Author: ஜோசப் பால்ராஜ்
•6:11 PM
மீனவர்களின் உயிரைக்காக்குமாறு மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதப்போராட்டம்.

என்ன ஒரு அருமையான யோசனை???
எப்படி அய்யா இப்படி ஒரு அருமையான தீர்வை கண்டுபிடித்தீர்கள்? இந்த முடிவை எடுப்பதற்கு ஒரு உயர்மட்ட குழு கூட்டம் வேறு. மிக கேவலமாக இருக்கின்றது இந்த அரசியல்.

ம‌த்தியில் ஆளும் அர‌சில் நீங்க‌ளும் ஒரு அங்க‌ம் தானே? உங்க‌ள் கூட்ட‌ணிக்க‌ட்சி ஆளும் அர‌சின் க‌வ‌ன‌த்தை திருப்ப‌க் கூட‌ உண்ணாவிர‌த‌ம் இருந்தால்தான் முடியுமா?

சாதார‌ண‌நாட்க‌ளிலேயே ந‌ம்ம‌வ‌ர்க‌ள் இது போன்ற‌ ஒரு நாள் உண்ணாவிர‌த‌த்தையெல்லாம் க‌ண்டுகொள்ள‌ மாட்டார்க‌ள். அதிலும் ந‌ம்பிக்கை வாக்கெடுப்பில் அர‌சு த‌ப்புமா, க‌விழுமா என்ற‌ க‌ல‌க்க‌த்தில் காங்கிர‌ஸ்கார‌ர்க‌ள் இருக்கும் உதிரிக‌ட்சிக‌ளின் ஓட்டுக்க‌ளையெல்லாம் பெறுவ‌த‌ற்காக‌ ப‌கீர‌த‌ பிர‌ய‌த்த‌ன‌ம் செய்துகொண்டிருக்கும் இந்த‌ சூழ‌லில் உங்க‌ள் உண்ணாவிர‌த‌த்தையா க‌ண்டுகொள்ள‌ போகின்றார்க‌ள் ? இந்த‌ உண்ணாவிர‌த‌த்தால் ஏதாவ‌து ப‌ல‌ன் இருக்கும் என்று யாராவ‌து ஒருவ‌ராவ‌து ந‌ம்புகின்றீர்க‌ளா?
ஈழத்தமிழர் பிரச்சனையில் இலங்கையோடு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரிக்கை விடுத்து சாகும் வரை நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்த திலீபன், மற்றும் பூபதி அம்மாள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தது நம் காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தான்.

அவர்கள் செத்தாலும் பரவாயில்லை நாங்கள் கண்டுகொள்ள மாட்டோம் என்று இருந்து உண்ணாவிரதத்தால் திலீபனும், பூபதி அம்மாளும் உயிரை விடச்செய்தது இதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான்.

சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கே அந்த நிலை என்றால், நீங்கள் காலையில் ஆரம்பித்து மாலை முடிக்கப்போகும் இந்த உண்ணாவிரதத்திற்கு மதிப்பளித்து உங்கள் கோரிக்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ன ?

மீனவர்களின் உயிர்களும், அவர்களின் நலனும் முதல்வருக்கு முக்கியமேயில்லையா என்ன ? இதுவரை கடிதம் மட்டும் எழுதிக்கொண்டிருந்தார். இப்போது ஒப்புக்கு ஒரு உண்ணாவிரதம். வேறு எந்த உருப்படியான யோசனையும் தோன்றாத அளவுக்கு அறிவு பஞ்சமா ஆள்வோரிடம்?

ஏன் அனைத்துக்கட்சியையும் கூட்டி ஆலோசிக்க கூடாது?

நாளை ஏதாவது ஒரு பிரச்சனைக்கு, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் நீங்கள் அறிவித்தாலும், அதையும் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர எங்களால் வேறு என்ன செய்யமுடியும்? Udanz
This entry was posted on 6:11 PM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

21 comments:

On Fri Jul 18, 07:46:00 PM GMT+8 , கிஷோர் said...

காலை 9:40க்கு சிக்கன் பிரியாணி காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை இடைவிடா சாகும்வரை உண்ணாவிரதம் நடைபெறும். பின்பு மட்டன் பிரியாணி.

பார்க்கறவன் எல்லாம் கேணப்பசங்க.

இந்த திருட்டு பசங்க எல்லாம் எப்ப திருந்தப்போறானுங்களோ

 
On Fri Jul 18, 07:46:00 PM GMT+8 , கிஷோர் said...

மனசு வலிக்குது.

 
On Fri Jul 18, 10:56:00 PM GMT+8 , Known Stranger said...

Quotation - by Vijayakhant - founder of DMDK


தொட்டதுக்கெல்லாம் சோனியா கூட போன்ல பேசுறியே... நடுக்கடல்ல இத்தனை பேர் செத்துப் போறானே... அதுக்காக, ஒரு தடவையாவது சோனியா கூட போன்ல பேசி இருக்கியா? ஒரு மண்ணும் பண்ணலே.கடல்ல நம்ம மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் திராணியற்ற ஆளும் தி.மு.க.வினரையும் சுட்டுத் தள்ள வேண்டும்''

 
On Fri Jul 18, 11:03:00 PM GMT+8 , Known Stranger said...

what vijayakhant said may not be the right solution. But it is pathetic who patronize himself as the leader of tamil and tamilians dedication is seen in this stunt and drama.

Paru kalingar intha thalla vayathilum eppadi kural kodukararu paru.. nalu pathirikai karanum dmk thondar kalum pesuvanga ella..

ada pongayia.. ethellam vellaiku agathu.. ithukellam thadal adiya makkalaya oru vazhiya kandu pudikanum - date kurichu ella meenavarum ulla yeranga vendiyathu than.. - as you know the pain of farming, i know the pain of fishing - ever word i say is with emotions as i am one of the guy who had been into sea not just once to catch fish with my fellow fisher man friends in the parisal . usuru pora matter athu.. i went for the thrill . but ulla pona than theriyum what is the risk.. for two times during my visit to sea we came back with nothing almos nothing. after 8 hours of hard work... farminga vida kodumaiyanathu fishing. kural kudukuren intha matteruku.. izha tamilianoda alavaviya oruvan nan. avan vali enna venru ketavan.. therinthavan nanum.. not just read in papers or books. - courtesy my job experience in malaysia that helped me to make some very good friends from izha tamilan. kovam varuthu.. enatha panna.. ada pongaya.. govt vellaiku agathu ithekkalam motha thuthukudi allungalla vidunga odatha kadalkullara.. pongada kacha theevu sudatum mantha manthiaya sudatum humanitary issue agatum, navy allaratum, solla kudathu epponu thidirnu ullara poganum.. world media varanum.. coverage kudukanum.. international sea boundryla than suduvan singalathan.. sudatum paravalla 200 peru madiyatum.. oru vazhi pirakanum. pirakum.. enna nan konjam extreme level allu diplomatic solutionlam vellaiku avathu.

 
On Sat Jul 19, 12:25:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நன்றி கிஷோர். இப்படிப்பட்ட ஒரு உண்ணாவிரதம் இருப்பதைவிட அந்த உயர்மட்ட கூட்டத்திலேயே 2 நிமிடம் மவுன அஞ்சலிமட்டும் செலுத்திவிட்டு ஒரு தீர்மானம் மட்டும் நிறைவேற்றிவிட்டு போயிருக்கலாம்.

 
On Sat Jul 19, 12:45:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நன்றி வைஷ்ணவ், உழவர்கள் வாழ்க்கையைவிட அதிக சவால்கள் நிறைந்த வாழ்க்கை மீனவர்களின் வாழ்க்கை. ஆனால் இங்கே துன்பமிகுந்த வேலைகளை செய்பவர்களுக்குத்தான் மரியாதை குறைச்சல்.

இலங்கை பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ சேர்கின்றது என்றால் அதற்கு இலங்கையை தட்டி வைக்க வேண்டிய விதத்தில் தட்டவேண்டும். உங்கள் கையாலாகாத வெளியுறவு கொள்கைக்கு நம் மக்களின் உயிர்தான் விலையா ? செத்தது தமிழன் என்பதால் மட்டும் நான் இதை கேட்க்கவில்லை. இந்தியாவின் எந்த மூலையை சேர்ந்தவனும், அரசின் கையாலாகத்தனத்தால் ஒரு அண்டை நாட்டவனால் சாகக்கூடாது. இப்படி ஒரு கொள்கையை கடைபிடித்துதான் இலங்கையோடு நல்லுறவு பேண வேண்டும் என்றால் பிராந்திய வல்லரசு என்ற பெயர் நமக்கு எதற்கு?

நீங்கள் என்னதான் உதவிகள் செய்தாலும் இலங்கை கட்டாயம் சீனா மற்றும் பாகிஸ்தானோடு உறவாடுவதை தவிர்க்க இயலாது. ஏற்கனவே இந்திய பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானுக்கும், இந்திய சீனா போரில் சீனாவுக்கு உதவிய நாடுதான் இலங்கை. பின் எதற்கு இந்த நாட்டை நாம் ஆதரிக்க வேண்டும்?


ஈழத்தமிழர்கள் குறித்த கட்டாயம் எழுதுவேன், எல்லாவற்றையும் விரிவாக அதில் சொல்லுவேன்.

ஆனால் இப்போது ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன், இதுவே ஈழத்தில் இருப்பவர்கள் தமிழர்களாக இல்லாமல் கன்னடர்களாக இருந்திருந்தால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் , அல்லது இந்தியா நிலைகுலைந்து போயிருக்கும். அந்த உணர்ச்சி தமிழர்களுக்கு இல்லை என்பதுதான் உண்மை.

காவிரியோடு சம்பந்தமேயில்லாத வடக்கு கர்நாடகாவினர் கூட, காவிரியைப்பற்றித் ஒன்றுமே தெரியாதிருந்தாலும், கர்நாடகாவின் நிலையைத்தான் ஆதரிப்பார்கள். ஆனால் தமிழகத்தில் காவிரிப் பிரச்சனைக்கு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை தவிர வேறு யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. தன் வீட்டு வாசலுக்கு வரும்வரை பிரச்சனையின் தீவிரம் அவர்களுக்கு உரைப்பதில்லை.

 
On Sat Jul 19, 01:18:00 AM GMT+8 , Anonymous said...

கன்னடர்களை விட தமிழர்கள் கேனையர்களாக இருப்பதே முதல் காரணம். நமக்கு இலவச அரிசியையும், தொலைக்காட்சியையும் தந்து முட்டாள்களாக்கிவிட்டார்கள்.

 
On Sat Jul 19, 01:38:00 AM GMT+8 , Jackiesekar said...

நன்றி ஜோ,
கலைஞர் மீது மரியாதை இருந்தாலும் இந்த விஷயத்தில் அவரை எனக்கு பிடிக்க வில்லை, காரணம் ஒரு மொழியை எதிர்க்க தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர், கண்ணுக்கேதிரே ஒருவன் நம் தமிழகத்து ஆள் கொல்லபடுகிறான். அதை கேட்க நமக்கு நாதி இல்லை...அக்கறை தமிழனுக்கு கவலை பட நமது இறையாண்மை தடுக்கிறது,ஒததுக் கொள்வோம் இக்கரை தமிழனுக்கு கேள்வி கேட்க எது தடுக்கிறது????

 
On Sat Jul 19, 02:09:00 AM GMT+8 , Anonymous said...

தலைவர், அக் மார்க் காந்தியத்தைக் கடைபிடிக்கிறார்ங்க. அதாவது ஒரு குடும்பத்துக்குள்ளேயே நமக்கு ஒரு பிரச்சனையின்னா சாப்பிடாமா முரண்டு பண்றதுல்லையா , அது மாதிரி!

என்ன சாகுறது எவனோ படிக்காத மீனவர்கள் தானேங்க. ஆனால் இந்தியா இந்தியர்களின் பாதுகாப்பை யாருக்கும் விட்டுக்கொடுக்காதுன்னு அவங்க கிட்ட உறுதியா சொல்லத்தான் ஒரு ஆள் கொழும்புக்கு போறதுக்கு 4 கப்பல் நிறைய ஆட்களை கூட்டிக்கிட்டு போறமில்லங்க! இலங்கை புரிஞ்சுக்கும். இல்லாட்டி ஆளில்லாத உளவு விமானங்களை அனுப்பி இலங்கை கடற்படை சுடுறத வீடியோ எடுத்து, செத்துப்போனதை உறுதி செஞ்சுட்டு அப்புறமா நாடு தழுவிய உண்ணாவிரதம் இருந்து இலங்கைக்கு கடுமையான நெருக்கடிய கொடுப்போங்க.

என்ன ஓரு 200 பேர் (இது வரைக்கும்) செத்துருப்பாங்களா! நாட்டின் இறையாண்மைக்கு முன்னாடி இதெல்லாம் வெறும் தூசிங்க.

இன்னொன்னு விதின்னு ஒன்னு இருக்கு வாருங்க. நாம முழுக்க முழுக்க இலங்கை ராணுவத்தையே குறை சொல்ல முடியாதுங்க. பாவம் அவங்களும் டென்சன்ல இருக்காங்கல்ல. அவங்க டென்சன குறைக்கத்தான் நாம அப்பப்ப ஆயுதம் தந்து, புலிகளுக்கு வரும் ஆயுதசப்ளையை கரக்டா உளவு சொல்லி உதவுறோம். இருந்தாலும் டென்சன் தானுங்களே!

அதனாலதான் முதலமைச்சர் நிவாரண நிதியிலையும், பிரதமர் நேரடி நிவாரண நிதியிலையும் நிறைய பணத்தைப் போட்டு (ஒரு 1000 கோடி) இப்பவே வச்சுட்டோம். இனிமே காலதாமதம் இல்லாம சுட்டவுடனேயே செக் எழுத ஒரு செக் ஆபிசரையும் தமிழ்நாட்டு அரசு கருணையோடு நியமிக்கனும்னு உண்ணாவிரதம் இருக்கப்போகுது தி.மு.க.

என்ன இருந்தாலும் இறையாண்மை முக்கியமில்லீங்களா!

 
On Sat Jul 19, 08:00:00 AM GMT+8 , கோவை விஜய் said...

தமிழக க்டலோர மீனவர் வாழ்வாதரங்கள் சுருங்கி போய் அவ்ர்களை முடமாக்கி கொண்டு இருகிறது காப்பது யார்?

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 21 மறுமொழிகள் | விஜய்

 
On Sat Jul 19, 03:33:00 PM GMT+8 , Anonymous said...

தீக்கணையாக பாய்கிறது.உங்கள் எழுத்து!

 
On Sat Jul 19, 03:38:00 PM GMT+8 , Unknown said...

கருணாநிதி ஐயா நீங்க காமெடி கீமடி பண்ணலையே ?.

 
On Sat Jul 19, 03:40:00 PM GMT+8 , Unknown said...

ஏம்பா யாருக்காக உண்ணாவிரதம் இருக்கீங்க.?சோனியாவிற்கு எதிராவ. இல்ல இலங்கை அரசுக்கு ஆதரவா.? இல்ல இறந்த தமிழக மீனவர்களுக்கா.??

 
On Sat Jul 19, 03:43:00 PM GMT+8 , Anonymous said...

தமிழ்நாட்டுக்கும் தமிழனுக்கும் கருணாநிதி ஏதாவது நன்மை செய்வார் என்று இன்னமும் நம்புவது தமிழனின் முட்டாள்தனம்...

தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் எதையுமே உருப்படியாக செய்யாத கருணாநிதி...

உருப்படியாக செய்துகொண்டிருக்கும் ஒரே செயல்... ஒன்றுக்கு இரண்டு மூன்று மனைவிகள் கட்டிக்கொண்டது... போதாக்குறைக்கு துனைவிகளை வைத்துக்கொண்டது...

அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்காகவும் அவரின் எடுபிடிகளுக்காகவும் கட்சியையும் தமிழனையும் அடகு வைத்து சொத்து-சுகம் சேர்த்தது... சேர்த்துக் கொண்டிருப்பது... இதைத் தவிர ஒரு எழவும் இல்ல...

தூ... உங்களுக்கெள்ளாம் தமிழினத் தலைவருன்னு பட்டம் போட்டுக்கொள்ள வெட்கமா இல்ல...

 
On Sat Jul 19, 03:54:00 PM GMT+8 , குசும்பன் said...

//உண்ணாவிரதம் இருந்த திலீபன், மற்றும் பூபதி அம்மாள் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தது நம் காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கத்தான்.//

இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் தனி பதிவாக.

 
On Sat Jul 19, 05:52:00 PM GMT+8 , Unknown said...

'கூட்டணி தர்மத்துக்காக' ஒண்ணுக்கும் உதவாத அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பது மாதிரிதான் இதுவும். குரல் குடுத்தா 'கூட்டணி தர்மம்' செத்து போச்சுன்னா? மீனவனுங்க கெடக்குறானுங்க, ஒரு ரெண்டு லட்சத்த வீசி எறிஞ்சா போதும்.

மக்களை, மக்களின் உயிரை இதுக்கு மேலும் கேவலப்படுத்த முடியாது.

 
On Sun Jul 20, 05:26:00 AM GMT+8 , Mani - மணிமொழியன் said...

I am not supporting Kalaingar - but wanted to criticize "Gabtan" vijayakanth. If you remember, sometime back this "great guy" justified the sales of Arms to Sri Lankan Army with some flimsy logic. Now he is talking as if he really cares about TN fishermen. His double speak is Disgusting.
The only thing Gabtun knows is to blindly attack everyone in politics except his own Machaan and his wife.

 
On Sun Jul 20, 03:21:00 PM GMT+8 , Great said...

//
sometime back this "great guy" justified the sales of Arms to Sri Lankan Army with some flimsy logic. Now he is talking as if he really cares about TN fishermen. His double speak is Disgusting.
//
எனக்கும் இது தான் தோன்றியது.
இறந்த நம் மீனவன் மேல் பாய்வது Made in India தோட்டா தான் என்பது சினிமாவில் வெத்து துப்பாக்கி உபயோகிக்கும் நம் காப்டனுக்கு தெரியுமா?

 
On Wed Jul 23, 05:48:00 PM GMT+8 , Anonymous said...

தம்பி

அடிச்சு ஆடுங்க. வர வர எதைத் தின்னா பித்தம் தெளியும்கற நெலமைக்கு வந்துட்டாரு கலைஞர். அவரும்தான் என்ன செய்வார்? உளியின் ஓசை நெனச்ச மாதிரி ஓடலை. அடுத்த ப்டத்துக்குக் கதை எழுத ஓய்வா நேரம் வேணும். உண்னாவிரதம் இருந்தா அந்த நேரத்துல கதையவாது எழுதலாமேன்னு நெனச்சிருப்பாரு..

சாத்தான்குளத்தான்

 
On Thu Jul 24, 12:09:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

யாரைப்பார்த்து நான் பதிவு எழுத ஆரம்பித்தேனோ, அவர் அனானியாய் வந்து பின்னூட்டமிட்டுவிட்டு போயுள்ளார். இன்று நான் மிக மகிழ்ச்சியாய் உள்ளேன்.

ஆசிப் அண்ணாச்சி, உங்கள் வருகைக்கு நன்றி, ஆனாலும் நீங்கள் அனானியாய் இல்லாமல் உங்கள் பெயரிலேயே வந்து பின்னூட்டமிட்டால் எனக்கு மிக்க மகிழ்ச்சியாய் இருக்கும்.

 
On Thu Jul 24, 06:39:00 AM GMT+8 , கயல்விழி said...

இதில் அரசியல்வியாதிகளை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. விழிப்புணர்வே இல்லாமல் ஆட்டு மந்தைப்போல இரண்டு கட்சிகளுக்கே மாற்றி மாற்றி ஓட்டு போடும் மக்களின் மீதே தவறு இருக்கிறது.

கலைஞருக்கு மீனவர், தமிழர்கள் மீது இருக்கும் அக்கறையை விட ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதிலும், வாரிசு அரசியல் நடத்துவதிலும் அதிக அக்கறை இருக்கிறது.

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க