Author: ஜோசப் பால்ராஜ்
•12:29 PM
இதுவரை 74 பதிவுகளை எழுதியுள்ள நிஜமா நல்லவன் அவர்கள் நேற்று தீடீரென விடை பெறுகிறேன், இனிமேல் எழுத மாட்டேன் என்று அறிவித்துள்ளார். அவரது விடை பெறுகிறேன் பதிவை கீழே கொடுத்துள்ளேன்.


விடை பெறுகிறேன்!

ஆனந்த விகடன் வரவேற்பறை மூலமாக அறிமுகமானது தமிழ் பதிவுலகம். ஏதோ பெயருக்கு பதிவுகள் எழுதி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எதுவும் எழுதியதில்லை. இனிமேலும் எழுத என்னிடம் எதுவும் இல்லை. நான் எழுதிய மொக்கை பதிவுகளையும் படித்து எனக்கு பின்னூட்டங்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி!


வர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக எழுதிக்கொண்டிருக்கையிலேயே திடீர் என விடை பெறுகிறேன் என அறிவிப்பது. உடனே அவரது நண்பர்கள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்கள் எல்லாம் எழுதாவிட்டால் எப்படி என்பது போன்ற பின்னூட்ட கொஞ்சல்கள், கெஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் மிகவும் வேண்டிக்கொண்டதால் நான் மீண்டும் பதிவெழுத வருகிறேன் என்பது. ஏன் இதெல்லாம் ? நிஜமா நல்லவனின் விடை பெறுகிறேன் பதிவுக்கு நான் எழுதிய பின்னூட்டம் இதுதான்.

ஜோசப் பால்ராஜ் said...

இப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், மத்தவங்க அவங்க இல்லீங்க நீங்க எல்லாம் தொடர்ந்து எழுதணும்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு. நீங்க உண்மையிலேயே இனிமே எழுத எதுவும் இல்லைன்னு நினைச்சா நீங்க இனிமே கண்ண மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பார்க்க மாட்டீங்க, படிக்க மாட்டீங்கன்னு அர்த்தம். ஏன்னா நாம பார்கிறது, படிக்கிறதுல இருந்துதான் பாதிவுகள் வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே எழுதாதீங்க.

உங்களையெல்லாம் வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்தவங்க கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே எழுத கூடாதுங்கிறது தானே? அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் மின்னஞ்சல் முகவரி தர்றேன். தொடர்புல இருங்க. ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க பதிவுலகத்துக்குச் செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம்.
என் மின்னஞ்சல் முகவரி: joseph.paulraj@gmail.com.



எழுத ஒன்னுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவரை எதுக்கு இத்தனை பேரு திரும்ப வாங்கன்னு கூப்பிடனும் ? மாரத்தான் ஓட்டப் போட்டி நடக்குது, பல வீரர்கள் ஓடிக்கிட்டு இருக்காங்க. அதுல ஒருத்தரு இனிமே என்னால ஓட முடியாது, ஒடுறதுக்கு என் உடம்புல வலு இல்லன்னு உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும்? சரிங்க அப்டி ஓரமா உக்காந்துக்கங்கன்னு தானே சொல்ல முடியும்? இல்ல இல்ல நீங்க கட்டாயம் ஓடியே ஆகணும்னு சொல்லி ஓட முடியாதவர இழுத்துக்கிட்டு வர முடியுமா? எனக்கு என்னமோ நிஜமா நல்லவன் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமே எழுத ஒன்னும் இல்லன்னு சொல்லியிருக்காருன்னுதான் தோணுது. எப்டியிருந்தாலும் எழுத முடியாதுன்னு சொல்றவரப்போய் எதுக்கு மல்லுகட்டனும் ? காரணமே தெளிவா சொல்லாதவருகிட்ட எதுக்கு போயி எல்லாரும் கெஞ்சணும் ?

நேற்று இரவு இந்த பதிவை படித்துவிட்டு நானும் தம்பி விஜய் ஆனந்தும் வலையுரையாடலில் பேசிக் கொண்டிருந்தோம். இப்படி அறிவிப்பதும், கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக் கொண்டே போகின்றது. இது கட்டாயம் தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடிக்கும் என்றும் சொன்னார். அதே போல் இன்று சூடாண இடுகைகளில் இடம்பிடித்து விட்டது. இப்படி காரணமில்லாமல் நானே போய் வருகிறேன், இனி எழுத மாட்டேன் என்று சொன்னால் யாரும் கெஞ்சக் கூடாது என்பதுதான் என் கருத்து.

தமிழ் மணத்திற்கு :

சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ?

பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா?

ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன?

இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? Udanz
This entry was posted on 12:29 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

23 comments:

On Mon Aug 25, 01:20:00 PM GMT+8 , ஜெகதீசன் said...

நிஜமா நல்லவன் பற்றி.... நோ கமெண்ட்ஸ்..

சூடான இடுகைகள்.. ஹிட்டுகளின் அடிப்படையில்...

 
On Mon Aug 25, 01:25:00 PM GMT+8 , Sathis Kumar said...

உங்கள் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். தமிழ்மண நிர்வாகிகளும் சில குறிப்பிட்ட பதிவர்களின் இடுகைகளையே அடிக்கடி சூடான இடுகைகளாக அங்கீகரிக்கின்றனர். தமிழ்மணத்தின் இத்தகைய போக்கு கண்டிக்கத்தக்கது. நல்ல பதிவுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.

 
On Mon Aug 25, 01:38:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

இந்த இடுகை சூடான இடுகையில் துண்டு போட வாழ்த்துகள் !

 
On Mon Aug 25, 02:10:00 PM GMT+8 , குசும்பன் said...

ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன?

இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? ///

நண்பர் என்னை தாக்குவதை இங்கு வன்மையாக ஏற்றுக்கொள்கிறேன்:)))

 
On Mon Aug 25, 02:56:00 PM GMT+8 , விஜய் ஆனந்த் said...

வழிமொழிகிறேன்....

 
On Mon Aug 25, 02:59:00 PM GMT+8 , enRenRum-anbudan.BALA said...

தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள், உங்கள் கருத்துடன் 100% ஒத்துப் போகிறேன், நன்றி.
எ.அ.பாலா

 
On Mon Aug 25, 03:27:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சற்றுமுன் நிஜமா நல்லவனுடன் தொலைபேசியில் உரையாடினேன். அலுவலகத்தில் தன்னால் எழுத முடியவில்லை என்றும், வீட்டில் பல பதிவர்களுக்கு பின்னூட்ட கும்மியெல்லாம் போட்டு முடிச்சுட்டு எழுத சிரமமாக இருப்பதாகவும், சொந்த வேலைகளை பார்க்க இயலவில்லை எனவும் கூறியுள்ளார். சொந்த வேலைகளை பாதிக்காத வகையில் வலையுலக வேலைகளை வைத்துக்கொள்ளுங்கள் என்றும், அவரை குறித்து நான் எழுதிய பதிவை படிக்குமாறும் கூறினேன். பாரதி தான் நிஜமா நல்லவன் என்பது இன்று காலை ஜெகதீசன் சொல்லித்தான் எனக்கு தெரியும்.

 
On Mon Aug 25, 03:46:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஜோசப் அண்ணே உங்க கருத்துக்கள் சிலவற்றில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லை.ஆனால் உங்கள் கருத்தைச் சொல்லும் சுதந்திரத்தை கேள்வி கேட்க எனக்கு உரிமை இல்லை.

 
On Mon Aug 25, 03:51:00 PM GMT+8 , கணேஷ் said...

//

ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன?

இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? ///

நண்பர் என்னை தாக்குவதை இங்கு வன்மையாக ஏற்றுக்கொள்கிறேன்:)))

//

நான் என்னை சொல்றாருன்னு நெனச்சேன்...

 
On Mon Aug 25, 03:52:00 PM GMT+8 , Iyappan Krishnan said...

//தமிழ் மணத்திற்கு :

சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ?

பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா? பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா?

ஏன் பெரும்பாலும் மொக்கை பதிவுகளே சூடாண இடுகைகளில் இடம்பிடிக்கின்றன?

இப்படி மொக்கை பதிவுகளே பெரும்பாலும் சூடாண இடுகைகளில் இடம்பிடித்துக்கொண்டிருந்தால் அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா? //


based on number of Unique hits to the page. Not necessarily the page must contain " GOOD " data ( debatable ) in it. Even if this post clicked by so many, it will come in so called soodana idugai.

It shows the reach about the person with bloggers than the "Quality" of the blog post.

If some one thinks to bring " non-mokkai" aka "Quality" in their view, spread word across, get more hits to bring the post in soodana idugai.

That would be a appropriate way IMHO than "Forcing" some one to be away.

நிஜமா நல்லவனைப் பத்திய மற்ற கருத்துகளுக்கு,




எழுத மாட்டேன் என்று முடிவு செய்வதற்கு பல காரணிகள். இருக்கும் இடம், சூழல், பணிச்சுமை, மனச்சுமை.

தனிமையின் வெறுப்பில் சிலர் இப்படிச் செய்யத் தூண்டிடும் சூழ்நிலையில் இருப்பார்கள்.


//ஆனா இனிமே நீங்க எழுதவே வேண்டாம். நாடு ஒன்னும் கெட்டுப் போயிறாது. போயிட்டு வாங்க.//

ஜோ.பா அண்ணே -

என் கண்டனங்கள். நீங்கள் எழுதியோ இல்லை நான் எழுதியோ நாடு திருந்திவிடப் போவதில்லை. அப்படியேத் தான் நீங்களும் எழுதாமலிருக்கும் பட்சத்திலும் நாடு கெட்டுப் போய் விடப் போவதில்லை.

இப்படியான சூழ்நிலை உங்களுக்கு ஏற்படாமல் இருக்கவும், உங்களை யாரும் திரும்ப அழைக்காமல் இருக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

மற்றவர்களுக்குச் சொல்லும் யோசிக்க முயன்றால் நலம். தண்டல்காரப் பேச்சு சரியில்லைங்கண்ணே ..


இன்றைக்கும் வருஷத்துக்கு நாலு இல்லை அஞ்சுன்னு எழுதிட்டு இருக்கிறதால எனக்குக் கிடைத்த பரிசுகள் அத்தனையும் அதிகம். பல நட்புகள். நான் எழுதாமல் போனதால் நாடு கெட்டுப் போகாது தான். ஆனால் நான் பல விஷயங்களில் தொடர்பற்றுப் போயிருப்பேன். அப்படி எங்கள் நண்பன் போகக் கூடாது என்று எங்கள் ஆதங்கத்தின் மீதழப்பதை கொச்சைப் படுத்தும் உங்கள் பதிவைக் கண்டு மனம் வேதனையடைகிறது.

ஆசிப் அண்ணாச்சி சொல்றது போல சொல்லி முடிக்கனும்னா

"நல்லா இருங்கடே"

 
On Mon Aug 25, 04:07:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

@ சதீசுகுமார்

//தமிழ்மண நிர்வாகிகளும் சில குறிப்பிட்ட பதிவர்களின் இடுகைகளையே அடிக்கடி சூடான இடுகைகளாக அங்கீகரிக்கின்றனர்.//

JOKE OF THE YEAR!!

 
On Mon Aug 25, 05:19:00 PM GMT+8 , Thamiz Priyan said...

சூடான இடுகை அதிகபட்ச கிளிக்குகள் தமிழ்மணம் மூலம் செல்வது மட்டுமே! இதற்கும் தமிழ் மணத்துக்கும் தொடர்பு இல்லை. அதனால் தான் தலைப்புகளில் சூட்டை எதிர் பார்க்கிறோம்.

ஒருவர் எழுத விருப்பம் இல்லையென்றால் விட்டு விட வேண்டியது தான். போகாதீங்க என்று தடுக்க வேண்டியதில்லை.

 
On Mon Aug 25, 05:21:00 PM GMT+8 , Sathis Kumar said...

@ பரிசல்காரன்

//JOKE OF THE YEAR!!//

எழுதமாட்டேன்னு திரும்பி எழுத வந்ததவிடவா இது பெரிய ஜோக்கு.. தோடா... :)

 
On Mon Aug 25, 05:47:00 PM GMT+8 , Iyappan Krishnan said...

//சதீசு குமார் said...

@ பரிசல்காரன்

//JOKE OF THE YEAR!!//

எழுதமாட்டேன்னு திரும்பி எழுத வந்ததவிடவா இது பெரிய ஜோக்கு.. தோடா... :)
//

நாம என்ன சொல்றோம்னு தெரியாம சொல்லிட்டு சப்பைக் கட்டு கட்டறது தான் பெரிய ஜோக்குங்கறேன். நீங்க என்ன சொல்றீங்க ?

 
On Mon Aug 25, 06:48:00 PM GMT+8 , Sathis Kumar said...

@Jeeves

//நாம என்ன சொல்றோம்னு தெரியாம சொல்லிட்டு சப்பைக் கட்டு கட்டறது தான் பெரிய ஜோக்குங்கறேன். நீங்க என்ன சொல்றீங்க ?//

உட்டா யாரு பெரிய ஜோக்கு சொல்றாங்கன்னு ஒரு போட்டியே நடத்திருவாய்ங்கே போல இருக்கு... :)

 
On Mon Aug 25, 07:08:00 PM GMT+8 , Anonymous said...

Very Professional...

 
On Mon Aug 25, 07:26:00 PM GMT+8 , manikandan said...

சூடான இடுகைல எடம் புடிச்சா உங்களுக்கு என்ன ?

நல்ல செய்தி மட்டும் தான் வரணுமா ?

நான் கூட பதிவு எழுதிகிட்டு இருந்தேன். தமிழ்மணம்ல சேத்துக்க சொல்லி ரொம்ப முயற்சி பண்ணினேன். அவங்க நிராகரிச்சுடாங்க. contents அசிங்கமா இருந்ததால(அவங்களுக்கு அப்படி தோணினது தான் காரணம் ) !!
அந்த அளவுக்கு தான் ஒரு aggregrator வேல செய்ய முடியும். அதுக்கு மேல சென்சார்ஷிப் பண்ணினா வேளைக்கு ஆவாது.

 
On Mon Aug 25, 07:39:00 PM GMT+8 , புருனோ Bruno said...

சூடாண இடுகைகளுக்கான பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன ?

http://www.payanangal.in/2008/06/positive-feedback-negative-feedback.html

பதிவுகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை வைத்தா?
ஆமாம் மற்றும் இல்லை !!

பதிவுக்கு இடப்படும் பின்ன்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்தா?
இல்லை !!

சூடான இடுகைகள் குறித்து சில்லென்று ஒரு பார்வை

 
On Mon Aug 25, 10:51:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

@ சதீசுகுமார்

//எழுதமாட்டேன்னு திரும்பி எழுத வந்ததவிடவா இது பெரிய ஜோக்கு.. தோடா... :)//

என்னை உங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவுதான் நண்பா!!!

தமிழ்மணத்துல சூடான இடுகைல வர்றது என்ன பெரிய விருதா?

அதுக்குப்போயி இவ்ளோ டென்ஷ்னெல்லாம் எதுக்கு நண்பா?

தமிழ்மணத்தை விட்டுடுங்க. நல்லா தொடர்ந்து எழுதுங்க. நிறைய பேரோட நிறையப் பதிவுகள் கூகுள் ரீடர்லதான் படிக்கப்படுது!

அதுனால இதை ஒரு மேட்டரா (சூடான இடுகை) எதுக்கு வருத்தப் படறீங்கன்னு புரியல!

நான் சொன்னதுக்கான உங்க தனிமனிதத் தாக்குதல்பாணி பின்னூட்டம் உங்களை வெளிக்காட்டிவிட்டது!

நான் நீங்க சொன்னதை ஜோக்-ன்னு சொன்னது உங்களை பாதிச்சிருந்தா சாரி நண்பா!

நல்லா எழுதுங்க. நண்பர்களை சம்பாதிங்க. படிக்கறோம்!

வாழ்த்துக்கள்!!

 
On Mon Aug 25, 11:37:00 PM GMT+8 , Sathis Kumar said...

@பரிசல்காரன்

//நான் சொன்னதுக்கான உங்க தனிமனிதத் தாக்குதல்பாணி பின்னூட்டம் உங்களை வெளிக்காட்டிவிட்டது!//

எனக்கு தாக்குதல்பாணியும் தெரியாது, கோதண்டபாணியும் தெரியாது. ஆனா பின்னூட்டத்துலே ஒரு கட்டுரைய போட்டு நாசூக்கா என்னை திட்டறது மட்டும் தெரியிது.. :)

பி.கு : உங்களைத் தாக்கி எனக்கென்ன கிடைக்கப்போகுது...? உங்களுக்கும் என் வாழ்த்துகள்.. :)

 
On Tue Aug 26, 12:07:00 PM GMT+8 , கிரி said...
This comment has been removed by the author.
 
On Tue Aug 26, 12:40:00 PM GMT+8 , dondu(#11168674346665545885) said...

பார்க்க: http://dondu.blogspot.com/2008/03/blog-post_12.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
On Tue Aug 26, 01:57:00 PM GMT+8 , கிரி said...

பின்னூட்டம் போட்டு முடித்து பார்த்தால்... :-))))))))

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க