நாகப்பட்டிணம் ஆற்காடுபுரத்தை சேர்ந்த 2 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
நாகை ஆற்காடுபுரத்திலிருந்து, மீன் பிடிப்பதற்காக வாசகன், நாராயணசாமி மற்றும் முரளி ஆகியோர் தான் இலங்கை படையினரால் சுடப்பட்டு முரளி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வாசகன், நாராயண சாமி இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
செத்தது தமிழர்கள் தானே? இவர்கள் என்ன தீவிரவாதிகளா? இவர்களுக்கும் முதல்வர் கருணாநிதி தானே? என்ன செய்யப்போகின்றீர்கள் இதற்கும் ?
இங்கு சாகும் நம்மவர்களை பற்றி கவலைப்பட நமது முதல்வருக்கு எங்கே நேரம் இருக்கும்? அவருக்கு தான் பல கவலைகள் இருக்குமே? இதை கேட்டால் அவர் என்ன துப்பாக்கியை தூக்கிக்கொண்டா போய் சண்டை போட முடியும் என்று அண்ணண் லக்கிலுக், அபி அப்பா போன்றோர் கேட்பார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதே சட்ட விரோதம் என்று அறிவிக்கச்சொல்லுங்கள். கடலில் இறங்கினால் நாங்களே சுடுவோம் என அறிவியுங்கள். செத்தாலும் இந்தியப் படையினரால் சுடப்பட்டு இறந்தோம் என்ற பெருமையாவது கிடைக்கட்டும் எங்கள் இந்திய மீனவர்களுக்கு.
ஏன் நம் நாட்டுக்கு கீழே கையகலமே உள்ள ஒரு நாட்டின் கடற்படையால் சுடப்பட்டு சாகணும்?
தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்தே பிரித்துவிட்டார்களா என்ன ? தமிழன் செத்தால் இந்தியா கண்டுகொள்ளாதா?
ஈழத்தமிழர்களை மட்டுமல்ல, தமிழகத்தின் தமிழர்களை இலங்கைப்படை கொல்வதில் இருந்து காப்பாற்றமுடியவில்லை என்றால் இவர்களால் நமக்கு என்ன பயன்?
இத்தனை தமிழர்களை கொன்ற சிங்கள கடற்படையைப் பார்த்து இதுவரை ஒரு எச்சரிக்கை குண்டையாவது சுட்டிருக்கின்றதா பிராந்திய வல்லரசு நாடான இந்தியாவின் கடற்படை?
இனியும் எங்கள் கைகள் பூப்பறித்துக்கொண்டு இருக்காது என்று சட்டசபையில் அறிவித்த முதல்வர் இப்போது என்ன செய்யப்போகின்றார்? கடிதம் எழுதுவதைத் தவிர ?
இதுவரை எத்தனை மீனவர்களை கொன்றுள்ளது அந்த கேடுகெட்ட சிங்களப்படை? இதுவரை எத்தனை கடிதம் எழுதியுள்ளீர்கள்? அத்தனை கடிதங்களுக்கும் ஒரு பதில் கடிதாமாவது வந்துள்ளதா?
கலைஞரின் கடிதங்களாவது பிரதமரை சென்றடைகின்றதா? இல்லை அத்தனையும் குப்பை கூடைக்களுக்குத்தான் செல்கின்றதா?

7 comments:
I salute your anger Paul. All your posts shows your care on common people. especially your patriotism is much appreciated.
I wonder how our government is blindly accepting whatever srilanka doing. Its not fair to leave our fishermen to die like this. center should take firm steps on this.
நண்பரே உங்களின் நியாயமான கோபத்தில் நானும் பங்குகொள்கிறேன். உங்களின் பதிவுகள் அனைத்தும் அரசின் முட்டாள்தனத்தை கடுமையாக கண்டிக்கின்றன. இந்தியாவில் உயிர்களுக்கு மதிப்பில்லை என்பது மிகப்பெரிய உண்மை.
கலைஞர் என்னங்க செய்யுவாரு.அவருக்கு இப்ப இருக்க கவலை பாமகவ ஒழிக்கணும். குடும்பத்த காப்பாத்தனும். இதுல எங்கயோ சாவுறவங்களப்பத்தியா கவலைப்பட போறாரு?
இந்திய கடற்படைக்கு இலங்கை கடற்படை சுடுவதுகூட தெரியாதா? அவர்கள் என்ன செய்கின்றார்கள்? நீங்கள் வேறு கலைஞரையே அடிக்கடி கேள்வி கேட்கின்றீர்கள். உடன்பிறப்புக்கள் கோபப்பட போகின்றார்கள் பாருங்கள். அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க ஆள் இருக்கின்றார்கள். இப்போது அவர் ஒன்றும் செய்யாமல் இருப்பதையும் நியாப்படுத்துவார்கள்.
துப்புகெட்ட தமிழ்நாட்டுத் தமிழன்
pesi pesiyea , vera vasanam pesiyea kallathai pokuvan tamilan.
Why not you make this post to media ? just dont stop with this post sent the same to some media may be NDTV may be your intiation will make a cover story by them . May be it gives a awarness. media is powerful esp with visuals and live interviews.
தங்களுடைய ஆக்ரோஷத்தில் நானும் பங்கு கொள்கிறேன்!!!!
சில ஆண்டுகளுக்கு முன் 3 australians இலங்கையில் காணாமல் போய்விட அவர்களை கண்டுபிடிக்க அந்த நாட்டு அரசாங்கம் இலங்கையை கண்ணில் விரலை விட்டு ஆட்டியது...நம்மிடம் நாம் அதனை பகைத்துக்கொண்டால் அது உடனே பாகிஸ்தானுடனோ, சீனாவுடனோ சேர்ந்துகொள்ளும் என்பதே நம் ஆட்சியாளர்களின் பயம். அதனால் தான் இலங்கையை கண்டிக்க கூட முடியாமல் இருகிறார்கள்.