Author: ஜோசப் பால்ராஜ்
•5:12 PM
இது காதல் குறித்த பதிவு இல்லை.

இன்றைய‌ச் செய்திதாளில் ப‌டித்த செய்தி ஒன்று ஈரோட்டில், தான் ஒரு த‌லையாக‌ காத‌லித்த‌ பெண், த‌ன்னை காத‌லிக்க‌வில்லை, திரும‌ண‌ம் செய்ய‌ ம‌றுத்துவிட்டார் என்ப‌த‌ற்காக‌ அவ‌ரை க‌த்தியால் குத்தி கொடூர‌மாக‌ கொலை செய்துள்ளார் ஒருவ‌ர்.

இதற்கு பெய‌ர் காத‌லா ?

நான் உன்னை காத‌லிக்கிறேன் என்று ஒரு பைய‌ன் ஒரு பொண்ண‌ பார்த்து சொல்லிட்டா, உட‌னே அந்த‌ பொண்ணு க‌ட்டாய‌ம் அந்த‌ பைய‌ன காத‌லிச்சே ஆக‌னுமா என்ன‌ ? உன‌க்கு உன் விருப்ப‌ம் எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் அந்த‌ பெண்ணிற்கு அவ‌ருடைய‌ விருப்ப‌ம் முக்கிய‌ம‌ல்ல‌வா? பாவ‌ம் அந்த‌ பெண், இப்போதுதான் ஈரோடு கொங்கு பொறியிய‌ல் க‌ல்லூரியில் முத‌லாமாண்டு சேர்ந்திருக்கின்றார். அந்த‌ பெண்ணை போய் திரும‌ண‌ம் செய்துகொள்ள‌ சொல்லி கொடுமை ப‌டுத்தி கொன்ற‌வ‌னை என்ன‌ செய்வ‌து?

அந்த நபருக்கு வந்தது காதல் என்று சொல்வது கூட அந்த வார்த்தையின் புனிதத்தை கேவலப்படுத்தும் ஒன்றாகத்தான் இருக்கும். இதற்கு பேர் வெறி, எப்படியாவது அடையவேண்டும் என்ற வெறிதானே தவிர, இதில் கொஞ்சமும் காதல் என்பது இல்லை.

உன்னையே நீ நேசிப்பது போல் உன் அயலாரையும் நேசி என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் தான் எனக்கு நினைவுக்குவருகின்றது. இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் எல்லோரும் கடைபிடித்துவிட்டால், உலகில் எங்கும் பிரச்சனைகள் இருக்காது. த‌ன் விருப்பத்திற்கு கொடுத்த‌ முக்கியத்துவத்தை அந்த பெண்ணின் விருப்பத்துக்கும் கொடுத்திருந்தால் இந்த கொலை நிகழ்ந்திருக்காது.

இதுபோன்றே ஒரு சம்பவம், ஏற்கனவே திருச்சியில் மண்டலப் பொரியியல் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணையும், இப்படி ஒரு வெறியன் காதலிக்க மறுத்தார் என்பதால் குத்திக்கொன்றான்.

இதை மனநிலைக் கோளாறு என்பதா அல்லது காதல் என்பதற்கு சரியான விளக்கமளிக்காமல் ஒரு மாய தோற்றத்தை உண்டுபண்ணிவிட்ட ஊடகங்களை குறை சொல்வதா? "காதல் கொண்டேன்" போன்ற படங்கள்தான் காரணமா? புரியவில்லை.இத்தனைக்கும் கொலை செய்தவர் ஒரு முதுகலை பட்டப்படிப்பு மாணவர், படிப்பு நமக்கெல்லாம் அறிவு முதிர்ச்சியை தரவில்லையா? இவரெல்லாம் Just Literate, But Not Educated.

நன்கு படித்து, பொறியியல் கல்லூரியில் சேர ஆவலாய் காத்திருந்த ஒரு மலர வேண்டிய மொட்டை அநியாயமாக கருக்கியவனுக்கு விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும்.

ஒரு கொடூரனின் வெறியால் அநியாயமாய் உயிரைவிட்ட அந்த பெண்ணின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம். Udanz
This entry was posted on 5:12 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On Sat Jul 19, 07:02:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

விரைவில் மிக உட்சபட்ச தண்டணையை அளிக்க வேண்டும்.
//
இன்னும் 15 நாளில் அவன் ஜாமீன்ல வந்துருவான்.வாய்தா மேல வாய்தா வாங்கி அந்த கேஸ் டிரையலுக்கு வருவதற்கு முன் வயசாகி அவனே செத்து போயிருவான்.அந்த நாயையெல்லாம் சவூதில பண்ற மாதிரி மேட்டரை அறுத்து விட்டுடனும்.

 
On Sat Jul 19, 09:48:00 PM GMT+8 , மதுவதனன் மௌ. said...

ஆமா, சில குற்றங்களுக்கு சட்டங்களை மீறிய இரகசிய தனிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு அதன்மூலம் உடனடி தண்டனைகள் வழங்கினால் நல்லது.

ஆனால் அந்தக் குழுவையும் அரசியலுக்குப் பயன்படுத்த ஆரம்பிச்சுடுவாங்களே நம்மாக்கள்.

மதுவதனன் மௌ.

 
On Sun Jul 20, 12:09:00 AM GMT+8 , Sen said...

ரமணா திரைப்படதில் ஒரு வசனம்..
"தண்டனைகள் கடுமையானா தான் தவறுகள் குறையும்"

ஆனா, தண்டனை எப்போ Sir கிடைக்கும்???

 
On Sun Jul 20, 01:24:00 AM GMT+8 , நவீன் said...

மிகக் கொடுமை !

'சேது' திரைப்படமும் இப்படியான விசயத்தைதான் சொன்னது.

 
On Sun Jul 20, 07:39:00 PM GMT+8 , Thanjai said...

This incident shows most of us don't know what love is. Love has to be mutual and spontaneous. Whom to blame?? Cinema --- Which is exaggerating anything and everything and defaced the emotion of love to its business perversions.

 
On Sun Jul 20, 10:54:00 PM GMT+8 , rapp said...

மோசமான விஷயம், ஆனா உங்களுக்கு ஒரு வருத்தமான விஷயம் தெரியுங்களா, நெறைய காலேஜ் பசங்க, இவனை மாதிரிப் பட்ட மனநோயாளியை நாயகனாட்டம் பார்த்து, தான் விரும்பற பொண்ணை மிரட்டரத, எங்க காலேஜ்லயே பாத்திருக்கேன். அதால இவனோட நடவடிக்கையின் விளைவுகளை வைத்து எல்லா பள்ளி கல்லூரிகளிலும் பக்குவப் படுத்த வழிமுறைகளும் ஆலோசனைகளும் கொடுத்தா நல்லது

 
On Tue Jul 22, 01:25:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

இங்கு பின்னூட்டமிட்டுள்ளவர்கள் சொல்லியிருப்பது போல, இதற்கு முக்கிய காரணம் திரைப்படங்கள் என்பதை மறுக்க இயலாது.

//rapp said...
மோசமான விஷயம், ஆனா உங்களுக்கு ஒரு வருத்தமான விஷயம் தெரியுங்களா, நெறைய காலேஜ் பசங்க, இவனை மாதிரிப் பட்ட மனநோயாளியை நாயகனாட்டம் பார்த்து, தான் விரும்பற பொண்ணை மிரட்டரத, எங்க காலேஜ்லயே பாத்திருக்கேன். அதால இவனோட நடவடிக்கையின் விளைவுகளை வைத்து எல்லா பள்ளி கல்லூரிகளிலும் பக்குவப் படுத்த வழிமுறைகளும் ஆலோசனைகளும் கொடுத்தா நல்லது //.

கல்லூரி பருவத்தில் காதல் கொள்வதும், நண்பணின் காதலுக்கு உயிரைக்கொடுப்போம் என சூளுரைப்பதும், அந்த பருவத்தில் அழகாக தெரியலாம். கல்லூரி மாணவர்களுக்கு கட்டாயம் இதில் ஆலோசனை தேவை.
ஆனால் நண்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீ சரி சொல்லாம போன நான் செத்துருவேன்னு மிரட்டியே எத்தனையோ பேர் பொண்ணுங்கள சரின்னு சொல்ல வைக்க முயற்சி செய்யிறாங்க. இதையெல்லாம் ஆரம்பத்துலேயே சரி செய்யனும்.

 
On Fri Aug 01, 07:44:00 PM GMT+8 , Anonymous said...

//நான் உன்னை காத‌லிக்கிறேன் என்று ஒரு பைய‌ன் ஒரு பொண்ண‌ பார்த்து சொல்லிட்டா, உட‌னே அந்த‌ பொண்ணு க‌ட்டாய‌ம் அந்த‌ பைய‌ன காத‌லிச்சே ஆக‌னுமா என்ன‌ ? உன‌க்கு உன் விருப்ப‌ம் எவ்வ‌ள‌வு முக்கிய‌மோ அதே போல் அந்த‌ பெண்ணிற்கு அவ‌ருடைய‌ விருப்ப‌ம் முக்கிய‌ம‌ல்ல‌வா?//

இதை பலர் புரிந்துகொள்வதில்லை..

 
On Sat Aug 02, 02:17:00 PM GMT+8 , Leo amalraj said...

Tamilan endrillai,Manithan endraikkumae palakkavalakkangal adipadaiyil sellakudathu,suyamaga sindhikka vendum,atharkkuthan manithanaga pirandhirukkirom,kadavul solvar endru naam irukkakudathu,manithan than valkkaiyai thane theermanickavendum.motthathil rajini vendruvittar,tamilan emanthuvittan,idhu thodarum.....

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க