Author: ஜோசப் பால்ராஜ்
•5:21 PM
விகடன் இணையத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைக் குறித்த கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்படுகின்றது.


ஞாயிற்றுக்கிழமை (27.07.2008) இந்திய நேரம் மதியம் 12 மணிக்குள் வாக்களிக்க வேண்டும்.

12 கேள்விகளை கொண்ட இக்கருத்துக்கணிப்பில் எல்லோரும் பெருமளவில் கலந்துகொண்டு உங்களது நிலைப்பாட்டைத் தெரிவியுங்கள்.

விகடனின் இந்த முயற்சி கட்டாயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இன்னும் கொஞ்சம் விரிவான கேள்விகளை கொண்டு இந்த கருத்துக்கணிப்பை செய்திருக்கலாம் என்றாலும், ஒன்றுமே செய்யாதவர்களுக்கு மத்தியில் இதையாவது செய்தார்களே என்று மகிழ வேண்டியிருக்கின்றது.

விகடன் இணையத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளவர்களில் பலர் ராஜிவ் கொலையோடு மட்டும் விடுதலைபுலிகளை தொடர்பு படுத்தி பார்க்கின்றார்கள்.
சீக்கியர்களின் புனித தலத்தினுள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த போது, ராணுவத்தை அனுப்பி கொன்றதற்காக, இந்திரகாந்தி அம்மையாரை அவரது மெய்பாதுகாவலர் பணியில் இருந்த சீக்கியர்களே சுட்டுக்கொன்ற போது காங்கிரஸ் கட்சியின் சார்பாகவே பல வன்முறைகள் சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டன. தனது தாயாரின் மறைவை ஒட்டி நடந்த வன்முறைகளை குறித்து ராஜிவ் கூறிய கருத்து என்ன தெரியுமா? ஒரு பெரிய மரம் சாயும் போது ஒரு சில அதிர்வுகள் நிகழ்வதை தவிர்க்க இயலாது என்பதுதான் அது.

ஆனால் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றதும் இந்திராவின் மறைவிற்கு பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைகளுக்காக சீக்கிய மக்களிடம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்னிப்பு கேட்டார்.

ஆனால் ஈழத் தமிழர்களின் போராட்டத்தில் போராடும் தமிழர்களை கலந்து ஆலோசிக்காமலேயே தமிழர்கள் சார்பாக தானே சென்று ஒரு ஒப்பந்தத்தை இலங்கை அரசுடன் செய்தது, தமிழ் மக்களை காக்க என சென்ற அமைதிப்படையே தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசின் படையாக மாறி செய்த கொடூரங்களுக்கெல்லாம் இதுவரை ஒரு மன்னிப்புக்கூட யாராலும் கேட்கப்படவில்லையே ? மன்னிப்பு கேட்க தமிழன் பிரதமாராக வேண்டுமா? அப்படியே தமிழன் பிரதமரானாலும் மன்னிப்பு கேட்பானா?

ராஜிவ் கொலை என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் ஈழப்பிரச்சனையை அணுகுவது தவறு. அல்லல்படும் ஈழ மக்களின் பிரச்ச‌னைகளை தீர்க்க என்ன செய்வது என்று பார்க்க வேண்டும்.

இன்னும் சிலர் கூறியிருந்த கருத்து , ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளேயே தீர்வு காண்பதைத் தான் நாம் ஆதரிக்க வேண்டும். தனி ஈழம் அமைவதை ஆதரித்தால் நம் நாடு சிதறிவிடும் என்கின்றார்கள். காஷ்மீர் பிரிவினை வாதம் என்பது காஷ்மீர் மக்களால் நடத்தப்படுவதில்லை. அது அந்நிய நாட்டின் தூண்டுதலால் நடத்தப்படும் தீவிரவாதம், இந்திய அரசோ அல்லது இந்திய மக்களோ காஷ்மீர் மக்களை இழிவுபடுத்தவில்லை. சொல்லப் போனால் பிற பகுதி மக்களுக்கு இல்லாத பல சலுகைகள் காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு, நல்ல விதமாகத்தான் நடத்தப்படுகின்றார்கள். இது முழுக்க முழுக்க அந்நிய நாட்டு சதி.
ஆனால் ஈழத்தில் நடப்பது என்ன ? அங்கு போராடும் தமிழர்கள் மொழியால் நம்மோடு ஒன்றுபட்டிருந்தாலும், அவர்களும் இலங்கை தேசத்தவர்களே. பல்வேறு வகையிலும் சிங்களவர்களால் துன்புறுத்தப்பட்டு, அமைதியான வழியில் போராடி, எந்த பலனும் இன்றி கடைசியாக அவர்கள் கையிலெடுத்தது தான் ஆயுதப் போராட்டம். ஒருங்கிணைந்த‌ இல‌ங்கைக்குள் எந்த‌ தீர்வும் காண‌ முடியாது என்ப‌தால்தான் தானே த‌னிநாட்டு போராட்ட‌ம் ந‌ட‌த்துகின்றார்க‌ள்?
எல்லோரும் ச‌ற்று யோசித்து பார்த்தால் ச‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தில் உள்ள‌ நியாய‌ம் தெரியும். ஆனால் ந‌ம் த‌மிழ‌க மீன‌வ‌ர்க‌ள் சிங்க‌ள‌ப்ப‌டைக‌ளால் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கே, வெறும் க‌டித‌மும் உண்ணாவிர‌த‌மும் தான் என்ற‌ நிலையில் இருக்கும் நம் அரசியல்வாதிகள்,ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் போராட்ட‌த்தையா க‌ண்டுகொள்வார்க‌ள் ?
ம‌க்க‌ளின் ம‌ன‌தில் முத‌லில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும்.
உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை பின்னூட்ட‌மிடுங்க‌ள். அது என் நிலைக்கு எதிரான‌ நிலையாக‌ இருந்தாலும் , உங்க‌ள் க‌ருத்துரிமையை நான் க‌ட்டாய‌ம் ம‌திப்பேன். ஆரேக்கிய‌மான‌ விவாத‌ம் வ‌ர‌வேற்க‌ப்ப‌டுகின்ற‌து.

Udanz
This entry was posted on 5:21 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 comments:

On Fri Jul 25, 07:21:00 PM GMT+8 , Anonymous said...

ஜோண்ணா, நல்ல முடிவு வரும் என நம்புவோம்

 
On Fri Jul 25, 08:22:00 PM GMT+8 , rayan said...

தனி தமிழ் ஈழம் ஒன்றே தீர்வு....யாரயும் நம்பி ஒரு பயன் இல்லை...உலக தமிழ் மக்கள் ஒரே குரலில் இலங்கை அரசை எதிர்த்து போராடவேண்டும்.... கண்டனம் செல்லுத்த வேண்டும்

 
On Fri Jul 25, 08:30:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

வெள்ளைக்காரன் இங்க செஞ்ச வேலையை சிங்கள அரசு இன்று அங்கு செய்து கொண்டு இருக்கின்றது.அங்குள்ள அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தாய்மொழி தமிழ். ஆனால் தமிழர்கள் என்ற ஓரே குடையில் இரு மதத்தவர் இணக்கமாக,ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்று விவரமாக பிரித்து வைத்து இருக்கிறது சிங்கள அரசு.

 
On Fri Jul 25, 09:29:00 PM GMT+8 , tamil said...

ஈழத்தமிழன் ரூபன்
நல்ல முடிவு வரும் என நம்புவோம்

 
On Fri Jul 25, 09:30:00 PM GMT+8 , Saravana said...

நன்றி சகோதரா உங்களின் தமிழுணர்விற்கு நான் முன்னாள் அமைதிப்படை பொருப்பாளரும் இன்றைய இரானுவ பொறியியல் கல்லூரி அலோசகருமான ஒரு வரிடமும் இன்னும் சில அரசு அதிகாரிகள், தமிழ் சான்றோர்களிடம் ஈழத்தின் தீர்வு பற்றி கலந்துரையாடல் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
விரைவில் அதற்கான அறிவிப்பை உங்களுக்கு வெளியிடுவேன்

 
On Fri Jul 25, 11:01:00 PM GMT+8 , Known Stranger said...

Survival instinct will certainly find the surviving tamil cylones to what they want. Namaku minjinathuku appuram than dhana dharmam. Ellam irukatum mothalla nama tamil natu meenavarkal kolla paduvathai thaduka enna vazhi. one step at a time. Let us get to the center of the cirle later. First let india bothe about the circumferntial issue pretaining with the indian fisherman. once that resolved the gates for other things will open. let then the voice to give a voice towards the suffering of Indian origin srilankan origin come to picture.

oru chena athangam enaku undu.. Indian born indiansu oru adayalam yen ezha tamilarkal edukalla.. all need marketing stunts in the world of todays captialism and globalisation. Right marketing will fetch the sales. Nan sales allu pa.. enaku emotionsyea mulam pusi jegina oti than market panna yosika thonum.

evalo nalliku than en sagothara tamilarkal pesikitu irupangaloo.. onu satham podanum pota thirumbi parkanum govt ellati thirumpi pakka vekara mathiri seiyanum

ada pongapa.. tamilan chuma pesiketay than irupan vellaiku aga matan..

nanum tamilan than.. pesiketay than irupen.. inum 1000 varusam annalum anantha vikatan oru karuthu kanipu podum appor oru puthu paul rajum ithay mathiri oru post poduvaru - ithay mathiri oru vaishnav aluthukitu pongada nengalum unga tamil patrum thituvan .

 
On Sat Jul 26, 12:29:00 AM GMT+8 , Anonymous said...

இலங்கையும் இந்தியாவும் வேறு வேறு நாடுகள். இந்தியர்களுக்கு அடித்துக்கொள்வார்கள், தேசம் என்று வந்தால் ஒற்றுமையாகி விடுவார்கள். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழ் பேசினால் அவர்கள் ஒரே இனமாக ஆகிவிட முடியாது. பாகிஸ்தானிலும் இந்தி பேசுகிறார்கள் என்பதற்காக இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை விட்டுவிட முடியுமா என்ன?

ராஜீவை கொன்றவர்கள் தமிழக தமிழர்கள் அல்ல வெளிநாட்டவர் என்பதை மனதில் கொள்ளவும்.

 
On Sat Jul 26, 11:03:00 PM GMT+8 , Anonymous said...

அஹ் ஹா வாங சாரே எந்தே ஓஓம் நமோ நாராயனாவின்டே பாசன் கேட்டுள்ளீரோ, அஹ்டே நான் எந்த பறையுதென்றே ஈ வங்காளி வங்காளி என்றோர் குலமுண்டு அதுதானாகபட்டது பங்களாதேஸ் வங்காளி பட்சே இந்திய வங்காளி ஈ ஆளுக இந்தியாவிட கள்ளத்தனமாக வந்த வங்கதேச வங்காளிக்கு சங்கம் அமைச்சு கொல்கத்தவிலே போராட்டம் நடத்துகிறது.
இதற்கு அவிட (வெஸ்ட் பெங்கால்) உள்ள அத்தனை கட்சிகளும் ஆதரின்னினும்( அது சி பி எம் ஆனாலும் சரி, மம்தாவினது ஆனாலும் சரி, ஜன்மபகையான பீ ஜே பி ஆனாலும் ஈ வங்கதேச தஞ்சம் புகுந்தோர் விடயத்தல் சங்கமம். அதே


இன்னோன்னு சமீபத்தில் பிராண்சினுள்ள அந்த நாட்டு குடியுரிமை கொண்ட ஒரு பஞ்சாபி மானவருடைய குடுமியை வெட்ட சொன்ன பிரண்சு அரசாங்கத்தை எதிர்த்து மும்பை டில்லி என இந்தியாவில் உள்ள அத்தனை பிரன்ஸு கன்சுலேட் மற்றும் தூரக அலுவலகத்தைல் த‌ஹ்ர்னா நடத்தி பிரென்சு பஞ்சாபியருக்கு ஆதரவு தெரிவிப்பது இந்தியாவில் மற்றாவாளுக்கு ஒட்டினால் இரத்தம் தமிழனுக்கும் மட்டும் சாக்கடை

இந்திரா காந்தியை கொன்ற பஞ்சாபியரை பிரதமர் பதவியில் வைத்து கொண்டடுகிறது .

அதெல்லாம் இருக்கட்டும் இராஜீவ் காந்தியை அந்நியன் தான் கொன்றான் என்று இது வரை ந்த ஒரு முடியும் இந்திய நீதிமன்றங்களால் தீர்ப்பு வரவில்லை .

சென்ற மாதம் இராகுல் காந்தியில் பெங்களூரு பேச்சில் ஒரே ஒரு வரி எனது தந்தை சில சுய நலவாதிகளால் பழிவாங்க பட்டார். என்று

(இராஜீவ் 1989 ல் சுய நல வாதி என்று ஒரு சிலரை குறிபிட்டார் அதில் பிரபல சாமியார் சில அரசியல் வாதிகள் என்று ஒரு லிஸ்டே போட்டாரதில் அந்நிய நாட்டுக்காரர் பெயர் எதையும் குறிபிடலில்லை

இன்னும் கூட சிபிஐ தானூ யார் ? குண்டு வெடிப்பில் பயன்படுத்த பட்ட பெல்ட் எங்கிருந்து வந்ததென்று கண்டறியவில்லை.

என்ன சேய்ய தமிழனுக்கு வந்த சாபம் தனக்குள்ளே அடித்து கொள்ளவேண்டுமென்று

 
On Thu Jul 31, 04:29:00 AM GMT+8 , கயல்விழி said...

நல்ல கட்டுரை, ஆழமான கருத்துக்கள். ஈழமக்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். ஆனால் விகடன் கருத்துக்கணிப்பு எவ்வகையில் உதவும் என்று புரியவில்லை. மக்கள் என்ன நினைத்தாலும், தற்போது ஈழ - இலங்கை விஷயம் முழுக்க முழுக்க அரசியலாகிவிட்டது.எடுக்கப்படும் எந்த முடிவும் அரசியல் சார்பாகவே இருக்குமே தவிர, ஈழப்பிரச்சினைக்கு தீர்வாக இருக்காது என்று நினைக்கிறேன்.

 
On Thu Jul 31, 08:46:00 PM GMT+8 , Anonymous said...

இலங்கை பற்றிய உங்கள் பார்வை மிகவும் அருமை

 
On Thu Jul 31, 08:49:00 PM GMT+8 , Anonymous said...

இலங்கை பற்றிய உங்கள் பார்வை மிகவும் அருமை

 
On Thu Jul 31, 10:15:00 PM GMT+8 , Anonymous said...

//இலங்கையும் இந்தியாவும் வேறு வேறு நாடுகள். இந்தியர்களுக்கு அடித்துக்கொள்வார்கள், தேசம் என்று வந்தால் ஒற்றுமையாகி விடுவார்கள். தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தமிழ் பேசினால் அவர்கள் ஒரே இனமாக ஆகிவிட முடியாது. பாகிஸ்தானிலும் இந்தி பேசுகிறார்கள் என்பதற்காக இந்தியாவிற்கு எதிராக செயல்படுபவர்களை விட்டுவிட முடியுமா என்ன?

ராஜீவை கொன்றவர்கள் தமிழக தமிழர்கள் அல்ல வெளிநாட்டவர் என்பதை மனதில் கொள்ளவும்//

நல்லாச் சொன்னீங்க!

நாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள்,நீங்க மூடிகிட்டு போங்க என இந்தியாவைப் பார்த்து சொன்னவர்கள் தானே இவர்கள்!

இவங்க ஏற்கனவே செஞ்ச மாதிரி ஒண்ணாக் கூடி நம்க்கு ஆப்பு வைக்க மாட்டங்கன்னு என்ன நிச்சயம்.

பிரபாகரன் சொன்னா மாதிரி நாம் அவர்களுக்கு அன்னியர்தாம். சகோதரகள் தங்களுக்கு அடிச்சிகிட்டு ஒரு முடிவுக்கு வரட்டும். நாம் நம் நலன்களை காத்துக் கொள்வதோடு நிறுத்துவது நல்லது.

 
On Fri Aug 01, 02:40:00 PM GMT+8 , தேவன் said...

நன்றி தமிழக உறவே உங்கள் கண்ணோட்டம் அருமை! தமிழுக்கு மதிப்புக் தராத அரசுக்கு காவடி எடுப்பவன் உடம்பில் சாக்டைதான் ஓடவேண்டும்!

 
On Fri Aug 01, 08:48:00 PM GMT+8 , சுந்தரவடிவேல் said...

//ராஜிவ் கொலை என்ற ஒரே கண்ணோட்டத்தில் மட்டும் ஈழப்பிரச்சனையை அணுகுவது தவறு. //
ராஜிவ் என்ற ஒரு அரசியல்வாதியின் கொலைய (அதிலும் இவர்கள்தான் செய்தார்கள் என்று நிரூபிக்கப்படாதவொரு அரசியல் கொலையை) மட்டும் வைத்து இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் மனிதாபிமானம் இல்லாதது. ராஜிவின் மரணத்தைத் தங்களது அரசியல் சுய லாபங்களுக்காகப் பொய்ப் பரப்புரை செய்யும் எந்தச் சாதியும், சனமும், சங்கமும் மனித நேயத்தை மதிக்காதது.

 
On Fri Aug 01, 11:11:00 PM GMT+8 , Anonymous said...

60 % விகித‌ ம‌க்க‌ள் ஈழ‌த்தையும் , புலிக‌ளையும் ஏற்று கொண்ட‌ன‌ர். இத‌ன் தாக்க‌ம் வ‌ரும் வ‌ருட‌ங்க‌ளில் தேர்த‌லில் க‌ண்டிப்பாக‌ தெரியும்.
த‌ம்பிக்கு ஆஸ்தான‌ அமைச்ச‌ன் நான் தான் என்பார் ஒருவ‌ர். என‌ உட‌ன் பிற‌வா ச‌கோத‌ரா என்பார் ஒருவ‌ர். என‌து ம‌க‌னுக்கு பிர‌பாக‌ர‌ன் பெய‌ர் வைத்த‌வ‌ன் தான் நான் இது ஒன்றே போதும் என்பார் ம‌ற்றோருவர்.

 
On Fri Aug 01, 11:48:00 PM GMT+8 , ராம் said...

நல்ல செய்தி!

ஈழம் விரைவில் மலரட்டும் !

 
On Sat Aug 02, 12:44:00 AM GMT+8 , தீலிபன் said...

உண்மையில் உங்கள் பதிவை இப்போது தான் படிக்கிறேன், இல்லை என்றால் நானும் என் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி நானும் என் வாக்கை பதிவு செய்து இருப்பேன்.

 
On Sat Aug 02, 01:32:00 AM GMT+8 , ராஜ நடராஜன் said...

// ம‌க்க‌ளின் ம‌ன‌தில் முத‌லில் மாற்ற‌ம் ஏற்ப‌ட‌ வேண்டும்.//

நமது தார்மீக ஆதரவுக்கு மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

 
On Sat Aug 02, 01:42:00 AM GMT+8 , Anonymous said...

//ராஜிவ் என்ற ஒரு அரசியல்வாதியின் கொலைய (அதிலும் இவர்கள்தான் செய்தார்கள் என்று நிரூபிக்கப்படாதவொரு அரசியல் கொலையை) மட்டும் வைத்து இலட்சக் கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் மனிதாபிமானம் இல்லாதது.//

ஆண்டன் பாலசிங்கமே ஒப்புகிட்டாரு. இனிமேலயும் நிருபிக்கறதுன்னா என்ன பண்ணனும்?

சன் டீவில லைவா காமிசாத்தான் நம்புவிகளோ?

 
On Sat Aug 02, 01:44:00 AM GMT+8 , *** said...

விகடன் கருத்துக கணிப்பில் வேற மாதிரி ரிசல்ட் வந்திருந்தா உடனே பார்ப்பனப் பத்திரிக்கைன்னு வஞ்சிருப்பாங்க!

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க