Author: ஜோசப் பால்ராஜ்
•3:34 PM
நம்ம அரசியல்வாதிகளோட நக்கலுக்கு அளவே இல்லாம போச்சுங்க..

இன்னைக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தை வரவேற்பதாக அறிவித்துள்ளார். என்ன கொடுமை இது???
உங்க கட்சியின் தலைமையிலான மத்திய அரசு ஊசலாடிகிட்டு இருக்கு, அதுக்கு கூட்டணி கட்சிகளோட ஆதரவு அவசியம்தான். அதுக்காக இப்டியாங்க ??? உங்க கட்சித்தலமையிலான மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உங்க கூட்டணியில இருக்க ஒரு கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்துமாம், அதை நீங்களே வரவேற்று அறிக்கை விடுவிங்களாம், பார்த்துகிட்டு நாங்க சும்ம இருகணும். என்ன கொடுமை சாமி இது?

ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க‌, வீட்டுக்கு வந்த வேண்டாத விருந்தாளிய விரட்ட அந்த வீட்டுல இருக்க கணவன் , மனைவி இரண்டு பேரும் விருந்தாளி வீட்டுக்கு வந்துருக்க நேரத்துல சண்டை போட்டுகிட்டு, அந்த ஐயா , தன் வீட்டம்மாவ போட்டு அடிக்கிறமாதிரி நடிப்பாங்க. என்னடா நாம இவங்க வீட்டுக்கு வந்த நேரத்துல வீட்ல ஒரே கலவரமா இருக்கேன்னு பயந்துபோயி சொல்லிக்காம கிளம்பி போய்டுவாரு. அவரு போயிட்டாருனு நினைச்சுகிட்டு நம்ம ஐயாவும், அம்மாவும் வெளியில வந்து பேசிக்குவாங்க.

ஐயா : நான் நோகாமல் அடித்தேனே !!!.
அம்மா: நானும் வலிக்காமல் அழுதேனே !!!.



இந்த சண்டைய பார்த்துட்டு வெளில போன நம்ம வேண்டாத விருந்தாளி ரொம்ப‌ விவரமான ஆளு, சரியா இந்த நேரத்துல மறுபடியும் உள்ளார வந்து
சொல்லுவாரு பாருங்க ஒரு வசனம்

விருந்தாளி : நானும் போகாம‌ல் இருந்தேனே !!!!

இப்ப‌ இந்த‌ க‌தைய‌ அப்டியே ந‌ம்ம‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளோடும் , பிர‌ச்ச‌னைக‌ளோடும் ஒப்பிட்டால்

க‌ண‌வ‌ர் : திமுக‌ அர‌சு.
ம‌னைவி : காங்கிர‌ஸ் அர‌சு.
விருந்தாளி : ஒருத்த‌ரா ரெண்டு பேரா, அது ஒரு பெரிய‌ கூட்ட‌முங்கோ .
இப்போதைக்கு விருந்தாளி மீன‌வ‌ர்க‌ள் பிர‌ச்ச‌னை.


சற்றுமுன் சன் தொலைகாட்சியின் செய்தியில் கடலூரில் மத்திய அமைச்சர் திரு. வேங்கடபதியும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளாராம்.
இவங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு போங்க... Udanz
This entry was posted on 3:34 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On Sat Jul 19, 04:31:00 PM GMT+8 , குசும்பன் said...

உங்கள் பொன்னான வாக்குகளை கேட்டு உங்கள் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார் உங்கள் வீட்டு பிள்ளை ...என்று கூவிக்கிட்டு வரும் வரை இந்த கோவம் இருக்கனும் மக்களுக்கு.

ஆனா யாருக்கு போடுவது அதுதான் பிரச்சினையே:((

 
On Sat Jul 19, 05:09:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

சூடான இடுகையில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துகள்

 
On Sat Jul 19, 05:16:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

"O" podalame Mr. Kusunban...???

 
On Sat Jul 19, 05:52:00 PM GMT+8 , Veera said...

//ஆனா யாருக்கு போடுவது அதுதான் பிரச்சினையே:((//

நியாயமான கவலை! :)

 
On Sat Jul 19, 06:26:00 PM GMT+8 , சின்னப் பையன் said...

ஏதாவது கேட்டா, 1950லே, 1960லே ஆரம்பிச்சிடுவாங்க!!!

டேய், நிகழ்காலத்துக்கு வாங்கடான்னு தலையிலே ரெண்டு போடணும்.

 
On Sat Jul 19, 07:59:00 PM GMT+8 , அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

பொதுமக்களின் மறதி மற்றும் சுரணையற்ற தன்மை தான் இவர்களை போன்ற சுயநல அரசியல்வாதிகளின் பலம்.
ஆண்டவன் தான் இவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

 
On Sat Jul 19, 09:19:00 PM GMT+8 , சிவமுருகன் said...

//சற்றுமுன் சன் தொலைகாட்சியின் செய்தியில் கடலூரில் மத்திய அமைச்சர் திரு. வேங்கடபதியும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளாராம்.
இவங்க நக்கலுக்கு அளவே இல்லாம போச்சு போங்க...//

(கவுண்டர் சொல்றார்)

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

 
On Fri Jul 03, 11:12:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

ha..ha..ha..sari nakkal ungalukku:-)))

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க