Author: ஜோசப் பால்ராஜ்
•1:22 AM
நீயும் நானும்,
நிலவும் வானும் என்றிருந்தேன்,

என்னோடு தான் உன் வாழ்வு
என்று நான் இறுமாந்திருந்தேன்.
காத‌ல் தான் என்று க‌ண்க‌ள் மூடியிருந்தேன்.

வெறும் காரிய‌ம் சாதிக்க‌த்தான் என்று
சொல்ல‌வில்லை நீ ச‌கியே..

உந்த‌ன் தேவைக‌ள் அனைத்தும்
என‌க்கே நீ உரைத்தாய்,
காலால் இட்ட‌த‌னைத்தும்
என் த‌லையால் நான் முடித்தேன்,

காத‌லால் தான் நீ என்னிட‌ம் கூறுகிறாயென்று
த‌வறாய் நினைத்திருந்தேன் - இளிச்ச‌வாய‌ன் இவ‌னே,
இவனை விட்டால் வேறு யார் செய்வார்
என்று நீ எண்ணிய‌து, என‌க்கெப்படி தெரியும் ?

பேருந்து ப‌ய‌ண‌த்தில் ச‌ன்னலோர‌த்தில்
முழுநில‌வு பார்த்தால் என் ம‌ன‌து நினைத்த‌து
உந்த‌ன் முக‌ம் தானே? முழுநில‌வு ஒளியில்
ப‌ய‌ணித்த‌து என் குற்ற‌ம் தானோ ?
எத்த‌னை ப‌ய‌ண‌ங்க‌ள் அதில் எத்த‌னை முழு நில‌வுக‌ள்?
முழு நிலவை உன் முகமாய்
எண்ணியது என் பிழையா?
இல்லை முழு நிலவே பிழையா ?

எத்த‌னை த‌வ‌ம் செய்தும்
என் காத‌ல் உன‌க்கு புரிய‌வில்லையெனில்
பிழை எந்த‌ன் காத‌லிலா?
அல்ல‌து உந்த‌ன் ம‌ன‌திலா?

உண்மை காதலை நீ உணர மறுத்தாய்,
இன்று இருவருமே இருளில் ‍- யாருக்கும் ஒளியில்லை.
ஒளியில்லா வாழ்வதனை வாழ்வதற்கா காதல் ???

நீயும் நானும்,
நிலவும் வானும் என்றிருந்தேன்,
என்னோடு தான் உன் வாழ்வு

என்று நான் இறுமாந்திருந்தேன்.

அம்மாவாசை அன்று நில‌வில்லை
என்ற‌து நிதர்சனம், இன்று - என் வாழ்வு
அம்மாவாசையான‌து அறிவாயோ பெண்ணே?

மாதம் ஒருமுறைதான்
நிலவுக்கு அம்மாவாசை,
உன் அம்மாவின் ஆசையையும் மீறி
இன்று நம் வாழ்வில் தினமும் அம்மாவாசை.

நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.
மகிழ்சி என்றும் உனதாகட்டும்,
உன் சோகம் கூட எனதாகட்டும்.

சோகம் எனக்கு புதிதில்லை
ஆனாலும்உன் சோகம் - அதை
எந்நாளும் நான் விரும்பவில்லை .

நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு. Udanz
This entry was posted on 1:22 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On Mon Jul 28, 10:51:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

//உந்த‌ன் தேவைக‌ள் அனைத்தும்
என‌க்கே நீ உரைத்தாய்,
காலால் இட்ட‌த‌னைத்தும்
என் த‌லையால் நான் முடித்தேன்,//

அப்போ தலையில் முடிக் கொட்டுவதற்கு காரணம் சிங்கப்பூர் தண்ணி இல்லையா ?

 
On Mon Jul 28, 11:00:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

சிங்கப்பூர் வந்ததும் அந்த வேலையே இல்லாம போச்சுங்கண்ணா.
சிங்கப்பூர் வந்தப்ப தலை நிறையா முடியும் இருந்துச்சு. அதனால் முடிகொட்றதுக்கு தண்ணிதான் காரணம்.

 
On Mon Jul 28, 11:01:00 AM GMT+8 , Divya said...

\\நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.
மகிழ்சி என்றும் உனதாகட்டும்,
உன் சோகம் கூட எனதாகட்டும்.\\

மீண்டும் படிக்க தூண்டிய வரிகள்!!

ஒவ்வொரு வரியும் மிக அழகாக......இயல்பான தமிழில், அருமை !!!

 
On Mon Jul 28, 05:36:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

go and see here
http://parisalkaaran.blogspot.com/

 
On Mon Jul 28, 05:38:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

\\நீயாவது வாழ்வில் மகிழ்ந்திரு,
நம் சோகத்தை நான் மட்டும் தாங்க விடு.
மகிழ்சி என்றும் உனதாகட்டும்,
உன் சோகம் கூட எனதாகட்டும்.\\

என்னண்ணே ஆச்சு ஓரே ஃபீலிங் மயமா இருக்கு???

 
On Mon Jul 28, 11:38:00 PM GMT+8 , Ŝ₤Ω..™ said...

என்னா மச்சி?? என்ன matter??
எல்லாம் தெரியாட்டியும், பாதி தெரிஞ்ச எனக்கும் ஒண்ணும் புரியல...

 
On Tue Jul 29, 03:43:00 PM GMT+8 , Known Stranger said...

enamoo phooo... enamoo nee santhosama illatha mathiryum enamoo phooo nalla iruntha seri ellorum. kavithai nalla than iruku - it is nice to read as long as if it i not personal feelings. if it is personal feeling it bring sadness to me. I mean it

 
On Tue Jul 29, 07:14:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

அன்பர்களே, நண்பர்களே பின்னூட்டமிட்ட சொந்தங்களே எனக்கு ஒன்னும் இல்லை . பீலிங் எல்லாம் இல்லை.

சூர்யா ஒரு படத்துல லைலாவுக்கு எல்லா உதவியும் செஞ்சுட்டு கடைசியா அல்வா வாங்கிட்டு போவருல்ல, அதே மாதிரி ஒரு கதைய சமீபத்துல நண்பர் ஒருத்தர் சொன்னாரு. அதை அடிப்படையா வச்சி எழுதுனதுதான் இந்த பதிவு. யாரும் கவலைப்படாதீங்கோ.

 
On Wed Jul 30, 08:45:00 PM GMT+8 , Known Stranger said...

what ever you say. You want me to believe - okay we all believe it.

 
On Thu Jul 31, 04:23:00 AM GMT+8 , கயல்விழி said...

என்ன ஜோசப், குணா கமல் ஸ்டைலில் கவிதை எழுதறீங்க? நல்லா இருக்கு :)

 
On Fri Aug 01, 07:35:00 PM GMT+8 , Anonymous said...

ஆகா..ஏன் இது..வேணாம்..நான் ஒன்றுமே எழுதல கிகிகிகிகிகி

 
On Fri Jul 03, 11:52:00 PM GMT+8 , *இயற்கை ராஜி* said...

என்ன‌மோ ஏதோன்னு ப‌டிச்சேன்...ம்ம்ம்ம்..ஒண்ணுமில்ல‌ன்னா ச‌ந்தோஷ‌ம்

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க