Author: ஜோசப் பால்ராஜ்
•12:19 AM
என் அன்பு அண்ணண் புதுகை அப்துல்லா அவர்கள் கடந்த வாரம் ஞாயிறு அன்று ஒரு சிறு விபத்தை சந்தித்து, தற்போது உடல்நலம் பெற்று மீண்டும் தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பி விட்டார் என்பது தமிழ்மணம் கூறும் நல்லுலகில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அண்ணண் ஓய்வில் இருந்த போது, அண்ணணின் மேல் உள்ள பாசத்தால் எனக்கு ஜே.கே.ரித்தீஷை பிடிக்காது என்றாலும் கூட ஜே.கே.ரித்தீஷை வம்பிழுத்து எழுதப்பட்ட பதிவில் அண்ணண் சார்பாக எனது கடும் கண்டணங்களை தெரிவித்திருந்தேன்.
ஓய்வில் இருந்து திரும்பிய அப்துல்லா அண்ணண், அவர் வெளியிட்ட பதிவில் எனக்கு நன்றி கூறி இருதார். சகோதரர்களுக்குள் நன்றி என்பதே அதிகம். அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை,சங்கத்தின் சார்பாக அடுத்தமுறை நான் இந்தியா செல்லும் போது ஜே.கே.ரித்தீஷ் உடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தப் போவதாக வேறு மிரட்டினார்.

என் நிலை கைமீறி போவதை உணர்ந்த நான் நமீதாவை தவிர வேறு யாருக்கும் ரசிகராக இருக்கப்போவதில்லை என்ற எனது உறுதியான கொள்கையை சற்றே தளர்த்தி, அண்ணண் மேல் உள்ள பயம் கலந்த பாசத்தால் ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றத்தில் இணைந்துவிடுவதாக பின்னூட்டமிட்டிருந்தேன்.

ஜோசப் பால்ராஜ் said...
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.

இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன். இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.

அண்ணண் விரைவில் குணமடைந்த வந்தமைக்கு, எங்கும் நிறைந்தவனும், எல்லோர்கும் பொதுவானவனுமான இறைவனுக்கு நன்றிகள்.

இந்த பின்னூட்டத்தை படித்துவிட்டு அதற்கு கீழே உள்ள பதிலை அண்ணண் அப்துல்லா எழுதியிருந்தார்.

புதுகை.எம்.எம்.அப்துல்லா said...
வாங்க ஜோசப் அண்ணே!
//
மீண்டும் வலையுலகை கலக்க வரும் அண்ணண் அப்துல்லாவை பிரபஞ்ச நட்சத்திரம் ஜே.கே.ரித்திஷ் பேரவை சார்பாக வருக வருக என வரவேற்கிறோம்.
//

தலையே வரவேற்ற சந்தோஷம் எனக்கு இப்போ :)


//இந்த அப்துல்லா அண்ணண் கூட பழகுன தோசம் நானும் ஜோ.கே.ஆர் பேரவையில இணைஞ்சுட்டேன்.
இதுவரைக்கும் நானும் என் சிங்கை நண்பர் வாசிமும் சேர்ந்து நடத்திய NDF - SG (Nameetha Development Force - Singapore தவிர வேறெதிலும் ஈடுபாடு காட்டாது இருந்த என்னை , பிரபஞ்ச நட்சத்திரத்த்தின் பேரவைக்கு கொண்டு சென்ற பெருமை என் அருமை அண்ணணையே சாரும்.
//


ஜொசப் அண்ணே நான் மிகவும் சீரியசாகவே சொல்கிறேன். எங்களுக்கெல்லாம் உங்களைப் போல ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதைப்பற்றிய தகவல்களை முழுமையாகத் திரட்டி சுயமாக மேலும் சிந்தித்து தெளிவாக எழுதுகின்ற அந்தக் கலை தெரியாது. உங்களுக்கு அந்த வரம் இயல்பாகவே வாய்த்துள்ளது. நாங்கள் எழுத வேண்டுமே என்ற மன உந்துதலின் காரணமாகவும் அதே நேரத்தில் என்ன,எப்படி எழுதுவது என்பதை அறியாததாலும் ரித்தீஷ் அவர்களை வாரியோ அல்லது போற்றியோ அப்போதைய சூல்நிலைக்கு கிறுக்கி வைக்கிறோம். நீங்கள் எங்களுக்கெல்லாம் சகோதரராக மட்டும் இருங்கள்.தயவு செய்து எங்களோடு சேர்ந்து கெட்டுப் போய்விடாதீர்கள்.நான் அறிந்தவரை உங்க பதிவிற்கென்று ஓரு தீவிர வாசகர் வட்டம் உள்ளது. உங்களைக் கெடுத்த பாவம் எனக்கோ,ச்சின்னப் பையனுக்கோ,வழிப்போக்கனுக்கோ,பரிசலுக்கோ,தமிராவுக்கோ,வெண்பூவுக்கோ வேண்டாம். எப்பவும் போல சீரியசான பதிவாவே எழுதி கலக்குங்க!

இவ‌ரு என்ன‌ திட்டுறாரா இல்ல‌ உண்மையிலேயே புக‌ழ்றாரானு என‌க்கு புரிய‌லை. என‌க்குனு ஒரு தீவிர‌ வாச‌க‌ர் வ‌ட்ட‌ம் உள்ள‌துன்னு எல்லாம் சொல்லி ஏத்திவிடுறாரு.

இன்னும் ந‌ம்ப‌ள‌ இந்த‌ ஊரு ந‌ம்பிகிட்டு இருக்கு , ஆன‌ இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்கிடுறாங்க‌ளே....


எனதருமை வலையுலக சொந்தங்களே, உண்மை என்னானு கொஞ்சம் பின்னூட்டத்துல சொல்லுங்க. Udanz
This entry was posted on 12:19 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

14 comments:

On Fri Aug 08, 02:13:00 AM GMT+8 , Selva Kumar said...

//இன்னும் ந‌ம்ப‌ள‌ இந்த‌ ஊரு ந‌ம்பிகிட்டு இருக்கு , ஆன‌ இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்கிடுறாங்க‌ளே....
//

ஜோசப் அண்ணே,

எங்கள் பொருளாளர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்..

 
On Fri Aug 08, 02:15:00 AM GMT+8 , Selva Kumar said...

என்ன கேட்டீங்க

//இவ‌ரு என்ன‌ திட்டுறாரா இல்ல‌ உண்மையிலேயே புக‌ழ்றாரானு என‌க்கு புரிய‌லை.//

அதிருக்கட்டும், நல்லாத்தானே எழுதிட்டிருந்தீங்க. இன்னிக்கு மேட்டர் எதுவும் இல்லைனு இத ஒரு பதிவா போட்டுட்டீங்க போல..

நீங்க எங்க மன்றத்துக்கு சரியான ஆள்தான்.

 
On Fri Aug 08, 04:29:00 AM GMT+8 , கயல்விழி said...

//இன்னும் ந‌ம்ப‌ள‌ இந்த‌ ஊரு ந‌ம்பிகிட்டு இருக்கு , ஆன‌ இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உட‌ம்ப‌ ர‌ண‌க‌ள‌மாக்கிடுறாங்க‌ளே....
//

உங்களுக்கு பல அரசியல், சமுதாய நிகழ்வுகளைப்பற்றிய ஆழ்ந்த அறிவு இருப்பது உண்மை. அதற்காக தொடர்ந்து சீரியசாகவே எழுத வேண்டும் என்பது அவசியமில்லை என்று நினைக்கிறேன். எப்போதாவது மொக்கை பதிவுகளாக எழுதி கூல் டவுன் பண்ணலாம் :)

 
On Fri Aug 08, 11:48:00 AM GMT+8 , கிரி said...

//என் நிலை கைமீறி போவதை உணர்ந்த நான் நமீதாவை தவிர வேறு யாருக்கும் ரசிகராக இருக்கப்போவதில்லை என்ற எனது உறுதியான கொள்கையை சற்றே தளர்த்தி//

வன்மையா கண்டிக்கிறேன் :-)))

//இவ‌ரு என்ன‌ திட்டுறாரா இல்ல‌ உண்மையிலேயே புக‌ழ்றாரானு என‌க்கு புரிய‌லை//

ஹா ஹா ஹா வஞ்ச புகழ்ச்சில எதோ சொல்றாரு போல

 
On Fri Aug 08, 01:12:00 PM GMT+8 , Selva Kumar said...

ஜோசப் அண்ணே ,

பொருளாளர் உங்கள மன்றத்துல சேத்துக்காட்டி என்ன கவுரவ கொ.ப.செ பதவி தர்றேன். வந்துருங்க பி.ளீ.ஸ்.

 
On Fri Aug 08, 01:23:00 PM GMT+8 , பரிசல்காரன் said...

நாங்களெல்லாம் சீரியஸாக ஏதாவது எழுதினால், நாங்களும் படிப்பவர்களும் சீரியஸாக ஆகிவிட வாய்ப்புண்டு என்பதாலேயே, சீரியஸாக எழுதுவதையே தவிர்க்கிறோம்.

ஆனால், உங்களைப் போன்று உலகியல் பார்வை கொண்ட பதிவர்களும் மொக்கைப் பக்கம் வந்துவிட்டால், அது சரியல்ல என்பதாலேயே அப்துல்லா அப்படிச் சொல்லியிருக்கிறார்.

ஏற்கனவே, என் பதிவில் பலரும் வந்து ப்ளாக்கர்சுக்கு சீரியஸா எதையுமே எழுதத் தெரியாது என்று வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சமயத்திலெல்லாம் கைகாட்ட உங்களைப் போன்றோர் இருக்கும் தைரியத்தில்தான் நாங்கள் இருக்கிறோம்.

ஆகவே, அப்துல்லா சொல்வதே என் கருத்தும்!

அதே சமயம் இந்தப் பின்னூட்டத்தில், கயல் சொல்லியிருப்பதை நான் அப்படியே வழிமொழிகிறேன்! சபாஷ் கயல். யு ஆர் ரைட்!

 
On Fri Aug 08, 03:22:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஜோசப் அண்ணே ,

பொருளாளர் உங்கள மன்றத்துல சேத்துக்காட்டி என்ன கவுரவ கொ.ப.செ பதவி தர்றேன். வந்துருங்க பி.ளீ.ஸ்.
//

சாரி வழிப்போக்கன் அண்ணே! நீங்க அந்த பதவில இருக்குறதுதான் அந்த பதவிக்கே கவுரவம் :)

 
On Fri Aug 08, 07:19:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க வழிப்போக்கன்,
சீக்கிரம் ஒரு முடிவு எடுங்க, என்னைய சங்கத்துல சேர்த்துக்க போறீங்களா, இல்லையா ?

 
On Fri Aug 08, 07:22:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க கயல்விழி,
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, 5:1 என்ற விகிதத்திலாவது மொக்கை பதிவுகளும் எழுதிடுறேன்.

 
On Fri Aug 08, 07:24:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க பரிசல் அண்ணா,
யாரவது கேட்டா எங்க பக்கம் கைய காட்டி விட்ரலாம்னு இருக்கீங்களா?
ஆட்டோவோட வந்து யாராவது முகவரி கேட்ட, சிங்கப்பூர் முகவரிய தவிர வேற முகவரி குடுத்துராதீங்க. (இங்க ஆட்டோல வரமுடியாதுங்கிற தைரியம் தான்.)

 
On Fri Aug 08, 07:28:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

கவலையேப்படாதீங்க கிரி, நமீத முன்னேற்றப் படையின் பணிகளில் இருந்து ஒருகாலும் நாங்கள் விலகமாட்டோம் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

அப்துல்லா அண்ணா, எனக்கு மன்றத்தில் பொறுப்பு கொடுக்க மாட்டாரு, அதனால நான் இனிமே NDF தவிர வேறு எதிலும் சேர்வதாக இல்லை. ( சீ சீ, ஜே.கே.ரித்தீஷ் கருப்பு)

 
On Fri Aug 08, 09:56:00 PM GMT+8 , Anonymous said...

வழிப்போக்கன் ://அதிருக்கட்டும், நல்லாத்தானே எழுதிட்டிருந்தீங்க. இன்னிக்கு மேட்டர் எதுவும் இல்லைனு இத ஒரு பதிவா போட்டுட்டீங்க போல..நீங்க எங்க மன்றத்துக்கு சரியான ஆள்தான்//
ரிப்பீட்டு.

கயல் : //எப்போதாவது மொக்கை பதிவுகளாக எழுதி கூல் டவுன் பண்ணலாம் //
ரிப்பீட்டு.

பரிசல் ://நாங்களெல்லாம் சீரியஸாக ஏதாவது எழுதினால், நாங்களும் படிப்பவர்களும் சீரியஸாக ஆகிவிட வாய்ப்புண்டு என்பதாலேயே, சீரியஸாக எழுதுவதையே தவிர்க்கிறோம்//
ரிப்பீட்டு.

ஜோஸப் : //சீக்கிரம் ஒரு முடிவு எடுங்க, என்னைய சங்கத்துல சேர்த்துக்க போறீங்களா// சேத்தாச்சு.. சேத்தாச்சு.. கார்டு வீடு தேடி வரும்.(தலைமைப்பொறுப்புகளில் இல்லையென்றாலும் நமக்கு சங்கத்துல என்னா வாய்சு இருக்குதுன்னு கேட்டுத்தெரிஞ்சுக்குங்க.)


---தாமிரா

 
On Sat Aug 09, 08:40:00 PM GMT+8 , Anonymous said...

ஜோண்ணா இத்தனை பிரபலமா!!! :)

 
On Wed Aug 13, 09:24:00 PM GMT+8 , Unknown said...

ஜோசப் அண்ணே,

எங்கள் பொருளாளர் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்..
இவன்
ஒலகநாயகன்
ஜே.கே.ரித்தீஷ் மன்றம்
புதுகை கிளை

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க