Author: ஜோசப் பால்ராஜ்
•11:18 AM
இது சமையல் குறிப்பு என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள்...
நான் 1999ல் சென்னையில் வேலைக்கு சேர்ந்து சில‌ நாட்க‌ளில் ந‌ட‌ந்த‌ க‌தை இது.

க‌ல்லூரி முடிக்கும் வ‌ரை வீட்டில் சொகுசாய் வாழ்ந்து ப‌ழ‌கிய‌ எனக்கு சென்னையில் த‌னியாய் வாழ்வ‌து ப‌ழ‌கிகொண்டிருந்த‌ நேர‌ம் அது.
என்னோடு வேலை பார்த்த‌ இரு பீகார் பைய‌ன்க‌ள், ஒரு திருச்சிகார‌ர், ம‌ற்றும் நான் என‌ 4 பேர் ஒன்றாக‌ ஒரு வீடு எடுத்து த‌ங்கியிருந்தோம்.

பீகார்கார‌ர்களுக்கு சென்னையின் உண‌வை உண்டு ம‌கிழ‌த்தெரியாமையால், வீட்டில் ச‌மைக்க‌லாம் என‌ முடிவெடுத்து ச‌மைக்க‌ ஆர‌ம்பித்தோம். சுடுத‌ண்ணி போட‌க்கூட‌ ச‌மைய‌ல் குறிப்பை தேடும் என‌து ச‌மைய‌ல் திற‌மையை அறிந்த‌தால் என்னை ச‌மைய‌ல்க‌ட்டு ப‌க்க‌மே என் ந‌ண்ப‌ர்க‌ள் விடுவ‌தில்லை.

தின‌மும் சாத‌ம் அல்ல‌து ச‌ப்பாத்தி அத‌ற்கு தொட்டுக்கொள்ள‌ ப‌ருப்பு அல்ல‌து உருளைகிழ‌ங்கு இதை த‌விர‌ வேறெதுவும் அவ‌ர்க‌ளுக்கு தெரியாத‌தால், அவ‌ர்க‌ள‌து விதியின் ப‌டி ஒரு நாள் என்னை அழைத்து எப்ப‌டியாவ‌து சாம்பார் செய் என்று அன்புட‌ன் வேண்டினார்க‌ள்.

இத்த‌ன நாளு என்னைய‌ உக்கார‌வைச்சு சாப்பாடு போட்ட‌ ம‌க‌ராச‌னுங்க‌ கேட்டுட்டாங்க‌ளேனு, நானும் எப்ப‌டியாவ‌து சாம்பார் செய்ய‌னும்னு க‌ள‌த்துல‌ இற‌ங்கிட்டேன்.ஆனா எப்ப‌டி செய்யிற‌துனு தெரியல‌, சாம்பாருக்கு தேவையான மூல‌ப்பொருட்க‌ள் கூட‌ தெரியாது.

1999ல‌ கை தொலைபேசிக‌ள் எல்லாம் இந்த‌ அள‌வுக்கு பிர‌ப‌ல‌ம் கிடையாது. எங்க‌ வீட்ல‌ கேட்க‌லாம்னா, தொலைபேசி செலவே 100 ரூபாய்கு மேல‌ வ‌ரும்.
அப்போ எல்லாம் சென்னையில இருந்து தஞ்சைக்கு தொலை தூர தொடர்பு கட்டணத்தில்(STD) தான் பேசனும், இப்போ மாதிரி உள்ளூர் அழைப்பு கட்டணத்துல பேச முடியாது.

அப்போ தான் என் ந‌ண்ப‌ண் ஒருவ‌ரின் தாயார் சென்னையில் இருக்கும் அவ‌ர்க‌ளது அண்ண‌ண் வீட்டிற்கு வ‌ந்திருந்த‌து நினைவில் வ‌ந்த‌து. உட‌னே அவ‌ங்க‌ள‌ தொலைபேசியில‌ தொட‌ர்பு கொண்டு செய்முறையை வாங்கிட்டேன்.

ஒரு வ‌ழியா ந‌ம்பிக்கை வ‌ந்து, சாம்பார் செய்ய‌ ஆர‌ம்பித்த‌பின்தான் தெரிந்த‌து எங்க‌ள் வீட்டில் புளியே இல்லை ( நானே ஒரு புலினாலும், சாம்பாருக்கு புளி தான் வேணும் பாருங்க). இந்த‌ புலி வைக்கிற‌ சாம்பாருக்கு புளி இல்லாம‌ பேச்சேனு, ம‌றுப‌டியும் என் ந‌ண்ப‌ணின் தாயாரை தொட‌ர்பு கொண்டு கேட்ட‌ப்ப‌, அவ‌ங்க‌ அவ‌ச‌ர‌கால‌ ஆலோச‌னையா த‌க்காளிய‌ போட்டு செய்ய‌ சொன்னாங்க.

ஒரு வ‌ழியா எல்லாம் செஞ்சு முடிச்ச‌ப்புற‌ம் ஏதோ ர‌ச‌ம் மாதிரியும் இல்லாம‌, சாம்பார் மாதிரியும் இல்லாமா ஒரு திர‌வ‌ உண‌வு வ‌கை இருந்துச்சு. (இன்னைய‌ வ‌ரைக்கும் அதுக்குனு த‌னியா ஒரு பெய‌ர் வைக்க‌ல‌).

எல்லாம் த‌யார், சாப்பிட‌ வேண்டிய‌துதான் . அதுவ‌ரைக்கும் வெளியில‌ போய் சுத்திட்டு, சாப்பிட‌ வ‌ந்த‌ பீகார் ம‌க‌ராச‌னுங்க‌, ஆளுக்கு ஒரு கிண்ண‌த்துல‌ இந்த‌ திர‌வ‌ உண‌வ‌ எடுத்து, ஒரு தேக்க‌ர‌ண்டி ( ஸ்பூன்) வைச்சு குடிச்சுகிட்டே, அதையே ஊத்தி சாத‌மும் சாப்பிட்டு முடிச்சுட்டு, க‌டைசியா கேட்டாணுங்க‌ ஒரு கேள்வி.. " ஆமா, இன்னைக்கு உன்ன‌ சாம்பார் செய்ய‌ சொன்னா, நீ சூப் செஞ்சுருக்க‌, எப்ப‌ சாம்பார் வைக்க‌ பேற‌ ? "

பி.கு 1: நான் சாம்பார் வைத்த கதையை கேட்ட ஒரு தோழி, என்மேல் பாவப்பட்டு ஒரு நாள் வீட்டுக்கு வந்து சுவையான சாம்பார் செய்துட்டு போனாங்க. அவங்கள அனுப்பிட்டு வந்து சாதத்துக்கு அரிசி வைச்சுட்டு, அரை மணி நேரம் கழிச்சு பார்த்தா , அரிசி அரிசியாவே இருந்துச்சு. என்னடானு பார்த்தா சமையல் எரிவாயு தீர்ந்து போச்சு. நல்ல சாம்பார் இருந்தும், சாதம் இல்லாமல் போன சோகம் அது. அத்தோட எங்க சாம்பார் முயற்சி நின்னு போச்சு.

பி.கு 2: நல்ல சமையல் குறிப்பு வேணும்ணா நம்ம தூயா பபாவின் வலைப்பூவுல போய் பார்த்துக்கங்க. Udanz
This entry was posted on 11:18 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

15 comments:

On Thu Jul 03, 01:47:00 PM GMT+8 , இவன் said...

//நீ சூப் செஞ்சுருக்க‌, எப்ப‌ சாம்பார் வைக்க‌ பேற‌ ? "//

நீங்க வச்ச சாம்பாருதான் சூப் ஆச்சுது.... நான் செஞ்ச chicken curryயே சூப் ஆயிடுச்சிங்க.... chicken அப்படியே கரைஞ்ச்சிருச்சு

 
On Thu Jul 03, 05:00:00 PM GMT+8 , Joseph Paulraj said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கோழி கறியே கரையும் வரை வேக வைத்தீர்களா? அப்போ சூப் சூப்பரா இருந்துருக்குமே?

இது போன்ற அனுபவங்கள் நிறைய பேரிடம் இருக்கும்.

 
On Sat Jul 05, 08:08:00 PM GMT+8 , Known Stranger said...

yenga emathu anni.. avargalidam solluvom.

 
On Sat Jul 05, 08:09:00 PM GMT+8 , Known Stranger said...

"எப்ப‌ சாம்பார் வைக்க‌ பேற‌ ?"

enaku therinja tamila kall podanumoo as pooo onot pay..

nan ella languagelyum weak machi

 
On Tue Jul 22, 11:14:00 AM GMT+8 , Divya said...

சாம்பார் = lentil soup அப்படின்னு சொல்லி சமாளிச்சிருக்கலாமில்ல:))

சுவாரஸியமா இருக்கு உங்கள் எழுத்து படிப்பதற்கு!!

சரி....இப்போவாச்சும் சாம்பார் வைக்க கத்துக்கிட்டீங்களா??

 
On Fri Jul 25, 07:22:00 PM GMT+8 , Anonymous said...

இத்தனை சோகமா உங்க சாம்பார் வாழ்வில் ;)

 
On Thu Aug 14, 09:45:00 PM GMT+8 , Anonymous said...

இதில என்னைய நம்பி இணைப்பு வேற குடுத்திருக்கிங்க ஜோண்ணா..தைரியம் அதிகம் தான்..

 
On Sun Aug 17, 05:43:00 PM GMT+8 , புதுகைத் தென்றல் said...

சரி....இப்போவாச்சும் சாம்பார் வைக்க கத்துக்கிட்டீங்களா??

kekkaromla pathil sollunga.

kothu sappathi eppadi irunthuchu?

 
On Sun Aug 17, 06:44:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

/
எப்ப‌ சாம்பார் வைக்க‌ 'பேற‌' (போற) ?
/

இது வேற 'பகிரங்க'கடித சீசனா உங்க மனைவிக்கு நீங்க எழுதின கடிதமோன்னு தலைப்ப பாத்து நினைச்சிட்டேன்
:)))

 
On Sun Aug 17, 06:45:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

தலைப்புல இருக்கிற எழுத்துபிழைய கொஞ்சம் கரெக்ட் பண்ணிடுங்க

 
On Sun Aug 17, 06:45:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

நல்லா இருக்கு பதிவு.

 
On Sun Aug 17, 06:46:00 PM GMT+8 , மங்களூர் சிவா said...

அதை சாப்பிட்ட பீகார்காரனுவ என்ன ஆனானுங்க!?!?

 
On Sun Aug 17, 06:56:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@புதுகைத் தென்றல்...
அடயேங்கா, நீங்க வேற.
இன்னைய வரைக்கும் சுடுதண்ணிய தாண்டி என் ஆரய்சிய அடுத்தகட்டத்துக்கு நகர்த்தல அக்கா. வீட்ல தங்கமணி இருந்தவரைக்கும் உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தேன். தங்கமணி இப்ப இந்தியாவுல இருக்கிறாங்க, இப்ப என் வீட்ல இருக்க என் நண்பர்கள் என்னோட சமையல் திறமை தெரிஞ்சுருக்கதால என்னைய சமையல்கட்டுக்குள்ளரயே விடுறது இல்ல. இன்னும் கொத்து சப்பாத்தி செய்ய நேரம் வரலீங்கக்கா.

 
On Mon Aug 18, 07:50:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க சிவா,
இத்தனை நாளு நானும் கவனிக்கல, தவறை உணர்த்தியதற்கு நன்றி சிவா.
திருத்திட்டேன்.

அந்த பீகார்காரனுங்க எங்கிட்ட இருந்து தப்பிச்சு டெல்லி பக்கம் போயி புழைச்சுக்கிட்டானுங்க.

 
On Mon Aug 18, 08:13:00 PM GMT+8 , Anonymous said...

சாம்பாரே சூப்பு மாதிரி வச்சீங்கன்னா, ரசம் எப்படி வப்பீங்க?

ஆஹா மீ தி எஸ்கேப்பு.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க