பிரபலாமவதற்கு இரண்டு வழிகள் உண்டு.சிரமப்பட்டு பிறருக்கு உதவும் வகையில் ஏதவது செய்வது ஒரு வகை. இது நேர்வழி. அப்துல கலாம் இந்த வகையை சார்ந்தவர்.
சிரமமேயில்லாமல் ஒரு பிரபலமானவரின் செயல்களை கன்னாபின்னா என்று எதிர்பது. கேணத்தனமாக கேள்வி கேட்பது. இதற்கு சமீபத்திய உதாரணம் ஞாநி.
இவர் ஓ பக்கம் என்று ஒரு பக்கத்தை முதலில் விகடனில் எழுதிக்கொண்டிருந்தார். அங்கே என்ன பிரச்சனையோ அங்கிருந்து குடிமாறி குமுதத்திற்கு சென்று அங்கேயும் அதே ஓ பக்கத்தை எழுதிவருகின்றார்.
விகடன் மின் பத்திரிக்கையில் வாசகர்கள் தங்களது கருத்துகளை எழுதும் வசதியிருப்பதால், அங்கு ஞாநியின் பல கட்டுரைகள் வாசகர்களின் பலத்த கண்டணங்களுக்கு உள்ளாகியிருந்தது. ஆனால் ஒரு முறை கூட வாசகர்களின் கருத்துகளுக்கு பதிலளித்தது இல்லை. வாசகர்களின் கருத்துக்களை அவர் படித்ததே இல்லை என்றுதான் நினைக்கின்றேன்.
குமுதம் மின் இதழ் வாசகர்களுக்கு கருத்து எழுதும் வசதியும் இல்லை என்பதால் ஞாநிக்கு எந்த கேள்வியும் இல்லை.
09.07.2008 தேதியிட்ட குமுதம் இதழில் அவர் எழுதியுள்ள ஓ பக்கத்தில் இவர் எழுதியுள்ள அபத்தங்கள் அவர் எழுதுவதை பிரபலமாக்க , பழுத்த மரமான அப்துல் கலாம் மீது கல்லெறியும் குயுக்தி, குறுக்கு புத்தி என்பதை தவிர வேறு எதுவும் இல்லை.
தன் வாழ்நாளை இன்றளவும் நாடு , நாட்டின் முன்னேற்றம் என்பதற்காக மட்டுமே செலவழித்துக்கொண்டிருக்கும் திரு. அப்துகலாமை, அவர் மாணவர்களையும், இளைஞர்களையும் வாழ்க்கையில் முன்னேற கனவுகாணுங்கள் என்று அடிக்கடி கூறினார் என்பதற்காக கனவுத்தாத்தா என்று விளித்திருப்பது, ஞாநியின் திமிர்தனத்தின் உச்சம் என்பதை தவிர வேறெதுவும் இல்லை.
இந்திய அரசியலமைப்பின்படி வானளாவிய அதிகாரங்கள் ஏதுமற்ற ஒரு அலங்கார பதவியாகிய குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து கொண்டு, வெறுமனே டில்லியில் அமர்ந்துகொண்டு, இந்தியா வரும் வெளிநாட்டு பிரநிதிகளுடன் கைகுலுக்குவதோடு மட்டும் நில்லாமல், தனது பதவி காலத்தில் நாட்டின் எல்லா பாகங்களுக்கும் பயணித்து லட்சக்கணக்கான மாணவர்களையும், இளம் வயதினரையும் சந்தித்து உரையாடி, அவர்களை ஊக்கப்படுத்திய கலாம், இளையோர்கள் கனவு காண வேண்டும் என்று சொன்னது எதற்காக ? இங்கு கனவு எனும் வார்த்தைக்கு என்ன அர்த்தம் ?இவற்றைக் கூட அறிந்துகொள்ள முடியாத அறிவிலிதான் நான் (ஞாநி) என்பதையும் அவர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அக்கினிச் சிறகுகள், விஷன் 2020 ஆகியவற்றை படித்தால் இவருக்கு தூக்கம் வந்துவிடுகிறதாம். இதற்கு கலாம் எந்த வகையில் பொறுப்பாவார்?இவர் போல் பகல் கனவு காணுபவர்களுக்கு எப்படி அப்துல் கலாம் அவர்களின் கனவுக்கு அர்தம் தெரியும் ?
அக்னிச்சிறகுகள் எனும் நூல் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது கூட தெரியாமல் அதையும் கூட குறை கூறியிருப்பதில் இருந்தே, விஷயமறிந்தவர்களுக்கு ஞாநியின் அறியாமை புலப்படும்.
கலாமின் கனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டத்தை எதிர்பதற்காக தனது பகல் தூக்கத்தையும், பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதியுள்ளாராம். இவ்வளவு கேவலமாக எழுதியதற்கு பதிலாக பேசாமல் நன்றாக தூங்கி, அவரது பகல் கனவையாவது கண்டிருக்கலாம்.
நீலகிரி மாவட்டத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆராய்சிகூடத்தை எதிர்பதற்காகத்தான் அவர் இப்படி கலாம் அவர்களின் மேல் கல்லெறிந்து பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சி செய்துள்ளார். நியூட்ரினோ ஆராய்சி கூடம் என்பது நன்மையா , தீமையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே அது குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது.
ஆனால் ஞாநியின் கட்டுரை எழுதப்பட்ட விதம் கட்டாயம் கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே கலைஞரை ஒய்வெடுக்க கூறியதும் இதே வகை தான். இப்படி பிரபலமானவர்களின் மேல் கல்லெறிந்து எழுதுவதைவிட ஓ பக்கத்துக்கு ஓய்வு கொடுக்கலாம்.
அப்துல் கலாம் அவர்களை கேவலப்படுத்த முயலும் ஞாநியின் கட்டுரையை வெளியிட்ட குமுதம் இதழ் நிர்வாகிகளும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
ஒகேனக்கல் குடிநீர் பிரச்சனைக்காக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய சத்தியராஜ், சரியான கருத்துக்களை தவறான வழியில் வெளிப்படுத்தினார் என்று எழுதிய அதே ஞாநி, இன்று தனது எதிர்ப்பை மிகக் கேவலமான வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளதன் மூலம் பிறரை குட்டவோ, பூச்செண்டு கொடுக்கவோ தனக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் மீறி இவர் இனியும் பிறரை இந்த வார குட்டு என்ற தலைப்பில் குட்ட முனைவாரானால், முதலில் அப்துல் கலாம் அவர்களையும்,அவரது கனவு என்ற வார்த்தையும் சரியாக புரிந்துகொள்ளாமல் கிண்டலடித்த தனது அறியாமை அல்லது தனது திமிர்தனம் இவற்றில் ஒன்றைத்தான் இவர் குட்டிக்கொள்ள வேண்டும்.

13 comments:
இந்த குமுதம் கட்டுரையின் அடிப்படையில் நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். தயவு செய்து படியுங்கள்.
http://vetripadigal.blogspot.com/2008/07/blog-post.html
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி சீனிவாசன்.
உங்கள் பதிவை படித்துவிட்டு பின்னூட்டம் இட்டுள்ளேன்.
Dear Mr. Joseph Paulraj
I appreciate your comments on these kind of negative journalists in india. By sitting in Singapore, we could see your sense of nationalism and positivism in your thoughts and action. But here we have great guys who can critisize their own action to get cheap publicity within thier own family. How about nation? For them they are bigger than the nation.
Kumudam had degraded its stature by keeping a person like Mr ஞாநி to write. I think they are doing to gain critisism related publicity. By doing this, the genuine greivances will get buried. And issues are discussed in empty spaces.
Certainly DAE is responsible for clarification in this regard.
vikadan editorial has denied to post his one article for a reason they didnt buy his opinion and didnt want to publish his opinion which was more of name calling rather creative critism. Same thing is happening in kumudam. To my understanding ( sorry for not able to give substantial proof or citation) i read that he made a condition that kumudam should publish what ever he wants to post. I remember reading his first post in kumudam from malaysia ( i guess ) after he was asked to withdraw his agreement with vikadan. He writes some time nonsense and many a time sense as well. A man cant be perfect all the time. But like late sujatha he is also getting pride in his works. Azhivu sekeram varum.
நண்பர் பால்ராசுக்கு,
ரொம்பவே சூடா இருக்கு - "கலாமைப்பற்றிய ஞாநியின் பார்வை" குறித்த உங்களது பார்வை.
குமுதம் வாசிக்கவில்லை, அதனால் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
ஜோ ,ஞாநிக்கு எதோ ஒன்று ஆகிவிட்டது. கலாம் பதவி காலம் முடிந்து, அண்ணா பல்கலைகழகத்தில் அவருக்காக அறை ஒதுக்கப்பட்ட போது அந்த ஒரு அறை கடந்த 5 வருடங்களாக எப்படி காத்து இருக்கலாம் என கதை கிளப்பியவர். கலாம் இந்தியாவுக்கு செய்ததை விட ஞாநி ஒன்றும் கிழித்து விட வில்லை.
ஞாநி தமிழகத்தில் மட்டுமே கருத்து சுதந்திரம் பேச முடியும்.எனெனில் தமிழர்கள் மட்டுமே, வந்தவர்களையும், வாய்பேசுபவர்களையும் வாழ வைப்பவர்கள்
Mr.Ghani belongs to communist party.So obviosuly he will not support or encourage fans of Mr.Abdul Kalam.I suggestthe people who reading tamil magazine ,dont take it seriously anything which comes in magazine.Because the spirit of Vikatan, Kumudam lost long back. Just to time pass, read the magazine.I have seen a lot of changes in these magazine, most of the news related to cinemas just like entertainment channels.
பால்,
ரொம்பவே சூடா இருக்கு -
குமுதம் வாசிக்கவில்லை, அதனால் சொல்வதற்கு வேறொன்றுமில்லை.
thanks to Prof. sir...
பால் அவர்களே,
இதே ஞாநி, தன்னுடைய தந்தைக்கு ஒதுக்கப்பட்ட பத்திரிகையாளர் குடியிருப்பை அவர் ஓய்வு பெற்ற பிறகும் வைத்திருந்தவர். இதுவாவது பரவாயில்லை, அவரது மறைவுக்குப் பிறகும் அந்த குடியிருப்பைக் காலிசெய்யாதவர்.
இதைத்தான் நம்ம ஊர் பக்கம் சொல்வார்கள் “யோக்கியன் வற்றான் சொம்ப எடுத்து உள்ள வை” ன்னு.
//ஒகேனக்கல் குடிநீர் பிரச்சனைக்காக திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் போது பேசிய சத்தியராஜ், சரியான கருத்துக்களை தவறான வழியில் வெளிப்படுத்தினார் என்று எழுதிய அதே ஞாநி,//
பல விசயங்களில் தெளிவாக பேசும் ஞாநி இது போல சில சமயங்களில் உளறுவது தவறு...
// http://suduvadusukam.blogspot.com/2008/07/blog-post_07.html
//
நண்பர் பால்ராசுக்கு,
மேலேயுள்ள சுட்டியில் ஞாநி அவர்களின் கட்டுரையை வாசித்தேன். ஆனால், நீங்கள் குறிப்பிடுவதுபோல் கட்டுரையின் சாராம்சம் போலித்தனமான விளம்பரத்திற்காக எழுதப்பட்டது போல் தெரியவில்லையே. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் தானே எழுதப்பட்டிருக்கிறது.
கலாமின் கனவுகள் மீதுள்ள நம்பிக்கையின்மையால் ஆங்காங்கே இடித்துரைத்திருக்கிறார். அதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுமிருக்கிறார்.
மேலும், நியாயமான வாதங்களைத் தானே எடுத்துவைத்திருக்கிறார். மேலும், அவ்வாய்வு மையத்தை நிறுவுதல் என்கின்ற கனவை அவர் கலைக்கச் சொல்லவில்லையே, அக்கனவு நினைவாகப்போகும் இடத்தைத் தானே மாற்றச்சொல்லிக் கேட்டிருக்கிறார்.
எனது இப்பீன்னூட்டம் ஞாநி அவர்களின் முந்தய பிந்தய கருத்துக்களுக்கு நியாயம் கற்பிப்பதற்காகவல்ல. மேலும் அவர் கையேடு என்ற ஒற்றை நபரின் சார்புப் பின்னூட்டத்திற்காகக் காத்துக் கிடப்பவருமல்ல, என்ற புரிதலிலேயே எழுதுகிறேன்.
மற்றபடி ஞாநி அவர்களின் முந்தய கருத்துக்கள் பற்றிப் பேசுவது பிறிதொரு உரையாடல்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கையேடு அவர்களே.
//"நியூட்ரினோ ஆராய்சி கூடம் என்பது நன்மையா , தீமையா என்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே அது குறித்து நான் கருத்து எதுவும் கூறமுடியாது.
ஆனால் ஞாநியின் கட்டுரை எழுதப்பட்ட விதம் கட்டாயம் கண்டிக்கத்தக்கது. "//
அந்த திட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதையும், அதனால் நான் அதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்பதையும் என் பதிவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். அத்திட்டம் குறித்து நானே உம்போன்ற ஆய்வாளர்களிடம் தான் கேட்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.
மேலும் நான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு மூத்த தலைவரை, அதுவும் நாட்டுக்காக பல ஆண்டுகள் உழைத்த ஒருவரை இப்படி கேவலப்படுத்தும் விதமாக எழுதியதைத்தான் நான் கண்டித்துள்ளேன்.
அவர் கேட்டக்கருத்து சரியானதாதுதான் என வைத்துக்கொண்டாலும் கேட்ட விதம் கொஞ்சமும் நன்றாக இல்லை. அதுவும் இத்தனையாண்டு அனுபவமிக்க ஒரு பத்திரிக்கையாளராகிய அவருக்கு இந்த அடிப்படை மரியாதை கூட தெரிய வேண்டாமா?
சரி அத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தான் அமைய வேண்டும் என்று கலாம் அவர்கள் தான் இடத்தை தேர்ந்தெடுத்தாரா? கலாமின் கனவுத்திட்டம் என்பதால் அவரே இடத்தையும் தேர்ந்தெடுத்தாரா ? கட்டாயமாக அவராக இருக்கமுடியாது.
இடம் தேர்ந்தெடுத்தது கலாம் இல்லையெனில் அவரை ஏன் இதில் தாக்க வேண்டும்? இது நியாயமான வழியா சொல்லுங்கள்?
//சரி அத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் தான் அமைய வேண்டும் என்று கலாம் அவர்கள் தான் இடத்தை தேர்ந்தெடுத்தாரா? கலாமின் கனவுத்திட்டம் என்பதால் அவரே இடத்தையும் தேர்ந்தெடுத்தாரா ? கட்டாயமாக அவராக இருக்கமுடியாது.
இடம் தேர்ந்தெடுத்தது கலாம் இல்லையெனில் அவரை ஏன் இதில் தாக்க வேண்டும்? இது நியாயமான வழியா சொல்லுங்கள்?//
கனவு யாருடையது என்பதாக அறியப்படுகிறது என்பதையும் கேள்விக்குட்படுத்தித்தான் எழுதியிருக்கிறார், திரு.ஞாநி.
//உங்கள் கனவு என்று சொல்லி அண்மையில் ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். அய்யோ! அதை நினைத்தாலே எனக்கு உடலெல்லாம் பதறுகிறது. இப்படி ஒரு விபரீதக் கனவு உங்கள் பெயரால் நனவாக்கப்படுவது பற்றி உங்கள் கவனத்தை ஈர்க்கத்தான் இந்தக் கடிதத்தை மதியத் தூக்கத்தையும் பகல் கனவையும் தியாகம் செய்துவிட்டு எழுதுகிறேன்.
//
மற்றபடி ஞாநி அவர்களின் கேள்வி நியாயமாகயிருந்தாலும், அவர் கேட்டவிதம் உங்களைப் பெரிதும் பாதித்திருக்கிறது. அந்த வகையில் உங்களது உணர்வுகளைப் பதியவைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவே செய்கிறேன்.
நியூட்ரினோ ஆராய்ச்சி பற்றி வேறு சமயத்தில் உரையாடுவோம், மின்னஞ்சலில்.. :))