Author: ஜோசப் பால்ராஜ்
•12:25 AM
இன்று நம் மத்திய அரசின் நிலை நமக்கு நன்கு தெரிந்ததே.

அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தமா, மத்திய அரசுக்கான இடதுசாரிகளின் ஆதரவா? எது முக்கியம் எனும் கேள்வி எழுந்த போது தற்போதைய மத்திய அரசு அணுசக்தி ஒப்பந்தம்தான் மிக முக்கியம் என்றுகருதி இன்றைய மத்திய அரசு ஆட்சியையே இழந்தாலும் பராவாயில்லை, ஆனால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் போதும் என்ற முடிவை எடுத்து, இடதுசாரிகளின் ஆதரவை இழந்து நம்பிக்கை தீர்மானத்தை சந்திக்கும் நிலையிலுள்ளது.

சிறு சிறு கட்சிகளின் ஆதரவையும் வேண்டி பல கோடிகளை கொடுத்தாவது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் உள்ளதாக செய்திகளில் வாசிக்க முடிகின்றது. ஒருமுறை கூட தொகுதிக்கே போகாமல் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கூட 25 கோடியாம்.
( மென்போருள் வல்லுநர்கள் தான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று சொல்பவர்கள் யோசிக்கவும். நாங்கள் எல்லாம் வாழ்க்கை முழுவதும் சம்பாதித்தாலும் இதுபோன்று சம்பாதிக்க முடியாதைய்யா.)

இந்நிலையில் என்னைப்போன்று அணுசக்தி குறித்த எந்த அறிவும் இல்லாத பல கோடிக்கணக்கான பாமர மக்களின் உள்ளத்தில் சில கேள்விகள் எழுகின்றன.

1) இன்றைக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் சில பகுதிகளில் யுரேனியம் இருக்கின்றது என்று செய்தி படித்தேன். மேலும் நம் நாட்டிலேயே போதுமான அளவு தேரியம் இருக்கின்றது, அதை பயன்படுத்தி அணு மின்சக்தி செய்யவும், அணு ஆயுதம் செய்யவும் நம் தேசத்து அறிவியல் ஆய்வாளர்களிடம் சொந்த தொழில்நுட்பம் இருக்கின்றது என்றும் யாம் செய்தித்தாள்களில் வாசிக்கின்றோம். பின் ஏன் பல நிபந்தனைகளுடன் கூடிய இந்த அமெரிக்க ஒப்பந்தம்? தன் பலம் தனக்கு தெரியாத அனுமன் போன்றவர்களா இந்த இந்தியர்கள் ?

2) இந்த அணு ஒப்பந்தம் வெறும் 5% மின் தேவையைத்தான் பூர்த்தி செய்யப்போகின்றது என்றும் சொல்கின்றார்கள். வெறும் 5% மின் உற்பத்திக்காக இவ்வளவு தியாகங்கள் நாம் செய்துதான் ஆக வேண்டுமா?

3) நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் அனல்மின்சக்தி இன்னும் சில ஆண்டுகளில் நிலக்கரி கிடைக்காமல் தடைப்படலாம், தற்போது ஏற்படும் பருவ மழை கோளாறுகளால் புனல் மின்சார உற்பத்தியும் தடைபடலாம் என்று சொல்கின்றீர்கள். தற்போது இருக்கும் அணுமின்சக்தி உற்பத்தி வசதிகளின் மூலம் மொத்த நாட்டின் மின் தேவையில் வெறும் 5 சதவீதத்தைத்தான் பூர்த்தி செய்ய முடியும் என்றால், ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் அனல் மற்றும் புனல் மின் சக்திகள் இல்லாதுபொனால் என்ன ஆகும் ? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சமாளிக்க என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன‌ ?

4) அணு சக்தியை கொண்டு மின் உற்பத்தி செய்யும் பிரான்சு போன்ற நாடுகள் தற்போது புதிய‌ திட்ட‌ங்க‌ள் எதையும் செய‌ல்ப‌டுத்துவ‌தில்லையே அது ஏன்?

5) பொல்லாத உங்கள் வெளியுறவு கொள்கைக்காக பல நூறு தமிழ் மீனவர்களின் உயிர்களையும், உயிர்களிடம் பேரன்பு கொண்ட பிராணிகள் நலச்சங்கத்தாரின் வழக்கிற்காக வெறிநாய்களின் கடிக்கு பல உயிர்களையும் பலி கொடுக்கும் உங்கள் ஆட்சிகளில் ( எல்லா கட்சி ஆட்சிகளும்தான்) இந்திய நாட்டில் மனித உயிர்களுக்கு எந்த மதிப்புமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கணி.

பல வருடங்களுக்கு முன்னரே வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷ்யாவிலேயே செர்னோபில் விபத்து நேர்ந்த போது, போபால் விஷவாயு விபத்திற்கே ஒழுங்கான தீர்வு காணாத நீங்கள், இப்போது அணு உலைகளை அதிகமாக்கிக்கொண்டே போனால், ஒரு வேளை செர்னோபில் விபத்து போன்ற விபத்துக்கள் நிகழாது தடுக்க நீங்கள் எடுக்கப்போகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன ?

அப்படி ஒரு விபத்து நேர்ந்தால் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து பாதிக்கப்பட்டோர்க்கு உதவிகள் வழங்கிவிட்டு, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்க பிரதமர் தலைமையில் உண்ணாவிரதம் இருப்பீர்களா ? ( இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் கருணாநிதி காட்டிய பாதை இதுதானே).

என்னுள் இருக்கும் உழவன் கேட்கின்றான், இந்த அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி, அணுமின்சக்தியும் உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், எங்களுக்கு விவசாயத்திற்கு தடையில்லாமல் மின்சாரம் கிடைத்துவிடுமா?

ஏனென்றால் தற்போது ராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எல்லோரும், அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வந்தால், அவர்களை சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, வரிவிலக்கு, தடை இல்லாத மின்சாரம் என பல சலுகைகளை கொடுக்கின்றீர்கள், ஆனால் இங்குள்ள உழவர்களையல்லவா பழிவாங்குகின்றீர்கள் , விவசாய நிலங்களை சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கையகப்படுத்துகின்றீர்கள். ஆனால் உழவர்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்தோமே என நமது இன்றைய மத்திய அரசின நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் சொல்லுவார். ஆனால் அவருக்கே தெரியும், அந்த கடன் தள்ளுபடியால் பயனடைந்தது உண்மை விவசாயிகளை விட உங்கள் கட்சியை சேர்ந்தவர்களும், உங்கள் கூட்டணி மட்டுமல்லாது எல்லா கட்சிகளையும் சேர்ந்தவர்களும் தானே பலன் அடைந்தார்கள்? உண்மையான உழவர்கள் பயனடைய அதற்கும் பல ஆயிரம் கையூட்டு கொடுக்க வேண்டியுள்ளதே?

அயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தடையில்லா மின்சாரம் வழங்கத்தான் நீங்கள் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற போகின்றீர்கள் என்றால் இதை எப்படி இந்தியாவின் 70% உள்ள உழவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் ?

என‌க்கு அணு ஆயுத‌ங்க‌ள் செய்வ‌தை அமெரிக்க‌ ஒப‌ந்த‌ம் த‌டை செய்யும் என்ப‌தில் எல்லாம் எந்த‌ கேள்வியும் இல்லை. ஏனெனில் நாம் இது வ‌ரை செய்துள்ள‌ அணுகுண்டு சோத‌னைக‌ளில் இருந்தே, ந‌ம்மை பாதுகாத்துக்கொள்ளும் அள‌வுக்கு ந‌ம்மிட‌ம் அணுச‌க்தி உள்ள‌து என்ப‌து என‌து ந‌ம்பிக்கைமட்டுமல்ல, இந்திரா காந்தி காலத்து அணுகுண்டு சோதனையையும், புத்தர் சிரித்ததையும் நம்பும் கோடானுகோடி உழவர்களின் நம்பிக்கையும் கூட‌.

மாற்று எரிசக்திக்கு பல வழிகள் இருந்தும், அதையெல்லாம் சிந்திக்க கூட மறுத்த இத்தனை காலம் ஆண்டவர்கள் இந்த அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்குமட்டும் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கும் காரணம் என்ன?

நான் எந்த கட்சியையும் சாராத பாமரன், நாங்கள் தற்போதிருக்கும் மனநிலையில் எங்கள் மனதில் தோன்றியவையே இக்கேள்விகளும், சந்தேகங்களும்.இதற்கு வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தான் பதிலளிக்க வேண்டும் என்று கேட்கவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தின் அருமை பெருமை தெரிந்தவர்கள் யாராவது பதிலளித்தாலும் சரி.

இப்போது இருக்கும் நிலையில் ஏதேனும் அற்புதங்கள் நிகழ்ந்தால் ஒழிய மத்திய அரசு பிழைக்க வழியில்லை. சீக்கிரம் எங்கள் கேள்விகளுக்கு பதிலளியுங்கள், பதில் தெரிந்தால்தான் இந்த ஆட்சி கவிழும்போது மகிழ்வதா அல்லது கவலை கொள்வதா என்று எங்களால் முடிவு செய்யமுடியும். Udanz
This entry was posted on 12:25 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On Mon Jul 21, 10:34:00 AM GMT+8 , jackiesekar said...

//அயல்நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க தடையில்லா மின்சாரம் வழங்கத்தான் நீங்கள் இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற போகின்றீர்கள் என்றால் இதை எப்படி இந்தியாவின் 70% உள்ள உழவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் ?// நெத்தி அடி ஜோ, நன்றாக எழுதுகிறீர்கள்

 
On Mon Jul 21, 01:48:00 PM GMT+8 , புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்படும் அனல்மின்சக்தி இன்னும் சில ஆண்டுகளில் நிலக்கரி கிடைக்காமல் தடைப்படலாம், தற்போது ஏற்படும் பருவ மழை கோளாறுகளால் புனல் மின்சார உற்பத்தியும் தடைபடலாம் என்று சொல்கின்றீர்கள். தற்போது இருக்கும் அணுமின்சக்தி உற்பத்தி வசதிகளின் மூலம் மொத்த நாட்டின் மின் தேவையில் வெறும் 5 சதவீதத்தைத்தான் பூர்த்தி செய்ய முடியும் என்றால், ஒரு வேளை நீங்கள் சொல்வது போல் அனல் மற்றும் புனல் மின் சக்திகள் இல்லாதுபொனால் என்ன ஆகும் ? அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சமாளிக்க என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன‌ ?
//

அப்பவும் எவனாவது ஒரு வெளிநாட்டுக்காரன் அவன் பிழைக்க ஏதாவது ஒரு ஸ்கீமைச் சொல்லிக்கிட்டு வருவான். நமக்கு பாதகமா இருந்தாலும் நாங்க அதைத் தான் கேப்போம்.வெக்கக்கேடு :(

 
On Mon Jul 21, 01:52:00 PM GMT+8 , Sriram said...

Paul,
Even i havent aware of this deal.One thing i remain you, Mr.Abdul Kalam support this deal.We believe in Kalam rather than any political parties.So We need too support this deal..

 
On Mon Jul 21, 06:25:00 PM GMT+8 , ....$விக்னேஷ் said...

5% தேவையைத் தான் நிறைவேற்றுமா? இதை இப்போ தான் கேள்வி படறேன். ஆனா நம்ம அப்துல் கலாம் ஐயா அவர்கள் கூட இந்த ஒப்பந்தத்தை ஆதர்க்க வேண்டிய அவசியம் என்ன? அவர் நமக்கு தவறாக வழி காட்டுவாரா என்ன? ஒன்னும் புரியலைங்கோ!

 
On Mon Jul 21, 06:49:00 PM GMT+8 , கையேடு said...

நண்பர் பால்ராசுக்கு,

உங்களது கேள்விகளையும் உள்ளடக்கி பல வேறுபட்ட கோணத்தில் வேண்டுமென்றும்

http://timeforsomelove.blogspot.com/2008/07/blog-post_15.html

வேண்டாமென்றும்

http://vettiaapiser.blogspot.com/2008/07/blog-post_13.html

அருமையாக விவாதித்திருக்கிறார்கள்.
குறிப்பாக பின்னூட்ட உரையாடலில், திரு. வழிப்போக்கன், ராப், வருண், கயல் என்று அனைவரும் போட்டியிட்டு அருமையாக உரையாடியிருக்கிறார்கள்.

பொறுமையாக நேரமிருந்தால் வாசித்துப் பாருங்கள், முடிவை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்..!!?? :):)

 
On Mon Jul 21, 07:48:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நன்றி ரஞ்சித். நீங்கள் கொடுத்துள்ள இணைப்புகளில் உள்ள தகவல்களை கட்டாயம் படித்துவிட்டு , என் சந்தேகம் தீரவில்லையெனில் உங்களிடம் வினவுகிறேன்.

 
On Mon Jul 21, 11:05:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

கலாம் அவர்கள் ஆதரிப்பது அணு மின்சக்தி திட்டத்தை. ஆனால் அவருக்கும் அமெரிக்கா இதில் செய்யும் அரசியல் தெரியுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ரஷ்யாவிடமிருந்து நமது கூடன்குளம் திட்டத்திற்கு எல்லா உதவிகளும் கிடைத்துக்கொண்டுதானே இருக்கின்றன? பின் ஏன் ரஷ்யாவின் உதவியை மறுத்துவிட்டு, அமெரிக்காவின் பின்னால் செல்லவேண்டும்? ரஷ்யா எந்த நிபந்தனையும் நமக்கு விதிக்கவில்லையே?

( தயவு செய்து நான் இடதுசாரிகளின் ஆதரவாளன் எனக்கருத வேண்டாம். நான் யாரையும் கண்ணைமூடிக்கொண்டு ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ இல்லை.)

 
On Tue Jul 22, 12:10:00 AM GMT+8 , கையேடு said...

நன்றி பால்.. :)

 
On Wed Jul 23, 01:08:00 PM GMT+8 , Known Stranger said...

your concerns are good. In my view , it is a necessary evil to Indians. You either dont take it and live with its disadvantages or sign it and live with its disadvantages. how you view it matters. I am not a supporter of left in this particular issue though i am a pro socialist communist when compared to captialism. I trust with your knowledge of understanding the schemes you can know what is speaks. you have 123 agreement in internet. I dont think for a person like , me like half baked informative guy need to explain you the good parts of the n deal. But only one point i felt veryd sad. the 40 mps of tamil nadu could have joined hand and the so called tamil leader KK could have told - if you want all my support then centralize the river from states. Why was he not able to do or for that matter any of the MPs from Tn. tamilinadu karanuku otrumai kedaiyatho anna vetiya pesikitu matum irupanoo... ?? chena oru anthangam , tamilinam mella. nalathoru chance 40 MP. leave atleast DMK MPS chance use panika theriyalla.. I am a pro Manmohan sign on Nuclear deal which i feel is a necessary evil. I wont say it doesnt have any hitches but is a necessary evil. to answer few question to which i know to an extent. TO my understanding - assam uraniam resources are not extractable as easily. Its extraction is complicated and is not easy. THorium reactors have not attained the saturation. India dont have plutonium enrichment technology which is more important bi product of uranium calendar ( may be i need to cross verify on this aspect but to my memory i am correct) Indian plutonium enrichment technology is pathetic. We have only developed calender to enrich the uranium and heavy water production technology is not grown up as we claim. Why Nuclear ? that is your valid question. Future has its answer. We all will see is what i guess. May be my answers are vague.

In my view this nuclear deal is like a marriage - a Necessary evil one has to live with . One need high amount of courage and determination to be unmarried.

 
On Wed Jul 23, 01:13:00 PM GMT+8 , Known Stranger said...

By the way - your blog has plenty of advt which slows down in opening your blog page. does advt get you some revenue ? By the way for one information to you. Why we are not able to accept what we are capable of and what we are not capable of. If we claim to be capable of what is the point in developing some this late. Like ramanujam giving answers to many of the mathemetical concepts when some one had already done. ? It is fact enna othuka matom namba.. I am not a patranoizer of foriegn technology _this is in respect to my comment one of the above commnets but i am jsut practical. veti vembu perumai pesathavan.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க