Author: ஜோசப் பால்ராஜ்
•1:59 PM
அபி அப்பா எழுதிய பதிவுக்கு நான் அளித்த பின்னூட்டம்தான் இந்த பதிவு.

அபி அப்பா, நானும் கலைஞரின் ரசிகன் தான் ஆனால் இந்த ஆட்சியில் கலைஞரின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை.எனவே கலைஞருக்கு சில கேள்விகள் உங்கள் மூலமாக.
பதில் கலைஞர் சொன்னாலும் சரி அல்லது நீங்களே அவர் சார்பாக சொன்னாலும் சரி, கருத்து சரியாக இருப்பின் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

இலவச டிவி என்பது, பசியால் அழும் குழந்தைக்கு இனிப்பு மிட்டாய் கொடுத்து சமாளிப்பது போன்றது. மிட்டாய் பசிக்கு உணவாகாது அல்லவா, அழும் குழந்தை மிட்டாயை பார்த்து சற்றே அழுகையை நிறுத்தி சிரிக்கலாம், ஆனால் அது நிரந்தரம் அல்ல. பசி தீரும் வரை அது அழத்தானே செய்யும். இன்னும் எத்தனை காலம் தான் இப்படி இலவசங்களின் பெயரால் மக்களை ஏமாற்ற முடியும்? 1996 - 2001 ஆட்சியில் செய்த அளவுக்கு கூட இந்த ஆட்சியில் நலத்திட்டங்கள் இல்லையே?

பா.ம.க வின் நிர்பந்தத்தால் தானே துணை நகரத்திட்டம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை அறிவித்துவிட்டு நிறுத்தினீர்கள்? அதை இப்போது தீவிரமாக செயல்படுத்தலாமே? சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்த பல வருடங்களுக்கு பிறகு பன்னாட்டு விமான நிலையங்கள் அமையப் பெற்ற பெங்களூர், ஹைதராபாத் போன்ற நகரங்களில் இன்று புதிய நவீன விமான நிலையங்கள் அமைந்துவிட்டன. ஆனால் சென்னை இன்னும் தூங்கி வழிகின்றது.

இலவச தொலைகாட்சியிலும், அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திலும், முல்லைப் பெரியார் அணை, பாலாறு, காவிரி பிரச்சனைகளிலும் ஏன் இல்லை ?
த‌மிழ்நாட்டில் த‌மிழில் தான் திரைப்ப‌ட‌ங்க‌ளுக்கு பெய‌ர் வைக்க‌ வேண்டும் என்று திரை குடும்ப‌த்தின் மூத்த‌ பிள்ளையாகிய‌ நீங்க‌ள் சொன்னால் உங்க‌ள் சினிமாக்கார‌ர்க‌ள் கேட்க‌ மாட்டார்களா ? அத‌ற்காக‌ த‌மிழில் பெய‌ர் வைத்தால் வ‌ரிவில‌க்கு என்று அர‌சாங்க‌த்திற்கு வ‌ரும் வ‌ருமான‌த்தை விட்டுக் கொடுக்க‌த்தான் வேண்டுமா?

க‌ட‌லூர் மாநாட்டில் பெண்க‌ளின் ந‌ல‌னுக்காக‌ எரிவாயு விலையில் 30 ரூபாயை அர‌சே ஏற்கும், அத‌னால் அர‌சுக்கு 100 கோடி ந‌ட்ட‌ம் என்று சொன்னீர்க‌ளே? கேளிக்கை வ‌ரி ர‌த்தால் அர‌சுக்கு ஏற்ப‌டும் வ‌ரி இழ‌ப்பு எவ்வ‌ள‌வு ? அதை ஒரு முறை கூட‌ நீங்க‌ள் சொன்ன‌தில்லையே ஏன்? கேளிக்கை வரியை வசூலித்தால் மொத்த விலையுவர்வான 50 ரூபாயையுமே ( ஒரு சிலிண்டருக்கு ) அரசே ஏற்கலாமே?

நீங்க‌ள் கேளிக்கை வ‌ரியை ர‌த்து செய்த‌தால் திரைய‌ர‌ங்குக‌ளில் க‌ட்ட‌ண‌ம் குறைந்துள்ள‌தா? அப்ப‌டியே குறைந்தாலும் இதுவும் ப‌சியால் அழும் பிள்ளைக்கு அளிக்க‌ப்ப‌டும் இன்னொரு மிட்டாய் தானே ஒழிய‌ , ப‌சி தீர்க்கும் உண‌வில்லை.

ஒருவ‌ன் மீனை கேட்டால் அவ‌னுக்கு தூண்டிலை கொடு என்று ஒரு ப‌ழ‌மொழி உண்டு. ஆனால் நீங்க‌ள் தூண்டிலை கேட்ப‌வ‌னுக்கு கூட‌ செத்துப்போன‌ மீனையோ அல்ல‌து மிட்டாயையோ கொடுத்து , உழைக்க‌ நினைப்ப‌வ‌னையும் சோம்பேறி ஆக்குகின்றீர்க‌ள்.
2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.

ந‌ம் பார‌த‌ நாட்டோடு மூன்று முறை நேரடியாக‌ போரிட்ட‌ இன்றளவும் மறைமுகமாக போரிடும் எதிரியாக‌ ந‌ட‌ந்து கொள்கின்ற‌ பாகிஸ்தான் நாட்டின் க‌ட‌ற்ப‌டை கூட‌ எல்லை தாண்டும் ந‌ம் நாட்டு மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொன்ற‌தில்லை.

ஆனால் பார‌த‌த்தின் த‌ய‌வுட‌ன் இருப்பவர்களும், நண்பர்களாக தம்மை காட்டிக்கொண்டு ஆயுதமும் இன்ன பல உதவிகளும் பெற்றுக்கொண்டு, ந‌ம் தொப்புள் கொடி உற‌வுக‌ளான‌ ஈழத் த‌மிழ‌ர்க‌ளை கொன்று குவிக்கும் இல‌ங்கை நாட்டின் க‌ட‌ற்ப‌டை ந‌ம் மீன‌வ‌ர்க‌ளை சுட்டுக் கொல்லும் போது, உட‌னே பிர‌த‌ம‌ருக்கு ஒரு க‌டித‌ம் ம‌ட்டும் எழுதுவீர்க‌ள். ( ஒரு வேளை நீங்க‌ள் எழுதும் எந்த‌ க‌டித‌மும் பிர‌த‌மருக்கு போய் சேர‌வில்லையோ ? அஞ்ச‌ல் துறை அமைச்ச‌ர் எப்போதும் உங்க‌ளுக்கு தோள் கொடுத்து கொண்டே இருப்ப‌தால் அவ‌ரை கேட்டாலும் தெரியாது).

2004ல் மத்திய அமைச்சரவையில் திமுகா விற்கு கேட்ட‌ இலாக்காக்க‌ளை ஒதுக்க‌வில்லை என‌ போராடி பெற்ற‌ நீங்க‌ள், அது போன்ற‌ ஒரு போராட்ட‌த்தை ம‌க்க‌ளுக்காக‌ ஒரு போதும் செய்த‌தில்லையே ஏன்?

த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் சுட‌ப்ப‌டும் போது ம‌த்திய‌ அர‌சின் க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ இப்ப‌டி ஒரு போராட்ட‌ம் ந‌ட‌த்தி இருக்க‌லாம், அல்லது நெல்லை விட‌ உற்ப‌த்தி செல‌வுகுறைவான‌ கோதுமைக்கு ஆதார‌ விலை குவின்டாலுக்கு 1000 ரூபாய் என்றும் நெல்லுக்கு அதை விட‌ குறைவாக‌வும் நிர்ண‌யித்த‌ போது போராடியிருக்க‌லாம், ஆனால் நீங்க‌ள் அதை செய்ய‌வில்லையே?

பூரண மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டால் கள்ளச் சாராயத்தை ஒழிக்க முடியாமல் போய்விடும் என்பதால் பூரண மதுவிலக்கு ஏற்படுத்த முடியாது என்றீர்கள். ஆனால் இப்போது மட்டும் கள்ள சாராயம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டதா என்ன? அவ்வப்போது கள்ளச் சாராய சாவுகளும் நடந்துகொண்டுதானே இருக்கின்றன ?

த‌மிழை செம்மொழி என்று சொன்னால் ம‌ட்டும் எல்லாத் த‌மிழ‌ன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிடுமா? தமிழும் வளரவேண்டும் தமிழனும் வளரவேண்டும் அல்லவா?

ஒட்டுமொத்த தமிழர்களையும் உடன்பிறப்பே என்று அழைக்கும் நீங்கள் மொத்த தமிழகத்தையும் உங்கள் குடும்பமாக நினைத்தீர்கள் என்று அக மகிழ்ந்த எங்களுக்கு, இன்று உங்கள் குடும்பம் மட்டும்தான் ஒட்டுமொத்த தமிழகம் என நினைக்கின்றீர்களோ என்ற ஐயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நடப்பவை எல்லாம் அதை உறுதிபடுத்தும் விதமாகத்தான் இருக்கின்றன.

இதற்கெல்லாம் பதில் கிடைக்குமா? Udanz
This entry was posted on 1:59 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On Tue Jul 01, 03:30:00 PM GMT+8 , Anonymous said...

நச் கேள்விகள்.. unfortunately இதற்கு பதிலாக உங்கள் ஜாதி/இனத்தின் டவுசர் கிழிக்கப்படும்.. அல்லது சென்ற ஆட்சியுடன் compare செய்து தங்கள் ஆட்சி எவ்வளவு super என்று புரியவைக்கப்படுவீர்கள்..

// 2 ரூபாய்கு ஒரு கிலோ அரிசி எனும் ஒரு ம‌க‌த்தான‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒரு புற‌ம் சோம்பேறிக‌ளையும், ம‌றுபுற‌ம் அரிசி க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளையும் உருவாக்கிவிட்டீர்க‌ள்.//

மாதம் ஒரு குடும்பத்திற்கு 30கிலோ என்றால்.. இத்திட்டத்தால் மாதம் 30 ருபாய் மீதம் ஆகும்.. இதை வைத்து என்னதான் செய்ய முடியும்?? இந்த திட்டம் எப்படி மகத்தான திட்டம் என்று எனக்கு விளங்கவில்லை..

 
On Tue Jul 01, 04:47:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பரத்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 30 கிலே அரிசி தேவை எனில் 2ரூ அரிசி வாங்க 60 ரூபாய் தான் தேவை. அது சாதாரண கூலி தொழிலாளிக்கு ஒரு நாள் சம்பளத்தில் கிடைத்துவிடும். இதுவே வெளியில் அரிசி வாங்கினால் ஒரு கிலோ அரிசி குறைந்தபட்சம் 10ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட, ( கட்டாயம் விலை அதிகம் தான்) 300 ரூபாய் ஆகும். எனவே தொழிலாளி அதிகமாய் உழைக்க வேண்டும்.ஆனால் 2ரூபாய் அரிசியால் உழைக்கும் தேவை குறைந்து போய் பல கிராமங்களில் இன்று வேலைக்கு ஆள் கிடைக்காமல் போகின்றது.

 
On Tue Jul 01, 05:09:00 PM GMT+8 , Anonymous said...

//எனில் 2ரூ அரிசி வாங்க 60 ரூபாய் தான் தேவை. அது சாதாரண கூலி தொழிலாளிக்கு ஒரு நாள் சம்பளத்தில் கிடைத்துவிடும். இதுவே வெளியில் அரிசி வாங்கினால் ஒரு கிலோ அரிசி குறைந்தபட்சம் 10ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட, ( கட்டாயம் விலை அதிகம் தான்) 300 ரூபாய் ஆகும். எனவே தொழிலாளி அதிகமாய் உழைக்க வேண்டும்.ஆனால் 2ரூபாய் அரிசியால் உழைக்கும் தேவை குறைந்து போய் பல கிராமங்களில் இன்று வேலைக்கு ஆள் கிடைக்காமல் போகின்றது.//

மார்க்கெட்டுடன் compare செய்யாதீர்கள்.. சென்ற ஆட்சியில் ரேஷனில் 1கிலோ அரிசியின் விலை 3 ருபாய். மாத்திற்கு 30 ருபாய் மட்டுமே மீதம் ஆகும்..

 
On Tue Jul 01, 06:46:00 PM GMT+8 , We The People said...

கேள்விக்கு பதில் ஓ.கே வா??

 
On Tue Jul 01, 07:04:00 PM GMT+8 , We The People said...

//அரசு கேபிள் கழகத்திலும் காட்டும் ஆர்வம் //

இதெல்லாம் ரெம்ப ஓவரா தெரியல... எப்ப ஐயா அவர் அதற்குமேல ஆர்வம் காட்டினாரு?? அதெல்லாம் ஆர்.சி.வி துவக்குவதற்கு முன் :))))))))))))))))

கொஞ்சம் நாளா நீங்க தமிழக செய்தியை படிப்பதில்லையா??

 
On Tue Jul 01, 07:32:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

லக்கி லுக் எழுதிய பதில்களை சொல்கின்றீர்களா? மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு பதில் எழுதுகின்றேன்.

சமீபத்தில் கூட அரசு கேபிள் கழகம் ஜூலை 15முதல் தஞ்சையில் துவங்கப்படும் என்று செய்தி வந்ததே? ஒரு வேளை தென் தமிழ்நாட்டிற்கு ஆர்சிவி , மற்ற பகுதிகளுக்கு அரசு என்று முடிவெடுத்துள்ளார்களோ என்னவோ.

 
On Wed Jul 02, 04:36:00 PM GMT+8 , Sanjai Gandhi said...

அருமை.. அருமை... ஒரு சராசரிக் குடிமகனின் ஞாயமான கேள்விகள்... :)

இருங்க .. லக்கி பதில் படிச்சிட்டு அதுக்கப்புறம் அதுக்கு நீங்க போட்டிருக்கிற பதிலும் படிக்கிறேன்..

//ஒரு வேளை தென் தமிழ்நாட்டிற்கு ஆர்சிவி , மற்ற பகுதிகளுக்கு அரசு என்று முடிவெடுத்துள்ளார்களோ என்னவோ.//
:)))...
மதுரையும் தஞ்சையின் கட்டுப்பாட்டில் வரும் என அரசு பதில் அளித்துள்ளது. எனக்கு தெரிந்த வகையில் எஸ் சி வி செய்த அராஜகத்தில் 5% கூட ஆர்சிவி செய்திருக்காது... அவர்கள் அராஜகமாய் புடுங்கினார்கள். இவர்கள்
தானாகவே கொடுக்க வைக்கிறார்கள்.

 
On Thu Jul 03, 04:56:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சஞ்சய்.
லக்கி அண்ணாவை தொடர்ந்து அபி அப்பாவும் பதில்கள் எழுதியுள்ளார். இருவருக்கும் நான் பதிலளித்துள்ளேன். எல்லாவற்றையும் படித்து உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

 
On Sat Jul 05, 07:41:00 PM GMT+8 , Known Stranger said...

KK vaiyum DMKyavum puravuvathai nipati vellaiya parunga nanbaray. oru pazhamozhi iruku kamalai vanthavanuku kandathellam manjala theriyuma.. moment you think kk is doing good you can speak high of him moment you see him not doing good you can throw him. by the way eppo than KK ozhunga atchi senjaru. enaku athuvey puriyalla.. mothalla ippo nalla pannalenu solla..

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க