Author: ஜோசப் பால்ராஜ்
•10:19 AM
இன்றைய தினமலர் செய்தியில் படித்த ஒரு செய்தி என்னை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ரயில் குண்டுவெடிப்பால் டாக்டரின் 'ஸ்பீக்கர்' அவுட்: யோகா, இயற்கை வைத்தியத்தால் கிடைத்தது பலன்.

தேவையேயில்லாமல் ஆங்கிலச் சொற்களை கலந்து தருவதில் தினமலர் தான் முதலிடத்தில் இருக்கும் பத்திரிக்கை. ஒரு தமிழ் தினசரியில் ஆங்கில வார்த்தைகளை எதற்கு கலக்க வேண்டும் ?

சில வார்த்தைகளை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும், அதற்கான தமிழ் வார்த்தையே பலருக்கு புரியாது என்று சொல்லும் நிலை இன்று பல வார்த்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

ஆனால் காது கேட்க்கும் திறனை இழந்தார், அல்லது காது செவிடாகிவிட்டது என்பது போன்ற வார்த்தைகள் கூடவா மக்களுக்கு புரியாமல் போகும்?

சரி ஆங்கிலத்தை கலந்ததுதான் கலந்தீர்கள், அதுவாவது சரியா ?
ஸ்பீக்கர் என்பது ஒலி பெருக்கி, ஒலியை பரப்ப பயன்படும் ஒரு வெளிப்படுத்தும் கருவி (Output Device). அது உள்வாங்கியல்ல ( Input Device). ஆனால் செவி என்பது ஒலியை உள்வாங்க பயன்படும் ஒரு உடல் உறுப்பு. எப்படி ஒரு வெளிப்படுத்தும் கருவியை போய் ஒரு உள்வாங்கும் உறுப்புக்கு பதிலாக உபயோகிக்கலாம்?

பல திரைப்படங்களில் நகைச்சுவைக்காக செவியை ஸ்பீக்கர் எனச் சொல்லியிருக்கலாம். அதற்காக அதுதான் சரியான் வார்த்தை என்பதுபோல் ஒரு தினசரி பத்திரிக்கை நடந்துகொள்வது என்ன நியாயம்?

எனது சிறுவயதில் நன்கு தமிழ் படிக்க வேண்டும் என்பதற்காக எங்கள் தாத்தா , என்னையும், என் சகோதரனையும் தினசி பத்திரிக்கையை சத்தமாக வாசிக்க சொல்லுவார். இதை பல பெரியவர்கள் செய்வார்கள். இனியெல்லாம் பிள்ளைகள் தமிழ் கற்க தமிழ் தினசரிகளை அவர்கள் கண்களிலேயே காட்டாமல் வைத்திருப்பதுதான் நல்லது.

நன்கு படித்த, அயல்நாடுகளில் வேலைபார்க்கும் பல வலை பதிவர்களுக்கு இருக்கும் மொழிப்பற்றுகூட ஏன் இந்த பத்திரிக்கைகாரர்களுக்கு இல்லை ? இது அப்பட்டமான மொழிக்கொலை. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. Udanz
This entry was posted on 10:19 AM and is filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

30 comments:

On Mon Jul 14, 11:43:00 AM GMT+8 , Anonymous said...

தமிழர்கள் பொய்மலரைத் தொடவே கூடாது.
அப்படியே தொட நேர்ந்தால் தயை செய்து
ஜலம் விட்டு அலம்பிடுங்கோ!

 
On Mon Jul 14, 11:48:00 AM GMT+8 , Anonymous said...

நல்லா சொன்னீங்க.அது சரி,ஜோசஃப் எப்போழுது தமிழ்ப் பெயராயிற்று?அதையும் சொல்லுங்க.

 
On Mon Jul 14, 11:49:00 AM GMT+8 , கோவி.கண்ணன் said...

ஜோசப்,

:)

தினமலருக்கு உங்களோடு சேர்ந்து என் கண்டனம் !!!

இந்த பதிவில் நான் கண்ட பிறமொழி சொற்கள் !

கோபம் > சினம்
வார்த்தைகளை > சொற்களை
மேலே 'சொற்களை' என்று சரியாக எழுதி இருக்கிறீர்கள், அதே பத்தியில் அடுத்த வரியில் சொற்களுக்கு பதில் வார்த்தைகளை போட்டுவிட்டீர்கள்.

சகோதரனையும் > தமையனையும்,
தினசரிகளை > நாளிதழ்களை
உபயோகிக்கலாம்? > பயன்படுத்தலாம் ?
பத்திரிக்கையை > செய்தித்தாள்

குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை. தெரிந்த சொற்களை சரியாக பயன்படுத்த முயல்வோம். நானும் அவ்வாறு செய்து கொண்டிருக்கிறேன்.

//பல திரைப்படங்களில் நகைச்சுவைக்காக செவியை ஸ்பீக்கர் எனச் சொல்லியிருக்கலாம். அதற்காக அதுதான் சரியான் வார்த்தை என்பதுபோல் ஒரு தினசரி பத்திரிக்கை நடந்துகொள்வது என்ன நியாயம்? //

காதுமடல் ஒலிபெருக்கி வடிவத்தில் இருப்பதால் சட்டென்று அப்படி சொல்கிறார்கள், தவறுதான். காது ஒலிவாங்கி தான்.

 
On Mon Jul 14, 11:56:00 AM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

ஏங்க, இப்டியெல்லாம் கேள்வி கேட்க்க தனியா உக்காந்து யோசிப்பீங்களா?

நான் பிறந்த ஒரு மாசத்துலயே எனக்கு பெயர் வைச்சுட்டாங்க.
அதுவும் ரொம்ப நீநீநீளமா ஜோசப் பெனடிக்ட் பால்ராஜ் அப்டிங்கிற பெயர வைச்சுட்டாங்க. இனிமே எங்க போய் பெயர மாத்துறது? அப்டியே மாத்துனாலும் எங்க வீட்ல மொத்தம் 8 ஜோசப் இருக்காங்க. அதுனால அந்த பெயர மாத்தமுடியாது. சிவாஜி யே பெயர் சொல், அதுனால அதுல மொழி பார்க்க வேண்டியது இல்லனு சொல்லி தமிழக அரசே சொல்லியிருக்கு. அது மாதிரி பெயர் சொல்லுல எல்லாம் மொழி பார்காதீங்க.

 
On Mon Jul 14, 12:20:00 PM GMT+8 , Anonymous said...

பார்ப்பனர்களால் நடத்தப்படும் தினமலரில் வெளியிடப்படும் செய்திகளில் ஒரு குள்ள நரித்தனம் ஒளிந்து இருக்கும். தினமலர் உண்மை செய்திகளை வெளியிடும் பத்திரிக்கை அல்ல. தன்னுடைய கொள்கைகளை பரப்புவதற்காக செய்திகளை தந்திரமாக பயன்படுத்திக்கொள்ளும் பத்திரிக்கை. கிறிஸ்த்தவர்களுக்கு அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக ஏதாவது செய்தி கிடைத்து விட்டது என்றால் தினமலருக்குக் கொண்டாட்டம்தான். பிற்படுத்தப்பட்டவர்களையும் அது விடுவதில்லை. பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் என்றல் தினமலர் பாஷையில் கோட்டா மாணவர்கள். இணையதளத்தில் வெளியிடப்படும் தினமலரில் அதன் கொள்கைகளுக்கு மாறாக ஏதாவது விமர்சனம் அனுப்பினால் கண்டிப்பாக வெளியிடப்படாது. தினமலரை தினமலம் என்று ஒருவர் ஒரு பதிப்பில் குறிப்பிட்டிருந்தார். மறுக்க முடியாத உண்மை.

 
On Mon Jul 14, 12:31:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

ஜோசப்,

நான் போட்ட பின்னூட்டம் எங்கே ?

 
On Mon Jul 14, 12:37:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

/"ஜோசப்,

நான் போட்ட பின்னூட்டம் எங்கே ? "//.


மன்னிக்கவும் கோவி.க. கவனிக்காமல் விட்டுவிட்டேன். தற்போது வெளியிட்டுள்ளேன்.

உங்களின் முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட பல தூய தமிழ் வார்த்தைகளை இனி நானும் பயன்படுத்துகின்றேன்.

 
On Mon Jul 14, 02:58:00 PM GMT+8 , Joe said...

Dinamalar is complete trash, they feel if they use a lot of words used by Tamil comedians, they will be able to reach the masses easier. I believe Dinamani is a better Tamil newspaper, which hasn't caught up on sales against Dinamalam!

I'm not able to type in Tamil, hence the comment in English.

 
On Mon Jul 14, 03:32:00 PM GMT+8 , கோவி.கண்ணன் said...

//உங்களின் முதல் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட பல தூய தமிழ் வார்த்தைகளை இனி நானும் பயன்படுத்துகின்றேன்.//

வார்த்தைகளை அல்ல...சொற்களை !
:))

வார்த்தை என்பது வட(சமஸ்கிரத) சொல் !

 
On Mon Jul 14, 04:53:00 PM GMT+8 , Anonymous said...

A feed-backer questions whether the name ‘Joseph’ is Tamil. No doubt, Joseph is not Tamil. But names are given to us by our parents; and it is their business with which no can interfere. We have to bear the names given to us by our parents. Of course, certain people go for changes in their given names, later in their lives, believing astrology, or for other reasons, through legal means, that is, by publishing the name-changes in the official gazette. Generally, we continue with the names given to us. Our anonymous feed-backer puts the blame on the bearer of the names. Names like Joseph are religious names; if one’s religion has not originated in TN, the names that come from such religion, won’t be Tamil names, will they? Now, can we change such names because the religion is from another country? The names indicate one’s belief in such religion. It is, therefore, preposterous to talk about proper names of persons pejoratively.

My name is, actually, Eenapp paraiyan. But, I changed it to vezha.paraiyan. The name was given to me by my parents, which, I changed only slightly. Whether I like this name or not is totally immaterial to me; because, for me, name is just a facilitator for records and for others to call. Names do not add up anything more to you. Parents also name children, as mannaangattis, because, they might have got the child after a prolonged period of barrenness, with fervent prayers and vow to various gods; and, after all this struggle, the child is born, by giving such names, they think, the child wont be the object of jealousy to others. Kan padakkuudaathe! If a person bearing such a name as mannaangatti, wins a gold medal in Beijjing Olympics and makes all Tamilians proud, you will see how the name getting so popular so fast that parents will choose that name for their children, as they did when P.T.Usha won Gold medal in Asian Games!

ippadikku

Vezha.Paraiyan

 
On Mon Jul 14, 07:30:00 PM GMT+8 , Anonymous said...

அண்ணாச்சி,

சிங்கப்பூர்லயும், இருக்கிய, கோவை பதிவர் சந்திப்புலயும் இருக்கிய. என்ன டபுலாக்ட் கொடுக்கீயளா?

பயப்படாதீய, இங்க வந்தது சீனிவாசன் பால் ஜோசப்

அவுகளோட உரல் இந்தா இருக்கு
http://tamil.sripauljoseph.com/

ரெம்ப டென்ஸன் ஆகீட்டிய போலருக்கு.

நீங்க ஜோசப் பால், அவுக பால் ஜோசப். பால் மாறிடிச்சி அம்புட்டுதேன்.

 
On Mon Jul 14, 09:25:00 PM GMT+8 , இவன் said...

தினமலர் திருந்துதோ இல்லையோ நாங்க திருந்த முயற்சி செய்யுறோம்... ங்ண்ணா கோவி.கண்ணன் இதில ஏதாவது பிழை இருக்குதா??

இதுக்குத்தான் அப்பவே மேஜர் சுந்தரராஜன் அப்பவே மொழிபெயர்த்து பேசினார்.
உதாரணம் - what is your name ??
உங்க பெயர் என்ன??

 
On Tue Jul 15, 02:09:00 AM GMT+8 , Ŝ₤Ω..™ said...

first of all..
for those who doesn't have the courage to show their identity..
frnds.. first come out with ur name.. then u may/may not have the right to criticize others.. (this view of mine with aptly suit with the first Feed-backer as well)

கோவி.கண்ணன் Sir.. sme words have mixed in our blood itself.. its not our fault.. even the person, whom we all have acknowledged as the leader for Tamil community.. Dr.கலைஞர் iself used "Sun TV".. "Dr."
and many more words..
but am not advocating for the usage.. but.. IT HAPPENS..

well said Mr.Vezha.Paraiyan...
proper nouns need not be translated... not only names.. most of the scientific terms are termed in english.. many many words are coined in english... which, now a days getting Tamil names.. thanks to the gr8 gr8 so called scolars..
example.. "Posting" "blog" etc.. etc.. these were introduced by foreigners.. wen u want to use it.. wats wrong in using it as it is?? y u want to give a name in Tamil??? wen we accept, proper nouns and foreign names can be in english or wat ever language itself, y not these terms too??
moreover, அடுத்தவன் பிள்ளைக்கு நாம initial குடுப்பது போல் கேவலமா இருக்கு..

Paul.. i cud remember Vaishanav's feed-back for ur couple of Posts.. i wud defintely agree with him... a language is for communication.. for communication, we need a sender, a medium, a receiver.. (அப்பா.. இப்போ தான் நான் Physics படிச்சது உதவுது.. :-))
here language is a medium.. treat is as a medium.. don't try to copy or translate words from other languages... its like புலியப் பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதையா இருக்கு..

please don't think, am supporting Dhina Malar.. actually i have many diff of opinion with tat newspaper..

Paul.. think..
there are many many issues to address..

 
On Tue Jul 15, 05:52:00 AM GMT+8 , Anonymous said...

தினமலருக்கு ஒரு கொள்கையும் மண்ணங்கட்டியும் கிடையாது, அவனுக்கு தேவை எல்லாம் காசே. இலங்கை அரசிடம் பல வருடங்களாக அடிவருடியாக உள்ளான்.

 
On Tue Jul 15, 07:31:00 AM GMT+8 , Anonymous said...

ஏங்கைய்யா உங்களுகெல்லாம் வேற வேலையே கிடயாதா? காமடிக்காக ஆங்கிலத்தில் எழுதினால் இதவெச்சி உடனே ஒரு பதிவு மொக்கை தாங்கலடா சாமி!

அதிருக்கட்டும்... உங்க பிள்ளைகளுக்கெல்லாம் தமிழ் பெயர்தான ?

 
On Tue Jul 15, 12:52:00 PM GMT+8 , Known Stranger said...

yappa ivaloo peru arvama irupangaloo?? parthu thallaigalla romba thuya tamila pesi tamila vallakartha nenachu sanskrit mathiri atha onum ellatha mozhiya akeda porenga tamil aarvallargal elloruma sernthu. Oru nalla vishayam therinthu konden from these comments that dinamalar is a parpanarkalal nadathum oru news paper enru. inum parpana yethirpu neriya irukoo tamil natula ?

 
On Tue Jul 15, 03:09:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே.
பெயர் குறித்து நானும், இன்னும் ஒரு நண்பரும் தெளிவாக எழுதியபின்பும், பெயரையும் விடமாட்டோம் என்று தொங்கும் பெயரிலி நண்பர்களே, தயவுசெய்து, ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கருத்துக்களை படித்துவிட்டாவது உங்கள் கருத்துக்களை பதியுங்களேன்.

செந்தில், வைஷ்ணவ்,
சில வார்த்தைகளை மிக எளிதாக, அழகாக தமிழ்படுத்த வாய்ப்பு இருக்கும்போது ஏன் பிற மொழிச்சொற்களை உபயோகிக்க வேண்டும்?
சில வார்த்தைகளுக்கு தமிழ் பெயர்காண சிரமம் உள்ளபோது, அதை அப்படியே ஆங்கிலத்தில் சொல்வது தப்பில்லை. ஆனால் அதே போல் எல்லா வார்த்தைகளையும் சொல்வது நியாயமாகாது.

ச‌ரி உங்க‌ள் வாத‌ப்ப‌டியே ஆங்கில‌ச் சொற்க‌ளையே ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம் என்றாலும், ஆங்கில‌த்தில் செவிக்கு ஸ்பீக்க‌ர் என்ற‌ பெய‌ர் உள்ள‌தா என்ன‌?
இப்ப‌டி ஏன் த‌ப்பான‌ ஒரு வார்த்தையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்? இப்ப‌டி ஒரு த‌ப்பான‌ வார்த்தையினை எத‌ற்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டும்? செவி என்று சொன்னாலோ அல்ல‌து காது என்று சொன்னாலோ யாருக்கும் புரியாம‌லா போய்விடும்?
சில சொற்களை தூய தமிழில் குறிப்பிட்டால் புரியாது என்றால் ஆதை ஆங்கிலத்தில் குறிப்பிடலாம். ஆனால் இது அந்த வகையிலும் சேராது அல்லவா?
தூய தமிழ் சொற்களை உபயோகிப்பதன் அருமையை வெளிநாட்டில்தான் உணர்வீர்கள்.
இங்கு நாங்கள் எங்களது அலுவலகத்தில் சீனர்களுக்கு புரியாதபடி தனிப்பட்ட முறையில் பேசிக்கொள்ள மிக தூய தமிழைத்தான் பயன்படுத்துவோம்.
தமிழர் தவிர மற்ற அனைத்து இந்தியர்களுக்கும் ஹிந்தி தெரிந்திருப்பதால் அவர்கள் ஹிந்தியை பயன்படுத்துவர். இது போன்ற சமயங்களுக்கு கைகொடுக்கவாவது நம் தாய்மொழியை கலப்பின்றி பேசுவது நல்லதல்லவா?

 
On Tue Jul 15, 04:16:00 PM GMT+8 , Anonymous said...

Sorry for writing in English. Becoz still I am trying to learn how to type in tamil...

Mr. Paul Joseph, I have read few of your articles in your blog and I highly appreciate your initiative towards our community. Your comments about Dinamalar is 100% correct and keep writing about that.

Don't worry about people asking about your name, these people don't have stuff to argue with you, so suddenly they turn into your name. For them it is a big achievement, I faced a lot of people like this when talking about Tamil, so don't care about them, care peole like Ko Vi Kannan... We'll support you.

Renga / Singapore

 
On Tue Jul 15, 04:51:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி ரெங்கா.

நான் ஜோசப் பால்ராஜ், பால் ஜோசப் என்று இன்னொரு பதிவர் இருக்கின்றார்.
( நேத்துதான் நிறைய குழப்பம் வந்துச்சு இதனால)

http://tamileditor.org/

கீழே இருக்க இணைப்பை பயன்படுத்தினால், அந்த இணையதளத்தில் நீங்கள் எளிய முறையில் தமிழில் தட்டச்சு செய்யலாம்.
இதற்காக எந்த மென்பொருளையும், உங்கள் கணிணியில் நிறுவ வேண்டியதில்லை.

 
On Tue Jul 15, 06:49:00 PM GMT+8 , Sriram said...

Paul,
I have seen lot of comments paint the dinamalar with religious color.
I suggest you not to publish these cheap comments...

 
On Tue Jul 15, 06:58:00 PM GMT+8 , Sriram said...

Friends,
I appreciate lot of guys come forward to save the tamil langauage.i congratulate all.But i have one question for all of them...How many of them willing to admit their own to child/children to tamil standards in future...
Dont give excuse by saying dont have any tamil standard schools in living country/state/...

 
On Tue Jul 15, 09:20:00 PM GMT+8 , Anonymous said...

நானும் பலமுறை தினமலர் படித்து இருகிறேன். இதுபோன்ற தவறுகளை நானும் கண்டதுண்டு, ஆனால் அதற்காக எந்த முயற்சியும் எடுத்தது இல்லை. இப்பொழுது இதுபோன்ற முயற்சிக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

 
On Tue Jul 15, 09:28:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

த‌ய‌வுசெய்து இதில் சாதி, ம‌த‌ம், இன‌ம், மொழி , ஆண்பால்/ பெண்பால் போன்ற‌ வித்தியாச‌ங்க‌ளை புகுத்தாதீர்க‌ள்.
உங்க‌ளின் ஆக்க‌பூர்வ‌மான‌ க‌ருத்துக்க‌ளை எடுத்துவையுங்க‌ள். ஒரு ப‌த்திரிக்கையின் த‌வ‌றுக்கு ஒட்டுமொத்த‌ இன‌த்தையே த‌வ‌றாக‌ சித்த‌ரிக்காதீர்க‌ள். இனிமேல் இப்ப‌டி வ‌ரும் பின்னூட்ட‌ங்க‌ளை நான் வெளியிட‌ப்போவ‌தில்லை.
சுட்டிக்காட்டிய‌ ந‌ண்ப‌ர் Sriram க்கு ந‌ன்றி.

 
On Tue Jul 15, 09:31:00 PM GMT+8 , ஜோசப் பால்ராஜ் said...

ஆனால் ந‌ண்ப‌ர் Sriramக்கு,
உங்க‌ள் க‌ருத்தில் என‌க்கு உட‌ன்பாடு இல்லை.
என‌க்கு த‌மிழ் மேல் ப‌ற்று இருக்கின்ற‌து என்ப‌த‌ற்காக‌ நான் த‌மிழ் த‌விர‌ வேறெதுவும் ப‌டிக்க‌க்கூடாது என்ப‌து போல் இருக்கிற‌து உம் க‌ருத்து.

த‌மிழ் வ‌ழியில் இல்லை, எந்த‌ வ‌ழியில் வேண்டுமானாலும் ப‌டிக்க‌லாம். ஹிந்தி, தெலுங்கு , ஜெர்ம‌ன், ஜ‌ப்பான் என‌ எந்த‌ மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம், எத்த‌னை மொழிக‌ளை வேண்டுமானாலும் ப‌டிக்க‌லாம். அது த‌ப்பே இல்லை. அத‌ற்காக‌ தாய்மொழியை ம‌ற‌க்க‌ கூடாது என்ப‌துதான் என் கோரிக்கை.

தின‌ம‌ல‌ர் ஒரு த‌மிழ் தின‌ச‌ரி. த‌மிழ் தின‌ச‌ரியில் எத‌ற்காக‌ ஆங்கில‌த்தை க‌ல‌க்க‌ வேண்டும்? தின‌ம‌ல‌ரின் வாச‌க‌ர்க‌ள் த‌மிழ் தெரிந்த‌வ‌ர்க‌ள் தான். த‌மிழ் தெரிந்த‌வ‌ர்க‌ள் ம‌ட்டும் ப‌டிக்கும் ப‌த்திரிக்கையில் எத‌ற்கு ஆங்கில‌ம்? இதை தான் நான் சுட்டிக்காட்ட‌ விரும்புகின்றேன்.

இப்போது சொல்லுகின்றேன் ந‌ண்பா, எனது பிள்ளைக‌ளை நான் இருக்கின்ற‌ இட‌த்தில் எந்த‌ ப‌ள்ளி ந‌ல்ல‌ ப‌ள்ளியோ அதில்தான் சேர்ப்பேன், ப‌ள்ளி ந‌ல்ல‌ ப‌ள்ளியா என்ப‌தைத்தான் பார்ப்பேனே த‌விர‌, என்ன‌ மொழி என்று பார்க்க‌ மாட்டேன். என்னால் ஹிந்தி ப‌டிக்க‌ முடிய‌வில்லை. த‌மிழையும், ஆங்கில‌த்தையும் த‌விர‌ வேறு எந்த‌ மொழியும் என‌க்கு தெரியாது. ( ஆங்கில‌ம் கூட‌ அரைகுறைதான்). என் பிள்ளையை க‌ட்டாய‌ம் ப‌ல‌ மொழிக‌ள் க‌ற்றுக்கொள்ள‌ ஊக்குவிப்பேன். ஆனால் வீட்டில் த‌மிழில் பேசவும், த‌மிழ் மொழியின் பெருமையையும் அறிந்துகொள்ள‌வும் செய்வேன்.

த‌ற்போது ஆங்கில‌ வ‌ழி க‌ல்வி ப‌யிலும் மாண‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ளுக்கு த‌மிழ் ப‌டிக்க‌வும், எழுத‌வும் தெரியாது என்று கூறுவ‌தை ப‌ல‌ இட‌ங்க‌ளில் நான் பார்த்துள்ளேன்.

அதுபோல் இருப்ப‌துதான் த‌வ‌று. நீ எந்த‌ மொழியில் வேண்டுமானாலும் ப‌டி, எத்த‌னை மொழிக‌ள் வேண்டுமானாலும் ப‌டி. ஆனால் தாய்மொழியை ம‌ற‌க்காதே.
ஆங்கில‌த்தில் பேசினால் ஆங்கில‌த்திலேயே பேசு. த‌மிழில் பேசினால் த‌மிழிலேயே பேசு. ஏன் இர‌ண்டையும் க‌ல‌க்கிறாய் என்ப‌துதான் என‌து கேள்வி.

நீங்க‌ள் உங்க‌ள் நிறுவ‌ன‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளோடு ஆங்கில‌த்தில் பேசுகின்றீர்க‌ள் என்றால், அந்த‌ உரையாட‌லில் த‌மிழையோ அல்ல‌து வேறு எந்த‌ மொழியையோ க‌ல‌ந்த‌ பேசுகின்றீர்க‌ள்?
ஹிந்து நாளித‌ழ் ஒரு ஆங்கில‌ தின‌ச‌ரி. ஆனால் அவ‌ர்க‌ள் இந்த‌மாதிரியா த‌மிழை க‌ல‌க்கின்றார்க‌ள்? சொல்லுங்க‌ள் ந‌ண்ப‌ரே..

இப்ப‌டியே போனால் த‌மிழ‌க‌த்தின் தாய்மொழி ஆங்கில‌ம் என்றாகிவிடும். இதைத்தான் எதிர்கின்றேன்.

என‌வே, த‌ய‌வு செய்து உன் பெய‌ரை முத‌லில் த‌மிழ் பெயராக்கு, உன் பிள்ளையை த‌மிழ் வ‌ழி க‌ல்வி க‌ற்கும் ப‌ள்ளியில் சேர் என்று என‌து க‌ருத்தை கொச்சைப் ப‌டுத்தாதீர்க‌ள்.

எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ இந்த‌ ப‌திவில் நான் குறிப்பிட்டிருந்தது செவியை ஸ்பீக்க‌ர் என்று ஒப்பிட்டிருந்த‌தையும். ஸ்பீக்க‌ர் எப்ப‌டி செவிக்கு ஈடான‌ வார்த்தையாகும் என்று நான் ஏற்க‌ன‌வே குறிப்பிட்டிருந்தேன். அதையும் ப‌டியுங்க‌ள்.

 
On Thu Jul 17, 08:11:00 PM GMT+8 , Known Stranger said...

you proved to be non fantic and not a illogical tamil fundamentalist in your last comment. you have my respect more now.

 
On Thu Jul 17, 10:43:00 PM GMT+8 , Anonymous said...

தமிழை உபயோகிங்கனு சொல்லுரதெல்லாம் சரி தான். அதனை விளக்க தப்பானா செய்தியை தேர்ந்தெடுத்துள்ளீர். ஒரு மருத்துவர் குண்டு வெடிப்பால் அடிபடுகிறார். அவருக்கு ஸ்பீக்கர் அவுட் என்பது முதலில் அநாகரீகத்தின் உச்ச கட்டம். இப்படி எழுதும் பத்திரிக்கையாளர் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் எப்படி தலையங்கம் எழுதுவார்? நீங்க அநாகரீகத்தைக் கண்டிக்கலை என்பது வருந்தத்தக்கது.

தமிழுக்கு வக்காளத்தெல்லாம் வேண்டாம். ஆங்கிலம் கலப்பை விரும்பாதவர்கள் அந்த பத்திரிக்கையை தானே நிராகரிப்பார்கள். உங்களுக்கு எப்படி பொது சிந்தனையுள்ளதொ அது போல் மற்றவர்களுக்குமுண்டு என்பதை நம்புவோம்.

மொழிவளர பிறமொழி சொற்களை அறவனைக்க வேண்டும். ஒதுக்கக் கூடாது. ஆங்கிலம் இவ்வளவு செழுமையாக இருக்க இது ஒரு முக்கிய காரணம்.

-முரளி

 
On Fri Jul 18, 08:18:00 PM GMT+8 , Unknown said...

வணக்கம் நண்பரே...

தங்களின் கருத்தில் ந்யாயம் உள்ளது என்றாலும் நீங்கள் அதிகம் உணர்சிவசபடுகிறீர்கள் என்பது என் எண்ணம்.
இதில் காதை ஸ்பீக்கர் என்று சொல்லி இருப்பது ஒரு நகைச்சுவைக்காக. அதற்கு இவ்ளோ பெரிய பதிவா என எனக்கு சிரிப்புதான் வந்தது. மேலும் தினமலரின் தமிழ் சேவையை தயவுசெய்து குறைத்து மதிபிடாதீர்கள். அவர்களின் சிறுவர்மலர் படிக்காமல் எந்த்தனை பேர் உங்களின் சிறுவயதில் இருந்துருப்பீர்கள். சொல்லுங்கள் பார்ப்போம். நானெல்லாம் தமிழ் படிக்க கற்றுகொண்டதே சிறுவர்மலர் படித்துதான்.

இப்போது ஒரு கூட்டம் இருக்கிறது சோ.ராமசாமி எழுதிய கருத்து பிடிக்கவில்லை என்றால் அவர் கருத்தை பற்றி பேசாமல் அவர் பிறந்த இனத்தைப்பற்றி கேவலமாக பேசுவது. இவர்களால் இதேபோல் ஒரு முஸ்லீமையோ ஒரு கிருஸ்துவரையோ பேச எழுத முடியாது... ***** அறுத்துவிடுவார்கள்!!!!

இந்த பின்னூட்டத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும்...அலுவலகத்தில் அவசர அவசரமாக அடித்தது... :)))
தங்களின் முழு வலைபூவையும் நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக படிக்கிறேன்.

 
On Sat Jul 19, 01:37:00 AM GMT+8 , Jackiesekar said...

ஜோ, இன்னும் அவர்கள் கேவலமாக எழுதுவார்கள் ஆனால் அவர்கள் எல்லோரையும் நக்கல் செய்வார்கள்

 
On Mon Jul 28, 02:21:00 PM GMT+8 , Raman Kutty said...

சார், எனக்கு ஒண்ணுமே புரியல இதுதான் எனது முதல் ‍ப்லொக் ஒவ்வொருவருடைய பார்வையிலும் ஒரு சரி இருப்பது போல அடுத்த பாகவும் உள்ளது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது..

 
On Sun Aug 30, 02:17:00 PM GMT+8 , greatguy said...

Dear Josef,

I appreciate your tamil love. Only it is blind. And also idiotic love of tamil. In every language there is word home and house. In hindi also it is Ghar and makkan.In tamil it is veedu and agam. All dravidians and atheists use word kuralagam, arivagam , anbagam, Thayagam etc.

Your hatred for sanskrit for no reason is making you to write such blogs.

If you hate sanskrit the first book you should burn is your Bible not dinamalar Bible has more sanskrit words than dinamalar.

Either you like it or not Tamil is your mother tongue and sanskrit your father tongue.

DNA / gene will keep showing up .

 
என்னைய மதிச்சு வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க