Author: ஜோசப் பால்ராஜ்
•10:21 AM
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ் படங்களுக்கு ஒரு படத்திற்கு 7 லட்சம் வீதம் 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மானியமாக அளிக்கப்படுகின்றது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஏன் திரைத்துறையினருக்கு மட்டும் இத்தனை சலுகைகளை வாரிவாரி வழங்க வேண்டும் என்று கேட்டால், அதில் லட்சக்கணக்கானோர் பணியாற்றுகின்றார்கள் என்று பதில் சொல்லும் அண்ணண் லக்கி லுக், அபி அப்பா போன்றோர், ஏற்கனவே எடுத்து வெளியிடப்பட்ட இந்த படங்களுக்கு இன்று சலுகை அளிப்பதால் இது தயாரிப்பாளரை மட்டும் சென்றடையுமா அல்லது அதில் பணிபுரிந்த அனைத்து சாதரண ஊழியர்களுக்கு கொடுக்கப்படுமா என்று விளக்கினால் நல்லது.

இன்னும் பள்ளிகளே இல்லாத எத்தனை கிராமங்கள் உள்ளன? பெயரளவில் பள்ளி இருந்தும் அதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், பள்ளிக்கு தேவையான கட்டிடங்கள் இல்லாமலும் எத்தனை பள்ளிகள் உள்ளன?
வெறும் மரத்தடியில் மாணவர்களை அமரச்செய்து பாடம் நடத்தும் அவலங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது?


நெல்லை மாவட்டத்தில் நதியின் ஒரு கரையில் இருக்கும் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் நதியின் மறுகரைக்கு செல்ல பாலம் இல்லாமல், தினமும் தண்ணீரில் நீந்தி நதியை கடந்து அக்கரையை அடைந்து சொல்ல முடியாத துன்பங்களை அனுபவிக்கின்றார்கள். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட இப்படி நதியை கடந்து சென்றுதான் தங்கள் படிப்பையே தொடர வேண்டிய அவலமும் இதே தமிழகத்தில் தான் நடக்கின்றது.

அங்கு ஒரு பாலம் கட்ட கட்டாயம் 4.9 கோடி செலவு ஆகாது. அங்கு பாலம் கட்டினீர்களேயானால் எத்தனையோ மாணவர்கள் சிரமமின்றி தங்கள் கல்வியை தொடர்வார்கள்.

ஆனால் இவர் கதை வசனம் எழுதிய பாசக்கிளிகள் படத்திற்கும் சேர்த்து 70 தரமான படங்களுக்கு 7 லட்சம் உதவித்தொகை அளிக்கின்றார். இதில் தரமான படம் என்பதை எந்த அளவுகோலை வைத்து தேர்ந்தெடுத்தார்கள் என்று தெரியவில்லை. இங்கிலிஷ்காரன், வெற்றிவேல் சக்திவேல், 6.2" போன்ற படங்கள் எல்லாம் அந்த தரமான படங்களின் பட்டியலில் இடம்பெற்று 7 லட்சம் பெறுகின்றன.

பட்டியலில் உள்ள பல படங்களின் பெயர்கள் கேள்விப்படமாதிரி கூட இல்லை என்பது தனிக்கதை.

அதிமுக‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌டாத‌ ச‌லுகைக‌ளையும் சேர்த்து இவ‌ர் அறிவிக்கின்றார். இப்போது அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ 70 ப‌ட‌ங்க‌ளும் 2005 ம‌ற்றும் 2006 ஆண்டுகளில் வெளியான‌வை. அப்போ இதே போல் 2007ல் வெளியான‌ 45 ப‌ட‌ங்க‌ளுக்கு வேறு த‌ர‌ப்போகின்றீர்க‌ளா?

ஆக்கப்பூர்வமாக செய்ய வேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கும் போது, எப்படி மக்களின் வரிப்பணத்தை ஒரு துறைக்கும் மட்டும் வாரி இறைக்க ம‌ன‌ம் வ‌ருகின்ற‌து?

என்ன‌தான் திரைத்துறையில் இருந்து வந்திருந்தாலும், ஒட்டுமொத்த‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கும் இவர்தான் முத‌ல்வ‌ர் என்ப‌தை நம் முதல்வருக்கு யாராவ‌து அடிக்க‌டி நினைவூட்ட‌ வேண்டுமா என்ன‌ ? Udanz
This entry was posted on 10:21 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

24 comments:

On Tue Jul 08, 12:00:00 PM GMT+8 , Syam said...

அட ஏங்க காமடி பண்ணிக்கிட்டு.... :-)

 
On Tue Jul 08, 01:38:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

இதுல நகைச்சுவைக்கு என்ன விஷயம் இருக்குனு எனக்கு புரியலீங்க...

 
On Tue Jul 08, 07:46:00 PM GMT+8 , Anonymous said...

இப்படி வரிசையாக சினிமாக்காரர்களையே சி.எம் ஆக்கினால் இதுதான் நடக்கும். உங்கள் கேள்விகளில் நியாயம் இருக்கு. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க எந்த கட்சியும் தயாரில்லை போல.

 
On Tue Jul 08, 07:48:00 PM GMT+8 , Anonymous said...

Hi Joseph,
I too read about those village people who crossing the river without bridge. Politicians will never do good for needy public. your writing is excellent.

Sakthi
Singapore.

 
On Tue Jul 08, 08:38:00 PM GMT+8 , Bleachingpowder said...

வர வர இவர் பன்றது எல்லாமே ரொம்ப எரிச்சலா இருக்கு.

ஏற்கனவே தமிழில் பேர் வைத்தால் வரி விலக்கு ஒரு சட்டம் போட்டார்,இதனால நுழைவு சீட்டு கட்டணம் ஏதவது குறைந்ததானா அதுவும் இல்லை. சரி தியேட்டரையும் அட்லிஸ்ட் கழிப்பிடத்தையாவது ஒழுங்கா வச்சுக்கிறாங்கல அதுவும் இல்லை பின்ன என்ன ம... இவங்களுக்கு வரி விலக்கு.

ஒரு படம் ஹிட் ஆனாலே நடிகர்,நடிகை,இயக்குனர் எல்லாருடைய சம்பளமும் கோடியை தாண்டிவிடுகிறது. இவர்கள் கொழுப்பெடுத்து 20 கோடி 30 கோடி செலவு செய்வார்கள் அந்த படம் தியேட்டர்ல வந்தா நூறு இருநூறுனு கொள்ளை அடிப்பாங்களாம் ஆனா நம்ம யாரும் திருட்டு வி.சி.டில படம் பாக்க கூடாதாம்.

ஒரு குடும்பம் நகரத்தில் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து திரும்பி வர குறைந்தது 400 ருபாய் செலவாகும். முவாயிரம் ருபாய் சம்பளம் வாங்குறவன் வேற என்ன பண்ணுவான் 30 ருபா கொடுத்து திருட்டு விசிடி தான் வாங்குவான், இதுல என்ன தப்பு.

அப்புறம் இரண்டு ருபாய் அரிசி, இதில் பாதிக்கு மேல் பக்கத்து மாநிலத்திற்கு கடத்த படுகிறது.

இப்போதெல்லாம் விவசாய கூலிகள் கிடைப்பது குதிரை கொம்பாகி விட்டது, இருபது ருபாய்க்கு அரிசி வாங்கி விட்ல போட்டுட்டு யாரும் வேலைக்கு வருவதே இல்லை.

மாதத்தில் பாதி நாள் தான் வேலைக்கு வருவார்கள் அந்த வருமானமும் டாஸ்மாகுதான் போகும்,

அப்புறம் இலவச கலர் டிவி, குடிதண்ணீர் project கு ஜப்பான்ல இருந்து கடன், ஆனா கலர் டிவிக்கு நம்ம கஜானா.

ஏதோ அவரோட சொந்த கஜானால இருந்து எடுத்து கொடுக்குற மாதிரி வெட்டி செலவு செஞ்சிட்டு இருக்காரு.

 
On Tue Jul 08, 08:45:00 PM GMT+8 , Anonymous said...

உங்கள் தமிழ் நடை அருமை. உங்கள் கேள்விகளில் அனல். பார்த்துங்க, ஆட்டோ வந்துட போவுது. சிங்கப்பூரில இருக்கதால தப்பிச்சீங்க போங்க.

 
On Wed Jul 09, 03:02:00 PM GMT+8 , Anonymous said...

Paul oru yosanai. why not your page be a full time regular agapurva critising and appreciation of a govt policies. thelivu iruku, nadai iruku, tholai thura parvaiyum iruku..

 
On Wed Jul 09, 04:47:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் அனைவருக்கும் நன்றிகள்.

சிவ சங்கர் அவர்கள் சொல்லியுள்ளது யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.ஆனால் இன்றளவில் தமிழகத்தில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு உள்ள அரசியல் கட்சிகளையெல்லாம் நோக்கினால் அவற்றில் மதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் தவிர மற்ற எல்லா கட்சிகளும் திரைத்துறையில் வந்தவர்களால் தான் நிறைந்துள்ளது.

அதிலும் தற்போதுதான் விசயகாந்த், சரத்குமார், கார்த்திக் என மூன்று நடிகர்களும் கட்சி ஆரம்பித்துள்ளனர். மேலும் பிரபு வேறு அரசியலுக்கு வருவார் என கட்டியம்கூற ஆரம்பித்துவிட்டனர்.
விஜய் வேறு மன்றக்கொடியெல்லாம் அறிமுகப்படுத்திவிட்டார்.

இப்படி திரைத்துறையை விட்டால் அடுத்து அரசியல் கட்சிகளாவது சாதி சங்கங்கள் தான். இப்படியே போனால் என்ன ஆகும் என்று தெரியவில்லை.

மக்களுக்கு சேவை செய்யத்தான் அரசியல் என்ற நிலை போய், பதவியை பிடிக்க வேண்டும், நன்கு சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள்தான் அதிகமாகின்றனர்.
அரசியல் இப்போது மிக அதிகளவில் முதலீடு செய்து ஆரம்பிக்கப்படும் தொழிலாகிவிட்டது தான் நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் போக மிகப்பெரிய காரணம்.

 
On Wed Jul 09, 05:11:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@Bleachingpowder
எனது முந்தைய பதிவுகளான கலைஞருக்கு கேள்விகள், லக்கி லுக் மற்றும் அபி அப்பா ஆகியோருக்கான பதில்கள் போன்ற பதிவுகளை படியுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அத்தனையும் அதில் இடம்பெற்றுள்ளன.

 
On Wed Jul 09, 05:14:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

@3rdeye,
உங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே, கட்டாயம் நல்லதை பாரட்டவும், தீயதை எழுதவும் தயங்க மாட்டேன். ஆனால் அதை மட்டுமே எழுதினால் நன்றாக இருக்காது. அதுவும் இருக்கும்.

 
On Wed Jul 09, 08:22:00 PM GMT+8 , Gnaniyar @ நிலவு நண்பன் said...

நியாயமான கேள்வி நண்பா...

பேசாமல் ஒவ்வொரு நடிகரையும் வரவழைத்து மந்திரிகளாகவும் எம்எல்ஏக்களாகவும் ஆக்கலாம். :)

என்ளு தணியுமோ இந்த சினிமா மோகம்?

 
On Thu Jul 10, 12:03:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாருங்கள் ஞானியாரே, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்வதுபோல் செய்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
சினிமாவில் விசயகாந்த் தீவிரவாதிகளை பந்தாடுகின்றார் என்றால், அவர் ஆட்சிக்கு வந்தாலும் அப்படித்தான் செய்வார் என்று நம்பும் மக்கள் இருக்கும் வரை நம்மவர்களை திருத்தவே முடியாது. நிழல் வேறு, நிஜம் வேறு என்று இவர்கள் என்று புரிந்துகொள்வார்களோ?

 
On Fri Jul 11, 03:18:00 AM GMT+8 , காழியன் said...

மாரனேரி, இப்படி எல்லாம் கேள்வி கேட்டிங்கன்னா உங்கள எதிரியா வச்சி முரசொலில ஒரு கவிதை வரும்.

"உடன் பிறப்பே
நல்லதை தடுக்க
நடமாடுது நரிக்கூட்டம்"-ன்னு

இல்லேன்னா, "அந்த மாநிலத்த பாரு, இந்த மாநிலத்த பாரு,
அத விட இது குறைவுதான்" அப்படின்னு புள்ளி விவரம் வரும்.

 
On Sat Jul 12, 02:46:00 AM GMT+8 , யாத்ரீகன் said...

Udanpirapu-nu oru blogpost iruku paarunga anga kaetu paarunga .. sappai kattu katama avungalaavadhu solraangalaa-nu paarpom..

 
On Sun Jul 13, 02:30:00 AM GMT+8 , thenkasi said...

உங்கள் ஆதங்கம் நியாயம் தான்.
சினிமாவுக்கு அள்ளி கொடுக்கும் தலைவர் கொஞ்சம் நாடகததுக்கும் கொடுக்காலாம் என்பது நலிந்து கொண்டிருக்கும் நாடகத் துறையினரின்
ஏக்கம்.

இயல் இசை நாடகம் மூன்றும் சேர்ந்ததது தானே தமிழ்

//Kanchana Radhakrishnan said...
டோண்டு சார்..நீங்கள் அனுப்பிவைத்த தென்காசியின் கேள்விக்கான பதிலை தனி பதிவாகவே போட்டுள்ளேன்.
http://tvrk.blogspot.com
நன்றி

 
On Mon Jul 28, 07:28:00 PM GMT+8 , Raman Kutty said...

Where all our Abi appa and One MBA Gold medalist had gone, they would have some reply.. without logic.. as they given to your previous blogs...

 
On Sun Aug 24, 02:36:00 PM GMT+8 , கிரி said...

நியாயமான ஆதங்கம் தான்.

திரைப்படங்களுக்கு இத்தனை சலுகை தேவை இல்லை என்பது என் கருத்து. இந்த சலுகைகளை தவறான முறையில் பயன்படுத்துவர்களே அதிகம்.

தமிழ் பெயர் வைக்கிறவர்களுக்கு வரி இல்லாமல் செய்வதற்கு பதிலாக, தமிழ் பெயர் வைக்காமல் இருப்பவர்களுக்கு வரி என்று வைத்தால் எவ்வளோ நல்லா இருக்கும்.

 
On Sun Aug 24, 03:35:00 PM GMT+8 , Mahesh said...

நல்ல கேள்வி நண்பரே... ஆனா பதில் கிடைக்காத மற்ற பல நூறு கேள்விகள்ல இதுவும் ஒண்ணு.... நீங்க சொல்ற அந்த் லிஸ்டுல சில 'ஏ' சர்டிஃபிகேட் வாங்கின படங்கள் கூட இருக்குன்னு சொல்றாங்க. உண்மையான்னு தெரியல.

4 வருசம் முன்னாடி, நான் எங்க ஊரு நகராட்சி பள்ளிக்காக 2 லட்சம் பேரு கிட்ட கையெழுத்து வாங்கி அனுபிச்சேன். செலவும் ஒண்ணும் பெரிசு இல்ல. 15 லட்சத்துக்குள்ளதான். ஆனா அதுக்கே எஙக் தொகுதி எம்.எல்.ஏ சொன்னதை இங்க எழுத முடியாது.

 
On Sun Aug 24, 03:36:00 PM GMT+8 , Mahesh said...

நல்ல கேள்வி நண்பரே... ஆனா பதில் கிடைக்காத மற்ற பல நூறு கேள்விகள்ல இதுவும் ஒண்ணு.... நீங்க சொல்ற அந்த் லிஸ்டுல சில 'ஏ' சர்டிஃபிகேட் வாங்கின படங்கள் கூட இருக்குன்னு சொல்றாங்க. உண்மையான்னு தெரியல.

4 வருசம் முன்னாடி, நான் எங்க ஊரு நகராட்சி பள்ளிக்காக 2 லட்சம் பேரு கிட்ட கையெழுத்து வாங்கி அனுபிச்சேன். செலவும் ஒண்ணும் பெரிசு இல்ல. 15 லட்சத்துக்குள்ளதான். ஆனா அதுக்கே எஙக் தொகுதி எம்.எல்.ஏ சொன்னதை இங்க எழுத முடியாது.

 
On Sun Aug 24, 04:52:00 PM GMT+8 , கயல்விழி said...

ஜோசப் பால்ராஜ்

முதலில் உங்களுடைய பதிவுகள் அனைத்தும் தகவல்கள் நிறைந்ததாகவும், முக்கிய சமுதாயப்பிரச்சினைகளை அலசுவதாகவும் இருக்கிறது, அதற்காக பாராட்டுக்கள்.

 
On Sun Aug 24, 04:57:00 PM GMT+8 , கயல்விழி said...

அடுத்து, திரைப்படத்துறையினரை தொடர்ந்து பாப்புலாட்டிக்கு மட்டும் மயங்கி ஓட்டுப்போட்டு வந்த பலனை தமிழக மக்கள் அனுபவிக்கிறார்கள், வேறொன்றுமில்லை.
ஜெ வந்தாலும் கருணாநிதி வந்தாலும் தொடர்ந்து திரைப்பட துறையினருக்கே தொடர்ந்து சலுகைகளை வாரி வழங்குவார்கள், அதில் நமக்கு சந்தேகமே வர தேவை இல்லை.

மக்களின் வாழ்வாதாரப்பிரச்சினைகளான கல்வி, உணவு, சுகாதாரம் போன்றவற்றை பின் தள்ளும் அளவுக்கு திரைப்படம் நமக்கு முக்கியமாகி விட்டது.

என்னுடைய ப்ளாகில் நான் பார்த்த வரையில், தங்களைப்பற்றி சொன்னாலும் பொறுத்துக்கொள்ளுகிறார்களே தவிர, தங்கள் அபிமான நடிகனைப்பற்றி சொன்னால் தாங்க முடிவதில்லை.

 
On Sun Aug 24, 06:30:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க மகேஷ்,
சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு அப்டிங்கிற படம் ஒரு 'ஏ' சான்றித‌ழ் பெற்ற‌ப் ப‌ட‌ம். இப்ப‌டி ஒரு ப‌ட‌த்திற்கு எப்ப‌டி உத‌வித் தொகை வ‌ழ‌ங்குகின்றார்க‌ள் என்று தெரிய‌வில்லை.

 
On Sun Aug 24, 06:38:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வாங்க கயல்.
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

நீங்கள் சொல்வது மிகச் சரிதான். தங்கள் அபிமான திரை நட்சத்திரங்களை மட்டுமல்ல, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியினர் மீதும் எந்த விமர்சனங்களையும் நம்மவர்கள் தாங்கிக் கொள்வதில்லை. என் முந்தைய அரசியல் பதிவுகளை படித்துப்பாருங்கள். உங்களுக்கே இது புரியும். நாமெல்லாம் இப்படியே இருப்பதால்தான் அரசியல்வாதிகளும், நடிகர்களும் நம்மை ஆண்டுகொண்டு இருக்கின்றார்கள். என்று திருந்துவோம் என்றுதான் தெரியவில்லை.

 
On Sun Aug 24, 07:32:00 PM GMT+8 , வடுவூர் குமார் said...

இந்த பதிவை பார்க்கும் போது திரு ராமதாஸ் சொன்னதாக ஒரு செய்தியை படித்த ஞாபகம் வருகிறது
சாராய வியாபாரத்தை அரசாங்கம் செய்கிறது
கல்வியை தனியார் செய்கிறது.

சினிமா தொழில் நலிவடைந்து போகாமல் இருக்க இது ஊக்கத்தொகையாகத் தான் கொடுக்கிறார்கள்.இதை வேறு துறைக்கு திருப்பி விடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை (கொடுக்க ஆரம்பித்த பிறகு ஒன்றும் சொல்வதிற்கில்லை).கல்விக்கு பணம் போதவில்லை என்றால் மேலும் அதிகமாக ஒதுக்கலாம்.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க