Author: ஜோசப் பால்ராஜ்
•8:23 PM
கலைஞருக்கு நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் சார்பாக பதிலளித்த லக்கி லுக் அண்ணண் அவர்களுக்கு எனது நன்றிகள்.

இது அவருடைய பதிலுக்கு பதில் பதிவு. ஆனால் இதிலும் சில கேள்விகள் இருக்கலாம். ஆனால் லக்கிலுக் அண்ணா, இதை விதண்டாவாதமாகவோ அல்லது எதிர்கட்சிகளின் பாணியிலோ கேட்கவில்லை. இந்த கேள்விகள் பெரும்பான்மையானவர்களின் மனதில் இருக்கின்றது. ஒரு ஆரோக்கியமான விவாதமாக இதை பாருங்கள். விவாதம் தானே ஒழிய விதண்டாவாதம் அல்ல.

//"தொலைக்காட்சி போன்றவை ஆடம்பரப் பொருட்களாக பார்க்கப்பட்டது சென்ற நூற்றாண்டில், இப்போது அவை அத்தியாவசியப் பொருளாகிவிட்டது. முன்பெல்லாம் ஏழைகளுக்கு இலவச பல்பொடி, இலவச செருப்பு வழங்கியது போல இப்போது இலவச டிவி வழங்கப் போகிறோம் என்று தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இத்திட்டத்துக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் இருந்திருந்தால் நாம் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஏழைகள் இருக்கும் வரை இலவசத் திட்டங்கள் அவசியமே."//

தொலைகாட்சி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌பொருளாக‌ அல்லாம‌ல் அத்தியாவ‌சிய‌ பொருளாக‌ மாறிவிட்ட‌து என்கின்றீர்க‌ள். ஆனால் நான் என் கேள்வியில் குறிபிட்டிருந்த‌ப‌டி, ப‌சித்த‌வ‌னுக்கு தேவை மிட்டாயா, உணவா?

ம‌க்க‌ள் தீர்ப்பே ம‌கேச‌ன் தீர்ப்பு என்றால் இப்ப‌டி கூட்ட‌ணிக‌ளின் ப‌ல‌த்தில் இல்லாம‌ல் த‌னித்தே ஆட்சியை பிடிக்கும் அள‌வு த‌னிப்பெரும்பான்மை பெற்றிருக்க‌லாமே? அப்போ இந்த இலவசத் திட்டங்களை பிடிக்காதவர்களும் இருக்கின்றார்கள் என்றுதானே அர்த்தம் ?
ஏழைக‌ள் இருக்கும் வ‌ரை இல‌வ‌ச‌த்திட்ட‌ங்க‌ள் அவ‌சிய‌ம் என்கின்றீர்க‌ள். ஆனால் ஏழைக‌ள் முன்னேற்ற‌த்திற்கு என்று என்ன‌ திட்ட‌ம் இருக்கின்ற‌து? ஏழைக‌ள் ஏழைக‌ளாக‌வே இருந்து கொண்டிருந்தால், எத்த‌னை கால‌ம்தான் இல‌வ‌ச‌ங்க‌ளாக‌வே கொடுத்துக்கொண்டிருப்ப‌து?
எத்த‌னைகால‌ம் தான் மீனை கொடுப்ப‌து? தூண்டிலை கொடுங்க‌ள் என்றுதானே சொல்கின்றோம்.

//"அய்யா நேற்று கூட ஒரு 300 கோடி ரூபாய் அளவுக்கு திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலைக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கலைஞரின் முந்தைய 96 ஆட்சியை விட இந்த ஆட்சியில் கல்வித்துறையில் புரட்சி நிகழ்ந்துவருகிறது. அன்றாடம் செய்தித்தாளை வாசிக்கவும். பொங்கிவரும் புனலென புதுப்புது திட்டங்கள் கலைஞரின் ஆட்சியில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தீட்டப்பட்டு, செயலாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டரை ஆண்டுகளில் இந்த ஆட்சி முழுமை பெறும்போதுதான் இதுவரை வந்த கலைஞரின் ஆட்சிகளிலேயே இது தலைசிறந்த ஆட்சிக்காலம் என்பதை உணர்வீர்கள்."//

கல்வித்துறையில் ஏற்பட்டிருக்கும் புரட்சியை நானும் ஒத்துக்கொள்கின்றேன். கல்வித்துறையை இரண்டாக பிரித்து இரு அமைச்சர்களை நியமித்தது வரவேற்கதக்கது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களின் பணி மிகக்குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. குறிப்பாக‌ ச‌மீப‌த்தில் அவ‌ர‌து தொகுதியில் அவ‌ர் ஏற்பாடு செய்த வேலை வாய்ப்பு முகாம் மிக‌ அதிக‌ள‌வில் ப‌ல‌ருக்கு வேலை வாங்கிகொடுத்தது . அதை எல்லாம் நான் ம‌றுக்க‌வில்லை.

//"துணைநகரத் திட்டம் வேறுவழியில் கண்டிப்பாக நிறைவேறும். அனேகமாக திருப்பெரும்புதூருக்கு அருகில் துணைநகரம் அமையலாம். அதுபோலவே விமானநிலைய விரிவாக்கத்துக்கும் மாநில அரசு கண்டிப்பாக நிலம் ஒதுக்கித்தரும். புதியதாக உருவாகப்போகும் துணைநகரத்தை ஒட்டி அந்த விரிவாக்கம் இருக்கும்."//
சீக்கிரம் நடக்கும் என்று சொல்கின்றீர்கள், நம்புவோம். ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களில் ஆர்வம் காட்டாமல் ஏன் அரசு கேபிள் கழகம் மற்றும் கலைஞர் டிவியிலேயே கவனத்தைக் காட்ட வேண்டும்?இந்த திட்டங்கள் எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாக அல்லவா இருக்கின்றன?

//"சினிமா என்ற தொழில் கிட்டத்தட்ட சிதையும் நிலையில் உள்ளது. சினிமாவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கானோரை சினிமாவில் இருக்கும் பெரிய மனிதர்கள் காப்பார்களோ இல்லையோ, அவர்களுக்காக கலைஞர் எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அவர்களது உரிமைகளுக்கு குரல் கொடுப்பார். சினிமாத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கருதியே அவர்களுக்க் சில சலுகைகள் வழங்கப்படுகிறது. கேளிக்கைவரி சலுகை வழங்கினாலும் கூட சினிமாத்துறை மூலமாக மற்ற வகைகளில் அரசுக்கு கணிசமான வருவாய் வந்துகொண்டு தானிருக்கிறது."//
சினிமா துறையிலும் அடித்தட்டு மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையாக சொல்லுங்கள், கேளிக்கை வரிச்சலுகைகளால் அவர்கள் தான் பலனடைகின்றார்களா? பலனடைவது தயாரிப்பாளர், விநியோகிப்பவர், மற்றும் திரையர‌ங்கு உரிமையாளர்கள் தானே? எல்லாத் தயாரிப்பாளரும் நேர்மையாய் எல்லா கணக்கு வழக்கையும் தயாரித்து வரி கட்டி கொண்டா உள்ளார்கள்? அங்கு கறுப்பு பணம் அதிகம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இப்படி கறுப்பு பணம் மூலம் ஏற்கனவே வரி ஏய்பவர்களுக்கு ஏன் மேலும் வரிச்சலுகை ? மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரியை எடுத்துக்கொண்டுதானே சம்பளமே கிடைக்கின்றது. இவர்கள் நினைத்தால் கூட வரி ஏய்ப்பு செய்ய முடியாது. ஆனால் திரைப்படத்துறை அப்படியா?

//"மகத்தான திட்டம் என்று சொல்கிறீர்கள். ஒரு மகத்தான திட்டம் எப்படி சோம்பேறிகளையும், கடத்தல்காரர்களையும் உருவாக்க முடியும்? 2 ரூபாய் அரிசித்திட்டம் மிகச்சிறப்பாகவே நடக்கிறது. இதுவரை தினமலர் கூட சொல்லாத ஒரு புகாரை நீங்கள் கற்பனையாக சொல்லுவதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது."//
ம‌க‌த்தான‌ திட்ட‌ம்தான் ஆனால் அது த‌வ‌றாக‌ உப‌யோகிக்க‌ப்ப‌டுவ‌துதான் பிர‌ச்ச‌னையே. ஒரு மாத‌த்திற்கு 30கிலோ அரிசி 2ரூபாய் விலையில் வெறும் 60 ரூபாயில் வாங்கிவிட‌லாம்.இது ஒரு கூலி தொழிலாளியின் ஒரு நாள் ச‌ம்ப‌ள‌த்தை விட‌ குறைவு. ஆக‌ ஒரு மாத‌ தேவையை ச‌மாளிக்க‌ 10 நாட்க‌ள் வேலை பார்த்தால் போதும் என்று தொழிலாள‌ர்க‌ள் நினைக்கின்றார்க‌ள். இது எங்க‌ள் கிராம‌த்தில் கூட‌ ந‌ட‌க்கின்ற‌து. வ‌ய‌ல்க‌ளில் விவ‌சாய‌ வேலைக்கு வ‌ரும் கூலித்தொழிலாள‌ர்க‌ள், ஒழுங்காக‌ வ‌ருவ‌தில்லை. ஒரு சில‌ர் இதை ந‌ன்றாக‌ உப‌யோகித்து முன்னேறுகின்ற‌ன‌ர். ஆனால் பெரும்பான்மையின‌ர் இத‌னால் சோம்பேறிக‌ளாகின்ற‌ன‌ர். ச‌ரி, க‌ட‌த்த‌ல் எப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌து ? அடிக்க‌டி நியாய‌ விலைக்க‌டை அரிசி க‌ட‌த்தப்ப‌டுவ‌துகுறித்து நீங்க‌ள் செய்திதாள்க‌ளில் ப‌டித்திருப்பீர்க‌ள். த‌மிழ்நாட்டில் மொத்த‌ம் 60 ல‌ட்ச‌ம் போலி குடும்ப‌ அட்டைக‌ள் இருப்ப‌தாக‌ உண‌வுத்துறை அமைச்ச‌ர் திரு.வேலு ச‌ட்ட‌ச‌பையில் கூறியுள்ளார். ஒரு அட்டைக்கு ஒரு மாத‌த்திற்கு 30கிலோ வீத‌ம் 60 ல‌ட்ச‌ம் அட்டைக‌ளுக்கு எவ்வ‌ள‌வு அரிசி இந்த‌ குறைந்த‌ விலையில் செல்கின்ற‌து ? அது எல்லாம் க‌ட‌த்த‌ல்கார‌ர்க‌ளின் கைக‌ளுக்குத்தானே செல்கின்ற‌து? போலி குடும்ப‌ அட்டைக‌ளை க‌ளைய‌ இன்னும் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌வில்லையே ? போலி அட்டைக‌ள் அனைத்தும் இந்த‌ ஆட்சியில் கொடுக்க‌ப்ப‌ட்ட‌வை என‌ நான் சொல்ல‌வில்லை. ஆனால் க‌ளைய‌ தீவிர‌மான‌ ந‌ட‌வ‌டிக்கை தேவை என்றுதான் சொல்கின்றேன்.

//"வேறு என்ன செய்யமுடியும்? கலைஞரா துப்பாக்கி எடுத்துக்கொண்டு போய் அவர்களை காக்க முடியும்? இந்திய மீனவர்கள் கொல்லப்படும் போதெல்லாம் கலைஞர் அதற்கான வருத்தங்களை தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார், நடவடிக்கை கோருகிறார். கடற்பாதுகாப்பு மத்திய அரசின் கையில்தானே இருக்கிறது?"//
க‌லைஞ‌ரை துப்பாக்கி தூக்க சொல்ல‌வில்லை. ஒரு முத‌ல‌மைச்ச‌ர், அதுவும் ம‌த்தியில் ஆளும் கூட்ட‌ணியில் மிக‌ செல்வாக்குள்ள‌ த‌லைவ‌ர், வெறும் வ‌ருத்த‌ம் தெரிவிப்ப‌தும், க‌டித‌ம் எழுதுவ‌தும் ம‌ட்டும்போதுமா? ஒரு நிர‌ந்த‌ர‌ தீர்வுகாண‌ வலியுறுத்த‌ வேண்டாமா? கூறிய‌ப‌டி இலாக்கா ஒதுக்காமையால் ப‌த‌வியேற்ற‌ திமுக‌ அமைச்ச‌ர்க‌ள் த‌ங்க‌ள் பொறுப்புக‌ளை ஏற்காமால் போராட‌வில்லை? அதுபோல் த‌மிழ‌ர்க‌ளின் உயிர்காக்க‌ ஒரு அழுத்த‌மான‌ போராட்ட‌ம் வேண்டாமா? இவ‌ர் அழுத்த‌ம் கொடுத்தால் ம‌த்திய‌ அர‌சு கேட்காம‌லா போகும்?

//" கலைஞரின் வாழ்வே போராட்டங்களால் நிறைந்தது. இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படித்தான் தமிழனாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. 1938 இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் தொடங்கி கல்லக்குடி போராட்டம், 1965 இந்தியெதிர்ப்பு போராட்டம், 1976 மிசா சட்டத்தை எதிர்த்துப் போராட்டம், 1980களில் ஈழத்தமிழருக்கான போராட்டம், எப்போதுமே இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் என்று போராளியாகவே கலைஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்."//
க‌லைஞ‌ரின் போராட்ட‌ங்க‌ள் தெரியாத‌ த‌மிழ‌ன் இல்லை நான். அவ‌ர் ஏற்க‌ன‌வே பல‌ போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்திய‌வ‌ர் என்ப‌தால் தான் த‌ற்போதும் அவ‌ரிட‌ம் இருந்து எதிர்பார்கின்றோம். 1980 க‌ளில் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ போராடினார். ஆனால் இன்ற‌ள‌வும் ஈழ‌ப்பிர‌ச்ச‌னை தீராம‌ல் தானே இருக்கின்ற‌து? இப்போது ஏன் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வ‌ளிக்க‌வில்லை? ச‌ட்ட‌ம‌ன்ற‌த்தில் தீர்மான‌மிய‌ற்றிய‌து ம‌ட்டும் போதாதே, அந்த‌ தீர்மானாத்தால் எந்த‌ உப‌யோக‌மும் இல்லை என்பது உங்க‌ளுக்கே ந‌ன்றாக‌ தெரியும். அது ம‌ட்டும் போதும் என்று நினைக்கின்றீர்க‌ளா?

//"இந்த கேள்வி மூலமாக என்ன தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்? கள்ளச்சாராயத்தை சட்டப்பூர்வமாக அனுமதிக்கச் சொல்கிறீர்களா? பூரணமதுவிலக்கை கடுமையாக வற்புறுத்திய காந்தி பிறந்த குஜராத்தில் கூட கள்ளச்சாராயச் சாவுகள் நடந்து வருகிறது."//

பூர‌ண‌ ம‌துவில‌க்கு வேண்டும் என்று சொல்ல‌வில்லை. க‌ள்ள‌ சாராய‌த்தை ஒழியுங்க‌ள் என்றுதான் சொல்கின்றேன். டாஸ்மாக்கில் இந்தியாவில் த‌யாரிக்கும் அய‌ல்நாட்டு ம‌துவ‌கைக‌ளை (IMFL) விற்கும் போது ஏன் க‌ள் இற‌க்க‌ அனும‌திக்க‌ கூடாது ? குடிப்ப‌வ‌ர்க‌ள் குடிக்க‌த்தான் செய்வார்க‌ள், அவ‌ர் அவ‌ர்களாகப் பார்த்து திருந்தினால்தான் உண்டு. ம‌ற்ற‌ ம‌துவ‌கைக‌ளோடு ஒப்பிடும்போது க‌ள் ஒன்றும் கொடிய‌து அல்ல‌வே? அதை ஏன் அனும‌திக்க‌ கூடாது?

//"தமிழை செம்மொழியாக ஆக்காமல் இருந்திருந்தால் எல்லாத் தமிழன் வீட்டிலும் அடுப்பு எரிந்துவிட்டிருக்குமா? - சும்மா ஏதாவது வார்த்தைஜாலத்தோடு கேட்கவேண்டுமே என்று கேட்காமல் கொஞ்சமாவது சிந்தித்து கேள்விகள் கேட்கவும்."//
நீங்க‌ள் தான் என‌து கேள்வியை புரிந்து கொள்ள‌வில்லை. த‌மிழை செம்மொழியாக்கிய‌து ம‌ட்டும் போதாது, த‌மிழ‌னின் வாழ்வும் செம்மையாக‌ வ‌ழிசெய்ய‌ வேண்டும் என்று தான் கேட்டுள்ளேன். இதில் வார்த்தை ஜால‌ம் ஏதுமில்லை. க‌லைஞ‌ரிட‌மே வார்த்தை ஜால‌ம் காட்டும் அள‌வுக்கு நான் பெரிய‌வ‌ன் இல்லை.

//" உங்களுக்கு அப்படி ஒரு ஐயம் ஏற்பட்டதற்காக வருந்துகிறோம். திமுகவில் கலைஞர் குடும்பத்தை தவிர வேறு எவருமே இல்லையா? தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் இரண்டு கோடி திமுகவினர் இருக்கிறார்கள். அந்த இரண்டு கோடி பேரும் கலைஞர் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்கிறீர்களா? "//
திமுக‌ வில் 2 கேடிக்கும் மேல் உறுப்பின‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்,ஆனால் க‌ட்சியில் எந்த‌ பொறுப்பிலுமே இதுவ‌ரை இருந்திராத‌, க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து?
ஸ்டாலின் த‌விர‌ க‌லைஞ‌ர் குடும்ப‌த்தில் யார் தீவிர‌ க‌ட்சிப்ப‌ணியாற்றிய‌து? முர‌சொலி மாற‌னின் ம‌க‌ன் என்ப‌தை த‌விர‌ வேறு எந்த‌ த‌குதியும் இல்லாத‌ போதும் த‌யாநிதி மாற‌ன் பார‌ளும‌ன்ற‌ உறுப்பின‌ராகி, ம‌த்தியில் கேபின‌ட் அமைச்ச‌ராக‌வும் முடிந்த‌து. வேறு யாருக்காவ‌து இப்ப‌டி வாய்ப்பு கிடைக்குமா?
திற‌மையாக‌ ப‌ணியாற்றிய‌ போதும் சொந்த‌ குடும்ப‌ மோத‌லால் அவ‌ர‌து ப‌தவியும் ப‌றிபோய்விட்ட‌து.
இன்று க‌னிமொழிக்கு வாய்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி? 2 கோடி பேருக்கு மேல் உறுப்பின‌ர்க‌ளை கொண்ட‌ திமுக‌ வில் க‌னிமொழியை விட‌ அனுப‌வ‌ம் வாய்ந்த‌ க‌ட்சி ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் இல்லையா என்ன‌?
எத்த‌னையோ த‌குதிவாய்ந்த‌, ப‌ல‌ மேடைக‌ளில் பேசிய‌ அனுப‌வமிக்க‌ க‌ழ‌க‌ பேச்சாள‌ர்க‌ளுக்கு கிடைக்காத‌ வாய்ப்பு க‌ய‌ல்விழிக்கு எப்ப‌டி கிடைத்த‌து? இதையெல்லாம் பார்க்கும் எவ‌ருக்கும் ஐய‌ம் ஏற்ப‌டத்தானே செய்யும்?

//"விதண்டாவாதமாக கேட்டாலும் பதில் கொடுத்திருக்கிறோம். "//
உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. இது விதண்டாவாதம் இல்லை, விவாதம் தான் என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கின்றேன். Udanz
This entry was posted on 8:23 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

30 comments:

On Thu Jul 03, 12:45:00 AM GMT+8 , Thamizhan said...

சிந்திக்கும் தமிழர்கள் ஆக்க பூர்வமாகக் கருத்துக்களை வெளியிட்டு நாடு முன்னேற வழி செய்ய வேண்டும்.
சோமாரி மாதிரி குறைகளைச் சொல்லி வருபவர்களால் நேரந்தான் நமக்கு வீண்.
அரசு சம்பளம் வாங்குபவர்களில் எத்தனை பேர் உண்மையாக உழைக்கிறார்கள்?
நமது உறவின்ரென்றால் எப்படியாவது இடம் பிடித்துவிட வேண்டும் என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்துச் செயல் பட வில்லையா?
எத்தனை பேர் ஒழுங்காக வரிசையில் நின்று பெறுகிறோம்?
ஏழைகள் பற்றி அரசே செய்ய வேண்டும் என்ற விதி முறையா?நமது கட்டமையென்ன?
பெரியார் அவர்கள் சொன்னார்கள்.ஒரு சுடுகாட்டுக்குப் பாதை போட வேண்டுமானால்,ஊர் கூடிச் செய்தால் ஆயிரம் ரூபாய் ஆகும்,அதையே அரசிடங்கேட்டால் பல ஆண்டுகள்,பல ஆயிரம் ஆகி விடும்.இது பொது தானே.
அரசின் கடமைகளில் முக்கியக் கடமையே ஏழைகளுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவி,அவர்கள் குழந்தைகளைப் படிக்க வைத்து,வேலை வாய்ப்பு கொடுத்து முன்னேறச் செய்வதும்,இதை அமைதியாக நிறை வேற்றுவதுந்தான்.
அய்ந்தாண்டுகள் கழித்துச் செய்தால் ஆதரிப்பதும்,இல்லாவிட்டால் கவிழ்ப்பதும் மக்கள் கைகளில்.
எத்தனைப் படித்தவர்கள் உண்மையான குடிமக்களாக ஓட்டுப் போட்டுக் கடமையாற்றுகிறார்கள்.
நாம் ஒவ்வொருவரும் நம்மையும் நம்மைச் சூழ்ந்தோரையும் மாற்றி ஈடு பட்டு நல்லவர்களை அரசியலில் ஈடு படச் செய்து கொஞ்சமாவது உழைப்பதுதான் பயன் தரும்.

 
On Sat Jul 05, 07:57:00 PM GMT+8 , Known Stranger said...

i am impressed with your debating skill. I never knew you can do a debate keeping your mind cool with points that is very valid. I did went to the other blog page who had tried to answer your question. Being a left wing pro dominated guy with no inclination to any dravidian and national party i felt if a man decieded to cover his skin he will speak in support for the sake of argument. I felt the other persons answering are with pride and prude with a sake of covering his leader. He is no doubt a leader but not leaders are beyond questioning. Every leader is subject to questioning. Your unbaised view is well appreciated. i never expected such a unbaised talk from you especially when you are known in friends circle as a pro dmk

 
On Sat Jul 05, 09:02:00 PM GMT+8 , Jackiesekar said...

உங்கள் இரண்ட பேர் கருத்தையும் நான் வரவேற்கிறேன்,ஆனால் ஒன்று ஜோ, எவ்வளவு வளர்ச்சி நடைபெற்றள்ளது அதன் பயனாளிகள். யார் யார் என்று எனக்கு நன்றாகவே தெரியும்...
கலைஞர் ஆட்சியில் யார் வேண்டமானாலும் கேள்வி கேட்கலாம்,எனெனில் காய்ந்த மரம்தானே கல்லடிபடும்.திருவள்ளுர் அரசு விழாக்கு ஹெலிகாப்டரில் சென்றவர் ஜே என்பதை மறக்க வேண்டாம்

 
On Tue Jul 08, 12:12:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

க‌ட்சி ப‌ணி எதுவும் செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு எல்லாம் எப்ப‌டி ப‌த‌வி கிடைக்கின்ற‌து//

நண்பரே!இதற்கு பதில் சொல்ல அண்ணன் லக்கிலுக் தேவை இல்லை நானே போதும். எந்த தியாகமும் இன்றி குடும்பத்தில் இருந்து பதவி பெறுவதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிற்து. அந்த குடும்பத்தில் உறுப்பினராக பிறந்ததே தியாகம் தான். எந்த ஒரு சராசரி சந்தோஷங்களையும் அனுபவிக்காத குழந்தைகளாகத்தான் அவர்கள் வளர்ந்தார்கள். நம்முடைய தந்தை எத்தனை முறை நம்மை பள்ளிக்கு அழைத்துச் சென்று இருப்பார்.போகும் வழியில் எத்தனை முறை நாம் கேட்டதெல்லாம் வாங்கித் தந்து இருப்பார்.எங்க அப்பாவோடு சினிமா போனேன், வெளியூர் போனேன் என்று எத்தனை முறை நாம் பெருமை பேசி இருப்போம்? இது போன்ற சில்லரை சந்தோஷங்கள் கூட அவர்களுக்கு கிடைப்பது இல்லை. சகோதரி கனிமொழி ஒரு பேட்டியில் சொன்னார் "காலையில் நான் எழும் முன் அப்பா தொண்டர்களைப் பார்க்கப் போய் விடுவார்.இரவு நான் உறங்கி வெகு நேரம் சென்றபின் அவர் அவர் வருவார். ஒரே வீட்டில் அப்பாவை பார்க்காமல் பல வாரங்கள் இருந்துள்ளேன்.ஒரு முறை நான் தனியாக அழுவதைக் கண்ட அம்மா என்னை அப்பா மீட்டிங் பேசும் இடத்திற்கு தூக்கிப்போய் காட்டி அழைத்து வந்தார்". ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன்...நம்முடைய தந்தை ஜெயிலில் இருந்தால் அவரை நினைத்து நம் மனம் என்ன பாடுபடும். ஏன் அந்த வேதனை அவர்கள் பிள்ளைகளுக்கு இருக்காதா? கலைஞ்ர் பள்ளிக் கல்வியோடு நிறுத்திய தன் மகள் செல்விக்கு எம்.பி பத்வி தரவில்லையே. முதுகலைப் பட்டம் பெற்ற அந்தப் பதவிக்கு தகுதியான மகளுத்தானே அதைத் தந்தார். ஒன்று மட்டும் உண்மை... எந்த ஒரு தலைவனுக்கும் அவன் குடும்பம் செய்யும் தியாகத்தால் தான் அவர்கள் பொதுவாழ்வு சிறக்கிறது.கலைஞ்ர் குடும்பம் மாத்திரம் அல்ல ஒவ்வொரு தலைவரின் குடும்பமும் ஏதோ ஒரு விதத்தில் தியாகம் செய்துதான் இருக்கிறது. தன் தந்தையை பொதுவாழ்வுக்கு அனுமதித்ததால் தான் ராகுலும்,பிரியங்காவும் தந்தையை இழந்தார்கள். வாரிசு என்பதற்காக தகுதி இழக்கச் சொல்வது சுத்த அபத்தம்.

 
On Tue Jul 08, 07:13:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

அண்ணண் லக்கி லுக் அவர்களுக்காக பதிலளித்த புதுகை எம்.எம்.அப்துல்லா அவர்களுக்கு மிக்க நன்றி.

நீங்கள் சொல்லியுள்ள கருத்து மிக அழகாக உள்ளது. ஆனால் எனக்கு ஏற்படும் சந்தேகத்தையும் தயவு செய்து தீர்த்துவையுங்கள்.

தற்சமயம் மென்பொருள்துறையில் வேலைபார்க்கும் பெரும்பாலனவர்களுக்கு இருக்கும் கடினமான வேலைப்பளுவால் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருந்து வேலை பார்க்க வேண்டியுள்ளது. சில நேரம் வீட்டில் இருந்தும் வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. குடும்பத்தோடு செலவிடும் நேரம் மட்டுமல்ல , தங்களுக்கென கூட செலவுசெய்ய முடியாத சூழலில் இருக்கின்றோம். எனக்கு திருமணமாணவுடன் எனது மனைவியுடன் எனக்கு ஏற்பட்ட முதல் சண்டை நான் எப்போதும் வேலை வேலை என்று இருப்பதால் வந்தது தான். இவ்வளவு சிரமங்களையும் தாங்கிக்கொண்டு நாங்கள் இந்த மென்பொருள் துறையில் ஏன் வேலை பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்கு விடை எல்லோர்க்கும் தெரிந்ததுதான். ஏனென்றால் இதில் தான் மிக அதிக அளவில் ஊதியம் கிடைக்கும் . ஆக ஒன்றை அடைய வேண்டுமாணால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும் என்பது நியதி.

நான் இரவு பகல் பாராமல் வேலை செய்கிறேன். இதனால் என் குடும்பத்தினரும், நானும் பல தியாகங்களை செய்கின்றோம் என்று சொல்லி நான் என் மகளுக்கோ, மகனுக்கோ, அல்லது மச்சானுக்கோ என் நிறுவனத்தில் வேலை கேட்க முடியாது. தகுதியிருந்தால் மட்டும் வேலைக்கு சேரமுடியும். அதிலும் தகுதியுள்ளேர் மிகுதியாய் இருப்பினும் அனுபவம் அதிகம் உள்ளவர்களுக்கே வேலை கிடைக்கும்.

அதே போல் தான் தலைவர்களின் தியாகமும். குடும்பத்தினருடன் நான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் அவர் தலைவராக முடியாது. அந்த தியாகத்துக்கு கிடைக்கும் விலை என்னவென்றால் புகழும், பெருமையும், பதவியும், இன்ன பிற சலுகைகளும். இதற்காக வரிசையாக ஏன் குடும்பத்து வாரிசுகளுக்கு பதவி தர வேண்டும்?



அப்படி பார்த்தால் கட்சியின் அனைத்து மட்டத்திலும் எல்லோரும் தலைவரைப்போலவே பல தியாகங்களை செய்து கொண்டுதான் உள்ளார்கள். அவர்கள் வாரிசுகளுக்கும் பதவி கொடுக்கலாம் என்கின்றீர்களா? அப்படியே பரம்பரை பரம்பரையாக அவர்களே எல்லா பதவியையும் எடுத்துக்கொண்டால் அதற்கு பெயர் முடியாட்சி என்பதுதான். அங்கு சனநாயகம் என்பது இல்லாமல் போய்விடும். இது தான் நீங்கள் விரும்புவது? சற்று விளக்குங்கள்.

 
On Tue Jul 08, 08:59:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அண்ணன் ஜோசப் அவர்களுக்கு,

தயவு செய்து என் முதல் பின்னூட்டத்தை மீண்டும் ஒருமுறை கவனமாகப் படிக்கவும். வாரிசு என்ற ஒரே தகுதி போதும் வேறு எதுவும் தேவை இல்லை என நான் எங்கும் கூறவில்லை. மாறாக வாரிசு என்பதற்காக தகுதி இருந்தும் இழக்கச் செய்வதைத்தான் அபத்தம் என்றேன்.
தலைவர் கலைஞ்ர் கூட பள்ளிக் கல்வியோடு நிறுத்திய தன் மகள் செல்விக்கு எம்.பி பத்வி தரவில்லை. முதுகலைப் பட்டம் பெற்ற அந்தப் பதவிக்கு தகுதியான மகளுக்குத் தான் தந்தார் என்று நான் குறிப்பிட்டதும் அந்த அடிப்படையில்தான்.
//ஆக ஒன்றை அடைய வேண்டுமாணால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும் என்பது நியதி.
//

நீங்கள் பணத்தை அடைய உங்கள் பிள்ளைகளை இழக்கலாம்.காரணம் உங்களுக்கு ஒன்றை அடைய வேண்டுமாணால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும் என்பது நியதி.ஆனால் அதே நேரத்தில் எதையும் அடையாமல் உங்கள் அருகாமையை பிள்ளைகள் இழப்பது எந்த நியதி.அதைத்தான் நான் பிள்ளைகளின் தியாகம் என்கிறேனே தவிர தலைவர்கள் குடும்பத்திற்கு நேரமின்றி இருப்பதை நான் தியாகம் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு ஒரு பதவிக்கு அடிப்படைத் தகுதி இருக்கும்பட்சத்தில் இந்த தியாகமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். மற்றபடி கழகத்தில் போஸ்டர் ஒட்டித்தான் வரவேண்டும் என்பதில்லை என்பதே என் வாதம்

//அப்படியே பரம்பரை பரம்பரையாக அவர்களே எல்லா பதவியையும் எடுத்துக்கொண்டால் அதற்கு பெயர் முடியாட்சி என்பதுதான். அங்கு சனநாயகம் என்பது இல்லாமல் போய்விடும்.//

அண்ணே வாரிசுகளுக்கு வாய்ப்புதான் தர முடியும். பதவியை நீடித்து வைக்க மீண்டும் செயல்பட ஒட்டுப் போடும் மக்களால்...மக்களால் மட்டும் தான் முடியும் என்பதை மற்ந்துவிடாதீர்கள். இதிலே எங்கே வந்தது முடியாட்சி?

//பரம்பரை பரம்பரையாக அவர்களே எல்லா பதவியையும் எடுத்துக்கொண்டால் //

எப்படி எடுக்க முடியும்?மக்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கலைஞ்ர் முதல் முறையாக முதல்வர் ஆன பின் தன்னை சர்வாதிகாரியாக அறிவித்துக் கொணடது போலவும் பின்னர் அனைத்து பதவிகளையும் குடும்பத்தினருக்கே குடுப்பது போலவும் உள்ளது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தகுதி உள்ளவர்களுக்கு யாராக இருந்தாலும் தலைவர் வாய்ப்பு தருகின்றார்.மக்கள் தேர்ந்து எடுக்கிறார்கள்.

சனநாயகம் என்பது இல்லாமல் போய்விடும். இது தான் நீங்கள் விரும்புவது? சற்று விளக்குங்கள்.//

எனக்கு ஜனநாயகத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் பிடிப்பும் இருப்பதால் தான் என் சொந்தப் பெயரில் வந்து உங்க கருத்துக்கு எதிர்வாதம் செய்கிறேன். அனானிகளைப் போல ஒளிந்து வரவில்லை. :)

 
On Tue Jul 08, 10:15:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

ஆக படிப்பு ஒன்று மட்டும்தான் தகுதியென்று நீங்கள் கருதுகின்றீர்களா?
அப்படி பார்த்தாலும் கனிமொழியை விட படித்தவர்கள் பலர் இருக்கின்றார்களே.

பிள்ளைகளின் தியாகம் என்பது அவர்களாக விரும்பிச் செய்வதில்லை. அவர்களின் தந்தையார் செய்யும் தியாகத்திற்கு அவர்கள் காரணமல்ல. அப்படி அவர்களின் தந்தை செய்யும் தியாகத்திற்கு பதவி தான் பரிசாக தரவேண்டும் என்று சொல்வது அடிப்படை நியாயமற்ற ஒன்று.

அப்படி பார்த்தால் என் மகன் படிந்திருந்தால், நான் வேலைபார்க்கும் நிறுவனம் அவனை விட அதிக அனுபவமிக்கவர்கள் இருந்த போதும் என் மகன் படித்திருக்கின்றான் என்ற காரணத்திற்காகவும், அவன் செய்த தியாகங்களுக்காகவும் வேலை தரவேண்டும், என்பது போல் உள்ளது.

கடந்த 4முறை முதல்வரான போது இல்லாத அளவுக்கு இந்த முறைதான் அவரது குடும்பத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றார். கனிமொழி ஒன்றும் மக்களை சந்தித்து மக்களவைக்கு செல்லவில்லையே, மாநிலங்களவைக்கு அல்லவா சென்று இருக்கின்றார்?

இதற்கு கனிமொழி மட்டும் அல்ல, என் குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறிவிட்டு, தன் மகனை மாநிலங்களவை உறுப்பினராக்கிய மருத்துவர் குடும்பத்திற்கும் பொருந்தும்.

 
On Wed Jul 09, 12:19:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஆக படிப்பு ஒன்று மட்டும்தான் தகுதியென்று நீங்கள் கருதுகின்றீர்களா?//

அண்ணே படிப்பு ஒன்றுதான் தகுதி என்று நான் சொன்னால் கலைஞ்ர் எப்படி என் தலைவராக இருக்க முடியும்? நான் சொல்ல வந்தது தன் குடும்பத்தில் ஒருவருக்கு கொடுக்கும் போது கூட அனைத்து தகுதிகளோடு படிப்பையும் ஒரு தகுதியாக தலைவர் பார்த்தார் என்பதுதான்.


பிள்ளைகளின் தியாகம் என்பது அவர்களாக விரும்பிச் செய்வதில்லை.//

அண்ணே விரும்பிச் செய்வது தியாகம் அல்ல. நீங்க விரும்புகின்ற ஒன்றை வேறு ஒரு காரணத்திற்காக விட்டுக் கொடுப்பதற்கு பெயர்தான் நான் அறிந்த வகையில் தியாகம். நீங்க விரும்பிய பெண்ணையே திருமணம் செய்தால் து தியாகம் அல்ல. அவளுடைய அல்லது உங்களுடைய பெற்றோருக்காக கட்டாமல் விட்டால் துதான் தியாகம். தன் அப்பாவினால் தங்களுக்கு ஏற்படும் வருத்தங்களை பொதுவாழ்விற்காக விரும்பாவிட்டாலும் ஏற்று கொள்கிறார்களே அதைதான் தியாகம் என்கிறேன்.


என் மகன் படிந்திருந்தால், நான் வேலைபார்க்கும் நிறுவனம் அவனை விட அதிக அனுபவமிக்கவர்கள் இருந்த போதும் என் மகன் படித்திருக்கின்றான் என்ற காரணத்திற்காகவும், அவன் செய்த தியாகங்களுக்காகவும் வேலை தரவேண்டும், என்பது போல் உள்ளது.//

அப்படி செய்தால் நானே சொல்கிறேன் அது அயோக்கியத்தனம். அதாவது உங்க மகன் என்பதால் அனுபவம் உள்ள மற்றவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஜெனரல் மேனஜர் பதவியை கொடுத்தால் அது அயோக்கியத்தனம். ஆனால் உங்க மகன் என்ற ஒரே காரணத்திற்காக அவனுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை பதவியான கிளார்க் போஸ்ட்டை தகுதி இருந்தும் வராதே என்பது என்ன நியாயம்? கலைஞ்ர் ஒன்றும் எடுத்த எடுப்பில் தன் வாரிசை முதலமைச்சர் ஆக்கவில்லையே! இன்னும் சொல்லப் போனால் மக்களால் பலமுறை தேர்ந்து எடுக்கப்பட்டும் அமைச்சர் ஆகும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு இப்பொழுதுதான் கிடைத்து இருக்கின்றது. தலைவர் மகன் என்ற காரணத்தாலேயே கடந்த முறைகளில் அந்த வாய்ப்பை இழந்தார்//

கனிமொழி ஒன்றும் மக்களை சந்தித்து மக்களவைக்கு செல்லவில்லையே, மாநிலங்களவைக்கு அல்லவா சென்று இருக்கின்றார்//

அண்ணே அரசியலில் நம்பிக்கை துரோகமும் காலைவாருவதும் சகஜம். டில்லி போன்ற முக்கியமான இடத்தில் மற்றவர்களைவிட தன் குடும்பத்தில்
ஒருவர் இருப்பது பாதுகாப்பானது. அந்த அடிப்படையில் தான் தயாநிதிக்
கு தலைவர் வாய்ப்பு தந்தார்.அவரும் மக்களை சந்தித்துதான் அங்கு போனார்.ஆனால் அவரும் கூட துரோகம் செய்தார். மாறன் மறைவிற்குப் பின்னர் உடனடியாக தேர்தல் இருந்ததால் தயாநிதி தேர்தல் மூலம் செல்ல முடிந்தது. ஆனால் தயாநிதிக்குப் பின் உடனடியாக அங்கு செல்ல தேர்தல் இல்லாத காரணத்தால் தகுதி உள்ள சகோதரி கனிமொழி மாநிலங்கள் அவைக்கு அனுப்பப்பட்டார். உரிய நேரத்தில் அவரும் மக்களைச் சந்திப்பார் என்ற நம்பிக்கை என் போன்ற கழகத்தினருக்கு உண்டு.

என் குடும்பத்தினர் யாரும் பதவிக்கு வரமாட்டார்கள் என்று கூறிவிட்டு, தன் மகனை மாநிலங்களவை உறுப்பினராக்கிய மருத்துவர் குடும்பத்திற்கும் பொருந்தும்//

டாக்டர்.ராமதாஸையும் மதித்து கேள்வி எழுப்பிய உங்களைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.ஆனால் இந்தக் கேள்வியை அபிஅப்பா,லக்கிலுக்,அப்துல்லா போன்றோரிடம் கேட்காமல் தயவு செய்து காடுவெட்டிகுருவிடம் கேட்கவும் :)

 
On Wed Jul 09, 01:53:00 AM GMT+8 , காழியன் said...

//இது போன்ற சில்லரை சந்தோஷங்கள் கூட அவர்களுக்கு கிடைப்பது இல்லை//

சில்லறை சந்தோஷங்களை இழந்த கருணாநிதி வாரிசுக்கு எம்.பி. பதவியா?. அப்ப திமுக போராட்டத்தில் உயிரை விட்ட கட்சிக்காரனின் வாரிசுகளுக்கு?. முதல்வர் பதவியே அல்ல கொடுத்திருக்க வேண்டும்.

அதில்லாமல், கனிமொழி தன் அப்பாவை பார்க்க முடியவில்லை என்பது அவர்கள் குடும்ப பிரச்சனை. அதற்கு பரிசாக திமுக தலைவர் பதவியே கூட கொடுக்கட்டும். எம்.பி பதவி எப்படி கொடுக்க முடியும். என் வாரிசு என்னை பார்க்காமல் தவிக்குது என்பதற்காக அவர்களுக்கு நாளை ஒரு எம்.பி பதவி கிடைக்குமா?

 
On Wed Jul 09, 12:16:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

அன்ணன் காழியன் அவர்களே தயவு செய்து எனது பின்னுட்டங்களை கவனமாக மீண்டும் ஒருமுறை பாருங்கள். தகுதி இருக்கும் பட்சத்தில் இந்த தியாகங்களையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்று தான் சொன்னேனே தவிர இதற்காக மட்டுமே பதவி தர வேண்டும் எங்குமே சொல்லவில்லை. ஒன்றுமே செய்யாமல் பதவிக்கு வருகிறார்கள் என்ற வாதத்திற்கு நான் வைத்த பதில் அவர்களும் எத்தனையோ விஷயங்களைத் தியாகம் செய்து இருக்கிறார்கள் என்பது. மிசாவில் ஸ்டாலின் சிறைக்குப் போனபோது அவர் கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லை. கலைஞரை காயப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர் வாரிசான ஸ்டாலின் சிறையில் வைத்து உதைக்கப்பட்டார். கனிமொழிக்கு படிப்பு இருக்கிறது திறமை இருக்கிறது அறிவு இருக்கிறது அதனால் தான் அனுப்பப்பட்டார். உடனே நீங்க இல்லை இல்லை எஸ்.எஸ்.சந்திரன், இராமராஜன் போன்றோர்தான் கனிமொழியைவிட தகுதியானவர்கள் என்று நீங்கள் சொன்னால் என்னால் ஒரு பதிலும் சொல்ல முடியாது.
எல்லாம் சரி நண்பா! உங்களை ஒன்று கேட்கிறேன்... கலைஞர் பதவியில் இருக்கிறார் எனபதற்காக அவர் வாரிசுகளும் பதவியில் இருக்கத்தான் வேண்டுமா(அவர்களுக்குத் தகுதி இருந்தும்) என்ற ஒரு நியாயமான(?) கேள்வியை எழுப்புகிறீர்களே....பழம் பெரும் தலைவர் ஜீவா இறக்கும் வரை வறுமையில் இருந்தார்.அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னும் அவர் வாரிசுகள் வறுமையில் தான் உள்ளார்கள். பதவியில் இருக்கும் கலைஞர் வாரிசுகள் எப்படி பதவியில் இருக்கலாம் எனும் நீங்கள் வறுமையில் இருந்த ஜீவாவின் வாரிசுகள் எப்படி வறுமையிலேயே இருக்கலாம்(அவர்களுக்கு உழைத்து முன்னேறும் திறமை இல்லாவிட்டாலும்)என்று அவர்களை சந்தித்து ஒரு 5 அல்லது 10 லட்சம் கொடுத்து விட்டு வாருங்களேன்!

காழியன்! உங்களை சங்கடப்படுத்தும் நோக்கில் நான் அதைச் சொல்லவில்லை. ஒரு தலைவனுக்கு ஏற்படும் நல்லவைகளுக்கும் வாரிசுகள் தான் வாரிசுகள்...தலைவனுக்கு ஏற்படும் தீயவைகளுக்கும் வாரிசுகள் தான் வாரிசுகள்.மற்றபடி நீங்களோ நானோ அல்ல என்பதை உணரத்தான் அதை சொன்னேன். கலைஞர் கட்சிக்குள் வாரிசைக் கொண்டு வருவதை ஏற்பதா இல்லையா என்பது அண்ணன் லக்கிலுக், அண்ணன் அபிஅப்பா, தங்கை ராப்(rapp) மற்றும் என்போன்ற கட்சிகாரர்களின் பிரச்சனை.உங்க பிரச்சனை அல்ல. அவர்கள் மக்கள் மன்றம் வரும் போதுதான் அது மக்கள் பிரச்சனை. புடிச்சா ஒட்டு போட போறாங்க இல்லையா விடப்போறாங்க. இதுல அலட்டிக்க என்ன இருக்குன்னு எனக்கு புரியல?

 
On Wed Jul 09, 12:22:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

காழியன் said...

என் வாரிசு என்னை பார்க்காமல் தவிக்குது என்பதற்காக அவர்களுக்கு நாளை ஒரு எம்.பி பதவி கிடைக்குமா?//

நீங்களும் ஒரு தலைவராக இருந்து உங்க பிள்ளைக்கும் பாராளுமன்றத்திலே பேசுகின்ற அளவிற்கு திறமை இருந்தால் தாராளமாக கிடைக்கும்

 
On Wed Jul 09, 04:47:00 PM GMT+8 , We The People said...

////இது போன்ற சில்லரை சந்தோஷங்கள் கூட அவர்களுக்கு கிடைப்பது இல்லை///

அப்ப ஏன் திரு.கருணாநிதி அண்ணாவின் பிள்ளைக்கு பதவியை விட்டுக்கொடுக்கவில்லை! அதே நிலை தானே அண்ணாவின் குடும்பத்தாரும் அடைந்திருப்பர்?? ஆக திரு.மு.க அரசியலுக்கு வந்து ஒன்னும் சம்பாதிக்கவில்லையா?? சூப்பர் காமெடியா இருக்கே!! சப்பைக்கட்டுக்கு ஒரு அளவு வையுங்க தலைவா!!

இது போன்ற தியாகம் தி.மு.கவின் எந்த தலைவரின் பிள்ளைகளூம் செய்யவில்லையா?? என்ன சார் பேசறீங்க!!!?? நீங்க எல்லாம் படித்து என்ன செய்ய!!?? இவர் செய்கிறார் என்றால் ஜெயலலிதா செய்யறாங்க ஏன் கேடகவில்லை என்பது தான் விதண்டாவாதம்! அப்ப அவர் செய்தா நீங்களூம் செய்வீங்களா?? அப்ப உங்களுக்கு அவருக்கு வித்தியாசம் இல்லையா?? அப்ப ரெண்டுபேரும் வேஸ்ட் தானே??!!

 
On Thu Jul 10, 12:11:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

ஜோசப் அண்ணே காழியனின் கேள்விக்கு பதிலாக இரண்டு பின்னுட்டம் இட்டு இருந்தேன். நீங்க அதை ஏன் வெளியிடவில்லை என்று தெரியவில்லை? அதில் உள்ள நியாயம் அனைவருக்கும் போய்ச் சேரவேண்டாம் என முடிவெடுத்து நீங்கள் வெளியிடவில்லை என நினைக்கிறேன். நீங்க ஆரோக்கியமான விவாதம் என்று சொன்னதை நம்பித்தான் நான் பதில் சொல்லத் துவங்கினேன். இத்தனைக்கும் நான் ஒரு வார்த்தை கூட ஆபாசமாகவோ, தரக்குறைவாகவோ, தனி மனிதத் தாக்குதலோ இன்றித்தான் பதில் சொல்கிறேன். இதோ இப்போது we the people நீங்க எல்லாம் படித்து என்ன பயன் என்று கேட்கிறார்.அதற்கும் என்னால் சரியான பதிலைக் கொடுக்க முடியும். ஆனால் நீங்கள் என் பின்னூட்டங்களை வெளியிடுவது இல்லை என்று முடிவெடுத்த பின் நான் என்ன செய்ய முடியும். உங்களிடம் அடிப்படை நேர்மை மற்றும் விவாத நடுநிலமை என்பது சிறுது அளவேனும் இருந்தால் தயவு செய்து இந்த பின்னூட்டத்தையாவது வெளியிடுங்கள்.

 
On Thu Jul 10, 10:33:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

நீங்கள் இதுவரை அனுப்பிய அத்தனை பின்னூட்டங்களும், வெளியிடப்பட்டுள்ளன. எதையும் நான் வெளியிடாமல் விட வில்லை.
ஏதாவது விட்டுப்போயிருப்பின் அது என்னை மீறி நடந்ததாக இருக்கலாம். மீண்டும் அனுப்புங்கள், கட்டாயம் வெளியிடுகின்றேன்.

நாம் ஒன்றும் இங்கே சண்டை போட்டுக்கொண்டு இல்லை. ஆரோக்கியமான விவாதம்தான் நடத்துகின்றோம், ஆபாசம் இல்லாத, தனிமனித தக்குதல் இல்லாத அனைத்து பின்னூட்டங்களும் கட்டாயம் வெளியிடப்படும்.

 
On Thu Jul 10, 04:47:00 PM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

We The People said...
//நீங்க எல்லாம் படித்து என்ன செய்ய!!?? //

சார் தயவுசெய்து கருத்தை க‌ருத்தால் எதிர் கொள்ளுங்கள்.அதை விடுத்து என் மீது ஏன் தனிநபர் தாக்குதலில் இறங்குகிறீர்கள். அரசியல் ரீதியாகவும்,சமுதாய ரீதியாகவும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு. உங்கள் பார்வையோடு என் பார்வை ஒத்துப் போகவில்லை என்பதற்கும் நான் படித்ததற்கும் என்ன சம்மந்தம் என்பதை நீங்கள் தான் எனக்கு விளக்க வேண்டும். தி.மு.க தொடர்பாக உங்களுக்கு சரியாகத் தெரியும் விஷயம் என் பார்வையில் தவறாக இருப்பதால் தானே நான் படித்து என்ன பயன் என்று கேட்கிறீர்கள். போகட்டும்...தி.மு.க. தொடர்பாக எனக்கு சரியாகத் தெரியும் விஷயங்கள் உங்க பார்வையில் தவறாக இருக்கிறதால் உங்களைப் பார்த்து நீங்க படித்து என்ன பயன் என்று நானும் கேட்க முடியும் அல்லவா? சற்றே சிந்தியுங்கள் தோழரே! மற்றபடி நான் படித்தேனா என்பதில் சந்தேகம் இருந்தால் தயவு செய்து சென்னைப் பல்கலைக்கழ்கம் சென்று இங்கு அப்துல்லா என்ற‌ ஒருவ‌ன் 1997_99 க‌ல்வியாண்டில் எம்.பி.ஏ. ப‌டித்து த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் பெற்று பாஸ் செய்தானா? என்று நேரிலேயே விசாரித்துக்கொள்ளுங்க‌ள்.(என் ரோல் ந‌ம்ப‌ர் MB7126781). நான் ப‌டித்து வ‌ந்த‌ ப‌டிப்பால் நான் வேலை செய்யும் நிறுவ‌ன‌த்திற்கு ப‌ய‌ன் இருக்கிற‌தா என்ற‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்தால் எங்க‌ள் நிர்வாக‌ இய‌க்குன‌ர் திரு.வினோத்.கே.குப்தா வைச் ச‌ந்தித்து உங்க‌ இயக்குன‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ அப்துல்லாவால் எதேனும் ப‌ய‌ன் இருக்கிற‌தா? என‌ நேரிலேயே விசாரித்துக் கொள்ளுங்க‌ள். என் அலுவ‌ல‌க‌ முக‌வ‌ரியை உங்க‌ த‌னி ம‌ட‌லுக்கு அனுப்பி வைக்கிறேன்.

 
On Thu Jul 10, 11:59:00 PM GMT+8 , காழியன் said...

புதுகை அப்பதுல்லா அவர்களுக்கு, உங்களின் நாகரீகமான பதிலுக்கு பாராட்டுக்கள் + நன்றிகள்.

ஸ்டாலின் பதவியில் இருப்பதை யாராலும் தவறு சொல்லமுடியாது. அவர் தொண்டனோடு தொண்டனாக வந்தவர். அதை வாரிசு அரசியல் என்றும் சொல்ல முடியாது. நான் சொல்ல வந்தது கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரின் பதவியைப் பற்றி மட்டுமே. தயாநிதி மாறனை மந்திரியாக ஆக்கியது குடும்ப காரணம். நன்றாக பணிபுரிந்த அவரை பதவியில் இருந்த தூக்கியதும் குடும்ப காரணம். இது ஒரு சனநாயக படுகொலை. இதனுடன் அன்புமணியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

யோசித்துப்ப் பாருங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரை விட்டவர் எத்தனை பேர். அவர்கள் குடும்பத்துக்கு கிடைத்திருப்பது நிவாரண நிதி மற்றும் அடையாறு காந்தி மண்டபத்தில் ஒரு போட்டோ மட்டுமே.

மொத்தத்தில், இது ஒரு கட்சிப் பிரச்சனை. பொது மக்களான நான் அதைப் பற்றி பேசுவதும் சரியல்ல. நாளைக்கே கனிமொழிக்கு திமுக் தலைவர் பதவி கொடுத்தால் கூட எனக்கு பிரச்சனை இல்லை. திமுகவினால் நாட்டுக்கு என்ன நமை தீமை என்பது பற்றி மட்டுமே என்னால் பேச இயலும்.

உங்களின் சிந்தனையும் தவறு என்று சொல்ல வரவில்லை. அனேகமாக நீங்கள் திமுக அனுதாபியாக இருக்கலாம். One man's food is another man's poison.

 
On Fri Jul 11, 12:44:00 AM GMT+8 , We The People said...

புதுகை.எம்.எம்.அப்துல்லா மன்னிக்க வேண்டு! தவறாக எண்ண வேண்டாம்! அந்த ஒரு வரியை நீக்கிவிடுங்க! நான் நீங்க படிச்சவரா என்று கேட்கவில்லை என்பதை என் பின்னூட்டத்தை ஒருமுறை மீண்டும் படித்தால் புரியும்! நீங்க படிச்சு இருந்தும் என்ன பயன் என்று தான் கேட்டேன். நீங்க நல்லா படிச்சிருக்கீங்க நல்லது! அதை கொஞ்சமாவது உபயோகிக்க வேண்டும் என்று தான் சொல்லறேன்!! தலைவர் வழிபாடு (அவர்கள் என்ன செய்தாலும் சரி சொல்லும் அளவுக்கு) என்பது தவறு என்ற முறையிலேயே சொன்னேன்...அது தனி மனித தாக்குதலாக நினைத்தால் மன்னிக்கவும்.

ஆனால் என் மற்ற கேள்விகள் அப்படியே உள்ளன!

////இது போன்ற சில்லரை சந்தோஷங்கள் கூட அவர்களுக்கு கிடைப்பது இல்லை///

அப்ப ஏன் திரு.கருணாநிதி அண்ணாவின் பிள்ளைக்கு பதவியை விட்டுக்கொடுக்கவில்லை! அதே நிலை தானே அண்ணாவின் குடும்பத்தாரும் அடைந்திருப்பர்?? ஆக திரு.மு.க அரசியலுக்கு வந்து ஒன்னும் சம்பாதிக்கவில்லையா?? சூப்பர் காமெடியா இருக்கே!! சப்பைக்கட்டுக்கு ஒரு அளவு வையுங்க தலைவா!!

இது போன்ற தியாகம் தி.மு.கவின் எந்த தலைவரின் பிள்ளைகளூம் செய்யவில்லையா?? என்ன சார் பேசறீங்க!!!?? இவர் செய்கிறார் என்றால் ஜெயலலிதா செய்யறாங்க ஏன் கேடகவில்லை என்பது தான் விதண்டாவாதம்! அப்ப அவர் செய்தா நீங்களூம் செய்வீங்களா?? அப்ப உங்களுக்கு அவருக்கு வித்தியாசம் இல்லையா?? அப்ப ரெண்டுபேரும் வேஸ்ட் தானே??!!//

 
On Fri Jul 11, 03:29:00 AM GMT+8 , காழியன் said...

//நீங்களும் ஒரு தலைவராக இருந்து உங்க பிள்ளைக்கும் பாராளுமன்றத்திலே பேசுகின்ற அளவிற்கு திறமை இருந்தால் தாராளமாக கிடைக்கும்//

ராதிகா செல்வியின் தந்தை தலைவரும் இல்லை, ராதிகா செல்விக்கு பாராளு மன்றத்தில் பேசும் அளவுக்கு திறமையும் இல்லை. பிறகு எதை வைத்து அவரை பாராளுமன்றத்துக்கு கருணாநிதி அனுப்பினார். அவரோட கணவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பதை தவிர வேறறியேன் பராபரமே.

 
On Fri Jul 11, 03:40:00 AM GMT+8 , காழியன் said...

//உடனே நீங்க இல்லை இல்லை எஸ்.எஸ்.சந்திரன், இராமராஜன் போன்றோர்தான் கனிமொழியைவிட தகுதியானவர்கள் என்று நீங்கள் சொன்னால் என்னால் ஒரு பதிலும் சொல்ல முடியாது//

நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டேன். இவ்விருவரும் பாராளு மன்றம் சென்றது உங்களுக்கு எவ்வளவு காமெடியா இருக்கோ அந்த அளவுக்கு SS.சந்திரன், ராமராஜன் & கனிமொழி சென்றது எனக்கு காமடியா இருக்கு. என்னை அதிமுக அனுதாபி என்று நினைக்காதீர். நான் வரி கட்டி வசதியை எதிர்ப்பார்க்கும் சாதாரண குடிமகன்.

பாராளுமன்றம் என்பது நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் இடம். அதை காமடியா மாத்தாதீங்க என்பதுதான் என் கோரிக்கை.

 
On Fri Jul 11, 05:10:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

காழியன் அண்ணே! உங்க பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
//நான் சொல்ல வந்தது கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரின் பதவியைப் பற்றி மட்டுமே. //
நான் முந்தைய பின்னூட்டத்திலேயே ஒரு முறை சொன்னேன். அரசியலில் நம்பிக்கை துரோகமும் காலைவாருவதும் சகஜம். டில்லி போன்ற முக்கியமான இடத்தில் மற்றவர்களைவிட தன் குடும்பத்தில்
ஒருவர் இருப்பது பாதுகாப்பானது. அந்த அடிப்படையில் தான் தயாநிதிக்
கு தலைவர் வாய்ப்பு தந்தார்.அவரும் மக்களைச் சந்தித்துதான் அங்கு போனார்.ஆனால் அவரும் கூட துரோகம் செய்தார். மாறன் மறைவிற்குப் பின்னர் உடனடியாக தேர்தல் இருந்ததால் தயாநிதி தேர்தல் மூலம் செல்ல முடிந்தது. ஆனால் தயாநிதிக்குப் பின் உடனடியாக அங்கு செல்ல தேர்தல் இல்லாத காரணத்தால் தகுதி உள்ள சகோதரி கனிமொழி மாநிலங்கள் அவைக்கு அனுப்பப்பட்டார். உரிய நேரத்தில் அவரும் மக்களைச் சந்திப்பார் என்ற நம்பிக்கை என் போன்ற கழகத்தினருக்கு உண்டு.
இன்று உல‌க‌மே விய‌ந்து பார்க்க‌க் கூடிய‌ த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ பிட‌ல் காஸ்ட்ரோ த‌ற்போது உட‌ல் ந‌ல‌க் குறைவால் ஆட்சிப் ப‌ணிக‌ளில் முழுமையான‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌ முடியாத‌ நிலையில் அந்த‌ப் பொறுப்பை த‌ன் ச‌கோத‌ர‌ரிட‌ம் தான் ஒப்ப‌டைத்து உள்ளார். கார‌ண‌ம் ந‌ம்பிக்கை. அதே நிலை தான் கலைஞருக்கும். சில முக்கியமான இடங்களில் மற்றவர்களை விட தன் வாரிசுகள் இருப்பது அவருடைய நிர்வாக வசதிக்கும்,நம்பிக்கைக்கும் நல்லது என அவர்களை வைத்துள்ளார். அவர் காலத்திற்குப் பின் அவர்களுக்கு திறமையும்,மக்கள் ஆதரவும் இருக்கும் பட்சத்தில் நீடிக்கப் போகிறார்கள். இல்லையேல் கால ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு அந்த இடத்தில் வேறு யாரோ வரப் போகிறார்கள்.அவ்வளவுதான்.

//யோசித்துப்ப் பாருங்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிரை விட்டவர் எத்தனை பேர். அவர்கள் குடும்பத்துக்கு கிடைத்திருப்பது நிவாரண நிதி மற்றும் அடையாறு காந்தி மண்டபத்தில் ஒரு போட்டோ மட்டுமே.//


முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமு இன்றைக்கு மாநில அமைச்சர்களாக இருக்கக் கூடிய பரிதி இளம்வழுதி, தங்கம் தென்னரசு,சுரேஷ் இராஜன்,எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றோரின் தந்தைகள் இந்தி எதிர்ப்பு தியாகிகள் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். இது போல் எம்.எல்.ஏ வாக எம்.பி யாக இருந்த மற்றும் இருக்கின்ற இந்தி எதிர்ப்பு தியாகிகளின் குடும்பத்தில் இருந்து வந்தவர்களின் பெயரை எழுதத் துவங்கினால் இந்தப் பக்கம் போதாது. திறமை மற்றும் உழைப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எல்லாம் வாய்ப்புகள் வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.

//அனேகமாக நீங்கள் திமுக அனுதாபியாக இருக்கலாம்.//

அண்ணே! இன்னுமாண்ணே சந்தேகம்? கண்டிப்பாக அனுதாபிதான்.

 
On Fri Jul 11, 05:44:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

dear we the people
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட உங்கள் பெருந்தன்மைக்கு நான் மிகவும் மகிழ்கிறேன்.மிக்க நன்றி.
//நீங்க நல்லா படிச்சிருக்கீங்க நல்லது! அதை கொஞ்சமாவது உபயோகிக்க வேண்டும் என்று தான் சொல்லறேன்!! //

என் படிப்பை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை நான் நன்கு அறிந்தவனாகவே இருக்கிறேன் என்பதை மீண்டும்,மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
//தலைவர் வழிபாடு (அவர்கள் என்ன செய்தாலும் சரி சொல்லும் அளவுக்கு) என்பது தவறு என்ற முறையிலேயே சொன்னேன்//

எந்த ஒரு கணவனும்,மனைவியும் நூறு சதவிகிதம் கருத்து ஒருமித்தவர்களாக‌ இருப்பது இல்லை.கருத்துக்கள் பெரும்பகுதி ஒத்துப் போகும்போது சேர்ந்து வாழ்கிறார்கள் இல்லையேல் பிரிகிறார்கள். அதேபோல் தலைமையும். எனக்கும் கலைஞரின் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெரும் பகுதி ஒத்துப் போகிறது. அதனால் அவரை ஆதரிக்கிறேன்.

//ஆனால் என் மற்ற கேள்விகள் அப்படியே உள்ளன!//


நீங்க‌ள் த‌னிந‌ப‌ர் தாக்குத‌லில் இற‌ங்குவ‌தாக‌ நான் நினைத்த‌தால் அப்போது ப‌தில் சொல்ல‌வில்லை.ஆனால் நீங்க‌ள் ம‌ன்னிப்பு கேட்ட‌ பின்பும் நான் அதே நிலையில் இருந்தால் ம‌னித‌ன் அல்ல‌. இப்போது ப‌தில் சொல்கிறேன்.
//
அப்ப ஏன் திரு.கருணாநிதி அண்ணாவின் பிள்ளைக்கு பதவியை விட்டுக்கொடுக்கவில்லை! அதே நிலை தானே அண்ணாவின் குடும்பத்தாரும் அடைந்திருப்பர்?? ஆக திரு.மு.க அரசியலுக்கு வந்து ஒன்னும் சம்பாதிக்கவில்லையா?? சூப்பர் காமெடியா இருக்கே!! சப்பைக்கட்டுக்கு ஒரு அளவு வையுங்க தலைவா!!//

அண்ணாவுக்கு பிள்ளை இருந்த‌தா? இது தான் சூப்ப‌ர் காமெடி!!!
சார் நாடு சுத‌ந்திர‌ம் அடைந்த‌பின் த‌மிழ‌க‌த்தின் த‌னிப்பெரும் ச‌க்தியாக‌ விள‌ங்கிய‌வ‌ர்க‌ள் பெரியாரும்,காம‌ராஜ‌ரும்,அண்ணாவும்.இவ‌ர்க‌ள் மூவ‌ருக்குமே பிள்ளைக‌ள் இல்லை என்ப‌துதான் உண்மை.அத‌ன் பின் பெரும் த‌லைவ‌ர்க‌ளாய் ஆன‌வ‌ர்க‌ள் க‌லைஞ்ரும்,எம்.ஜி.ஆர் அவ‌ர்க‌ளும்.இதில் எம்.ஜி.ஆர் அவ‌ர்க‌ளுக்கு பிள்ளை இல்லை. அத‌ன் பின் பெரிய‌ த‌லைவ‌ராய் உருவான‌வ‌ர் செல்வி.ஜெய‌ல‌லிதா. அவ‌ருக்கும் பிள்ளை இல்லை. அவர்களில் யாரேனும் ஒருவருக்கு வாரிசு இருந்திருந்தால் கூட கலைஞர் இந்த விஷயத்தில் இந்த‌ அள‌விற்கு
விமர்சிக்கப்பட மாட்டார் என எண்ணுகிறேன். இடையில் பெரிய தலைவராக இல்லாமலேயே இர‌ண்டு ஆண்டு முத‌ல்வ‌ராய் இருந்த‌ ப‌க்த‌வ‌ச்ச‌ல‌த்தின் வாரிசாக‌ முன்னால் ம‌த்திய‌ அமைச்ச‌ர் திரும‌தி.ஜெய‌ந்தி ந‌ட‌ராஜ‌ன் எம்.பி இருக்கிறார்.

//இது போன்ற தியாகம் தி.மு.கவின் எந்த தலைவரின் பிள்ளைகளூம் செய்யவில்லையா?? என்ன சார் பேசறீங்க!!!?? //


இத‌ற்கு பதிலை திரு.காழிய‌ன் அவ‌ர்க‌ளுக்கு இதற்கு முன்பு நான் குடுத்துள்ள‌ பின்னுட்ட‌த்தில் பார்க்க‌வும்.

//இவர் செய்கிறார் என்றால் ஜெயலலிதா செய்யறாங்க ஏன் கேடகவில்லை என்பது தான் விதண்டாவாதம்!//


எந்த‌ ஒரு இட‌த்திலும் நான் அப்ப‌டி சொன்ன‌தாக‌ என‌க்கு தெரிய‌வில்லை. நான் எப்போது அப்ப‌டி சொன்னேன் என‌ நீங்க‌ள் தான் சொல்ல‌ வேண்டும்.

//அப்ப உங்களுக்கு அவருக்கு வித்தியாசம் இல்லையா?? அப்ப ரெண்டுபேரும் வேஸ்ட் தானே??!!//

மத்வ‌ங்க‌ளைப் ப‌ற்றி என‌க்குத் தெரிய‌வில்லை. ஆனால் நாங்க‌ வேஸ்டு இல்லை :)

 
On Fri Jul 11, 11:26:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

//ராதிகா செல்வியின் தந்தை தலைவரும் இல்லை, ராதிகா செல்விக்கு பாராளு மன்றத்தில் பேசும் அளவுக்கு திறமையும் இல்லை. //

என் வாரிசு என்னை பார்க்காமல் தவிக்குது என்பதற்காக அவர்களுக்கு நாளை ஒரு எம்.பி பதவி கிடைக்குமா? என்று நீங்க‌ கேட்ட‌ கேள்விக்கு நீங்களும் ஒரு தலைவராக இருந்து உங்க பிள்ளைக்கும் பாராளுமன்றத்திலே பேசுகின்ற அளவிற்கு திறமை இருந்தால் தாராளமாக கிடைக்கும் என்று ப‌தில் சொன்னேன். நாம் விவாதித்துக் கொண்டு இருந்த‌து வாரிசுக‌ள் ப‌ற்றி! இதில் ராதிகா செல்வி எங்க‌ வ‌ந்தார்? இருந்தாலும் ப‌ரவாயில்லை பதில் சொல்கிறேன்.
கிழக்கு மாநில‌ங்க‌ளின் பாதுகாப்பு ப‌ற்றிய‌ கேள்வி,ப‌தில் நேர‌த்தில் ப‌திலளிக்க‌ வேண்டிய‌ கேபின‌ட் மினிஸ்ட‌ர் சிவ‌ராஜ் ப‌ட்டேல் உரிய‌ நேர‌த்தில் அவைக்கு வ‌ர ஏதோ கார‌ண‌த்தால் முடிய‌வில்லை. பதிலளிக்கத் தேவைப்படும் குறிப்புகள் சிவராஜ் பாட்டிலிடம் இருந்தது. அப்போது இணை அமைச்ச‌ர் ராதிகா செல்வி ச‌ப‌நாய‌க‌ர் அனும‌தி பெற்று கையில் எந்த‌க் குறிப்பும் இன்றி கிட்ட‌த்த‌ட்ட‌ ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேல் ப‌தில‌ளித்து அவையின் பாராட்டைப் பெற்றார். அவ‌ருக்கு க‌ட்சியில் எம்.பி ஸீட் பெற்ற‌தில் உங்களைப் போல‌வே என‌க்கும் மாற்றுக் க‌ருத்து உண்டு. ஆனால் பாராளும‌ன்ற‌த்தில் பேச‌த் தெரியாத‌வ‌ர் என்ப‌தை என்னால் ஏற்க‌ முடியாது.

 
On Fri Jul 11, 11:48:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

உங்களுக்கு எவ்வளவு காமெடியா இருக்கோ அந்த அளவுக்கு SS.சந்திரன், ராமராஜன் & கனிமொழி சென்றது //

எஸ்.எஸ்.சந்திரனும் கனிமொழியும் ஒன்றா? என்பதை என் போன்ற கட்சிசார்புள்ள ஒருவரை விட சரியான நடுநிலையாளர்கள் வேறுயாராவது பதில் சொல்வது நல்லது என நினைக்கின்றேன். காரணம் நான் சொல்வதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது...நீங்க சொல்வதை என்னால் ஏற்க முடியாது. அது வீண்வாதமாகப் போகும்.

 
On Fri Jul 11, 03:39:00 PM GMT+8 , We The People said...

அப்துலா அவர்களே,
//அண்ணாவுக்கு பிள்ளை இருந்த‌தா? இது தான் சூப்ப‌ர் காமெடி!!!//

C.N.A. Parimalam கேள்விப்பட்டிருக்கீங்களா?? அவர் தி.மு.கவை துவக்கிய அண்ணாதுரையின் வளர்ப்புமகன் என்பது உங்களுக்கு தெரியாதா?? ஓ வளர்ப்பு மகன்களுக்கு முன்னுரிமை கிடையாதா?? !!

சரி ராணி அண்ணா துரையும் தான் தியாகம் செய்திருப்பார் !! அவரை ஏன் விட்டு விட்டார்கள் தி.மு.கவினர்?!

அதை விடுங்க, தி.மு.க ஏன் உருவானது என்று தெரியுமா?? தி.கவில் மணியம்மை முன்னிருந்தப்படுகிறார் என்ற காரணத்துக்காகவே அண்ணா தலைமையில் பிரிந்து வந்து தனிகட்சி துவக்கினார்??!! இப்ப என்ன நடக்குது தி.மு.கவில் ??!!

கனிமொழி மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி ஓட்டு வாங்கி பா.மன்ற உறுப்பினர் ஆகவில்லை! நேரடியா ராஜியசபா வழியா அனுப்பியிருக்காரு உங்க தல.. நாங்களும் கனிமொழி உங்க கட்சி தலைவரானால் ஒன்று சொல்லமாட்டோம் அது உங்கள் பிரச்சனை, எங்கள் செலவில் மக்கள் பிரதிநிதி (எம்.பி) ஆக்கியதை தான் எதிர்க்கிறோம். ஸ்டாலினை யாரும் எதிர்க்கவில்லையே!!! அது ஏன் உங்களுக்கு புரியமாட்டிங்குது!

பி.கு:
//எந்த‌ ஒரு இட‌த்திலும் நான் அப்ப‌டி சொன்ன‌தாக‌ என‌க்கு தெரிய‌வில்லை. நான் எப்போது அப்ப‌டி சொன்னேன் என‌ நீங்க‌ள் தான் சொல்ல‌ வேண்டும்.//

நீங்க சொல்லவில்லைதான் சரி, உங்க சகாக்கள்(உடன்பிறப்புக்கள்) சொல்லறாங்களே! அடுத்து ஜெ மட்டும் சசிகலாவின் உறவினர்களை தூக்கிவிட வில்லையா?? அவர்களுக்கு பதிவி தரவில்லையா?? அதை தான் சுட்டினேன்! அவர் செய்வதையே இவரும் செய்கிறார் என்பதே பொருள்! அதனால் இருவரும் வேஸ்ட் என்றேன், நான் உங்களை வேஸ்ட் என்று சொல்லவில்லை!!

 
On Tue Jul 15, 04:08:00 AM GMT+8 , புதுகை.அப்துல்லா said...

dear we the people,
வேலைப் பளுவின் காரணமாக உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை..மன்னிக்கவும்.

//C.N.A. Parimalam கேள்விப்பட்டிருக்கீங்களா?? அவர் தி.மு.கவை துவக்கிய அண்ணாதுரையின் வளர்ப்புமகன் என்பது உங்களுக்கு தெரியாதா??//

எனக்கு பரிமளத்தையும் தெரியும்.அவர்முனைவர் பட்டம் பெற்றதும் தெரியும்.அவர் பேராசிரியராக பணி புரிந்ததும் திரியும்.அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் வீடும் தெரியும்.

//ஓ வளர்ப்பு மகன்களுக்கு முன்னுரிமை கிடையாதா?? !!//

பரிமளத்தை கலைஞர் அரசியலுக்கு அழைத்த போது அவர் ஆர்வம் இல்லை என்று ஒதுங்கியது தான் உண்மை.அவர் இறந்த போது இது பல பத்திரிக்கைகளில் செய்தியாக வந்தது.
உங்களூக்கு எப்படி இது தெரியாமல் போனது என ஆச்சரியமாக உள்ளது. தஞ்சை மாவட்டத்தினுடைய மாவட்டச் செயலாளராக விளங்கிய மன்னை நாராயணசாமியினுடைய வளர்ப்பு மகன் போல விளங்கியவர் திரு.சோம.செந்தமிழ்செல்வன். அவருக்கு 1991 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2006 தேர்தலில் கூட அவருக்கு வலங்கைமான் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். சொந்த மகனோ வளர்ப்பு மகனோ தகுதி இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

// சரி ராணி அண்ணா துரையும் தான் தியாகம் செய்திருப்பார் !! அவரை ஏன் விட்டு விட்டார்கள் தி.மு.கவினர்//

இராணி அம்மையார் அவர்கள் அண்ணா காலத்திலேயே அரசியலில் பங்கு இன்றி இல்லத்தரசியாகத்தான் இருந்தார். அரசியல் கலையோ, ஆட்சி முறையோ அரியாத அவரை எப்படி பதவிக்கு கொண்டு வர முடியும். தகுதி இருக்கும் பட்சத்தில் என்ற வார்த்தையை ஆரம்பத்தில் இருந்தே நான் கூறி வருவதை தயவு செய்து நீங்கள் நினைவு கூறவும்.

//தி.மு.க ஏன் உருவானது என்று தெரியுமா?? தி.கவில் மணியம்மை முன்னிருந்தப்படுகிறார் என்ற காரணத்துக்காகவே அண்ணா தலைமையில் பிரிந்து வந்து தனிகட்சி துவக்கினார்??!! இப்ப என்ன நடக்குது தி.மு.கவில் ??!!//


அடப்பாவமே! எனக்கே தி.மு.க வரலாறா? நாம் நினைத்ததை நினைவேற்ற ஆட்சி அதிகாரம் தேவை என்பது அண்ணா கருத்து. தேவை இல்லை என்பது பெரியார் கருத்து.இதில் தான் முதல் கருத்து வேறுபாடு தோண்றியது. வயது முதிர்ந்த நிலையில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்வது தேவையா என்று தான் அண்ணா கோபம் கொண்டு வெளியேறினார்.மணிஅம்மையாரை பெரியார் திருமணம் செய்த போது மணியம்மையார் திராவிடர் கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. சாதாரண உறுப்பினராக இருந்தார். பெரியாரைத் திருமணம் செய்த பின்னும் கூட பெரியார் வீரமணியைத்தான் காட்டினாரே தவிர மணியம்மையாரை அல்ல. தயவு செய்து வரலாறைத் திரிக்காதீர்கள்.

//கனிமொழி மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி ஓட்டு வாங்கி பா.மன்ற உறுப்பினர் ஆகவில்லை! நேரடியா ராஜியசபா வழியா அனுப்பியிருக்காரு உங்க தல.. நாங்களும் கனிமொழி உங்க கட்சி தலைவரானால் ஒன்று சொல்லமாட்டோம் அது உங்கள் பிரச்சனை, எங்கள் செலவில் மக்கள் பிரதிநிதி (எம்.பி) ஆக்கியதை தான் எதிர்க்கிறோம். //

என்ன காரணத்தினால் அவர் அவ்வாறு அனுப்பப் பட்டார் என்பதை முந்தைய பின்னூட்டங்களில் தெளிவாக சொல்லி இருக்கிறேன். சரி பரவாயில்லை நான் ஒன்று கேட்கிறேன்! தி.மு.க எம்.எல்.ஏ களின் வாக்குகளைப் பெற்றுத்தானே அவர் மேல் சபைக்குப் போனார். தி.மு.க எம்.எல்.ஏ களுக்கு வாக்களித்த மக்கள் கலைஞர் எந்த முடிவு எடுத்தாலும் சரி என்ற மனநிலை உடைவர்கள்தானே? ஆக கனிமொழி மேல்சபை போனது பற்றி நியாயமாக கவலைப் படவேண்டியது அவர்கள் தான். அவர்களுக்கே அது பிரச்சனை இல்லை எனும் போது உங்களூக்கு என்ன கவலை என்பது எனக்குப் புரியவில்லை தலைவா?

//நீங்க சொல்லவில்லைதான் சரி, உங்க சகாக்கள்(உடன்பிறப்புக்கள்) சொல்லறாங்களே!//

நான் சொல்வதற்கு மட்டுமே நான் பொறுப்பு.பிறர் சொல்வதற்கும் என்றால் நீங்க சொல்றதுக்கும் கூட நான் பொறுப்பாகி விடுமே?

//நான் உங்களை வேஸ்ட் என்று சொல்லவில்லை//

நீங்கள என்னை அப்படி சொல்ல மாட்டீங்கனு நான் அறிவேன்

 
On Wed Jul 16, 06:06:00 PM GMT+8 , Anonymous said...

அத்தனை பதில்களையும் படித்ததில் திரு அப்துல்லா அவர்கள் நிறைய அரசியல் விஷயம் தெரிந்தவர் என்பது தெரிகிறது.ஆனால் அதை அவர் சப்பை கட்டுவதற்க்காக மட்டுமே பயன் படுத்துவது,அவர் சார்ந்துள்ள கட்சியின் தன்மையால் என்பதும் புரிகிறது.

 
On Fri Jul 18, 04:24:00 PM GMT+8 , Anonymous said...

//சரி பரவாயில்லை நான் ஒன்று கேட்கிறேன்! தி.மு.க எம்.எல்.ஏ களின் வாக்குகளைப் பெற்றுத்தானே அவர் மேல் சபைக்குப் போனார். தி.மு.க எம்.எல்.ஏ களுக்கு வாக்களித்த மக்கள் கலைஞர் எந்த முடிவு எடுத்தாலும் சரி என்ற மனநிலை உடைவர்கள்தானே? ஆக கனிமொழி மேல்சபை போனது பற்றி நியாயமாக கவலைப் படவேண்டியது அவர்கள் தான்.சரி பரவாயில்லை நான் ஒன்று கேட்கிறேன்! தி.மு.க எம்.எல்.ஏ களின் வாக்குகளைப் பெற்றுத்தானே அவர் மேல் சபைக்குப் போனார். தி.மு.க எம்.எல்.ஏ களுக்கு வாக்களித்த மக்கள் கலைஞர் எந்த முடிவு எடுத்தாலும் சரி என்ற மனநிலை உடைவர்கள்தானே? ஆக கனிமொழி மேல்சபை போனது பற்றி நியாயமாக கவலைப் படவேண்டியது அவர்கள் தான்.//

First of all, people has not given majority mandate anyway. Even otherwise, they cannot abuse people's mandate.

Yeah, if your leader wish, he can even nominate his pet poodle to Rajyasabha. But please note this is democratic government and not a feudal/autocratic setup. People have every right to question their rulers on decisions made in the name of people's mandate.

 
On Mon Jul 28, 04:11:00 PM GMT+8 , Raman Kutty said...

ஐயா, எனது தனிப்பட்ட கருத்து என்னவெனில் அரசியலில் பேசும் திறமை மட்டுமே வேறு படுகிறதே தவிர செயல் எல்லமே ஒரே வகைதான், இதற்கு நல்ல உதாரணம் ஒரு அமெரிக்கன் , ரஷ்ஷியன் மற்றும் இந்தியன் பாலம் கட்டியதில் செய்த ஊழலை பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள் அமெரிக்கன் " இந்த பாலம் கட்டி நான் 5 சதவீத்ம் ஊழல் செய்துள்ளேன்" ரஷ்ஷியன் "இந்த பாலம் கட்டி நான் 10 சதவீத்ம் ஊழல் செய்துள்ளேன்" என்றானாம் , ஆனால் you know very well what will our rply... "நாம் நமது கடமையை செய்யவே லஞ்சம் கேட்கிறோம்" என்ற சுஜாதாவின் வசனத்திற்கான உதாரணமாக உள்ளோம்.. i am sorry i have lot to tell but bcs of my typing problem i can't continue .. i will back after get training in Tamil Typing

 
On Tue Jul 29, 01:08:00 PM GMT+8 , Raman Kutty said...

நேற்றைய இரவு எனக்கு இந்தப் பதிவிற்கான பதிலை யோசித்ததில் மேலும், சாதாரணமாக நமது நாட்டில் காணப்படும் ஒரு மன நிலை தலைவர்கள் விம்ர்சனங்களுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் என்ற நிலை, இது சாதாரணமாக நமது குடும்ப அமைப்பிலிருந்தே காணப்படுகிறதோ என்று தோன்றுகிறது, முதலில் நம் சிறு வயதில் நம்மால் நமது தந்தையை எந்த காரணத்திற்காகவும் விமர்சிக்க இயலாது , அதுவே பிறகு நாம் குடும்ப பொறுப்பிற்கு வந்தபிறகு நமது தந்தை உட்பட யாரும் நம்மை விமர்சிக்க அனுமதிப்பதில்லை.. இதே மன நிலைதான் நமது கட்சி தலைவர்களிடமும் , தொண்டர்களிடமும் காணப்படுகிறது.இந்த வகையான ஒரு வெளிப்பாடே அபி அப்பாவிடமிருந்தும், மற்ற அபிமானிகளிடமிருந்தும் வந்த பதில்களில் காணப்படுகிறது..இவ்வகையில் அல்லாத நடுவு நிலையில் உள்ள பதில்கள் மிக குறைவே...

 
On Wed Feb 03, 09:33:00 PM GMT+8 , Anonymous said...

தனிமனித ஒழுக்கத்திற்கும் கருணாநிதிக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஸ்டாலினைக் கூட ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளலாம். மற்ற எந்த ‍‍___க்கும் அரசியலில் வர தகுதியே இல்லை

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க