Author: ஜோசப் பால்ராஜ்
•10:34 AM
இன்றைய செய்தித்தாள்களில் கண்ட இரண்டு செய்திகள் ஒரு நல்ல செயலை முதல்வர் தொடங்கியிருப்பதை தெரிவித்தன.

முத‌ல் செய்தி: தூத்துக்குடி துறைமுக‌த்தின் ஒன்ப‌தாவ‌து ச‌ர‌க்கு த‌ள‌த்தை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைத்துள்ளார்.

2 வ‌து செய்தி: த‌ஞ்சையில் அர‌சு கேபிள் க‌ழ‌க‌த்தின் செய‌ல்பாட்டை முத‌ல்வ‌ர் க‌ருணாநிதி சென்னை த‌லைமை செயல‌க‌த்தில் இருந்து "வீடியோ கான்ப‌ர‌ன்ஸிங்" முறையில் தொட‌ங்கிவைக்கின்றார்.

இப்பதிவின் நோக்கம் தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு தளத்தை பற்றியோ, அல்லது அரசு கேபிள் கழகத்தை பற்றியோ அல்ல.

இந்த இரண்டு திட்டங்களையும் தொடங்கி வைத்த வழி இன்றையக் காலகட்டத்தில் மிகச் சிறந்த வழி. அதற்கு பாராட்டத்தான் இந்த பதிவு.

ஒரு முதலமைச்சர், பிரதமர், அமைச்சர்கள் போன்றோர் வெளியூர் பயணம் செய்ய அரசின் வழிகாட்டும் விதிமுறைகள் பல உள்ளன.

முதல்வர் வெளியூர் பயணம் செய்கின்றார் என்றால் அதற்கான ஏற்பாடுகள் குறைந்தபட்சம் ஒரு 15 நாட்களுக்கு முன்னால் இருந்தே தொடங்கிவிடும். காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு எல்லா அரசு அதிகாரிகளும் இதே வேலையாகத்தான் இருப்பார்கள். அரசு பணம் எல்லாவற்றிற்கும் செலவாகும்.

இது அரசுக்கு ஏற்படும் செலவு. அதைவிட முதல்வர் பயணத்தால் போக்குவரத்து நிறுத்தம் போன்றவை பொது மக்களுக்கு இடைஞ்சல்.

இங்கு நான் முதல்வர் கருணாநிதியின் பயண எளிமையைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். முடிந்த அளவுக்கு இவர் இரயில் பயணங்களைத்தான் மேற்கொள்வார். மிக குறைந்த அளவே விமானங்களில் செல்வார். அதுவும் பயணிகள் விமானத்தில்தான் செல்வார். அப்படி செல்லும் போதும் கூட பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. தனிவிமானத்தில் இவர் சென்றதாக இதுவரை நான் அறிந்ததில்லை. மேலும் இவர் பயணிக்கும் பாதையில் போக்குவரத்து மிக குறைந்த நேரமே நிறுத்தப்படும்.

சென்னையில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கே ஹெலிகாப்டரிலும், சாலை வழிப்பயணம் என்றால் பயணிகள் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்தியும் சாதனைகள் புரிந்த முன்னாள் முதல்வரைக்குறித்து நான் தனியாக எழுத வேண்டியதில்லை.

மேலும் சாதரணமாக முதல்வர் ஒரு ஊருக்கு வருகின்றார் என்றால் அவர் சார்ந்த கட்சிக்காரர்கள் செய்யும் ரகளை இருக்கின்றதே அது சொல்லி மாளாது.
இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.

ஒரு ஊருக்கு அரசு விழாவாக சென்றாலும், கட்டாயம் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றிலும் முதல்வர் கலந்துகொள்வார். கட்சி பொதுக்கூட்டத்திற்காக இவர்கள் வசூல் செய்வதும், ஊரெல்லாம் கட்சிகொடியை கட்டுவதும், தோரணங்கள், கட் அவுட்கள் என்று சாலைகளை பெயர்பது இவையெல்லாம் தவிர்க்க முடியாத நிகழ்வுகள்.

ஆக அரசு பணத்திற்கும் வீண் செலவு, அரசு அதிகாரிகளுக்கும் அதிக வேலைப்பளு, செலவு, மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு நன்கொடை செலவு, சாலைகளுக்கு பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கும் வீண்சிரமம் என எல்லாவற்றையும் தவிர்த்து, அதுவும் எரிபொருட்களின் விலை தாறுமாறாக ஏறியுள்ள இந்த நிலையில் முதல்வர் தூத்துக்குடிக்கும், தஞ்சைக்கும் பயணித்து இத்திட்டங்களை தொடங்கிவைக்காமல் , சென்னை தலைமை செயலகத்தில் இருந்தே வீடியோ கான்பரன்ஸிங் முறையில் தொடங்கி வைத்தது மிக நல்லது.

நேரில் சென்றே ஆக வேண்டிய நிகழ்ச்சிகளைத்தவிர்த்து மற்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் இதே முறையில் அமைத்தால் அரசுப்பண செலவு, கால விரயம், மக்கள் சிரம் எல்லாம் தவிர்த்துவிடலாம்.

அமைச்சர்கள் செல்வதற்கு இவ்வளவு கெடுபிடிகள் இல்லையென்பதால், அமைச்சர்கள் எல்லோரும் பயணங்கள் செய்து மக்கள் பணியாற்றலாம்.

இந்த வாரம் ஞாநியும் தனது ஓ பக்கத்தில் இதற்காக முதல்வருக்கு பூச்செண்டு கொடுப்பார் என நம்புகின்றேன். Udanz
This entry was posted on 10:34 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On Tue Jul 15, 11:45:00 PM GMT+8 , சின்னப் பையன் said...

சபாஷ்!!! நல்ல செய்தி...

அந்த பூச்செண்டில் என் பெயரையும் பொறித்துவிடுங்கள்!!!

 
On Wed Jul 16, 12:26:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

இப்போ நம்புறேன்! உண்மையிலேயே நீங்க மிகச் சிறந்த நடுநிலையாளர். இந்நிலையை என்றும் தொடருங்க ஜோசப் அண்ணே.

 
On Wed Jul 16, 01:09:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சின்னப் பையன், ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாதான் பூச்செண்டு குடுத்துருக்கேன்.

அப்துல்லா அண்ணே, நான் நடுநிலையாளன் தான் என நீங்கள் அறிந்துகொள்ள இந்த பதிவு உதவியது என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

எனது கல்லூரி நண்பர்களை கேட்டீர்களேயானால், நான் உங்களை விட இன்னும் அதிகமாக கலைஞரை ஆதரித்து பேசியவன் என்பதை அறியலாம்.

ஆனால் இப்போது நான் அப்படி ஒருவரை மட்டும் சார்ந்து அவர் என்ன செய்தாலும் ஆதரிப்பது என்ற என்ற நிலையில் இருந்து மாறி, தவறு செய்தது யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டுவது, அதே போல் நல்லது செய்தது யாராக இருந்தாலும் பாராட்டுவது என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.

 
On Wed Jul 16, 01:39:00 AM GMT+8 , அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மாறுபட்ட நோக்கு. பாராட்டுகள்.

 
On Wed Jul 16, 02:00:00 AM GMT+8 , Thamizhan said...

ஆளுயரத் தட்டிகள்,ஆர்ப்பாட்டங்கள் அனைத்தையுமே தனது கழகத் தொண்டர்களிடையே ஒழித்து வருகிறார்.
தமிழகம் அடுத்த நூற்றாண்டில் அடி யெடுத்து வைத்துள்ளது மகிழ்வளிக்கின்றது.

 
On Wed Jul 16, 12:10:00 PM GMT+8 , Thangavel Manickam said...

ஜோசப், உண்மை. பழுத்த அரசியல்வாதிகளுக்கே உண்டான பண்பு இது. கலைஞரின் செயல்கள் தற்போது அப்படித்தான் தெரிகிறது. உடனடித் தீர்வும் கிடைத்திருக்கிறது எனக்கு ஒரு முறை...

கலைஞரின் நற்செயல்கள் தொடரும் என்றே நம்புகிறேன்.

 
On Wed Jul 16, 04:17:00 PM GMT+8 , Anonymous said...

//"இப்போது நான் அப்படி ஒருவரை மட்டும் சார்ந்து அவர் என்ன செய்தாலும் ஆதரிப்பது என்ற என்ற நிலையில் இருந்து மாறி, தவறு செய்தது யாராக இருந்தாலும் சுட்டிக்காட்டுவது, அதே போல் நல்லது செய்தது யாராக இருந்தாலும் பாராட்டுவது என்ற நிலைக்கு வந்துவிட்டேன்."//

உங்களின் நடுநிலையை நிருபிக்க இந்த பதிவு ஒரு நல்ல வாய்ப்பு. தொட‌ர்ந்து யார் எதிர்த்தாலும் குற்ற‌ங்க‌ளை சுட்டிகாட்ட‌வும், ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை பாராட்ட‌வும் த‌வ‌றாதீர்க‌ள்.

 
On Wed Jul 16, 04:19:00 PM GMT+8 , Anonymous said...

உண்மையிலேயே இது ஒரு நல்ல முயற்சி. தொடர்ந்து இதேபோல் செய்தால் எல்லோர்க்கும் நல்லது. ஆடம்பர விழாக்களால் அரசு பணம் வீணாவதைத் தவிர வேறெந்த உபயோகமும் இல்லை.

 
On Wed Jul 16, 04:22:00 PM GMT+8 , Anonymous said...

From your previous posts, I thought you are against DMK. But thru' this post you proved that you are a neutral person. Lucky Look & Abi Appa should see this post. I am eagerly waiting to know what they going to say for this.

 
On Thu Jul 17, 08:16:00 PM GMT+8 , Known Stranger said...

gyaniyidam poo jendu vanginal than thukam varum enral.. athu oru thavarana munutharnam.

he lost his credential oflate. He is no more the critic when he started his O pages in ananthavikadanm- neriya thallai seruku vanthachu - nam ezhuthum ellavatraiyum makal kandipaga potravendum enra irumapum vanthachu gyaniku.. athanal avar poo chendu is not a feather in cap.

 
On Tue Jul 22, 08:02:00 PM GMT+8 , Unknown said...

yeah...i totally agree with u Joseph...
Let us wish that all the forthcoming CMS will follow Kalaigar's path...

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க