சென்னை, கொருக்குப்பேட்டை குப்பை மேடு.
மலைமலையாகக் குவிந்திருக்கிறது குப்பைகள். தீயிடப்பட்டு புகை கக்கிக்கொண்டு இருக்கும் குப்பை மேடுகளில் சின்னதொரு உறுமலோடு ஏறி இறங்கி வருகிறது மாநகராட்சி லாரிகள்.
தூரத்தில் லாரியைப் பார்த்ததும் முதுகில் சாக்குப்பையைத் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடி வருகிறார்கள் சிறுவர்கள். குப்பையைக் குறிவைத்து சிறுவர்களை முந்தி ஓடி வருகிறது தெரு நாய்கள். அவற்றை விரட்டி விட்டு பிஸ்கட் கவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், டின்கள் என விதவிதமான குப்பைகளைப் பொறுக்கி எடுக்க ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள். இது சென்னையின் ஒரு பகுதி வாழ்க்கை!
''அண்ணாத்தே... ஸ்கூல் போய்ப் படிக்கிற அளவுக்கு அப்பாகிட்ட துட்டு கிடையாது. அப்பா இங்கதான் எங்கேயாவது பொறுக்கினு இருக்கும். தெனம் ரெண்டு டைமாவது இப்படி குப்பை பொறுக்குனாதான் வீட்டுல ரெண்டு வேளைக்குச் சோறு திங்க முடியும். வூட்டுக்குப் போனா இருமல் வந்துகினேஇருக்கும். குப்பையிலே புரண்டுகிட்டு இருக்குறதால நைட்டு முழுக்கத் தூங்க முடியாது. நைநைன்னு அரிச்சுக்கிட்டே இருக்கும். ஒரு நாளைக்கு கொறஞ்சது முப்பது ரூபாயாவது கிடைக்கும். அத னால அரிப்பைப் பொறுத்துக் குவேன்''
இது ஆங்கே குப்பை பொறுக்கும் ஒரு சிறுவனின் குரல். இதுபோல் எத்தனையோ குரல்கள். இந்த வார விகடனில் படியுங்கள். மனசு வெறுத்து போகுது இதையெல்லாம் படித்து விட்டு.
இப்படியே விடலாமா? படித்துவிட்டு அதை வைத்து ஒரு பதிவும் போட்டுவிட்டால் போதுமா? நான் விகடனில் இந்த கட்டுரைக்கு எழுதிய கருத்தையே இங்கும் கொடுக்கின்றேன்.
குப்பையில் உழலும் இந்த சிறுவர்களின் குடும்பங்களை நன்கு ஆராய்ந்து பார்த்தீர்களேயானால், அவர்கள் பெற்றோர் இல்லாதவர்களாகவோ, அல்லது பெற்றோர் உழைக்க இயலாத உடல்நிலையில் உள்ளவர்களாகவோ, அல்லது உழைக்க உடல் வலு இருந்தும், உழைக்க மனமில்லா குடிகாரர்களாகவோ இருப்பார்கள்.
எத்தனை நாட்களுக்கு இப்படியே நாம் படித்துவிட்டு மனம் வருந்துவது போவது? இதற்கு தீர்வுதான் என்ன? எனக்கு தோன்றும் ஒரு யோசனையை இங்கு வைக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்.
பெற்றோர் இல்லாதவர்கள், பெற்றோர் இருந்தும் குடிகாரர்களாகவோ இருக்கும் குழந்தைகளை ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக, தத்தெடுத்து படிக்க வைக்கலாம்.
குழந்தைகளை குப்பை பொறுக்கவைத்து குடிக்கும் அந்த மிருகங்கள் எல்லாம் எப்படி போனால் என்ன ? முடிந்தால் உழைத்து உண்ணட்டும், இல்லையேல் போய் குப்பை பொறுக்கட்டும்.
உழைக்கும் நிலையில் உடல்வலு இல்லாமல் குழந்தைகளின் உழைப்பை நம்பி வாழும் நிலையில் உள்ள பெற்றோர்களையும் , அவர்கள் குழந்தைகளையும் சேர்த்து காப்பாற்ற வழிசெய்ய வேண்டும்.
ஏதவது ஒரு பகுதியில் நாம் எல்லாரும் சேர்ந்து செய்தால் நம்மைப் போல நல்ல உள்ளங்கள் கட்டாயம் இதை பிற பகுதிகளில் செய்ய முன்வருவார்கள்.ஊர் கூடினால் தான் தேர் இழுக்க முடியும். என்ன சொல்கின்றீர்கள் ?
ஏதாவது செய்யலாம், எத்தனைகாலம் தான் இப்படியே படித்துவிட்டோ அல்லது ஒரு பதிவு எழுதிவிட்டு சொல்வதோ தீர்வாகாது. நாம் ஒரு இயக்கமாக சேர்ந்து செய்ய வேண்டும் என்று நினைத்தால் முடியாத என்ன ?
உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.
* இந்த பதிவை எழுத தூண்டியது ஆனந்த விகடன் 16-07-2008 தேதியிட்ட இதழில் வெளியான கட்டுரை.
5 comments:
நியாயமான ஆதங்கம்! இப்படிக் குப்பைப் பொறுக்குபவர்கள் பெரும்பாலும் சென்னைக்கு வெளியில் இருந்து பிழைப்பிற்காக வருபவர்கள்தான் என்பது என் எண்ணம். வளர்ச்சி ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதால் வரும் விளைவு இது. வளர்ச்சியை பரவலாக்கினால், இது மாதிரி குடியேற்றங்களையும் அதன் மூலம் எழும் பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.
குடியேற்றம் என்று நான் சொல்வது, இந்த மாதிரி சிறுவர்களுக்கும் அவர்தம் பெற்றோர்களுக்கும் மட்டுமில்லை. கணிணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள் போன்ற எல்லோருக்கும் பொருந்தும்.
தொண்டு நிறுவனங்கள் எடுத்து செய்தால், இது பெருகத்தான் செய்யும். அடிப்படைத் தவறைக் களைந்தால், இதைத் தவிர்க்கலாம்.
inray sei , nanray sei. there are some good NGOs in chennai who does it. You can certainly adopt. want to know the details ?
உங்கள் ஆதங்கம் நியாமனாது தான் சார்.படிக்க வேண்டிய வயதில் இப்படி பாழாய்ப் போகும் சிறார்கள் பிற்காலத்தில் சமுகத்திற்கே பெரிய சவலாய் வரக்கூடும்.
இந்த இழி நிலை எல்லாப் பெரிய நகரங்களிலும் உள்ளது.சென்னை விட பம்பாயில் இவர்களின் நிலமை இன்னும் மோசம்.
//தொண்டு நிறுவனங்கள் எடுத்து செய்தால், இது பெருகத்தான் செய்யும். அடிப்படைத் தவறைக் களைந்தால், இதைத் தவிர்க்கலாம்.//
நல்ல கருத்து.
paul.. its really happy to read ur mind thru' ur post...
now u have started thinkig abt the real issues...
//தொண்டு நிறுவனங்கள் எடுத்து செய்தால், இது பெருகத்தான் செய்யும். அடிப்படைத் தவறைக் களைந்தால், இதைத் தவிர்க்கலாம்.//
well said தஞ்சாவூரான்..
//படிக்க வேண்டிய வயதில் இப்படி பாழாய்ப் போகும் சிறார்கள் பிற்காலத்தில் சமுகத்திற்கே பெரிய சவலாய் வரக்கூடும்.//
விஜய் wat u siad, is exactly wat happened and wats happening.. don't like to mention the names.. but all our "popular" gangsters have the same origin..
gud thot process Paul.. hope u remember abt our 2012 plan.. this post has a flavor of that..
keep going..