவிட்டார். இப்போது ஒரு டிக்கெட்டை என்ன செய்வது என்றே தெரியலை. கிரி ரஜினி ரசிகர் இன்னேரம் பார்த்து இருப்பார். இரண்டாவது தடவை பார்க்கலாம் வாங்க என்று கிரியைத்தான் கூப்பிடனும். இதைவிட கிரிக்கு தண்டனை கொடுக்க முடியமா ? :P)

 
On Fri Aug 01, 05:25:00 PM GMT+8 , Anonymous said...

வேலய பாருங்கப்பா, இவரு சொன்னது correct.. அவரு சொன்னது தப்புனுட்டு.. சத்யராஜ் படம் கர்நாடகத்தில் 4 தியேட்டர்ல ஓடட்டும் அப்ப அடிப்பாருப்பாரு பல்டி.. நம்ப பாட்டுக்கு அட்ரா சக்கை!!! அட்ரா சக்கைன்னுகிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்..

ஒரு பேச்சுக்கு சென்னைக்கும், கோவைக்கும் இடையில் ஒரு பிரச்சினை வந்ததென்றால் சத்யராஜ் என்ன பேசியிருப்பாருன்னு நினைக்கிறீங்க??

 
On Fri Aug 01, 05:39:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

//
குசேலன் படத்துக்கு ஜெகதீசனைக் கூப்பிட்டேன் வரலை என்று சொல்லிவிட்டார்.
//
வரமாட்டேன்னு எப்ப சொன்னேன்?
:(
எத்தனை தடவை சொல்றது... இதையெல்லாம் பப்ளிக்காப் பேசாதீங்க.. தொலைபேசியில் பேசலாமின்னு.... :P

 
On Fri Aug 01, 05:43:00 PM GMT+8 , புருனோ Bruno said...

//அவர வெறும் நடிகனா பாருங்க, அவர் படம் புடிச்சிருக்கா இல்லையானு விமர்சனம் செய்யுங்க. அதவிட்டுட்டு அவர கடவுள் அளவுக்கு உயர்த்திகிட்டு, அவரப்பத்தி விமர்சனம் செஞ்சாலே அடிக்க போற அளவுக்கு வெறிபிடிச்சு அலையுறது எல்லாம் எதுக்கு ?//

உடன்படுகிறேன்

 
On Fri Aug 01, 07:31:00 PM GMT+8 , Anonymous said...

சிந்திக்க தூண்டும் பதிவு ஜோண்ணா

 
On Fri Aug 01, 07:46:00 PM GMT+8 , Anonymous said...

நல்ல பதிவு.நன்றி.

 
On Fri Aug 01, 07:49:00 PM GMT+8 , Anonymous said...

ஒருவேளை நண்பர் திரு பரத் அவர்கள் நினைப்பதுபோல் சென்னைக்கும் கோவைக்கும் பிரச்சினை வந்தால் திரு சத்யராஜ் நிச்சயம் கோவையைத்தான் ஆதரிப்பார். ஆனால் முதலில் கோவையில் உள்ளவர்களை உதைக்கவேண்டுமேன்று கூறிவிட்டு பின்பு மன்னிப்பு கேட்டு மதிப்பை குறைத்துக்கொள்ள மாட்டார்.
சபாபதி சென்னை

 
On Fri Aug 01, 08:13:00 PM GMT+8 , Anonymous said...

//ஒருவேளை நண்பர் திரு பரத் அவர்கள் நினைப்பதுபோல் சென்னைக்கும் கோவைக்கும் பிரச்சினை வந்தால் திரு சத்யராஜ் நிச்சயம் கோவையைத்தான் ஆதரிப்பார். ஆனால் முதலில் கோவையில் உள்ளவர்களை உதைக்கவேண்டுமேன்று கூறிவிட்டு பின்பு மன்னிப்பு கேட்டு மதிப்பை குறைத்துக்கொள்ள மாட்டார்.//

ஆனால் அதயே ரஜினி செய்திருப்பானேயானால் அவருக்கு துரோகி முத்திரை குத்த ஒரு கூட்டம் ரெடியா இருக்கு.. இப்போது மன்னிப்பு கேட்டதனால் அவருக்கு இழப்பு கம்மி.. தன்னை காப்பாற்றிக்கொள்ள அவருக்கு உரிமை இருக்கிற்து..

இது போல் முக்கியமான பிரச்சினைகளில் யாரை கேள்வி கேட்கவேண்டுமோ அவர்களை கேட்காமல்..எலும்பை உடைத்தாலும் நிறைவேற்றுவோம் என்று பேசி ந்டிகர்களை தூண்டிவிட்டு, மத்தியில் பதவிக்காக சும்மா இருப்பவர்களை விட இது எவ்வளவோ பரவாயில்லை..

 
On Fri Aug 01, 08:17:00 PM GMT+8 , ராயன்-Rayan said...

ஒகேனக்கல்: நான் தவறு செய்துவிட்டேன்-ரஜினி ரஜினி அவர்களே.நீங்கள் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்

 
On Fri Aug 01, 08:27:00 PM GMT+8 , ராயன்-Rayan said...

ரஜினி திரைப்படத்தில் தான் உப்பிட்ட தமிழ் மண்ணை மறக்க மாட்டேன் என்று பாடுவர் நிஜ வாழ்கையில் அல்ல...திரையில் தான் ஹீரோ தமிழர் பிரச்னை என்றால் zero...திரையில்லும் நடிப்பு வாழ்க்கைலும் நடிப்பு

 
On Fri Aug 01, 08:54:00 PM GMT+8 , Thekkikattan|தெகா said...

நரி வேஷம் களைஞ்சு போச்… டும்..டும்..டும்

காட்டை விட்டே ஓடிப் போச்…டும்..டும்..ம்..ம்.

:-((. இன்னும் வரும்! இது காலத்தின் கட்டாயம்!! சத்யம் பேசணும்!!!

நாங்க எப்போதும் கணக்காத்தான் இருக்கோம், நீங்க புரிஞ்சிக்கலேன்னா அதுக்கு நாங்க பொறுப்பா...

 
On Fri Aug 01, 10:55:00 PM GMT+8 , அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழனுக்கு சம்பந்தமில்லாம கோபம் வரும்.உடனே எல்லாத்தையும் மறந்துருவாப்புடி! அடுத்தப்படம் வரும்போது பாணர் எல்லாம் கட்டுவாப்புல!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

 
On Sat Aug 02, 12:05:00 AM GMT+8 , Anonymous said...

You want to say, What Rajni said today is wrong!

I agree!

Justifying Sathraj's brutal and uncultured statement using this is NOT CORRECT!

One's mistake will never make other one's mistake as correct!

Sathyaraj's brutal behavior and ugly-mannered addressing of people can not be justified ever!

 
On Sat Aug 02, 12:34:00 AM GMT+8 , Ŝ₤Ω..™ said...

காலைல காப்பி குடிக்க டீ கடைக்கு போணா, (காப்பி குடிக்க காப்பி கடைக்கு தான போகணும்னு திட்டாதீங்க) பத்திரிக்கைல இந்த செய்திய படிச்சிட்டு நானும் கோபப்பட்டு எழுதினது http://sensiblesen.blogspot.com/2008/08/action.html

அப்புறம் யோசிச்சப்ப தான் புரிஞ்சது...

முதல்ல நாம சினிமாவ சினிமாவா.. சினிமாகாரன சினிமாகாரனா பார்க்க கத்துக்கணும்.. அத விட்டுட்டு, அவனை தலைவனா, கடவுளா நினைச்சது நம்ம தப்பு.. ஆனா, அவன் அவன், அவன் பொளப்ப சரியா தான் பாக்கற‌னுங்க.. நாமளே அவனுங்கள தூக்கி விட்டுட்டு, இப்போ பொலம்பி என்ன பயன்..

இதுல கூத்து என்னனா, இவருக்கு அடுத்து சூப்பரு யாருன்னு போட்டிவேற.. "பறவை" படம் வெளிவந்தபோது, சொல்லரதுக்கே வெட்ககேடு, சென்னையில் beer கிடைக்கலை.. என்னடானு கேட்டா, தலைவர் cutoutகு beer அபிஷேகம் பண்ணி கலக்கிட்டோம்லனு சட்ட காலர தூக்கி விட்டுகரானுங்க..

என்று தணியும் இந்த சினிமா மோகம்??

 
On Sat Aug 02, 01:43:00 AM GMT+8 , ராஜ நடராஜன் said...

இதோ பாருங்கய்யா இன்னைக்கு சத்யராஜ் ஹீரோவாகிட்டாரு:) நேரமென்பது இதுதானா? சத்யராஜ் சார் உங்க காட்டுல இப்ப மழை!

 
On Sat Aug 02, 02:29:00 AM GMT+8 , கயல்விழி said...

சத்யராஜ் உபயோகப்படுத்திய வார்த்தைகள் தவறானவை என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை(ஆனால் அவர் கருத்தில் முழு ஒப்புதல் உண்டு).

ரஜினி என்ற வியாபாரியிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இப்படித்தான் செய்வார். இனிமேல் ரஜினி படம் ஏதுவுமே பார்ப்பதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன்.

 
On Sat Aug 02, 03:36:00 AM GMT+8 , Anonymous said...

அருமையான பதிவு ஜோசப். ஒரு தமிழன் என்ற முறையில் உங்களுக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள். ரஜினி பேசுமுன்பாக அவரை எல்லோரும் (ஒகனெக்கல் பிரச்னையை விட்டுவிட்டு) வானளாவப் புகழ்ந்துகொண்டிருந்ததையும், ரசிகர் கூட்டத்தினரிடம் ரஜினி புகழுரைக்கு கிடைத்த ஆரவாரத்தையும் கொஞ்சம் அடக்கும் வகையில் சத்தியராஜ் பேச்சு அமைந்தது. சத்தியராஜ் பேச்சுக்கும் ரசிகர்களிடம் இருந்து ஆதரவு கரகோசம் எழுந்ததை u-tube பதிவு மூலம் தெரிந்துகொண்டேன். சத்தியராஜ் இவ்வளவு ஆவேசமாகப் பேசியிருக்கவேண்டுமா என்று அப்போது எனக்கும் கேள்வி எழுந்தது. அதே மேடையை நித்தம் செத்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழருக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்க்கவேண்டும் என்று சத்தியராஜ் முழங்கியபோது பார்வையாளர்களிடம் இருந்து எழுந்த எழுச்சி மிக்க ஆதரவு ஒலியைப் பார்த்தபோது தமிழ் நாட்டில் தமிழர் நலனை முன்னிறுத்தும் திரைப்பட ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியது. இன்று ரஜினி வருத்தம் தெரிவித்ததும், ரஜினி ஒரு கோழை மட்டுமின்றி ஒரு சந்தர்ப்பவாதி என்றும் விளங்கி விட்டது. இதனை சரத் குமார் கண்டித்தது சரியானதுதான். ரஜினியை முன்னிறுத்தி அரசியல் களம் இரங்க நினைக்கும் சோ, பாரதிய ஜனதா காரர்களுக்கு இது ஒரு பின்னடைவே. ரஜினியின் கண்மூடித்தனமான ரசிகர்களில் ஒரு சிலராவது இந்த (ரஜினியின்) அந்தர் பல்டியால் கண் திறப்பார்கள் என நம்புகிறேன்.

 
On Sat Aug 02, 10:02:00 AM GMT+8 , Anonymous said...

கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்.
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்.


நாஞ்சொல்லலைங்கோ. ரஜினியே முத்து படத்துல பாடினது.

 
On Sat Aug 02, 12:07:00 PM GMT+8 , கோவை சிபி said...

விசிலடிச்சான் குஞ்சுகள் இருக்கும் தைரியத்தில் என்ன வேண்டுமானால் பேசலாம் என்று ரஜினிக்கு நல்லாவே தெரியும்.

 
On Sat Aug 02, 12:35:00 PM GMT+8 , Known Stranger said...

rosam tamilianuku verum pechoda than irukuma ella athai vellikatra allavuku avanuku vidapidi dilu iruka.. ? ada pongaya.. tamilian inum 1000 varusathuku pesiketay than irupan tea kadai benchula appuram adutha vellaiya pakka poiduvan athu mellayoo mazha penja mathiri.

 
On Sat Aug 02, 12:57:00 PM GMT+8 , Murugan said...

ennaikuthaan neenga indiayana pesa poreengalo theriyala. Innum Tamilan, Karnatakan ippadithaane pesureenga. India nalla munnerirum. Avanunga manipu kekuraanunga kekama poraanunga Naama namma velaya paapom

 
On Sat Aug 02, 01:16:00 PM GMT+8 , Indian said...

//
ennaikuthaan neenga indiayana pesa poreengalo theriyala. Innum Tamilan, Karnatakan ippadithaane pesureenga. India nalla munnerirum. Avanunga manipu kekuraanunga kekama poraanunga Naama namma velaya paapom//

நாட்டுப்பற்று என்னமோ தமிழர்களுக்கு மாத்திரம் இருக்க வேண்டிய உணர்ச்சி அப்படின்னு ஆயிடுச்சா?

இத மத்த மாநிலத்துக்காரனும் யோசிக்க வேண்டாமா?
நாம இந்தியாவுக்குள்ளதான தண்ணிய கேக்குறோம்? என்ன இலங்கைக்கா விடச்சொல்றோம்?

இதத்தான்யா 10 கோடி தமிழர்கள் மாத்திரம் குருடர்களா இருப்பாங்க. மத்தவுங்கெல்லாம் கண்களோடு இருப்பாங்க அப்படின்னு சத்யராஜ் சொன்னான். நமது ஆயுதத்தை நாம் தீர்மானிப்பதில்லை. நமது எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள் அப்படின்னு மார்க்ஸ்ஸின் வரிகளையும் சொன்னான்.

 
On Sat Aug 02, 01:19:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஜோசப் அண்ணே! நடு மண்டையில ச்சும்மா நச்சு,நச்சுன்னு ஓங்கி அடிச்சாப்புல இருக்கு. நீங்க ஆயிரம் எழுதுங்க..நாங்க எங்களூக்கு தலைவன தியேட்டர்லதான் தேடுவோம்.

ஒரு தமிழனாக உங்கள் பதிவுக்கு மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

 
On Sat Aug 02, 01:59:00 PM GMT+8 , Anonymous said...

ungal karutthukkukalai naan varaverkirean.

 
On Sun Aug 03, 02:34:00 PM GMT+8 , Known Stranger said...

kuselana theaterla parthacha black ticket vangi. pakkaleya.. ada appoo nee enna tamilian. tamilana ellatheyum unarchivasa patu pesitu adutha kareyatha parka poganum kannu.. kuselan padatha 25 varam otavendiyathu nama tamilanoda dharmeega kadamai appa.. enna paul, veru kondu tamiliana nadanthukoo.. puriyutha..

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க