Author: ஜோசப் பால்ராஜ்
•10:35 PM
முன் கூட்டியே என்னிடம் தெரிவித்து என்னை இந்த விளையாட்டிற்கு அழைத்த திவ்யாவிற்கு எனது நன்றிகள். காதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவில் அவரை நான் மாட்டிவிட்டதற்கு பதில் மரியாதை இது.

A - AOL TAMIL
www.aol.in/tamil

தமிழ் செய்திகளுக்காக இதை பார்ப்பது உண்டு.

B - BSNL Customer Care
http://portal.bsnl.in/bsnlcca/login.aspx

பி எஸ் என் எல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் இணைய தளம் இது. நீங்களும் இணையம் வழியாக புகார் அளிக்கும் சேவையை பயன்படுத்த இதை உபயோகிக்கலாம். நல்ல பலன் இருக்கின்றது.

C - Changi Airport
www.changiairport.com

சிங்கப்பூர் விமான நிலையத்தின் இணைய தளம் இது. விமான வருகை, புறப்பாடு போன்ற தகவல்களுக்காக இதை அடிக்கடி பார்பது உண்டு. எனக்கு நண்பர்கள் அதிகம் எனவே வழியனுப்புவதும், வரவேற்பதும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள்.

D - Dinamalar
www.dinamalar.com
காலையில் தினமும் தமிழ் செய்திகளுக்காக இதை தான் படிப்பேன்.

DBS Bank Singapore
www.dbsbank.com.sg
Development Bak of Singapore. வங்கிச் சேவைகளுக்காக மிக அதிகமாய் உபயோகிக்கும் இணையதளம்.

E- E Grocy Online Store
www.egrocy.com

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காக உள்ள இணைய கடை. மளிகைச் சாமன்களை மாதமாதம் வாங்க உபயோகிக்கும் தளம். நாங்க எல்லாம் வீட்லயே உக்காந்துகிட்டு இணையத்துல எல்லாப் பொருளையும் வாங்கிருவோம்ல.

F - FlyProxy
https://flyproxy.com

எங்க அலுவலகத்துல அடிக்கடி நம்ம ரொம்ப உபயோகிக்கிற இணைய தளங்களை தடை பண்ணிருவாங்க. நாங்க எல்லாம் யாரு, இதுல பூந்து எல்லா இணையத்தையும் கொண்டாந்துருவோம்ல. இப்டிதான் ஜிமெயில தடை பண்ணாய்ங்க. நமக்கு ஜிமெயில் இல்லன்னா உசுரே போயிடும்ல. அணையா விளக்கா ஜிமெயில்ல என் பெயருக்கு பக்கத்துல இருக்க பச்சைவிளக்கு நான் தூங்குறப்ப மட்டும்தான் அணைஞ்சு இருக்கும். அத போயி இவிங்க தடை செஞ்சா விட்ருவோமா? அதுக்குத்தான் இதெல்லாம். உங்க அலுவலகத்துலயும் யாராவது இப்டி தொல்லை குடுத்தா ஒரு பின்னூட்டத்த போட்டுட்டு இதை பயன்படுததுங்க.

G - Google
www.google.com.

கூகிள் நம்ம பெரியண்ணண். இவரு இல்லன்ன நான் இல்ல. இவர கேட்கிற விதமா கேட்டா எல்லாத்தையும் நமக்கு தர்றவரு. எனக்கு மட்டும் இல்ல, பொட்டி தட்றவங்க எல்லாருக்கும் பெரியண்ணண் இவரு தான். இவருகிட்ட இல்லாததே இல்லன்னு சொல்ற அளவுக்கு எல்லா தகவல்களையும் அள்ளித்தருவாரு. பாசக்கார அண்ணண்.

H - The Hindu
www.Hindu.com

நமக்கு ஆங்கில அறிவும் முக்கியம்ல, அதான் ஹிண்டு செய்திதாளையும் காலையில வாசிக்கிறது நம்ம வழக்கம்.

How Stuff Works
http://www.howstuffworks.com

சாதாரண கருவி முதற்கொண்டு, மிக நவீன கருவி வரை எல்லாம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்ள இந்த தளம் மிக உதவியாய் இருக்கும். நான் இதுக்கு அடிக்கடி போகிறதில்லை. ஆனா என் அண்ணண் ஜோசப் செல்வன் இத பொறுமையா படிச்சுட்டு நான் கேட்கிறத நல்ல புரியிறமாதிரி சொல்லிக்கொடுப்பாரு. அப்பப்ப எட்டிப் பார்கிறதோட சரி.

I - ICICI Exchange Rate Calculator
http://icicibank.com/pfsuser/icicibank/ibank-nri/nrinewversion/calculators.htm

நம்மள மாதிரி வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கெல்லாம் உபயோகமான தளம் இது. மத்த வங்கிகள விட ஐசிஐசிஐ வங்கிதான் அதிகமான நாணய மாற்று மதிப்பு கொண்ட வங்கி. நமக்கு யாரு அதிகமா தர்றாங்களோ அவங்கத் தானே முக்கியம். இவங்க தான் நமக்கு பாதுகாப்பா நாம சம்பாதிக்கிறத தாய்நாட்டுக்கு அனுப்ப உதவுறவங்க. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனைவருக்கும் தேவையான ஒரு தளம் இது. நீங்க ஐசிஐசிஐ வங்கியில கணக்கு வைச்சிருக்கணும்கிற அவசியம் கூட கிடையாது. இவங்களோட Money2India சேவையின் மூலமா சுலபமா பல வங்கிக் கணக்குகளுக்கும் நீங்க பணம் அனுப்ப முடியும். உங்க பணம் ஒழுங்கா போய் சேர்ந்துச்சான்னு நீங்க பார்த்துக்கலாம்.

J - Jobs DB Singapore
http://www.jobsdb.com.sg

சிங்கப்பூர்ல இருக்க வேலை வாய்ப்புகளை குறித்த இணையத்தளம் இது. சுய விளம்பரமா நினைச்சுக்காதீங்க. என் வீட்ல எப்பவுமே ஒரு 2 வேலை தேடுறவங்க இருப்பாங்க. ஏதோ நம்மால முடிஞ்ச சேவைன்னு செஞ்சுகிட்டு இருக்கேன். அவங்களுக்காக அடிகடி போகுற இணையம் இது.

K - Khel Stocks
http://www.khelostocks.com

கல்லூரியில படிகிறப்ப என்னோட பாடம் இயற்பியல், இருந்தாலும் நமக்கு பங்கு வணிகத்தில நான் ஒரு பட்டயப் படிப்பு படிசேன்ல ( Diploma in Share Investment &
Management) , அதான் பங்கு வணிகத்துக்காக இந்த இணையத்துக்கு அடிக்கடி போவேன்.


M - ம்யூஜிக் இதுல நான் பல இணையங்களுக்கு போவேன் குறிப்பா சொல்லனும்னா
www.raga.com, www.smashits.com போன்றவை.

O - Oru Paper
www.orupaper.com

நம் ஈழத்து சொந்தங்களின் தளம் இது. அடிக்கடி போவது உண்டு.

P - Public Grievances
http://pgportal.gov.in/aboutus.html

பொதுமக்கள் தங்களது குறைகளை அரசின் அனைத்து துறைகளுக்கும் தெரிவிக்க உள்ள இணையதளம். சமீபத்தில்தான் இதை கண்டறிந்தேன். இதுகுறித்து ஒரு பதிவும் இட்டுள்ளேன்.

Personal Finance
http://www.personalfn.com/calc/hlv.html

இது நம்முடைய நிதி மேலாண்மைக்கு உதவும் ஒரு நல்ல தளம். பல கணக்கீடுக்களுக்காக நான் இதற்கு செல்வது உண்டு. இங்கும் ஒரு சுய விளம்பரம் அவசியமாகிறது. நான் பல நண்பர்களுக்கு நிதி ஆலோசகராக தொண்டாற்றி வருகின்றேன். இந்தியாவில் இருந்த காலம் தொட்டு இதை செய்து கொண்டுள்ளேன். ஆனால் சிங்கை வந்த பின் முன்போல் என்னால் அந்த சேவையை திறம்பட செய்ய இயலவில்லை. எனினும் இது போன்ற இணைய தளங்கள் எனக்கு அப் பணியில் பேருதவி புரிகின்றன.

Q - Quick Remit

இது HDFC வங்கியின் சேவை. இதன் மூலம் இந்தியாவில் உள்ள எல்லா கணிணி மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கும் பணம் அனுப்ப முடியும். இதற்கு HDFC வங்கியில் நாம் வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

S - SDN SAP
www.sdn.sap.com.

இது நம்ம பொழப்பு சம்பந்தப்பட்ட இணையதளம்.SAPல இருக்கவங்க எல்லாருக்கும் எந்த சந்தேகம்னாலும் இங்க வந்தா நல்ல உதவி கிடைக்கும். SAP ஒரு கடல் மாதிரி, அதுல Technical & Functional னு ரெண்டு பிரிவு இருக்கு. Technical ல வேலை பார்க்க ஆரம்பிச்ச நான் இப்ப Techno Functional அ இருக்க முக்கிய உதவி இந்த இணையம் தான். புதுசா கத்துக்கிறவங்களுக்கு பல உதவிகள் இங்க கிடைக்கும்.

SBI Singapore
http://www.sbising.com

இது பாரத ஸ்டேட் வங்கியின் சிங்கப்பூர் இணையதளம். நம்ம ஊரு ரூபாய் மதிப்ப பார்க்குறதுக்காக இந்த தளத்துக்கு அடிக்கடி போவேன்.

T - Tamil Editor
www.tamileditor.org

என் மடிக்கணிணியில் நான் ஈ கலப்பை போன்ற எதையும் நிறுவாமையால் இந்த தளத்தின் மூலமாகத் தான் தமிழ் தட்டச்சு செய்கிறேன். என் மடிக்கணிணியில் எப்போதும் மூடாமல் இருக்கும் பக்கங்களில் இதுவும் ஒன்று.

Thirukural
http://www.tamilnation.org/literature/kural/index.htm

திருக்குறள் இருக்கும் இணையத்தளம். திருக்குறளுக்கு தனியாக நான் விளக்கம் தரவேண்டுமா என்ன?

Team Viewer
http://teamviewer.com/index.aspx

நாம பல பேருக்கு பல நேரங்கள்ல உதவுறதுக்கு இந்த இணைய தளம் உதவுது.

http://tamilpeek.com http://www.tubetamil.com

வேற எதுக்கு தமிழ் படம் பார்க்கத்தான்.

W - WIKI
http://en.wikipedia.org/wiki/Wiki

கூகிள் நமக்கு பெரியண்ணண், விக்கி நமக்கு தம்பியண்ணண். நமக்கு தெரியாதத இவருகிட்டயும் கேட்டுக்கலாம். பெரியண்ணண் பல நேரங்கள்ல தம்பியண்ணகிட்டத்தான் அனுப்புவாரு. நமக்கு செம தோஸ்த்.

What is
http://whatis.techtarget.com

என்ன? அப்டிங்கிற கேள்விய கேட்க இது ஒரு நல்ல இணையதளம். சிறப்பான பதில்கள் கிடைக்கும். இந்த காலத்து குழந்தைங்க எல்லாம் நிறைய கேள்வி கேட்குதுங்க. அவங்களுக்கு பதில் சொல்ல விக்கி , இந்த தளம் எல்லாம் பெற்றோர்களுக்கு மிகவும் உதவும். பொறுமையா சொல்லிக்குடுக்கலாம்.


Y - Yarl.com
http://www.yarl.com/forum3/index.php?showforum=40

யாழ் இணையம், ஈழத்துச் சொந்தங்களின் இணையதளம் இது. ஈழத்து செய்திகளுக்காக அடிக்கடி செல்வது உண்டு.

You Tube
http://www.youtube.com

ரொம்ப போரடிக்கிற நேரங்கள்ல இந்த தளத்துல போயி வகை வகையா தேடிப்புடிச்சு விடியோ பார்ப்பேன். ரொம்ப புடிச்சது நம்ம தமிழ் நகைச்சுவை வீடியோக்கள் தான்.

நான் ஒரு மூணு பேர மாட்டிவிடணுமாம், யார மாட்டிவிடலாம்னு ஞாயித்துகிழமை காலையில சீக்கிரமா 11 மணிக்கே எழுந்துருச்சு யோசிச்சதுல மாட்டுனது இந்த மூணு பேருதான்.

1. அன்பு தம்பி விக்கி என்கிற விக்னேஸ்வரன்.

2. அன்பு தோழன் ஜெகு என்கிற ஜெகதீசன்

3. நீண்ட நாட்களாய் பதிவுகளை வாசித்து அனுபவம் பெற்று சமீப காலமாய் பதிவெழுத ஆரம்பித்து கலக்கிக் கொண்டிருக்கும் அன்பு தோழர் மகேஷ்.

Rule:

The Tag name is A for Apple

Give preference for regular sites

Ignore your own blogs, sites.

Tag 3 People.
Udanz
This entry was posted on 10:35 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 comments:

On Mon Aug 25, 11:00:00 PM GMT+8 , தமிழ் பிரியன் said...

பிராக்சி பதிவுக்கு ஆவலாக போய் பார்த்தேன்., அந்த தளத்தையே ப்ளாக் பண்ணி இருக்கு.... சவுதி நாட்டில் நிறைய தளங்கள் தடை செய்யப்பட்டவை. ஆர்குட் உள்ப்ட....... :(

 
On Mon Aug 25, 11:03:00 PM GMT+8 , VIKNESHWARAN said...

நடத்துங்க...

 
On Mon Aug 25, 11:20:00 PM GMT+8 , கூடுதுறை said...

ரொம்ப நல்ல தளங்களின் முகவரிகள் தந்துள்ளீர்கள் நன்றி...

அடுத்த எழுதுவபர்களுக்கு ஒரு செய்தி youtube எல்லாம் கொடுத்து போரடிக்க வேண்டாம்...

 
On Mon Aug 25, 11:23:00 PM GMT+8 , Mahesh said...

போட்டாருய்யா கொக்கிய.... இதுக்கு எதும் டைம் லிமிட் உண்டா?

அப்பறம்... "நீண்ட நாள்" எல்லாம் இல்லீங்க... 1 மாசம் முன்னாடி எப்பிடியோ நம்ம பரிசலார் பக்கத்துக்குள்ள போனதுல எதோ கடிச்ச மாதிரி இருந்துது. 1 வாரம் மத்த பதிவுகளையெல்லாம்(குறிப்பா நம்ம விக்கி) பாத்துட்டு "அனுபவம்" பெற்று கிறுக்க ஆரம்பிச்சுருக்கேன். அவ்வளவுதான்.

 
On Mon Aug 25, 11:25:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

பாசக்கார அண்ணண்.
//

யாருங்க அது எனக்குப் போட்டியா?

 
On Mon Aug 25, 11:38:00 PM GMT+8 , விஜய் ஆனந்த் said...

நல்ல கலெக்ஷன்!!!!

 
On Mon Aug 25, 11:58:00 PM GMT+8 , Divya said...

தொடர் பதிவு அழைப்பினை ஏற்று பதிவெழுதியதிற்கு நன்றி ஜோசஃப்:))

\காதல் எனப்படுவது யாதெனில்... தொடர் பதிவில் அவரை நான் மாட்டிவிட்டதற்கு பதில் மரியாதை இது.\\

கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டீங்க:)))

 
On Mon Aug 25, 11:59:00 PM GMT+8 , Divya said...

நல்ல தொகுப்பு,
பல புதிய தளங்களின் அறிமுகம் கிடைத்திருக்கிறது!

 
On Tue Aug 26, 01:05:00 AM GMT+8 , கயல்விழி said...

நல்ல லிஸ்ட், நன்றி ;)

 
On Tue Aug 26, 10:27:00 AM GMT+8 , Anonymous said...

அருமையான தளமுகவரிகள்.சிலது எனக்கு மிகவும் பரீச்சயமானவை :)

 
On Tue Aug 26, 01:43:00 PM GMT+8 , ஜிம்ஷா said...

பொட்டி தட்டுறவங்க மத்தியில, கும்மியும் அடிச்சிட்டு அப்படியே உருப்படியான நாலு தளத்தை அறிமுகம் செய்துள்ளீரே. எங்கேயோ போயிட்டீங்க பால்ராஜ்.

 
On Tue Aug 26, 10:58:00 PM GMT+8 , Anonymous said...

SOME ARE NEW TO ME THANKS

 
On Tue Aug 26, 11:35:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//M - ம்யூஜிக் இதுல நான் பல இணையங்களுக்கு போவேன் குறிப்பா சொல்லனும்னா//

முஸ்தபாவை விட்டுட்டிங்களே... !

சீனர்கள் வாயைப் பிளந்து வியப்புடன் பேசிக் கொள்ளும் ஒர் இந்தியரின் வர்தக நிறுவனம் !

 
On Thu Aug 28, 12:45:00 AM GMT+8 , Mahesh said...

போட்டாச்சுங்கோவ்...

 
On Thu Aug 28, 03:45:00 PM GMT+8 , புதுகைத் தென்றல் said...

remba usefula irukku.

thagavalgaluku nandri

 
On Thu Aug 28, 08:14:00 PM GMT+8 , Mahesh said...

என்ன அண்ணாச்சிய நம்ம கடைப்பக்கம் காணோமே..... ரொம்ப ஆணி சேந்து போச்சோ?

 
On Fri Aug 29, 02:14:00 PM GMT+8 , சேவியர் said...

பயனுள்ள பதிவு !

இப்போ தான் இந்தப் பக்கம் வந்தேன். ஒவ்வொண்ணா படிச்சு என் கருத்தைச் சொல்கிறேன்.

 
On Sun Aug 31, 11:14:00 AM GMT+8 , cheena (சீனா) said...

ஆகா - இவ்வளவு பயனுள்ள தளங்கள் இருக்கின்றனவா - செல்ல வேண்டும் - பார்க்க வேண்டும் - நேரம் வேண்டும் - நன்றி நல்ல தளங்களின் சுட்டிகளுக்கு

 
On Sun Aug 31, 04:06:00 PM GMT+8 , ஜோ / Joe said...

நிறைய பயனுள்ள பக்கங்களின் தகவல்கள் .நன்றி!

 
On Fri Mar 27, 09:23:00 PM GMT+8 , COOLLOOK said...

நிறைய பயனுள்ள பக்கங்களின் தகவல்கள் .நன்றி!

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க